ஆர்யன் கொடுத்த யோசனைபடியே தன் குழுவிடம் பேச அவர்களுக்கும் அதில் அத்தனை மகிழ்ச்சி..!!
“சூப்பர் சக்தி.. நீ இல்லாமல் ஒரு கம்ப்ளீட் ஃபீல்லே இல்லை.. இதுவும் நல்ல ஐடியா தான்.. உனக்கான போர்ஷனை நீயே ஷூட் பண்ணி அனுப்பிட்டால் நாங்க இங்க எடிட் பண்ணிப்போம்..”
என்று உற்சாகமாய் சொல்ல அவளுக்கும் ஆர்வம் வந்தது.
அதிலும் யாமினியின் பேச்சுகள் அவளை குழம்பி கண்டபடி அலைபாய்ந்த எண்ணங்களை சற்று தெளிய வைத்தது எனலாம்.. அன்று மட்டும் தான் இப்படி சொல்லிவிட்டாரே என ஆற்றாமையோடு சுற்றியது. அதன்பின் நிதானமாய் அவரின் பேச்சுகளை அசைபோடலானாள்.
‘எங்கே தவறியது.. உண்மையில் தப்பு எங்கே..’ என்று யோசித்தாள். அடுத்தவர் நமக்கு புகுத்தும் அறிவைவிட நாம் நம் சுய அலசலில் காணும் விடைகளும் பாடங்களும் இன்னும் வலிமை வாய்ந்தது. நம்மை சீர்ப்படுத்த கூடியது.. அவ்வகையில் சக்தியும் நிறைய உணர்ந்தாள். இன்னும் தன் செயல்களில் முதிர்ச்சியும் நிதானமும் தேவை என புரிந்துக் கொண்டாள்.
மேலும் ‘வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ்.. ‘ நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவே போவதில்லை என்று நினைக்கும் அவருக்கு தான் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
அதன்படி இன்னும் தீவிரமாய் பயிற்சியை தொடர்ந்தாள். அதற்கென சில மணிநேரத்தை ஒதுக்கினாள். தெரியாத நுணுக்கங்களை கற்றுக் கொண்டாள்.
அதற்கு தகுந்தாற்போல் ‘நிகழ்ச்சியின் முதல் படப்பிடிப்பிற்கான அழைப்பும் பங்கேற்பாளர்களின் பட்டியலும் வெளியானது. மொத்தம் இருபது குழுக்கள்.. தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலக அளவில் விரவியிருக்கும் தமிழ் இசை கலைஞர்களை தேடி சேர்த்திருக்க தங்கள் சக பங்கேற்பாளர்களை பார்க்கும்போது போட்டியின் கடுமை புரிய இன்னும் உழைத்தனர்.
சக்தி தனக்கு பிடித்த விஷயங்களை மீண்டும் கையில் எடுத்தால் முந்தைய சோர்வுகளும் குழுப்பங்களும் கூட பின்னுக்கு போக ஒரு உற்சாக அலை எப்போதும் அவளை சுற்றி இருப்பதை வீட்டில் அனைவருமே உணர்ந்தனர்.
அன்றும் அதே போல் மதியம் அவள் ப்ராடீஸ் செய்துக் கொண்டிருந்த சமயம் அவளை தேடி வந்தாள் மேக்னா..
“ஹாய் அண்ணி.. வரலாமா..?”
அறை வாயிலில் தலையை மட்டும் நீட்டி கேட்டவளை கண்டு,
“இதென்ன புதுசா கேட்டுட்டு.. வா.. வா..”
என்று அழைத்து,
“உங்க அண்ணன் இன்னுமா அந்த படத்தை பார்கிறார்….”
என்று கிண்டலாய் கேட்டாள்.
விடுமுறை நாளன்று மதியம் சேர்ந்து ஒரு நல்ல படம் பார்ப்போம் என்று சொன்னதற்கு கேட்காமல் பிடிவாதமாய் ஒரு மொக்கை படத்தை அவனுக்கு பிடித்த கதாநாயகனுடையது என்பதற்காக பார்த்தே தீருவேன் என அழிச்சாட்டியம் செய்தவனை, ‘எப்படியோ போ..’ என்று இருவருமே தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விட்டனர்.
“அது இன்னும் ஓடிட்டு தான் இருக்கு.. ஆனா அவன் தூங்கி தான் அரைமணி நேரம் ஆச்சு.. தன்னை மறந்து அப்படியே தூங்கிட்டான்.. அவன் ஹீரோ ஏர்ல சும்மா பாஞ்சு வந்து அடிச்ச சீன் எல்லாம் மிஸ் பண்ணிட்டான்.. பாவம்..”
என்று சிரிக்காமல் அவள் சொல்ல இவளுக்கு தான் சிரிப்பு பொங்கியது.
“நல்லா இருக்காதுன்னு தெரியும்.. வீம்புக்கு சில நேரம் சின்ன புள்ளை மாதிரி இப்படி தான் இரிடேட் பண்றது..”
“ஹாஹா ரொம்ப கரெக்ட்.. தங்கச்சியா என்னை எவ்வளவு கொடுமை படுத்துவான் தெரியுமா..?? என் நிலைமை எல்லாம் யோசிச்சு பாருங்க.. நானே பாவம்..”
மேக்னா போலியாய் கண்ணீரை துடைத்து கொள்ளவும்,
“ஆஹான்.. நீ அவரை விட வாலு.. உன்னை கம்பெர் பண்ணினால் என் புருஷன் தான் பாவம்..”
என்று சக்தி சட்டென்று கட்சி மாறிவிட,
“ஆஹா அண்ணி.. நல்லா சேம் சைட் கோல் போடுறீங்க..”
என்று சொல்ல அதற்கு சக்தி கண்சிமிட்டி,
“பின்ன.. ஹீ இஸ் மை ஸ்வீட் ஆத்துகாரர்ர்ர் னா..”
என்று இரு கைகளின் நுனிவிரல்களை உரசி வெட்க பாவனையில் சொல்லவும் மேக்னா சட்டென்று சிரித்துவிட அது சக்தியையும் தொற்றிக் கொண்டது.
சிரித்து ஓய்ந்ததும்,
“நீங்க வாசிக்கிறதை கேட்கலாம்னு தான் வந்தேன்.. எவ்வளவு அழகா கீப்போர்ட் வாசிக்கிறீங்க.. அப்பா கூட சொல்வாங்க.. உங்க அண்ணி வாசிக்கும் போது வேற எல்லா வேலையும் மறந்துட்டு மெய் மறந்து கேட்கலாம்ன்னு.. அது நூத்துக்கு நூறு சரி..”
என்று பெருமையாய் மேக்னா சொல்ல,
“அது இசைக்கே உள்ள தனி சிறப்பு.. நான் மட்டும் கிரெடிட் எடுத்துக்க முடியாது..”
என்று சொன்னவள்,
“ஆனால் நம்ம வாசிக்கிறது கேட்டு இப்படி யாராவது சொன்னால் அவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா..?? யூடியூப்ல வருகிற ஒவ்வொரு கமெண்ட்டும் அவ்வளவு ஆர்வமா தேடி தேடி படிப்பேன்..”
என்று சொல்ல புன்னகைத்த மேக்னாவும்,
” எனக்கும் உங்க பேண்ட் முன்னாடி இருந்தே தெரியும் அண்ணி.. ஆனால் உங்களை பார்த்தபோது ஸ்ரைக் ஆகலை.. நீங்க சொன்ன அப்புறம் மறுபடியும் பார்த்தபோது தான் தெளிவா பார்த்தேன்.. அக்சுவலீ… எங்க காலேஜ் கேங் முழுக்க கெளதம் விசிறிகள்..”
“அது அப்போ அண்ணி.. இப்ப எல்லாம் ‘எங்க அண்ணி தெரியுமா இவங்கன்னு எல்லா சோசியல் மீடியாவிலும் போஸ்டர் ஒட்டியாச்சு..”
என்று சொல்ல,
” நல்லா சமாளிக்கிற மேன் நீ..”என்றாள் அப்பொழுது..
“அண்ணி..”
என சிணுங்கிய மேகி,
“அதை விடுங்க.. எப்படி உங்களுக்கு மியூசிக்ல ஆர்வம் வந்துச்சு.. உங்க அம்மா வாலயா..”
என்று கேள்வியில் தாவி விட்டாள். அதில் யோசித்த சக்தி,
“ம்ம்ம்.. பர்டிகுலர்ரா சொல்ல தெரியல.. ஆனால் எனக்கு சின்ன வயசுல இருந்தே ஃப்ளூட் சவுண்ட் ரொம்ப பிடிக்கும்.. மெதுவா.. மென்மையா நம்ம உயிரை தொடுறா மாதிரி ஒரு ஃபீல்.. அப்படியே மெஸிமரைஸ் பண்ணும்.. ஐ லவ் தட்.. அம்மா ஒரு தடவை கிளாஸ் சேர்த்து விடவா கேட்டாங்க.. நானும் ரொம்ப ஹேப்பியா சேர்ந்து கிட்டேன்.. அப்போ இருந்து இப்ப வரையும் எனக்கு அதில் க்ரேஸ் குறையல.. கீபோர்டும் நானே ஆசை பட்டு கத்துக்கிட்டது தான்.. ஆனா ஃப்ளூட் இஸ் சம்திங் ஸ்பெஷல் ஃபார் மீ..”
என்று லயிப்போடு சொன்னவள் சட்டென்று கண்கள் பளீச்சிட,
“இங்க வா..” என்று அவளை அழைத்து சென்று தன் அலமாரியை திறந்து காட்ட பார்த்த மேக்னாவிற்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது.
அதில் ஒரு பகுதி முழுக்க புல்லாங்குழல் தொகுப்பு..!! வெவ்வேறு வகையில் வெவ்வேறு அளவில் புல்லாங்குழல்..!!! இன்னும் சிலவை புல்லாங்குழலின் இக்கால புதிய கருவிகளும் இருக்க எல்லாவற்றையும் அழகாய் வடிவாய் அடுக்கி வைத்து இருந்தாள்.
“யூ ஆர் க்ரேஸி அண்ணி.. இப்படி ஒரு காலெக்ஷன் பார்த்ததே இல்லை..”
என்று வியப்பு மாறாமல் மேக்னா சொல்ல,
“ஒவ்வொரு மெட்டிரியலுக்கு ஏற்ப சவுண்ட் வேரி ஆகும்.. ஒரே மாதிரி இருக்குல.. ஆனா ஒவ்வொன்னுக்கும் ஒரு யூனிக்னெஸ் இருக்கு.. அது கேட்க ரொம்ப இன்ரெஸ்டீங்கா இருக்கும்.. என் செலரில பாதி இதுக்காக தான் ஸ்பென்ட் பண்ணுவேன்..”
சிரித்த சக்தி அதில் தேடி ஒன்றை மட்டும் எடுத்து அவளிடம் கொடுத்து,
“இதை தவிர.. இது ஐரிஸ் ஃப்ளூட்.. உங்க அண்ணன் எனக்காக முதல் முதலில் வாங்கி கொடுத்தது..”
என்றாள் வாஞ்சையோடு..
“அட.. இதெல்லாம் அவனுக்கு தெரியுமா..”
“ம்ம்ம்.. அப்போ நாங்க லவ் பண்ண ஆரம்பிச்ச புதுசு.. எங்க விருப்பு வெறுப்பு எல்லாம் அவ்வளவா ஷேர் பண்ணிக்கிட்டது இல்லை.. அந்த டைம்ல ஆரியன் கிட்ட இருந்து இப்படி ஒரு கிபிட் எதிர்பார்க்கவே இல்லை… நான் வாயடைச்சு போயிட்டேன்..”
சொல்லும் போதே அந்த நாளில் தித்திப்பு இன்றும் இனித்தது.
அலமாரியை மூடிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்ததும் அந்த ஃப்ளூட்டை ரசித்து பார்த்த மேக்னா,
“சூப்பர்ல.. எங்க அண்ணனுக்குள்ள இப்படி ஒரு லவர் பாய் ஆ.. நம்பவே முடியல அண்ணி..”
என்றவள், “ம்ஹும்.. கப்பிள்ஸ் கோல் என்றது இது தான் போல.. நீங்க சண்டை போட்டு கூட நான் பார்த்தே இல்லை.. எப்பவும் லவ் அண்ட் லவ் ஒன்லீ தான்.. உங்க ரெண்டு பேரையும் பார்த்தால் பொறாஆஆஆமையா இருக்கு..”
என்று அதையும் இரசிப்போடு நீட்டி சொல்ல பெரிய ஜோக்கை கேட்டது போல் விழுந்து விழிந்து சிரித்த சக்தி,
“நாங்க சண்ட போட்டது இல்லையா.. உங்க அண்ணன் கிட்ட மட்டும் இதை சொல்லி பார்.. கொதிச்சு எழுந்திடுவார்..
எப்பவும் எங்க இரண்டு பேர் தாட்ஸ் வேற வேற பாதையில் இருக்கும்.. அதனால எப்ப பார் சண்டை சண்டை தான்.. எதாவது பெருசா செஞ்சு இவனை மாதிரி லவ் பண்ண முடியுமான்னு யோசிக்க வைச்சு அது முடிக்கும் முன்னாடியே எதாசும் சின்ன விஷயத்தில் மனசு ஹர்ட் ஆகிறா மாதிரி பண்ணி வைச்சுடுவார்..”
என்றவள்,
“இன் ஃப்க்ட்.. காதலுக்கு முன்னாடியே எங்களுக்கு சண்டை தான் வந்தது..”
என்க, “ஹோ.. அப்போ உங்கது மோதல் டு காதலா..”
என்று கேட்கவும் ஆமோதித்து,
“உங்க அண்ணன் ஃபைனல் இயர்ல சஸ்பென்ஷன் வாங்கினார் நியாபகம் இருக்கா.. அந்த நேரம் காலில் அடியெல்லாம் பட்டு கட்டு போட்டு இருந்தாங்க..”
என நினைவு படுத்த,
“ம்ம்ம் இருக்கே.. அதெப்படி மறக்கும்.. அப்பாவ எல்லாம் காலேஜ் கூப்பிட்டாங்க.. முதல் முறையா ஆரியன் மேல அப்பா செம கோபத்தில் இருந்தது அப்போ தான்.. மறுநாளே அடிப்பட்டு நிற்கவும் அவ்வளவு தான் அப்படியே உருகி போய்டாங்க..”
என்று நன்றாகவே அவள் விளக்கவும் சற்று சங்கடமாய் பார்த்தவள்,