Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

குழலிசை அழகே – 12 (2)

இடுப்பில் கையூன்றி சக்தியை முறைத்தவன்,



Advertisement

“உனக்கு உன் கவலை..”

என அவனின் தலையை கலைத்து விட்டு,

Advertisement

“உங்க ஒவ்வொருத்தனும் படிச்சு முடிச்சு தான் நான் கல்யாணம் பண்ணனும்னா எனக்கு இருக்கிற முடியெல்லாம் கொட்டி போயிடும்… அப்புறம் உங்க அக்கா என்னை வேணாம்னு சொல்லிடுவாங்க.. பாவம்

Advertisement

இல்லையாடா நானு..”

என்று அவர்களுக்கு ஏற்ப விளையாட்டாகவே காரணம் சொல்ல முறைப்பது அவளின் முறையானது.

Advertisement

“ச்சே.. ச்சே.. எங்க அக்கா ரொம்ப ஸ்வீட்.. அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க..”.

என்று ஒரு சிறுமி தன் அக்காவிற்கு கொடித் தூக்க,

“அப்படி சொல்லு மித்து..” என்றாள் சக்தியும் மிதப்பாக..!!

“உங்களை ஏன் வேணாம் சொல்ல போறாங்க.. உங்களுக்கு முடியே இல்லைனாலும் ஸ்மார்ட்டா தான் இருப்பீங்க.. “

என்று இன்னொருவன் சொல்லவும்,

“ஹோ.. ஈஸிட்..”

என்று ஆரியன் வடிவேல் போல் சொல்ல சிரித்துவிட்டனர்.

“ஆமா ண்ணா.. உங்க ஃபிசீக்.. நீங்க சூப்பரா இருக்கீங்க.. உங்களை மாதிரியே எனக்கும் உடம்பு வைக்கணும்னு ஆசை..”

மீசை அரும்ப தொடங்கிய அந்த பதின்ம வயது பையன் ஆரியனை ஆர்வமாய் பார்த்து கேட்டான்.

“தாராளமா வைக்கலாமே.. நிறைய எக்ஸஸைஸ்.. கொஞ்சமா டயட் இருந்தால் போதும்..”

என்று ஆரியன் உற்சாகமூட்ட,

“இவன் விக்கி.. இப்போ லெவன்த் படிக்கிறான்.. உன் கேஸ் தான்..”

என்று சக்தி சிரிக்கவும்,

“ஏன்.. உனக்கும் ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா..”

என புருவம் உயர்த்தி பார்த்தான்.

அவனோ,

“ஹான்.. நான் எங்க ஸ்கூல் அத்லெடிக்ஸ் சாம்பியன்..”

என்று பெருமையாய்  சொல்லவும் கண்கள் மின்ன,

“அடடே.. என் இனமடா நீ..”

என்று உற்சாகமாய் தோளில் கைப்போட்டு தன்னோடு நிறுத்திக் கொண்டு தன் கல்லூரி வீர சாகசங்களை எடுத்துவிட ஆரியனை ஒரு குருவாகவே பார்க்க தொடங்கிவிட்டான் அவன்..!!

இப்படி இவர்கள் அடிக்கும் சேட்டைகளை ஹாலில் அமர்ந்திருந்த விஷாகனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆரியனை பிடிக்கும்..!!

அவனின் பேச்சிலும் செயல்களிலும் உள்ள தெளிவில் பலதரப்பட்ட மக்களை பார்த்து பழகிய அனுபவம் கொண்ட விஷாகனுக்கு சிறந்தவனாகவே தெரிந்தான். அதுவே அவரை பெரிதாய் மறுக்க தூண்டவில்லை.

அவர்கள் பேச்சுகளில் விஷாகனும் புன்னகை அரும்ப இரசித்து பார்த்திருக்க தொண்டையை கனைத்து தன் பக்கம் அவர் கவனத்தை திருப்பினார் யாமினி.

கைகட்டி அவரையே பார்த்து நின்றவர் என்ன என்பது போல் விஷாகன் நோக்கவும்,

“நீங்க எப்போ கிளம்புறதா உததேஷம்..”

என்று கேட்க அதில் அடிப்பட்ட மனதோடு,

“தட் வாஸ் ஸோ ரூட் யாமினி..”

என்றார் குற்றசாடலாய்..!!!

“வாட்டெவர்.. சக்தியோட மாமனார் மாமியார் வராங்கன்னு தானே வந்தீங்க.. அவங்க போயிட்டாங்க.. உங்க வேலையும் முடிஞ்சுது.. அப்போ கிளம்புறது தானே..”

என்று யாமினி அதே தொனியில் சொல்ல அவருக்கு இரத்த அழுத்தம் எகிறியது. திரும்பி மகளையும் மருமகனையும் நோக்க அவர்கள் கவனம் இங்கில்லை எனவும்

“நீ சொன்னால் உடனே எல்லாம் போக முடியாது.. இங்க தான் இருப்பேன்.. எனக்கு தோணும்போது தான் போக முடியும்..”

என்று அழுத்தமாய் சொல்லி தான் எப்பொழுதும் தங்கும் அறைக்குள் போய்விட,

‘வெளியே போன்னு என்ன சண்டையா போட முடியும்..’ எரிச்சலாய் வந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாமல் தலைவிதியே என விட்டு விட்டார் யாமினி.

அந்த பிள்ளைகள் சென்றதும் அப்போதே சக்தியும் ஆரியனும் தங்கள் கையோடு கொண்டு வந்திருந்த அழைப்பிதழ்களை எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவர் வீட்டிற்கும் தனி தனியே சென்று தங்கள் வரவேற்பு சொல்லி அழைத்தனர்.

கெளதம், ஸ்வேதா, லெனின், யோகி வீடுகளுக்கும் அவள் வேலை செய்த கல்லூரி நண்பர்களுக்கும் மறுநாள் செல்வாதகவும் இருந்தனர்.

அப்பார்ட்மென்ட் பிள்ளைகள் வீடுகளுக்கு எல்லாம் போய்விட்டு வருவதற்குள் நன்றாக இருட்டி இருக்க கிட்சனில் தனியே சமைத்துக் கொண்டிருந்த யாமினியோடு சக்தியும் சேர்ந்துக் கொள்ள வெளியே ஆரியன் வந்ததும் அவனோடு வந்தமர்ந்து பேசினார் விஷாகன்.

மிக இயல்பாய் வலம்வரும் சக்தியையே  குறுகுறுவென யாமினி பார்க்க ஒரு கட்டத்தில்,

“என்ன ம்மா பார்க்குறீங்க.. அன்னைக்கு பேசிய பேச்சுக்கு இந்த திசை பக்கமே வர மாட்டேன்னு நினைச்சுட்டீங்களோ..”

என திரும்பி அவர் முகத்தை பார்த்து நகைப்போடு கேட்க அப்போதும் அவர் பார்வையில் மாற்றம் இல்லை.

“வருவேன்னு தெரியும்.. ஆனால் என்னை நிமிர்ந்து கூட பார்க்காம ஒதுங்கி நிற்பேன்னு நினைச்சேன்…”

என்றவர்,

“இந்த சக்தி எனக்கு ரொம்ப புதுசா தெரியுறா.. எனக்கு தெரிஞ்ச சக்தி இவ்வளவு எல்லாம் பேச மாட்டாள்..”

என்று சொல்ல அதற்கும் மெல்லிய சிரிப்போடு,

“அக்சுவலீ.. நான் நிறையவே பேசுவேன்.. ஆனால் பல சமயம் அது வாயில் இருந்து வெளியே வராமல் என் மைண்ட்டோட நின்னுடும்…”

என்றவள், “முக்கியமா உங்க கிட்ட..”

என்று சொல்ல யாமினி புருவம் உயர்ந்தது.

“ஆனால் அந்த போன் கான்வெர்ஷேஷன் எனக்கு வேப்பிலை அடிச்ச எஃபக்ட் தான்.. நமக்கு இடையில் இருந்த ஐஸை ப்ரெக் பண்ணினா மாதிரி.. எனக்கு உங்க கிட்ட இருந்த தயக்கத்தை உடைச்சுது.. சில விஷயங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வைச்சுது..”

என்று கைகட்டி சுவற்றில் சாய்ந்து நின்று பேச வேலை இருப்பது போல் திரும்பி தன் வேலையை தொடர்வது போல் அவள் பார்வையை தவிர்த்து,

“என்ன சொல்ல வர..” என்றார் அலட்சியம் போலவே..!!

“உங்களையே தப்பு சொல்லிட்டு இருந்தேன்.. நீங்க மத்தவங்க மாதிரி பாசம் வைக்கல.. என்னை பேம்பர் பண்ணல.. அந்த எண்ணம் தான் என் மனசுல ஆழமா இருந்தது.. ஆனால் நான் வைக்கும் ஆக்கியூஷேசனை நீங்க என்னை நோக்கி திருப்பிய போது தான் புரிஞ்சுக்கிட்டேன்.. அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க நியாயம்..

நீங்க என்னை சுயநலமா யோசிக்கிறேன்னு சொன்னீங்க..  நான்  கல்யாணம் பண்ணது முட்டாள்தனமான முடிவுன்னு சொன்னீங்க.. ஆனா அப்படி இல்லைனு சொல்ல என் பக்கம் நிறைய காரணம் இருந்தது.. அப்போ அதே மாதிரி தான் உங்க பக்கமும் காரணம் இருக்கும்.. அப்பா பக்கமும் காரணம் இருக்கும்.. அதை ஏன் நான் யோசிச்சே பார்க்கலைன்னு உணர்ந்தேன்…”

என்றவள் யாமினியின் கையை பற்றி,

யோசிச்சு இருக்கணும்… ரியலி வெரி சாரி ம்மா..”

என்று உள்ளார்ந்து கூற துளையில் இருந்து வரும் தோட்டாவாய் பட்டென பதில் கொடுக்கும் யாமினிக்கே பேச வரவில்லை.

“இப்பவும் நீங்களா சொல்ல நினைத்தால் தவிர நானா எந்த விளக்கமும் கேட்க போறது இல்ல.. நாம மூணு பேருக்குமே கருத்து வேறுபாடு நிறைய இருக்கலாம்..  எண்ட் ஆஃப் த டே.. வீ ஆர் அ பேமிலி ம்மா… நமக்காக நாம மட்டும் தான்.. இந்த பேமிலியே இல்லாமல் போறதில் எனக்கு விருப்பமே இல்ல..

பட் ஐ ரெஸ்பெக்ட் யூவர் ஃபீலிங்க்ஸ்.. நீங்களும் அப்பாவும் லைஃப் ஓட  க்ரிடிக்கல் ஸ்டேஜ்ல இருக்கீங்க.. இப்ப எடுக்கிற முடிவு தான் உங்க மிச்ச வாழ்க்கையோட ஆதாரம்.. அவசரபடாமல் நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க.. நீங்க என்னை மாதிரி கிடையாது தான்.. ஐயன் லேடி..”

என்பதில் லேசாய் சிரித்து,

“உங்க ஸ்டைலிலே கடந்து வாங்க ம்மா.. உங்க இரண்டு பேருக்குமே நான் எப்பவும் இருப்பேன்.. நீங்க சேர்ந்து இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி..”

என உறுதியாய் அவள் சொல்லி நிறுத்த யாமினி கண்கள் கலங்கிவிடுமோ என்ற அபாயத்தில் நின்றது.

சிறு பெண்ணாய் என்ன கேட்டாலும் ‘ஆம்.. இல்லை..’ என பொம்மையாய் தலையாட்டும் சக்தி கண்முன் வர,

“எவ்வளவு வளர்ந்து விட்டால் இவள்..”

முதன்முறையாய் தன் மகளின் முதிர்ச்சியான பேச்சை கண்டு திகைத்து நிற்க,

“ம்ஹும்..” என திடீரென கேட்ட கனைப்பில் இருவருமே திரும்பி பார்க்க வாயிலில் நின்றிருந்தார் விஷாகன்.

அவரின் நெகிழ்ந்த முக பாவமே  அனைத்தையும் காதில் வாங்கியே நிற்கிறார் என்பதை காட்டிவிட்டது. ஆனாலும் அதனை குறித்து எதுவும் சொல்லாமல்,

“நான் கிளம்புறேன் சக்தி..”

என்று அவளிடம் விடைபெறும் விதமாய் சொல்லி நகர்ந்துவிட்டார்.

யாமினியை திரும்பி பார்த்தவள்,

“இப்போவா.. எங்க ப்பா…”

என்று கேட்டு அவர் பின்னோடு வர,

“அதே தான் நானும் கேட்டேன்.. ஏதோ வேலை இருக்கு.. போயே ஆகணும்னு மாமா சொல்றாங்க..”

என்று ஆரியனும் சொல்லி அருகில் வர யாமினி அமைதியாய் பார்த்து நின்றார். ‘முக்கிய வேலை..’ தான் சொன்னதால் தான் வந்தது என்று புரியாதா அவருக்கு.. ஆனாலும் இருங்க என்று சொல்ல வாய்வரவில்லை.

“அட்லீஸ்ட் சாப்பிட்டாச்சும் போகலாம்..”

என்று சக்தி சொன்னதற்கும்,

“இல்லை ம்மா.. அர்ஜென்ட் போகணும்..”

என்று சொல்ல ஆரியன் எதுவும் சொல்லாமல் தன் மாமனாரை அர்த்தமாய் பார்க்கவும்,

“தப்பா நினைக்காதீங்க ஆரியன்.. நாளைக்கு நீங்க ஊருக்கு போகும் முன்னாடி கண்டிப்பா வருவேன்..”

என்று சொல்லிவிட்டு யாமினியை ஒரு பார்வையோடு கடந்து சென்றுவிட அவருக்கு தான் என்னவோ செய்தது.

‘சாப்பிட சொல்லி இருக்கணுமோ..’

புதிதாய் அவருள்ளும் ஈரம் சுரக்க அதனை பெரிது படுத்தாமல் அப்படியே போட்டு புதைத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!