Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து வீசுதே 15

அத்தியாயம் 15

 

“யாரு…”

என்று அதட்டலாய் கேட்டதும் சட்டென்று நின்றுவிட்ட சத்தம் அடுத்த நொடி வேறு இடத்தில் தொடங்கி விஜயை சிலிர்க்க செய்தது.



Advertisement

ஒன்றன்பின் ஒன்றாய் நடக்கும் இவையை என்னவென்று புரியாமல் ஒரு நிமிடம் தடுமாறியவன் சட்டென்று தன்னை மீட்டு எச்சரிக்கை உணர்வு ஓங்க அவ்வறையை விட்டு வெளியே வந்தான்.

மேல் படிப்பிற்கான வெளிநாட்டு வசத்தில் தொடங்கி அதன்பின் ஊரில் வந்து தொழிலை கையில் எடுத்தபின்னும் தனிமை ஒன்றே விஜயின் துணையாய் இருந்தது.

நெருங்கிய நண்பர்கள் என்றும் அவனுக்கு யாரும் கிடையாது.அலுவலக தொடர்பானவர்களையும் ஒரு எல்லையோடு நிறுத்திடுவான்.

Advertisement

எப்பொழுதும் தனிமை விரும்பி தான்.

Advertisement

அதனால் அந்த தனிமையின் வெறுமையில் நடக்கும் எதுவும் அவனுக்கு பயத்தைக் கொடுக்கவில்லை.மாறாக என்ன..ஏதென்ற ஆராய்ச்சி உணர்வை தர இன்டர்காமை நெருங்கியவன் செக்கியூரிட்டிக்கு அழைக்க ரிசிவரை எடுத்து காதில் வைக்க அது தொடர்பில் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் மௌனம் காத்தது.

“ப்ச்..” எரிச்சலாய் அதனை வைக்க கிச்சனில் இருந்து வரும் அதே டொக்..டொக் சத்தம் அவன் தலையிலே யாரோ சுத்தியல் கொண்டு தட்டுவது போல் அதிர்வை கொடுக்க வேகமாய் ஒலியை தொடர்ந்து சென்று பார்த்தபோது மீண்டும் அதே போல் நின்று பின் ஹாலில் தொடங்கி அவனுக்கு ஆட்டம் காட்டியது.

நேரம் ஆக ஆக அந்த சத்தத்தில்  அவன் தலையே வெடித்து விடும்போல் அதிகரித்துக்கொண்டே போக அத்தோடு அவன் கோபமும் ஏறிக்கொண்டே போக பொறுக்க முடியாமல் ஆங்காரமாய் கத்தியவன் என்ன செய்கிறான் என்ற உணர்வே இல்லாமல் கையில் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தான்.எப்படியாவது அந்த சத்தம் நிற்காதா என்று..

Advertisement

சற்று நிதானித்து சிதறி கிடந்தவையில் பார்வையை பதித்திருந்தவனுக்கு மெல்ல கண்கள் சொருக மயங்கி சரிந்தான்.

யாருக்கும் காத்திராமல் கதிரவன் தன் வழக்கமான அலுவலை தொடங்க இருண்டிருந்த விஜயின் வீடு மெல்ல மெல்ல சூரிய கதிர்களால் ஒளிப்பெற்று விடியலை உணர்த்த கதிரவனோடு போட்டியிட்டு அதிகாலையிலே எழுந்து தன் அன்றாட பணிகளை செய்யும் விஜயோ இன்று விடிந்ததும் தெரியாமல் கூடத்தில் சோஃபாவில் தலைசாய்ந்து நினைவின்றி கிடந்தான்.

ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவனை யாரோ எழுப்புவது போல் தோன்ற முயன்று இமைகளை பிரித்தான்.கண்முன் காட்சி மங்களாய் தெரிய தலை விண்விண்னென்று வலித்தது.

கண்ணை கசக்கி மீண்டும் பார்க்க அவன் முன் பதட்டத்தோடு நின்றிருந்தனர் செல்வாவும் ராஜியும்..கணவன் மனைவியான அவர்கள் தான் வீட்டின் அனைத்து வேலைகளையும் பார்ப்பது..

“எப்போ வந்தீங்க..”

என்ற விஜயின் பார்வை கடிக்காரத்திற்கு செல்ல மணி ஒன்பது என்று காட்டியது.

“ஆறு மணிக்கே வந்துட்டோம் ஐயா..நீங்க அசந்து தூங்குறீங்கன்னு எழுப்பலை..ஆனால் நேரம் ரொம்ப ஆச்சுங்க..உங்களுட்ட எந்த அசைவும் தெரியலை..அதான் எழுப்பனேன் ஐயா..”

என்று பயமும் பதட்டமுமாய் விளக்கம் கொடுத்தான் செல்வா.இப்படி ஒரு சூழ்நிலை வந்ததில்லை என்பதால் விஜய் எப்படி ரியாக்ட் செய்வானோ என்று பயம் தான் பிரதனமாய் இருந்தது.

விஜய் எப்பொழுதும் அதிகம் பேசமாட்டான்.ஆனால் அவன் பார்வை ஒன்றே போதும் கட்டளையிட.அவன் எப்படி அனைத்திலும் பர்ஃபெக்டாக இருப்பானோ அதேப்போல் எதிலும் பர்ஃபெக்ஷனை தான் எதிர்பார்ப்பான்.அவனுக்கு பிடிக்காத ஏதேனும் செய்துவிட்டால் அவ்வளவு தான்.வேலை போவதோடு கோபத்தில் எதிரில் நிற்பவரை பஸ்பமாகி விடுவான்.எனவே அவன் கோபத்திற்கு ஆளாகாமல் முடிந்தவரை கவனத்தோடு வேலை செய்வர் செல்வாவும் ராஜியும்.

இந்நிலையில் என்றும் இல்லா திருநாளை விஜய் ஹாலில் படுத்திருந்ததை ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு தங்கள் அன்றாட வேலையை தொடர அவன் வேலைக்கு செல்லும் நேரத்தை கடந்தும் அவன் எழுப்பவில்லை எனவும் தான் மிகுந்த தயக்கத்தோடு எழுப்பினான் செல்வா.

நேற்று நடந்தவை படம்போல் மனசில் ஓட முகத்தை அழுத்த துடைத்தபடி எழுந்தவன்,

“உடைஞ்சு கிடந்த எல்லாத்தையும் எடுத்துப்போட்டு அதுக்குள்ள சுத்தம் பண்ணீட்டியா..”

என்று இன்னும் தெளிவாகாத குரலோடு கேட்க புரியாமல் பார்த்த செல்வா,

“எந்த பொருளுங்கய்யா…நான் எதுவும் சுத்தம் பண்ணலயே..”

என்றபடி மனைவியை திரும்பி ஒரு பார்வை பார்க்க அவளும்,

“நானும் எதுவும் பார்க்கலேங்க..”

என்றாள்.

“இங்க ஹால்ல தான்…”

என்றபடி சுற்றி பார்த்தவன் தான் உடைத்தவை எல்லாம் அததது இடத்தில் அப்படியே இருப்பதை கண்டு திகைத்தான்.பட் பட் என்று உடைத்தது நினைவில் வர கனவோ என்று குழப்பியவன் வேகமாய் இன்டர்காம் ரிசீவரை எடுத்து காதில் வைக்க அது தொடர்பில் இருந்தது.

‘எது உண்மை…கனவு இவ்வளவு துல்லியமாய் இருக்கும்மா..??’

என்று குழம்பியவனிற்கு மேலும் தலைவலி அதிகரிக்க அவனையே பார்த்தபடி நின்றவர்களை,

“இன்னும் என்ன நிற்குறீங்க..போய் வேலையை பாருங்க..”

என்று கடுகடுக்க உடனே, “சரிங்கைய்யா..” என்று ஆளுக்கு ஒரு திசையில் நகர,

“செல்வா..காஃபி எடுத்துட்டு வா..”

என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

அவன் சென்றதும் மென்குரலில்,

“ஆமா..இன்னைக்கு ஐயாவுக்கு என்னாச்சு..புரியாத மாதிரியே பேசுறாரு..”

என்று ராஜி கேட்க,

“அதான் எனக்கும் தெரியலை..சரி சீக்கிரம் காஃபி தா..அவர் முகமே சரியில்லை..”

என்று கூறி அவளை அனுப்பிவிட்டு மற்ற வேலையை பார்க்க சென்றான்.

அறையில் தலையை கையில் தாங்கியபடி அமர்ந்திருந்த விஜய் நடந்தவையையே மனதில் ரிவைனில் போட்டு மீண்டும் அதனை புரிந்துக்கொள்ள முயற்சிக்க தலைவலியே மிஞ்சியது.

அந்த யோசனையில் இருந்து இட்டுவருவது போல் அவனது அழைப்பேசி சிணுங்கவும் எழுந்து சென்று எடுத்தவன் பி.ஏ நிஷானின் எண்ணை கண்டு,

“எஸ் நிஷான்..கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..இஸ் தேர் எனி இம்பார்ட்னட் மீட்டிங் டுடே…?”

என்று கேட்டபடி நெற்றியை தடவி யோசித்தான்.

“சர்..இன்னைக்கு ஃபினான்ஷியல் அன்னுவல் ரிப்போர்ட்காக போர்ட் மீட்டிங்  அரேஞ்ச்  பண்ணியிருந்தீங்களே..மறந்துட்டீங்களா..”

என்று சின்ன பதட்டத்தோடும் பெரியளவு ஆச்சரியத்தோடும் கேட்டான் நிஷான்.இதுவரை எதையும் விஜய் மறந்ததாய் சரித்திரமே இல்லை.இவன் ஸ்கெடியூல் போடும் முன்னே  அடுத்தடுத்து நடக்க வேண்டியவையை சில நிமிடங்களிலே திட்டமிடுவான்.எனவே தான் இந்த வியப்பு..!!

“ஹோ…ஷிட்…”

என்று தலையிலே தட்டிக்கொண்டவன் மணியை பார்த்துக்கொண்டே, “ஐ வில் பீ தேர் இன் ஃபியூ மினிட்ஸ்…”

என்று அழைப்பை துண்டித்து அழைப்பேசியை ஆராய தந்தையிடம் இருந்து பல தவறிய அழைப்புகள் இருந்தது.

“அப்பா..நேரா அங்க வந்திடுறேன்னு சொல்லியிருந்தாங்களே..”

என்று சிந்தித்தவன் நேரில் சென்றே பேசிக் கொள்ளலாம் என்ற வேகமாய் கிளம்பினான்.இந்த அவசரத்தில் நேற்றைய களேபரம் பின்னுக்கு சென்றது.

வழக்கமான பார்மல்ஸில் தயாரானவன் காலை உணவை மறுத்துவிட்டு காஃபி மட்டும் அருந்தி கிளம்பிவிட்டான்.

“சீக்கிரம் போ வேலு..”

என்று ஓட்டுநருக்கு கட்டளையிட்டு உள்ளே ஏறியவன் தன் மடிக்கணினியில் இன்றைய மீட்டிங்கிற்கு தேவையான ஆவணங்களை பார்வையிட்டபடி வந்தான்.ஆனால் பார்க்கும் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தலைவலி மண்டையை பிளந்தது.

முயன்று தன்னை ஒருநிலை படுத்தி ஆவணங்களை படித்தவன் எதர்ச்சியாய் பார்வையை உயர்த்த அப்பொழுது காரை நோக்கி எதிரே முகம் மூடிய ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் வேகமாய் வருவதை கண்டு,

“ஹே..பார்த்து..ஸ்கூட்டிய இடிச்சிடாதே..”

என்று ஓட்டுநரை கூற ரோட்டை குழப்பமாக பார்த்தவன்,

“அப்படி எதுவும் வரலீங்களே சர்..”

என்று கூற,

“கண்ணு தெரியலையா..?அந்த இடியாடிக் லேடி நேரா மோதுறா மாறி வரா பார்…வழிவிட்டு நகருடா..”

என்று கத்திய விஜயிக்கு என்ன பதில் சொல்வது என்றறியாமல் திருதிருத்தான்.ஏனெனில் அவன் சொல்வது போல் எந்த ஸ்கூட்டியும் முன்னால் வரவில்லை.

வேலுவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் அந்த பெண் மோதுவதுபோல் அருகில் வந்துவிட விபத்து நடக்கவிருப்பதை தடுக்க எண்ணி,

“ஏய்..ஏய்..” என்று பின்னிருந்தே வேலுவின் கையை தள்ள அவன் கட்டுப்பாட்டை மீறிச் எதிர் சாரியில் வந்த ஒர் ஆட்டோவில் மோத சடென் ஜெர்க்கோடு வண்டி நின்றது.

இவர்கள் காருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் ஆட்டோ முன்புறம் நசுங்கிவிட இறங்கி வந்து ‘நல்ல’ வார்த்தைகளில் பேசியவனை சமாளிக்க முடியாமல் திணறினான் வேலு.அது முக்கிய வழி சாலை என்பதால் சற்று நேரத்திலே வாகன நெறிசலானது.

நேரம் ஆக ஆக டென்ஷனான விஜய் சட்டென்று இறங்கிவர,

“வாய்யா…வா..இங்க இவ்வளவு பிரச்சனை ஓடிட்டு இருக்கு..உனக்கு ஏசிவிட்டு இறங்ககூட மனசு வரலையோ..என்ன பணத்திமிறா..என் வண்டிக்கு ஒரு வழி சொல்லாமல் உங்களை நகரவிடமாட்டேன்..”

என்று எகிறியவனை கண்ணிமைக்கும் நொடியில் ‘பொலீறென்று’ அறைய ஓயாமல் பேசிய அவன் வாய் பட்டென்று அடங்கியது.எதிர்த்து கையோங்க தைரியம் இன்றி அவன் கன்னத்தை தாங்கி நிற்க,

“எவ்வளவு ஆகும்..”

என்று வண்டியை காட்டி கேட்டவன்  பம்மியக்கொண்டே அவன் சொன்ன ரூபாயைவிட அதிகமாகவே பணத்தை எடுத்து கொடுத்து சொடக்கிட்டு கிளம்பு என்பது போல் விரல் அசைக்க விஜய்யிடம் தெரிந்த ஆளுமை அவனை கட்டுப்பட செய்தது.

அவன் வண்டியில் ஏறியதும் அவசரமாய் வந்து வேலு வண்டியை எடுக்க நெரிசலை தாண்டி கல்லூரியை அடையவே வெகு தாமதமானது.

போர்ட் மெம்பர் அனைவரும் அவனுக்காக காத்திருக்க,

“என்ன விஜய்..ஏன் இவ்வளவு லேட்..ஃபோன் கூட எடுக்கல..”

என்று கேட்ட தந்தை சிவக்குமாரிடம், “ஒன்னுமில்லப்பா.. மீட்டிங் முடிந்ததும் பேசுவோம்..”

என்று கூறிவிட்டு காத்திருந்தவர்களிடம் பொதுவாய் ஒரு மன்னிப்பை கோர அடுத்த சில மணி நேரங்களுக்கு மீட்டிங் நடைப்பெற்றது.

வழக்கமான கம்பீரத்தோடு பேசினாலும் அதையும் தாண்டி அவனிடம் தெரிந்த சோர்வு சிவக்குமார் கண்ணில் தப்பவில்லை.

மீட்டிங் நல்ல படியாக முடிய அனைவரும் கிளம்பியபின் தந்தையும் மகனும் மட்டும் அவ்வறையில் இருந்தனர்.

“உஃப்…வெரி ஹார்ட் டே ப்பா..”

என்று சுழல் நாற்காலியில் தளர்வாய் அமர,

“என்னாச்சு கண்ணா..உன் முகமே சரியில்லையே..”

என்று அக்கறையோடு கேட்க,

“வரவழியில் ஒரு சின்ன அக்ஷிடென்ட் ப்பா..”

என்று கூறி முடிக்கும்முன், “என்னது அக்ஷிடென்ட் ஆ..என்னடா அதை இவ்வளவு அலட்சியமாய் சொல்ற..ஒன்னும் ஆகலையே..”

என்று பதறியவரை கண்டு சோர்வையும் மீறி புன்னகைத்த விஜய்,

“ரிலாக்ஸ் ப்பா..நத்திங் ஹாப்பன்ஸ்… சின்ன க்ராஸ் தான்.. அதனால் ட்ராஃபிக் ஆச்சு..அதான் லேட்..”என்றான்.

“அடி எதுவும் படலையே…ஏன்னா ரொம்ப சோர்வா தெரியரையேடா..”

“இல்லப்பா..நைட்டு சரியா தூங்கல..அதான் தலவலி…”

“முடியலேனா..வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுடா..உன்னை ரொம்ப ஸ்ரைன் பண்ணிக்கிறியா..அதான் உன் அம்மா நீ தனியா இருக்கிறதை நினைத்து நிதம் கவலைப்படுறா..இரு அவளை கிளம்பி வரச்சொல்றேன்..”

என்றவரை,

“அப்பா..நான் என்ன குழந்தையா..?? சின்ன பையன் மாறி ட்ரீட் செய்யாதீங்க டேட்…தனியா இருந்தால் என்ன..எதுக்கு அம்மா அதையே நினைத்து  கவலைப்படுறாங்க..”

என்று கூற, “எங்களுக்குனு இருக்கிறது நீ மட்டும் தான்ப்பா..உன்னை தவிர வேற என்ன நினைப்பு எங்களுக்கு..”

என்றார் வருத்தமாய்..இது தான் சிவக்குமார்.ஊர் உலகத்திற்கும் கம்பீரமாய் அதிகாரமாய் தெரியும் அவருக்கு மகனின் சிறு சுணக்கம் கூட தாங்காது.இவர்கள் சம்பாஷணையை கேட்டு ஒரு மனம் வெதும்பி குரோதத்தில் திளைத்ததை அறியமாட்டார்கள்.

வீட்டிற்கு செல்ல சொன்ன தந்தையை மறுத்துவிட்டு அவரோடு சேர்ந்து மற்றைய கல்லூரி சம்பந்தமான விசயங்களை பற்றி பேசினார்கள்.

அன்றைய பொழுது அப்படியே ஓட மாலை சிவக்குமாரோடு தற்போது கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தை பார்வையிட சென்றான் விஜய்.

இன்னும் சில நாட்களில் திறப்புவிழா இருப்பதால் வேலைகள் வேகமாய் நடைப்பெற சைட் இஞ்சினியரிடம் அதைக்குறித்து சிவக்குமார் கேள்விகள் தொடுத்து விசாரிக்க அங்கிருந்து நகர்ந்து அந்த ப்ளோரின் சுவர் எழுப்ப படாமல் இருந்த முனையில் வந்து நின்றான் விஜய்.

இன்றைய வினோத சம்பவங்களை மீண்டும் அசைப்போட்டபடி எவ்வளவு நேரம் நின்றானோ,

“காத்து ரொம்பவா இருக்குள்ள விஜய்..மழை வருமோ..”

என்ற தந்தையின் குரலில் திரும்பி பார்க்க அவனருகில் வந்து நின்றார்.

“ம்ம்..ஆமா ப்பா..”

என்று ஆமோதித்தவனின் தோளில் கைப்போட்டு அணைத்தவர்,

“இந்த காத்து மாறி மனச லேசாக வச்சிக்கோடா..ஸ்கூல் ப்ரின்சிபல் மாதிரி எப்பவும் இறுக்கமாவே இருக்கனுமா..??வயசு பையன் மாறியா இருக்க நீ..?”

என்று விளையாட்டுப்போலவே கேட்க மற்ற நேரமாய் இருந்திருந்தால் அவனும் எதாவது சொல்லி வாரியிருப்பான்.இன்று எதுவும் பேசாமல் அமைதி காக்க,

“என்ன தான் உன் மைன்ட்ல ஓடுது..ஏதோ யோசனையிலே இருக்க..என்னானு தான் சொல்லேன் விஜய்..”

என்று அவர் வற்புறுத்தவும்,

“தெரியலை ப்பா..மனசு பாரமா இருக்கு..ஏதோ நடக்க கூடாதது நடக்க போற மாதிரியே ஒரு உறுத்தலா இருக்கு…இந்த ஃபீல் அப்படியே கழுத்த நெறிக்கிறா மாதிரி இருக்கு..இதுல தலவலி வேற…”

என்று சொன்னவன் இன்னது என்று உணருமுன் அந்த சம்பவம் நடந்தேறியது.

தோளில் இருந்த தந்தையின் கரம் சரிய ஓரத்தில் இருந்த அவர் நொடியில் தவறி விழுந்திருந்தார்.

“அப்பா….!!!!”

என்று அவன் பிடிக்கும்முன் இரண்டாம்  தளத்தில் இருந்தவர் தரையை சென்றடைய ஏற்கெனவே சோர்ந்திருந்த விஜய் அந்த கணத்தின் அதிர்ச்சி தாங்காது மயங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!