Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 38

?காற்பதனிக்குள்ளே
ஒரு பூவை
போலே வாழ்ந்தேன்
மிச்சம் மீதி வாழ
நான் வீதி வந்தேனே

வத்தி பெட்டிக்குள்ளே
ஒரு வானம் இங்கு கண்டேன்
தோசை கல்லின் மேலே
நான் பாசம் கண்டேனே?

கார் நேராக ஏர்போர்ட் நோக்கி சென்று கொண்டிருக்க உதய் அமைதியாக எதையோ வெறித்த படியே அமர்ந்திருந்தான்.

அவனின் இந்த அமைதி நந்தினிக்குள் ஏதேதோ பயத்தை ஊற்றெடுக்க மெதுவாக அவனது கைகளை பற்றிக் கொண்டு ” உதய் சார் ” என்றழைக்க



Advertisement

தாயை கண்ட சேய்யை போல் அவளின் மடியில் படுத்து அழுகத்‌ தொடங்கினான்.

அவனின் அழுகையை காணப் பொறுக்காத நந்தினி ” சார் அழுகாதிங்க நம்ப ஜானு குட்டி நம்ம கிட்ட கண்டிப்பா வந்து சேறுவா . எங்க அத்த பேசினதெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க சார் ப்ளிஸ் ” என்று அவனை சமாதான படுத்த முயல

அவனோ அமைதியாக அவள் மடியில் படுத்தே இருந்தான்.

Advertisement

” சார் நீங்க இப்படி அழுத்துக்கிட்டே இருந்தா அப்புறம் நானும் அழுவேன் ” என்று உதட்டை பிதுக்கி சொல்ல

Advertisement

உதய் அவள் மடியில் இருந்து எழுந்தவன் ” நீ எதுக்கு அழுகனும் தினு மா ” என்று கேட்டு அவளை பார்க்க..

” எனக்கு பிடிச்சவுங்க கஷ்டப்பட்டாலோ என் கண்ணு முன்னாடி அவுங்க அழுதாலோ நானும் அழுவேன் ” என்றாள்.

” உனக்கு என்ன பிடிக்குமா தினு மா ” என்று வில்லத்தனமாக கேட்டு வைக்க

Advertisement

” அது எப்படி சார் உங்கள பிடிக்காம போகும் .எங்க எல்லாருக்குமே உங்கள பிடிக்குமே சார் ” என்று அவனின் வில்லங்கம் தெரியாமல் பேதையவள் பதில் சொல்ல

” நான் இப்போ என்ன எல்லாரும் பிடிக்குமான்னா கேட்டேன் . உனக்கு பிடிக்குமான்னு தான கேட்டேன் அதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும் அஞ்சு ரூபாய்க்கு கேள்வி கேட்டா பத்து ரூபாய்க்கு பதில் சொல்ல கூடாது சரியா ” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட

” வலிக்குது உதய் சார் ” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இவளின் சிறுப்பிள்ளை தனத்தை எண்ணி உதயின் முகத்தில் குறுபுன்னகை தழுவியது.

அதற்குள் ஏர்போர்ட் வரவே உதயும் நந்தினியும் இறங்கி உள்ளே சென்றனர்.

இருவரும் போர்டினிங்காக காத்திருக்க ” டாடி மம்மி ” என்ற குரல் கேட்கவே இருவரும் திரும்பி பார்த்தனர்.

ஆனால் அங்கே வேறோரு குழந்தை அவர்களது தாய் தந்தையை அழைத்திருந்தது.

நந்தினி உதயின் கைகளை இறுக்க பற்றி ஆறுதல் படுத்தினாள். பின்னர் இவரது போர்டிங் பாஸ் வரவே இருவரும் எந்திரித்து சென்றனர்.

போர்டிங் பாஸ் அனைத்தையும் முடித்து விட்டு ஃப்ளைட் உள்ளே சென்றுவிட்டனர்.

ஃபிளைட் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் கோவை வந்தடைந்தது.

பத்து மணிப் போல் கோவை வந்ததால் இனி மேலே செல்வது நல்லது இல்லை என்று படவே இருவரும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் புக் செய்து தங்கினர்.

அடுத்தநாள் இருவரும் விடியலிலே இருவரும் கிளம்பி ஊட்டி சென்றனர். போகும் வழியில் நந்தினிக்கு சன் ரைஸ் பார்க்க வேண்டிய போல் தோன்ற அவளின் எண்ணத்தை அறிந்தவனாய் வண்டியை நிறுத்தி அவளின் கைப்பிடித்து கூட்டிச் சென்றான்.

அவளின் கண்களை தன் கைகளால் மூடியவன் அவளை வ்யூ பாய்ண்டிற்கு அழைத்துச் சென்றான்.

” உன்னோட ஒவ்வொரு ஆசையையும் நிறைவேத்துறது தான் இனி எனக்கு வேலையே ” என்று மனதில் எண்ணிய படி கைகளை எடுத்து விட்டான்.

கண்ணை கசக்கிய படி பார்த்தவள் ஆச்சிரயபட்டு அதியிசியத்து நின்றாள்.

“சார் எனக்கு இந்த டைம்ல இப்படி வந்து சூர்யன்ன பாக்கனும்னு ரொம்ப ஆசைப் பட்டேன் சார். ஆனா அது நடக்கவே இல்லை .இப்போ தான் நடந்துருக்கு தேங்க் யூ சோ மச் சார் ” என்றவள் அதனின் அழகை இரசிக்க தொடங்கினாள்.

” அது தான் எனக்கு தெரியுமே ” என்று உதய் உளறி வைக்க

” எப்படி சார் உங்களுக்கு தெரியும் ” என்று கேட்டு அவனை பார்த்து வைக்க

” இத கண்டுபிடிக்கிறதுக்கு என்ன நான் பிஹெடியா பண்ணணும் இது ஒரு சாதாரண விஷியம். பொண்ணுங்களுக்கு பொதுவாவே இதெல்லாம் பிடிக்கும் அதான் வண்டியை நிப்பாட்டுனேன் ” என்றான்.

” அது எப்படி என்னோட எல்லா ஆசைகளும் தெரிஞ்சுருக்கு ஆனா அதெல்லாம் காம்ன்னா கேர்ள்ஸ் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்றீங்க ” என்று கேள்வியுடன் அவனை நோக்க

” தினு மா இப்படி கேள்வி கேக்குறத விட்டுட்டு இயற்கை தந்த அழக இரசி‌ மா அத விட்டுட்டு இந்த வேண்டாத கேள்வி எல்லாம் கேட்டு இல்லாத மூலைய வச்சி யோசிக்காத ” என்றவுடன் அவளும் அனைத்தையும் மறந்து இயற்கையை இரசிக்க தொடங்கினாள்.

” அய்யோ இவள போய் நாம அமைதி புறா பயந்தவன்னு நினைச்சிட்டு இருந்தா இவ என்னென்னா இவ்வளோ கேள்வி கேக்குறா . ஊருக்கே புலியா நான் இருந்தாலும் இவ கிட்ட பாத்து தான் இருக்கனும் போலயே ” என்று மனதில் புலம்பிக் கொண்டு இருந்தான்.

பின்னர் இருவரும் அந்த இடத்தை விட்டு கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வருகிறாள் பெண்ணவள் .

போன முறை வந்த போது இந்த வீட்டிற்கு வேலை செய்ய வந்த ஒரு சாதாரண பெண்ணாக வந்தாள். ஆனால் இந்த முறை உதயின் மனைவியாக இந்த வீட்டின் மருமகளாக வந்திருக்கிறாள்.

இருவரும் சேர்ந்தார் போல் அந்த வீட்டில் வலது காலை வைத்து உள்ளே வந்தனர்.

தன் உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வேகமாக அவளது அறைக்கு சென்ற நந்தினியை பார்த்த உதய் ” நந்தினி அங்க எங்க போற ” என்று கேட்டு அவள் பக்கத்தில் வர

” என்ன சார் கேள்வி இது . என்னோட ரூம்க்கு போறேன் ” என்றாள் அமைதியாக

” அதான் தெரியுதே இப்போ எப்படி அது உன்னோட ரூமாகும் சொல்லு ” என்று அவளை நெருங்கினான்.

பின்னாடி சென்ற படியே” போன தடவ வந்தப்ப இங்க தான சார் இருந்தேன் . அப்போ இந்த டைமும் இங்க தான சார் நான் இருக்கனும் ” என்று அவனின் நெருக்கத்தில் திக்கி திணறி கூற

” போன தடவ வந்ததும் இந்த தடவ வந்ததும் ஒன்னா என்ன ” என்று கேட்டு இருப்பக்கமும் நகராதவாறு கைகளால் கேட் போட்டான்.

நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக அவனின் நெறுக்கம் கொடுக்க அவஸ்தையினால் மௌனம் காக்க அத அவனுக்கு சாதகமாக நினைத்தவன் அவளின் பேக்கை எடுத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்று விட்டான்.

நந்தினி நின்ற இடத்திலேயே சிறிது நொடிகள் சிலயாய் நின்றவள் பின்னே தெளிவு வந்து அவனது அறையை நோக்கி சென்றாள்.

அவனது அறைக்குள் காலெடுத்து வைக்க போக ” ஒரு நிமிஷம் நில்லு ” என்று உதயின் குரல் வரவும் அப்படியே நின்றாள்.

” சார் ” என்று மெதுவாக அழைக்க

” கொஞ்சம் அமைதியா இருக்கியா ” என்று அவளை அதட்டினான்‌ அவன்.

” சார் என்னோட ட்ரெஸ் கொடுத்தா ” என்று வாயை திறந்தவளுக்கு அவனின் செயல் அதிர்ச்சியை அளித்தது.

” கொஞ்ச நேரம் அமைதியா இருன்னு சொன்னா இருக்க மாட்டியா நீ ” என்று கேட்டவன் நிலப் படியில் படியை கொண்டு அரிசையை வைத்தான்.

அவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவள் அருகில் வந்தவன் ஆறுதலாக அவளது கையை பற்றிக் கொண்டான். அவளுக்கு அது நூறு மடங்கு தெம்பை கொடுத்தது.

” முதல் முறையா ஒரு பொண்ணு அவுங்க புகுந்த வீட்டுக்கு வரும்போது படிய மிதிச்சிட்டு வருவாங்க . அந்த நிலமையில உன்னால அத பண்ண முடியல . இந்த வீடும் உனக்கும் புதுசு இல்ல ஆனா இந்த ரூம் உனக்கு புதுசு . அதுவும் இல்லாம இனி நீ இங்க தான் இருக்க போற சோ இப்போ உன்னால இந்த படிய மிதிசிட்டு உள்ள வர முடியும் ” என்றான் ‌.

கண்ணீருடன் அவனை பார்த்தவள் அவன் கைகளை இறுக பற்றி அந்த படியை கீழே தள்ளி விட்டு இருவரும் ஒன்றாக அந்த அறைக்குள் நுழைந்தனர்.

அறையினுளே அடைந்து கிடந்தாள் கீர்த்தி . வெளியே இருந்து அவளின் அன்னை அவ்வளவு கூப்பிட்டும் கதவை திறக்கவே இல்லை.

” நேத்துலர்ந்து நீ சாப்பிடவே இல்ல மா கொஞ்சமாவது வந்து சாப்பிடு மா ” என்று அழுகையுடன் கூற உள்ளே இருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போனது.

ஜெயந்திக்கு என்ன செய்வது என்று சுத்தமாக புரியவில்லை கணவனுக்கும் மகளுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவித்தார்.

உள்ளே இருந்த கீர்த்தியோ ராஜிவ்க்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தாள். அவனுக்கோ தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்றே வர கோபம் கொண்டவள் வெறி பிடித்தவளாக அந்த மொபைலை கீழே போட்டு உடைத்தாள்..

” அம்மாடி கதவ தொர மா கதவ தொர டி” என்று ஜெயந்தி கதவை தட்ட அவர் தட்ட தட்ட ஒவ்வொரு பொருளாக கீழே விழுந்தது.

ஜெயந்தி எதுவும் பேசாமல் அமைதியாக அழுத்துக்கொண்டே இருந்தார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு கீர்த்தியின் அறை நோக்கி சென்றாள்.

” அக்கா நான் விஷ்ணு வந்துருக்கேன் கா திற அக்கா ” என்று கதவை தட்ட

” நீ எதுக்கு இங்க வந்த போ போய் படி ” என்று கோபமாக குரல் வர

” அக்கா எனக்கு பயமா இருக்கு கா நீ பண்ற தெல்லாம் பாத்து ” என்று அழுக கீர்த்தி கதை மெல்லமாக திறந்தாள்.

” பொண்ணுங்க எதுக்காகவும் எந்த காரணத்துக்காகவும் அழுக கூடாது சரியா .நாம வீக்கா இருந்த எல்லாம் அவுங்களோட பொம்மை போல நம்மள ஆட்டி வைப்பாங்க. அதுக்கு நாம வழி வகுக்க கூடாது விஷ்ணு. இப்போ உனக்கு படிப்பு தான் முக்கியம் படிக்கிற வேலையை மட்டும் தான் பாக்கனும் சரியா இங்க நடக்கிறத பெருசா எடுக்க கூடாது ” என்று வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு ” போ போய் சாப்ட்டு படி ” என்று அனுப்ப

” அக்கா நீயே எனக்கு ஊட்டி விடு ” என்று தட்டை அவள் முன் நீட்ட சிரித்த முகமாக வாங்கி அவளுக்கு ஊட்ட தொடங்கினாள். வீஷ்ணுவும் கீர்த்திக்கு ஊட்டி விட அவளும் பாசத்துடன் வாங்கிக் கொண்டாள்.

” என் குடும்பத்துக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம் கடவுளே என் பிள்ளையோட வாழ்க்கைய நீ தான் காப்பாத்தனும் ” என்று இறைவனின் முன் கண்ணீர் வடித்தார் ஜெயந்தி.

இவை அனைத்தையும் வெறும் பார்வையாளராக ராஜதுரை பார்த்துக் கொண்டிருந்தார்.

அடுத்தநாள் காலை கதிரவன் மெதுவாக அதன் உதயத்தை உலகத்திற்கு காட்ட உதயும் அவனது உறக்கத்தில் இருந்து எழுந்தான்.

உறக்கத்தில் இருந்து எழுந்தவன் விழித்தது குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்த நந்தினியின் மீதே…

அவளின் பால் வண்ண முகம் அவனின் கண்களை மூட மறுத்தது. அவளின் கூந்தல் முகத்தில் பட்டு மனையாளின் தூக்கத்தை கெடுக்க நினைக்க அவளது தூக்கம் கலையாதவாறு கருங்கூந்தலை எடுத்துவிட்டவன் அவள் முகத்தில் கைகளால் கோலம் போட தொடங்கினான்.

” நீ எனக்கு கிடைப்பன்னு நான் நினச்சி பாத்தது கூட இல்ல நிதி மா. என்னால நீ ரொம்ப கஷ்ட பட்டுட்ட அதுக்கு மருந்தா நான் இருக்க ஆசபடுறேன் டி. அதுக்கு ஒரு வாய்ப்பு எனக்கு கொடுப்பியா . நான் தான் உன்னோட கிருஷ்ன்னு தெரிய வந்தா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு யோசிக்க யோசிக்க மனசெல்லாம் பட படக்குதுடி ” என்றவன் அவள் நெற்றியில் இதழ் ஒற்றி விட்டு அந்த அறையினுள் இருக்கும் அறைக்கு சென்றான் அவனின் காதல் நினைவுகளை தேடிச் சென்றான்.

அவனின் மணக் கண்ணில் அவள் கல்லூரி சேர்ந்த முதல் நாள் அவள் செய்த குழந்தை தனம் தான் தோன்றி அவனின் இதழில் புன்னகை தழுவ வைத்தது.

தேடல் தொடரும்…??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!