Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள்-19

காவலனின் கைதி அவள்-19

 

“இப்ப தானேடா வந்தோம்? அதுக்குள்ள கிளம்பனுமா?”, என்றான் ராகவ்.

 



Advertisement

“அவசர வேலை டா. போற வழில எல்லாம் சொல்றேன், குயிக்க கிளம்பு”, என்றான் விக்ரம் வேகமாக.

“என்னாச்சு?”, என்றாள் மிருணா பின்னால் வந்து.

Advertisement

 

Advertisement

“மிரு, நாங்க உடனே கிளம்பனும் நகரு”, என்று வேகமாக அவன் அறைக்கு சென்றான்.

 

Advertisement

“இப்பதானே..”, என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே,

 

“எனக்கு பேச டைம் இல்ல டி, வா கீழ போலாம்”, என்று அவன் ரூமில் இருந்த ஹாலுக்கு வந்தான். “என்னடி கதவ தாழ்ப்பாள் போட்டுட்டு வந்திருக்க”, என்றான் ஆச்சரியமாக.

 

“அது வந்து, மத்தவங்க முன்னாடி ஏற்கனவே அடி வாங்கிட்டேன். மறுபடியும் அடி வாங்குனா நல்லா இருக்காதுல்ல அதான்”, என்றாள் முழித்துக்கொண்டே.

 

விக்ரம் சிரிப்புடன் அவளை இழுத்து, ஒரு கையால் அணைத்தபடி கதவை திறந்தான். மிருணா வேகமாக அவனிடம் இருந்து விலகி முன்னால் சென்றாள். விக்ரமும் ராகவும் பின்னால் வந்தனர்.

 

“ஏய்! என்னடி காயம்?”, என்றாள் பதறியபடி.

 

“அது ஒன்னும் இல்ல ஸ்ரீ”.

 

“ராகவ் சொன்ன மாதிரி ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து வச்சிருக்கணும் போலையே, எப்படியாச்சு?”, என்றார் மீனாட்சி பதறியபடி.

 

“எல்லாம் நீங்க பெத்து வச்சிருக்கீங்களே உங்க தவப்புதல்வன், அடிச்சுடாரு”, என்றாள் விக்ரமை முறைத்துக்கொண்டே.

 

“நான் உன்ன எதால அடிச்சேன்னு சொல்லு பாக்கலாம்”, என்றான் அவள் காது பக்கம் குனிந்து ரகசியமாக. மிருணா முழித்தாள்.

 

“சரி, நீ வா மருந்து போட்டு விடுறேன்”, என்றார் வாணி.

 

“அவரே போட்டுட்டாரு”, என்றாள் விக்ரமை முறைத்துக்கொண்டே.

 

“அடிக்கிற கைதான் அணைக்கும்”, என்று ராகவ், ஸ்ரீ ,சங்கவி மூவரும் ராகம் பாடினர். விக்ரம் சிரித்தான். பெரியவர்கள் மெதுவாக சிரித்தனர்.

 

“ஏய்! இப்ப எதுக்கு மூணு பேரும் ஒப்பாரி வைக்கிறீங்க”, என்றாள் கோபமாக.

 

“மிரு, தெரியாதாடி எதுக்கு பாடுறாங்கன்னு”, என்றான் கண்களில் குறும்பு மின்ன.

 

“அதானே! தெரியாதா?”, என்றனர் மூவரும் கோரசாக.

 

“எனக்கு எதுவும் தெரியாது, ஆள விடுங்க”, என்றாள் சலிப்புடன்.

 

 

“என்ன மிரு காயம் பட்டும் கூட தெரியாதுன்னு சொல்லுறியே?”, என்று குனிந்து ரகசியமாக சொல்லிவிட்டு, “தெரியாதாத தெரிய வச்சுறலாமா?”, என்றான் கிண்டலாக.

 

“என் வாயில பேட் வேர்ட்ஸ் வருது, வாய மூடிட்டு கிளம்புற வழிய பாருங்க”, என்றாள் பல்லை கடித்துக்கொண்டே.

 

“எங்க?”, என்றனர் மற்றவர்கள் ராகவை தவிர.

 

“அவசர வேல வந்துருச்சு, நாங்க ரெண்டு பேரும் இப்ப உடனே கிளம்பனும்”, என்றான் விக்ரம்.

 

“என்னடா, இப்பதானே வந்தீங்க?”, என்றார் வாணி வேகமாக.

 

“ஆமாம்மா, முக்கியமான வேல. நாங்க உடனே கிளம்பனும்”, என்றான் ராகவ்.

 

“சரி, சாப்டாச்சு கிளம்புங்க டா”, என்றார் மீனாட்சி வருத்தமாக.

 

“அதுக்கு  இப்ப டைம் இல்லமா, போற வழில பார்த்துகுறோம்”, என்றான் விக்ரம்.

 

“சரி, நாங்க வந்து விடுறோம்”, என்றனர் அப்பாகள்.

 

“வேணாம் டைமாச்சு, நாங்களே பார்த்துகுறோம்”, என்றனர்.

 

“அண்ணா, பேக் பண்ணியாச்சு தரேன்”.

 

“வேணா ஸ்ரீ, டைம் இல்ல”, என்றான் ராகவ்.

 

அனைவரும் வருத்தத்தோடு வழியனுப்ப வெளியே வந்தனர். “மிரு, வாங்குன அடி மறக்காதுன்னு நினைக்கிறேன். வீட்ட விட்டு வெளியே போகாத”, என்றான் கண்டிப்பான குரலில். மிருணா முறைத்தாள். “இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்னு சொல்லாத, சொல்றதக் கேளு”.

 

“சரி”.

 

“சரி, நாங்க கிளம்புறோம்”, என்று இருவரும் வண்டியில் ஏறினர். விக்ரம் டிரைவர் சீட்டிலும் ராகவ் பக்கத்திலும் உட்கார்ந்தான். இருவரும் விடைபெற்றனர்.

 

“என்னாச்சுடா விக்கி?”.

 

“நான் மிருவோட கைய பிடிச்சு கார்ல ஏத்துனத, ஒருத்தேன் போட்டோ எடுத்து சிவாவுக்கு அனுப்பிட்டான் டா”.

 

“வாட்? எப்படி டா?”, என்றான் வேகமாக.

 

 

[the_ad id=”6605″]

 

 

“அந்த நாலு ரவுடிக வேற யாருக்கோ, மிருவ பார்த்ததும் தகவல் சொல்லி இருக்கான் போல. அவன் வரப்பதான் எங்கள போட்டோ எடுத்து இருக்கான்”, என்றான் காரை ஒட்டிக் கொண்டே.

 

“ச்ச… என்னடா இப்படியாச்சு? யாரு சொன்னா இந்த விஷயம்?”.

 

“ராம் தான் டா”.

 

“எப்படிடா அவன கவனிக்காமல் போனோம்”.

 

“நான் பார்த்துட்டேன் டா, நம்ம பசங்களுக்கு சொல்லி பிடிச்சுட்டேன். அதுக்குள்ள போட்டோ அனுப்பிட்டான். கெட்டதுலயும் ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கு டா”.

 

“என்னடா?”.

 

“அவன் சிவா கிட்ட போன் பண்ணி பேசல, போட்டோ அனுப்புனதும் நம்ம பசங்க கிட்ட மாட்டிகிட்டான். சோ மிரு இப்போதைக்கு  சேஃப்”.

 

“இன்னும் எத்தன நாளுக்கு அவள இப்படி காப்பாத்திக்கிட்டே இருக்க முடியும்?”, என்றான் கவலையாக.

 

“விடுடா, கூடிய சீக்கிரம் அதுக்கும் நாம ஒரு முடிவு கட்டிடலாம்”, என்றான் யோசனையுடன்.

 

ராகவின் போன் அடித்தது, “ஹலோ!”, என்றான் நம்பரை பார்க்காமல்.

 

“ராகவ்”.

 

“ஏய்! அஜீ டார்லிங் நீயா கால் பண்ணியிருக்க?”,  என்றான் சந்தோசமாக போனில் இருந்த நம்பரை பார்த்து.

 

“இல்ல, உங்க பாட்டி. கேட்குற கேள்வியப் பாரு”, என்றாள் எரிச்சலுடன்.

 

“அடியே! நானே நீயா எனக்கு கால் பண்ணி இருக்கன்னு சந்தோஷத்துல கேட்டா, நீ எரிஞ்சு விழுற”, என்றான் சலிப்புடன்.

 

“சாரி! சாரி! ஊருக்கு ரெண்டு பேரும் வந்தீங்களா, என்னைய பாக்காம கிளம்புறீங்க?”.

 

“ஒரு அவசர வேலை வந்திருச்சு டா, அதான் போறோம்”.

 

“உங்க ரெண்டு பேருக்கும் எப்ப தான் அவசர வேல வராமல் இருக்கு”, என்றாள் சலிப்புடன்.

 

ராகவ் விக்ரமை திரும்பிப்பார்த்தான். “டேய்! ஸ்பீக்கர் ஆப் பண்ணிட்டு பேசுடா”, என்றான் சிரிப்புடன்.

 

“என்னது? ஸ்பீக்கர்ல இருக்கா?”, என்றாள் லேசான அதிர்ச்சியுடன்.

 

“ஹாய் அனு! எப்படி இருக்கே?”. 

 

“நான் நல்லா இருக்கேன் விக்கி அத்தான், நீங்க எப்படி இருக்கீங்க?”, என்றாள் சிரிப்புடன்.

 

“யா குட் டா! பரவாலயே முறைலாம் வச்சு கூப்பிட ஆரம்பிச்சுட்ட”, என்றான் கிண்டலாக.

 

“அச்சோ! அத்தான் அம்மா தான் அப்படி கூப்பிட சொல்லி திட்டுனாங்க”, என்றாள் பாவமாக.

 

“என்னடி நடக்குது இங்க? எனக்கு மரியாதையே இல்ல, இவன அத்தான் பொத்தான்னு மரியாதை கொடுக்குற?”, என்றான் சிறிய கோவத்தில்.

 

“உங்க மூஞ்ச பார்த்தாலே அத்தான்னு கூப்பிட தோன மாட்டேங்குது, அதுக்கு நான் என்ன பண்றது? விக்கி அத்தான், நீங்க சொல்லுங்க ஏன் வந்த வேகத்துல கிளம்புறீங்க? மிருணா இன்னைக்கு பண்ணி வச்ச வேலனாலயா?”.

 

“அனு.. அஜீ..”,என்றனர் இருவரும் ஆச்சரியமாக.

 

“கரெக்டா சொல்லிட்டேனா?”, என்றாள் சிரிப்புடன்.

 

“ஆமா”, என்றனர்.

 

“நான் யாரு எவ்ளோ பெரிய ஆளு, எனக்கும் கொஞ்சம் போலீஸ் மூல இருக்கு போல”, என்றாள் கெத்தாக.

 

“ஆமா, இது ஒரு விஷயம் பாரு”, என்றான் ராகவ்  கிண்டலாக.

 

“ஒத்துக்க மாட்டியே நீ, அத்தான் என்ன பிராப்ளம்?”.

 

“ஒன்னும் இல்ல அனு, நீ மிருவ பாத்துக்கோ”.

 

“நீங்க அவள பத்தி யோசிக்க வேண்டாம். நீங்க அவசரமா கிளம்புனதுக்கு அவ தான் காரணம்னு அவளுக்கு தெரியும் அத்தான். இப்படியே சொல்லி சொல்லி அவள கோழையாக்காதீங்க அத்தான். அவ ரொம்ப போல்டான பொண்ணு, நீங்க இப்படி சொல்றனால பயப்பட ஆரம்பிச்சுடுவா”, என்றாள் தீவிரமாக.

 

“ம்ம்… எனக்கு தெரியும் அனு”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

 

“ஆனா காதல் கொண்ட மனம் அமைதியா இருக்குமா? இருக்கத்தான் முடியுமா?”, என்றாள் கிண்டலாக.

 

“அப்படி சொல்லுடி என் டார்லிங். மிருணாவோட கன்னத்த வெட்கத்துல சிவக்க வைக்கமா, அடியில்ல சிவக்க வச்சுட்டான்டி”, என்றான் ராகவும் சேர்ந்து கிண்டலாக.

 

“ம்ம்… ம்ம்.. நியூஸ் வந்துச்சு. என்ன அத்தான் கை நீளுது? இப்படி பண்ணுனீங்க போலீஸ்ல புடிச்சுக் குடுத்துடுவேன், ஆமா”, என்றாள் கிண்டலாக.

 

“என்னையேவா அது சரி”, என்றான் சிரிப்புடன் காரை ஓட்டிக் கொண்டே.

 

“என்ன ராகி, சாட்சி சொல்ல நீ வருவல்ல?”.

 

“கண்டிப்பா! நீ எங்க கூப்பிட்டாலும்  வருவேன்டி”, என்றான் காதலுடன்.

 

“ஓ… சரி வா பழனி மலைக்கு போலாம்”, என்றாள் கிண்டலாக. விக்ரம் நமத்து சிரிப்பு சிரித்தான்.

 

“எதுக்குடி?”, என்றான் புரியாமல்.

 

“உனக்கு மொட்ட போட தான்”, என்றாள் சத்தமாக சிரித்துக்கொண்டே.

 

“அடிப்பாவி, உங்க அப்பாவுக்கு மொட்ட போடு டி. என்னைய விட்டுடு தாயே!”, என்றான் வேகமாக. விக்ரம் சத்தமாக சிரித்தான்.

 

“அனு, நீ கால் பண்ணி எங்க மூடையே மாத்திட்ட. ராகவ்கு ஏத்த ஜோடி நீ தான்”, என்றான் சிரிப்புடன்.

 

“ஆமா அஜீ, எனக்கு சீக்கிரம் ஓகே சொல்லிடு”, என்றான் கெஞ்சலாக.

 

“எருமமாடு! நீ ஊருக்கு வரப்ப சர்ப்ரைஸ் கொடுக்க நாங்க பிளான் பண்ணுனா, நீங்க ரெண்டு பேரும் வந்து எங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணுனதும் இல்லாம, வந்த வேகத்துலயே போறீங்க. அதனால அந்த சர்ப்ரைஸ் உனக்கு கிடையாது”, என்றாள் கோபமாக.

 

“ஏய்! கொஞ்சம் மரியாதை கொடு டி, ஸ்பீக்கர்ல இருக்கு”, என்றான் வேகமாக ஸ்பீக்கரை ஆப் செய்து.

 

“உன்ன யாரு ஸ்பீக்கர்ல போட சொன்னா? பரவால்ல நம்ம அத்தான் தானே, உன் அரும பெரும தெரிஞ்சவர்தான், ஒன்னும் சொல்ல மாட்டாரு”.

 

“அது நானும் விக்கியும் ஒன்னா இருக்குறப்ப, ஸ்பீக்கர் ஆன்ல வச்சு தான் பேசுவோம். பழக்க தோசத்துல உன் நம்பர்னு பாக்காம போட்டுட்டேன்”, என்றான் இழித்துக்கொண்டே.

 

“சரி ஓகே! பத்திரமா போயிட்டு வாங்க. ரெண்டு பேரும் எங்கேயாச்சும் சாப்பிட்டு போங்க பாய்”, என்று வைத்தாள்.

 

“என்னடா? என்னாச்சு?”.

 

“சாப்பிட்டு போக சொன்னா டா. கூடிய சீக்கிரம் ஓகே சொல்லிடுவான்னு நினைக்கிறேன் விக்கி”, என்றான் சிரிப்புடன்.

 

“டியூப்லைட்! அவ என்னைய அத்தான்னு கூப்பிட்டா, அம்மா திட்டுனதா சொன்னா இதிலிருந்து உனக்கு என்ன புரியுது?”, என்றான் லேசாக அவன் தலையில் தட்டி.

 

“டேய்! அப்ப.. அப்ப..”.

 

“நம்ம வீட்டுல போய் சம்பந்தம் பேசிட்டாங்கன்னு உனக்கு புரியலையா டா?”, என்றான் சிரித்துக்கொண்டே.

 

“ஆமாடா விக்கி, நான் நோட் பண்ணவே இல்ல”, என்றான் சந்தோசமாக.

 

“நீ எதுதான் நோட் பண்ணுன? சரி விடு, காங்கிரஸ் டா டிரீட் வச்சுடு”, என்றான் சிரிப்புடன் வண்டியை ஓட்டிக்கொண்டே.

 

“கண்டிப்பா டா!”, என்றான் சந்தோசமாக‌.

 

விக்ரமின் போன் அடித்தது, “யாருன்னு பாரு டா, அட்டெண்ட் பண்ணி ஸ்பீக்கரில் போடு”, என்றான் ஓட்டிக் கொண்டே.

 

“சங்கவி டா”, என்று அட்டெண்ட் செய்து அமைதியாக இருந்தனர்.

 

 

[the_ad id=”6605″]

 

அத்தான்”, என்றாள் கலங்கிய குரலில்.

 

“ம்ம்..”, என்றனர் இருவரும்.

 

“அத்தான், நான் தெரியாம மிருணாவ கூப்பிட்டேன். சாரி அத்தான்”, என்றாள் சோகமாக.

 

“மிருவும் ஸ்ரீயும் என்ன பண்றாங்க சங்கு?”.

 

“அவங்க ரூம்ல இருக்காங்க அத்தான், சாரி!”.

 

“உன்கிட்ட அம்மா முன்னாடியே மிருணா பிராப்ளம சொன்னாங்க தானே சங்கு”, என்றான் ராகவ்.

 

“ஆமா அத்தான், ஸ்ரீ விக்கி அத்தான் லவ் மேட்டர சொன்னா”, என்றாள் வேகமாக.

 

“அப்புறம் ஏன் இப்படி பண்ணுன? இதெல்லாம் ஒரு விஷயமா, நாம மும்பைல பார்க்காததான்னு நினைச்சுட்டியா?”, என்றான் விக்ரம்.

 

“அது வந்து.. ஆமா அத்தான் சாரி”, என்றான் அழு குறளில்.

 

“சரி பரவால்ல விடு, இனிமே இப்படி பண்ணாத சாப்பிட்டியா?”.

 

“இல்ல அத்தான். எனக்கு கில்டிய இருந்தது, அதான் சாப்பிடல”.

 

“நமக்கு சோறு தான் முக்கியம்”, என்றனர் இருவரும் கோரசாக.

 

“அது தெரிஞ்சு தான், அத்த உங்களுக்கு  பண்ணுன ஸ்நாக்ஸ சோகத்துல நானே சாப்பிட்டேன்”, என்றாள் பொய்யான சோகத்துடன்.

 

“அடிப்பாவி!”, என்றனர் கோரசாக.

 

“அத்தான், சோறு தான் முக்கியம்”, என்றாள் சிரிப்புடன்.

 

“ஓ…”, என்றனர் இருவரும் சிரித்துக்கொண்டே.

 

“அப்புறம் விக்கி அத்தான், அது வந்து ஒரு விஷயம் கேட்கணும்”, என்றாள் தயங்கியபடி.

 

“என்ன?”.

 

“அது அத்தான்.. அது வந்து.. எப்படி கேட்குறதுன்னு தெரியல்ல”, என்று இழுத்தாள்.

 

“சங்கு, இங்க தனியா என்னடி பண்ற?”, என்று ஸ்ரீ மற்றும் மிருணாவின் குரல் கேட்டது.

 

“ஆ.. வரேன், அப்புறம் பேசுறேன் அத்தான்”, என்று வைத்துவிட்டாள்.

 

“விக்கி, இவ என்னடா கேட்க வந்தா?”, என்றான் யோசனையுடன்.

 

“ராக்கி, அவ என்ன கேட்க வந்தான்னு கெஸ் பண்ணிட்டேன் டா. ஏர்போர்ட் வந்துருச்சு, சாப்ட்டு நாம ஃப்ளைட் ஏறலாம். அப்புறம் இத பத்தி பேசலாம்”, என்று காரை நிறுத்தி விட்டு இறங்கினான். இருவரும் விடிய காலையில் சென்னை வந்து சேர்ந்தனர். விக்ரம் மற்றும் ராகவ் வேகமாக அவரவர் வேலையை பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

ராகவின் ஆபீஸ் போன் அடித்தது, “ராகவ் ஹியர்”, என்றான் கம்பீரமாக.

 

“நான் குரு பேசுறேன், உன்ன அண்ணா பாக்கணும் சொன்னாங்க”.

 

“ஓ.. எதுக்கு?”, என்றான் யோசனையுடன்.

 

“உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு. அவன் கிட்ட தான் அண்ணி இருக்காங்க. உன் ஆபீஸ்ல தான் இருக்கோம், சீக்கிரமா வா”, என்று வைத்தான்.

 

ராகவ் போனை பார்த்துவிட்டு சத்தமாக சிரித்தான். “என்னடா ராகவ்? என்னாச்சு?”, என்றான் ஷூவை போட்டுக் கொண்டே.

 

“உன் போட்டோவ எனக்கு அனுப்பி வச்சிருக்கான் டா அந்த முட்டாள் சிவாm இதுல என் ஆபீஸ்ல வேற வெயிட் பண்றான்”, என்றான் சிரித்துக்கொண்டே.

 

“அப்ப எனக்கும் உன் ஆபீஸ்ல வேலை இருக்கு, ஒன்னாவே போலாம். ஆனா இப்ப இல்ல ஒரு மணி நேரம் கழிச்சு”, என்றான் கண்ணடித்து.

 

“ம்ம்… சூப்பர் டா, வா ஒரு மணி நேரம் வெளிய சுத்திட்டு அப்புறம் போகலாம்”,  என்று சிரிப்புடன் அழைத்து சென்றான்.

 

இருவரும் சிவா மற்றும் குருவை கடுப்பாகி விட்டு ஆபீஸ் வந்து சேர்ந்தனர். ராகவ் டிரைவர் இருக்கையில் இருந்து கம்பீரமாக இறங்கி வந்தான். சிவா மற்றும் குரு அவர்கள் காரில் வெளியே முறைத்துக் கொண்டு நின்றனர். ராகவிற்கு அங்கங்கு நின்ற போலீசார்கள் சல்யூட் அடித்தனர். தலையசைத்து ஏற்றுக்கொண்டு சிவாவிடம் சென்றான்.

 

“வாங்க, சிவா சார்!”, என்றான் பொய்யான சிரிப்புடன்.

 

“உன்ன எப்ப வர சொன்னேன்?”, என்றான் சிவா கோவமாக.

 

“உனக்காக அண்ணே வெயிட் பண்ணனுமா?”, என்றான் குரு கோபமாக.

 

“எனக்கு வெளியில எவ்ளோ வேலை இருக்கு, சொன்னவுடனே எப்படி வரமுடியும்?”, என்றான் குருவை முறைத்துக்கொண்டே.

 

“சரி சரி உள்ளே போய் பேசலாம்”, என்றான் சிவா. மூவரும் உள்ளே நுழைய போகும் போது, ராகவிடம் ஒர் போலீஸ் வந்து பேசிக் கொண்டிருந்தார், அதனால் அங்கேயே நின்றனர். அப்போது ராகவ் ஓட்டிவந்த காரிலிருந்து கூலிங் கிளாஸ் உடன் கம்பீரமாக விக்ரம் இறங்கினான். போலீசார் சல்யூட் அடித்தனர். லேசாக தலையசைத்து அதனை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தான். சிவா மற்றும் குரு அவனை பார்த்ததும் அதிர்ந்தனர். 

 

“வாங்க சிவா சார், உள்ள போகலாம்” , என்று ராகவ் உள்ளே அழைத்து சென்றான்.

 

விக்ரம் கம்பீரமாக உள்ளே வரும்போது கூலிங் கிளாசை கழற்றி பக்கெட்டில் வைத்து விட்டு இவர்கள் பக்கத்தில் வந்து சிரித்தான். “என்னடா விக்ரம், இறங்கிவர இவ்ளோ நேரமா டா?”.

 

“இல்ல ராகவ், இறங்க போறப்ப ஒரு போன் வந்துச்சு பேசிட்டு வந்தேன்”.

 

“டேய்! நீ தானே இப்ப எனக்கு நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணம்”, என்றான் கோபமாக.

 

“என்ன சிவா சார், நான் உங்கள இதுக்கு முன்னாடி மீட் பண்ணுனது கூட இல்ல. அப்புறம் எப்படி? ஒருவேல உங்க கனவுல என்னைய மீட் பண்ணி இருப்பீங்களோ?”, என்றான் நக்கலாக.

 

“ஏய்! எங்க அண்ணி எங்க டா?”, என்றான் குரு கோபமாக.

 

“யாரு உங்க அண்ணி?”, என்றான் புருவம் உயர்த்தி.

 

“எதுக்கு இப்ப இங்க நின்னுட்டு சண்ட போடுறீங்க சிவா சார். எதுக்கு இப்ப என்னைய பார்க்க வந்தீங்க?”, என்றான் ராகவ்.

 

 

[the_ad id=”6605″]

 

“இவன பத்தி பேச தான் இங்க வந்தேன்”, என்றான் கோவமாக.

 

“என்ன சிவா சார், என்னைய பத்தி பேச என்கிட்ட தானே வரணும். அப்புறம் மரியாத கொடுத்து பேசி பழகுங்க”, என்றான் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்.

 

“உனக்கு என்னடா மரியாத?”, என்றான் கோபமாக.

 

“சிவா சார், இது என்னோட ஆபீஸ். இங்க வந்து நீங்க அதிகாரம் பண்ணாதீங்க”, என்றான் கோவமாக.

 

“ராகவ் பேசட்டும் விடு, எதுக்கு நின்னு கிட்டே பேசணும்”, என்று சொடக்கு போட்டான். நான்கு சேர் கொண்டுவந்து போட்டனர். விக்ரம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான். ராகவ் விக்ரம் பக்கத்தில் உட்கார்ந்தான்.

 

“ஏன் நிக்கிறீங்க? உக்காருங்க”, என்றான் ராகவ். இருவரும் கோபமாக உட்கார்ந்தனர்.

 

“இப்ப சொல்லுங்க சிவா சார், உங்களுக்கு என்னால என்ன பிரச்சன?”, என்றான் கூர்மையான பார்வையுடன்.

 

“எதுக்குடா என் தோப்பு வீட்டில் இருந்த சரக்கு எல்லாத்தையும் எடுத்த? உன்னால எனக்கு எவ்ளோ நஷ்டம் தெரியுமா?”, என்றான் உச்சகட்ட கோபத்தில்.

 

“என்ன உங்க தோப்பு வீடா? அது கந்தசாமிங்கிறவர் வீடுன்னு தானே பத்திரத்துல பதிவாய் இருக்கு. அப்ப உங்க பேரு சிவா இல்லையா? கந்தசாமியா?”, என்றான் நக்கலாக.

 

“ஏய்! என்னடா நக்கலா”, என்று கர்ஜித்தான். அங்கு இருந்த மற்ற போலீசிற்கு பயம் வந்தது.

 

“என்னடா திமிரா! எங்க அண்ணனையே எதிர்த்து பேசுற”, என்றான் குரு கோபமாக.

 

“அப்ப, அந்த தோப்பு வீடு உங்களோடது அப்படித்தானே?”, என்றான் தீர்க்கமான பார்வையுடன்.

 

“ஆமாடா!”, என்றான் கோபமாக.

 

“அங்க இருந்த சரக்கு, கருப்பு பணம் அதெல்லாம்”, என்றான் அதே பார்வையுடன்.

 

“டேய்! வீடு என்னுடையது. அப்படி இருக்கிறப்ப, அதுல இருக்க பொருள் மட்டும் யாருது? என்னோடது தான்!”, என்றான் கோவமாக.

 

“அப்ப, இந்த குற்றத்துக்காக உங்கள நா அரெஸ்ட் பண்ணலாமே. நீங்களே எனக்கு வாக்குமூலம் கொடுத்து இருக்கீங்களே?”, என்றான் எழுந்து.

 

சிவா மற்றும் குரு அதிர்ந்தனர். “என்ன சிவா சார், நீங்களே வந்து மாட்டிக்க தான் என் ஆபீஸ் வந்தீங்களா?”, என்றான் ராகவ்  கிண்டலாக.

 

“டேய்! இந்த கேஸ்ல இருந்து எப்படி வரணும்னு எனக்கு நல்லாவே தெரியும். இப்ப நீ என்னைய உள்ள வச்சாலும், சாயங்காலமே நான் வெளியில்ல நிற்பேன் பாக்குறியா டா?”, என்றான் சிவா நக்களாக எழுந்து.

 

“அப்படி சொல்லுங்க அண்ணே. எங்க அண்ணே யாருன்னு நினைச்ச”, என்றான் குரு கெத்தாக எழுந்து.

 

“சரி, அதெல்லாம் விடு மிருணா எங்கடா? அவள எங்க மறச்சு வச்சிருக்க?”, என்று கர்ஜித்தான்.

 

“மிருணா யாரு?”, என்றான் மெல்லிய சிரிப்புடன்.

 

போனிலும் இருந்த போட்டோவை எடுத்து காட்டி, “இது நீ தானே? உன் கூட இருக்கிறது மிருணா தானே! அவ எங்கடா? இப்ப நீ சொல்லப் போறியா? இல்லையா?”, என்று சட்டையை பிடித்தான்.

 

விக்ரம் பதறாமல் அவன் கையை சட்டையில் இருந்து எடுத்துவிட்டு, “உங்க தோப்பு வீட்ல இருக்க சரக்க பிடிச்சேன்னு, என் போட்டோவ ஒரு பொண்ணோட சேர்த்து வச்சிருக்கீங்களா?”, என்றான் நக்கலாக.

 

“எனக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ண தெரியாது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான். எனக்கு நஷ்டம் வரவச்சுட்டதும் இல்லாம, மிருணாவ வேற மறைச்சு வச்சுருக்க. உன்ன நா சும்மா விட மாட்டேன் டா”, என்றான் ஆக்ரோஷமாக.

 

“என்ன சிவா சார், இப்படி கோவப்படுறீங்க? உங்க ஆளுங்க என்கிட்ட தான் இருக்கானுங்க. அத மறந்துட்டீங்களே! உங்களோட கவுண்டவுன் ஸ்டார்ட் ஆக போகுது சிவா சார். ஜாக்கிரதையா இருங்க, நான் வரேன் ராகவ்”, என்று கிளம்பி சென்றான்.

 

“டேய் போலீஸ்! இவன் கூட சேர்ந்து நீயும் ஆடுறல்ல, அவன கவனிச்சுட்டு உன்ன பார்த்துக்குறேன். வாடா குரு போலாம்”, என்று சென்றான்.

 

சிவாவினால் விக்ரமுக்கு என்ன ஆபத்து வரப்போகிறது? சங்கவி கேக்க வந்த விஷயம் என்ன? ராம் யார்? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்……………………

 

கைதியின் சிறை தொடரும்………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!