Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள் -21 (2)

காவலனின் கைதி அவள்-21(2)

 



Advertisement

“மிருணா.. குட்டிமா.. அப்பாவ பாருடா”, என்றார் பதறியபடி. ஸ்ரீ வேகமாக போனை தூக்கி காட்டினாள். 

 

Advertisement

“அப்பா நீங்க வருத்தப்படாதீங்க நாங்க இவள பார்த்துக்குறோம்”, என்றான் அமர். 

Advertisement

 

“ஆமா”, என்றனர் பெரியவர்கள்.

Advertisement

 

“மாமா ஒன்னும் பிராப்ளம் இல்ல மனச போட்டு குழப்பிட்டு இருக்காதிங்க”, என்றான் ராகவ்.

 

“ம்ம்.. சரிப்பா மிருணா நீ  சாப்பிடு இது என்னடா சின்ன புள்ள தனமா முதல்ல சாப்பிடு”.

 

“அப்பா வேணாம்ப்பா எனக்கு மனசு சரியில்ல”.

 

“மாமா இவ இப்படித்தான் பண்ணுவா, ஸ்ரீ நகரு டா”, என்று கோதை ஸ்ரீயை நகர சொல்லிவிட்டு அவள் இடத்தில் உட்கார்ந்து மிருணாவிற்கு ஊட்ட வந்தார். முதலில் மறுத்தவள் அவர் வலுக்கட்டாயமாக ஊட்டவும் சாப்பிட்டாள். 

 

லக்ஷ்மணன் சிரிப்புடன்,” நா நாளைக்கு பேசுறேன் எல்லாருக்கும் பாய்”, என்று வைத்துவிட்டார்.

 

மீனாட்சி கீழே வந்தார். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அவர் அறைக்கு சென்றனர். இரவு பத்தரை மணி போல் மிருணா விக்ரமின் அறைக்கு வந்தாள். விக்ரம் முழித்து பார்த்து விட்டு கண்ணை மூடிக்கொண்டான். மிருணா பெட்டின் பக்கத்தில் வந்து நின்று கை நடுங்கியபடி அவன் நெற்றியில் லேசாக வருடி பின் வலது கையையும், வலது காலையும் லேசாக வருடியபடி அழுதாள். அவள் கண்ணீர் விக்ரமின் கையில் பட்டது.

 

“இப்ப எதுக்கு நீ இப்படி நின்னு  அழுகிட்டு இருக்க??”.

 

மிருணா அதிர்ச்சியுடன் அவன் முகத்தை பார்த்தாள். அவள் கையை பிடித்து இழுத்து,” உட்காரு”, என்று பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான்.

 

“சாரி மனு என்னால தானே!! உனக்கு அடி பட்டுருச்சு”, என்றாள் அழுகையுடன்.

 

“அப்ப அந்த கார ஓட்டிட்டு வந்தது  நீதானா??”, என்றான் குறும்பாக.

 

“விளையாடாத உண்மைய சொல்லு சிவா தானே ஆள் வச்சு உன்ன  ஆக்சிடென்ட் பண்ணுனான்”, என்றாள் அழுகையுடன்.

 

“இல்ல”.

 

“நீ பொய் சொல்ற”.

 

“ஆமா”.

 

“பாரு.. பாரு.. என்னால தான் உனக்கு இப்படியாச்சு “, என்றாள் அழுகையுடன்.

 

“இல்லன்னு  சொன்னா நீ நம்பவா போற அதான் ஆமான்னு சொன்னேன்”, என்றான் சிரிப்புடன்.

 

“நா அழுகுறேன் உனக்கு என்ன சிரிப்பு??”, என்றாள் கோபமாக.

 

“நா உன்ன அழுக சொன்னேன்னா?? நீயா அழுதா நா என்ன பண்ணுவேன்”, என்றான் கிண்டலாக.

 

மிருணா முறைப்புடன் எழுந்து செல்ல போனாள். அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்து,” உடனே!! கோவமா போயிடுவியே!! இப்ப என்னால உன்ன ஓடி வந்துல பிடிக்க முடியாது மேடம்”, என்றான் சிரிப்புடன்.

 

“ரொம்ப வலிக்குதா மனு”, என்றாள் கலங்கிய கண்களுடன் அவன் கையைப் பிடித்து.

 

“ம்ம்.. ஆமா நீ ஒரு உம்மா கொடுத்த எல்லா வலியும் போயிடும்”, என்றான் கண்ணடித்து.

 

மிருணா முறைப்புடன்,” உன்ன வந்து பாக்க வந்தேன் பாரு என்னைய சொல்லணும்”.

 

“சரி சரி கோவப்படாத உன்ன சாப்பிட வைக்க எல்லாரும் அலையனுமாடி கீழே நடந்த போராட்டம் இங்க வரைக்கும் கேட்டது”.

 

“எப்படி??”.

 

“அம்மா டோர க்ளோஸ் பண்ணாம திறந்து வச்சுட்டே! ஊட்டுனாங்க அதான் சத்தம் கேட்டது”.

 

“சிவாக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சா??”, என்றாள் லேசான பயத்துடன்.

 

“ம்ம்.. ஆமா”.

 

“அப்ப ஆக்சேன்ட் எப்படியாச்சு??”, என்றாள் பயத்துடன்.

 

விக்ரம் ஆக்சிடென்டில் நடந்த அனைத்தையும் சொன்னான். “எல்லாம் என்னாலதான்”, என்று அழுதாள்.

 

விக்ரம் அவளை ஒர் கையாலே இழுத்து அணைத்துக்கொண்டு,” நீ ஒரு லூசுடி, அவன் கேஸ் என் கைக்கு வந்ததும் தான் நா சென்னைக்கு வந்தேன், நீ இதுல சம்மந்தபடலனாலும்  நா சிவாவ  எதிர்த்து தான் நிப்பேன், அப்பவும் இப்படித்தான் ஆகும்”, என்று சமாதானமாக அடிபடாத கையால் அவள் முதுகை வருடினான்.

 

“இருந்தாலும் எனக்கு ஹெல்ப் பண்ணது தெரிஞ்சு தானே!! “, என்றாள் நிமிர்ந்து பார்த்து.

 

“அப்படி இல்ல நீ காரணம் இல்ல நா இங்க உன் கூட தான் கொஞ்ச நாள் இருப்பேன், நீ அழுத இப்பவே கிளம்பி போயிடுவேன்”, என்றான் அழுத்தமாக.

 

“இல்ல வேணாம்”, என்றாள் வேகமாக எழுந்து.

 

“சரி நா போல “,என்று அவளை பக்கத்தில் அணைத்தபடி படுக்க வைத்து, “அந்த சிவா ஒரு பெரிய கிரிமினல் மிரு அவனால பாதிக்கப்பட்டவங்க பலபேரு நீ மட்டும் இல்ல”.

 

“ம்ம்.. கொஞ்சம் தெரியும்”, என்றாள் சோர்வுடன்.

 

“நீ இப்படி அழுது முகத்த வீங்க வைக்கிற அளவுக்கு ஒன்னும் நடக்கல மிரு, அந்த சிவா எத்தன பொண்ணுங்களோட வாழ்க்கைய நாசம் பண்ணிருக்கான் தெரியுமா?? போத மருந்து, கஞ்சானால பல பேர் பலியாகியிருக்காங்க, நம்ம நாட்டுல இருக்குற அற்புதமான சிலைய கடத்தி  வெளிநாட்டுக்கு விக்கிறான், இப்படி பல கேஸ்”, என்று சொல்லிக்கொண்டே போனவன் மிருணாவை திரும்பிப் பார்த்தான்.மிருணா அசந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். விக்ரம் சிரிப்புடன் தூங்க ஆரம்பித்தான்.

 

மறுநாள் காலையில் மிருணா தூக்கம் கலைந்து விழித்து பார்க்கும் போது  விக்ரமின் மார்பில் படுத்திருப்பது தெரிந்தது, வேகமாக எழுந்தாள். இவள் அசைவில் விக்ரம் தூக்கம் கலைந்து முழித்து பார்த்து,” தூக்கம் வந்தா தூங்குடி”. 

 

“நா நைட்டு இங்கேயே!! தூங்கிட்டேன் போல யாராச்சும் வரதுக்கு முன்னாடி நா என் ரூமுக்கு போறேன்”, என்று பெட்டில் இருந்து வேகமாக இறங்க போனாள்.

 

“ஹேய்!! டைம் ஒன்பது ஆச்சுடி, அம்மா உன்னையும் என்னையும் பார்த்துட்டு எழுப்பாம போயிட்டாங்க போல “, என்றான் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார முயற்சி செய்தபடி.

 

“அச்சோ!! இரு மனு நா ஹெல்ப் பண்றேன்”, என்று உக்கார உதவி செய்தாள்.

 

“உள்ள வரலாமா??”, என்றனர் சிறியவர்கள் கிண்டலாக.

 

“டேய்!! வாங்கடா இது என்ன புதுசா பர்மிஷன்லாம்”.

 

“அப்ப நீ சிங்கிளா இருந்தா இப்ப கமிட்டடாயிட்ட அதான்”, என்றான் ராகவ் கிண்டலாக . விக்ரம் மிருணாவை பார்த்து சிரித்தான்.

 

“ராகவ் நைட் நா மனு இல்ல விக்ரம் கூட பேச வந்தேன், அப்படியே!! தூங்கிட்டேன் அதுக்காக ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க”, என்று பொய்யான கோபத்துடன் அந்த இடத்தை விட்டு வேகமாக அவள் அறைக்கு சென்றாள்.

 

“என்ன அண்ணா இவ இப்படி கோபப்படுறா??”, என்றாள் ஸ்ரீ குழப்பமாக.

 

“எல்லாம் உங்க கிட்ட இருந்து தப்பிக்க தான்”, என்றனர் விக்ரம், அமர் மற்றும் அனு கோரசாக.

 

“ஏன்??”, என்றனர் மற்றவர்கள்.

 

“அவள நாம கிண்டல் பண்ணிடுவோம்ல அதுக்கு தான்”, என்றாள் அனு சிரிப்புடன்.

 

“ஓ….”, என்றனர் அனைவரும் விக்ரமை பார்த்து கிண்டலாக.விக்ரம் சிரித்தான். நாட்கள் அதன் போக்கில் வேகமாக சென்றது. சிறியவர்கள் அனைவரும் முக்கால்வாசி நேரம் விக்ரம் அறையில் இருந்தனர். மிருணா சிறு சிறு உதவி விக்ரமிற்கு செய்தாள். ஒரு வாரத்தில் விக்ரமின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு லேசான வீக்கம் மட்டுமே இருந்தது. விக்ரமின் போன் அடித்தது.”அண்ணா அண்ணி இருக்க இடம் சிவாவுக்கு தெரிஞ்சு போச்சு இப்ப அங்க தான் வரோம்”, என்றான் ராம்.

 

முகில்  ஒருவரை  வீட்டிற்கு அழைத்து வந்தான். அவரை பார்த்ததும் மிருணா கோபத்தில் இரண்டு கன்னத்திலும் அறைந்தாள்.

 

வந்தவர் யார்??? எப்படி மிருணா இருக்கும் இடம் தெரிந்தது??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்……..

 

கைதியின் சிறை தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!