Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannan Avan Kaatro

Kannan Avan Kaatro 3

“ஏன்டி.. ஒழுங்கா பொண்ணு மாதிரி நடந்துக்கோன்னு சொன்னா கேக்குறியாடி நீ… எங்க போனாலும் ஏழரைய இழுத்துகிட்டு வந்துடுற” டீ போட்ட படி கோமதி உள்ளே புலம்பி கொண்டு இருக்க 

 

“விடு மதி… வந்ததும் வராததுமா எதுக்கு பிள்ளையை போட்டு வையுற… அவன் எவனோ களவாணி பையன் வன்பு இழுத்தா சும்மா வர முடியுமா.. அதன் அவுங்களுக்கு புரியுற பாஷைல சொல்லிக்கிட்டு வந்து இருக்கா” சிவகாமி உமாவிற்கு சாதகமாக பேச 

 



Advertisement

ஒரு தட்டு பலா பழத்தை ஒருத்தியாக உள்ளே முழுங்கி கொண்டு.. அவர்கள் பேசுவது காதிலேயே விழாத படி இருந்தாள் உமா 

 

உமாவினுடைய குடுபம் அழகிய, சிறிய குருவி கூடு போன்றது… தினமும் அரட்டைகளும்.. சேட்டைகளும்.. சிரிப்பு சத்தமும் பொங்கி வழியும்… 

Advertisement

 

Advertisement

அந்த வீட்டின் மூத்தவர் சிவகாமி அம்மாள்.. மூத்த மகன் மாணிக்கம், மனைவி எழில் 

இரண்டாவது மகன் செல்வம், மனைவி கோமதி (மதி என்பது வீட்டு வழக்கம்)

 

Advertisement

மாணிக்கம் தம்பதிக்கு ஒரு மகனும்(ஜனா), மகளும்(ராதா)

செல்வம் தம்பதிக்கு கொத்தமல்லி கொத்தாட்டம் ஒரே மகள்(உமா)

 

பிள்ளைகள் சுறு வயது இருக்கும் போதே சிவகாமியின் கணவர் இறந்து விட.. பிள்ளைகளையும், சொத்து அனைத்தையும் ஒத்தை ஆளாக நின்று பார்த்து வருகிறார் சிவகாமி.. அதனாலேயே ஊருக்குள்ள அவருக்கு மதிப்பு அதிகம் 

 

மாணிக்கமும், செல்வமும் வளந்து தாயின் பாரத்தை குறைத்து அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டனர்… 

 

வீட்டிற்கு வந்த மருமகள் இருவரும் கூட அக்கா தங்கை என்ன ஜோதியில் ஐக்கியம் ஆகி விட.. குடும்பத்தில் அமைதியே நிலவியது 

 

ஆனால் இந்த அமைதியில் ஒளிந்து இருக்கும் சூராவலியை மறைக்க முடிந்ததே தவிர யாராலும் மறக்க முடிய வில்லை 

 

மாணிக்கத்தின் மூத்த மகள்.. ராதா.. இரண்டு தலைமுறையாக பெண் குழந்தை  இல்லாமல் ஆண்கள் மட்டுமே பிறந்த குடும்பத்தில்… முதல் பெண் வாரிசாக பிறந்தாள் ராதா 

 

அதனாலேயே வீட்டில் அனைவர்க்கும் அவள் செல்ல மகளாகி போக..அவளை அதட்டி கூட யாரும் பேசியது இல்லை.. 

 

இத்தனை சுதந்திரத்திற்கும் அவள் கொடுத்த பரிசு.. தலை குனிவு தான்.. அவளுக்கு திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்து.. சொந்தத்தில் ஒரு மாப்பிளை பார்த்து நிச்சயம் வரை கொண்டு வர… அன்று அனைவரையும் அதிர்விக்கும் வகையில் வீட்டை விட்டே ஓடி விட்டாள் ராதா 

 

அதற்கு அவள் கொடுத்த காரணம்.. காதல்.. தன்னுடன் பையிலும் ஒருவனை விரும்புவதாக.. அவனுடனே வாழ ஆசை படுவதாக கூறி விட்டு சென்று இருந்தாள் 

 

இது நடந்து கிட்ட தட்ட மூன்றும் வருடம் இருக்கும்.. உம்மாவும், ஸ்ரீஜாவும் ஹாஸ்டளில் தங்கி படித்து கொண்டு இருந்த காலம் அது… 

 

பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து கொண்டு இருக்க.. உமாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணிய அனைவரும்.. அவளிடம் உண்மையை மறைக்க… இன்று வரை அது அவளுக்கு தெரியாதா ரகசியமாகவே இருந்து வருகிறது 

 

ராதா காதலித்தவனுடன் ஓடி விட்டாள் என்பது மட்டுமே அவளுக்கு தெரியும்.. அதுவும் ஊரில் அரசால் புரசலாக பேச்சுக்கள் காதில் பட்டாதே தவிர.. இவளாக வீட்டில் உள்ளவர்களிடம் எதையும் கேட்டு கொண்டதில்லை.. இது நாள் வரையிலும் 

 

ராதா, உமா இருவருக்குள் உறவு எதுவும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.. மூத்த மகள் என்று ராதாவிற்கு செல்லம் கொடுக்க.. அது அவளுக்கு மகாராணி என்ற உணர்வையே கொடுத்தது 

 

அதனாலேயே இளையவளான உமாவை அவள் மதித்தும் இல்லை.. மரியாதை கொடுத்து நடத்தியதும் இல்லை.. 

 

ராதா சந்தர்ப்ப வாதி…தேவை இருக்கும் இடத்திலேயே உறவு வைத்து கொள்ள நினைப்பவள்.. தேவை முடிந்த உடன்  பந்தாய் உதைத்து விட்டு வந்து விடுவாள் 

 

உமா, ராதாவிற்கு நீர் எதிர்…  சிறு பிள்ளை முதலே சுட்டி.. வால் தனம் அதிகம் அவளிடம்.. செல்லும் இடத்தில் இருந்து புகார்கள் வராமல் இருந்ததே இல்லை…தைரியமாக இருக்க வேண்டும்.. உண்மையை மட்டுமே பேச வேண்டும்..அனைவரையும் மதிக்க வேண்டும்..  என்பது சிவகாமி அவளுக்கு கற்று கொடுத்த பாடம்.. 

 

ஜனா அந்த குடும்பத்தின்  அப்பாவி வாரிசு.. ராதா அவனை மதிக்காமல் போக.. உமா பிறந்ததில் இருந்து தான் அவனுக்கு தங்கை என்ற உறவே அறிமுகம் ஆனது.. அதனால் இன்றும் ராதாவா, உமாவா என்றால் அவன் உமாவை தான் தேர்வு செய்வான் 

 

“அட விடு மதி.. சின்ன பொண்ணு தானே..அது இல்லாம நம்ப பொண்ணு மேல தப்பு இல்லாம அவளை எதுக்கு வையுற” என்ற படி எழில், உமாவை ஆதரித்த படியே உள்ளே வந்தார் 

 

“அப்டி சொல்லுங்க பெரியம்மா.. இந்த அம்மாக்கு புத்தியே இல்ல..எப்போ பாரு என்னை திட்டிகிட்டே இருக்காங்க” என்றவள் சமையல் அறை புகுந்து 

 

“அம்மா இன்னும் கொஞ்சம் பழம் குடேன்” என்றாள் உமா 

 

“இப்போதான் என்னை புத்திகெட்டவனு சொன்ன..இப்போ வந்து சாப்பிட பழம் கேக்குற” எடக்காக கோமதி கேட்க 

 

“ஆமாம்.. புத்தி இல்லனு தான் சொன்னேன்… பேசுறத கேக்க காது தானே வேணும்..ஏன் அதுவும் போச்சா உனக்கு” திமிராகவே வந்தது பதில் 

 

அடி சிறுக்கி… உமாவை அடிக்க கோமதி கை ஓங்க… 

 

“ஹையோ சாமி.. ஐயம் எஸ்கேப்”என்ற படி பறந்தே விட்டாள் அந்த சிட்டு 

 

செல்லும் அவளையே ஆசையாய் முகத்தில் புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்த எழிலிடம் பேசினார் கோமதி 

 

“அக்கா.. அந்த வடக்கு தேர்வுல மூணாவது வீட்டுல டாக்டர் பையன் இருக்கான் இல்ல…அவனுக்கு நம்ப உமாவை கேட்டு வந்தார்களாம்.. உமா அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு..பையன் எப்படிக்கா”

 

“நல்ல பையன் தான் மதி.. முறைல கூட அண்ணன் குடுத்தும்னு தான் வரும்.. நல்லா உசரமா..கருத்த முகம்னாலும் நல்ல கலையா இருப்பான் பையன்.. நம்ப ஊருல தானே வேலையும் செய்யுறான்..பொண்ணும் கண்ணனுக்கு எட்டுன தூரத்தில் இருக்கும்”

 

என்ற படி இருவரும் பேசி கொள்ள.. இவை அனைத்தும் பறந்து சென்றவள் காதில் விழாமல் இல்லை 

 

அறையில் அமர்ந்து எதையோ வரைந்தது வண்ணம் இருந்தாள் உமா.. அப்போது உள்ளே நுழைந்த ஸ்ரீஜா.. அவள் வரைவதை எட்டி பார்த்து விட்டு 

 

“இன்னைக்கு என்ன ஆச்சாம் மகாராணிக்கு.. மனசு சரி இல்லனா தானே கண்ணன் போட்டோவை வரைவ..இப்போ என்ன மன கஷ்டம் ஆகிடுச்சு உனக்கு” கார்மேக கண்ணின் வரைத்தவளை வினவினாள் ஸ்ரீஜா 

 

தாயின் பேச்சுக்களை அவளிடம் அவள் கூற 

 

“நீ என்ன நேமச்சிகிட்டு இருக்க…இப்போ நீ போய் நான் ஒருத்தரை விரும்புறேன்.. அவரை தான் கல்யாணம் பணிக்க போறேன்னு சொல்ல போறியா?”

 

அப்டி எப்படி சொல்ல முடியும் ஸ்ரீ.. ஏற்கனவே அக்கா பன்னிட்டு போனதால காரியத்துனால.. அப்போ அப்போ ஆச்சி கஷ்ட பாடுவாங்க தெரியுமா.. நானும் போய் எப்படி இப்டி சொல்ல முடியும் 

 

அதுவும் இல்லாம..அவன் யாருனு கூட எனக்கு தெரியாது.. யாரை காதலிக்குறத சொல்லுவேன்.. அன்னைக்கு புயல் மாதிரி வந்தான்.. அமைதியா இருந்த என் மனசை கலைச்சிட்டு போய்ட்டான்.. எனக்கு அவன் பேர் கூட தெரியாதே.. அப்டி இருக்கும் போது நான் யார்னு சொல்ல முடியும்” பேசும் போதே கண்ணும், குரலும் சேர்ந்தேன் கலங்கியது உமாவிற்கு 

 

“அப்போ நீ அந்த டாக்டரை கல்யாணம் பணிக்க போறியா.. உன்னால் அது முடியுமா”

 

“என் கண்ணை பிரிஞ்சி டங்கன் வாழணும்னா.. இந்த வாழ்க்கையே வேணாம்னு செத்துவேன் ஸ்ரீ.. இன்னொருத்தருக்கு மட்டும் என்னால கழுத்தை நீட்ட முடுயாது…இன்னைக்கு எனக்குள்ள இருக்க தைரியம்.. தி்டம் எல்லாமே அவன் கொடுத்துட்டு போனது தானே.. சொல்ல போன அவனுக்கு பிடிக்கும்னு தானே நான் தைரியமான, துடுக்கா நடந்துக்குறேன்..அப்டி இருக்கும் போது நான் எப்படி…” வார்தை சிக்கி கொண்டது தொண்டையில் 

 

“பார்க்காத காதல், ஈமெயில் காதல், கண்ட உடன் காதல்னு நெறைய பார்த்து இருக்கோம்டி.. ஆனா உன்னோடது யார்னே தெரியாதவர் மேல காதல்.. நினைத்தேன் வந்தாய் படத்துல கனவுல வந்தவளை விஜய் காதலிக்குறத விட பைத்தியகார தனம் உன்னோட காதல்.. அதை தெரிஞ்சிக்கோ” கோவம் தான் வந்தது ஸ்ரீஜாவுக்கு, தன் தோழியின் பைத்திய கார தனத்தை பார்த்து 

 

“கண்டிப்பா வருவான் ஸ்ரீ…அன்னைக்கு தெரியும் என்னோட காதலின் மகிமை” கையில் இருந்த அந்த துணி துண்டை மார்போடு அணைத்த படி, உறுதியாய் கூறினாள் உமா 

 

                       ?????

 

சென்னையின் அந்த முக்கிய சாலையில், பரபரப்பான காலை பொழுதில்.. சீறி கொண்டு வந்து நின்றது கார் ஒன்று 

 

அந்த ஆறடுக்கு கட்டிடத்தின் முன் புழுதியை கிளப்பி கொண்டு நின்றது அது… 

 

அதன் டிரைவர் ஓடி வந்து பின் கதவை திறக்க.. இறங்கினான் அவன், சத்யன் 

 

அந்த கட்டிடத்தின் மூன்றாம் தளம் முழுதும் அவனின் சொந்தம் தான் என்றாலும்.. முதல் மற்றும் நான்காவது தளத்தில் நான்கில் ஒரு பங்கு..அவனுடையது 

 

சாந்தமான..பிரகாசம் பொருந்தியது அவனின் முகம்.. எரியும் நெருப்பை போல கோவத்துடனே சுற்றி வரும் கண்கள் 

 

சட்டைக்கு கஞ்சி போட்டதை போல விரைப்பான உடல்.. மனமும் தான்… கிட்ட தட்ட மூன்று வருடமாய் அவன் அயராது உழைத்து உருவாக்கியது தான் அவனின் இந்த சமஸ்தானம் 

 

அவனின் பேச்சிற்கு எதிர் பேச்சு கேட்க விரும்பாதவன் அவன்… தேவை அற்ற பேச்சுக்களை சாத்தான்கள் தான் பேசும் என்று நம்புபவன் அவன்.. தேவை இருந்தும் பேச மறுப்பவர் கோழை.. அவனின் அகராதியில் 

 

சத்யனின் குடும்பம் கடும் புயலில் மாட்டி கொண்டு சிக்கி மீள தவிக்கும் படகை போன்றது.. அதில் குழப்பமும், பயமும் இருக்குமே தவிர.. சிரிப்பும், குறும்பும் ஒரு நாளும் இருந்ததே இல்லை 

 

சிரிப்பும், குறும்பு தனமும் வாழ்க்கையில் தேவை அற்றவை என்றே நினைப்பவன் அவன் 

 

தந்தை விஸ்வநாதன்.. தாய் சாரதா.. தங்கை ஹரினி 

 

ஹரிணிக்கு குங்கபு, கராத்தே என்று அனைத்தையும் காற்று கொடுத்து இருந்தாலும்.. அவள் இளம் வயதில் ஏற்படும் காதல் நோக்கு ஆளாகி விட கூடாது என்பதற்காக அவளுக்கு எ1பாதுகாப்பு போட்டு.. எப்போதும் அவளை பின் தொடர ஆட்களை நியமித்தான் சத்யம் 

 

இது ஹரிணிக்கும் தெரியும் தான்..சத்யனின் மன போராட்டம் புரிந்தவள்.. தெரிந்ததை போல் காண்பித்து கொள்ள வில்லை 

 

அந்த அகண்ட பெரிய நுழைவு வாயிலில் நுழைந்த சத்யன்.. மாடி ஏற லிப்ட்டிற்கு காத்திருக்க 

 

“டேய் மச்சான்.. என் ஆளு கிட்ட இருந்து லெட்டர் வந்து இருக்குடா.. அடுத்த வாரம் இங்க வரலாம்.. நாம சந்திக்கலாம்னு சொல்லி இருக்காடா.. ரெண்டு வருஷமா பார்க்காமலே காதலிச்சிக்கிட்டு இருக்கோம்..அவளை நேர்ல பாக்க போறோம்னு நெனச்சாலே ஒரே சந்தோசமா இருக்குடா” துள்ளிய படி ஒருவன் அங்கு பேசி கொண்டு இருக்க 

 

அதை கேட்ட சத்யன்.. அவனின் அருகில் சென்ற சத்யன் 

 

“Mr.என்ன சொன்னீங்க.. பார்க்காமலே காதலிக்குறீங்களா.. இப்போ எல்லாம் பார்த்து, பேசி, பழகி கல்யாணம் பணிகிட்டாலே உன் கிட்ட காசு இல்ல..பணம் இல்ல..நீ பார்க்க அழகா இல்லனு ஆயிரம் காரணம் சொல்லி இன்னொருத்தனோட போய்டுறாளுங்க.. இதுல கண்ணால பார்க்காமலே காதலிக்குறேன்னு சொல்லுற… பார்த்து சந்திக்கும் போது குழந்தையோட வந்து நிக்க போறா” முகத்தை சுருக்கிய படி அவன் கூறி விட்டு லிப்ட்டில் ஏறி விட 

 

“என்னடா இந்த ஆளு.. யார் கிட்டயோ செமயா வாங்கி இருப்பாரு போல.. அதான் ஊருல எவன் லவ் பண்ணாலும் கட்டாய போடுறாரு.. 

 

போன வாரம் அவர் கம்பெனில லவ் பண்ற ரெண்டு பெற வேலையை விட்டே தூக்கிட்டாராம்…சரியான சாடிஸ்டா இருப்பாரு போல” என்ற படி அவர்கள் பேசி கொண்டு நகர்ந்தனர் 

 

தன்னுடைய அலுவலகம் நுழைந்தவனுக்கு.. மனதில் நிம்மதி இல்லாமல்… பல நினைவுகளும், பல கட்சிகளுமே kan முன் ஓடி கொண்டு இருந்தது 

 

அவாளின் முகம்.. அதை மறக்க முடியுமா அவனால்.. அவளின் சிரித்து மயக்கும் பேச்சு.. ஆலை மயக்கும் கண்கள் என அனைத்தும் அக்கினி முன் வந்தது அவனுக்கு 

 

அவனின் என்ன ஓட்டம் இவரு இருக்க.. அதை கலைக்க ஒலித்தது அவனின் கைபேசி 

 

திரையில் தெரிந்த பேரை கண்டவன்..கட்டு படுத்த முடுயாத கோவத்தை அடைய.. மீண்டும் மீண்டும் அந்த திரையை பார்க்க.. அது அவனை மேலும் கோவம் கொள்ள செய்ய.. எதையும் யோசிக்காமல் கைபேசியை எதிரில் இருக்கும் சுவற்றில் விட்டு எறிந்தான் அவன்.. அது சுக்குநூறாக உடைந்து தரையில் தன் சிதறிய பாகங்களுடன்.. நொறுங்கி கிடந்தது 

 

நொறுங்கியது கைபேசி மட்டும் இல்லை.. அவனின் மனமும் தான்.. அன்றைய நினைவுகளில் உளவ துவங்கினான் சத்யன் 

 

                   காற்று வீசும்….. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!