இங்கு மணி காலை 7 மணி தான் அனால் U.S-ல் இரவு 9 ஆயிற்று.
ஆபிஸ் மீட்டிங் எல்லாம் முடிந்து தனது Friend பிரஷாந்த் வீட்டிற்கு செல்லவிருந்தாள்.
அப்பொழுது தான் அருண் Whatsapp காலில் வந்தான்.
Hey ஸ்ருதி எல்லாம் Pack பண்ணியாச்சா? எப்படி இங்கே இருந்து போற??
ஆமாடா.. பிரஷாந்த் வந்து Pickup பண்ணிக்கிறேன் சொன்னான்..So Waiting.
Ohh… ஒகே ஒகே சரி இங்கே இருந்து எவ்வளவு தூர ……
Hey அவன் வந்துடான்.. சரி ஒகே நான் அங்க போயிட்டு உனக்கு பண்றேன் !!! Bye..
அருணின் பதிலை கேட்காமலேயே கால் கட் செய்தாள்..
மெதுவாக எழுந்து அவன் வேலைகளை பார்த்து விட்டு மொபைலை பார்த்தான்..
1 மணி நேரம் ஆச்சே இன்னுமா Reach ஆகாமல இருந்துருப்பாங்க… இல்ல வேற எதாவது பிரச்சனையா???
மனதிற்கு பயம் லேசாக பரவ தொடங்கியது.. ஒரே ஒரு Text மட்டும் Whatsapp-ல் அனுப்பினான்.. Single tick வந்திருந்தது..
ஒருவேளை Internet இல்லையோ!!! U.S. Sim ஒன்றை International roaming Charges ஐ Avoid செய்வதற்கு ஸ்ருதி எடுத்திருந்தாள்.. அந்த நம்பருக்கு Call பண்ணலாமா.. வேணாமா.. யோசித்தே கொண்டே இருந்தான் அருண். ஒவ்வொரு நிமிடமும் மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது அவனுக்கு.
பொறுக்க முடியாமல் அந்த நம்பருக்கு call செய்தான்!!! Full ring விட்டு Recorded வாய்ஸ் ஒலித்தது!!!
பதிவு செய்தான்….
Shruthi where are you? Did you reach? Am waiting for you! Please call back when you get to hear this!!
மறுபடி Whatsapp செக் செய்தான். சிங்கள் டிக் டபுள் டிக் ஆகி இருந்தது.
So.. Internet வேலை செய்யுது. ஆனால் ஸ்ருதி எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை!! என்ன செய்வது என்று புரியவில்லை!! பேசாம ஸ்ருதி அம்மாவிற்கு போன் செய்து பார்க்கலாமா??
இல்லை.. வேணாம் வேணாம்.. அவங்களுக்கும் பயம் ஆகிடும்.. தேவை இல்லாம Disturb பண்ண வேண்டாம்.. அதுவும் இல்லாமல் இந்த மாதிரி விஷயத்தில் தன்னிடம் சொல்லாமலோ கேட்காமலோ அவளின் அப்பா அம்மாவிடம் பேசி விட்டால் ஸ்ருதிக்கு கோபம் மூக்கு மேல் வரும் …இருக்கிற பிரச்னை போதாது னு இன்னும் நாமளே பெருசு பண்ண வேணாம்.
ஒரு முறை Whatsapp கால் அடித்து பார்த்தான்.. Full ring விட்டு கட் ஆனது. பொறுக்க முடியவில்லை.. 10 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு கால் அடித்து பார்த்தான்!!
பேசாமல் U.S.-இல் இருக்கும் என் Friend அஸ்வினுக்கு கால் செய்து ஸ்ருதிக்கு என்ன ஆச்சுனு பாக்க சொல்லலாமா?? அஸ்வின் Florida – la இருக்கான். ஸ்ருதி Friend Prashanth வீடோ Texas –ல!!!
Google- ஐ உதவிக்கு அழைத்தான்.. 1400 Miles என்று சொல்லியது..
Flight புடிச்சுட்டு தான் போய் பார்க்கணும் கஷ்டம்!!! எதுவும் செய்ய முடியாத நிலைக்கு சென்றான்.
ஒரு வேளை எதாவது Accident?? Cha cha … அப்படி ல இருக்க கூடாது..
அவளது மொபைலில் இன்டர்நெட் இன்னும் Activate ஆகவில்லை என்று அவள் சொன்னது அவனுக்கு நியாபகத்துக்கு வந்தது..
அப்போ Whatsapp double tick வந்திருக்கிறது என்றால் எங்கோ Wi-fi Connect ஆகி இருக்கிறது என்று தானே அர்த்தம்.. so அவ வீட்டுக்கு போய்ட்டா!!! But.. அதுக்கு அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியலையே!!! அதற்கு பின்னர் தான் இதயம் இன்னும் வேகமாக துடிக்க தொடங்கியது …
[the_ad id=”6605″]
Or அவளோட Friend oda Friends இவளை ஏதாச்சும் பண்ணி இருப்பாங்களா?? Cha..Cha.. அப்படி ல நினைக்க கூடாது!!! அலைபாய்ந்து கொண்டே இருந்தது மனம்.
அருணிற்கு இப்பொழுதே அழுகையே வந்து விடுவது போல் இருந்தது ..
எதிர்மறை எண்ணங்களை நினைக்க கூடாது என்று நினைக்கும் பொழுது தான் அருவியாக கொட்டும் போல !!!
மொபைலை பார்த்தான் இங்கேயே மணி 9.30 am. அங்கு நள்ளிரவு இருக்கும் !!
அருணின் அம்மா அப்பொழுது தான்,
குளிக்க போகல?? ஆபிஸ்க்கு டைம் ஆச்சே!! என்று நியாபகப்படுத்தினாள்.
குளிக்க போற நேரத்துல அவ கால் பண்ணின எடுக்க முடியாம போய்ட்டா ?? கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்கலாம் என்று wait செய்தான் அருண்.
அப்பொழுது தான் ஸ்ருதியிடம் இருந்து Message.
Hey sorry baby இங்க வந்து தூங்கிட்டேன்.. Am really very very tired..
அருணின் பத்து Message-ற்கு ஒரு வரியில் Reply செய்து இருந்தாள்.
கடுப்பு கிளம்பி கொண்டு வந்தது அருணிற்கு …
ஒரு பக்கம் மனம் அமைதியானாலும் அவளின் Careless reply அருணிற்கு பற்றி கொண்டு வந்தது.
Solla maatiya? I was waiting for yu..
சாரி டா செம்ம Tired. அதான்.
இப்போ எந்திருச்சுட்டியா என்ன ??
இல்ல படுத்துட்டே தான் reply பண்ணிட்டு இருக்கேன்.. Am in half sleep.. நாளைக்கு Text பண்ணட்டுமா ??
Hmm..Okay. Good night. கடுப்பை காட்டிக்கொள்ளக்கூடாது என்று தடுமாற்றமாய் அருண்.
தூக்கத்தில் இருப்பதாக தன்னிடம் சொல்லி விட்டு அங்கு அவள் நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டு இருப்பது போல ஒரு காட்சி அருணிற்கு மனதில் வந்து போனது.. இந்த மாதிரி சமயத்தில் இப்படி தான் ஏகபோக கற்பனைக்குதிரையில் சவாரி செய்வான். சரி எப்படியோ She is safe only!! என்று ஏகமனதாக சொல்லி கொண்டு Office-க்கு கிளம்ப தயாரானான்.
ஸ்ருதி தூங்கி எழுந்திருக்கவும் அருண் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பவும் சரியாக இருந்தது. அப்பொழுது தான் ஸ்ருதி Whatsapp Video cal-il வந்தாள்.
Hi.. Baby!!!
Hai!!எழுந்திட்டியா குட் மோர்னிங்! முடிந்தவரை கோபத்தை வெள்ளிக்காட்டாமல் நார்மலாகவே பேச முயற்சித்தான் அருண்.
ஹ்ம்ம்… நான் எந்திருச்சு குளிச்சு Breakfast ல சாப்பிட்டு Good girl – a படிக்க உக்காந்திருக்கேன்!! குழந்தையுடன் கொஞ்சலோடு ஸ்ருதி.
[the_ad id=”6605″]
தன் மீது அருணிற்கு கோபமோ, கடுப்போ இருக்கும் பொழுது அவனை சகஜமாக்க இப்படி தான் குழந்தையை போல் குழைவாள் ஸ்ருதி. உள்ளுக்குள் அவனும் ரசிக்கவே செய்வான்.
Good baby!! அந்த இடம் Comfortable – ஆ இருக்கா உனக்கு??
Video call-ல் தான் தங்கியிருக்கும் இடத்தையும் வெளியே காலை பனி பொழிவதையும் அருணிற்கு காட்டினாள்..
Hey.. செம்ம Private -a இருக்கு ல வீடு!! Rent ரொம்ப Costly- a இருக்கும் போல!!
Ya ya baby! நாமளும் இந்த மாறி U.S.-ல் வீடு வாங்கணும் சீக்கிரம்!
அருணிற்கு தன் பெற்றோர்களை விட்டு வெளிநாட்டில் இருப்பதில் விருப்பம் இல்லை என்றாலும் இந்நேரத்தில் எதையும் வாயை குடுத்து வாங்கி கொள்ள கூடாது என்று பொய்யாக…
கண்டிப்பா யா பண்ணிட்டா போச்சு…
எங்கே நீ இப்டி சொல்லுவ. அப்புறம் அம்மா முந்தானை -a விட்டு வரவே யோசிப்ப. வம்படியாக வம்பிழுக்க நினைத்தாள்.
அருணோ சிரித்து சமாளித்து உன் Friends- எல்லாம் காணோம்.. அதுக்குள்ள Office போய்ட்டாங்களா!!!
பிரஷாந்த் மட்டும் தான் இருக்கான் அவன் Friends 2 பேரும் ஒர்க் விஷயமா வேற State போயிருக்காங்க..
Ohh. சரி என்னை பத்தி ப்ரஷாந்துக்கு தெரியுமா ??
தெரியுமே… சொல்லிருக்கனே…
அவன் நம்பர் எனக்கு அனுப்பி விடேன்..
எதுக்கு ..
திடீர்னு உன்னை Reach பண்ண முடியலைன்னா என்ன பண்றது அதான்!!
சரி ஒகே. நான் அனுப்பறேன்.. நீ பாத்து வீட்டுக்கு போ..
பிரஷாந்திடம் தன்னை call-ல் பேச வைப்பாள் என்று எதிர்பார்த்தான் அருண்..
இப்படி குறைந்தபட்சம் Comfortableness கொடுத்தால் தானே நன்றாக இருக்கும் என எண்ணினான்.
நம்பிக்கை வேற Possessiveness வேற.. இந்த காலத்து பசங்க– ல அவ்ளோ நல்லவங்க இல்ல ஸ்ருதி!! எப்போ கேப் கிடைக்கும் உள்ள போகலாம்னு இருக்கவங்க தான் நெறய… இதை எல்லாம் எப்படி அவளிடம் சொல்வது ஒன்றும் புரியாமல் வாட்சப்பில் அவள் அனுப்பிய Contact-ஐ Save செய்தான்.
அந்த பெயரில் உள்ள Fb, Instagram Profile –ஐ தேடினான். பார்க்க பணக்கார வீடு பையனை போல ஒரு தோரணை தெரிந்தது.. கையில் டாட்டூ. காதில் கடுக்கன். இந்த மாதிரி பையன்களை பார்த்தாலே அருணிற்கு அல்ர்ஜி தான் இருப்பினும் ஸ்ருதிக்கு தங்க இடம் கொடுத்து உதவி செய்கிறான் தான் நினைப்பது தவறு என்று தனக்கு தானே சொல்லி கொண்டான்.
நாட்கள் கடந்தது.. இருவரும் அவரவர் வேலைக்களில் பிஸி ஆனாலும், இந்தியா – U.S, நேர வித்தியாசங்களால் இருவரின் பேச்சுக்களும் குறைந்தன.
அப்பொழுது ஸ்ருதிக்கு விடியும் நேரம்.. ஸ்ருதியை தான் மிகவும் Miss செய்வதை அவளுக்கு சொல்லி புரிய வைக்கவேண்டும் என்று எண்ணி பாடல் ஒன்றை அழகாக பாடி Record செய்து Whatsapp-ல் அனுப்ப பார்த்தான். ஸ்ருதிக்கும் அருண் பாடுவது ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி இது போல் தனது மூடுக்கு ஏற்ப பாடி அனுப்புவான்.
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ…
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ…
என்ற New York நகரம் பாடலை பாடி அனுப்பினான் .. தூங்கி எழுந்து மொபைலில் ஸ்ருதி இதை தான் பார்க்க வேண்டும் என்று விரும்பி அவள் எழுந்திருக்கும் தருணத்தை எதிர்பார்த்து Whatsapp online-லே காத்திருந்தான். கேட்டு விட்டு கண்டிப்பாக கால் செய்வாள் அவளும் தன்னை மிஸ் செய்வதை குழந்தை போல் சொல்வாள் அதற்கான தேற்றும் மனநிலையில் நானும் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்து ரிப்ளைக்காக காத்திருந்தான் அருண்.
கிட்ட தட்ட ஐந்து நிமிடம் மேல் ஆனது.. Online வந்தவள் அருணின் மெசஜை பார்க்கவில்லை.. சில நொடிகளில் மீண்டும் Offline சென்று விட்டாள்.
[the_ad id=”6605″]
So, வேற யாரோ சாட் தான் படிச்சுட்டு இருக்கா.. எப்படியும் Notification-ல் Arun Have sent a voice message னு தானே வரும்! எப்படியும் உடனே பாப்பாளே!! குழம்பி கொண்டே இருந்தான்.
கிட்ட தட்ட அரை மணி நேரம் கழித்து தான் reply வந்தது..
Awwww. How Sweet you are.. I too Miss you a lott!! Kiss smileyக்களுடன்..
Notification-ஐ Screen-ன் வெளி முகப்பில் பார்த்து விட்டே வெறுப்பில் போனை வீசினான் படுக்கையில்.
லேட்டா மெசேஜ் பாத்தாலும் ஒகே. Atleast Call பேசாவிட்டாலும் ஒரு Voice note-வது அனுப்பியிருக்கலாம்.. என் தப்பு தான் Expect பண்றது..
தொடர்ந்து இதயம் பாரமாவதை உணர்ந்தான்
இருக்கிற Non sync- ல ஸ்ருதிகிட்ட ஓபன் -ah பேச முடியாது. யார்கிட்டயாச்சும் இத பத்தி Free- a பேசலாமா… இத Friends-கிட்ட சொல்லட்டுமா?? வேணாம்.. வேணாம்… எல்லாரும் தப்பா நினைப்பாங்க.. ஒன்னு அவ சரியா care பண்ணலனு நெனைச்சுப்பாங்க. இல்லனா நான் சந்தேகப்படுறேன்னு நினைச்சுப்பாங்க. எதுக்கு வம்பு. நாளைக்கு எல்லா பிரச்னையும் சரி ஆனாலும் நம்மள பத்தி அடுத்தவங்க நெனச்சிக்கிட்ட அபிப்ராயம் மட்டும் அப்படியே இருக்கும்..
நேரில் பேசும்பொழுது தெரிகிற அடுத்தவரின் மனநிலையும் முகபாவனைகளும் Texts அனுப்பும் போதும் தெரிந்து கொள்ளும் வசதி வந்தால் உலகின் முக்காவாசி உறவுகளும் பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து விடும் போல..
தான் கூலாக இருப்பதாக காட்டிக்கொள்ள … Love you too sweetheart. எதாவது ரிப்ளை செய்தாக வேண்டுமே என்றே அருண்!!
ஸ்ருதி மீது கொஞ்சம் வெறுப்பு வர ஆரம்பித்தது அருணிற்கு. தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதாக எண்ணினான்.
ஒரு வேளை இவ்ளோ வருஷத்திலே நம்ம Relationship அவளுக்கு bore அடிச்சிடுச்சோ. எல்லா Relationship-லயும் எல்லாருக்கும் ஒரு வெறுமை வரும் தான்.. அத அன்பாலே தான் நிரப்பனும் தவிர வெறுப்பால இல்ல..
தனது மூளையில் இருந்து இதயத்துக்கு அறிவுரை சொன்னான்..
எப்பொழுதும் சேர்ந்தே இருப்பது மட்டும் அல்ல காதல். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதே காதல்.
எங்கோ எப்போதோ படித்ததும் அப்பொழுது தோன்றியது …
பேசாம அவ கிட்டயே பேசி சரி செஞ்சிடலாம்.. அது தான் ஒரே வழி..