தன்னைச் சுற்றி அனைவரும் இருந்தும் தனிமையை அனுபவிப்பது மிகவும் கொடியது. அந்தக் கொடுமையைத் தான் பாரதி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
இந்தத் திருமணம் நடக்க காரணமாக இருந்த தன் தோழி பூஜாவும் அவளின் குடும்பத்தினரும், பார்த்திபன் தாலி கட்டி முடித்து வெளியேறிய போது, கூடவே சென்று விட்டனர்.
மாலூ, பாரதியை ஏளனமாக பார்த்தபடி தன் பேரனைத் தூக்கிக் கொண்டு மகளுடன் வெளிநடப்பு செய்ய, பின்னாலேயே வரலட்சுமி, பத்மா, அகல்யா பாட்டி, மாணிக்கம், ஏன் பாரதியுடன் எப்பொழுதும் சிரித்து சிரித்து பேசும் மயூரி கூட அவளை வா என்று அழைக்காது முணுமுணுத்தபடி செல்ல, பாரதிக்கு அவமானமாக இருந்தது.
Advertisement
Advertisement
சுயமரியாதையை விற்று பார்த்திபனின் மனைவியாக இருக்க வேண்டுமா? என்ற எண்ணம் எழும் போது அவளின் முன் வந்து நின்றான் நம் சந்ரு.
“ஹாய் பாரதி.” என்க, அவள் பதில் சொல்லவில்லை. இவனும் மற்றவர்களைப் போல் தானே என நினைத்து அமைதியாக இருக்க,
ஏன் சம்மந்தம் இல்லாமல் உலறுகிறான்? என்று பார்த்தாள்.
“இல்ல கல்யாணம் முடிஞ்சி ரொம்ப நேரம் ஆச்சி. சபதம் போட்டுறவ மாதிரி, புஷ்புஷ்னு மூச்சு வாங்க ஒரே இடத்துல மாலையோட உக்காந்திருக்குறத பாத்தா கொஞ்சம் பயம்மா இருக்கு. சாபம் கீபம் விட்டுடுவியோன்னு. அதான்… ” எனச் சொல்லி சிரிக்க, அவள் சிரிக்கவில்லை.
“சிரிப்பு வர்ற அளவுக்கு இது காமெடி இல்ல போல. இட்ஸ் ஓகே. வா நம்ம வீட்டுக்கு போகலாம்.” என அழைத்தான்.
“சரி அண்ணெ, கைய பிடிக்காம கூட்டீட்டு போறேன். தப்பென்ன.” என்க, அவள் முறைத்தாள்.
“இங்க பாரு பாரதி, நீயும் அவனும் இதுவர யாருக்கும் தெரியாம புருஷெ பொண்டாட்டியா ரகசியமா இருந்துட்டிங்க. அதுனால வீட்டுக்கு நீ ரகசியம வந்திட்டு போய்ட்டு இருந்த. இப்ப தான் ஊரறிய எல்லார் முன்னாடியும் கல்யாணம் ஆச்சே. பிறவு என்ன? இனியும் நீங்க ரகசியமாத்தா குடும்பம் நடத்த போறிங்களா? ” எனக் கேட்க, பாரதிக்கு கோபம் வந்து விட்டது.
“யோவ்… இன்னாய்யா பேசிக்கினு கீற நீ.. நான் தா அப்பாலா இருந்து உ வூட்டு பையனுக்கும் எனக்கும் கண்ணாலம் ஆவலன்னு கூவிக்கின்னு கிடக்கேன்… அத்த மதிக்காம.. உம்பாட்டுக்கி பேசிக்கினே போற. எவனோ ஒரு பேமானி வந்து ஒத்த ஃபோட்டோவ மூஞ்சி மேல காட்டினா… அத்து பீலான்னு கூட புரியா.. உ வூட்டு சனமே நம்பிக்கின்னு என்ன பிடிச்சி கட்டி வைச்சிடுச்சு. இனி இன்னா பண்றதுன்னு ஒண்ணியும் புரியாது குந்திக்கின்னுகீறேன். வந்து சொரிஞ்சின்னு கிற. கம்முனு கெட அல்லாடி கலிஜ்ஜாகிடுவ. ” எனச் சென்னை தமிழில் பாசமழை பொழிந்தாள்.
‘யாராது இந்த ராயப்பேட்ட ராணியோட வாய்ஸ்ஸ ஆஃப் பண்ணுங்களேன்ப்பா. தெரியாத்தானம ஆன் பண்ணிட்டேன்.’ எனப் பரிதவித்தான் சந்ரு.
‘எவ்ளோ நேரம் தான் தனியாக திட்டு வாங்குவது யாராவது உதவிக்கு வாங்கப்பா’ என்பது போல் திருதிருவென முழித்தபடி சுற்றி முற்றி பார்க்க, யாமிருக்க பயம் ஏன் என்பது போல் வந்தான் ராம்..
“போதும் பாரதி.. வா போகலாம்.. ” என்று முன் நடக்க, அவனை உற்று பார்த்தவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.
“இதையே தான நானும் சொன்னேன். என்ன மட்டும் அன்னை தமிழ்ல திட்டிட்டு, அவெ பின்னாடி சத்தம் போடாம நடந்தா என்ன அர்த்தம்… ம்… இந்த வீட்டோட மூத்த மருமகெ நான்.. என்னை யாருமே மதிக்கிறது இல்ல. நானும் எம்மாப்ளையும் சேர்ந்து ஒரு சங்கம் வைக்க போறோம். ‘கடைசி வரை வெட்டியாவே இருப்போம்.’ னு.. அதுக்கு மாப்ள தான் தலைவன் நான் துணை தலைவன். எது வந்தாலும் எம்மாப்ள பாத்துப்பான். என் மரியாதைக்கு அவனே பொறுப்பெடுத்து பொங்கி வருவான்.” எனச் சத்தமாக பேசியவன், பாரதி காரில் ஏறி அமர்ந்து விட்டாள் என்பதை உறுதி செய்விட்டு தான் வாயை திறந்தான். இல்லையேல் மீண்டும் சென்னை செந்தமிழில் பாராட்டு பத்திரம் வாசிக்கப்படுமே.
அந்த வீட்டு மருமகளாக கழுத்தில் மங்கள நாணை சுமந்து வந்தவளை ஆலம் சுற்றி வரவேற்கத்தான் யாரும் வாசலுக்கு வரவில்லை. ஏன் அவள் வந்தாளா என்று கூட யாருக்கும் தெரியாது. ராம் அவளை அறைக்கு போகச் சொல்ல, அவள் முழித்தாள்.
“ஓ பைப் பிடிச்சி வந்தாத்தா மாப்ள ரூமுக்கு வழி தெரியுமோ! வாசல் வழியா வந்தா தெரியாதோ! ” என சந்ரு சொல்ல, பாரதி முறைத்தாள்.
“மாடில ரைட் சைடு லாஸ்ட் ரூம். ” என்ற ராம் அவளை அழைத்து செல்லாது மனைவியைக் காண சென்று விட்டான்.
” இந்த மங்கம்மாட்டா தனியா விட்டுட்டு போய்டியே சகல.. ” என்றபடி அவனும் ஓட, பாரதி அந்த வீட்டை அதீத வெறுப்புடன் பார்த்தபடி ஏறிச் சென்றாள்.
இந்த வீடும்… இந்த வீட்டாருடன் உறவும் வேண்டாம் என்றும், இந்த வீட்டிற்குள் எந்த சூழ்நிலையிலும் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்றும் இருந்தவளை, காலம் அந்த வீட்டுடன் பிரிக்க முடியாத ஒரு பிணைப்பை ஏற்படுத்தி விட்டு சிரித்தது. முதலில் நட்பு என்ற பெயரில். இப்போது உறவு என்ற பெயரில். விதி விளையாடும் விளையாட்டில், உருட்டி விளையாடும் பகடைக்காயாய் மாறிப் போனாள்.
பார்த்திபனின் அறை வாயிலை அடைந்தவளுக்கு உள்ளுக்குள் செல்ல விருப்பமில்லை.
“சாப்பாடு…” என ஒரு வேலையாள் வந்து உணவை மேஜையில் வைத்துவிட்டு செல்ல, அது விஷமாய் கண்ணிற்கு தெரிந்தது. அதைத் தொட்டு கூட பார்க்காது, அறைக்குள்ளும் செல்லாது அங்கிருந்த பால்கனி சோஃபாவில் அமர்ந்து விட்டாள்.
யாரும் அவளைப் பற்றி கவலை படாத நிலையில் அவளின் முன் நிழலாடியது. அனந்தராமன் தான். அவரை ஏறெடுத்து பார்த்தவள் மீண்டும் எல்லையில்ல வானை வெறித்தாள்.
“அம்மாடி பாரதி. நீ இன்னும் சாப்பிடலயாமே…” என உணவை எடுத்து அவளுக்கு ஊட்டி வர,
“எனக்கு வேணா…” என்றவள் வெடுக்கென எழுந்து பால்கனியின் கம்பிகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள், தன்னுள் எழும் கோபம் என்னும் உணர்வை கட்டுப்படுத்த. ஆனால் அது முடியாது போக,
“எப்படி நீங்க இந்த கல்யாணத்துக்கு தலய ஆட்டுனீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா.. ஏன்னா நான் யாரு என்னன்னு மத்தவங்களுக்கு தெரிஞ்சத விட உங்களுக்கு சில விசயம் நல்லாவே தெரியும். அது இந்த வீட்டுல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சா என்னாகும்னு உங்களுக்கு தெரியும்.
அப்படி இருந்தும் எப்படி உங்க பேரன் எனக்கு தாலி காட்டுறத பாத்திட்டு இருந்திருக்கிங்க! எப்படி? ஏன்? உங்க ஸ்டேட்ஸ் எப்படி இடம் தந்தது?” எனக் கோபமாக கேட்க, அவர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் வலிகள் இருந்தது. அதைப் பாரதி உணர்ந்தாலும் பரிதாபமோ பாவமோ படும் நிலையில் அவள் இல்லை. கூடவே அவரின் வலி நாடகமாக பட்டது அவளுக்கு.
” செஞ்ச தப்புக்கு பிராய்ச்சித்தம். ” என அவர் ஆரம்பிக்கும் போது,
” பிராய்ச்சித்தம்ங்கிறது தப்ப சரி பண்றதுக்கு இல்ல.. தப்புக்கு தண்டன கிடைக்கும் போது அத ஏத்துக்கிற மனச பக்குவத்த உருவாக்குறது. அத்தோட தப்புக்கு தான் தண்டனையும் பிராய்ச்சித்தமும். பாவத்துக்கு கிடையாது. அதுலயும் பெண் பாவத்துக்கு கிடையவே கிடையாது.
காலம் தாழ்த்தி இப்ப நீங்க பண்ற பிராய்ச்சித்தம் வீணானது. உங்களால என்னோட வாழ்க்க மட்டுமில்ல உங்க பேரனோட வாழ்க்கையும் போச்சி. அவனோட குணம் உங்களுக்கு தெரியும் தான? அப்படி இருக்குறப்போ அவனுக்குப் பிடிக்காத என்னை எப்படி மனைவியா ஏத்துப்பான்னு நீங்க நினச்சிங்க?”
“எம்பேரெ மனசுல உனக்குன்னு ஒரு இடம் இருக்கும்மா.” என்றவருக்கும் பாரதியின் பேச்சில் இருந்த உண்மை சுட்டது.
தன் பேரன் பாரதியை ஏற்காமல் விலக்கியும் வைக்காமல் வாழ்ந்தால் என்னாவது என்று எண்ணும் போதே அவருக்கு இரத்த அழுத்தம் கூடியது.
” பார்த்திபன் மனசுல நான் இருந்திருந்தேன்னா இன்னேரம் அவெ வீட்டுக்கு வந்திருக்கணும். ஃபோனாவது பண்ணி இருக்கணும். இல்ல பண்ற ஃபோனையாது எடுத்திருக்கணும். எதுவும் இல்லங்கிறப்ப தெரிய வேண்டாம், அவனுக்கு இது கட்டாய கல்யாணம்னு. உங்க பேரனோட எதிர்காலம். உங்க குடும்பத்தோட அடுத்த தலைமுறை இத பத்தி எதாவது கனவு கண்டிருந்தீங்கன்னா இப்பவே அத மறந்திடுங்க. ஏன்னா பார்த்திபன் என்னை ஏத்துக்க போறது இல்ல.” எனப் பேசிக் கொண்டே போக, தாத்தா தள்ளாடியபடி சரிந்து விட்டார்.
அதன் பின் நடந்தது தான் தெரியுமே. தன் குடும்பம் அடுத்த சந்ததியைச் சந்திக்காமல் பட்டு போய்விடுமோ என்ற கவலையில் தான் பார்த்திபனிடம் பாரதியை ஏற்று குடும்பம் நடத்த சொல்லி கெஞ்ச வைத்தது.
பார்க்கலாம்… தாத்தாவின் ஆசை நிறைவேறுமா… பாத்திபன் மனது மாறுமா… பாரதிக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு என்றெல்லாம்…
நிலமகள் வானின் உச்சிக்கு வந்து மானிடன் சீட்டுக்கட்டென அடுக்கி வைத்திருந்த அடுக்குமாடி கட்டடங்களின் மேல் தன் ஒளியை வீசி ப்ரகாஷிக்கச் செய்து கொண்டிருந்தாள்.
சந்திரன் என்றாலே சாந்தம். அமைதி… குளுமை… அழகு… இது மட்டும் தான் நினைவு வரும். ஆனால் நிலவு தம்மிடம் காட்டும் அந்தக் குளுமைக்குப் பின் அதன் மேல் படும் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது நிலவின் மேல் புறத்தின் வெப்ப நிலை 127 டிகிரி செல்சியஸ். ஆனாலும் நமக்கு அது குளிர்ச்சியாகத்தான் தெரிகிறது அல்லவா.
அதுபோல் தான் பாரதி. பார்ப்பவர்களுக்கு அமைதியாக நிதானமாக திடமாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், உள்ளம் நிலமகளுக்கு நிகராக கொதித்தது. ‘வேண்டாம்… பார்த்திபனின் மனைவியாக இருக்க வேண்டாம்… இது திருமணமே அல்ல. அவனைப் பிரிந்து செல்வது தான் நமக்கு நல்லது. அவன் யாரை விரும்புகிறோனோ அவனுடனேயே வாழட்டும்..’ என்றதொரு முடிவைக் கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.
எந்த நொடியில் பார்த்திபன் மீது காதல் வந்தது என்று அவளுக்கு இது நாள் தெரியாது. கண்டதும் காதல் இல்லை… ஈர்ப்பு கூட கிடையாது… ஆனால் சந்தித்தனர். மோதலில் தொடங்கிய இருவரின் பழக்கமும் நட்பாக, பின் அவளுக்கு மட்டும் காதலாக மாறி இப்போது திருமணம் வரை கொண்டு வந்து சேர்ந்துள்ளது. அவன் நட்பிலேயே நின்று விட்டான். இவளுக்கு தான் காதல். இதை மறைத்து கடந்து விட தான் நினைத்தாள். ஆனால் விதி, யாரை விட்டது.
நேரம் கடந்து கொண்டே செல்ல, ‘இனியும் யோசித்துக் கொண்டு நிற்பதில் பலன் இல்லை. பார்த்திபனிடம் பேசி தன் முடிவை சொல்லலாம்.’ என்று பார்த்திபனின் அறைக்குச் சென்றாள். அங்கு அறையோ! இருளில் மூழ்கி கிடந்தது.
ஸ்விச் போர்டைத் தேடி அவளின் கரம் சுவரைத் தடவியபடி ஊர்வலம் செல்ல, தட்டு தடுமாறி அதைக் கண்டு விளக்கை ஏற்றினாள். மருமகளாக பூஜை அறையில் ஏற்ற வேண்டிய விளக்கைத் தீப்பெட்டி இல்லாது மின்சாரத்தின் உதவியால் படுக்கை அறையில் ஏற்றினாள்.
கண்களைக் கூசச் செய்யும் அந்த விளக்கின் ஒளியில் அறை, பூ அலங்காரம் செய்யப்பட்ட தோரணங்களுடனும் காட்சி தந்தது.
உடன் மெத்தையும் இருந்தது.
“பார்த்தி…”
“பார்த்திபா. நீ ரூம்ல தான் இருக்கியா? பார்த்தி.. ” என மெதுவாக கேட்டபடி அடி மேல் அடி வைத்து அந்த அறைக்குள் நுழைந்தாள். காலையில் தாலி கட்டிய கணவனை மாலையில் தேடுகிறாள்.
ஆனால், அது அவளின் காதுகளைக் கூட சென்றடையவில்லை. அறை சற்று விசாலமாக இருந்தது. அதில் ஒரு மெத்தை. அது முழுவதும் பூக்களால் நிரம்பி இருந்தது. நடுவே இதய வடிவ சிவப்பு ரோஜாக்கள் இருக்க, மெத்தைப் பக்கத்தில் சிறிய மேஜை. அதில் பால் பழம் ஸ்வீட்ஸ் என முதலிரவுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட தன் அறிகுறிகளைக் காட்ட,
‘இப்ப இந்த அலங்காரம் எல்லாம் தேவ தானா.. யாரு பாத்த வேல இது.. ‘ என நினைத்தவள், அறையைச் சுற்றி தன் பார்வையல சுழல விட்டாள்.
ஒரு பால்கனி… ஒரே ஒரு பாத்ரூம்… சுவரில் பதித்த மூன்று கபோர்டு. அதே சுவரில் எல்ஈடி டீவி. அதில் ஏதோ ஆங்கில படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதுவும் சத்தமாக. நான்கு மூளையிலும் ஸ்பீக்கர் பாக்ஸ், டம் டம் என அதிரும் ஒலி கேட்டது. அது மட்டுமே இருந்தது.
ஒரு கட்டிலோ! சோஃபாவோ! ஏன் உடை மாற்ற சிறிய அறை கூட கிடையாது. சுவர் முழுவதும் விடலை பையன்கள் நடிகர்கள் மோகத்தில் அவர்களின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பார்களே! அது போல் பல மாடல் கார்கள், பைக்குகள் எனப் பல இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அவனின் ரசனையை எண்ணி அதிசயித்தபடி நடந்தவள் பால்கனியை நோக்கி சென்றாள். அது மிகவும் சிறியதாக காட்சி தந்தது. மூன்று பேர் நிற்கலாம் எனும் அளவுக்கு இருந்த அது இருளாக இருக்க, ஸ்விச் ஃபோர்டு எங்கே? என தெரியாததால் இருளில் நுழைந்து பார்த்திபனைத் தேடினாள்.
“பார்த்தி… இருக்கியா?” என மெல்ல கேட்க, அவளின் பக்கவாட்டில் சத்தம் கேட்டது, “ம்…” என.
சிறு பயம் உண்டாக வேகமாக திரும்பி பார்த்தாள். அந்த இருளில் பால்கனியின் பக்கவாட்டு சுவரில் கால்கள் இரண்டையும் வெளிப்புறமாக தொங்க விட்டபடி அமர்ந்திருந்தான் பார்த்திபன்.
“உஃப்.. நான் பயந்திட்டேன்.. ஏன் பார்த்தி பயமுறுத்துற?” எனக் கேட்டவள், அங்கிருந்த வெள்ளை பல்பிற்கு உயிர் கொடுக்க, பார்த்திபனின் கோலத்தைக் காண நேர்ந்தது.
காலையில் அணிந்திருந்த பட்டு வேட்டியே மாற்றி விட்டான் போலும். முட்டி தெரிய ஷாட்சும். தன் புஜங்களைக் காட்சிபடுத்தி உள் பனியுனுமாக அமர்ந்திருந்தான். ருத்ரமூர்த்தியாக…
கண்கள் சிவக்க கோபமாக அமர்ந்திருந்தவனின் அருகில் சென்று, “பார்த்தி..” என்றழைக்க, ‘பொறு….’ என்பது போல் கரம் உயர்த்தியவன். சுவற்றை விட்டிறங்கி அவளின் முன் குதித்தான். பின் தன் முன் நின்றவளை ஏற இறங்க பார்த்தான்.
“வாவ்… சகல அலங்காரத்தோட… போட்ட ப்ளான் கரெக்டா ஒர்கவுட் ஆகிடுச்சிங்கிற மிதப்புல ஃபர்ஸ்ட் நைட் கொண்டா வந்திருக்க?” எனக் கோபமாகவும் நக்கலாகவும் கேட்க,
” இல்ல… நானுமே இந்த கஷ்யாணத்த எதிர்பாக்கல.”
“I know….” எனக்கு உன்னைத் தெரியும் என்றவன்,
“பொய் சொல்றது உனக்கு ரொம்ப சகஜமான ஒன்னுன்னு நல்லாவே தெரியும். சொல்லு சொல்லு… இன்னும் எத்தன பொய் வேணும்னாலும் சொல்லு… ஏற்கனவே ஒருக்க ஏமாத்துனவனாச்சே. இளிச்சவாயன்… இந்த மொறையும் ஏமாத்திடலாம்… ஈசின்னு நினைச்சிட்ட.”
“ம்ச்… நான் உன்ன ஏமாத்தணும்னு நினச்சதே இல்ல பார்த்தி.”
“அப்ப ஏர்போர்ட்ல நடந்தது! அது ஏமாத்து வேல இல்லையா? இப்ப நடந்த கல்யாணம்! இது ஏமாத்து வேல இல்லையா? நீயும் உன்னோட ஃப்ரெண்டும் சேர்த்து போட்ட ப்ளான்.
எங்க ஃபேமிலி உன்னோட ஃப்ரெண்ட் பூஜா ஃபேமிலிய இன்சல்ட் பண்ணிட்டாங்கன்னு. அவளும் நீயும் சேந்து திட்டம் நல்லாத்தா போட்டிருங்கிங்க. எனக்கு தான் தெரியுமே!! உன்னோட ஃப்ரெண்டுக்காக என்ன வேணும்னாலும் செய்வன்னு.
பழி வாங்க எங்கூட பழகி. என்னை திட்டம் போட்டு ரிஜிஸ்டர் ஆஃபிஸ் வரவச்சி, நமக்கு கல்யாணம் ஆன மாதிரி செட்டப் பண்ணி… ச்ச… என்னோட கல்யாணத்த நிறுத்த காரணம் என்ன? ம்… இதுக்கு தான். இதுக்கு தான டி எல்லாம். ” எனச் சில அடி தூரம் தள்ளி நின்றவளின் முன் சில ரூபாய் நோட்டு கட்டுகளை வீசி பண மழையில் குளிக்க வைத்தவன்,
பெண்ணவள் கோபம் கொண்டு அவனை நோக்க, அதைக் கண்டு கொள்ளாது அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு இறுக அணைத்து கன்னியின் கழுத்தில் முகம் புதைத்தான்.
தோளுரசியிருக்கிறான். கரம் பற்றி இருக்கிறான். மற்றபடி அவளிடம் தோழமையை மட்டும் நாடியவன் முதல் முதலில் இடைவெளியே வெட்டி தள்ளிவிட்டு அவளின் அங்கங்கள் முழுதும் பதிய தன்னோடு சேர்த்தணைத்தான். உடல் ரெண்டு உரச அங்கு வேலை செய்ய வேண்டிய ஹார்மோன்கள் தூண்டப்பட்டிருக்க வேண்டும் இருவருக்கும்.
மங்கை ஆடவனின் கைக்குள் நெளிய, அவனின் கரம் இடையில் இருந்த சேலையை விலக்கி ஆடையற்ற பகுதியில் ஊர்ந்து இறுக்கி அணைத்துக் கொண்டது. அது காற்று புக முடியாத படி நங்கையை மார்போடு பிணைத்தது. அவன் கன்னங்கள் உணர்ந்த பெண்ணவனின் வெண்கழுத்தின் மென்மையும், அவளிடம் இருந்து வந்த பெண்மையின் சுகந்தமும் ஏதேதோ எண்ணங்களுக்கு இழுத்துச் செல்ல, அந்த கழுத்தில் அழுந்த முத்தமிட வைத்தது.
முதல் முத்தம்… அதை பெரும் பாக்கியம் அவளின் சங்கு கழுத்திற்கு தான் கிடைத்தது. சில நொடிகள் கழுத்தில் கவி பாடிய இதழ்கள் மெல்ல உயர்ந்து காது மடலை தொட்டு கன்னத்தில் ஊற, மங்கையின் அதரங்கள் அவனை பித்து பிடிக்க செய்தது.
நொடியும் தாமதிக்காது அந்த அதரங்களைச் சிறை செய்தான். பூவிற்கே தெரியாது தேனெடுக்கும் வண்டாய் சைவ முத்தத்தில் மென்மையாக ஆரம்பிக்க, நொடிகள் நகர நகர, ஆழ் துளை கிணற்றில் இருந்து உறிஞ்ச படும் நீர் போல் வேகத்தைக் கூட்டி வன்முறையில் இறங்கியிருந்தான். அதைப் பாரதியின் மெல்லிய இதழ்கள் தாங்கவில்லை.
அவன் அணைக்கவும் அவளுக்கு எல்லாம் மறந்தது. தான் யார் என்றே தெரியாத புது பிறவியை எடுத்தார் போல் உணர்ந்தவளின் பூ உதடுகளில் உண்டான வலி நிகழ் உலகிற்கு இழுத்து வந்தது.
ம்… ம்… என்ற சத்தத்துடன் அவள் தன் உடலில் இருந்து அவனைப் பிரிக்க முயற்சிக்க, அது ஆடவனின் வேகத்தைக் கூட்டியது. உனை விட மாட்டேன் என்பது போல் இதழ்களை சுவைத்தவன், அடுத்ததாக பெண்ணவளின் மென்மையை சோதிக்க கரம் நகர்த்த,
எங்கிருந்து வந்ததோ பலம். தீச் சுட்டது போல் அவனை உதறித் தள்ளி கன்னம் பழுக்க ஓர் அறை அறைந்தாள் பெண்.