Skip to content
Post Views: 2,161
காவலனின் கைதி அவள்-22
“மிருணா”, என்று ஓர் சந்தோஷ குறளில் இளம் யுவதி வீட்டுக்குள் வந்தாள். முகில் சிரிப்புடன் பின்னாலே!! வந்தான்.
Advertisement
இவள் சத்தத்தில் அனைவரும் வெளியே! வந்தனர். மிருணா மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்து, வந்தவளின் இரு கன்னத்திலும் அறைந்தாள். அனைவரும் அதிர்ந்தனர். விக்ரம் மற்றும் ராகவ் முகிலின் இரு கன்னத்தில் அறைந்தனர்.”அக்கா.. அண்ணா..”, என்றனர் விஷாலினி மற்றும் முகில் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன்.
Advertisement
Advertisement
“இப்ப எதுக்குடி இங்க வந்த??? அறிவு இருக்கா?? உன்ன எப்படி அம்மாவும் அப்பாவும் விட்டாங்க”, என்று மீண்டும் அறைய கை ஓங்கினாள்,
Advertisement
அவள் கையை வேகமாக ஸ்ரீ தடுத்து,”இவ விஷாலினி தானே!! மிருணு”, என்றாள் சந்தேகமாக.
“அண்ணி.. நா தான்”, என்று அணைத்தாள்.
அவளை விலக்கி,” எதுக்கு இப்படி சொல்லாம கிளம்பி வந்த விஷா??”, என்றாள் கோவமாக.
“அண்ணி அது..”, என்று தயங்கியபடி அமரைப் பார்த்ததும்,”அண்ணா காப்பாத்து”, என அவனை அணைத்தாள்.
“விஷா எதுக்குடா இப்படி சொல்லாம வந்திருக்க”, என்றான் அவளை விலக்கி.
“ஏய்!! இங்க எதுக்கு வந்த அத சொல்லு டி??”, என்று கோபமாக அவள் மேல் கையை பிடித்து இழுத்தாள்.
“ம்ம்.. நீ சாகப்போறல கடைசியா உன்ன பாக்கலாம்னு தான் வந்தேன்”, என்றாள் எரிச்சலுடன். அனைவரும் விஷாவை முறைந்தனர்.
“விஷா என்கிட்ட அடி வாங்காத ஒழுங்கு மரியாதையா சொல்லு”, என்றாள் ஆத்திரமாக.
“நீ மட்டும் இங்க கஷ்டப்படுவ அத பார்த்துகிட்டு என்னைய அங்க ஜாலியா இருக்க சொல்றியா”, என்று அழுதாள்.
“நான் எங்கடி கஷ்டப்படுறேன்”, என்றாள் பொய்யான முறைப்புடன்.
“பொய் சொல்லாத விக்ரம் மாமாக்கு அடிபட்டதும் நீ அப்பாகிட்ட எப்படி அழுதனு அப்பா சொல்லிட்டாங்க, போதும் மிருணா நீ அழுகுறது எங்களால பார்க்க முடியல”, என்றாள் அழுகையுடன்.
“விஷா நா உண்மையாகவே! நல்லா தான் இருக்கேன், அன்னைக்கு எனக்கு மனசு சரியில்ல அதான் அழுதேன்”, என்றாள் அவள் கண்ணீரை துடைத்து.
“ஆனா என்கூட வளர்ந்த மிருணா அழுது நா பார்த்ததே! இல்லையே!”, என்றாள் கோபமாக.
“எல்லா நேரமும் அப்படி இருக்க முடியுமா?? அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா??”, என்றாள் மீண்டும் கோவமாக.
“நா ஏன் சொல்லணும்”, என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.
“விஷா”, என்று அனு சந்தோஷமாக அழைத்துக்கொண்டு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தாள்.
“அனு அக்கா”, என்று அணைத்து விடுவித்தாள்.
“எப்படி இருக்க?? எப்ப வந்த??”, என்றாள் சந்தோசமாக.
“ஹ்க்கும்.. ஏன் வந்தன்னு கேக்குறாங்க இங்க, நீங்க பேசாம உங்க கூட உங்க வீட்டுக்கு அழச்சுட்டு போயிடுங்கக்கா”, என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.
“யாருடி சொன்னா??”, என்றாள் கோபமாக.
“நா தான் டி எரும மாடு அவ அம்மா அப்பா கிட்ட சொல்லாம வந்திருக்கா, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா அவ கிட்ட நலம் விசாரிச்சுட்டு இருக்க”, என்றாள் ஆத்திரமாக.
அனு விஷாவை முறைத்தாள். அவள் பாவமாக பார்த்தாள்.”விடு மிருணா அதான் நல்லபடியா வந்துட்டால்ல!!”, என்றாள் சமாதானமாக.
“ஆமா மிருணா நம்ம கூட இருக்கணும் தானே!! வந்திருக்கா விடுடி”, என்றாள் சங்கவி சமாதானமாக.
“நீ என்ன சாப்பிடுற விஷா குட்டி”, என்றாள் வாணி.
“அத்த இப்பவாச்சும் பேசுனீங்கலே!!”, என்றாள் பாவமாக அவர் பக்கத்தில் சென்று.
“நீ எப்ப வேணாலும் வரலாம் டா, அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்திருக்கலாம்”, என்றார் மீனாட்சி.
“இல்லத்த சொன்னா விடமாட்டாங்க அதான்”, என்றாள் முழித்துக்கொண்டு.
“என்ன பழக்கம் இது விஷா”, என்றார் கோதை கண்டிப்பான குரலில்.
“அம்மா அதான் பத்திரமா வந்துட்டேன்ல, செல்வா அப்பா எங்க??”.
“அப்பா மாமா மூணு பேரும் எஸ்டேட் போயிருக்காங்க”.
“எனக்கு ரொம்ப பசிக்குது பிளைட்ல சரியாவே சாப்பிடல, முகி உனக்கு பசிக்கிதா??”, என்றாள் முகிலை பார்த்து. அவன் மற்றவர்களை பார்த்து கொண்டு தலையை மட்டும் ஆட்டினான்.
“வந்ததும் சொல்லிருக்கலாம்ல சரி வாங்க இரண்டு பேரும்”, என்று விஷா மற்றும் முகிலை அம்மாக்கள் அழைத்துச் சென்றனர்.
மிருணா தலையில் கை வைத்தபடி சோபாவில் உட்கார்ந்தாள்.” ப்ச்.. மிரு முதல்ல மாமாகிட்ட சொல்லலாம்”, என்று விக்ரம் லக்ஷ்மணனுக்கு போன் செய்து நடந்ததை சொன்னான்.
“அவ கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி இருந்தா விக்ரம் ஃப்ரெண்ட்ஸ் சேர்த்து புராஜெக்ட் பண்ணனும் மூன்று நாள்ல முடிக்கனும் ஃப்ரெண்டு வீட்டுக்கு போகனும்னு சொன்னா, நானும் அவ ஒரு மாதிரி இருக்கானு அனுப்புனேன், இப்படி பண்ணுவான்னு நினைக்கல”, என்றார் வருத்தமாக.
“சரி விடுங்க மாமா நாங்க பாத்துக்குறோம் விஷாவும் முகிலும் வராங்க அப்புறம் பேசுறேன் மாமா”, என்று வைத்தான்.
“அப்பா அம்மா கிட்ட கூட சொல்லாம வர அப்படி என்னடி காரணம்??? இந்த நாய் தான் வர சொன்னதா??”, என்றாள் மிருணா கோவமாக முகிலைக் கை காட்டி.
“இந்த நாய் கூப்பிட்ட நா ஏன் வரப்போறேன்???”, என்றாள் முறைப்புடன்.
“ஏய்!! என்னடி ஆளாளுக்கு நாயின்னு சொல்லுறீங்க”, என்றான் கோபமாக.
“உன்ன திட்டாம கொஞ்சம் சொல்றியா??? முகில், இங்க இருக்க பிரச்சன உனக்கு நல்லா தெரியும் தெரிஞ்சும் இவள வர வச்சிருக்க”, என்றான் அமர் கோவமாக.
“அண்ணா இவ்ளோ!! நேரம் பொறுமையா தானே இருந்தீங்க இப்ப எதுக்கு கோவப்படுறீங்க”, என்றான் பாவமாக.
“ம்ம்.. அப்ப நீங்க ரெண்டு பேரும் டயர்டா தெரிஞ்சிங்க இப்பதான் சாப்பிட்டு நல்லா இருக்கீங்களே!! சொல்லு விஷா என்ன இதெல்லாம்???”, என்றான் கண்டிப்பான குரலில்.
“அண்ணா என்னால அக்காவ இப்படி பார்க்க முடியல, இப்ப கூட என்கிட்ட கோவப்படுற மாதிரி நடிக்கிறா, நா வந்தது அவளுக்கு சந்தோசம் தான், அவ மட்டும் இங்க தனியா இருந்து கஷ்டப்படுவா நாங்க மட்டும் அங்க இருக்கோம், அவளுக்கு இப்ப நாங்க தேவ ஆனா அவ அத சொல்ல மாட்டா ஈகோ பிடிச்சவ”, என்றாள் அழுகையுடன்.
மிருணா வந்த அழுகையை அடக்கிக்கொண்டு,”விஷா இப்ப நீ வந்தத யாராச்சும் பார்த்து இருந்தா பெரிய பிரச்சன அது ஏன் உனக்கு புரியல, வர வழியில்ல சிவா ஆளுங்க பார்த்திருந்து உன்ன ஏதாச்சும் பண்ணி இருந்தா”, என்றாள் நடுங்கிய குரலில்.
“அதுக்குதான் நா நடுசாமத்துல இறங்குற மாதிரி ஃப்ளைட் ஏறுனேன், அதுவுமில்லாம முகி தான் இருக்கான்ல அவன் உயிர கொடுத்தாச்சும் என் உயிரக் காப்பாத்துவான்”, என்றாள் கிண்டலாக.
“அடிப்பாவி கொல பண்ணனும்குற ஐடியால தான் வந்திருக்க போல”, என்றான் தலையில் கை வைத்து முழிப்புடன். அனைவரும் சிரித்தனர்.
“நா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் மிருணு”, என்று அணைத்தாள்.
“நானும் தான்டி”, என்றாள் அணைத்தபடி.
“தெரியும் அதான் வந்தேன் உன்ன இங்க தனியா விட்டுட்டு போகவே மனசில்ல, அம்மா அழுதுக்கிட்டே இருந்தாங்க எனக்கும் அழுகையா வந்தது, அப்பா தான் எல்லாம் சரியாகிடும்னு ஆறுதல் சொன்னாங்க உன்ன பிரிஞ்சு இருக்கவே முடியல”, என்றாள் அழுகையுடன்.
“நாய்சேகரி உன் வாட்டர் டாம இங்க ஓபன் பண்ணி ஊட்டியாவே மிதக்க வைக்க பிளானா டி”, என்றாள் கிண்டலாக விலகி அவளைப் பார்த்து.
“ஏய்!! சண்டிராணி எத்தன தடவ சொல்றது அப்படி சொல்லாதன்னு”, என்றாள் கோவமாக.
“அப்புறம் எதுக்கு நீ அழுகுற??”, என்று கண்ணீரை துடைத்தாள்.
“சரி சொல்லு அக்கா இந்த மாமாங்க எப்படி பார்த்துக்குறாங்க?? கொஞ்சமாச்சும் தேருவாங்களா??”, என்றாள் கிண்டலாக விக்ரம் மற்றும் ராகவை பார்த்து.
“இவ்ளோ!! நேரம் அழுதுட்டு இப்ப நம்மலயே!! கிண்டல் பண்ண வந்திருச்சு பாரு டா”, என்றான் ராகவ் கிண்டலாக.
“மிரு இன்னும் இரண்டடி விடுவன்னு நினைச்சேன் மிஸ் ஆயிடுச்சு!!”, என்றான் விக்ரம் கிண்டலாக.
“அடப்பாவி மாமா என் முகத்த இப்படியா சிவக்க வைக்க பிளான் பண்ணி இருக்கீங்க அது நடக்காது”, என்றாள் சிரிப்புடன்.
அமரின் போன் அடித்தது,”சொல்லுங்கப்பா”.
“அமர் கண்ணா ஸ்பீக்கர்ல போடு டா”, என்றார் கவிதா.
“சரிமா”, என்று போட்டான்.
“ஏய்!! எரும மாடு விஷாலினி ஏமாத்திட்டு அங்க போயிட்டியா டி நாயே!!”, என்றார் கோவமாக.
“அம்மா சொன்ன விட மாட்ட அதான் சொல்லாம வந்துட்டேன்”, என்றாள் பாவமாக.
“நீயும் உன் அக்கா மாதிரி சொல்ற பேச்ச கேக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா டி ??”, என்றார் ஆத்திரமாக.
“அம்மா”, என்றாள் மிருணா பல்லை கடித்துக்கொண்டு.
“நீ பேசாதடி உன்ன மாதிரியே!! இவளையும் மாத்தி வச்சுருக்க, இவ சரியான பயந்தாங்குளி தானே!! எப்படி அவ்ளோ!! தூரம் தனியா வந்தா??”, என்றார் கோபமாக.
“அம்மா நா ஒண்ணும் வர சொல்லல இந்த நாயே!! வந்துருச்சு”, என்றாள் விஷாவை முறைத்துக்கொண்டு.
“அம்மா மிருணாக்கு தெரிஞ்சா என்னைய வர வேணாம்னு சொல்லுவா அதான் இவ கிட்ட சொல்லாம முகில பிக்கப் பண்ணிக்க சொல்லி வந்தேன்”, என்றாள் வேகமாக.
“அவன் என்ன கிறுக்கா டி ?? நீ சொன்னதும் வந்து பிக்கப் பண்ண வந்திருக்கான் அறிவு இருக்கா அவனுக்கு “, என்றார் கோவமாக.
விஷா மற்றும் மிருணாவை தவிர மற்றவர்கள் முகிலை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தனர்.” சரி விடுமா நா கேட்டேன்னு பண்ணிட்டாரு “, என்றாள் சோகமாக.
“சரி விடு கவி அவ தான் பத்திரமா வந்துட்டாளே!!”, என்றார் கோதை சமாதானமாக.
“அண்ணிகளுக்கு தான் இவளால சும அதிகமாயிருச்சு”, என்றார் வருத்தமாக.
“என்ன கவி இப்படி பிரிச்சு பாக்குற நம்ம வீட்டுல இருக்குறதுக்கு என்ன”, என்றார் மீனாட்சி வேகமாக.
“இப்படி எல்லாம் நினைக்காதீங்க அண்ணி, என்ன சும இருக்கப் போகுது நம்ம வீட்டு பிள்ளைங்க நம்ம வீட்டுல இருக்குறதுக்கு”, என்றார் வாணி சமாதானமாக.
“ம்ம்.. சரிங்க அண்ணி நீங்க பண்ணுற உதவிக்கு என்ன கை மாறு செய்ய போறேனோ தெரியல ??”.
“என்ன கைமாறு அது இதுன்னு பெரிய வார்த்தை சொல்ற “, என்றார் மீனாட்சி.
“அண்ணி நம்ம வீட்ல இருக்க என்ன?? இப்படி எல்லாம் சொல்லாதீங்க”, என்றார் வாணி.
“ம்ம்.. சரிங்க அண்ணி, ஒழுங்கா ரெண்டு பேரும் சண்ட போடாம இருங்கடி, பாத்துக்கோங்க அண்ணி, அக்கா”, என்று வைத்தார்.
“ஏய்!! உங்க அம்மா என்னடி என்னைய நாயே!! அறிவில்லாதவன்னு சொல்லுறாங்க”, என்றான் கோவமாக.
“அதனே!! உண்ம”, என்றாள் மிருணா நக்கலாக.
“விடு முகி அம்மா ஏதோ!! கோவத்துல உண்மைய சொல்லிட்டாங்க, பாவம் விட்டுடு”, என்றாள் விஷா சமாதானமாக.
“அடியே!! நா வர வேணானு தானே!! சொன்னேன், நீ தானே! வந்த உன்ன கூப்பிட வந்தேன் பாரு இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ”, என்றான் முறைப்புடன்.
“ஓய்!! என்ன ஒரு தடவ தான் சொன்ன, எனக்கு உன்னைய பாக்கணும் போல இருக்குன்னு சொன்னது நீதானே!!”, என்றாள் வேகமாக.
“ஆகமொத்தம் எனக்காக நீ வரல”, என்றாள் பொய்யான முறைப்புடன்.
“மிரு சும்மா சொல்றா அவள முதல்ல ரெஸ்ட் எடுக்க விடு”, என்றான் விக்ரம்.
“விஷா ரெஸ்ட் எடு அப்புறம் பேசிக்கலாம் “, என்றான் ராகவ்.
“விஷா வா உனக்கு ரூம் காட்டுறேன்”, என்று ஸ்ரீ மற்றும் சங்கவி அழைத்து சென்றனர்.
“வா மிருணா நாம குக் பண்ண ஹெல்ப் பண்ணலாம்”, என்றாள் அனு.
“இருடி மனு விஷாவும் முகிலும் வரப்ப யாராச்சும் பார்த்திருப்பாங்களா??”, என்றாள் சந்தேகமாக.
“அப்படில இருக்காது”, என்றான் சமாதானமாக.
“ஒருவேள பார்த்திருந்தா என்ன பண்றது?”.?
“அதெல்லாம் சமாளிச்சுக்கலாம், அம்மா மிருணாவ அழைச்சுட்டு போங்க”, என்றான் ராகவ்.
“இல்ல நா”, என்று ஆரம்பிக்கும் போதே தடுத்து,
“அஜீ”.
“வாடி நாம போகலாம் “, என்று உள்ளே இழுத்து சென்றாள்.
“மிருணா சொன்ன மாதிரி நடந்திருந்தா??”, என்றான் அமர் யோசனையுடன்.
“அப்படி பார்த்திருந்தா எனக்கு போன் வந்திருக்கும் “, என்று விக்ரம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே! போன் அடித்தது,” ஹலோ “, என்றான்.
“அண்ணா அண்ணி இருக்குற இடம் சிவாவுக்கு தெரிஞ்சு போச்சு”, என்றான் ராம் அவசரமாக.
“எப்படி டா??”, என்றான் முகிலை முறைத்துக் கொண்டே.
“அண்ணியோட தங்கச்சி கோயம்புத்தூர் ஏர்போர்ட்ல பார்த்ததும் சிவா ஆளுங்க கால் பண்ணி சொல்லிட்டாங்க, அவள யாரு இப்ப வர சொன்னது??”, என்றான் கோவமாக.
“அவள ஏர்போர்ட்டுல இருந்து பிக்கப் பண்ணுனது முகில் தான் டா”, என்றான் முறைத்துக் கொண்டே.
“அவனுக்கெல்லாம் எப்படி நா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை கொடுத்தானுங்க, அந்த நாதாரிக்கு தெரியாது சிவா ஆளுங்க எல்லா இடத்துலயும் இருப்பாங்கன்னு”, என்றான் ஆத்திரமாக.
“தெரியும் தெரியும் தெரியாம என்ன?? மிருணா எப்படி போனா இவனுக்கு என்ன?? இவன் ஆளு வந்தா போதும் “, என்றான் ஆத்திரமாக திட்டிக்கொண்டே. முகில் முழித்தான்.
“அண்ணா உங்க உடம்பு இப்ப தான் சரியாகிருக்கு இப்போதிக்கு நாம களத்துல இறங்க முடியாதேணா”, என்றான் வருத்தமாக.
“நா நல்லா தான் இருக்கேன் டா எப்ப கிளம்புறீங்க??”.
“தெரியலைணா நா அப்புறம் பேசுறேன்”, என்று வைத்தான்.
“இப்போ உனக்கு சந்தோஷமா டா??”, என்றான் கோவமாக.
“இதுக்கு தான் அடுத்த வாரம் வரேன்னு சொன்னியா??”, என்றான் ராகவ் ஆத்திரமாக.
“நீ தெரிஞ்சு பண்றியா?? தெரியாம பண்றியா டா?? நாயே!!”, என்றான் அமர் கோபமாக.
“அண்ணா என்னாச்சு??”, என்றான் குழப்பமாக.
“அந்த சிவாவுக்கு மிருணா இருக்குற இடம் உன்னால தெரிஞ்சு போச்சு டா”, என்று மூவரும் அவனை குனிய வைத்து அடித்தனர்.
“அண்ணா போது வலிக்குது, விஷா ரொம்ப அழுதாணா அதான் சரி வானு சொன்னேன்”, என்றான் முதுகை தடவிக் கொண்டு.
“அதுக்காக”, என்றனர் மூவரும் கோவமாக.
“சாரிணா இப்படி நடக்கும்னு நா யோசிக்கல”, என்றான் வருத்தமாக.
“சரி வாங்க ரூம்ல போய் பேசிக்கலாம் இங்க வேணா”, என்று விக்ரம் மூவரையும் அறைக்கு அழைத்துச் சென்றான். நால்வரும் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தனர். விக்ரம் யோசனையோடு சில திட்டம் சொன்னான்.
மாலையில் அனைவரும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு அரட்டை அடித்தனர்.சங்கவியின் முகம் சோர்வாகவே!! இருந்தது. போன் பேசுவது போல் எழுந்து சென்றாள்.அவள் போன் பேச தான் போகிறாள் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தனர். விக்ரம் மட்டும் அவள் பின்னால் சென்று,” சங்கவி என்னாச்சு?? ஏன் எழுந்து போயிட்டா??”.
“அத்தான் அது போன்”, என்று தடுமாறினாள்.
“உண்மைய சொல்லு”, என்றான் கூர்மையான பார்வை.
“அத்தான் என்னால சந்தோஷமா இருக்க முடியல ராம் எங்க அத்தான்??”, என்றாள் கலங்கிய குரலில்.விக்ரம் யோசனையுடன் சங்கவியை பார்த்தான்.
சென்னை:
“அண்ணே!! நாம உடனே!! ஊட்டி கிளம்பலாம்”, என்றான் குரு.
“ம்ம்.. போலாம் டா நைட் கிளம்பலாம்”, என்றான் சிவா.
“அண்ணே!! இப்ப கிளம்புனா விடிய காலைல போயிடலாம், அந்த சி.பி.ஐயையும், சி.ஐ.டியையும் நா சும்மா விடமாட்டேன், அண்ணிய நம்ம கண்ணுலயே! மண்ன தூவி அனுப்பிட்டானுங்க, என் கையால அவனுங்கள சாகடிக்கணும்”, என்றான் ஆத்திரமாக.
“ஆமாடா அவனுங்கள கொன்ன தான் என் ஆத்திரம் அடங்கும், சும்மா விட கூடாது என் மிருணாவ என்கிட்ட இருந்து பிரிச்சுடானுங்க”, என்றான் சிவா ஆத்திரமாக.
“டேய்!! கத்தி, துப்பாக்கி எடுத்து வைங்க டா ஊட்டி கிளம்பனும்”, என்று அடியாட்களை ஏவிவிட்டு,” அண்ணே!! நாம முன்னாடி கிளம்பலாம்”, என்றான்.
“ம்ம்.. சரிடா டேய்!! பின்னாடியே! மத்தவங்க எல்லாரும் வந்து சேருங்க, நீங்க அஞ்சு பேரும் எங்க கூட வாங்கடா”, என்று அழைத்துக் கொண்டு சிவா கிளம்பினான்.
ஊட்டி:
“என்ன அத்தான் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க??”, என்றாள் கலங்கிய கண்களுடன்.
விக்ரம் ஃபோன் அடித்தது,” அண்ணா நாங்க அடியாட்களோட கிளம்பியாச்சு ஊட்டிக்கு வந்ததும் சொல்றேன்”.
“டேய்!! சங்கவி உன்ன கேக்ககுறா டா”.
“அண்ணா நா பேசுற சூழ்நிலைல இல்ல உங்க மாமா பொண்ணு கிட்ட சொல்லுங்க, நெக்ஸ்ட் பிளான் சீக்கிரம் ரெடி பண்ணுங்க நா காலைல போன் பண்றேன்”, என்று வைத்துவிட்டான்.
சங்கவி விக்ரமை கேள்வியாக பார்த்தாள்.” சங்கவி ஒரு அவசர வேல நா உடனே! போயாகணும் ராகவ், முகில் கிளம்புங்க டா”, என்றான்.
“விக்ரம் நானும் வரேன்”.
“வேணா அமர் நீ இவங்க கூட இரு, வாங்கடா போகலாம் “, என்று அவசரமாக மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
சங்கவிக்கும் ராமுக்கும் உள்ள உறவு என்ன??? எப்படி ராமை சங்கவிக்கு தெரியும்?? விக்ரம் போட்ட திட்டம் வெற்றி அடையுமா??? அவசரமாக எங்கு செல்கின்றனர்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…….
கைதியின் சிறை தொடரும்…..
error: Content is protected !!