Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

திருநங்கைகளும் தேவதைகள் தான்.. சிறுகதை

திருநங்கைகளும் தேவதைகள் தான்..



Advertisement

மணி எட்டு ஆனது, பதற்றத்தோடு நொடிக்கொரு முறை வாசலுக்கும் கூடாரத்துக்கும் நடந்துக்கொண்டிருந்தார் சிவநேசன்.

வேலைக்கு சென்ற மகளை இன்னும் காணவில்லையே, வழக்கம் போல் எப்போதும் ஏழு மணிக்கு வீட்டுக்கு வருபவள், இன்று ஏனோ மணி ஒன்பது ஆகியும் அவளை காணாது ஒரு தந்தையாய் அவருக்கு அச்சம் தொற்றிக்கொண்டது.

மகள் பார்கவி வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்ட போது  ஏழு மணிக்கே அவள் கிளம்பிவிட்டாள் என்று சொன்னார்கள், ஆனால் அவள் இன்னும் வீட்டிற்கு வந்த பாடில்லை.

Advertisement

அறையின் உள்ளே சென்று சுவரின் ஆணியில் மாட்டி இருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வரும் சமயம் வீட்டின் வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.

Advertisement

அந்த ஆட்டோவிலிருந்து மூன்றாம்பாலினத்தவரான மூன்று திருநங்கைகள் இறங்க அவர்கள் பின்னாலே தலையை குனிந்து கொண்டு சிவந்த விழியோடு வந்திறங்கினாள் பார்க்கவி.

திருநங்கைகளை பார்த்து முகத்தை சுழித்தவர், மகளின் கரத்தை பற்றி கொண்டு வீட்டில் உள்ளே செல்ல, பார்க்கவியோ “நீங்களும் உள்ளே வாங்க ” என்று அந்த திருநங்கைகளை அழைக்க, அவரின் தந்தையோ ஆத்திரத்தில் மகளின் கரத்தை அவளுக்கு வலிக்குமாறு அழுத்தி பிடித்துக்கொண்டு அக்கம் பக்கத்தினர் யாராவது பார்க்கிறார்களா என திரும்பி பார்த்துவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றார்.

அதை வைத்தே கொண்டுகொண்டாள் அவள் தந்தை கோபத்தின் உச்சியில் இருக்கிராரென்று.

Advertisement

பார்க்கவியின் அழைப்பின் பேரில் வீட்டின் உள்ளே வந்த திருநங்கைகள் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு  அவர்களாகவே வாயை திறந்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதில் நிஷா என்ற திருநங்கை ” ஐயா நாங்க உங்க வீட்டு உள்ள வரத்து உங்களுக்கு பிடிக்கவில்லையென்று எங்களுக்கு தெரியும், ஆனா நான் இப்போ உங்க கிட்ட பேசியே ஆகணும், இன்னைக்கு நாங்க மட்டும் அந்த காலனி பக்கம் வராதயிருந்தா இந்நேரம் உங்க மகள் பிணம் தான் அங்க இருந்து இருக்கும்.

இந்த சிங்காரசென்னையில பலப்பேரோட வாழ்க்கையை விண்ணில் தொடுமளவுக்கும் பணம் புகழும்,

பிழைப்பை தேடி சென்னைக்கு வரும் படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலையும் வாய்ப்பும் தேடி கொடுத்திருக்கென்று தான் மக்கள்கள் நம்பிக்கையோடு இருக்காங்க, ஆனா ஒன்று மட்டும் அவங்களுக்கு தெரில.

அது என்னனா, என்று மேலே கூற தயங்கி நிஷாவை பார்த்த, மற்றொரு திருநங்கையான ஷில்பா வாயை திறந்தார்.

” இங்கு பொம்பள புள்ளங்களுக்கு பாதுகாப்பே கிடையாது, உங்க பொண்ணுக்கு நடந்ததை சொன்னா ஒரு அப்பாவா உங்கனால தாங்கிக்க முடியாது “என்று கூறும் போது அவரின் குரல் கம்மியது.

பார்க்கவியால்,அவர்களின் உரையாடலை கேட்க சக்தி இல்லாதது அறையின் உள்ளே சென்றவள் மஞ்சத்தின் மீது இருந்த தலையணையில் முகத்தை மூடி கொண்டு சத்தமில்லாமல் உள்ளுக்குள் கதறி அழுதாள்.

“அப்படி என் பொண்ணுக்கு என்ன நடந்துச்சு,  அவ எப்போதும் தப்பு பண்றவ கிடையாது, தாணுண்டு தன் வேலையுண்டு ன்னு இருப்பா, அப்படிப்பட்டவளை நீங்கள் அழைத்து வந்ததற்கு என்ன காரணம் “என்று சற்று அதிகார குரலில் கேட்டார் சிவநேசன்.

சற்று பெருமூச்சை இழுத்துவிட்ட திருநங்கை ஷில்பா ” நாங்க பசியோட கொடுமையில அண்ணா நகர்ல இருக்கற உங்க பொண்ணு வேலை பார்க்குற கம்பெனி கிட்ட இருக்கற பெட்டி கடையில நின்று யாராவது சாப்பாடு வாங்கி கொடுப்பாங்களான்னு ஏங்கிக்கிட்டு இருந்தோம். அப்போ தான் உங்க பொண்ணு வேலையை முடிச்சிட்டு வெளியே வந்தா கூடவே ஒரு வயசு பையனும் உங்க பொண்ணு பின்னாடியே வந்து அவளை வழி மறைச்சி கையை பிடிச்சி ஏதோ இங்கிலிஷ்ல பேசிட்டு இருந்தான், எங்களுக்கு இங்கிலிஷ் தெரியாது, அதனால அவன் என்ன பேசினான்ன்னு உங்க பொண்ணு கிட்ட கேட்டா தான் தெரியும், உங்க பொண்ணும் பயத்துல அவனை விட்டு பஸ் ஸ்டாண்ட்க்கு வேகமா நடந்துட்டு இருந்த போது கூட அவன் உங்க பொண்ணை விடல, ரொம்ப அழுதுகிட்டே அவன் கிட்ட கையை எடுத்து கும்பிட்டு கெஞ்சி அவளும் இங்கிலிஷ்ல என்னமோ பேசினா, எங்களுக்கு எதுமே புரியல, ஆனா உங்க பொண்ணுக்கு அந்த பையனால ஏதோ ஆபத்து வரும் அது மட்டும் எங்களுக்கு புரிஞ்சிது, எல்லாம் பார்த்ததும் கம்முனு போற மக்களை விட நான் எப்போதும் உதவி பண்ணுறவங்கதான்,

கோடம்பாக்கம் ஸ்வாதிக்கு நடந்து தான் எங்க கண்ணுக்கு தெரிஞ்சது. அதே போல இன்னொரு பொண்ணுக்கு நேர்ந்துட கூடாதுன்னு நாங்க எல்லாரும் ஓடி போயி அந்த பையனை புடிச்சி என்ன எதுவென்று விசாரிக்கறதுக்குள்ள அந்த பையன் எங்க கிட்ட இருந்து தப்பிக்கலாம்ன்னு முயற்சி பண்ணான், இதோ இந்த நிஷா ஒரு ஆட்டோ டிரைவர், அவனை ஆட்டோல புடிச்சிட்டு , கூடவே உங்க பொண்ணையும் அழைச்சிட்டு வர வழில  யாருமில்லாத இடத்துல ஆட்டோவ ஓரமா நிறுத்தி  அவனை வண்டியில வெளியே இழுத்து  எங்க கிட்ட இருந்த கட்டிங்பிளேடால அவனோட ஆண்மையை வெட்டி வீசிட்டோம் “என்று கோபத்தில் முகத்தில் வியர்ந்த வியர்வையை கூட துடைக்காது கத்தினார் அந்த திருநங்கை ஷில்பா.

அவளின் தந்தைக்கோ மகள் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து வந்துருக்கிறாள் என்று நினைக்கும் போது சுவரில் மாலையிட்டு தொங்கிகொண்டிருந்த தனது மனையாளின் புகைப்படத்தை  விழிகள் நனைய பார்த்தார் சிவநேசன்.

தெய்வரூபத்தில் வந்து மகளை காப்பாற்ற இந்த மூன்று திருநங்கைகளை அனுப்பி வைத்தது தனது மனைவி தான் என்று நினைத்தவர் அந்த மூன்று திருநங்கைகளை நன்றியோடு கையெடுத்து கும்பிட்டார்.

அறையில் இருந்து வெளியே வந்த பார்க்கவி அவர்கள் மூன்று பேரையும் பார்த்து “அக்கா இன்னைக்கு உங்களுக்கு இங்கே தான் டின்னர், எல்லாரும் ஒன்றாக சென்று சாப்பிடலாம், ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, டின்னர் ரெடி பண்ணிடுவேன் ” என்று அவள் கூறும்போது தான் அந்த மூன்று பேருக்கும் பசி வயிற்றை கிள்ளியது.

ஒரு வழியாக அனைவரும் உண்டு முடித்து விட்டு கிளம்ப எந்தணிக்க சிவநேசன் அறையில் இருந்து கையில் பாத்தாயிரம் பணத்தை கொண்டு வந்து அவர்களிடம் நீட்ட அவர்களோ வேண்டாமென்று மறந்துவிட்டர்கள்.

போகும்போது நிஷாவின் அலைபேசி எண்ணை பார்க்கவியிடம் கொடுத்து ஏதாவது அவசரம், ஆபத்தென்றால் எங்களை அழைக்குமாறு கூறுவிட்டு விட்டு அவளின் தலையை வருடி ஆசீர்வாதம் செய்து விட்டு வந்த ஆட்டோவில் ஏறி கிளம்பபோது ஷில்பா சிவநேசனிடம் திரும்பி

“பெண் பிள்ளைகள் தேவதை போன்றவர்கள், அதே போல தான் நாங்களும், நாங்கள் பெண்ப்பிள்ளைகளை காக்கும் தேவதைகள் “என்று கூறிவிட்டு சென்றவர்களை நோக்கி ஆச்சரியமாக பார்த்தார் பார்க்கவியின் சிவநேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!