Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 1

என்னவள்

 

அத்தியாயம்-1

 



Advertisement

கார்த்திக்  சீக்கிரமே கிளம்பி வாடா எவ்வளவு நேரம் பண்ணுவே அங்கே எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க“, மாடியில் இருந்த அவனது அறைக்கு வெளியே சத்தமிட்டுக்கொட்டு இருந்தார் அவனது தாயார் குணலஷ்மி..பேருக்கு ஏற்றாற்போல்  குணத்தால் தங்கம் தான் அவர்.

 

லஷ்மி பேசாமல் போ இன்னும் பத்து நிமிடம் ஆகும் நான் ரெடியாக என சத்தம் வந்தது உள் அறையில் இருந்து“..

Advertisement

 

Advertisement

டேய் கதவை திறந்துவிட்டு வந்தேன் முதுது தோள்  உரிஞ்சிடும் என்ன நினைச்சிட்டு இருக்கற..மணி ஆகுதுடா“.

 

அம்மா அநியாயம் பண்ணாதிங்க இப்பதானே வந்தேன்,சீக்கிரமா குளிச்சிட்டு வான்னு சொல்லிட்டு பின்னாடியே வந்து  கதவை தட்டினால் எப்படி?” 

Advertisement

 

டேய் ஏற்கனவே எல்லோரும் வந்தாச்சு அங்கே ரிசார்ட் இருந்து ஃபோன் வந்தாச்சு எத்தனை மணிக்கு வருவிங்கன்னு கேட்டு.. எத்தனை முறை அவங்ககிட்ட இதோ வந்துட்டொம்,இதோ வந்துட்டோம்ன்னு சொல்ல..அப்பா அங்கே சத்தம் போடறாருடா“..

 

இதோ வந்துவிட்டேன் மா என கதவை திறந்துவிட்டு  வெளியே வந்த கார்த்திக்க்கிற்கு அடுத்தமாதம் வந்தால் இருபத்திஏழு வயது  துவங்கும்..ஆறடி உயரத்திற்கு சற்றே குறைவாக வளர்ந்து இருந்தான். தலைகொள்ளாத,அடக்க முடியாத அளவிற்கு தலைமுடி அதுவும் சுருள்சுருளாகபார்ப்பவர்கள் பொறாமை படும் அளவிற்கு..கண்களில் எப்போதும் கவ்வி இருக்கும் பவர்கிளாஸ் கண்ணாடி கொஞ்சம் மாநிறதோற்றம்,சிரிக்கும் கண்களோடு கூடவே புன்னகையை சிந்தியபடி இருக்கும் உதடு, கோபம் அப்படி எதுவும் எனக்கு வராதே என்பது போல தான்  இவனது நடவடிக்கை எப்போதும் இருக்கும். வேலை வீடு கட்டி தருவது அடுக்குமாடி கட்டிடம்தனிவீடு, காலிமனை என அமோகமாக நடந்து கொண்டு இருந்தது. ஆர்.கே பிரமோட்டர்ஸ் கோவை மாவட்டத்தில் பாதி மக்களுக்கு மேல் தெரிந்த நிறுவனம் நீண்ட காலமாக இருப்பதால் பலரின் நம்பிக்கையை பெற்று இருந்தது..

 

பலரின் ஆசை, கனவு கூட இவர்களிடன் வீடோ,இடமாகவோ வாங்க வேண்டும் என்பது தான்.அங்கே அந்த அளவுக்கு பிரபலமாக இவர்களது நிறுவனம் இருந்தது.எப்போதும் ஃபிஸி இவர்களது தொழிலில்..தந்தை ராஜாராம் ஆரம்பித்தது இவன் படித்து வரவும் தற்சமயம்  சைட் ஒர்க் முழுவதையும் பார்த்து கொள்வது முழுக்க முழுக்க இவன் மட்டுமே..

 

 

[the_ad id=”6605″]

 

 

 

இவர்களது ஹெட் ஆபீஸ் காந்திபுரத்தில் மைய பகுதியில் இருந்தது. ஆறு அடுக்கு மாடிக்கட்டிடத்தில்..கீழே இவர்களது ஆபீஸ் மற்றது எல்லாமே பெரிய நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு இருந்தனர். பணம் எப்போதும் பிரச்சினையாக இருந்தது இல்லை இவர்களுக்கு மூன்று தலைமுறைக்கு இப்போதே சொத்து சேர்த்து வைத்து இருந்தனர் அந்த அளவிற்கு வசதி..வீடு கூட டாடாபாத்தில் இருந்ததுஆறு செட் இடத்தில் அழகாக பதினைந்து வருடம் முன்பே கட்டி இருந்தார் ராஜாராம்

 

மூத்தவன் கார்த்திக் இரண்டாவது  பெண் குழந்தை  இவனது செல்ல தங்கை தற்போது பத்தாவது படிக்கும் மாணவி பிருந்தா  வீட்டில் அனைவரும் செல்லக்குட்டி.. இவனுக்கு பிடித்தவள் எப்போதும் இவளிடம் வம்பிழுக்காமல் நேரம் நகராது ஒருவர் மேல் ஒருவருக்கு பாசம் அதிகம்.

 

இதோ வந்துவிட்டேன் மா“, கதவை திறந்து  மாடியில் இருந்து இறங்கி வர பார்க்கவே அவ்வளவு பாந்தமாக இருந்தது

 

லஷ்மி உன் பையனுக்கு முதல்ல சுற்றி போடு ராஜா மாதிரி இருக்கிறான் என வயதில் முதிர்ந்த பெண் கூற“.. ஆச்சி வாங்க என்றபடி அவரது காலை தொட்டு வணங்கினான் கார்த்திக்

 

ம்எங்கே சொந்தத்தில் இத்தனை பொண்ணுங்க இருக்கும் போது ஏன் அசலில் பொண்ணு தேடணும்  ஒரு வேளை நம்ம பொண்ணுங்களுக்கு அந்த தகுதி இல்லையின்னு நினைக்கறாங்க போல இருக்குநல்லது கெட்டதுக்கு வந்தால் போதும் அதுக்கு மேல தேவை இல்லையின்னு நினைக்கலாம்.அருகில் இருந்த  ஒரு  பெண் சற்று பொறாமை கலந்து கூற“..லஷ்மி பதில் சொல்லும் முன்பே கார்த்திக் தன் தாயை பேச விடாமல் பேசி இருந்தான் .

 

என்ன அத்தை செய்யறது சொந்தத்துல பொண்ணு கட்ட கூடாதுன்னு நம்ம கவர்மெண்ட் சொல்லுதே..நம்ம சிவலிங்கம் மாமா வீட்டில் நடந்ததுதான்  தெரியுமே..குழந்தைக்கு கை ஊனமாக  பொறந்ததே…”

 

ம் அதுவும் சரி தான்என்ன செய்ய காலம் இப்படி இருக்கு அந்த காலம் மாதிரி இப்போது இல்லையே  புதுசு புதுசால்ல நோய் வருது“. 

 

முன்னறைக்கு வரவுமே கூட்டத்திற்கு நடுவில் தனது தங்கையை தேடினான்அம்மா பிருந்தா எங்கே என்ற கேள்வியோடு“..

 

டிரஸ் மாற்ற போய் இருக்கறா..வரச் சொல்லணுமா..”

 

என்னமா அவளே கிளம்பலை என்ன அவசரப்படுத்தினிங்களா நீங்க?”

 

நீ வேறடா ஏற்கனவே புறப்பட்டு இருந்தவ தான் இப்போது மறுபடியும்  உள்ளே போய் இருக்கறா..”

 

.. சரிமா..அம்மா வந்தவங்களுக்கு டிபன், காபி எல்லாம் கொடுத்திங்களா“..

 

அதெல்லாம்  கொடுத்தாச்சுடா வந்தவங்க எந்த குறையும் சொல்ல மாட்டாங்க“…என பேசும் போதே..

 

அண்ணா இங்கே பாருங்க இந்த டிரஸ் நல்லா இருக்கிறதா..அண்ணி கூட இதுமாதிரி  கலர்லதான் டிரஸ் போட்டு இருக்கறாங்க அதை பார்க்கவும் அதே கலர்ல போய் மாற்றிவிட்டு வந்தேன்“. 

 

மஞ்சல் கலர் பட்டு பாவாடை,திக் மெரூன் பார்டர் அதே கலரில் தாவணி அனைத்திலுமே கற்கள் பதித்து இருக்க நீண்ட நாட்களுக்கு பிறகு புதிதாக அணிந்து இருந்தாள். கூடவே நெற்றிச்சுட்டி முதல் இடுப்புக்கு ஒட்டியாணம் முதல் அனைத்துமே 

 

தங்கத்தில் பொருத்தமாக அணிந்து இருந்தாள்

 

சரி தான்  இப்பவே மேசிங் மேச்சிங்கா  ஃபோன்ல பேசினாயா என்ன? கார்த்திக் செல்லமாக அவளின் தலையை ஆட்டியபடி கேட்க..

 

^அண்ணி ரொம்ப ஃபிஸி.ணா..பேச முடியலை பார்லரில் வந்து இருக்கறாங்க போல இருக்கு ஜட்ஸ் ரெண்டு நிமிஷத்தில் கவனிச்சது.”

 

எப்படியோ ரெண்டு பேருக்கும் பிடிச்சு போணா சரி தான்கூடவே இருக்கற போறது நீயும் அம்மாவும் தானே என சிரித்தபடி நகர்ந்தான்“, உண்மை தான் வேலை வேலை என இவன் சுற்றிக்கொண்டு  இருக்க இவன் ஒரு முறை கூட  பெண்ணிடம் பேசவும் இல்லை ஏன் நேரில் ஒரு முறை கூட பார்க்கவில்லை  ஒரு வேளை பார்த்து இருந்தாள் இந்த திருமணம் நடத்த முடிவு செய்ய விட்டு இருக்க மாட்டோனோ என்னவோ..

 

ஏன் என்றால் இவனுக்கு முடிவு செய்து இருந்த மாயா உண்மையில் வித்தியாசமானவளாக இருந்தாள். வீட்டுக்கு ஒரு மகளாக இருக்க குணத்தில் பிடிவாதகாரியாக இருந்தாள். அந்தஸ்து, பணம் இரண்டும் ஒரே தட்டில் பொருந்தி போக குணத்தை சரியாக விசாரிக்க மறந்து இருந்தார் லஷ்மி.

 

அழகை பொருத்தவரை குறை சொல்ல எதுவும் இல்லை  பளீரென பால்வண்ண நிறம் ஆகட்டும்லிப்ஸ்டிக் போடாமலே சிவந்து இருக்கும் உதடாகட்டும் ,நுணிநாக்கில் விளையாடும் ஆங்கிலமாகட்டும் கூடவே முகத்தில் தெரியும் ஆளுமையான கம்பிர தோற்றம் ஆகட்டும் எதிலும் குறை சொல்லி விட முடியாதுஃபோட்டோ பார்த்ததுமே  லஷ்மி தனது மனக்கண்ணில் பொருத்தம் பார்த்து முடித்து இருந்தார். கார்த்திக்கிற்கு ஏற்ற பொருத்தமான பெண் இவள் தான்  என்று.. அதன் பிறகு சம்பிரதாயத்திற்காக ஒரு முறை ஜாதக பொருத்தம் பார்த்ததோடு சரி முடிவே செய்து விட்டார் தனது மருமகள் இவள் தான்  என்று

 

ஒன்றை கவனிக்க தவறி இருந்தான் கார்த்திக்ஒரு முறை பேசி இருந்தால் அவளது குணம் மட்டும் அல்ல  அவளது ஜாதகத்தையே சொல்லி விடும் திறமை இவனுக்கு உண்டு. முகம் பார்த்தே  எதிரில் இருப்பவர் 

 

மனவோட்டத்தை எளிதாக புரிந்து கொள்ளும் திறமை இவனிடம் ஆரம்பம் முதவே உண்டு

 

 

[the_ad id=”6605″]

 

 

வீடு வாங்க வருபவர்கள் யார்  விசாரிக்க வருபவர் யார் என பேசிய ரெண்டு நொடியில் கண்டு கொண்டு விடுவான். திருமணத்தை பொருத்த வரையில் அம்மா, அப்பாவின் தேர்வாக இருக்க வேண்டும் என்பது  இவனுக்கு ஆரம்பம் முதலே  ஆசையாக இருந்தது.

 

ராஜாராமிற்கு நெருங்கிய நண்பரின் மகள் மாயா..ஆரம்பம் முதலே வெளிநாட்டில் படிக்க வைக்க குடும்பத்தை பொறுத்தவரை நன்றாக தெரியும் ஆனால் மாயாவை பற்றி சுத்தமாக தெரியாது. ஏன் மாயாவின் தாய் தந்தைக்கு கூட இவளை பற்றி  தெரியவில்லை அது தான் உண்மையும் கூட..

 

இவள் இங்கே வருவதே அபூர்வம் தான்பெரும்பாலும் ஹாஸ்டல்  வாசம். அதை தாண்டி  இங்கே வந்தாலும் வந்த இரண்டு நாட்களில் சித்தி வீட்டுக்கு சென்று விடுவாள். சித்தியிடம் இருக்கும் ஒட்டுதல் ஏனோ தாய் தந்தையிடம் வருவது இல்லை

 

படிக்க யூஎஸ் போ என சொன்னது முதல் என்ன செய்ய வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என பலதிற்கும் கேட்பது சித்தியிடம் தான்ஏன்  இந்த திருமணமத்திற்கு கூட முதலில் மாயா கேட்டது தனது சித்தியிடம் தான்

 

சித்தி அம்மா இப்படி கேட்கறாங்க என்ன  சொல்ல என“..

 

மாயா ஒகே சொல்லிடு பையன் பயங்கர கேன்சம் உனக்கு பொருத்தமாக இருப்பான்“, இப்படி ஒகே சொன்னது தான்  இவளது திருமணம்இதோ இன்னும் சிறிது நேரத்தில்  நிச்சயிக்க முடிவு செய்து இருந்தனர்.

 

போகலாமா கார்த்திக்“, என அவனது தாயார் கேட்க மொத்த குடும்பமும் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர்.

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!