Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 9

அத்தியாயம் 9

கலையின் செய்கையில் ஆரி புன்னகைக்கவில்லை என்றாலும் எரிச்சலடையவில்லை. தன் எதிரில் நின்றவனை அமைதியாகப் பார்த்தாள்.



Advertisement

பாவையின் விழி மொழியும் புரியவில்லை அவள் என்ன நினைக்கிறாள் என்றும் கணிக்க முடியவில்லை கலையால். ஆரியின் அழுத்தமான பார்வையே அவனுக்கு அத்தனை எரிச்சலைக் கொடுத்தது… “ஷு தானே மாத்தி போட்டுட்டு வந்தேன். என்னவோ பேன்ட்டுக்கு மேலை ஜட்டியைப் போட்டுட்டு வந்த மாதிரி ரியாக்ட் பண்ணிட்டு இருக்கா…” என முணுமுணுத்தபடியே ஆரியைப் பார்த்தான்.

ஆரி இவனையேப் பார்த்துக் கொண்டிருந்ததால் கலையின் முக பாவனையும், முணுமுணுத்த வார்த்தைகளும் தெளிவாகப் புரிந்தது.

Advertisement

Advertisement

ஏற்கனவே எரிச்சலிலிருந்தவள் இவனின் கிண்டல் பேச்சில் சுள்ளென்று கோபம் வர “உங்க பெர்சனல் லைஃப்ல நீங்க எப்படி மாத்தி மாத்தி டிரஸ் போட்டுட்டு வந்தாலும் எனக்குப் பிரச்சனையில்லை. ஆபீஸ்ன்னு வரும் போது நீட்டா வரனும். இப்படி இந்த காலுக்கு ஒன்னு அந்த காலுக்கு ஒன்னுண்ணு ஷூஸ் போட்டுட்டு கோமாளி மாதிரி வந்தால் பாக்குற கிளைன்ட் ‘என்ன உன் கம்பெனி ஸ்டாப் இப்படி கிறுக்கன் மாதிரி வந்திருக்காருன்னு…’ நக்கலா கேட்பான். அப்படி கேட்கிற ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா என்னால…” வள்ளென்று விழுந்தவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே

 “ஃபிப்டீன் மினிட்ஸ் டைம் தரேன் ப்ராப்பர் டிரஸ் கோடுல வாங்க…” என்றபடி நாற்காலியில் கோபமாக அமர்ந்தாள். காரிகையின் கைகள் தன்னாலேயே அவளின் பிறை நெற்றியை அழுத்தி வருடியது.

Advertisement

ஆரியின் பேச்சில் உண்டான கோபத்தையும், எரிச்சலையும் வெளிக்காட்ட முடியாது சட்டென அங்கிருந்து நகரப் போனவன் ஏனோ திரும்பி ஆரியைப் பார்த்தான். பாவை அமர்ந்திருந்த விதம் அவனை அசைத்தது. மங்கையின் பேச்சில் எழுந்த எரிச்சலும், கோபமும் சட்டென மறைய மீண்டும் காரிகையின் முன் நின்றான்.

ஏதோ ஓர் உள்ளுணர்வு நிமிர்ந்து பாரெனக் கட்டளையிடத் தலையை நிமிர்த்திப் பார்க்க எதிரில் கலை தான் நின்றிருந்தான். அவனை என்னவென்பது போல் புருவத்தை உயர்த்திப் பார்த்தாள்.

அவள் நிமிரவேக் காத்திருந்தவன் போல

“சாரி தூக்கத்தில மாத்திப் போட்டுட்டு வந்துட்டேன் நினைக்கிறேன்…” என்றான். உண்மையில் அவளிடம் பணிந்து போகும் தன் மானங்கெட்ட மனதினை நினைத்து ஒருபுறம் எரிச்சலாக வந்தது கலைக்கு…

அவனையே இமைக்காதுப் பார்த்தவள் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டப்படி “சரி இப்ப என்னப் பண்ணலான்னு சொல்றீங்க…” என்று கேட்டாள்.

டாடா காட்டி சென்ற எரிச்சலும், கோபமும் மீண்டும் ஹாய் சொல்லி தன் தலையில் அமர்வதற்குள் அவளிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தவன் குரலில் அவசரத்தைத் தேக்கி

“இப்போதைக்கு ஆபிஸ்ல இதெல்லாம் யாரும் கவனிச்சுக் கேட்கப் போறதில்லை மேடம். அப்படியே யாராவதுக் கேட்டாலும் நியூ ட்ரெண்ட்ன்னு ஏதாவது சொல்லிடறேன். இப்ப மீட்டிங்கு டைம் ஆச்சு போகலாம். அண்ட் போற வழியில் தான் என் வீடிருக்கு ஒரு ஃபைவ் மினிட்ஸ் டைம் கொடுத்த போதும் வேற ஷூஸ் மாத்திட்டு வந்துடுவேன்…” படப்படவெனக் கூறிவிட்டு அவளைப் பார்த்தான்.

ம்ம் என்றும் சொல்லவில்லை ம்ஹும் என்றும் சொல்லவில்லை. அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு எழுந்தவள் முன்னால் நடந்தாள். “இப்படி சொல்லாமல் போனால் நான் எப்படி எடுத்துக்கறதாம்…” என முணுமுணுக்க அவளோ அவனின் குரலைக் கேட்டும்(?) கேட்காதவள் போல் வெளியேறிவிட்டாள்..

”ராங்கி காதில கேட்டும் கேட்காமல் போறா பார்…திமிரு திமிரு உடம்பு முழுக்க திமிரு…’ என மனதில் மங்கையை வறுத்தெடுத்தபடியே அவ்வறையிலிருந்து வெளி வரவும் எதிரில் ஜீவா வரவும் சரியாக இருந்தது.

“ஹாய் டூட், இன்னும் இங்க தான் வேலை செஞ்சிட்டு இருக்கீங்களா? நான் வேலையை விட்டு நின்னுட்டீங்கன்னு நினைச்சேன்…” என ஆர்ப்பாட்டமானக் குரலில் கேட்டவனை முறைத்தான் கலை.

கலையின் முறைப்பில் சிரித்தவன்”அதில்லை டூட், ஃபர்ஸ்ட் டே உங்களைப் பார்த்தது. அதுக்கு அப்பறம் உங்களை ஆபிஸ்ல பாக்க முடியலையா… சோ ரெங்கி நாயகியோட தொல்லைத் தாங்க முடியாம ஓடிட்டீங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப எதற்சியா இந்த பக்கம் கிராஸ் பண்ணும் போது மேம் வாய்ஷும் உங்க வாய்ஸும் கேட்டுச்சு. எப்படியும் மேம் பேசின பேச்சுக்கு சொல்லாம கொள்ளாம வேலையை விட்டுட்டு ஓடிப் போனாலும் போயிடுவீங்க நினைச்சேன் அதான் உங்களைப் பார்த்து ஒரு அட்டனஸ் போட்டுட்டு போகலாமேன்னு வந்தேன்…” எனக் கிண்டலாக மொழிந்த ஜீவாவின் பேச்சை அப்படியே ஸ்கிப் செய்தவன்

“எனக்கு எப்பல்லாம் இந்த வேலையை விட்டு நிக்கலான்னுத் தோணுதோ அப்பல்லாம் நீங்க ஞாபகம் தான் வரீங்க டூட்…” என்றான் சின்ன சிரிப்போடு.

‘நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். இவன் என்ன சொல்றான்…’ என நினைத்தபடியே கலையைப் பார்த்தான்.

ஜீவாவின் பார்வையில் மெல்லச் சிரித்தவன் “அது வந்து டூட் நம்ம ரெங்கி மேடம் எவ்வளவு தான் மானங்கெடப் பேசினாலும் எதையுமே காதில வாங்கிக்காம இரண்டு வருசமா இங்கேயே வேலை செய்யறீங்கல்ல அதை சொல்றேன்… மோஸ்ட்லி ஜாப்பை ரீசைன் பண்ணிட்டுக் கோபிக்கே போயிடலாமான்னு தாட் வரும் போதெல்லாம் அவனே சுடு சொரணை இல்லாம இரண்டு வருஷமா இருக்கான். நீ இருந்தா என்னன்னு என் மனசு சொல்லிட்டே இருக்கும். சோ மேடம் எப்போ எல்லாம் என்னைத் திட்டறாங்களோ அப்ப எல்லாம் உங்களைத் தான் நினைச்சுப்பேன்…” எனச் சிரிப்புடன் கூற ஜீவாவின் முகம் கறுத்து விட்டது.

அவனின் இருண்ட முகத்தைப் பார்த்தும் பார்க்காதவன் போல

“ஓகே மேன் டைமாச்சு… ஈவ்னிங் பார்ப்போம்…” எனக் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி வேக நடையுடன் அங்கிருந்து வெளியேறினான்.

ஆரி இந்நேரம் கிளம்பியிருப்பாள் அவளுக்கு முன் செல்ல வேண்டும் என நினைத்தபடியே வெளியில் வந்தவன் கண்களில் விழுந்தது ஆரியின் நான்கு சக்கர வாகனம்.

யோசனையில் வளைந்த புருவங்களுடன் ஆரியின் வாகனத்தைத் தாண்டி சென்றவன் மனமோ ‘என்ன இவ இன்னும் இங்கேயே இருக்கா? ஏதாவது பிராப்ளமா இருக்குமா? கேட்போமா…’ என நினைத்தாலும் கேட்கவில்லை.

பைக்கில் ஏறி ஹெல்மெட்டை அணிந்தவன் “தம்பி… தம்பி…” என்ற டிரைவர் வேலின் குரலில் திரும்பிப் பார்த்தான்.

அவரோ வாகனத்திலிருந்து இறங்கி கலையை நோக்கி வந்தார். தன்னை நோக்கி வந்தவரிடம்

“என்னாச்சு ண்ணா? அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் கார் ப்ரேக் டவுனா? மேடமை நான் வேணா கூட்டிவிட்டுப் போகவா? என் பைக்ல வருவாங்களா?…” எனப் பின்னால் திரும்பி தன் ஆர். ஒன் ஃபிப்டி பைக்கின் சீட்டைப் பார்த்தபடியே கேட்டவனைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்தவர் “அதெல்லாம் ஒன்னுமில்லை தம்பி… பாப்பா உங்களை எங்களோடயே வர சொன்னாங்க…” என்றதும்

“இல்லைண்ணா பரவாயில்லை…” என மறுத்தவனின் கண்முன் சற்று முன் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த பாவையின் முகம் மின்னி மறைந்தது…

மனமோ செல் என்று கூற மதியோ அவளுடன் செல்ல வேண்டாமென கடுப்படித்தது. “ஏன் போக கூடாதுன்னு சொல்ற?…” என அவசரமாக மதியிடம் விவாதத்திற்குச் சென்றது அவனின் பொல்லாத மனம்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ பேசனது எல்லாத்தையும் மறந்துட்டு உன் வாழ்நாளில பொண்ணுங்களையே பார்க்காதவன் மாதிரி அவளைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு உட்கார்ந்திட்டிருப்ப… அது மட்டுமல்ல கண்ணுக்கேத் தெரியாத அந்த பிரவுன் கலர் மச்சத்தைப் பார்த்ததும் உன் மானங்கெட்ட இதயம் படபடன்னுத் துடிக்க ஆரம்பிச்சுடுது. அதை தடுக்கறேங்கற பேருல ஏதேதோ கிறுக்குத் தனம் பண்ணி என் இமேஜை டேமேஜ் பண்ற…” என பெரியதாக அலட்டிக் கொண்ட மதி அதன் பேச்சை முற்றும் முழுதாக முடிக்கும் முன் ஆரியின் காரில் அமர்ந்திருந்தான் கலை.

அவன் செய்கையில் மதி அவனைக் காரி உமிழ்ந்து விட்டு எரிச்சலுடன் சென்று விட மனமோ மதியைப் பார்த்து கைதட்டிச் சிரித்தது… இரண்டையும் ஒருவாறு அடக்கியவன் பின் சீட்டில் அமர்ந்திருந்தவளைப் பார்க்கலாமா என்று திரும்ப அவளோ அலைபேசியில் கவனமாக இருந்தாள். “என்ன ரொம்ப தீவிரமா பார்த்துட்டு வரா… என்னவா இருக்கும்?…” என நினைத்தவன் சற்றே எக்கி அவளின் அலைபேசியைப் பார்க்க அவனின் கண்கள் அப்படியே விரிந்து கொண்டது.

“ஆபிஸ்ல கேமரா இருக்கா?…” என்ற கேள்வி தான் முன்னால் வந்து நின்றது அவனுக்கு. அவன் எக்கி பார்ப்பதைப் பார்த்த வேலுவோ

“என்னாச்சு தம்பி மேடத்தை கூப்படனுமா…” எனக் கேட்டார். பின்னால் திரும்பியிருந்தவன் “அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணா…” எனக் கூறிவிட்டு முன்னால் திரும்பிக் கொண்டான். அதற்கு மேல் சென்ற நிமிடங்கள் அனைத்தும் அமைதியாகவே செல்ல ‘ஐயோ..’ என்றிருந்தது கலைக்கு. எத்தனை நேரம் காரின் கதவோடு பல்லி போல ஒட்டிக் கொண்டு வருவது என்று நினைத்தவன்

“ஆமா அண்ணா எத்தனை வருசமா இங்க வேலை பார்க்குறீங்க…” என வேலிடம் தன் பேச்சை ஆரம்பித்தான்.

“எனக்கு பதினெட்டு வயசாகும் போதே இங்க வந்து சேர்ந்தேன் தம்பி இப்ப எனக்கு நாற்பத்தி ஐஞ்சு வயசு ஆகுது.. அப்ப நான் எத்தனை வருசமா இங்க இருக்கேன்னு நீங்களே சொல்லுங்களேன்…”எனக் கேட்டார் சிரிப்போடு

“என்ன அண்ணா குரூப் ஃபோர் கொஸ்டின் மாதிரி கேட்கறீங்க…” என பாவமாக கேட்டதும் சத்தமிட்டு சிரித்தார் வேலு.

அவரின் சிரிப்பில் பின்னால் திரும்பி பார்த்தான். ஆரியும் தன்னை கவனித்து கொண்டிருப்பாள் என்ற எண்ணம் கலைக்கு. ஆனால் அவளோ அவனுக்கு மின்விளக்கை பரிசளித்தப்படி போனில் தான் மூழ்கி இருந்தாள்.

“என்னாச்சு தம்பி பாப்பாவை கூப்பிடனுமா…” என்றார் சட்டென மறைந்த சிரிப்போடு

“அதெல்லாம் ஒன்னுமில்ல ண்ணா… நம்ம வேற சத்தமா பேசி சிரிச்சிட்டு வரோம் மேடத்துக்கு டிஸ்டர்பா இருக்குமோன்னு நினைச்சேன்….” எனச் சமாளிப்பாகக் கூறினான்.

“அதெல்லாம் பாப்பா எதுவுமே நினைக்க மாட்டாங்க…நீங்கத் தாராளமா பேசிட்டு வாங்க…” என்றார் வேலு.

“ஹப்பாடி..” என பெருமூச்சுடன் விட்டவனின் முகத்திலேயே காரி உமிழ்ந்தது அவனின் மதி.

அதனைப் பொருட்படுத்தாமல் “சரி நீங்க சொல்லுங்கண்ணே எத்தனை வருசமா வேலை பாக்குறீங்க…” என மீண்டும் கேட்டான்

“கிட்டத்தட்ட இருபத்தி ஏழு வருசம் முடிய போகுது தம்பி…” என்றார் அமைதியாக

“இருபத்தி ஏழு வருசம் ஆகுதா… அடேங்கப்பா அப்ப இருந்தே இருக்கீங்களா…”என ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஆமா தம்பி நான் அங்க வேலைக்குப் போன காரணமே நம்ம பாப்பா தான்…” என ஆழ்ந்த புன்னகையுடன் தொடர்ந்தார்.

“அப்ப பத்மா அம்மா(ஆரியின் அம்மா) நிறை மாசமா இருந்தாங்க. ஐயாவும் வேலை வேலைன்னு இருந்ததெனலா பத்மா அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்கும் வரதுக்கும் ஆள் இல்லைன்னு கொஞ்ச நாளைக்கு என்னை வேலைக்கு சேர்த்தாங்க…” என்றதும்

“ஹிம் அப்பறம்…” எனக் கதை கேட்பது போல் கேட்டான் கலை

“நான் ஈரோடு அந்தியூர் பக்கம் தம்பி. ஏழ்மையான குடும்பம் தான் எங்களோடது. ஒரு வேளை சாப்பாட்டுக்கே நிறையக் கஷ்டம் பட்டோம். அப்போ எங்களுக்கு தெரிந்தவர் மூலமா இந்த வேலை எனக்கு கிடைச்சது. ரொம்ப சந்தோசமா வந்தேன் ஆனா கொஞ்ச நாளைக்குத் தான் வேலைன்னு சொன்னதும் அடுத்து என்னடா பண்றதுன்னு தெரியாம தான் இருந்தேன்… மூணு மாசத்துல ஆரி பாப்பாவும் பிறந்துட்டா…

பாப்பா பிறந்த நேரம் சாருக்கு மட்டுமல்ல எனக்கும் நல்ல நேரம் வந்துருச்சு. அந்த சமயம் சாருக்கு பெரிய புராஜெக்ட் ஒன்னு கிடைச்சது. அந்த புராஜெக்ட் சம்மந்தமா எப்ப வேணாலும் எங்க வேணாலும் போகறது போல இருக்கும். நீ இங்கேயே இருந்துடுப்பான்னு சொல்லிட்டார். அப்ப இருந்து இப்ப வரைக்கும் என் வாழ்க்கை இங்கேயே தான் தம்பி. இங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிட்டேன். இரண்டு பசங்க இருக்கு எனக்கு. இப்ப இரண்டு பேரும் சென்னையில ஃபர்ஸ்ட் இயர் காலேஜ் படிச்சுட்டு இருக்காங்க…” என்றார் புன்னகையோடு.

வேலின் புன்னகை அவனையும் தொற்றிக் கொள்ள அவரை பார்த்துப் புன்னகைத்தவன் பார்வை பின்னால் அமர்ந்திருந்தவளிடம் செல்லத் துடிக்க ‘அவர் உன்னைத் தான் பார்த்திட்டு இருக்கார்…’ என மனம் எச்சரிக்கை செய்யவும் ஆரியின் புறம் திரும்பவேயில்லை ஏகலைவன்.

ஆனால் ஆரம்பித்தில் இருந்தே ஆரி அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். தொலைப்பேசியில் கவனம் வைத்தபடி வந்தவள் எதற்சியாக வாகனத்திலுள்ள கண்ணாடியைப் பார்த்தாள். சிரித்தபடியே வேலிடம் பேசியபடியே வந்த கலை தான் கண்களில் விழுந்தான். ஏனோ கலையின் குரலைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு. அது ஏன்? எதற்கு?என்ற

கேள்விக்குப் பதில் அவளிடமே பலமுறை கேட்டும் இருக்கிறாள். என்ன பதில் தான் இதுநாள் வரையிலும் கிடைத்தது இல்லை.

***

கதை எப்படி போகுதுன்னு சொன்னா next மூவிங்க்கு சரியா இருக்கும் நண்பர்களே ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்கோ

?? எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!