Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 23

எந்தன் உடலும்
உயிரும் உனக்கே
சொந்தம் அடா❤️❤️…!!!!

        சுமி அறைக்குள் வந்தவள் இனி தன்னால் யாருக்கும் கஷ்டம் வர கூடாது என்று எண்ணியவள் மாலையில் ஜானு பற்றின தவறான வார்த்தைகள் நந்திக்கு உண்டாகியதை எண்ணி மனம் வருந்தி போனால்…

படுக்கையில் அமர்ந்தவள் ” இனி நானோ இல்ல உதயோ சூர்யா வாழ்க்கைக்கு இடையூறா இருக்க கூடாது .அது அவுங்க வாழ்க்கைக்கு நல்லது இல்ல. இனி எப்படி நடக்கப் போகுதோ அது அப்படியே நடக்கட்டும்..இனியாவது என் சூர்யா வாழ்க்கைல நந்தினி மட்டும் தான் இருக்கனும் அவ வாழ்க்கையிலயும் சூர்யா மட்டுமே இருக்கனும் அதுக்கு இது மட்டும் சரியான வழி ” என்று எண்ணியவள் அதற்கான வழியில் ஈடு பட தொடங்கி சிறிது நேரத்தில் கழித்து உறங்குவதற்காக கண்களை இறுக்க மூடிக்கொண்டாள் …

அவள் கண்ணுக்கு முன்பு லண்டனில் சூர்யாவுடன் இருந்த அந்த அழகிய தருணங்கள் எல்லாம் அவள் கண் முன் வந்து போனது….



Advertisement

ஊட்டியில்…..

நாம இப்போ என்ன பண்றது ஆதி ஒரு க்லு கிடைச்சா கூட போதும் நாம ஸ்ருதிய தேடி கண்டு பிடிச்சிடலாம் ஆனா நமக்கு தான் அவள ஏன் கடத்துனாங்க எதுக்காக கடத்துனாங்கனு ஒன்னுமே தெரிய மாட்டேங்கிதே இதுல இந்த சரவணன் வேற எங்க போனாருன்னே தெரியல இன்னும் அவர வேற காணோம் என்று உதய் சொல்ல….

ஆமா உதய் நேத்து கூட நானும் சரவணனும் இத பத்தி பேசிட்டு இருக்கும்போது சடர்ன்னா அவர் கோபமா பேசிட்டாரு .சரி இனி இத பத்தி பேச வேணாம்னு தான் அந்த நேரத்துல நான் வெளிய வந்துட்டேன் .அப்போ சரவணன்ன பார்த்தது தான் அதுக்கப்புறம் நான் அவர பாக்கவே இல்ல என்று ஆதி சொல்ல….

Advertisement

இப்போ என்ன தான் பண்றது அவ என்ன அண்ணா அண்ணான்னு சொல்றது என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு ஆதி. கடைசியா நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி கூட பாத்து பொய்ட்டு வாங்க அண்ணான்னு சொல்லி அனுப்பி வச்சா ஆனா நான் ஊருக்கு வந்ததுக்கப்புறம் என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கண்கள் கலங்கிட

Advertisement

சரி விடுங்க உதய் அந்த பொண்ண நாங்க கண்டிப்பா கண்டு பிடிச்சிடுவோம் என்றே ஆதி சொல்ல..

ஆனா ஆதி அன்னைக்கு பேசிட்டு இருக்கும்போது அண்ணா நீங்க ஊருக்கு பொயிட்டு வாங்க உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் அவ சொன்னா ஆதி ஆனா என்னென்னு தான் தெரியல என்று சொல்ல…

உங்களுக்கு தங்கச்சியா இருக்கும் போதே உங்களுக்கு இப்படி கண் கலங்குதே அப்போ எனக்கு எப்படி கண் கலங்கும்  சொல்லுங்க உதய் என்றே சரவணன் அங்கே வர….

Advertisement

என்ன சொல்றீங்க சரவணன் எங்களுக்கு ஒன்னுமே புரியல என்றே ஆதி கேட்க…

உங்க எல்லாத்துக்கும் நான் ஒரு கமிஷ்னர் சரவணன்னா தான் தெரியும் ஆனா அவளுக்கு மட்டும் தான் என்ன சரன்னா தெரியும் . அவளுக்கு எல்லாமே நான் தான் என்றான் சுவற்றை அடித்த படி….

அப்போ அவ என்கிட்ட சொல்லனும்னு சொன்ன விஷயம் நீங்க தான்னா என்றே சரவணனை பார்த்து கேட்க…

ஆமா அது நான் தான் அவ உங்க கிட்ட என்ன அறிமுக படுத்தனும்னு நினைச்சா ஆனா அதுக்குள்ள அவளால நாம ரெண்டு பேரும் அறிமுகம் ஆகிட்டோம் ஆனா இப்போ அவ நம்ம கூட இல்ல என்று சொல்லி நின்ற இடத்திலேயே அமர்ந்தபடி அழுகத் தொடங்கினான்…

[the_ad id=”6605″]

இங்க பாருங்க சரவணா கண்டிப்பா ஸ்ருத்திக்கா நம்மகிட்ட வந்து சேருவா நாம தான் ஹோப் ஃபுல்லா இருக்கனும்.அதுவும் நீங்க ரொம்ப தைரியமா இருக்கனும் உங்களோட தைரியம் தான் என் தங்கச்சியான அவளுக்கு தைரியமே என்று சொல்லி உதய் சரவணனனை தைரிய படுத்த அவனும் கண்ணீரை துடைத்துக் கொண்டு நீங்க சொல்றது உண்மை தான் நான் இனி எதுக்காகவும் கலங்க மாட்டேன் அவளுக்கு நான் தான் இருக்கேன் நானே இப்படி உடஞ்சி போய் இருந்தா அவ எப்படி தைரியமா இருப்பா என்றவன் அடுத்து பண்ண வேண்டிய வேலைகளை செய்ய ஆயத்தமானான்…

ஆதியும் உதய் நேரமாகவும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்..

சூர்யாவோ சந்தோஷத்தில் மிதந்தது கொண்டு இருந்தான். கங்காவிற்கு இது பிடிக்கவில்லை என்றாலும் சகித்துக் கொண்டு இருந்தாள்.

சுஜியும் கவியும் கூட சூர்யாவை போலவே சந்தோஷமாக இருந்தனர். ஏன்னென்றால் இனி நந்தினி எங்கேயும் செல்லமாட்டாள் தங்களுடனே இருப்பாள் என்றதே அவர்களது மகிழ்விற்க்கான காரணமாக இருந்தது…

ஜீவா மட்டுமே இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தான். அவனுக்கு யார் மேல் கோபப் படுவது என்றே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து இருந்தான்.

நந்தினி உறங்கி கொண்டு இருந்த நடு இரவாக இருந்த நேரம் அவளது அறை கதவை தானாக திறந்து கொள்ள அது திறந்த அடுத்த நொடி வெள்ளை புகை மூட்டங்கள் அவள் சுற்றியும் பரவிட நந்தினிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வேர்த்து கொட்டியது..

இதனால் சுவாசிக்க சிரம பட்டு இமைகளை பிரித்து பார்த்தாள் நந்தினி..

அவளுக்கு தான் இருப்பது வீடா அல்லது மேக கூட்டத்தின் நடுவில் இருக்கிறேனா என்றே சந்தேகம் எழும்ப வேர்வை துளிகள் அவள் நெற்றியில் இருந்து வழிந்து கண்ணத்தில் பட்டு தெரித்தது.

வேர்வை துளிகளை துடைத்தபடி எழுந்து அமர முயற்சி செய்ய அப்போதே அவளது கால்கள் பாரமாக இருப்பது போல் உணர்திட ” என்ன இது கால் ஏதோ பாரமா இருக்கிற மாதிரி இருக்கே ” என்று பக்கத்தில் இருந்த லைட் லம்பை ஆண் பண்ண முயற்சி செய்ய அது எரியாமல் போனது…

நந்தினி கால்களை நகர்த்த முயற்சி செய்ய அவளது கால்கள் ஈரமாக தொடங்கியது‌ சொட்டு சொட்டாக..

இதனை உணர்ந்த நந்தினி பயந்திட அந்த இருட்டறையில் என்ன செய்வது என்று தெரியாமல் வெடுக்கென காலை இழுத்திட அவள் கண்களுக்கு ஒரு உருவம் கட்டிலில் தலை சாய்த்து படுத்திருப்பது தெரிய வர பயத்தில் நடுங்கி போனாள்…

அந்த உருவம் மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்து நந்தினி எழுந்து அமர்ந்திருப்பதை கண்டு எழுந்து நிற்க…

அதை கண்ட நந்தினி கண்களை இறுக்க மூடிக் கொண்டு கிருஷ் கிருஷ் என்று பிதற்ற ஆரம்பித்தாள்….

அவளது பிதற்றலை கவனியாது அவள் பக்கத்தில் அமர்ந்த அந்த உருவம் நந்தினி என்றவாறு அவளின் கையின் மேல் கை வைக்க ஆஆஆ என்ன விட்டுட்டு என்ன ஒன்னும் பண்ணாத ப்ளிஸ் என்று கத்திட

ஹே நந்து மா சுமி தான் டா எதுக்கு இப்படி கத்துற நான் வந்து பார்த்தேன் நீ தூங்கிட்டு இருந்த அதுனால தான் அப்படியே படுத்துட்டேன் என்று சொல்ல

நந்துவோ அப்போதே அந்த உருவத்தை நன்றாக பார்த்தாள் அது சுமி தான் என்று தெரிந்தவுடன் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட தொடங்கினாள்…

நான் ரொம்பவே பயத்துடன் சுமி கா . இப்படியா என்ன பய மூற்த்துவ எனக்கு ஒரு நிமிஷம் உயிரே பொயிடுச்சி கா என்றே அழுக

அவளது அழுகை அதிகரிக்க இங்க பாரு நந்து அழுக இப்படிலாம் அழுக கூடாது சரியா .எதுக்கு இப்போ இப்படி அழுகிற அக்கா தெரியாம பண்ணிட்டேன் டா..இப்படி நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கும் ல என்று கூறிட…

அப்போ நான் அழ மாட்டேன் அக்கா..நீங்க ஃபீல் பண்ணாதீங்க சரியா என்றவள் கண்களை துடைத்துக் கொண்டாள்…

இப்படி தான் இருக்கனும் தட்ஸ் மை கேர்ள் என்று அவளை கட்டிலில் அமர வைத்தவள் அவளை பார்த்த படி எதிர் முனையில் அமர்ந்துக் கொண்டு ” நான் உன்கிட்ட முக்கியமான விசியம் பேசணும்னு தான் இங்க வந்தேன் நந்து மா ” என்க…

“சொல்லுங்க அக்கா ” என்று சுமியை பார்க்க…

[the_ad id=”6605″]

” இங்க பாரு நந்து அக்கா நாளைக்கு இந்த இடத்த விட்டு போக போறேன் .இனி நீ தான் எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்கணும் சரியா‌. உனக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம் நீ தான் என் பிரண்ட் சூர்யாவ நல்லா பாத்துக்கணும் சரியா..இப்படி சின்ன சின்ன விஷியத்துக்கலாம் பயந்து சாக கூடாது தைரியமா இருக்கனும் சரியா ” என்று அவள் கையை பிடித்த படியே பேச…

” அக்கா நாளைக்கு ஊருக்கு போறீங்களா அப்போ திரும்பி என்கிட்ட வருவீங்க..??? நான் கண்டிப்பா தைரியமா இருந்து எல்லாரையும் பாத்துக்கிறேன் அக்கா..நீங்க என்கூட இருக்கிற வரைக்கும் நான் தைரியமா இருப்பேன் கா.உங்கல பாத்து நான் இந்த கொஞ்ச நாளைல நிறைய விஷ்யம் கத்துட்டு இருந்திருக்கேன்னா அதெல்லாம் உங்களால மட்டும் தான் அக்கா என்று சொல்ல…

வெற்று புன்னகையை சிந்திய சுமி ” இனி என்னால உன்கூட இருக்க முடியாது டா ” என்று புன்னகை மாறாமல் சொல்ல…

அக்கா ஏன் அப்படி சொல்றீங்க…??நீங்க ஏன் கூட இருக்கணும் இப்படி அபசகுனமா பேசாதீங்க கா அப்புறம் நான் உங்க கிட்ட பேச மாட்டேன் என்று சிறு பிள்ளை போல் கோபித்துக் கொள்ள…

அடியேய் மங்கு நான் எப்படி டி உன்கூட இருக்க முடியும் நீ இனி சூர்யா கூட தான இருக்கனும் அப்புறம் என் பிரண்ட் என்ன கொண்னு போட்டுடுவான் பா என்றே சிரிக்க…

ஏனோ நந்தினியால் சிரிக்க முடியவில்லை அமைதியாகவே இருந்தாள்…

சரி நந்து மா நீ தூங்கு நான் போறேன் என்று எந்திரிச்சு போக…

அக்கா போறேன்னு சொல்லாதீங்க பொய்ட்டு வரேன்னு சொல்லுங்க அக்கா என்று திருத்தி சொல்ல….

இல்ல நந்து மா என்னால அப்படி சொல்ல முடியாது நான் வந்த வேல முடிஞ்சது நான் போகனும் போறேன் என்று சொல்லி நாலு அடி எடுத்து வைத்த பின் மாயமாக மறைந்தாள்….

தீடிரென்று நந்தினி தூக்கத்தில் சுமி அக்கா என்றவாறு எழுந்து அமர்ந்தாள். அவளது ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று கூட யூகிக்க முடியவில்லை.. மூச்சு காற்றை சீர் படுத்த பக்கத்தில் இருந்த ஜக்கை எடுத்து தண்ணீர் குடித்தால்.‌அதன் பிறகே சிறிது மூச்சு விட முடிந்தது…

ஆனாலும் அவள் காதனில் கனவில் இறுதியாக சுமி கூறிச் சென்ற “நான் வந்த வேல முடிஞ்சது நான் போகனும் போறேன்” அந்த வார்த்தைகளே அவள் செவியினுல் கேட்க நந்தினிக்கு பயம் அதிகரித்தது…

என்ன நினைத்தாலோ வேகமாக எழுந்து சுமியின் அறைக்கு அரக்க பறக்க ஓடினாள்…

அதே நேரம் அங்கே சுமி அறையில் சூர்யாவின் புகைப்படத்தை கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டு இருந்தாள் நிம்மதியாக….

வேகமாக வந்த நந்தினி சுமி அக்கா..!!!அக்கா என்று அவளை தொட சுமியின் உடலோ சில்லென்று இருந்தது…

சில்லென்று இருக்கவும் பயந்து போனவள் அக்கா அக்கா என்று அவளை உழுக்க அப்படி கட்டிலில் சரிந்தவளின் வாயில் இருந்து நுரையாக வரத் தொடங்கியது….

இதனை கண்ட சுமி கீழே கடந்த பாட்டில்லை எடுத்து பார்த்தவள் சுமி அக்கா என்று அந்த வீடே அதிரும் படி கத்த….

நந்தினியின் சத்தத்தில் உறங்கிக் கொண்டு இருந்த ஜீவா மற்றும் ஹரி என இருவரும் பதறியடித்த படி எழுந்து நந்தினியின் கதறல் வந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்….

இருவரும் சுமியின் அறைக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்…

சுமி அக்கா இருவரும் கத்த ரெண்டு பேரும் இங்க பாருங்க டா அக்கா எந்திரிக்க மாட்டேங்கிறாங்க என்று கூறி நந்தினி அழுக…

[the_ad id=”6605″]

முதலில் சுதாரித்த ஜீவா அம்மு சுமி மேடமோட ஹார்ட் பீட் செக் பண்ணு என்று சொல்ல…

உடனே எழுந்த நந்தினி சுமியின் வலது கையை பிடித்து செக் செய்து பார்க்க இதயம் துடித்துக் கொண்டு இருந்தது….

ஜீவா ஹார்ட் பீட் இருக்கு அப்போ வேகமா சுமி அக்கா வ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் என்று சொல்ல…

ஜீவா நீ சுமி அக்காவ தூக்கிட்டு வா நான் போய் கார் எடுத்துட்டு வரேன் சொல்லி ஹரி செல்ல…

மூவரும் சுமியை அழைத்துச் சென்று தீவிர சிகிச்சையில் சேர்த்தனர்….

ஹரியின் உதவியால் சுமியின் நிலையை உதய்க்கும் மஹாலிங்கத்திற்கும் சொல்ல இருவரும் பதறியடித்து ஊட்டியில் இருந்து கிளம்பினர்…..

~தேடல் தொடரும்….????

???????????????????????

Stay tuned…..✌️✌️✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!