Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-10 (1)

10(1)

கோவிலில் அம்மன் சன்னதி முன் அனைவரும் வந்து விட, இளவேலன் தன் மகனை ஆர்வமுடன் பார்த்தார். ஆனால் ராதிகா பதறிக் கொண்டு வந்தார்.



Advertisement

நான் என்னோட தந்தை பற்றி பேச தான் வந்தேன்..

“சொல்லாமல் கொள்ளாமல் என்ன இளா?” ராதிகா எமோஸ்னலாக தன்னிலை மறந்து கேட்டு விட்டார்.

Advertisement

Advertisement

“இளாவா?” என்று அங்கிருந்த ஊரார் கேட்க, ராதிகா பதிலளிக்க முடியாமல் நின்றார்.

இளந்திரையன் செய்வதறியாது கையை பிசைய, எங்களை கேட்காதீங்க. இதோ இருக்காரே பெரிய மனுசன் இளவேலன். இவரிடம் கேளுங்க. என்னோட அம்மாவை காதலித்து கைவிட்டவர்..

Advertisement

இல்ல..இல்ல..இல்ல..கத்தினார் இளவேலன். அனைவரும் திகைத்து விட்டனர்.

இளவேலனின் மகனா இந்த போலீஸ்காரன்? ஆளாலுக்கு பேசினார்கள்.

“நான் என்னோட ராதுவை ஏமாற்றலை” அவர் அழுதார்.

“ஒரு பொண்ணோட வாழ்க்கையை பாழாக்கிட்டு எப்படி தான் இப்படி பெரிய மனுசத்தனமா வாழுறாங்களோ?” கேள்விகள் எழ, “எல்லாரும் பேச்சை நிறுத்துங்க” கத்தினார் ராதிகா.

“ராது, என்னை மன்னிச்சிரு ராது. எனக்கு நிஜமாகவே தெரியாது. நீ கர்ப்பமானதும் தெரியாது. என் அப்பா நம்மை பிரிக்க முயன்றதும் தெரியாது. இப்படி சொல்லி நான் தப்பிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்..

ராது, எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துப்பேன். ஆனால் நம்ம வீட்டுக்கு வந்துரு. இப்ப வரை உன்னை மட்டும் தான் மனதில் சுமந்து வாழ்ந்துட்டு இருக்கேன். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ என்னை நம்பு ராது” ராதிகா முன் மண்டியிட்டு கெஞ்சினார் இளவேலன்.

“அட அட அட..இப்படி மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிடுமா? என் அம்மாவும் நானும் என்னென்ன பேச்சுக்கெல்லாம் ஆளானோம் தெரியுமா? எவ்வளவு கேவலமான பார்வை எல்லாரும் எங்களை பார்த்தாங்க தெரியுமா?” சீறிக் கொண்டு கேட்டான்  சத்யா.

“என்னை மன்னிச்சிருப்பா. அடிக்கணும்ன்னா அடிச்சிக்கோ” இளவேலன் சத்யா முன் நிமிர்ந்து நின்றார்.

சத்யா கையை ஓங்கினாலும் அவனால் அடிக்க முடியவில்லை. அவனுக்கு அவர்களின் காதல் நிரம்பிய புகைப்படங்கள் நினைவில் வந்தது.

என்னால உன்னை அடிக்க முடியல. ஏன்னா உங்க காதல் தான் காரணம். என்னோட அம்மா உன்னை பற்றி என்னிடம் சொன்னது கூட இல்லை. புகைப்படத்தை பார்த்து தான் உங்கள் காதலை அறிந்து கொண்டேன். உன்னுடன் என் அம்மா வர மாட்டாங்க. உன் அப்பன் புத்தி உனக்கும் என்றாவது வந்து விட்டால் என் அம்மா நிலைமை என்னாவது? சத்யா வெறுப்புடன் இளவேலனிடம் பேசினான்.

சார், ஓவரா பேசாதீங்க. வேலன் அங்கிள் எல்லாம் தெரிந்து உங்க அம்மாவை விட்டு போகலை. உங்க அம்மா தான் வேலன் அங்கிளை விட்டு போனாங்க. அங்கிள் இத்தனை வருசமா அவங்கள நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருந்திருக்கார். அவரை போல இந்த காலத்தில் எவன் இருப்பான்? வேகத்தில் அக்சரா கேட்டு விட்டாள்.

நக்கலாக சிரித்த சத்யா, “ஏன் தீரன் அண்ணா இல்லையா?” சத்யாவின் பார்வை வைஷ்ணவியிடம் சென்றது.

“உன்னை பார்க்கும் போதே தோணுச்சு. பரவாயில்லை. என்னோட மருமகனோட பையன் தானா? எனக்கு இன்னொரு பேரனும் இருக்கார். அவர் போலீஸ் சொல்லும் போதே ஒரு கெத்தா இருக்குல்ல அகிலா” பேரரசன் கேட்டார்.

“ஆமா தாத்தா. போலீஸ் திருடன் விளையாட்டில், அப்பன் திருடனாகவும் மகன் போலீஸாகவும் வந்திருக்கானே!” கேட்டான் அகிலரசன். அவனை பார்த்த வைஷ்ணவி உடல் நடுங்கியது. அக்சரா அவளை தன்னுடன் நெருக்கி நிற்க வைத்துக் கொண்டாள்.

மாமா, “அப்பா இப்படி செய்வார்ன்னு எதிர்பார்க்கலை?” வருத்தமுடன் இளவேலன் பேரரசனை பார்த்தார்.

“ஆடு தானா வந்து சிக்குது பேராண்டி” அகில் காதில் பேரரசன் கூறிய  நொடியில், இளந்திரையன் பேச்சை ஆரம்பித்தான்.

சித்தப்பூ, “தாத்தா செய்தது தவறாகினும் சில பேரின் மூக்கை உடைக்க கூட இருக்கலாம்” என்று சத்யாவை பார்த்து பேரரசனை பார்த்தான்.

“தீரன் அண்ணா” சத்யா சத்தமிட்டான்.

“சத்யா, நீ போலீஸ்காரன். நீ அறியாதது இருக்குமா? உன்னோட தாத்தா உன்னோட அம்மாவை மறுக்க காரணமே சில தற்குறி நாய்களால் தான்” என்று முதலாவதாக நேரடியாக பேரரசனை தாக்கி பேசினான்.

“ஏய்! தீரா, என்ன திமிறா? யாரை பேசுற?” அகிலரசன் சத்தமிட்டான்.

“என்னடா மச்சான்? நான் தற்குறி பசங்கள தான பேசினேன். உனக்கெதுக்கு கோபம் வருது. உனக்கு தெரிஞ்ச தற்குறிகள் நிறைய பேர் இருப்பாங்க போல?”

மச்சானா? வைஷ்ணவி தீரனை பார்த்தாள்.

“தீரா” இளவேலன் இளந்திரையனின் கையை அழுத்தினார்.

சித்தப்பூ அமைதியா இரு. பல்லை கடித்த இளந்திரையன்..

“ம்ம் சொல்லுடா மச்சான்? தற்குறிப் பயபுள்ளைக என்ன செய்வானுக தெரியுமா? அது ஏதோ பழமொழி சொல்வாங்களே!”

ஹ..ஹம்ம்..பிள்ளைய கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டுற கதை…தெரியுமா உனக்கு? உனக்கு தெரிய வாய்ப்பில்லை. உனக்கு தான் தற்குறிகளே தெரியாதே! நக்கலாக சிரித்தான்.

“தீரா” பாய்ந்து கொண்டு அகிலரசன் வர, “சாமி கும்பிட வந்தீயா? என்னோட சண்டைக்கு வந்தீயா? சண்டைக்குன்னா சொல்லு. இப்பவே வெளிய வச்சுக்கலாம் வாரீயா மச்சான்?” பல்லை கடித்து இளந்திரையன் அகிலரசனிடம் கேட்டான்.

“அண்ணா” செழியன் அழைக்க,

செழியா, “உன்னோட மச்சானுக்கு என்னம்மா கோபம் வருது பாரேன். இந்த தீரன் கோபப்பட்டால் அவன் என்னவான்னு அவனுக்கு தெரியல. என்னோட பொறுமையை கொஞ்ச கொஞ்சமா நகர்த்தீட்டு என் பக்கம் வரான். இன்னும் ஓர் அடி நெருங்கினால் அவன் பொடி மாஸ் தான். அப்புறம் பெரிய தாத்தா வருத்தத்துக்கு காரணம் நானென்று சொல்லக் கூடாது” பொடி வைத்து பேசினான்.

சத்யாவிற்கு புரிய அவன் பார்வை பேரரசனை ஏறிட்டது சீற்றமுடன்.

“அகில் வாடா. இவனுக அவனுக பிரச்சனையை முடிக்கட்டும்” என்று பின் வாங்கினார் பேரரசன்.

கூட்டத்தில் ஓ ஓ ஓ ஓ! இளைஞன்..தீரா தரமா பேசுனீங்க? ஆமா அகிலரசன் உங்க மச்சான் தான? உங்களுக்குள்ள பிரச்சனையா? கேட்டான்.

எவன்டா முன்னாடி வந்து கேளு..

ஒருவன் முன் வந்தான்..

ஓ…மாரியா..

மாரி சொந்த பந்தம்ன்னாலே ஏதாவது வழியில பிரச்சனை இருக்க தான் செய்யும். இப்ப நாங்க வேடிக்கையா தான் பேசிக்கிட்டோம்..

வேடிக்கையா? அப்ப பிரச்சனையில்லையா?

இளந்திரையன் அமைதியாக, இளவேலன் தன் ராதுவை பார்த்தார்.

ராது, நீ சொல்லு. என்னை நம்புறேல்ல. இப்பவே உன் கழுத்துல்ல தாலி கட்டி நம்ம வீட்டுக்கு போகலாம்.

சத்யா அவரை முறைத்து பார்த்தான்.

இளசத்யவேந்தன்.

“நான் பார்த்து பார்த்து வைத்திருந்தால் கூட என்னோட மகனுக்கு இவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் வச்சிருக்கமாட்டேன்” இளவேலன் சத்யாவை பார்த்தார்.

எல்லார் முன்னும் சொல்றேன். என் அம்மா விருப்பப்பட்டால் தாலி கட்டிட்டு நீ அழைச்சிட்டு போகலாம்.

“என்னால உங்க வீட்டுக்குள்ள வர முடியாது. உங்க அப்பாவிடம் சத்தியம் செய்திருக்கேன். அவர் இப்பொழுது இருந்தாலாவது அவர் எண்ணமறிந்து நடக்கலாம். அவரும் இல்லை. அவர் இருந்தாலும் இந்த பிச்சைக்காரியை ஏத்துக்க மாட்டார்” ராதிகா பட்டென கூறி விட்டார். இளவேலன் மனம் உடைத்து போனது.

ராது, நீ பிச்சைக்காரி இல்லம்மா. அவர் என் மீதுள்ள கோபத்தில் ஏதாவது பேசி இருப்பார்.

“என்னை மன்னிச்சிருங்க” என்ற ராதிகா தன் மகன் பக்கம் திரும்பி, “வீட்டுக்கு வா சத்யா” என்று இளந்திரையனை பார்த்தாள்.

இளவேலன் போகும் அவர் குடும்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாருக்கும் இந்த விசயம் அன்று அவலாகி விட்டது.

பள்ளியில் நுழைந்தவுடன் மாறன் நேராக கலையசரன் மற்றும் அவன் நண்பர்களிடம் சென்றான். அவனை பார்த்து விட்டு சுப்ரியா நகர்ந்தாள்.

கலையசரன் மாறனை தவிர்த்து, அவள் முன் சென்று நின்றான்.

“என்ன?” அவள் கேட்க, “வா..உனக்கு என்னோட நண்பர்களை அறிமுகப்படுத்துகிறேன்” அவள் கையை பிடித்தான்.

“பரவாயில்லை. நீ மாறனோட நண்பன் தான? அவன் தான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தணும். ஆனால் அவனை அறிமுகப்படுத்தப் போறீயா?” நக்கலாக கேட்டாள்.

கலையரசனுக்கு சினம் வந்தாலும் பொறுமையை பிடித்து வைத்து, “நாம மீட் பண்ணோம். மறந்துட்டியா?”

“பார்க்கும் எல்லாரையும் நான் நினைவில் வைத்துக் கொள்வதில்லை” பட்டென சொன்னாள்.

“கலை காம் டா காம்” அவனை அவனே அமைதிபடுத்தி, சரி இப்ப நண்பர்களாகிக் கொள்ளலாம்.

வித்யா சைக்கிளில் பள்ளிக்குள் வந்தாள்.

கலையரசனுக்கு பதில் கூறாமல், “ஹே விது…” என்று அவளது புத்தகப்பையுடன் ஜாலி மூடுக்குள் சென்று சிரிப்புடன் ஆடிக் கொண்டே வித்யாவை மறித்து நின்றாள் சுப்ரியா.

“ஹே, சுபா வழிய விடு. ப்ரேக் பிடிக்கல” வித்யா கத்த, கண்ணை விரித்து சுப்ரியா அப்படியே திகைத்து நின்றாள்.

“வழி விடு” அவள் மேலும் கத்தினாள்.

அந்த பக்கம் சைக்கிளில் வந்து கொண்டிருந்த மகேஷ் பாண்டி இருவரையும் பார்த்தான்.

போகிற போக்கில் சுப்ரியாவை தள்ளி விட்டான். அவள் கீழே விழவும் வித்யாவின் மற்ற பள்ளித்தோழிகள் “வித்யா பார்த்துடி” கத்தினார்கள். பட்டென சைக்கிள் நின்று விட வித்யாவும் கீழே விழுந்தாள். மகி அவளை கடந்து சென்று விட்டான்.

வித்யா விரைந்து எழுந்து சுப்ரியாவிடம் ஓடி அவளை தூக்கி விட்டாள்.

விது, உன்னோட கையில தான் சிராய்ப்பு இருக்கு. இங்க மெடிக்கல் அறை எங்க இருக்கு? கேட்டாள்.

“மெடிக்கல் அறையா?” எல்லாரும் சுப்ரியாவை பார்த்து சிரித்தனர்.

நான் காமெடி ஏதும் சொல்லவில்லையே! இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?

வித்யா தோழி அவளருகே வந்து, “இங்க கீழ விழுந்தால் எந்த ட்ரீட்மென்ட்டும் கிடையாது”

“என்ன சொல்ற? விளையாட்டில் அடிபட்டாலுமா?”

ம்ம்..

அட போங்கப்பா. நான் இதுக்கு முன் படித்த பள்ளியில் என்று அவள் கதையளக்க ஆரம்பித்தாள். அங்கங்கு எல்லாரும் நின்று கொண்டிருந்தாலும் சுப்ரியாவின் பேச்சை கவனித்தனர்.

வித்யாவின் தோழிகள், “அம்மா சாமி. எங்கள விட்ரு” என்று செல்லமாக பேசி அவளது பேச்சை தடுத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

“வாங்க கிளாஸ்க்கு போகலாம்” வித்யா அழைக்க, அவளது கையை இழுத்த சுப்ரியா அவளது கைக்குட்டையை ஈரமாக்கி காயத்தை துடைத்து விட்டாள்.

ரம்யா, ஸ்டாஃப்ஸ் அறை எங்க இருக்கு?

“அதோ..”அவள் கையை காட்ட, “வா விது” என்று அவளை இழுத்தாள் சுப்ரியா.

சுபா, அதெல்லாம் வேண்டாம். நீ துடைச்சு விட்டுட்டேல்ல. சரியாகிடும்.

“சொல்றேன்ல்ல. சுந்தரம் அங்கிள் எங்களை நல்லா பார்த்துக்கிறார். நான் உன்னை பார்த்துக்கிறேன்” சுப்ரியா சொல்ல, கண்ணீர் வடித்தாள் வித்யா.

ஐய்ய, என்ன நீ அழுற?

“உன்னோட பாசம் அவளை கட்டி போட்டிருச்சு” சுப்ரியாவை கட்டி கேலியுடன் நகைத்தாள் பானு..

பானு போதும்டி. அவள விடு மற்றவர்கள் இழுத்தனர்.

“இருங்கடி வாரோம்” என்று வித்யா கையை இழுத்து சென்றாள் சுப்ரியா.

மேம்…சார்..சுப்ரியா அழைக்க, ஹேண்ட்சம் சார் ஒருவர் வந்தார். ஆவென சுப்ரியா அவரை பார்த்தாள்.

“ஏய், அவரு டீச்சர்டி” வித்யா சுப்ரியா காதில் ஓத, “என்னம்மா?” வித்யாவை அவர் பார்த்தார்.

“சார், இவளுக்கு அடிபட்டிருக்கு. மருந்து கொடுங்க” கொடுத்து வைத்தவள் போல அவரிடம் சுப்ரியா கேட்டாள்.

பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு “இல்லை” அவர் புன்னகையுடன் வெளியே வந்தார்.

சுப்ரியா அவர் பின்னே வந்து, சார்..நில்லுங்க. மருந்து கொடுங்க சார்? கேட்டாள்.

நான் மருத்துவர் அல்லம்மா..ஆசிரியர்.

ஆமா சார், நானும் உங்களை மருத்துவர்ன்னு சொல்லலை. படிக்கிற பிள்ளைங்க. விளையாடுவாங்க. அடிபடும். ஒரு மெடிக்கல் ரூம் கூடவா இல்லை..

“அடியேய்…வா போயிடலாம்” பயத்தை தேக்கி வைத்து வித்யா சுப்ரியாவை அழைத்தாள்.

இல்லை. இப்ப என்ன பண்ணணும்? சுப்ரியாவை ஆழ்ந்து அவர் பார்க்க, அவளுக்கு ஒருமாதிரி ஆனது.

“இவர் ஆசிரியர் தானா? ஹப்பா..பயங்கர அழகாக இருக்கார். இல்ல இல்ல அழகில் தான் ஆபத்தும் இருக்கு சுபா” அவளுக்கு அவளே பேசினாள்.

அழகு ஆபத்தா? அவர் புன்னகையுடன் கேட்டார்.

ஹ..அவரை பார்த்து..இல்ல..இப்ப இவளுக்கு மருந்து வேணும் சார்..

“மருந்தெல்லாம் இல்லை” அவர் இடத்தில் சென்று அமர்ந்தார்.

ஐய்யோ..சுபா, எனக்கு ஒன்றுமேயில்லை. வா சுப்ரியாவை அவள் இழுக்க, “ஹே கெர்ல்..வாட் இஸ் யுவர் நேம்?”

சார், “நான் கேட்டது மருந்து. என் பெயர் கேட்டு தான் மருந்து தருவீங்களா?”

“அய்யோ! வாடி” அவளை இழுத்து வந்தாள் வித்யா.

ராஜ் சார், என்னாச்சு? நடுத்தர வயதுடைய ஆசிரியர் ஒருவர் கேட்டார்.

“வெளிய தான் இருக்காங்களா சார்?” ஹேண்சம் ராஜ் கேட்டார்.

இந்த பொண்ண பள்ளியில் தீரன் தான் சேர்த்து விட்டுருக்காரு.

அப்படியா? வேகமாக எழுந்து வெளியே வந்தார்.

ஏன்டி, என்ன பள்ளி இது? காயத்துக்கு போட மருந்து கூட இல்லை. இந்த சார் பார்க்க தான் அழகா இருக்கார். மூளையேயில்லை..

சுபா, “நீ காலிடி” ரம்யா அவர்களிடம் வந்தாள்.

ராஜ் சார் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன சார், “மருந்து கிடைச்சிருச்சா?” அவள் ஏதும் பேசாதது போல கேட்டாள்.

“எனக்கு மூளை இருக்கு. நீ தான் கழற்றி வச்சிருக்கன்னு நினைக்கிறேன்” என்று அவர் பாக்கெட்டிலிருந்து ஆயின்மென்ட் ஒன்றை வித்யாவிடம் நீட்டினார்.

இதை முதல்லவே குடுத்திருந்தா நான் இவ்வளவு பேசி இருக்க மாட்டேன்.

“அதை அவளிடம் கொடுத்தால் யார் சார் போட்டு விடுறது” என்று சுப்ரியா பிடுங்கி வித்யாவிற்கு போட்டு விட்டாள். ராஜ் கையை கட்டிக் கொண்டு அவளை பார்த்தார்.

இந்தாங்க சார், “தேங்க்யூ” அவளது சடையை முன்னே எடுத்து போட்டுக் கொண்டாள்.

ஹலோ..கையை நீட்டினார் ராஜ்.

என்ன சார்?

நாம ப்ரெண்ட்ஸ் ஆகிக்கலாமா? அவர் கேட்க, அனைவரும் அதிர்ந்தனர். வித்யாவும் ரம்யாவும் ஆவென அவனை பார்த்தனர்.

உனக்கு தீரன் சொந்தமா?

ஆமா..ஹ..இல்ல இல்ல. அவரு ரொம்ப நல்லவர். எங்களோட உயிரை காப்பாற்றியதில்லாமல் என்னையும் என்னோட அக்காவையும் படிக்க வைக்கிறார்.

ஓ!

ஆமா, உங்களுக்கு தீரன் சாரை தெரியுமா?

ம்ம்..தெரியும்.

எப்படி? நன்கொடை கொடுக்க வருவாரா?

இல்லை..

அப்புறம் எப்படி தெரியும்?

ராஜ் அவளை விட்டு விலகி மாறனை பார்த்தார். அவன் கண்களால் சுப்ரியாவை பொசுக்கிக் கொண்டிருந்தான்.

அவளும் அவனை பார்த்து விட்டு, “அவனா சார்? அவன் எமகாதவன். திமிரு பிடிச்சவன். எப்பப்பாரு என்னோட சண்டைக்கு வந்துட்டே இருப்பான். நாங்க அவங்க வீட்ல இருக்கிறது அவனுக்கு பிடிக்கவேயில்லை” முகத்தை வருத்தமாக வைத்தாள்.

சுப்ரியா கையை குலுக்கி, “தீரன் என் நண்பன் தான். உனக்கு இங்க ஏதாவது உதவி வேணும்ன்னா கேளு”.

அப்படியா சார்? முதல்ல உங்க பள்ளியில் மெடிக்கல் பொருட்கள் இருக்க ஏற்பாடு செய்யுங்க. அப்புறம் என்னன்னு கேட்கிறேன்..

பலே கில்லாடியா தான் இருக்க? தாடையை தேய்த்தார்.

சார், இப்ப எல்லாரும் அப்படி தான்.

அவர் வித்யாவை பார்க்க, “சாரி சார். இவ இப்படி தான். உங்கள பத்தி தெரியாதுல்ல அதான் இப்படி பேசுறா?”

ராஜ் புன்னகையுடன், “நல்லா தான் இருக்கு” என்று நகர்ந்தார்.

“நல்லா இருக்கா?” ரம்யா வாயை பிளந்து, அடியேய் பசங்களே அவரிடம் பேச பயப்படுவாங்க. அவரிடம் இப்படி பேசி..”ஹப்பா..எனக்கு ஹார்ட்டா இருக்கே!” கையிலிருந்த நோட்டை வைத்து விசிறினாள்.

“எல்லாரும் மனுசங்க தானடி. எதுக்கு பயப்படணும்?” பேசிக் கொண்டே வகுப்பறைக்கு சென்றனர்.

“மாறா, இவ வித்தியாசமா தெரியுறாடா” கலையரசன் தன் நாக்கால் கன்னத்தை சுழற்றினான்.

“வாயாடிடா. யார்கிட்ட பேசணும்? பேசக் கூடாதுன்னு எதுவும் தெரியாது” மாறன் சொல்லி விட்டு எழுந்தான்.

“மச்சீ, அதுக்குள்ள எங்க போற?” அவனை பிடித்து அமர வைத்தனர். கலையரசன் நண்பர்கள். மாறனின் கண்கள் சுப்ரியா சென்ற அறைப்பக்கம் இருந்தது. கலையரசனிடம் ஒருவன் கண்ணை காட்டினான்.

“அவள எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு மச்சீ” கலையரசன் சொல்ல, மாறனுக்கு தூக்கி வாரி போட்டது.

பிடிச்சிருக்கா? அவளையெல்லாம் சமாளிக்க முடியாதுடா..

“எனக்கேத்த பீஸ்ஸா தான் இருக்காடா மாறா” ஓரக்கண்ணால் கலையரசன் மாறனை பார்த்தான்.

கலை, இவ உனக்கெல்லாம் செட் ஆக மாட்டாடா?

“இல்லடா. எனக்கு அவ பக்கத்துல்ல இருக்கணும் போல இருக்கு. ஏலேய் வாங்கடா” கலையரசன் வேகமாக பையுடன் வகுப்பறைக்கு ஓடினான்.

“கலை நில்லுடா” மாறனும் பின்னே ஓடி வந்தான். மாறன் மனதுக்கு கலையின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்காக நண்பனை விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!