Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 11

 அத்தியாயம்  – 11

கதிரவன் குருவிடம் பேசிக் கொண்டிருந்தான். “டேய் மச்சான் வேற ஏதாவது வேலை செய்யணும்டா அப்பா இன்னும் 2 மாசத்தில வந்துடுவார் அப்பா கடைக்கு வந்துட்டா அடுத்து நான் என்ன செய்யுறதுனு தெரியலடா ” என்று கூறிகொண்டிருக்கும் போதே அங்கு வந்தார் ஈஸ்வரமூர்த்தி.

இவர் அரசு அலுவலகத்தில் கிளார்க் காக வேலை செய்து வருகிறார். இவர் கதிரவனின் வீட்டின் அருகில் வாடகைக்கு இருந்தார்.பின் சொந்தவிடு கட்டிக்கொண்டு போய்விட்டார். இந்த பக்கம் வரும் போது தெல்லாம் கடைக்கு வந்து கதிர் வேலுசாமி இவர்களிடம் பேசிவிட்டு செல்வர்.

 



Advertisement

குரு நான் அப்பறம் பேசுறேன்டா. சார் வாங்க எப்படி இருக்கீங்க வீட்டுல அம்மா அக்காங்க எல்லாம் நல்லா இருக்காங்களா. எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா நீ எப்படி இருக்குற தொழிலாம் எப்படி போகுது.

 

ஏதோ போகுது சார். கதிரவா நீ போன்ல பேசுனத நான் கேட்டேன். நான் ஒரு வேலை சொல்லுறேன் செய்யுறைய. என்ன வேலை சார். ரியல் எஸ்டேட் வேலைபா. நிலம் வாங்குறவங்க விக்குறவங்க நடுவுல பேசி முடிச்சிவிடணும். லேண்ட் வாங்குறவங்களுக்கு போய் லேண்ட் கட்டணும் அவ்வளவு தான் வேலை.

Advertisement

 

Advertisement

இந்த வேலைல அலைச்சல் கொஞ்சம் அதிகமா இருக்கும்பா. எனக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லப்பா.என்னால அலையவும் முடியல ஆபீஸ் வேலைய வேற விட்டுட்டு, நானே உதவிக்கு யாராவது வச்சிக்கலானு இருந்தேன். நீ வேணுனா வரைய கதிரவா.

 

நான் உனக்கு விற்க வேண்டிய நிலத்தை காட்டுறேன். நீ அந்த லேண்ட் ஓட டீடெயில்ஸ் எல்லாம் குறிச்சி வாங்கிக்கோ. நான் உன்கிட்ட லேண்ட் வாங்க வரவங்கள அனுப்பி வைக்குறேன். நீ போய் அவங்களுக்கு இடத்தை காட்டி லேண்ட் டீடெயில்ஸ் சொல்லு போதும் சரியா.

Advertisement

 

ஒரு லட்சத்துக்கு இரண்டாயிரம் நமக்கு கமிஷன், வாங்குறவங்க விக்குறவங்க இரண்டு பெறுகிட்டயும் வாங்கிக்கலாம். நல்ல லாபம் பாக்கலாம். என்ன சொல்லுற வரையா, சரி சார் நான் வேலைக்கு வாரேன் சார்.சண்டே என்கூட வா நான் விக்க வேண்டிய லேண்ட் காட்டுறேன்.

 

ஈஸ்வரமூர்த்தின் மூலம் கதிரவன் ரியல் எஸ்டேட் தொழில் இறங்கினான்.இதன் மூலம் அவனுக்கு கிடைத்த முதல் கமிஷன் ரூ.18000 இந்த லாபம் கதிரவனுக்கு ஊக்கத்தை அளித்தது.அனுவிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டான்.

 

அனு அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை உனக்கு முக்கியமான கிளாஸ் இல்லனா கடைக்கு வரைய. கருப்பு சபரிமலைக்கு மாலை போடா போறான். அதுனால அன்னைக்கு நான் மட்டும் தான் இருப்பேன். நீயும் கடைக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சுடா வரையா.

 

கருப்பு மாலை போடா போறானா சூப்பர்டா, நான் மட்டும் பையனா பொறந்துருந்தா கண்டிப்பா எல்லா வருசமும் மாலை போட்டுருப்பேன் என்றாள் அனு. நீ மாலைலாம் போடா மாட்டைய கதிர். இது வரைக்கும் மாலை போடணுன்னு தோணுனது இல்ல போடல. உனக்கு பிடிக்கும்னா சொல்லு நான் மாலை போடுறேன் உனக்கும் சேர்த்து நான் போய் ஐயப்பச்சாமிய கும்பிடுட்டு வாரேன்.

 

கதிர் நிஜமாதான் சொல்லுறைய. கடவுள் விஷத்துல யாரது பொய் சொல்லுவாங்களா நிஜமா தான் சொல்லுறேன்.i love u so much மாமு. என் செல்லம் ரொம்ப சந்தோசமா இருக்கா போல. ம்ம் ஆமாடா மாமு. எப்போ மாலை போட போற உன்னால விரதம் கரெக்ட் இருக்க முடியுமாடா. கவலை படாதடா நான் ஒழுங்கா விரதம் இருப்பேன்.

 

நான் அம்மா அப்பா கிட்ட சொல்லிடு. கருப்பு கூடவே நானும் மாலை போட்டுகிறேன் சரியா. தேங்க்ஸ் கதிர்.லூசு நமக்குள்ள தேங்க்ஸ் சாரி லாம் வர கூடாது சரியா. ம்ம் ஓகே கதிர் சொல்லல சரி கதிர் கிளாஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன். நீ போய் சாப்பிடு.

 

கதிரவனுக்கு ரியல்எஸ்டேட் மூலம் கமிஷனாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் வந்தது. அதை வங்கியில் தனியாக சேமிக்க ஆரம்பித்தான்.

 

அனு கதிரவனின் கடைக்கு அவனை பார்க்க சென்றால் அங்கு கருப்பு என்ன பன்னிட்டு இருக்குற. எங்க உங்க அண்ணனை காணோம்.

வாங்க அண்ணி என்ன ரொம்ப நாளா இந்த பக்கமே ஆளை காணோம் .ரொம்ப படிக்க வேண்டி இருந்தது. அசைன்மென்ட்லாம் எழுத வேண்டி இருந்தது அதான் வர முடியல. சரி உங்க அண்ணா எங்கன்னு சொல்லு முதல்ல “.

 

அண்ணா விக்க வேண்டிய லேண்ட பாக்க போயிருக் காங்க.எப்போ வருவாங்க வர நேரம் ஆகுமா. இருங்க அண்ணி அண்ணாக்கு கால் பன்னி கேக்குறேன். கருப்பு நான் இங்க இருக்கேனு சொல்லாத சரியா. ம்ம் ஓகே அண்ணி.ஹலோ அண்ணே எங்க இருக்கீங்க எப்போ வருவீங்க. பக்கத்துல தான்டா இருக்கேன் வேலை முடிஞ்சது இப்போ வந்துருவேன்.சரி பார்த்து வாங்க. அண்ணே இப்போ வந்துரு வாங்கலாம் அண்ணி. நான் உள்ள இருக்கேன் கதிர் கிட்ட ஏதாவது சொல்லி உள்ள அனுப்பிவை, நான் இருக்கேனு மட்டும் சொல்லிறாத.

 

அனு குடோனுக்குள் சென்று ஒழிந்துக் கொண்டால் கதிர் கடைக்குள் வந்தான். என்னடா கருப்பு போன் பண்ண எதும் முக்கியமான விஷயமா சாப்பிட்டையா.அப்படி முக்கியமான விஷயம்ல இல்லனே சும்மா தான், முகம் புள்ள குங்குமமா இருக்கு போய் முகத்தை கழுவுணே. குங்குமமா அது எப்படி வந்துச்சி என்று யோசித்துக் கொண்டே குடோன் உள்ளே சென்றான். அனு பின்னால் இருந்து அவனை கட்டி பிடித்தால்.

 

ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அடுத்த நொடி செல்லகுட்டி என்னடா திடிர்னு வந்து இன்ப அதிர்ச்சிலாம் குடுக்குற.அதுவா வெள்ளிக்கிழமை நீ மாலை போட போறல அப்பறம் ஒரு மண்டலத்துக்கு உன்ன பேர் சொல்லிக்கூட கூப்பிட முடியாது அதான் என் மாமு வா இன்னைகே கொஞ்சிட்டு போலாம்னு வந்தேன்.

 

கதிர்வன் அனுவை கட்டி பிடித்து அவள் நெற்றில் முத்தம் கொடுத்து லவ் யூ செல்லம் என்றான். பின் இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனார். அப்பொழுது அனுவின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை பார்த்து செல்லம் இது உன் கைக்கு சூப்பரா இருக்குடா டிசைன் கூட நல்லா இருக்குடா.

 

நல்லா இருக்குல்ல எனக்கு கூட இது ரொம்ப பிடிச்சிருக்கு ஜெர்மனில இருந்து அகில் அத்தான் வாங்கிட்டு வந்தாங்க. அகில் அது யாருடி. என் அத்தை பையன், கீதா அண்ணி ஓட அண்ணா. அப்போ உனக்கு முறை பையனு சொல்லு. ஆமாடா என் முறை பையன் தான் என் சடங்குக்கு கூட அகில் அத்தான் தான் எல்லா முறையும் செஞ்சாங்க.

 

ரஞ்சு நான் ஏதாவது வாங்கி தந்தா மட்டும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லுற உன் அத்தான் வாங்கி தந்ததை மட்டும் போட்டுருக்க.நீ வாங்கி தந்ததா நான் போட்டுட்டு போன அம்மா எங்க வாங்குன எப்படி வாங்குன யாரு வாங்கி தந்தாங்கனு ஆயிரம் கேள்வி கேப்பாங்க. என் இப்போ மட்டும் உன்ன யாரும் கேக்க மாட்டாங்களா.

 

மாட்டாங்களே என்னா அத்தான் இதை எல்லாரும் முன்னாடி வச்சுத்தானா என் கைல போட்டு விட்டாங்க. அகில் உன் கைல போட்டு விட்டதுக்கு உன் அப்பா ஏதும் சொல்லலையா. இல்லையே அத்தை தான் என் கைல போட்டு விடவே சொன்னாங்க.கதிர் மனதுக்கு ஒரு மாதிரியாக இருந்தது அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை

 

கதிர் கனடாவில் இருக்கும் லட்சுமிக்கு போன் செய்து மாலை போட போவதாகக் கூறினான். தம்பி என்னப்பா இது திடிர்னு மாலை போட போறேன்னு சொல்லுற நாங்க வர இன்னும் ரெண்டு மாசம் ஆகும்பா கன்னிப்பூஜை வேற வைக்கணும் நிறைய விரத முறை இருக்குடா தம்பி.

 

அம்மா அதை பத்திலாம் கவலை படாதீங்க நான் குரு சாமி கிட்ட பேசிட்டேன் மாலை போடுற மூன்றாவது வருஷம் கன்னி பூஜை வைக்கலாம் சொல்லிட்டாங்க.நம்ம குடும்பசூழ்நிலை பத்திலாம் விளக்கமா சொல்லிட்டேன்மா.கருப்பு கூட தான் மாலை போட போறேன். அவன் நாம வீட்டுல வந்து தாங்குறதா சொல்லிருக்கான்.நான் பாத்துக்குறேன்மா அப்பா கிட்ட சொல்லிருமா. அப்பா கேட்டுட்டு தான் தம்பி இருக்காங்க. அப்படியா மா அப்பா நான் மாலை போட போறேன்பா வெள்ளிக்கிழமை. ஒழுங்கா விரதம் இருப்பா உடம்ப பாத்துக்கோ கதிரவா.

 

வெள்ளிக்கிழமை காலையில் கதிர் அனுவை உடன் அழைத்து சென்று மாலைப் போட்டுக் கொண்டான்.அனு சாமி வாங்க வீட்டுக்கு போய் சாப்பிட்டு போலாம். இல்ல கதிர், சாரி சாரி இல்ல கதிர் சாமி காலேஜ்க்கு டைம் ஆச்சு கிளம்புறேன். பாத்து போங்க ரஞ்சனி சாமி.

 

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அனு மாடியில் படித்துக் கொண்டிருந்தாள். சுஜி அனு வைத்திருந்த பேனாவை வேண்டும் என்று கேட்டாள். அனு தர முடியாது என்று கூறியதும் அதை எடுத்துக் கொண்டு கீழே ஓடினாள் அனுவும் துரத்திக் கொண்டே வந்தால். இருவரும் படியில் இறங்கி ஓடி வந்தனர். சுஜி திடிர்னு திரும்பி பே என்று கத்தினாள் அந்த சத்தத்தில் அதிர்ந்து அனு கால் இடரி கடைசி இரண்டு படிகளில் இருந்து கீழே விழுந்து விட்டாள்.

 

அனுவின் வீட்டுக்குள் வந்த அகில் அனு விழுந்ததை பார்த்து ஓடி வந்தான்.அனுவை தூங்கி விட்டான். பின் அவளை உக்கார வைத்துவிட்டு தண்ணீர் குடுத்தான் குடிக்க.

 

அனு திடிரென்று அழுக ஆரம்பித்தால் குட்டிமா என்ன ஆச்சுடா எங்கயாவது அடிபட்டருச்சா வலிக்குதா.கால் ரொம்ப வலிக்குது அத்தான் என்றாள். அப்பொழுது தான் அகில் அனுவின் காலை கவனித்தான் அவள் கால் பெருவிரல் நகம் பிய்ந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. உடனே அதில் கைக் குட்டையை சுற்றி விட்டான்.

 

படில வரும்போது பார்த்து வர மாட்டையா. அனு சுஜியை பார்த்தாள். சாரி அனு தெரியாம பண்ணிட்டேன்.நீ என்ன பண்ண சுஜி. சுஜி நடந்தவற்றை கூறினால். அகிலனுக்கு கோவம் அதிகரித்தது உனக்கு அறிவு இல்லையா கொஞ்சம்கூட நீ இன்னும் சின்ன குழந்தையா மாடிபடில வச்சி யாராவது விளையாடுவாங்களா. பாரு உன்னால என் அனு கால்ல இருந்து ரெத்தம் வருது.

 

அகில் கூறிய என் அனு என்ற வார்த்தையை, அனுவின் துரத்தஷ்டம் அவள் அதை கவனிக்க வில்லை. இவர்களின் சத்தம் கேட்டு கார்த்திக், கீதா இருவரும் வந்தனர் என்னாச்சு என் இப்படி கத்திட்டு இருக்கீங்க. அகில் நடந்தவற்றை கூறினான். கார்த்திக் அனு,சுஜி இருவரையும் திட்டினான்.அனுவை ஏன்டா திட்டுற அவ என்ன தப்பு பண்ண என்றான் அகில்.அத்தான் கால் ரொம்ப வலிக்கு அத்தான். சாரிமா உன்ன ஹாஸ்பிடல் கூட்டிடு போகாம தேவை இல்லாம இவன் கிட்ட பேசிட்டு இருக்கேன் வா நாம போலாம் என்று கூறி அனுவை கையில் தூங்கிக் கொண்டான்.

 

இருடா நானும் வாரேன் ஹாஸ்பிடலுக்கு, அனுவ திட்டுனால போடா நீ ஒன்னும் வர வேண்டாம்.குட்டிமா வா நானே ஹாஸ்பிடல் கூட்டிடு போறேன் என்றான் அகில். உன் அண்ணே இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்குறான் எப்போ தான் மாற போறானோ என்றான் கார்த்திக்.

 

ஹாஸ்பிடலில் அனுவிற்கு கால் விரலில் கட்டு போட்டு விட்டனர். அனு வலியில் அழுவதை பார்த்து அகிலனின் கண்களும் கலங்கி விட்டது அதை பார்த்த நர்ஸ் இவரை மாதிரி ஒரு அத்தான் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும்மா என்றார். அனு அவர்களை புரியாமல் பார்த்தாள்.

 

அகிலனின் செயல்களை அனு பாசமாக மட்டுமே எண்ணினால். அகிலனின் பாசம் காதலாக மாறியதை அறிந்திருந்தால் அனுவின் வாழ்க்கையில் கதிரவன் வந்திருக்கவே மாட்டானோ. விதியின் விளையாட்டை யாரால் மாற்றமுடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!