Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்25

ஐந்து வருடங்களுப் பிறகு.. மஞ்சள் வெயில் சொரியும் மாலை வேளை.. நந்தாவின் வீடு ஏதோ விசேஷத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது போல இருக்க.. அவன் வீட்டிற்குள் வெள்ளிச் சலங்கைகள் அணிந்த ஒரு ஜோடி பாதம் ‘ஜல் ஜல்’ என்ற சப்தங்களை வாரி இறைத்தபடி ஓடி வர.. அந்தக் சலங்கை அணிந்தவளோ “ஆலு.. ஆலு” என குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள். திண்ணையில் அமர்ந்து தாம்பூலப் பைகள் போட்டுக் கொண்டிருந்தோருடன் தானும் கூட செய்து கொண்டிருந்த சாரதா அப்பத்தா.. அந்த […]


நாயகனோ நானறியேன் – நாயகன்24

மகிழ் பள்ளி விட்டு வீட்டுக்குச் சென்ற போது.. அவள் அவ்வாவும் அப்பத்தாவும் ஜாலியாக திண்ணையில் அமர்ந்து.. வீதியில் சென்ற ஒரு பெண்ணை கூப்பிட்டு வைத்து கலாய்த்துக் கொண்டிருக்க.. மகிழ் முறைக்கவும் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தவர்கள் இவளைக் கண்டு கொள்ளாதது போல ஏதோ பேசவும் “ரொம்ப சௌகர்யமாப் போச்சு ரெண்டு பேருக்கும் வம்பு பேச.. என்ன ஒரு நடிப்பு” எனக் கேலியாக வினவ.. “எங்க மருமகளுங்களே எங்களை ஒன்னும் சொல்லலை.. நீ என்னடி எங்களை அதட்டுற.. ஏன் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்24

      மகிழின் தலைமுடியைப் பற்றியபடி அந்தச் சரிவில் நின்றபடி அவன் பேசப்பேச.. இங்கு மூவருக்கும் உயிரே நின்றுவிட்டது.. மகிழ் அவன் கையில் இருந்து விடுபடப் போராட.. சமதளமற்ற மண் தரையில் சரித்து கீழே விழ.. முழங்கையில் நல்ல அடி.. அப்போதும் அவள் கூந்தலை அவன் இறுகப் பிடித்திருக்க.. அது வேறு வலி உயிர் போனது.       ரகு கோபாவேசமாய் “டேய் ஒழுங்கா கண்ணாளை விட்ரு.. இல்லை” என நெருங்கவும்.. குமரன் வேண்டுமென்றே […]


நாயகனோ நானறியேன் – நாயகன்23

    ஸ்பாட் உள்ளே செல்ல முடியாத இடம் என்றால்.. நேற்று தந்தை இறந்திருக்க.. இன்று கோவிலுக்குள் செல்ல முடியாது என எண்ணியவள் எந்தக் கோவிலுக்குச் செல்வது என குழம்ப.. குத்துமதிப்பாய் ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.        ஆள் அரவமற்ற சாலைகளும்.. விர்ரென்று காதை அடைக்கும் குளிர்காற்றும்.. அடித்து எறிவது போல வேகமாக ஓடிய பேருந்துகளும்.. அடிவயிற்றை சில்லிட வைத்தாலும்.. அவள் சிந்தை முழுதும் கணவனே நிறைந்திருந்தான்.       திடீரென தன்னைக் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்23

     அன்று காலையில் இருந்தே மகிழிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.. என்னவோ உறுத்திக் கொண்டே இருந்தது.. வரும் திங்கள் முதல் பள்ளி செல்லலாம் என சாரதா அப்பத்தா கூறியிருக்க.. அவளும் அம்மா வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பாள்.. ஆனால் இன்று என்னவோ அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.      நந்தாவும் அவன் யோசனையில் இருக்க.. அன்று மதியம் வீட்டிற்கு வந்தவனுக்கு.. ஸ்பாட்டிடம் இருந்து நந்தாவிற்கு அழைப்பு வர.. அதை எடுத்துப் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்22

அவரோ “இல்லைங்க தம்பி.. எங்களுக்கு இந்த போலீஸ், ஜெயில் எல்லாம் பழக்கம் இல்லைங்க.. என்னை விட்ருங்க தம்பி” என நடுங்கிய குரலில் கூற.. அவனோ சிரித்து “ஓஓ.. புரிஞ்சு போச்சு.. பணம் வேணும்னா கேளுய்யா.. அதுக்கு ஏன் பம்முற” என மீண்டும் அதிலேயே நிற்க.. சுப்பிரமணியன் “ஐயோ தம்பி.. யாருக்கு வேணும் இந்த பணம்.. அதும் கொலைப்பழி ஏத்துகிட்டு வர பணம்.. என்னை இதில எல்லாம் இழுக்காதிங்க” என முடிந்த அளவு திடமாகவே சொல்ல பல வருட […]


நாயகனோ நானறியேன் – நாயகன்22

      தன் வேலையில் உள்ள பிரச்சனைகளைச் சொல்லி.. தன் பாரத்தை இறக்கி வைத்துவிட்டுச் செல்லும் மகனையே கண் கொட்டாமல் பார்த்தார் சுப்பிரமணியம்.. இப்போது பாரம் மொத்தமும் அவர் தலையில்.        இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் மனதில் நெருடியது.. அவர் மகிழின் சின்னத்தாத்தா அதாவது ரகுவின் அப்பா தோட்டத்தில் தான் வேலை செய்து வந்தார்.. வயது முதிர்வின் காரணமாக அவர் அடிக்கடி வருவதில்லை.. எல்லாம் மங்கை மற்றும் முத்துக்குமரனின் கட்டுப்பாட்டில் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்21

அதில் அவள் மனம் உணர்ந்து கொண்டவன்.. இன்னும் நெருங்க.. அவனைத் தடுத்தவள் “ஐயோ என்ன பண்றிங்க.. யாராவது வந்துடப் போறாங்க.. விடுங்க” என தப்பிச் செல்லப் பார்க்கவும்.. “என்னை சாமியார்னு சொல்லி நீயும் அந்தக் குட்டிப்பிசாசும் கேலி பண்ணி சிரிப்பிங்க தானே” என நிதானமாக அவளை நெருங்கியவன்.. அவள் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி “இது என்னைப் பேரழகனாக் காட்ற இந்தக் கண்ணாடிக்கு” என அவள் இரு கண்களிலும் மென்மையாக முத்தமிட்டான். அவள் தன் வாயைப் பிளந்தபடி ஆச்சரியமாக […]


நாயகனோ நானறியேன் – நாயகன்21

புள்ளினங்களின் இனிய அலாரத்தில் கண் விழித்த நந்தா கண்டது.. தன் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியைத் தான்.. இவன் புறம் திரும்பிப் படுத்திருக்க.. அவன் கண்ணில் பட்டது எல்லாம் அவள் மச்சமும் மூக்குத்தியும் தான். எதைப் பார்ப்பது.. எதை விடுப்பது எனக் குழம்பியவன் கண்கள் அவள் மூக்குத்தியை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க.. ஒரு விரலால் அதை வருடினான். அவனை விட்டுப் பிரிந்து சென்றாலும் அவன் பரிசளித்த மூக்குத்தியைத் தான் அணிந்திருக்கிறாள் என கோவிலின் சந்திப்பிலேயே அவன் உணர.. […]


நாயகனோ நானறியேன் – நாயகன்20

இவ்வளவு நாள் பிரிந்து இருப்பதால் முதலில் அனைவரும் கோவிலுக்கே செல்வோம் என முடிவெடுத்து.. அவர்கள் முறைமை ஏற்று இருக்கும் கோவிலுக்குச் சென்றனர்.. சற்றே தயங்கினாலும் பெண்கள் சிறிது நேரத்தில் இயல்பாகி விட.. சரவணன் மகிழின் தாத்தாவோடும் முகிலோடும் பேசினாலும்.. ஏனோ ராகவனும் அவரும் பேசிக் கொள்ளவே இல்லை. சிறிது நேரத்தில் ரகுவும் அவன் தந்தையும் வந்துவிட.. அம்மனுக்கு அபிஷேக அலங்காரப் பூஜைகள் நிறைவு பெற்று திருமணத்திற்கு வாக்குக் கேட்டனர். நந்தா வேண்டுமென்றே இத்தனை நேரம் தன்னைத் தவிர்த்த […]