Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi avalUncategorized

காவலனின் கைதி அவள்-21 (1)

காவலனின் கைதி அவள்-21(1)

 

ராகவின் போன் அடித்தது. “விக்ரம் எங்கடா இருக்க டைம பார்த்தியா?? ஒன்னாச்சு இன்னும் வீட்டுக்கு வராம இருக்க  அம்மா கிட்ட ஏதோ  சொல்லி சமாளிச்சுட்டேன்”, என்றான் வேகமாக.

 



Advertisement

“ராகவ்… ராகவ்..”, என்றான்  அனத்தலாக.

Advertisement

Advertisement

 

“விக்கி என்னாச்சு??? ஏன் டா வாய்ஸ் இப்படி இருக்கு??”, என்றான் பதறியபடி.

Advertisement

 

“ராகவ் சொல்றத கேளு எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு, சிட்டிக்கு வெளியில நம்ம இடம் கிட்ட நீ உடனே கிளம்பி வா, எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு”, என்று போனை வைத்தான்.

 

ராகவ் பதறி முகிலை நேரடியாக அங்கு வர சொல்லிவிட்டு இவனும் மின்னல் வேகத்தில் கிளம்பி சென்றான். விக்ரமின் கார் மரத்தில் மோதிய நிலையில் இருந்தது. இருவரும் பதறி காரின் கதவை திறந்தனர். விக்ரம் ஸ்டேரிங்கில்  மயங்கி கிடந்தான்.

 

ராகவ், விக்ரமை சீட்டில் சாய்த்து உட்கார வைத்தான். முகில் காரில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளித்தான். ” விக்ரம்… விக்ரம்..”, என்று கன்னத்தை வேகமாக தட்டினான். விக்ரம் லேசாக  ராகவை முழித்துப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.

 

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது, விக்ரமை பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலில் சேர்த்தனர். முகில் மற்றும் ராகவ் பதற்றமாக வெளியே காத்துக் கொண்டு நின்றனர்.

 

டாக்டர் வெளியே வந்ததும்,” டாக்டர் விக்ரமுக்கு”, என்றான் ராகவ்.

 

“அவருக்கு பெரிய பிரச்சினையிலா ஒன்னும் இல்ல தலையில லேசா காயம், வலது கைகளையும், கால்களையும் கொஞ்சம் ஃபிராக்சர் ஆயிருக்கு  ஒரு வாரத்துல எல்லாம் சரியாயிடும் டோன் வொர்ரி மேன்”, என்றார் தோளை தட்டி.

 

“நா விக்ரம பார்க்கலாமா??”, என்றான் வேகமாக.

 

“போய் பாருங்க அவரு இப்ப மயக்கத்துல இருக்காரு “, என்று சொல்லி விட்டு சென்றார். ராகவ் மற்றும் முகில் வேகமாக உள்ளே சென்று பார்த்தனர். விக்ரம் மயங்கிய நிலையில் தலையிலும், கையிலும், காலிலும் கட்டு போட்டிருந்தான்.

 

“அண்ணா விக்கி அண்ணாவுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?? “, என்றான் முகில் வருத்தமாக.

 

“அவங்கள நா சும்மா விட மாட்டேன் டா”, என்றான் கோவமாக.

 

ராகவின் போன் அடித்தது,” ஹலோ”, என்றான்.

 

“அண்ணா ராம் பேசுறேன், விக்ரம் அண்ணா எப்படி இருக்காங்க?? அண்ணாக்கு ஒன்னும் இல்லையே!!”, என்றான்  பதட்டமாக.

 

“வாடா வா உன்ன தான் எதிர்பார்த்தேன், என்னடா பண்ணி வச்சிருக்க??? அவன் இப்ப ஹாஸ்பிடல்ல கிடக்குறான்”, என்றான் கோபமாக.

 

“அண்ணா நா விக்கி அண்ணா கிட்ட ஆல்ரெடி அலர்ட்டா இருக்க சொன்னேன், எல்லா இன்ஃபர்மேஷனும் கரெக்டா குடுத்துட்டு தான் இருக்கேன், இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல அண்ணா”, என்றான் சோகமாக.

 

“சரி நா நாளைக்கு செம்மரம் கடத்துன கேஸ்காக அந்த சிவாவ அரெஸ்ட் பண்ண போறேன்”, என்றான் கோவமாக.

 

“அண்ணா அவன அரெஸ்ட் பண்ணுனா அடுத்த நிமிஷம் வெளிய இருப்பான், அப்பறம் உங்கள ஏதாச்சும் பண்ணிடுவான்ணா”, என்றான் வேகமாக.

 

“இவனுக்கு பயந்துட்டு என்னைய ஒதுங்கிப் போக சொல்றியா??? என்னால முடியாது”, என்றான் கோபமாக.

 

“அண்ணா விக்ரம் அண்ணா இப்ப ஹாஸ்பிடல இருக்காங்க உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா??”, என்றான் பதறியபடி.

 

“நா உன்ன பாக்கணும்”.

 

“நா ஹாஸ்பிடல் மொட்ட மாடில தான் இருக்கேன் நீங்க மட்டும் வாங்கணா”.

 

“சரிடா “, என்று போனை வைத்துவிட்டு,“முகில் நீ விக்ரம் கூடவே இரு நான் வந்துறேன்”, என மாடிக்கு சென்றான்.

 

ராம் இவனை பார்த்ததும் ஓடி வந்து அணைத்தான்.” எப்படி இருக்க டா??”, என்றான் விலகி.

 

“குட் அண்ணா நீங்க??   டாக்டர் என்ன சொன்னாங்க??”.

 

“ஃபைன் டா”, என்று டாக்டர் சொன்ன அனைத்தையும் சொன்னான்.” சரி இப்போ சொல்லு இந்த ஆக்சிடென்ட் எப்படியாச்சு??”.

 

“அண்ணா விக்ரம் அண்ணாகிட்ட அரசியல்வாதி எல்லாம் பேசி பார்த்தாச்சு, அண்ணா முடியாதுன்னு சொல்லவும், செம்ம கோவமாயிட்டான் அந்த சிவா நாய்”, என்றான் கோபமாக.

 

“ம்ம்..”.

 

“மிருணா அண்ணிய துரத்துன நாளு பேரையும் வெளிய விட்டதுக்கு காரணமே!! அண்ணாதான் அண்ணிய அனுப்பி வச்சாங்கன்னு தெரியனும் தான்”.

 

“டேய்!! இவன் எதுக்கு??”, என்று வேகமாக ஆரம்பித்தவன் யோசனையுடன் அமைதியானான்.

 

“அப்பதான் சிவாவுக்கு எதிரி இருக்காங்கன்னு தெரியும்”.

 

“ஆமா அந்த நாலு பேரு எப்படி உங்ககிட்ட மாட்டுனாங்க??”.

 

“எனக்கு அண்ணா ஆல்ரெடி இவங்க நாலு பேரோட போட்டோவும் அனுப்பிட்டாங்க, அண்ணி இங்க இருந்து கிழம்புனதும் போட்டோவ கொடுத்து பசங்க கிட்ட தேட சொன்னேன்”.

 

“எதுக்குடா?? உனக்குதான் தெரியுமே!! அவனுங்க நம்ம கிட்ட இருக்காங்கன்னு”, என்றான் குழப்பமாக.

 

“இப்ப போயி இவங்க நாலு பேரோட போட்டோவும் கொடுத்த என்னைய சந்தேகப்படுவாங்கல்ல அதுக்கு தான் விக்ரம் அண்ணா அந்த மாதிரி பண்ண சொன்னாங்க”.

 

“சரி அப்ப எப்படி ஆக்சிடென்டாச்சு??”.

 

“அந்த சிவா வந்து விக்ரம போட்டுத்தள்ள ஆளு அனுப்பிட்டேன், இந்நேரம் போட்டுருப்பாங்கன்னு சொன்னதும்  பதரிட்டேன், அண்ணாக்கு கால் பண்ணுனேன் கால் போல,  இது எப்படி ஆச்சுன்னு எனக்கும் தெரியலணா”, என்றான் வருத்தமாக.

 

“சரிடா நீ யார் கண்ணுலையும் மாட்டாம கிளம்பு, விக்ரம் கிட்ட கேட்டுட்டு கால் பண்றேன்”.

 

“சரிணா”.

 

“ராம் ஜாக்கிரத டா”.

 

“சரி அண்ணா வரேன்”, என்று லேசான சிரிப்புடன் சென்றான். ராகவ் ரூமுக்கு வந்து பார்க்கும்போது விக்ரம் பேட்டில் சாய்ந்து உட்கார்ந்து முகிலிடம் பேசிக்கொண்டிருந்தான்.

 

“எப்படிடா ஆச்சு?? ரொம்ப பெயின் இருக்கா??? டா”, என்றான் பதரியப்படி.

 

“ராகவ் ஒன்னும் இல்லடா நல்ல இருக்கேன், நாம உடனே!! ஊட்டிக்கு கிளம்பலாம் அரேஞ்ச் பண்ணு”.

 

“அம்மாவ வர சொல்றேன் டா”, என்றான் வேகமாக.

 

“நோ ப்ராப்ளம் ராக்கி டாக்டர்கிட்ட முகில கேட்க சொன்னேன் அவரும் போலாம்னு சொல்லிட்டாரு”.

 

“சரி ஃப்ளைட்ல போலாமா டா??”.

 

“இல்ல வேன்ல போலாம் டா”.

 

“அண்ணா அமர் அண்ணா ஃபேமிலி பத்திரமா ஊட்டி போயிட்டாங்களா??”.

 

“அவங்க போய் ஒரு வாரம் ஆச்சுடா, சுதாவையும் அவளோட சொந்த ஊருக்கு அனுப்பிட்டோம், சோ நோ பிராப்ளம்”.

 

“ஆமா இவ்ளோ!! நேரம் நீ எங்க போன ராக்கி??”.

 

“ராம் வந்திருந்தான் விக்கி”.

 

“ராம் யாரு அண்ணா??”.

 

“அவன் நம்ம  ஆளு தான் முகில், டேய்!! எதுக்குடா வந்தான்??  அவன இங்க யாராச்சும் பார்த்தா பெரிய பிராப்ளம் ஆயிடும்”, என்று லேசாக பதறியபடி ஆரம்பித்தவன், “ஸ்…. ஆ… “, என வலியுடன் முடித்தான்.

 

“வலிக்கிதா டா, டாக்டர் கூப்பிடவா??”, என்றான் பதரியபடி. வேனா என்பது போல் தலையை ஆட்டினான்.” ராம் மாறுவேசத்துல வந்தான் டா, ஆமா உன் கிட்ட ராம் தான் சொல்லிட்டனே!! அப்புறம் எப்படி ஆக்சிடென்ட் ஆச்சுடா??”.

 

“நா நம்ம இடத்துல இருந்த சிலை எல்லாம் செக் பண்ணிட்டு வரப்ப ரெண்டு லாரி என்னைய ஃபாலோ பண்ணுச்சு, நம்ம இடம் சிட்டிக்கு வெளிய இருந்தனால டிராபிக் இல்ல, கொஞ்ச தூரம் போனதும் எதிர்ல இன்னொரு லாரி வந்தது, அதுல இருந்து தப்பிச்சு போனதும் இன்னொரு லாரி குறுக்க வந்துருச்சு உடனே தப்பிக்க வண்டியைத் திருப்பினேன் அது மரத்தில் மோதிருச்சு”.

 

“அவன சும்மா விட கூடாது டா”, என்றான் ஆத்திரமாக.

 

“அவனோட ஆயில் காலம் மூடிய போகுது டா நாள் குறிச்சுடுலாம்”, என்றான் விஷம சிரிப்புடன்.

 

“பிளான் போட்டுட்டியா??”, என்றான் சந்தோஷமாக.

 

“அப்படிணா??”, என்றான் ஆர்வமாக. விஷம சிரிப்புடன் தலையை ஆட்டினான்.மற்ற இருவர் முகத்திலும் சிரிப்பு பரவியது.

 

“முகில் நாம  கிளம்ப அரேஞ்ச் பண்ணலாம் டா”.

 

“இல்ல ராக்கி அண்ணா நீங்க முன்னாடி போங்க நா பின்னாடி வரேன்”.

 

“சரிடா நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு விக்கி, முகில் அவன் கூடவே இரு டா”, என்று வெளியே சென்றான்.

 

“முகில் என் திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டியா??”.

 

“வாங்கிட்டேன்ணா, ஃபர்ஸ், போன் அப்புறம் கன் இருந்தது”.

 

“சரிடா நீ வரதுக்கு முன்னாடி என் காருல வேற ஏதாச்சும் திங்க்ஸ் இருந்தா எல்லாத்தையும் பத்திரமா ஊருக்கு வரப்ப கொண்டு வா”.

 

“ம்ம்… சரிண்ணா நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க நாளைக்கு வீட்டுக்கு போனதும் எல்லாத்தையும் சமாளிக்கணும்”.

 

“ஆமாடா”, என்று கண்களை மூடிக்கொண்டான். சிறிதுநேரத்தில் ராகவ் விக்ரமின் திங்க்ஸ் வாங்கிக் கொண்டு  அழைத்து சென்றான். யாரிடமும்  எந்த தகவலும் சொல்லாமல் மாலை ஐந்து மணி போல் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

 

ஸ்ரீ ,மிருணா, சங்கவி ,அனு நால்வரும் ஹாலில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஜாக்கி சத்தமாக குரைத்தது. நான்கு பேரும் வெளியே வந்து பார்க்கும்போது முதலில் ராகவ் இறங்கினான்.

 

“அண்ணா.. அத்தான்”, என்றனர் ஸ்ரீ மற்றும் சங்கவி சந்தோஷமாக.

 

அனு அவனைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாக அவனிடம் சென்று,” வரத சொல்லவே இல்ல!! சர்ப்ரைஸா??”, என்றாள் சந்தோசமாக.மிருணா ராகவின் முகத்தை பார்த்துவிட்டு பயத்துடனே!! பக்கத்தில் வந்து வேனை எட்டிப் பார்த்தாள். அங்கு  டிரைவர் வீல் சேரில் விக்ரமை உட்கார வைத்து இறக்கி விட்டார்.

 

“என்ன ராகவ் எதுவும் பேசாம அமைதியா இருக்க?? ஆமா விக்கி அத்தான் எங்க?? நீ மட்டும் தனியா வந்துருக்க??”, என்றாள் சிரிப்புடன் அவனைக் கவனிக்காமல்.

 

ஸ்ரீ மற்றும் சங்கவி விக்ரமை பார்த்து அதிர்ந்து நின்றனர்.” அண்ணா..”, என்று வீடே அதிரும் படி ஸ்ரீ கத்திக் கொண்டு பக்கத்தில் ஓடிவந்தாள்.

 

அவள் சத்தத்தில் வீட்டிலிருந்த அம்மாக்கள் பதறி வெளியே ஓடி வந்தனர்.“என்னாச்சுடா”, என்று பதறி அவனிடம் ஓடி வந்தனர்.

 

“அம்மா எனக்கு ஒன்னும் இல்ல சின்ன ஆக்சிடன்ட் தான் ஒரு வாரத்துல எல்லாம் சரியாயிடும்”, என்றான் சமாதானமாக.

 

“அண்ணா எப்படின்ணா ஆச்சு??”, என்றாள் அழுகையுடன்.

 

“எதிர்ல கார் வந்ததுடா கவனிக்கல லாஸ்ட் மினிட்ஸ்ல தான் பார்த்தேன்,  இடிக்காம திருப்புறப்ப மரத்துல மோதிட்டேன்”, என்றான் பொறுமையாக

 

“இருந்தாலும் நீ எப்போதும் கவனமா தானே!! இருப்ப”, என்றார் மீனாட்சி வேகமாக.

 

“விக்ரம் உண்மையை தான் சொல்றியா??”, என்றார் கோதை (அமரின் அம்மா).

 

“ஆமா அத்த”.

 

“சரி உள்ளே போய் பேசலாம் இவனே!! டயர்டா இருப்பான்”, என்று ராகவ் பேச்சை மாற்றி  வந்த டிரைவரை அனுப்பி விட்டு விக்ரமை  உள்ளே அழைத்து சென்றான்.

 

மிருணா விக்ரமை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே!! நின்றாள்.அனு அவள் தோளை தட்டி சுய உணர்வுக்கு கொண்டு வந்தாள். “அவருக்கு என்னாச்சு?? எங்க டி??”, என்றாள் பதறியபடி.

 

“உள்ள தான் இருக்காங்க வாடி”, என்று அழைத்து சென்றாள்.

 

விக்ரம் மிருணாவை பார்த்தான். அவள் கண்கள் கலங்கியபடி அவனைப் பார்த்தாள்.” நாம கிழம்பலாம் டா ராக்கி”, என்றான் பொய்யான கோபத்துடன்.

 

“ஏன் டா??”, என்றான் குழப்பமாக.

 

“பாரு எல்லாரும் அழுதுட்டே இருந்தா இங்க எப்படி இருக்குறது”, என்றான் சலிப்போடு.

 

“சரிடா நாங்க அழுகல”, என்றார் மீனாட்சி சமாதானமாக.

 

“நீ ஒன்னும் கோச்சுக்கிட்டு போக வேணா நல்லா ரெஸ்ட் எடு டா “, என்றார் கண்களை துடைத்துக் கொண்டு.

 

“சங்கவி.. ஸ்ரீ.. அவன் தான் சொல்றான்ல  ஒன்னும் இல்ல சின்ன காயம் தான்”, என்றான் ராகவ் சமாதானமாக.

 

“வந்த புள்ளைய சாப்பிட கொடுக்காம என்ன அண்ணி??  நகருங்க முதல்ல காபி குடிப்பா”, என்று தந்தார் கோதை.

 

“அத்த நீங்க தான்  என் தேவைய புரிஞ்சு வச்சிருக்கீங்க”, என்று இடது கையால் எடுத்து குடிக்க ஆரம்பித்தான். ராகவிடமும் காபியை கொடுத்தார்.

 

“விக்ரம்”, என்று பதறியபடி அப்பாக்கள் மூவர் மற்றும் அமர் வந்தனர்.

 

“அப்பா இப்பதான் ஒரு ஷிப்ட் முடிஞ்சது நீங்களும் ஆரம்பிக்காதீங்க”, என்றான் சலிப்புடன்.

 

“டேய்!! என்னடா ஆச்சு?? நீங்க வந்த விஷயத்தையே வாட்ச்மேன் சொல்லி தான் எங்களுக்கு தெரியும்”, என்றார் சக்கரவர்த்தி பதறியபடி.

 

ராகவ் விக்ரம் ஸ்ரீயிடம் சொன்ன அதே கதையை சொன்னான்.” ஓ.. பார்த்து வரக்கூடாதா விக்கி”, என்றார் செல்வம்(அமர் அப்பா).

 

“வலிக்குதா கண்ணா”, என்றார் சோமு.

 

“இல்ல”.

 

“டாக்டர்கிட்ட போலாமா டா??”, என்றான்.

 

“அமர் நாங்க வரப்ப நம்ம பேமிலி டாக்டர பார்த்துட்டு தான் வரோம்”.

 

“ம்ம்… சரி ராக்கி பாப்பா பக்கத்துல வா”, என்றான் ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்த மிருணாவை பார்த்து. அப்பொழுது தான் அனைவரும் மிருணா கவனித்தனர்.

 

“போடி அண்ணாதான் கூப்பிடுறாங்கல”, என்றாள் அனு.

 

“வா பேபி  வா “, என்றாள் ஸ்ரீ.

 

“அதான் அத்தானுக்கு ஒன்னும் இல்லையே!! அப்புறம் ஏன் டி அழுகுற??”, என்றாள் சங்கவி.

 

“இல்லல்ல நான் வரமாட்டேன் “, என்று வேகமாக அவள் அறைக்கு அழுதுக் கொண்டே ஓடினாள்.

 

விக்ரமை தவிர அனைவரும் கவலையாக பார்த்தனர். விக்ரம் ஓர் பெருமூச்சுடன்,” என்னைய என் ரூமுக்கு அழைச்சுட்டு போங்க”.

 

“கீழே இருக்கலாமே!! டா”, என்றார் மீனாட்சி.

 

“இல்லம்மா எனக்கு என் ரூம் தான் தூங்க வசதியாயிருக்கும்”, என்றான் முடிவாக.

 

“சரி”, என்று அழைத்து சென்றனர். விக்ரமை அவன் ரூமில் விட்டுவிட்டு அமர் மிருணாவின் ரூமிற்கு வந்தான்.  பெட்டில் படுத்து அழுது கொண்டு இருந்தாள்.“மிருணா”, என்று பக்கத்தில் உட்கார்ந்து தலைமுடியை கோதினான்.

 

“அண்ணா என்னால தான் மனுக்கு இப்படியாச்சு”, என்றாள் அவனை அணைத்துக் கொண்டு.

 

“அப்படின்னு யார் சொன்னா??”, என்று உள்ளே வந்தான் ராகவ்.

 

“நீங்க ரெண்டு பேரும் பொய் சொல்றீங்க எந்த காரும் குறுக்க வரல”, என்றாள்  வேகமாக திரும்பி அவனிடம்.

 

“கார் தான் வந்தது நீ தேவையில்லாம மனசு போட்டு குழப்பிக்காத”, என்று சமாதானமாக அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

 

“இல்ல பொய் பொய்”, என்று காதை பொத்திக் கொண்டாள்.

 

‘என்ன இது?? என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்கிறா?’, என்று மனதிலே புலம்பிக்கொண்டே,” நீ  இப்படி அழுது விக்ரம் கிட்ட அடி தான் வாங்கப்போற பாரு”, என்று பேச்சை மாற்றினான்.

 

“மிருணா இந்த காப்பிய  குடி”, என்று தந்தாள்.

 

“வேணா ஸ்ரீ”, என்று மறுத்தாள்.

 

“நியாவே!! கற்பன பண்ணிக்காத டி”, என்றாள் அனு முறைப்புடன்.

 

“மிருணா ரொம்ப யோசிக்காத டி”, என்றாள் சங்கவி சமாதானமாக.

 

“அமர் நீ அப்பா அம்மாவோட உடனே கிளம்பி எதுக்கு வந்த???”, என்றாள் கண்ணீரை துடைத்து வேகமாக.

 

அமர் ராகவ் பார்த்தான். நீயே பேசு என்பது போல் சைகை செய்தான். “அம்மாவையும் அப்பாவையும் உன்ன பாக்கணும்ன்னு சொன்னாங்க நீயூம் என்னைய பார்க்கானும்னு சொன்ன அதான் சர்ப்ரைஸா சொல்லாம வந்தேன்”, என்றான் மலுப்பல் சிரிப்புடன்.

 

“ஸ்ரீ அமர் கிட்ட நீயே கேளு இவன் பொய் சொல்றான்”, என்றாள் கோவமாக.

 

ஸ்ரீ அமரை முறைத்துக்கொண்டே,“இவ சொல்றது உண்மையா?? அங்க அப்படி என்னதான் நடக்குது?? என்ன சொன்னாலும் நம்புவேன்னு நினைச்சியா அமர்”, என்றாள் கோபமாக. அமர் முழித்தான்.

 

“ராகவ் சுதா எங்க???”, என்றாள் கோவமாக.

 

சுதா…”, என்றான் யோசனையுடன்.

 

“சுதாவுக்கு என்னாச்சு ராகவ்??”, என்றாள் பதறியபடி.

 

“சுதா நல்லா இருக்கா அஜீ அவங்க சொந்த ஊருக்கு போயிருக்கா”, என்றான் சமாதானமாக.

 

“ஏன்??”, என்றனர் இருவரும் கோரசாக.

 

“எல்லாம் ஒரு சேப்டிகு தான்”.

 

“அப்ப சுதாவுக்கு என்ன பிரச்சன???”, என்றாள் வேகமாக.

 

“ஏய்!! ராகவ்  என்ன முழிக்கிற?? சொல்லு எங்க  ஃப்ரெண்டுக்கு  என்னாச்சு???”, என்றாள் அனு ஆத்திரமாக.

 

“அது வந்து ஒன்னும் இல்ல நல்ல இருக்காங்க”, என்று சமாளிக்கத் தெரியாமல் முழித்தான். சங்கவி சோகமாக பார்த்தாள்.

 

“ராகவ் கேட்டா எதுக்கும் பதில் இல்ல  இப்ப விக்ரமும் அடிபட்டு  வந்திருக்காரு அப்ப அங்க ஏதோ!! பெரிய பிராப்ளம் தானே அர்த்தம்”, என்றாள் கோபமாக பெண்கள் நால்வரும் கண்களில் கேள்வியுடன் இருவரும் பார்த்தனர்.

 

“ஆமா முகில் எங்க??”, என்றாள் மிருணா பதறியபடி.

 

“அவன் நெக்ஸ்ட் வீக் வருவான், கேஸ் விஷயம் பேலன்ஸ் இருக்கு”.

 

“என்ன கேஸ்??”, என்றனர் நால்வரும்.

 

“அவன் பாக்குற கேஸ்மா தாயே!!”, என்று கும்பிடு போட்டான்.

 

“சரி காபி எடுத்துக்கோங்க”.

 

“எனக்கு  எதுவும் வேணாம் ஸ்ரீ”.

 

மிருணாவை சமாதானம் செய்ய எடுத்த முயற்சி அத்தனையும் தோல்வியிலே சென்றது. கீழே சாப்பிட அழைத்து வந்தனர்.” வாணி எல்லோருக்கும் பரிமாறு விக்ரமுக்கு ஊட்டிவிட்டுட்டு டேப்லெட் எல்லாம் போட வச்சுட்டு வரேன்”, என்று தட்டுடன் மேலே சென்றார் மீனாட்சி. வாணியும் கோதையும் பரிமாற ஆரம்பித்தனர்.

 

மிருணா சாப்பிடாமல் அப்படியே!! உட்கார்ந்திருந்தாள். செல்வா லக்ஷிமணனுக்கு போன் செய்து நடந்த அனைத்தையும் தள்ளி நின்று சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தார். அமரின் போன் அடித்தது,“அப்பா வீடியோக்கால் பண்றாங்க”, என்று வேகமாக அட்டென்ட் செய்தான். மிருணா வேகமாக ஓடிச்சென்று வாஷ்பேஷனில் முகத்தை கழுவி துப்பட்டாவால் துடைத்துக் கொண்டே வந்து உட்கார்ந்தாள். லக்ஷிமணன் அனைவரிடமும் நலம் விசாரித்தார். கடைசியாக மிருணாவின் கைக்கு போன் வந்தது.

 

“முகத்தை கழுவினா மட்டும் அழுது வீங்குன முகம் மாறி போயிவிடுமா”, என்றார் பொறுமையாக.

 

“அப்பா என்னால தான் பா எல்லாருக்கும் ப்ராப்ளம்…  இவ்ளோ நாளா அந்த சிவாவ எதிர்த்து பேசுனது எனக்கு தப்புன்னு தோணுனது இல்ல ஆனா இப்ப தோணுதுபா அது பெரிய தப்பு, எல்லாரும் என்னால தான் கஷ்டம் “, என்று கதறி அழுகிறாள்.

 

அமர் அவளை தோளில் சாய்த்துக் கொண்டான்.” இல்லடா “, என்றார் வருத்தமாக.

 

“இல்லப்பா செல்வா அப்பா.. அம்மா எல்லாம் சிவா கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு தப்பிச்சு வந்திருக்காங்க, சுதா கூட அவ  நெடிவ் போய்டா, அப்பா அவ எப்போதுமே!! அவங்க ஊருக்கு போகமாட்டா உங்களுக்கு தெரியும்ல, எல்லாரும் அவங்க இருக்குற இடத்த விட்டு என்னாலதான் அலஞ்சுக்கிட்டு இருக்காங்க “, என்று போனை டேபிளில் வைத்து அமரை கட்டிக்கொண்டு  அழுதாள்.

 

இதன் தொடர்ச்சி அதுத்த லிங்க்கில் தொடரும்……………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!