Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaatril un vaasam

காற்றில் உன் வாசம் – 8

மித்ரன் புனிதாவின் வீடு நோக்கி தன் ‘royal enfield’ பைக்கில் சென்று கொண்டிருந்தான்.அவன் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோசம் , ஏதோ ஒரு பரபரப்பு இருந்தது. அதை இன்னதென்று வரையறுக்க அவனால் முடியவில்லை. ஆனால் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தது. தனக்கு சந்தோசம் தரக்கூடிய ஏதோ ஒன்று நடக்கபோகிறது என்று அவனது மனது அடித்து சொன்னது.

( என்ன இந்த பையன் இப்போவே இப்படி உருகுறான் இது சரியில்லையே…. எல்லாம் காதல் படுத்துற பாடு…. ?????)

புனிதா வீட்டின்முன் தனது பைக்கை நிறுத்திய மித்ரன் காதில்  என்ன ஆச்சு உங்களுக்கு, இங்க எதுக்குவந்தீங்கயாரு உங்களை இப்படிபண்ணாங்க’ என்ற இனிய குரல் விழ சட்டென திரும்பி பார்த்தான்.

அங்கே ஒரு பெண் முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தாள். மித்ரன் எட்டி எட்டி பார்த்தும் அவள் முகம் தெரியவில்லை. சரி அங்கு போய் பார்ப்போம் என்று நினைத்து பைக்கில் இருந்து கீழே இறங்கினான்.

( அப்போ நீ இன்னும் பைக்ல இருந்து கிழ இறங்களையா ?????? இறங்காம தான் குதிச்சியா பக்கி ??….. இப்போவே இப்படியா ?? கடவுளே இந்த பாவியை ரட்சியும் ……???)..

பைக்கில் இருந்து மித்ரன் இறங்கும் பொழுது அவனின் புத்தகம் ஒன்று கீழே விழுந்தது அதனை அவன் கவனிக்கவில்லை . இறங்கிய மித்ரன் அந்த பெண்ணை நோக்கி இரண்டு அடி நடந்திருப்பான் திடிரென்று அவனது மூளை ,’டேய் மித்ரா என்னடா பண்ற  நில்லுடா…  இதுக்கு முன்னாடி பெண்ணையே பார்த்தது  இல்லையா ??’ என்று மண்டையில் நங்கென்று தட்ட சடன் பிரேக்குடன் நின்றது அவனது கால்கள்.

ச்சை , என்ன இது பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்த்தமாதிரி நான் அந்த பொண்ணை பார்த்ததும் பின்னாடியே  போறேன் (பட்டிகாட்டனாச்சும் மிட்டாய் கடையை பார்த்தான் ஆனால் நீ இன்னும் அவளை பார்க்கலைப் பக்கி….????)   நல்ல வேளை நம்ம மூளை நம்மளை ஸ்டாப் பண்ணிட்டு இல்லனா அசிங்கமா போயிருக்கும் என்று நினைத்தவன் திரும்பி போக நினைக்க அவனின் மனமோ,’ இப்போ ஏன் திரும்பி போற நீ என்ன அந்த பொண்ணுகிட்ட ஐ லவ் யூ என்றா சொல்லப்போற சும்மா முகத்தை தான  பார்க்கப்போற அதெல்லாம்  ஒன்னும் தப்பு இல்லை’ என்றது.

அய்யய்யோ இப்போ யாரு பேச்சை கேக்குறது என்று குழம்பியவனை யாரோ அழைக்கும் குரல் கேட்டு நிமிர்ந்தான். பார்த்தவனின் விழி  பார்த்தபடியே இருக்க அவனின் மனமோ ,

                    இந்திரையோ இவள் சுந்தரியோ
                     தெய்வ ரம்பைய மோகினியோ                

                   இந்திரையோ இவள் சுந்தரியோ
                     தெய்வரம்பைய மோகினியோ

                             மனம் முந்தியதோ 
                              விழி முந்தியதோ
                       கரம் முந்தியதோ எனவே

                      உயர் சந்திரசூடர்குறும்பல
                    ஈசர்சங்கணி வீதியிலேமணி     

                                   பைந்தொடி                               

                 நாரிவசந்த ஒய்யாரிபொன் பந்து
                          கொன்டாடினளே 
     
                           மனம் முந்தியதோ
                            விழி முந்தியதோ
                     கரம் முந்தியதோ எனவே

என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தது.

தன் முன் ஒரு தளிர் கரம் அசைவதை உணர்ந்து சுயநினைவுக்கு வந்தான் மித்ரன் .

அவன்முன் அந்த முதுகு காட்டி நின்றிருந்த பெண் அதாங்க மித்ரனின் தேவதை  கையை அவனின் முகத்திற்கு நேராக அசைத்துக்கொண்டிருந்தால் அவளது கையில் ஒரு நாய்க்குட்டி இருந்தது. அதன்  காலில் அடிபட்டு  ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த

மித்ரன் , என்னங்க என்னாச்சு என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு. அப்பெண்ணோ தன் முகத்தில் விழுந்த முடியை தன்  உதட்டால் ஊதிவிட்டால் அதிலிருந்து வந்த காற்று அவளின் முடியை மட்டும் அல்ல மித்ரனையும் சேர்த்தே  அசைத்தது. பின் அந்த பெண் மித்ரனை பார்த்து , எவ்ளோ நேரம் கூப்பிடுறேன் உங்களுக்கு காது கேக்காத என்றாள்.

மித்ரன் , ஹி ஹி என்று அசடு வழிந்துவிட்டு , பாப்பா பப்பிக்கு என்ன ஆச்சு ??? என்றவன் பாப்பாவில் சற்று அழுத்தத்தை கூட்டினான். அப்போதுதானே அவள் பெயர் கிடைக்கும். பாப்பா என்று கூப்பிட்டாள் கோவப்பட்டு பெயரை சொல்லிவிடுவாள் என்ற எண்ணம் தான்.

ஆனால் அவளோ  விடாக்கண்டி போல , அதுவாடா பப்பிய கார்ல போன ஒரு idiot அடிச்சிட்டு போய்ட்டா பாவம்டா  பப்பி கத்திட்டே இருக்கு… பப்பிய கொஞ்ச பிடிடா இதோ வரேன்டா  என்று மூச்சுக்கு நூறு டா போட்டவள்  அவனது கையில் பப்பியை கொடுத்துவிட்டு பக்கத்தில் நின்றிருந்த அவளது vesba urban club 125 நோக்கி நடந்தாள்.

(நம்மாளு என்ன பண்றான்….பாவம் பிளான் எல்லாம் நல்லாத்தான் போட்டப்படி ஆனால் எல்லாம் விதி…..ஹா ஹா ஹா ஹா ??)

அடிங்க நாம இவளை வெறுப்பேத்துனா இவ நம்மள டா சொல்லி காண்டு ஏத்துறாளே…. சரியான வில்லியா இருப்பா போலையே …. இப்போ எப்படி இவளோட பெயரை கண்டுபிடிக்கிறது என்ற  யோசித்து கொண்டிருக்க அப்பெண் கையில் ஒரு first aid box உடன் திரும்பி வந்தாள்.

வந்தவள் பப்பியின் காயத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தாள்.அவள் கை மருந்திட்டு கொண்டிருக்க மித்ரன் அவளின் அழகை வர்ணித்து  கொண்டிருந்தான் . (மனசுல தாங்க ….)

பிறை போன்ற நெற்றி, வில் போன்ற வளைந்த புருவங்கள் த்ரெட்டிங் செஞ்சிருப்பாளோ அழகா வளைஞ்சிருக்கு ( இப்போ இந்த research ரொம்ப முக்கியம் தான்….??) புருவத்தின் மத்தியில் வெள்ளை நிற கல் பொட்டு அதற்கு மேல் சிறியதாக குங்கும கீற்று , செதுக்கி வைத்தது போல் நாசி, தேன் போன்ற உதடு , இடைவரை நீண்ட கூந்தல் இரண்டு பக்கமும் முடி எடுத்து கிளிப் மாட்டி மல்லிகை சரத்தை தொங்கவிட்டிருந்தாள்,   வெள்ளை நிற long skirt அதே வெள்ளை நிறத்தில் சிகப்பு பூக்களை அங்கு அங்கே தெளித்தார் போன்ற மேல் சட்டை கழுத்தை சுத்திய துப்பட்டா ஆனால்…..
( என்னடா ஆனால் இவ்வளவு நேரம் வர்ணிச்ச இப்போ என்ன …..நீ வர்ணிச்சது மட்டும் அவளுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்  மகனே….????)

ஆனால் இந்த கண்ணு மட்டும் ஏன் இப்படி முட்டை மாதிரி இருக்கு ஒரு வேளை சின்னப்பிள்ளையா இருக்கும் போது ரெண்டு முட்டையை முழிங்கிட்டாலோ ??( ரொம்ப முக்கியமான doubt தான் அவளுக்கு தெரிஞ்சது நீ காலி தம்பி…????) …… கண்ணை  உருட்டி உருட்டியே நம்மள உள்ளே இலுக்குறாளே ‘முட்டைக்கன்னி’ என்று அவன் நினைத்து முடிக்கவும் அவள் நிமிரவும் சரியாக இருந்தது.

அப்போது ஒரு கார் அவர்கள் அருகில் வந்து நின்றது . அதிலிருந்து இறங்கியவனை பார்த்த அப்பெண் அவன் அருகில் சென்று அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

அதனை பார்த்த மித்ரன் அதிர்ச்சியில் தனது  கன்னத்தை பிடித்து கொண்டு நின்றான்.

தொடரும்……

????????????????????????????????????????

எதுக்கு அந்த பொண்ணு அறைஞ்சது?? வந்த அந்த ஆள் யாரு??…… மித்ரன் அந்த பொண்ணோட பெயரை கண்டு பிடிப்பானா ??  அடுத்த u.d  ல soldra…..

அதுவரைக்கும் டாட்டா…..??????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!