Skip to content
Post Views: 3,861
இல்ல அகி நீங்க போயிட்டு வாங்க….
ஹே சௌமி பக்கனே உன்ன பார்க்குக்கு வெல்தாம்…
இல்ல ஹரி பவித்ரா எப்படி ரெண்டு குழந்தைகளை வைத்து சமாளிப்பா…?
தானி கோசமே ஆமே வச்சுண்டி… அவன் சடைத்துக் கொண்டான்.
Advertisement
அக்கா நீங்க போயிட்டு வாங்க நான் பார்த்துக்கிறேன்.
இல்ல பவி வேண்டாம்… சௌமி மறுத்தாள்.
அக்கா நாலு மாசமா வீடே உலகமா இருக்கீங்க… கொஞ்சம் வெளிக்காத்தையும் சுவாசிச்சுட்டு வாங்க… நான் மேனேஜ் பண்ணிப்பேன்.
Advertisement
பவியின் பேச்சில் அகிலனுக்கு ஒரு ஆசுவாசம்.
Advertisement
postpartum என்று சொல்லக்கூடிய பிரசவத்திற்கு பிறகான மனஉளைச்சலில் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தாள் சௌமியா.
பிரசவத்திற்கு அவள் மனதளவில் தயாராகும் முன்னே குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறந்துவிட்டது… அதுவும் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது இன்னும் அவளை மன அழுத்தத்தில் தள்ளியது.
இரட்டை குழந்தைகளை சமாளிக்க இயலாது அவள் எரிச்சல் அடைவது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும். மாமியாரும் சென்று விட அவள் உள்ளுக்குள் உடைந்து போனாள்.
Advertisement
மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு மன அழுத்தத்தை குறைத்து இருந்தாலும். அவளுக்குள் ஒரு விரக்தி.
பெரிய நிறுவனத்தில் நல்ல பணியில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவள் குழந்தைக்காக வேலையை விட்டுவிட்டு அவர்களை பராமரிப்பதே 24 மணி நேர வேலையாக இருப்பது அவளுக்கும் சோர்வை கொடுக்கும் தானே…?
என்ன தான் தாய்மை பெருக்கெடுத்து பீறிட்டாலும் அவளும் உணர்வுள்ள மனுஷி தானே… அவளுக்கும் ஒரு இளைப்பாறல் தேவை தானே…?
அகிலன் நல்ல கணவனாய் அவளுக்கு உறுதுணையாய் இருந்தாலும் வெளியுலக தொடர்பு அற்று நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கை என்பது கடினம் தானே…
அதனாலேயே அகிலனும் அதிகம் வெளியில் செல்வதில்லை… சௌமியின் சங்கடம் உணர்ந்துதான் ஹரி இன்று வெளியில் அழைத்து செல்ல முடிவு செய்திருக்கிறான்.
அக்கா நீங்க சீக்கிரம் கிளம்புங்க! ஹாட் வாட்டர் எடுத்து வைக்கிறேன். ஜெர்கின் ஸ்கார்ப் எடுத்துக்கோங்க…
சௌமி அரை மனதாய் நின்றிருக்க….
அக்கா பக்கத்துல எங்காவது போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க….! எனக்கு சமாளிக்க கஷ்டமா இருந்தா உங்களுக்கு கால் பண்றேன்.
ஹே மாயவரம் பிள்ளலனு ச்சூஸ்கோண்டி
ம்ம்ம்ம்…. அப்படினா?
பிள்ளைகளை பார்த்துக்க சொல்றான்… அகிலன் மொழிபெயர்த்தான்.
எனக்குத் தெரியும்… அவரை கிளம்ப சொல்லுங்க…! வெடுக்கென்று பதில் கொடுத்தாள்.
“—————-“
கண்பார்வை இழந்த ஒருவன் அறுவை சிகிச்சை செய்து மீண்டும் வெளியுலகை பார்த்தால் எப்படி மகிழ்ந்து ரசிப்பானோ அப்படி இருந்தது சௌமியின் மனநிலை.
இந்த நான்கு மாதத்தில் இன்று தான் வெளியில் வந்திருக்கிறாள்.
ஹரி பக்கத்தில் இருக்கும் Fasola park போகலாமா…?
ம்ம்ம்ம் அது தான் தர்ட்டி மினிட்ஸ்ல போக முடியும்.
உற்சாகமாய் ரசித்தாள் சௌமி…. சௌமியை ரசித்தான் அகிலன்.
சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கிய பெகோனியா
(beggoniya ) கார்னேஷன் (Carnation )மலர்களை ரசித்துக் கொண்டிருந்தனர் அகிலனும் சௌமியும்.
அவர்களுக்கு உண்பதற்கு ஹாட் சாக்லேட் வாங்கி வந்தான் ஹரி.
மூவரும் சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கல்லூரி கால கதைகள் பேசி சிரித்து… மொபைல் மெமரியை போட்டோகளால் நிரப்பி இன்ஸ்டாவில் உடனுக்குடன் அப்லோடு செய்து அலப்பறை கூட்ட மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் போல் கரைந்து ஓடிவிட்டது.
அகி கிளம்பலாமே… மொபைலில் நேரம் பார்த்து பதறினாள் சௌமி.
சௌமி ஜஸ்ட் ரிலாக்ஸ்…. கால் பண்ணி கேளு குழந்தைங்க என்ன பண்றாங்கன்னு….
அக்கா இதயா என்னோட சமத்தா விளையாடுறா… இனியன் இப்போ தூங்குறான். ஒன்னும் பிரச்னை இல்லை நீங்க ரிலாக்ஸா பொறுமையா வாங்க…!
அகி ஹோட்டல் போகலாமா?
ஷ்யூர் ஹரி…!
இல்ல…. வீட்டுக்கு போகலாமே… சௌமி தயங்கினாள்.
சௌமி.. இதுக்கு மேல வீட்டுக்கு போய் என்ன டிபன் செய்துட்டு இருப்பீங்க? அந்த பொண்ணு ரெண்டு குழந்தைங்களை பார்த்து டயர்டாகி இருப்பா… அவ என்ன உனக்கு ஹெல்ப் பண்ணுவா?
Banana leaf Restaurant பக்கத்தில் தான் இருக்கு.. உனக்கு வாய்க்கு ருசியா சவுத் இண்டியன் புட் கிடைக்கும்… சௌமியை பேச விடாமல் அழைத்து சென்று விட்டான் ஹரி.
எனக்கு சில்லி பரோட்டா முதல் ஆளாக ஆர்டர் செய்தது சௌமி தான்.
எனக்கு கீ ரோஸ்ட்… அகிலனும் ஆர்வமுடன் ஆர்டர் செய்தான்.
Hydrabady Briyani and Royyala Yeppadu (காரசாரமான இறால் பிரை ) ஆர்டர் செய்து ரசித்து உண்ணத் தொடங்கினான் ஹரி.
ஆசையாய் ஒரு வாய் இறால் பிரை எடுத்து வாயில் வைத்த சௌமி நாக்கு தொங்கி எச்சில் ஒழுகி கண்ணீர் வழிய ஹரியை பார்த்தாள்.
எப்படி சாப்பிடுற? நாலு டம்ளர் தண்ணீர் குடித்தும் காரம் குறையாது ஆ ஊ என்று அரற்றினாள்
வாயால தான்… கண் சிமிட்டி சிரித்தான் ஹரி.
இவ்வளவு காரம் சாப்பிட்டா குடல் வெந்து போகாதா? மீண்டும் தண்ணீர் குடித்தாள்.
தரதாலுகா இலகே திண்டுன்னாம், ஏமி ஜரகாடு?(தலைமுறை தலைமுறையா இப்படி தான் சாப்பிடுறோம் எதுவும் ஆகாது) தோளை குலுக்கிக் கொண்டவன் அகிலனுக்கு பிரியாணியை நகர்த்தினான். அகிலன் சப்புக் கொட்டி உண்டு ரசித்தான்.
மினி இட்லி பார்சல் என்றான் பேரரை பார்த்து…
பிரியாணியே இவ்வளவு இருக்கே… அகிலன் கிண்டலாய் பார்க்க…
நாக்கு காதுரா…மி இண்ட்ளோ ஆயம்மக்கி…
சௌமி உள்ளம் வருந்தினாள். பவித்ராவிற்கு வாங்க வேண்டும் என்று தங்களுக்கு கூட தோன்றவில்லையே…
ஹரி ஆயம்மா சொல்லாதே ப்ளீஸ்…பவித்ரா கேட்டா கஷ்டப்படுவா…முறைத்து வைத்தாள் சௌமி.
ஹா ஹா… வா கிளம்பலாம் பில் அமவுண்ட்டை ஹரி செலுத்தி வந்தான்.
“——————“
குழந்தைகள் இரண்டும் பவித்ராவை படுத்தி எடுத்துவிட்டது.
சௌமியிடம் சொன்னால் அவள் விழுந்து அடித்து ஓடிவரக்கூடும். அதனால் தான் பவித்ரா சொல்லவில்லை.
இது தான் பவித்ரா… பிறர் மனம் என்ன நினைக்கும் என்று அடுத்தவர் இடத்தில் இருந்தும் யோசிப்பாள்.
ஆனால் அவள் நிலையை யோசிப்பவர்கள் தான் யாரும் இல்லையோ என்ற ஆழ்மன வருத்தம் அவளுக்கு இப்போதும் உண்டு.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் சௌமி குழந்தைகளை தேடி ஓட… அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ரொம்ப படுத்திட்டாங்களா? சௌமி குற்றவுணர்வுடன் கேட்டாள்.
அப்படிலாம் இல்லை… குழந்தைங்க சமத்து … கபடமற்று சிரித்தாள்.
ஆயம்மக்கு மினி இட்லி இஷ்டமா…? உதட்டை நெளித்து புன்னகைத்து பார்சலை நீட்டினான் ஹரி.
பவி எனக்கு கூட உனக்கு வாங்கணும்னு நியாபகம் வரலை ஹரி வாங்கிட்டாரு… சௌம்யா பெருமையாய் கூற…
எனக்கு பசிக்கலக்கா… பார்சலை அவள் கை நீட்டி வாங்கவே இல்லை.
ஆகலி லேகுண்டா எலா உண்டுண்டி… எனிமிடி கண்டலாயிண்டி (அது எப்படி பசிக்காம போகும்? மணி எட்டாகுது.) முறைப்புடன் மீண்டும் பார்சலை நீட்டினான்.
ஹலோ நான் இவங்க பிள்ளைகளுக்கு தான் ஆயம்மா… உங்க பிள்ளைகளுக்கு இல்லை. நீங்க எனக்கு எதுவும் வாங்கிட்டு வர தேவையில்லை…
இந்த உருட்டுற முறைக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்…அக்கினியாய் சுட்டுவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
ஹரி ஏன்டா…? எத்தனை முறை சொன்னேன்… அவளை அப்படி சொல்லாதேன்னு… பெரிய அளவில் நண்பன் மீது கோபத்தை காண்பிக்க அகிலனால் முடியவில்லை. ஆனால் அவன் மீது வருத்தம் அதிகமாய் கூடியது.
மகாராணி கோபம் தெச்சுக்கோ? நமட்டு சிரிப்புடன் தன் வீட்டுக்கு கிளம்பினான் கையில் மினி இட்லியுடன்.
அமைதியாய் நின்ற மனைவியின் தோளில் கைப்போட்ட அகிலன் நீ போய் பவியை பாரு… நான் குழந்தைகளை பார்க்கிறேன்… அகிலன் அறைக்குள் சென்று விட்டான்.
காலையில் வைத்த தக்காளி தொக்கை சூடு பண்ணி முறுகளாய் இரண்டு தோசை ஊற்றி எடுத்துக் கொண்டு பவித்ரா அறைக்குள் நுழைந்தாள் சௌமி.
அக்கா… நீங்க ஏன் இதெல்லாம்? பதறி எழுந்தாள்.
ஏன் நான் உனக்கு செய்யக் கூடாதா? உரிமையாய் கோபித்தாள் சௌமி.
அப்படிலாம் இல்லக்கா… தடுமாறினாள்.
ஹரி பேசினது ரொம்ப தப்பு. நான் சாரி கேட்டுக்குறேன்.
அய்யோ அக்கா நீங்க போய்..
ஹரி இப்படி எல்லாம் பேசக்கூடிய ஆளே இல்லை…
பத்து வருஷமா எனக்கு ஹரியை தெரியும்… ஹரி யாரையும் மட்டமா நினைக்கவோ நடத்தவோ மாட்டார். உன்னை மட்டும் ஏன் இப்படி பேசறாரோ….
அப்போ என்னை பார்த்தால் அவருக்கு குளு குளுன்னு இருக்கும் போல… மெல்லிதாய் சிரித்தவள் புளிப்பும் காரமுமாய் சுவை மொட்டை தூண்டும் தக்காளி தொக்கில் தோசையை பிரட்டி உண்ணத் தொடங்கினாள்.
நீ தப்பா எடுத்துக்காதே பவி….!
நான் ஏங்கா தவற எடுத்துக்க போறேன்…?
அவர் சொன்னதும் சரி தான். நான் ஆயம்மா தானே….குழந்தகளை பார்த்துக்க தானே வந்திருக்கேன்.
பவி ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதேம்மா…
சாரிக்கா… குரல் உள்ளே போய் விட்டது அவளுக்கு.
உன் தங்கைக்காவது போன் பண்ணி பேச வேண்டியது தானே….?
பேசுவோம்…. என்றாள் சுரத்தின்றி.
இரு வாரமாகிவிட்டது அமெரிக்க மண்ணில் கால் பதித்து அவள் தங்கைக்கும் பேசவில்லை.
தங்கை காயத்ரி வாட்சப் மெசேஜ் அனுப்பி பார்த்து விட்டாள். பதில் அனுப்ப தோன்றவில்லை பவித்ராவிற்கு.
தனக்கென்று உறவுகள் இருக்கிறது தான் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஒரு நொடி கூட அவளுக்கு தோன்றவில்லை.
“——————“
ஜெமினி காமெடி சானலை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு மொபைல் அழைப்பு.
பாபு…. நடுங்கிய குரலில் விஜயதாரணி அழைக்க….
அம்மா என்றான் உடல் விதிர் விதித்து….
மீரு எல உன்னாரு?(நீ எப்படி இருக்க?)
நேனு பாகுன்னானு… மீரேல உன்னாரும்மா ?
நேனு…. நேனு அமைதியாகி போனார்.
ராம் எல உன்னாடு?
அட்டனு பாகுன்டாடு. அட்டனு பாரியா கூட பாகன்னே உண்டி.(அவன் நல்லா இருக்கான் அவன் பொண்டாட்டியும் நல்லா இருக்கா )
ஆனந்தம்!
நானா எல உன்னாரின்னு அடகலேத்தா…? ( அப்பா எப்படி இருக்கார் என்று கேட்க மாட்டாயா )
ராம் சரண் நானா நல்லா உண்ட்டே…?
ஆயன மீ நானா கூட ( அவர் உன்னோட அப்பாவும் தான் )
மரி விசேஷளாண்டி? ( வேறென்ன விசேஷம் ) பேச்சை மாற்றினான்.
நுவு எப்புடு ஒஸ்தானு?
நேனா? நேனு ஏமிச்செய்ய போத்துனானு. (நான் வந்து என்ன செய்ய போறேன் )
விஜயதாரணியிடம் இருந்து பதில் இல்லை… மறுமுனையில் நிசப்தமே நிலவியது.
அன்னை அழுகிறார் என்று புரிந்தது.
ம்ம்மா சாரி…. அவன் குரல் கரகரத்தது.
தாயிடம் முகம் சுழித்து பேசி இருக்கக் கூடாது என்று தன்னையே நொந்து கொண்டான்.
அங்கு அழுது கரைந்து கொண்டிருந்தார் விஜய தாரணி.
————தொடரும் ———-
error: Content is protected !!