Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 09

 

உந்தன் அப்பா
என்ற வார்த்தையிலே
மறுஜென்மம் எடுத்ததை
உணர்கிறேன் கண்மணி ???….!!!!

தனது தந்தை அடித்ததை கூட நம்ப முடியாமல் இருந்த கீர்த்திக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…

இது நாள்வரை தன்னை அடித்தது ஏன் அதட்டி கூட பார்க்காத தந்தை இன்று கையோங்கியுள்ளார் என்பதை அவள் கண்ணித்தின் வலி மூலம் உணர்ந்தது…



Advertisement

அப்பா என்று கண்ணீர் மல்க கூறியவளை கண்டு கை நிமிற்த்தி அப்படி கூப்பிடாதே என்று சைகை செய்தார்.

இனி உனக்கு என்ன அப்பான்னு கூப்பிடுற அறுகதை இல்ல .எனக்கு இனி ஒரு பொண்ணு மட்டும் தான் அதுவும் விஷ்ணு மட்டும் தான் என்று கூறிவிட்டு பாதி சாப்பாட்டிலே கை கழுவி விட்டு சென்றுவிட்டார் கோபத்துடனே. அவர் பின்னாடியே ஜெயந்தியும் சமாதான செய்ய சென்றுவிட்டார்.

இதை கேட்டவள் அப்படியே அந்த இடத்திலே உறைந்து போய் நின்றாள்.. அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் விஷ்ணு..

Advertisement

அழுதுகொண்டே இருந்தவள் கையை கழுவிட்டு அவளது அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டு அழத் தொடங்கினாள்…

Advertisement

ஏங்க இப்படி பண்ணீங்க பாவம்ங்க நம்ம பொண்ணு என்று ஜெயந்தி அவளுக்காக தன் கணவரிடம் பேச உனக்கு தான் தெரியும்ல ஜெயந்தி நம்ம பையனோட இறப்புக்கு காரணம் யாருன்னு அவனோட பையனையே இவ விரும்புறா அவனோட அப்பா என்னோட தங்கச்சிய ஏமாத்துனான் இப்போ அவனோட பையன் என்று வார்த்தை வராமல் தடுமாறியது.

நம்ம பொண்ணு அப்படி எதுவும் பண்ண மாட்டாங்க என்று அவளுக்கு துணை பேச எனக்கு இந்த விஷயம் காது கிட்ட வரும்போது நானும் நம்பல டி அப்புறம் ரெண்டு நாளைக்கு முன்னாடி நானே என் கண்ணு முன்னாடி பாத்தேன் டி அதான் என்னால தாங்க முடியாம நம்ம புள்ளைய அடிச்சுட்டேன் என்றார்.

தான் என்ன தவறு செய்தோம் என்று தெரியாமலே அழுதவளுக்கு எங்கு தெரிய போகுது ஒருநாள் இல்லை ஒருநாள் தன்னால் தான் தன் குடும்பம் மானமே போக போகுது என்று…

Advertisement

[the_ad id=”6605″]

விடிய காலையில் ரயில் கோவையில் வந்து நிற்க..,,அதன் இயற்கையான சுவாசத்தை உணர்ந்து கொண்டே தன் காலடியை கோவையில் வைத்தாள். அவள் பின்னாடியே ஜீவாவும் தன் உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு இறங்கினான்…

உதயும் இரண்டு மணிநேரம் பயணத்தை எடுத்து கோவையில் வந்து விட ஏர்போர்ட்டிலிருந்து வேகமாக எல்லாம் வேலையையும் முடித்து விட்டு தனக்காக வரப் பட்ட காரில் ஏறி சென்றான்…

ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி  நின்றிருந்தவர்களின் முன்பு ஒரு கார் வேகமாக வந்து நிற்க அதை கண்ட நந்தினிக்கு சிறிது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது…

அதை கண்ட ஜீவா பதற என்ன ஆச்சி அம்மு எதுக்கு இப்படி உனக்கு மூச்சு வாங்குவது என்று கேட்க அவளிடம் தண்ணீர் ஒரு கரம் நீட்ட அதை வேகமாக குடித்த பின்பு தான் அதை யார் குடுத்தது என்று தலையை நிமிர்த்தி நோக்க அங்கே இறுகிய முகத்துடன் நின்றிருந்தான் உதய் என்னும் உதய் கிருஷ்ணன்…

அவனை கண்ட அவளுக்கு குடித்த தண்ணீர் அனைத்தும் கொப்பளித்து விடும் போல் இருந்தது…

இப்ப உனக்கு எதுக்கு இப்படி மூச்சு வாங்குது என்று அவன் அவள் முன் நின்று கொண்டு உரிமையுடன் கேட்க..

இடையில் குறிக்கிட்ட ஜீவா யார் சார் நீங்க..??நீங்க பாட்டுக்கு கார்ர இப்படி வேகமாக கொண்டு வந்து நிறுத்தினா யார் தான் பயப்படாம இருப்பாங்க சொல்லுங்க.. ஏதோ உங்க பொண்டாட்டி மாதிரி அவ கிட்ட இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க என்று எகிறியவனை அமைதியாக்கினாள் அவனது அம்மு…

நந்தினியை பார்த்து சரி ரெண்டு பேரும் கார்ல ஏறுங்க என்று கூற நாங்க எதுக்கு ஏறனும் நீங்க யாரு மொதல எங்கள ஏற சொல்ல என்று கோபமாக கேட்பவனிடம் எந்த பதிலும் சொல்லாமல் நந்தினியை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருக்க உதய்யை காணாது ஜீவாவிடம் திரும்பி இவர் தான் உதய் இவரோட அம்மாவுக்கு தான் ஹெல்ப் பண்ண போறேன் என்று கூறினாள்…

சார் நாங்க ரெண்டு பேரும் பஸ்லயே வரோம் என்றாள் நந்தினி.. அவன் பதில் கூற வருவதற்குள் சுமியிடமிருந்து அழைப்பு வர அதனை ஏற்றவன் நந்தினியை பார்த்தபடியே சுமியிடம் பேசினான்…

நந்தினியின் மனதில் சுமியின் பெயரை கேட்டதும் அவள் சிறு வயதில் தனக்கு உதவி செய்த சுமியின் ஞாபகம் தான் வந்தது அதே நேரத்தில் கிருஷின் மீது வைத்திருந்த வெறுப்பும் சேர்ந்து வெளிப்பட்டது….

பேசி முடித்தவன் இருவரும் அதே நிலையில் நிற்பதை கண்டு சிறிது கோப முற்றவன் இருவரையும் அமர சொல்லிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்…

அவன் கோபமாக சொல்லவும் இருவரும் அமர வண்டி நேராக ஊட்டியை நோக்கி சென்றது…

[the_ad id=”6605″]

ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த நந்தினி இயற்கையின் அழகில் மெய் மறந்து பார்த்து கொண்டு இருக்க அவளை உதய் மெய் மறந்து கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு வந்தான்…

சாலையின் ஓரத்தில் குரங்குகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தது.. இயற்கையின் வலம் மிகுந்து இருந்தது எங்கு பார்த்தாலும் பச்சை பசை என்று மரங்கள் செடி கொடிகள் அதை விட டீ செடிகள் அங்கு அதிகம் காணப்பட்டன.அதை கண்ட அவளுக்கு அவள் மனதில் இருந்த அனைத்து கவலைகளும் பறந்து மனது நிம்மதியாக உணர்ந்தது..

மலைகளின் நடுவே பாலம் கட்டி அதில் ஊஹூ ஊஹூ என்ற சத்தத்துடன் ஊட்டி இரயில் சென்று கொண்டிருந்ததை கண்ட நந்தினிக்கு அதில் செல்ல வேண்டும் போன்ற ஆசை எழுந்தது..

சிறிது நேரத்திலே மலைகளின் ராணியான ஊட்டிக்கு கார் வந்து சேர்ந்தது…

இருவரையும் அழைத்துக்கொண்டு அவர்களது‌ வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..அங்கே சென்று பார்த்தால் இயற்கையின் நடுவில் அமைந்திருந்தது அந்த மாளிகை. வீட்டியை சுற்றிலும் மரங்கள் வீட்டின் முன் பாகத்தில் சிறிய கார்டன் அமைக்கப்பட்டு இருந்தது.

உதயின் கார் சத்தத்தை கேட்ட அனைவரும் வெளியே வந்தனர். முதலில் உதய் இறங்க அவனுக்கு பின்னே அவர்கள் இருவரும் இறங்கி அவனை தொடர்ந்து நடக்க தொடங்கினர்.

நந்தினியை கண்ட மித்ராவுக்கு சந்தோஷமாக இருந்தது. அதை எதுவும் காட்டிக்கொள்ளாமல் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த உதயை வேகமாக ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

ஏனோ இதனை கண்ட நந்தினிக்கு ஒரு மாதிரியாக இருக்க அவள் அங்குள்ள தோட்டத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.ஜீவா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்…

மித்ராவே உதயிடமிருந்து ஐ மிஸ்ட் யூ சோ மச் டா உதய் என்று கூற அதற்கு அவனும் நந்தினியை ஓரக் கண்ணால் பார்த்த படி ஐ டூ மிஸ்ட் யூ சோ மச் என்று கூறி உள்ளே அழைத்து சென்றான்.

உதயின் அம்மா மரகதம் அவர்களை வெளியவே நிற்க வைத்து சுந்தரியிடம் ஏதேதோ கூறி அவளை அனுப்பி வைத்தாள். சுந்தரியும் மரகதம் கூறிய படியே ஆர்த்தி தட்டுடன் வர அவரை அண்டு குழம்பி தான் போனால் நந்தினி. இதை எதையும் ஜீவா கண்டு கொள்ள வில்லை.

போ சுந்தரி போய் புள்ளைங்களுக்கு ஆர்த்தி எடு என்று கட்டளையிட சுந்தரியும் மரகதம் கூறியது போலவே ஆர்த்தி எடுத்தார்..

பின்பு உதய் தன் அன்னையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு அவர்களது வீல் ஷாரை தள்ளிக்கொண்டு ஹாலிற்கு வந்தான்..

மஹாலிங்கம் ஜான்வியை தூக்கிக் கொண்டு வர..,,தன் தந்தையை கண்ட குழந்தை அப்பா என்று கூவலுடன் தன் தாத்தாவை விட்டு தன் தந்தையிடம் தாவியது அந்த இரண்டு வயது குழந்தை…

குழந்தையை கொஞ்சியவனை முறைத்துக் கொண்டு இருந்தாள் மித்ரா..ஏன்டா உனக்கு இந்த வேலை இப்படி இந்த அசிங்கத்தை கொஞ்சிட்டு கிடக்கிற அறிவில உனக்கு என்று அவனை திட்ட அதற்கு கூலாக ஜான்வி என்னோட குழந்தை என்றான் தீர்க்கமாக அதில் என்னோட குழந்தை என்று அழுத்தி கூறினான்…

நந்தினியை கண்ட குழந்தை அம்மா என்று கூறி புன்னகைக்க அவள் யாரையோ கூறுகிறாள் என்று நினைத்த நந்தினிக்கு அடுத்த நொடி தன் கால்களை பிடித்து அம்மா என்று கூறிய ஜான்வியை கண்டு அதிர்வுற்றாள்…

கார்த்திக் மற்றும் வெங்கட் இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.. ஒருவாரம் அவர்கள் இருந்த சூழ்நிலைக்கு ஏன் தான் மீண்டும் இங்கு வந்தோம் என்றிருந்தது அவர்கள் இருவருக்கும்… இருவரும் அவர் அவர்களது வீட்டிற்கு சென்று ரெஸ்ட் எடுத்தனர்…

ராஜிவ் தன் தந்தையை காண ஊட்டி வந்தவன் அவனது வீட்டிற்கு சென்று சிறிது நேரம் உறங்கியவன் பின்னர் குளித்து முடித்துவிட்டு தன் தந்தையை காண சென்றான்…

தன் இரு சக்கர வாகனத்தில் சென்றவன்..,,ஒரு காட்டு பாதைக்குள் தன் வண்டியை விட்டான்..

சிறிது வண்டியை ஓரமாக நிறுத்தியவன் ‌,,அதன் பிறகு நடந்து சென்று அடர்ந்த பகுதியில் மரத்தினால் செய்யப்பட்ட வீட்டை நோக்கி சென்றான்…

அங்கே சென்றவன் அவனிடம் இருந்த சாவியை கொண்டு திறந்து உள்ளே சென்றான்..

தன் தந்தையை கண்டவன் ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான்… அவரும் தன் மகனை அணைத்துக் கொள்ள..,,நல விசாரிப்புகள் முடிந்தவுடன் ராஜிவ்வின் தந்தை அவனை பார்த்து சொன்ன வேலைய முடிச்சிட்டியா என்று எதையோ எதிர்பார்த்து கேட்க இன்னும் இல்ல பா என்றான் .அதனை கேட்ட அவனிற்கு கோபமாக வர ராஜிவ்வின் கண்ணத்தில் பலார் அடிக்க பக்கத்தில் இருந்த வௌவால்கள் எல்லாம் கத்த தொடங்கின…

நான் சொன்ன வேலைய முடிச்சிட்டு வரதுன்னா என்ன பாக்க வா இல்லனா உன்னோட அப்பா செத்துட்டாருன்னு நினச்சிக்கோ என்றார்..

அப்பா இப்படிலாம் பேசாதீங்க என்க நீ இப்போ இந்த இடத்தை விட்டு கிளம்பு எப்போ நான் சொன்ன வேலைய முடிக்கிறியோ அப்ப இந்த அப்பன்ன தேடி வா என்று கூறிவிட்டு அறைக்கு சென்று கதவை சாற்றி விட்டார். அவனும் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.

நந்தினி செய்வதறியாது நிற்க குழந்தையை தூக்கியவள் சாதர்னமாக பேச உதயே அவளிடம் சென்று குழந்தையை வாங்கியவன் அவ ஏதோ தெரியாம சொல்லிட்டா அத பெருசா எடுக்காத என்று கூறி அதோ அது தான் உனக்கான அறை போய் ரெஸ்ட் எடு என்று கூறிவிட்டு விருட்டென்று சென்றுவிட்டான் அறைக்கு…

நந்தினிக்கு இதெல்லாம் வினோதமாக இருந்தது. ஆனாலும் அதை பெரிது படுத்த விரும்பாலும் அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்று ஓய்வெடுக்க தொடங்கினாள்..

தன் மொபைலில் இருந்த நந்தினியின் புகைப்படத்தை தேட அது காணாமல் போக சூர்யா உள்ளுக்குள்ளே கதறினான்.தன்னை விட்டு வெகு தூரம் போனதை போல் தோன்ற தன் உயிரை தன்னை விட்டு சென்றது போல் ஒரு உணர்வு அவனுள் ஏற்பட்டது…

?????????????

Stay tuned…✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!