Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்12

  ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்’ என மகிழின் அவ்வா அடிக்கடி ஒரு பழமை பேசுவார்.. அதன் முழு அர்த்தமும்.. சும்மா இருந்த நந்தாவிடம் கெமிஸ்ட்ரி படிக்க கமிட் ஆன அப்புறம் தான் அவள் உணர்ந்து கொண்டாள்.

       ஆம்.. இவன் அந்த மேமை விட ஏழு பங்காக இருந்தான்.. அவராவது தினமும் ஒருமணிநேரம் என வாரத்திற்கு ஐந்து மணி நேரம் வைத்து செய்தார்.. ஆனால் இவனோ அந்த ஐந்து மணி நேரப் பாடத்தையும்.. சனி ஞாயிறு இரண்டு நாட்களில் மூன்று மணி நேரங்களில் அவள் மண்டையில் திணிக்க முயற்சித்தான்.. ஆக மொத்தம் அவரை விட ஒருமணிநேரம் அதிகமாக வைத்து செய்கிறான்.

     நன்றாக புரியும்படி எளிதாக சொல்லிக் கொடுக்கிறான்.. அவளால் எவ்வித டிஸ்ட்ராக்ஷனும் இல்லாமல் அவன் பாடத்தை கவனிக்க முடிந்தது.. ஆனால் டெஸ்ட் வைத்து கொலையாய் கொன்றான்.. (https://uniforumtz.com/) அன்றைய ஞாயிறும் அப்படித்தான் அவளுக்கு எக்ஸ்ப்ளெய்ன் செய்தபடி நோட்ஸ் சொல்லிக் கொண்டிருந்தான்.

     அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவள் எழுத அதை வாங்கியவன்.. அவளை முறைத்துப் பார்த்து “ஏன்டி.. மூச்சைப் பிடிச்சு இத்தனை நேரம் சொன்னா.. நீ அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் மாதிரி ஒரு வரியில எழுதியிருக்க” என அவள் காதைப் பிடித்து திருகினான்.



Advertisement

     அவனிடமிருந்து தப்பியவள் “யோவ் மாமா.. நோட்ஸ் பின்ன எப்படி எடுப்பாங்க.. ப்ரீவிட்டி ஈஸ் சோல் விட்னு நீ படிச்சது இல்லை.. இந்த லட்சணத்துல டாக்டர் வேற” என ஏகத்துக்கும் அவனைக் கலாய்க்க..

      “இந்த வாய் இல்லைனா.. உன்னையெல்லாம்.. இப்படியே பேசி டெஸ்ட்டுக்கு ஓப்பி அடிக்கப் பாக்கதே” என அவள் முயற்சி புரிந்து அதை முறியடித்தவன்.. அசால்ட்டாக அடுத்த டாபிக்கிற்கான நோட்ஸை சொல்ல ஆரம்பித்தான்.

      அவள் படிக்க கஷ்டப்பட்டு திணறும் போதெல்லாம் அதை விவரித்து “அவ்வளவு தான்” என மந்திரச் சிரிப்புடன் சொல்கையில் உண்மையிலேயே ‘அவ்வளவு தான்’ என அவளுக்கும் தோன்றும்..

Advertisement

       இப்படியே நாட்கள் கடக்க.. அந்த ஆட்(odd) செமஸ்டர் முடிவுக்கு வந்தது.. இத்தனை நாளில் இவர்கள் இருவரும் ஒன்றாகப் படிப்பது யாருக்கும் தெரியாமல் அவளை பீஸ்ஃபுல்லாகப் படிக்க வைத்தது தான் நந்தாவின் சாமர்த்தியம்.. அன்று கடைசிப் பரிட்சையாக மேஜர் ஆப்ஷனலையும் எழுதி முடித்து வெற்றியோடு நேராக தோட்டத்து வீட்டிற்கே வந்தாள் மகிழ்.

Advertisement

[the_ad id=”6605″]

     அவளுக்கு காலைப் பரிட்சை என்பதால் மதியம் வந்திருக்க.. நந்தா இவளைக் கண்டதும் இவள் பக்கம் குதித்து வர “மாமா.. செம ஈஸி எக்ஸாம்.. நல்ல ஸ்கோர் வரும்.. எல்லாமே மேஜர் சப்ஜெக்ட்னு பயந்தேன்.. பரவால்ல இது கொஞ்சம் தூக்கிவிடும் பர்சன்டேஜை” என உற்சாக மிகுதியில் அவன் கைகளைப் பற்றியபடி குதித்தவளைப் பார்த்தபடியே இருந்தான் நந்தா.

      அவன் பார்வையில் அமைதியானவள் “என்ன மாமா” என வினவ.. மெல்லச் சிரித்தவன் “உன்னை மாஃபியா மாதிரி பிளான் எல்லாம் போட்டு படிக்க வச்ச மாமனுக்கு என்ன தரப் போற” என கொக்கி போட்டு நிறுத்த

Advertisement

     அவளோ திருதிருவென விழித்தபடி “அதான் உன் ஆசைக்கு மாமான்னு சொல்றனே மாமா” என்றவளிடம் புருவத்தை உயர்த்தியவன் அவள் அருகில் வந்து “அது சொல்லிக் கொடுக்க ஒத்துகிட்டதுக்கு.. இது சொல்லிக் கொடுத்ததுக்கு.. சொல்லு என்ன தருவ” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.

     அதில் அவஸ்த்தையான ஒரு நெளிவுடன் “நீங்களே சொல்லுங்க” என உரைத்தவள் ‘விவகாரமா எதாவது கேட்டா மூஞ்சை பேத்துடறேன்’ என மனதில் எண்ணிக் கொண்டாள்.

       அவன் இன்னும் அவள் தடுமாற்றத்தை ரசித்தபடி.. இன்னும் அவளை நெருங்கி வந்து “உன்னை நல்லபடியா ட்ரெயின் பண்ணி எக்ஸாம்க்கு அனுப்பினது நான் தானே.. சோ.. நீ.. என்னோட” என கேப் விட.. அவன் ஃபில் இன் தி ப்ளாங்கஸில் அவள் தான் கடுப்பானாள்.

      அவள் முறைப்பை சற்றும் கண்டு கொள்ளாமல் அதே ஆழ்ந்த குரலில் “நீ என்னோட கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என முடிக்க.. அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்ட மகிழ்.. “ஆசிர்வாதம் தானே.. தோ வாங்கறேன்” என கீழே கிடந்த குச்சியை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.

     “பாருடி.. நான் நல்லது தான் சொன்னேன்.. உனக்குத்தான் டர்ட்டி மைன்ட்.. என்ன யோசிச்சேன்னு சொல்லு” என அவளிடம் போக்குக் காட்டியபடியே ஓட.. அவளும் சளைக்காமல் அவனைத் துரத்தியபடி இருந்தாள்.

     அவள் ஒருகட்டத்தில் சோர்ந்து போக.. தானாக அவளிடம் மாட்டிக் கொண்டவன் பரிசாக இரு அடிகளைப் பெற்றுக் கொண்டு.. மாமரத்தின் கிளையில் அவ்வளவு நேரம் மறைவாக இருந்த டிஃபன் பாக்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான்.

      ஆர்வமாகத் திறந்தவள் அதில் இருந்த சலங்கைப் பணியாரத்தைப் பார்த்து இன்னும் ஆச்சரியமாகி அவனை நன்றியுடன் பார்த்தவாறே உண்ண.. அவளுக்கு தன் அப்பத்தாவின் கைப்பக்குவத்தில் இது பிடிக்கும் என அறிந்து செய்யச் சொல்லி எடுத்து வந்தான்.

      அவள் உண்ணும் அழகை ரசித்த நந்தாவிற்கு இந்த நொடி இந்த நிமிடம்.. அவள் மேல் ஈர்ப்போ.. வேறு விதமான பருவ எண்ணங்களோ.. எதுவுமே இல்லை.. அவனுள் இருந்தது அனைத்தும் அவள்பால் ஒரு தூய அன்பே.. அது அவளைப் பார்க்கப் பார்க்க.. இன்னும் இன்னுமென அதிகரித்துக் கொண்டே சென்றது.. அது அவளை உன்னுடனே வைத்துக்கொள் என அவனிடம் உரக்கக் கூறியது.

       அவனைப் பார்த்து வெள்ளையாகப் புன்னகைத்து..  அவனுக்கும் கொடுத்தவளைக் கண்டு அந்த ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ அவள் மகிழ்சிக்காக பிரார்த்தித்துக் கொண்டனர்.. ஆம் அது பிருந்தாவனமே.. அவர்களின் உண்மையான அன்பால் கட்டமைக்கப்பட்ட.. அந்த நேச நினைவுகளை மட்டுமே உண்டு வாழும் அழகிடம்.

முதல்முறை அவனிடம் கேட்டுப் படித்த பின்பு வீட்டுக்கு சென்ற போது மகிழுக்கு கை கால்களெல்லாம் உதறத் துவங்கியது.. மனதறிந்து செய்யும் தவறல்லவா இது என.. ஆனால் அவள் வயதும்.. கல்லூரியில் நடைபெறும் செயலும் இதைச் செய்யத் தூண்ட.. படிப்பிற்காக என சமாதானம் செய்து கொண்டாள்.

      அதன்பிறகு அவனோடு இயல்பாக உரையாடுவது என்பது பழகிவிட்ட விஷயமாகிப் போனது.. செமஸ்டர் முடிந்த பின்னும் அவனோடு நன்றாகவே பேசி.. சீசருடன் விளையாடிக் கொண்டு மகிழ்வாக வலம் வந்தாள்.

       ஆனால் நந்தாவால் தான் இப்பொழுதெல்லாம் அப்படி இருக்க முடிவதில்லை.. பாடம் சொல்லித் தரும்போது இருந்த கண்டிப்பு இப்போது விலகியிருக்க.. அதோடு அவ்வப்போது மகிழின் பார்வையில் தெரியும் சிறு நேசமும்.. அக்கறையும்.. அவனை இன்னும் அவள்பால் ஈர்க்க.. மனம் முழுக்க இருக்க நேசம் அவனது ஒன்றிரண்டு செய்கையில் வெளிப்படத் தான் செய்கிறது.

      அதையும் மகிழினி கண்டு கொண்டு.. வெட்கம் போல எதுவோ ஒன்று வந்து செல்லும்.. முன்பு போல இல்லாமல் மாறிவிட்ட மனம் அல்லவா.. ஆனால் அதற்குள் தன்னைச் சமாளித்து.. அவனது பேச்சையும் திசைதிருப்பி விடுவாள்.. அன்றும் அது போலவே சீசருடன் அவள் குதித்துக் கொண்டிருந்தவள்.. சோர்வாக அவன் அருகில் அமரவும் “டயர்ட் ஆகிட்டியா.. சாப்டலையா” என வாஞ்சையாகக் கேட்கவும்..

[the_ad id=”6605″]

உதட்டைப் பிதுக்கியவள் “அம்மா கூட சண்டை” என்கவும்.. “அச்சோ பாவம்” என அவளுக்காக வருந்தியவனிடம் “ம்ம்.. ஆனா அவ்வா எடுத்து வச்சிருந்த வெண்ணையை மட்டும் எடுத்து வாய்ல போட்டுட்டு வந்தேன்” என கண் சிமிட்டிக் கூறினாள்.

     முகத்தை சுழித்தவன் “காலையில வெண்ணையா” என்க.. அவனை வித்தியாசமாகப் பார்த்தவள் “என்ன கேள்வி.. ஏறு பொழுதுல தானே வெண்ணைய் வரும்” என்றாள்.

      அவளைப் பார்த்து சிரித்தவன் “அதான் இப்படி எல்லாம் சாஃப்ட்டா இருக்க போல” என தன் ஆட்காட்டி விரலால் அவள் கன்னத்தில் கோலமிடவும்.. அவனை விட்டுத் தள்ளி அமர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்கவும்.. நந்தாவே “என்ன வெள்ளைக் காக்கா பறக்குது.. நான் அதைப் பாக்கனும் அதானே.. உலக கேடி டி நீ.. இந்த டாபிக் வந்தாலே விவரமா ஸ்கிப் பண்ணிடற” என கடுப்படிக்கவும்.. அவன் புறம் திரும்பாமலேயே ஒரு புன்னகை சிந்தினாள் மகிழ்.

      “சிரிக்காதடி.. ரொம்ப புத்திசாலியா இருக்கறதா நினைப்பா” என கடுகடுக்க.. அவனை நேருக்கு நேராகப் பார்த்தவள் “ஸ்கிப் பண்ணாம பேசினா இது தான் நாம பேசற கடைசிப் பேச்சா இருக்கும் மாமா.. இரண்டு வீட்டுக்கும் நடுவுல எவ்வளவு சிக்கல் இருக்குன்னு தெரிஞ்சும் என்னால உனக்கு எந்த உறுதியும் கொடுக்க முடியாது.. உன்னாலையும் தான்.. இன்னும் சொல்லப் போனா நாம இப்படி பேசறதே கூட தப்புத்தான்.. ஆனா நடக்குதே” என பிசிறில்லாமல் உரைத்தாள்.

     அவள் தெளிவான பேச்சில் மனதுள் அவளை மெச்சிக் கொண்டாலும்   “என்னால முடியாதுன்னு நீ எப்படிச் சொல்லலாம்.. இரண்டு வீட்டுப் பிரச்சனையும் நாம ஒன்னு சேரும் போது காணாம போக வாய்ப்பு இருக்கே” என தன்னையும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

     அதில் அவள் இதழின் ஓரம் தோன்றிய சிறு சிரிப்பு நந்தாவை இன்னும் கொஞ்சம் சீண்டிப் பார்க்க.. அதை ஒதுக்கியவள் “சும்மா வாய்ப்பந்தல் போடக்கூடாது.. இங்க எங்கிட்ட பேசிட்டு போகும்போது வீட்ல சித்திமா முகத்தைப் பாத்து உங்களுக்கு குற்றவுணர்ச்சி வருதா இல்லையா” என்றவளின் கேள்விக்கு அவன் சமாளிப்பாக ஏதோ கூற வர

     அதற்குள் மீண்டும் அவளே “நான் அந்த அளவுக்கா மக்கா இருக்கேன்.. இது எதுவும் நடைமுறைக்கு ஒத்துவராதுன்னு தெரிஞ்சும் திரிசங்கு சொர்க்கத்துல இருக்க முடியாது.. உங்க டபுள் மைண்டை விட்டுட்டு முதல்ல நீங்க தெளிவா வாங்க.. அதுக்கப்புறமா என்னோட பதிலைக் கேளுங்க” அவன் முகத்தில் அறைவது போல கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை தானே இது என தயங்காமல் சொல்லிவிட்டாள்.

[the_ad id=”6605″]

      ஒன்றும் சொல்லாமலேயே விருட்டென்று அவன் கிளம்பி விட்டான்.. அதன்பிறகு அவன் மகிழைப் பார்க்கவே முயற்சி செய்யவில்லை.. ஆன்லைனில் இருந்தாலும் அவளுக்கு ஒரு டெக்ஸ் கூட வருவதில்லை.. அவளுக்கும் கோவம் தான் வந்தது.. சரி இதுவும் நல்லதுக்குத்தான் என அவளும் அவன் இல்லாத வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப முயற்சித்தாள்.

     இருவரும் தங்கள் எண்ணப் போக்கில் வலம் வந்து கொண்டிருக்க.. பெரியவர்களைப் பற்றி யோசிக்க மறந்தனர்.. என்னதான் இவர்கள் யாராவது வருகிறார்களா என கவனித்து எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு பேசிப் பழகினாலும் அது செல்ல வேண்டிய அனைவரின் காதுகளுக்கும் சென்றுதான் விட்டது.

      அவர்களே இன்னும் ஒரு நிலைப்பாட்டிற்கு வராத நிலையில் நாமாக ஒரு ஆர்வத்தைக் கிளறிவிடக் கூடாது என சரவணன் நினைத்திருக்க.. ராகவனிடம் ரகு நந்தா பேசிய பேச்சை சொல்லியிருக்க வெகுவிரைவில் மகிழின் திருமணத்தை முடிக்கக் காத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!