Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 27

‘என்ன? கையை பிடிச்சதுக்கே இந்த முழி முழிக்கிறானுங்க, இந்நேரம் தூக்கிட்டு போயிருந்தா எல்லாருக்கும்  அட்டாக் வந்திருக்கும் போலவே…’ என்று நினைத்தவனுக்கு அதனை செய்தால் என்னவென்று தோன்றியது.

உடனே பக்கவாட்டில் தன்னுடன் இணைந்து நடந்த பெண்ணை பார்த்தவன் அவளது  உயரத்திற்கு குனிந்து  “பேசாம உன்னை தூக்கிட்டு போகவா டி…” மெல்லிய குரலில், அவளது செவியோரத்தில் இதழ்கள்  உரசக் கேட்டான்.



Advertisement

‘ அடேய், ரொம்ப ஓவரா போற டா, சும்மாவே  சாவடி வாங்குவ, இப்ப காய்ச்சல் வேற ருத்ர தாண்டவம் ஆடுவா பாரு…’ ஒரு புறம் மனம் கத்த அதனைத் துளியும் கண்டுக்  கொள்ளாமல் பாவையின் பதிலுக்காகக் காத்திருந்தான் அந்த காதல் கிறுக்கன்.

அவனது சூடான மூச்சுக் காற்றிலும், இதழ்களின் தீண்டலிலும் பெண்மையின் மேனி சிலிர்த்தது. சட்டென நின்று ஆடவனை அண்ணார்ந்து பார்த்தாள். அவளது பார்வையில் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி “என்ன தூக்கவா?…” எனக் கேட்டான்.

Advertisement

Advertisement

சொக்கனின் சொக்குப் பொடியில், மீனாட்சி சொக்கித்தான் தீர வேண்டும் என்பது விதியல்லவா? நம் மீனாட்சியும் சொக்கிப் போனாள் அவனது பாவனையில்.

அவளது பார்வையில் “என்னவாம்…” எனக் கேட்டான் இப்போதும் அதே பாவனை அவனிடத்தில். தனது தடுமாற்றத்தைத் துளியும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்

Advertisement

“ஒன்னுமில்லை…” என்பதைப் போல் தலையாட்டிவிட்டு நகர, சுவற்றில் அடித்த பந்தைப் போல் மீண்டும் கலையிடத்தில் வந்து நின்றாள். அப்பொழுது தான் அவனது கைகளுக்குள் தன் கைகள் அகப்பட்டு கிடைப்பதை உணர்ந்தாள். இந்நேரத்தில் அவனைத் திட்டக் கூட வரவில்லை அவளுக்கு.

மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டப்படி கலையின் கண்களை நேருக்கு நேர் பார்த்து புருவத்தை உயர்த்தி இருவரின்  கைகளையும் கண்களால் காட்டினாள்.

“அதுக்கென்ன…” என்றவன் பாவையை மெல்ல நெருங்கி “தூக்கவா டி…” எனக் கேட்டான்.  அவனது இதழ்களையே பார்த்திருந்தவளுக்கு குப்பென்று வியர்த்தது. என்னமோ செய்தான் அவன். வார்த்தைகளால் வடிக்க முடியாத ஓர் உணர்வு அவளை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக மற்றவர்களின் இதழ்களின் அசைவை வைத்து தான் மற்றவர்களின் வார்த்தைகளை கணித்துக் கொண்டிருக்கிறாள். உண்மையில் இதுநாள் வரையிலும் இப்படியான உணர்வு அவளை ஆட்கொண்டதில்லை. முதல்முறையாக இப்படியான உணர்வில் சிக்கித் தவிக்கிறாள்.

பாவை அசையாது நின்றிருந்ததை பார்த்தவன் “அப்ப, உனக்கு ஓகே வா? தூக்கவா?…” எனக் கேட்டுக் கொண்டே நெருங்கினான்.

அவன் நெருங்கி வரவும் தன் நினைவிலிருந்து வெளி வந்தவள் அப்போது தான் கலையின் கேள்வியை உள்வாங்கினாள்.

கலையிடம் தன் குடும்பத்தை உணர்ந்ததலோ என்னவோ? அவனிடம் மட்டுமே பழைய ஆரி  எட்டிப் பார்த்தாள்.

அச்சமயம்”தொப்பை இடிக்காதா?…” எனக் கேலியாக கேட்டு வைத்தது மட்டுமல்லாமல் அவனது கையில் அகப்பட்டிருந்த தனது கையை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளது கேலியில், முதலில் புரியாது விழித்தவன் அது புரிந்ததும் பல்லைக் கடித்துக்கொண்டு “அடியே அது எங்க டி இங்க இருக்கு…”படிக்கட்டுகளாக இருக்கும் தனது வயிற்றை பார்த்தபடி கூறியவனுக்கு அப்போது தான் உரைத்தது தன் கேள்விக்கு அவள் கோபம் கொள்ளாமல் பதில் சொல்லிவிட்டு சென்றதே.

“ஹேய்…” என்று மனம் கூச்சலிட்டு கத்த, சந்தோச புன்னகையுடன் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து, தனக்கு முன்னால் செல்லும் பெண்ணைப் பார்த்தான்.

எப்போதும் போலவே அவளது நடையிலிருந்த கம்பீரமும், நிமிர்வும் இவனை ரசிக்க வைத்தது.

‘இது ஆக்டிங் மேடம். ஆரம்பித்துல இதைத்தான் ஆக்டிட்டூட், எனக்கு இவளை பிடிக்கலன்னு சொல்லிட்டு இருந்தான்…”  இவனது ரசிப்பை லாரன்ஸ் ஸ்டைலில்  கேலி செய்தது மற்றொரு மனம்.

அதனை எப்போதும் போல தூசியென தட்டிவிட்டு நான்கே எட்டில் பெண்ணை அடைந்தவன் அவளது விரல்களுக்குள் தன் விரல்களை கோர்த்துக் கொண்டான் இறுக்கமாக.

தன் விரலோடு இணைந்த விரல்களை பார்த்தவள் நிமிர்ந்து ஆடவனைப் பார்த்து “என்ன…” என்பதை போல் புருவம் உயர்த்தினாள்.

சிறு தோள் குலுக்களுடன் “இப்ப, இந்த நிமிசம் உன்னை இறுக்கமா ஹக் பண்ண தோணுது…” ஆழ்ந்த குரலில் கூறினான்.  அதற்கு பதில் கூறாது ஒரு பார்வை பார்த்தவள் திரும்பி நடக்க,  அவளோடு இணைந்து  நடந்தான் இவனும். அச்சமயம் பின்னிப் பிணைந்திருந்த இருவரின் விரல்களும் இன்னுமின்னும் இறுக்கமாக ப்பிணைந்து அழுத்தமாக முத்தமிட்டுக் கொண்டது.

இங்கு, இருவரின் இணைக்கத்தையும் அலுவலகமே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அக்கணம் அசோக்குடனும் சரி  மற்ற ஆடவர்களிடமும் சரி, ஆரி நடந்து கொள்ளும் முறை அனைவரின்  மனக்கண்ணிலும் மின்னி மறையாமல் இல்லை.

ஆம், மற்ற ஆடவர்களிடம் அவளது பார்வையே  எட்ட நில் என்பதை போல் தான் இருக்கும். நான் உனக்கு தந்தை போல, சகோதரன் போல  என்று பாசக் கொடித் தூக்கினாலும் அவளது பார்வையில் எட்ட நில் என்ற செய்தி இருக்கும். அப்படியானவள் கலையிடம் காட்டும் இந்த முகம் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

*****

“என்னாச்சு பாப்பா,..” அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவர்களை பார்த்துக் கேட்டார் வேலு.

அதற்கு அவள் பதில் கூறும் முன்பே

“உடம்பு சரியில்ல அண்ணா,  நீங்களும் இவளோட டல் ஃபேஸ் பார்த்து ஆஃபிஸ் கூட்டிட்டு வந்து இருக்கீங்க…” எனக் கேட்டவன்  வேலுவின் பதிலைக் கூட கேட்காது கார் கதவில் கை வைத்தான்.

அவன் செயல் புரிந்து காரை அன்லாக் செய்தார் வேலு. கார் கதவை திறந்து விட்டவன் “ஏறு மா…” என்பதை போல மங்கையை பார்த்தான் .  அவளோ வாகனத்தில் ஏறாது மறவோனை பார்த்த விழி பார்த்தபடி நின்றாள்.

“என்னாச்சு உள்ளப் போ…” என்றவன் வேலுவிடம் “நீங்க இங்கேயே இருங்க நான் கூட்டிட்டு போயிட்டு வரேன். ஃபேமிலி டாக்டர் யாராவது இருக்காங்களா?…” எனக் கேட்டபடி வேலுவிடம் சாவிக்காக  கை நீட்டினான்.

சாவியை அவனிடம் நீட்டியபடி அர்த்தமாய் சிரித்தார் வேலு. பதிலுக்கு புன்னகை சிந்தியவன் சிறு தலையசைப்போடு வாகனத்தில் ஏறிக் கொண்டான்.

“போலாமா டி மண்டமூக்கி…” அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்டான்.

அவனது மாண்டமூக்கி என்ற விளிப்பில் கடுப்பானவள்

“கலைவாணன்…” எனப் பல்லைக் கடித்தாள்.  அவளது கலைவாணன் என்ற அழைப்பு எப்படி வந்தது என நினைத்தவனுக்கு இதழின் ஓரத்தில் மெல்லிய புன்னகை அதே புன்னகையோடு வாகனத்தை இயக்கினான்.  வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப கலையின்  நினைவுகளும்  அன்றைய நாளை நோக்கி பயணித்தது.

அன்று ஆரியின் வீட்டில்…

மங்கையிடம் தலையாட்டிவிட்டு வெளியில் வந்தவனின் கண்களில் விழுந்தனர் வேலுவும், ரத்னாவும். இவனை கண்டதும்  வேலுவின் புருவங்கள் கேள்வியாக வளைந்தது என்றால், ரத்னாவின் புருவங்கள் யோசனையாக வளைந்தது.

“நீங்க இங்க என்ன பண்றீங்க தம்பி…” எனக் கேட்டார் வேலு.

“அவளை அங்க தனியா அனுப்பிட்டு நீங்க  எங்க போனீங்க?..” அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்விக் கேட்டான்.

அவனது கேள்வியில் சற்றே பதட்டம் அடைந்தவர்”பாப்பாக்கு என்னாச்சு? ஒன்னுமில்லையே?…”எனக் கேட்டார். கண்களை மூடித் திறந்து ஒன்னுமில்லை என்பதை போல் தலையாட்டினான் ஏகலைவன்.

பெருமூச்சுடன் “பாப்பாவை கூட்டிட்டு போக அசோக் சார் வண்டி அனுப்பி விட்டார் தம்பி. நான் வரவான்னு  ப்பாப்பாட்ட கேட்டேன், வேண்டாம்னு சொல்லிடுச்சு. அதான் நான் கொஞ்சம் அசால்டா இருந்துட்டன். அங்க ஒரு பிரச்சினையும் இல்லையே…” அசோக்கின் தாயைப் பற்றி அறிந்தவராய் கேட்டார்

வேலு.

“ம்ம்…” என ஆரம்பித்தவன் அங்கு நடந்ததை கூறினான்.

“அந்தம்மாக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கணும்.  அன்னைக்கு ஆரி பாப்பாவை கௌரவக் கொலை பண்ணிடுங்கன்னு சொல்லுச்சாம் அப்பவே மூஞ்சி முகரையெல்லாம் பேத்து விட்டிருந்தா இந்தளவுக்கு பேசி இருக்காது…” எனக் கூறி பல்லைக் கடித்தார் வேலு.

அவரது பேச்சில் திடுக்ககிட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

“அவங்க அப்படி பேச நீங்களும் தானே காரணம். அசோக், ஆரி பத்தி தப்பா பேசறாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சும் ஏன் சும்மா இருந்தீங்க, இதுவே உங்க பொண்ணா இருந்திருந்தா பார்த்திட்டு சும்மா இருந்து இருப்பீங்களா?…” நிதானமாக வெளிவந்தது அவனது கேள்வி.

“நான் கோபப்படாம இருந்திருப்பீங்க நினைக்கிறீங்களா?…” எனக் கேட்டவர் குரலில் கோபம் இருந்ததோ.

‘என்னை அவங்க தப்பா சொல்றாங்கன்னா சொல்லிட்டு போகட்டும்.  ஒவ்வொருத்தர் கிட்டயும் என்னை நான் ப்ரூஃப் பண்ணிட்டு இருக்க முடியாது.அண்ட் நீங்க கேட்கலாம் இப்படி பேசற ஆளை வேலையை விட்டு நிறுத்த வேண்டியது தானே எதுக்கு  வைச்சுட்டு இருக்கேன்னு. ஒருத்தன் என்னை பேசறான்னு அவனை நான் வேலையை விட்டு நிறுத்திட்டா அடுத்தவன் பேசாம இருப்பானா? நம்ம முன்னாடி பேசலன்னாலும் வெளிய போயி பேசத் தான் போறாங்க. பொரணி பேசறவனையெல்லாம் வேலையை விட்டு நிறுத்தனும்னா இங்க இருக்கிற எல்லாரையும் வேலையை விட்டு நிறுத்தனும்…” என சிரித்தவள்

மீண்டும்

‘மோர் ஓவர் எவன் என்ன வேணாலும் பேசிக்கிட்டும் அதைப் பத்தி எனக்கு கவலையில்லை அதை கேர் பண்ண எனக்கு நேரமும் இல்லை.நீங்களும் அதே போல இருங்க, இப்படியான விஷயத்தை என்கிட்ட கொண்டு வராதீங்க.அதை பெருசா பேசவும் வேண்டாம்…’ அன்றொரு  நாள் ஆரி கூறியதை கூறினார் வேலு.

அவள் கூறியதும் சரியாகப் பட்டது அவனுக்கு. உண்மை தானே ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள் அதற்கெல்லாம் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் சந்தோசம் என்பதே இருக்காது அல்லவா. இருந்தும்  கோவிலென்றும் பாராமல் அசோக்கின் தாய் பேசியதை இவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.  ‘அதுக்கு ஒரு நாள் இருக்கு…’ என நினைத்துக் கொண்டான்.

இவனது யோசனை நிறைந்த முகத்தை பார்த்துக் கொண்டே

மேலும் தொடர்ந்தார் வேலு. “ஆனா இதை அசோக் சாரோட அம்மா வரைக்கும் கொண்டு போனது யாருன்னு தெரியல தம்பி. அதையும் நம்பிட்டு அந்தம்மா இப்படி பேசி இருக்கு பாருங்க. இத்தனைக்கும் அந்தம்மா பாப்பாவுக்கு சொந்தம் தான்…” என ஆரம்பித்தவர்  அசோக்கின் தாய் செய்த,செய்ய நினைத்த அனைத்தையுமே கூறினார்.

அவர் பேச பேச முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அதன் பிரதிபலிப்பு கோவிலில் நன்றாகவே வெளிப்பட்டது. அன்று அசோக்கின் தாயை மிரட்டியது கூட வேலு கூறியதை வைத்து தான்.

அதே போல் அசோக்கின் தாய் அப்படி நடந்துக் கொள்ளவில்லை என்றால் அவள் மீது தனக்கு இருப்பது வெறும் ஈர்ப்பு தான் என்று இன்று வரையிலும் நினைத்திருப்பான்.

அக்கணம் “ஏனுங்க,  நீங்க கலைவாணான் தம்பி தானுங்க…”  ரத்னாவின் குரலில் இருவரும் அவரைப் பார்த்தனர். புருவம் உயர்த்தி கேள்வியாக அவரைப் பார்த்தான்.  இப்போது நன்றாகவே இவனை அடையாளம் கண்டுக் கொண்டார் ரத்னா.

இருக்காத பின்னே… தன்னுடைய ஒரு மணி நேர அழுகைக்கு ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு சென்றவன் அல்லவா… அதனாலேயே இவருக்கு அவனது முகம் நன்கு பரிட்சயம்.

அது மட்டுமல்ல ஆரி எப்போது இங்கு வந்தாலும் அவன் எழுதிக் கொடுத்த பத்திரிக்கையை பார்த்து விட்டு தான் செல்வாள். அவள் எப்போதெல்லாம் பத்திரிக்கையை கையில் வைத்திருக்கிறாளோ அப்போதெல்லாம் இவனது நினைவு அவருக்கு வராமல் இருக்காது.

“கலைவாணன் இல்லைங்க… ஏகலைவன்…” என புன்னகையோடு கூறியவனுக்கு ஆரியின் கலைவாணன் என்ற பெயரும் நினைவு வராமல் இல்லை.

“ஏனுங்க தம்பி, என்னை உங்களுக்கு நினைப்பு இல்லைங்களா, நீங்களும் காசி சாரும் பத்திரிக்கை கொடுக்க இங்க வந்து இருக்கீங்க…” என்றார் அவனுக்கு நினைவூட்டும் வகையில்.

“சரியா தெரியலைங் கா, இங்க நிறையா இடத்துக்கு போனங்களா சரியா நினைவு வரலைங்க…” என்றவன் சுற்றிலும் பார்வையை சுழல விட்டான். என்றாவது ஒரு நாள் வந்த நினைவு இருக்கிறதா என்பதை போல்.

“அன்னைக்கு கூட நான் அழுதனுங்களே… நீங்க கூட என்னமோ பத்திரிகையில எழுதி குடுத்துட்டு போனீங்க…”  மேலும் கூற வந்தவரை

“ரத்னா…” என்று அதட்டினார் வேலு.

“இல்லைங்க மாமா, நாங்கூட சொல்லுவேன்ல, பாப்பா இங்க வந்தா பாத்திரிக்கையை பார்த்திட்டு போவுதுண்ணு, அது இவரு எழுதிக் கொடுத்த பத்திரிக்கையை தானுங்க…” என்றதும் வேலுவின் கண்கள் அகல விரிந்தது…

இப்போது அவனுக்கு நினைவு வந்தது. மனம் ஒருபக்கம் ஆர்ப்பரித்தது அதே கணம்  ‘ஜஸ்ட் பார்த்திட்டு போறதுல என்ன இருக்கு…’ எனக் கேட்டும் வைத்தது.

மனதின் கேள்வியில் முகம் சுருங்கியவனாய் “பெருசா எதுவும் இல்லைங்க கா, ஆறுதலா நாலு வார்த்தை எழுதினேன்…”எனக் கூறியவனுக்கு அன்றைய கவிதை நினைவு வந்தது.

“ஓ, அதனால் தான் பாப்பா உங்க குரலைக் கேட்க முயற்சி செஞ்சுருக்கும் போல?…” என வேலு சொல்ல அவரை விழிகள் விரிய பார்த்தான் கலை. அவனது விழி விரிப்பை பார்த்தபடி அன்றைக்கு நடந்ததை கூறினார் வேலு.

அவர் கூற கூற மெல்லிய பூகம்பம் தாக்குவது போல் ஓர்  மாயை அவனுள்… அதே கணம் இவர்கள் கூறுவதை வைத்து அவளுக்கு தன்மீது இருப்பது காதல் என்று நினைக்க முடியவில்லை அவனால்.

அப்போது அதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து விட்டவன் அதற்கு அடுத்த நாள் வேலுவும், ரத்னாவும்  கூறியதை வைத்து அவளை சீண்டி வாங்கி காட்டிக் கொண்டான் என்பது நாம் அறிந்தவை தான்.

“யோவ்…வண்டி

யை நிறுத்தியா…” என்ற குரலில் தன் நினைவிலிருந்து வெளிவந்தவன் சட்டென வாகனத்தின் வேகத்தை குறைத்து மங்கையை பார்த்தான். அக்கணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!