Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 12

உயிர் தீண்டும்
உன் நினைவை
கொண்டே
என் வாழ்வு
அமைந்துள்ளது…?????

    கோவை வந்த சூர்யா நேராக ஜீவா படிக்கும் கல்லூரிக்கு சென்று அவனது விடுதிக்கு சென்றான்.

அங்கே சென்றவன் அவனது பெயரை கூறிவிட்டு அவனுக்காக காத்திருக்க ஜீவாவும் வேகமாக சூர்யாவை காண வந்தான்..

ஹே சூர்யா அண்ணா வாட் ஏ‌ சப்ரைஸ் என்ன பாக்க இவ்வளோ தூரம் வந்திருக்கியா என்றே அவனை பார்த்து கேட்க சூர்யாவோ மனதில் இவரு பெரிய ஆள்ளு இவர பாக்க நான் வரேன்னா என்னோட கிட்ட இருந்து பிரிச்ச எமன் தான டா நீ என்று நினைத்தவன் வெளியில் இல்ல டா ஒரு வேலை விஷயமா வந்தேன் அதான் உன்னையும் நந்தினியையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்றான்..



Advertisement

விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் ட டே என்க சூர்யா அவனது வாழ்த்துக்களை ஏற்று அதற்கு நன்றி தெரிவித்தான்.

சரி டா அண்ணா எப்படி இருக்க அப்பா கவி சுஜி எல்லாம் எப்படி இருக்காங்க என்றே வினவிட எல்லாரும் நல்லா இருக்காங்க டா என்றவன் ஏன் ஜீவா அம்மா எப்படி இருக்காங்கன்னு கேட்ட மாட்டியா என்க அவுங்க இப்போ ரொம்ப சந்தோஷமா தான் இருப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் சூர்யா அதான் கேக்கல என்றே முடித்தான்..

சரி டா சீக்கிரம் கிளம்பி வா நாம போய் நந்தினிய பாத்துட்டு வரலாம் என்க அவனும் சரி என்று கூறிவிட்டு கிளம்ப சென்றான்.

Advertisement

பத்து நிமிடத்தில் வெளியே வந்தவன் கேப் புக் செய்து காத்திருக்க அது வரவும் இருவரும் அதில் ஏறி சென்றனர்..

Advertisement

உதகமண்டலம் வந்த இருவரும் ஒரு உணவகத்துக்கு சென்று சாப்பிட்டு விட்டு அவளுக்கு பிடித்தமான சாக்லெட் வாங்கி வர ஜீவா மட்டும் ஜான்வி குட்டிக்காக டாய் வாங்கி வந்தான்.

இருவரும் நந்தினி தங்கி இருக்கும் உதயின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கே நந்தினி ஜான்வி குட்டியை விளையாட்டு காட்டிக் கொண்டே உணவு ஊட்டிக் கொண்டு இருந்தாள்..

Advertisement

அம்மா போதும் என்று ஜான்வி கூற ஜானு குட்டி என் தங்கம் தான ஒரே ஒரு வாய் சாப்பிடுங்க பாக்கலாம் என்று ஊட்ட வாய் வரை வர ம்ம்ஹூம் என்று தலையை திருப்பி காட்டினாள்..

[the_ad id=”6605″]

இதனை கண்ட நந்தினி அவளை போலவே நீ சாப்பிடலல போ ஜானு மா மீ கோவம் என்று அவளும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

தன் அம்மாவின் பாரா முகத்தை பார்க்க முடியாத ஜான்வி தன் பிஞ்சு கைகளை கொண்டு அவளது தாடையை பிடித்து அவளை திருப்ப முற்பட இதை எதிர்பார்த்த நந்தினி மேலும் முகத்தை திருப்ப முயல அம்மா ஆஆஆ வாயை பிளந்து காட்ட அதை கண்ட நந்தினி சிரித்த முகமாக அவளுக்கு ஊட்டி விட்டாள்..

இதை எல்லாம் எஸ்டேட் செல்லவதற்காக வெளியே வந்த உதய் பார்த்து சிரிக்க மனதிலோ சாப்பிட அடம்பிடிக்கிற என் பொண்ணையே சாப்பிட வச்சிட்டியே கில்லாடி தான் நீ என்று நினைத்தவன் கீழே சென்றான்..

தினமும் எஸ்டேட் கிளம்பும்போது ஜான்விக்கு முத்தம் கொடுக்கும் பழக்கம் உள்ளவன் அவளிடம் வந்தவன் ஜானு குட்டி என்றான்.

அப்பா என்று நந்தினி மடியில் இருந்து ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் அவனும் அவள் உயரத்திற்கு குணிந்து நின்றான்..

ஜானு குட்டியை தூக்கியவன் நந்து பக்கத்தில் வந்து நின்று ஜானுவுடன் பேசத் தொடங்கினான்.

ஜானு குட்டி சாப்பிட்டிங்க போல என்றே ஜானுவின் கேள்வி கேட்டாலும் நந்தினியை பார்த்திருந்தான்.

ஆமா அப்பா அம்மா சோறு உட்டுச்சி வைது புல் என்றாள் அந்த பிஞ்சு விரல்களால் வயிற்றை பிடித்து காட்டினாள்.

பாப்பு குட்டி ஃபுல்லா சாப்பிட்டாச்சா இப்படி தான் இருக்கனும் குட் கேர்ல்லா என்றவன் அவளின் பிஞ்சு நெற்றியில் முத்தமிட்டான்..

அப்பா மீ குட் கேர்ள் தான் அம்மா தான் ஊத்தி விட்டாங்க அம்மாக்கு எனக்கு குடுத்த மாதிரியே குதுங்க பா அவுங்க தான் ஊத்தி வித்தாங்க என்று குழந்தை அதை இருவரும் அதிர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள ஜான்வி அடம் பிடிக்க தொடங்கினாள்.

ஜானு குட்டி இதெல்லாம் தப்பு டா அப்பாவால உனக்கு மட்டும் தான் தர முடியும் அம்மாக்கு தர முடியாது சரியா புரிஞ்சுகோ டா மா என்று அவளது தாடையை பிடித்து கெஞ்ச

இல்ல இல்ல எனக்கு கொடுத்த மாதிரி அம்மாக்கு குதுங்க என்று அடம்பிடிக்க அவளை கட்டுப் படுத்த முடியாமல் போனதால் நந்தினியிடம் வந்தவன் அவளை நெருங்க அவள் பின்னே அடி எடுத்து வைக்க அவனும் அவளை தொடர்ந்தே முன்னேறி சென்று அவளது கைகளை மென்மையாக பிடித்தவன் சாரி நந்தினி என்று மனதிலும் அவனது அறையில் வீற்றிருக்கும் அவனது இதயராணியிடமும் மன்னிப்பை வேண்டியவன் அவளது நெற்றியில் பட்டும் படாமலும் இதழை ஒற்றி எடுத்தான்.

நந்தினி சிலை போல் நின்றாள் அவனது பரிசம் பட்டு . அவனோ சாதரனமாக அவளை விடுத்து ஜானுவுடம் விளையாட தொடங்கினான்..

[the_ad id=”6605″]

மரகதம் சுமதியிடம் கூறி வரமிளகாய் எடுத்து வர சொல்ல அவளும் எடுத்து வந்து கொடுக்க அவர்கள் இருவரையும் நொக்கி வந்த மரகதம்  மூணு பேரும் இங்க வாங்க என்றே அழைக்க அவர்களும் மரகதத்தின் பக்கத்தில் வந்து நின்றனர்.

மூவரையும் ஒன்றாக நிற்க சொல்ல நந்தினி தான் எதுக்கு அம்மா எங்க மூணு பேரையும் ஒன்னா நிக்க சொல்றீங்க என்றே கேட்டிட அவரோ உங்களுக்கு சுத்தி போட தான் என்றார்..

உதயும் நந்தினியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள உதய் தான் எதுக்கு மா இதெல்லாம் என்க நீ சும்மா இரு டா உனக்கு எதுவும் தெரியாது மூணு பேரும் ஒன்னா நில்லுங்க எல்லார் கண்ணும் உங்க மேல தான் இருக்கும் என்று கூறி அவர்களை அதட்டி ஒன்னா நிற்க வைத்து சுமதியிடம் சொல்லி சுத்தி போட சொல்ல அவளும் இன்முகத்துடன் அவர்களுக்கு சுத்தி போட்டனர்.

அதே நேரம் சூர்யாவை அழைத்துக்கொண்டு ஜீவா உள்ளே வந்தான். இதை அனைத்தையும் காண வில்லை என்றாலும் சுத்தி போடுவதை சூர்யா தன் இரு கண்களாலும் கண்டவனின் இதயம் சுக்குநூறாக உடைவது போல் இருந்தது ‌…

ஜீவாவின் அம்மு என்ற குரல் கேட்க திரும்பி பார்த்த நந்தினியின் கண்களில் அவ்வளவு சந்தோஷம் இருந்திருந்தது..

 

[the_ad id=”6605″]

 

அவனை கண்டவள் அவனை நோக்கி செல்ல பார்க்க கைகளை யாரோ பிடித்திருப்பது தெரியவர பின்னாடி திரும்பி பார்க்க அவளின் கைகள் உதயின் கைகளில் அடங்கி இருந்தது.. அவளது பார்வை சென்ற இடத்தை உதய் காண உடனே சாரி கூறி அவளது கையை விட்டான்..

உடனே ஜீவாவிடம் செல்ல அப்போது அவன் பக்கத்தில் நின்ற சூர்யாவை காண வாங்க அத்தான் வா அப்பு என்று ஜீவாவின் கையை பிடித்து அழைத்து வந்தாள்..

இருவரும் உள்ளே வந்து சோஃபாவில் அமர ஜீவாவின் பக்கத்தில் அமர்ந்தாள் நந்தினி..

அத்தான் எப்படி இருக்கீங்க மாமா சுஜி கவி எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று கேட்க நானும் நல்லா இருக்கேன் அங்கையும் எல்லாரும் நல்லா இருக்காங்க நந்து என்றிட சரிங்க அத்தான் என்றவள் அத்தை எப்படி இருக்காங்க என்று மெதுவாக கேட்டிட அவுங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க என்றான்..

ஜீவாவோ நான் இருக்கிறது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாத என்று கேட்க ஏன் தெரியல நல்லா தான் தெரியுற என்று நக்கலாக கூற அவள் தலையில் ஒன்று போட்டவன் போ அம்மு எனக்கு என்னோட டார்லிங் போதும் என்று கூறி ஜான்விக்காக வாங்கிட்டு வந்த பொம்மையை அவளிடம் கொடுத்தான்.

அவளும் அதை வாங்கிக் கொண்டு தாங்க் யூ என்று விட்டு ஒரு முத்தத்தை பரிசாக வழங்கினாள்.

அப்போது தான் சூர்யா அந்த குழந்தையை கண்டான். அந்த குழந்தையை கண்டவனுக்கு ஏனோ இனம் புரியாத உணர்வு ஏற்பட அது என்னவென்று யோசிக்க தவறினான்.

அதன் பின் நந்தினி அனைவரையும் சூர்யாவுக்கு அறிமுக படுத்த அவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக அளித்தான்.

உதய்க்கு வெங்கட்டிடமிருந்து அழைப்பு வர உடனே ஜான்வியை நந்தினி கையில் ஒப்படைத்தவன் விட்டால் போதும் என்று வெளி வந்தான்.

நந்தினி உதய் போகும் வரை வாசலை கண்டவள் அதற்கு பிறகு இருவரிடமும் பேசி நேரத்தை கழித்தாள்…

சரி அப்போ நாங்க கிளம்புறோம் என்றே சூர்யா கூறி எந்திரிக்க அவனுடன் ஜீவாவும் நந்தினியும் எந்திரித்தனர்..

மரகதம் தான் முன்னே வந்து இன்னைக்கு இருந்துட்டு நாளைக்கு போகலாம்ல என்று கூற இல்ல மா வேலை இருக்கு சென்னை போகனும் இன்னொரு நாள் வரோம் மா என்றான்..

சரி பா இன்னொரு நாள் கண்டிப்பா வாங்க என்று கூறியவன் நந்தினிக்காக வாங்கி வந்த சாக்லேட்டை கொடுத்தான்.

அதை பெற்றுக் கொண்டவள் பதிலுக்கு புன்னகைத்தாள்.

அந்த நேரம் சுமி தன் காரை வேகமாக ஓட்டிக் வீட்டில் முன் நிறுத்தினாள்..

வண்டியில் இருந்து வேகமாக இறங்கியவள் தள்ளாடிய படியே வீட்டினுள் நுழைய அதே நேரம் சூர்யாவும் வெளியே வந்தான்.

கண் முன் தெரியாமல் குடித்திருந்ததால் முன் வருபவர்கள் தெரியாமல் போக சூர்யாவின் மீதே மோதி கீழே விழ போக அவளை கீழே விடாமல் பிடித்துக் கொண்டான்.

 

[the_ad id=”6605″]

 

சுமி கண் சிமிட்டி சிமிட்டி பார்க்க அவளை நிமிர்ந்து நிற்க வைத்தவன் அப்போது தான் அவளை முழுவதுமாக பார்த்து சுமி என்று அழைக்க அவளுக்கு கண் மங்கலாக தெரிந்தாலும் சூர்யா என்று உச்சரித்தாள்.

சுமி அவனிடம் நெருங்கி அடுத்த நொடி அவனிடமிருந்து தள்ளி நின்றவள் கை நீட்டிட அவன் கை கொடுக்காமல் அவளையே பார்க்க அவளோ கைக் கொடு சூர்யா என்றதும் அவனது கரத்தை அவளுடன் சேர்க்க உடனே சுமி விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே என்று அவனை அணைத்தாள் .

நந்தினிக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்று எப்படி இதை மறந்தோம் என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

அங்கே இருந்த அனைவர்களும் பார்வையாளராக இருக்க சுமிக்கு எப்படி இன்று அவனது பிறந்தநாள் என்று தெரியும் என்று யோசனையில் மூழ்கினர்.

சூர்யா நன்றி கூறுவதற்கு முன்பே அவனை விட்டு விலகிவயள் நிற்க தடுமாற அவளை பிடிக்க சென்றவன் அப்படி நின்று விட்டான்…

சுமியை உதய் தான் தாங்கி பிடித்து அவளை அவன் கை வலைக்குளே வைத்து சூர்யாவிடம் வந்து சாரி சூர்யா சுமி பண்ணது சாரி என்றவன் ஷீ இஸ் மை வைஃப் என்றான்.

ஆமா ஆமா என்னோட புருஷா தான் இவன் என்று அவனை மீறியும் தள்ளாட சாரி நான் போய் அவள ரூம்ல விட்டுட்டு வரேன் என்று கூறி அவளை அழைத்துக் சென்றான்

ம்ம்ஹ்ம் என்றவன் அதன் பின் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக அவர்கள் செல்லும் பாதையை பார்த்திருந்தான்.

நந்தினி அவன் அருகில் வந்து சாரி அத்தான் நான் எப்படி உங்க பிறந்தநாள மறந்தேன்னு தெரியல என்றவள் விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே என்று கை குழுக்கினாள் அவன் வெற்று புன்னகையை மட்டுமே புன்னகைத்தான்.

அதன் பின் அனைவரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவிக்க அனைத்து வாழ்த்துக்களையும் வாங்கியவன் ஜீவாவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான்….

இரவு எட்டு மணியாக இருக்க கேப் புக் செய்து கோவை சென்று ஜீவாவை விட்டவன் அங்கே பக்கத்தில் இருந்த லாட்ஜில் புக் செய்து தங்கினான்.

அவனின் மனதில் ஓராயிரம் கேள்விகள் ஓடின இரு பெண்களை பற்றியும்..ஏனோ விடை தெரியாமல் போக தூக்கத்தை துளைத்திருந்தான்.

அவன் தூக்கத்தை தொலைக்க இரு பெண்களும் அவனின்  தூக்கத்தையும் சேர்த்து தூங்கினர்…

தேடல் தொடரும்….??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!