ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல் குழுமத்தின் பவுண்டர் ராமகிருஷ்ணா சக்ரவர்த்தியின் அசைக்க முடியாத நம்பிக்கை அவன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனைவி ராதாவிற்கு ட்யூமர் வந்த பொழுது, ஐம்பது ஆண்டுகள் மருத்துவராய் நின்ற ராமகிருஷ்ணனுக்கு மனைவி என்று வந்த பொழுது கை எல்லாம் நடுங்க துவங்கியது.
தான் நிச்சயம் தன்னுடைய பிரியமான மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாய் நிற்க, தாத்தாவை பின்பற்றி வந்த அர்ஜுன் தான் தயக்கமே இல்லாமல் தான் செய்வதாக முன் வந்தான்.
அவன் பயிற்சி துவங்கி சில காலங்களே இருக்க அவன் முகத்தில் இருந்த நம்பிக்கை ராமகிருஷ்ணனுக்கு பலம் தர, அவனோடு இரண்டு மருத்துவர்களை வைத்து அறுவை சிகிச்சைக்கு அனுமதித்தார்.
Advertisement
தன்னுடைய தாத்தாவின் நம்பிக்கையை ஒரே நாளில் அர்ஜுன் வெல்ல, தனக்கு பிறகு நரம்பியல் துறையில் தன்னுடைய பேரன் உள்ளான் என்று மெச்சிக்கொண்டார் ஊரெங்கும்.
ராமகிருஷ்ணன், ராதா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள்.
முதல் மகள், இரண்டாவது மகன்.
Advertisement
மகள் பரிமளா. ஜெனரல் சர்ஜன், அவர் கணவர் எண்டோகிறினாலஜிஸ்ட். சக்கரை நோய் நிபுணர்.
Advertisement
அவர்களுக்கு ஒருமகள், ஒரு மகன்.
மூத்தவள் பிரியங்கா தந்தையை பின்பற்றி சக்கரை நோய் நிபுணராக, ஆர்த்தோபீடிக், எலும்பு நிபுணர் ஒருவரை திருமணம் செய்து வைத்தனர்.
அடுத்து மகன் ப்ரியதர்ஷன் கார்டியாலஜிஸ்ட், இதய நிபுணன்.
Advertisement
ராமகிருஷ்ணனின் மகன், வரதராஜ சக்ரவர்த்தி. வரதராஜன் ஆன்காலஜிஸ்ட், புற்றுநோய் நிபுணர். அவர் மனைவி பானு குழந்தைப்பேறு மருத்துவர். வரதராஜன், பானுவுக்கு இரண்டு புதல்வர்கள்.
மூத்தவன் அர்ஜுன், இரண்டாம் மகன் வருண் சக்ரவர்த்தி. வருண் தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் அவரை போலவே புற்றுநோய் நிபுணராக தந்தையிடம் கடந்த இரண்டு மாதங்களாக ட்ரைனிங் எடுத்து வருகிறான்.
மொத்த குடும்பமும் டாக்டர் குடும்பமாக போக, அதிலிருந்து தப்பித்தது ராமகிருஷ்ணன் மனைவி ராதா மட்டுமே.
பரம்பரை பணக்காரரான ராமகிருஷ்ணனின் குடும்பத்தில் குடும்பத்தை பாதுகாக்க ஒரு மருமகளை எதிர் பார்த்த ராமகிருஷ்ணனின் தாயார், ராதாவை தேர்தெடுத்தார். அவரின் எண்ணத்தின்படியே அன்பினால் இன்று வரை குடும்பத்தை கட்டி பாதுகாக்கிறார் ராதா.
ஆனாலும் அந்த காலத்திலேயே பி.சி.எ படித்த ராதா, கணவனின் சிறு மருத்துவமனையை விரிவாக்கம் படுத்த கூற, தன்னுடைய மொத்த உழைப்பையும் போட்டு ராமகிருஷ்ணன் உருவாக்கியதே இன்று சென்னை மாநகரின் முக்கிய பகுதியில் கம்பீரமாய் ஏழு ஏக்கருக்கு மேல் பறந்து வீற்றிருக்கும் அந்த பிரமாண்ட மருத்துவமனை.
மொத்தம் ஐந்து பிளாக்ஸ் கொண்ட அந்த மருத்துவமனையில் ஒவ்வொரு பிரிவும் குறிப்பிட்ட பிளாக்கில் இருக்கும். மகப்பேறு பிரிவு, எமர்ஜன்சி வார்டும், ஜெனரல் பிரிவும் மெயின் ப்ளாக்கில் இருக்கும்.
நியூராலஜி டிபார்ட்மென்ட், கார்டியோலஜி டிபார்ட்மென்ட் இரண்டும் நோயாளிகளின் நலன் கருதி அமைதிக்காக இருக்கவேண்டும் என்று சாலையை விட்டு தள்ளி மரங்கள் சுற்றி இருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பிளாக்கில் தான் மொத்த குடும்பத்தின் அறையும் இருக்கும். அவரவருக்கு தனி அறைகள் இருந்தாலும் அனைவரும் மதிய வேளையில் உணவு உண்பது இந்த ப்ளாக்கின் நான்காவது மாடியில் தான். இரண்டு படுக்கையறை, ஒரு பெரிய உணவருந்தும் அறை, ராமச்சந்திரனுக்கென அவர் வரும் பொழுது பயன்படுத்தும் அலுவலக அறையும் அதை தவிர்த்து மீட்டிங் ரூம் சிலவும் இருக்கும்.
நானூற்றிக்கும் மேற்பட்ட மக்கள் வேலை செய்யும் அந்த மருத்துவமனையில் குடும்ப உறுப்பினர்களை தவிர ஐம்பத்தி இரண்டு மருத்துவர்கள் வெவேறு துறையிலிருந்து உள்ளனர்.
பெரிய நிறுவனம், அதே சமயம் நடுத்தர மக்களும் யோசிக்காமல் வரவும் இருக்கும்படி மருத்துவ செலவும் இருக்கும். வெளி மாநிலங்களில் இருந்து அதிகம் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெறுவதும் உண்டு. அவ்வ்ளவு புகழ்பெற்றது.
அந்த குடும்பத்தின் இளையவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை இந்தியாவில் செய்து, மேற்படிப்பை வெளிநாடுகளில் செய்திருந்தாலும், அர்ஜுன் ஒருவனே மொத்த டாக்டர் படிப்பையும் இங்கிருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முடித்து, மேற்கொண்டு ரிசெர்ச் செய்வதற்கு மட்டும் லண்டன், அமெரிக்கா என வருடம் இரண்டு மாதம் சென்று வருவான்.
அதுவே அவனது அறிவை பலப்படுத்தியிருக்க அந்நகரத்தின் முக்கிய மருத்துவர்களின் ஒருவனானான். எந்நேரமும் வேலை, மருத்துவமனை, அல்லது புத்தகத்தை வைத்தே சுற்றுவான்.
அவனது பெயர் பலகையை பார்த்து பெரிய மூச்சை விட்ட இலக்கியா அவன் கதவை தட்டி அவன் அனுமதிக்காக காத்திருந்தாள். “எஸ்” என ஆழ்ந்த அமைதியான அவன் குரலில் உள்ளே நுழைந்தவளை அமைதியாக வரவேற்றது அந்த பெரிய அறை.
பெரிய அந்த அறையில் இரண்டு பெரிய ரேக் முழுவதும் புத்தகங்கள் அடுக்கியிருக்க ஒரு ரேக்கில் பல பைல்ஸ், அத்தனையும் அவன் சேகரித்த நோயாளிகள் பற்றிய தகவல்களும், ரிசர்ச் சார்ந்த கோப்புகளும் தான். “சார் ஓபி பேஷன்ட்ஸ் வெயிட் பன்றாங்க” தயக்கத்துடன் நிறுத்தினாள்.
“மோகன் சார் அவைளபில் தான் சார்” மேலும், “டியூட்டி எதுவும் மாத்தி விடணுமா சார்?” என்றாள்.
“வேணாம், ஒரு காபி மட்டும் எடுத்துட்டு வர சொல்லு பசுபதி அண்ணன்ன”
“பசுப…” என துவங்கியவள் அப்படியே நிறுத்தினாள், பசுபதி என்பவர் அறுவது அர்ஜுன் மருத்துவமனையில் சமையல் வேலை செய்பவர். சமையல் என்றால் மொத்தமாக சமையல் இல்லை டீ, காபி, ஜூஸ் என குடும்பத்தினர் கேட்கும் பொழுது தயாரித்து தருபவர்.
தற்பொழுது தன்னுடைய மகளுக்கு இதே மருத்துவமனையில் பிரசவம் பார்த்ததால் பேரப்பிள்ளையை பார்க்க சென்றுள்ளார். அர்ஜுன் கண்களில் தெரிந்த சோர்வு அவன் தலை வலியை கூற, அவனிடம் தகவலை சொல்லாமலே நான்காவது மாடியில் இருக்கும் சிறு சமயலறையில் தயக்கத்தோடு நுழைந்தாள்.
இந்த இடத்திற்கு வந்தது உண்டு, ஆனால் இதுவரை எவருக்கும் சமைத்து இல்லை. வேறு எவராக இருந்தாலும் உண்மையை கூறி வேறு ஏற்பாடு நடந்திருக்கும், ஆனால் கேட்டது அர்ஜுன் அல்லவே…
அவளுடைய மனதில் பெரிய இடத்தை பிடித்து இரண்டு வருடங்களாக அந்த சிறு இதயத்தை குடைந்து வருபவன் முகத்தின் வாட்டத்தை சகிக்கமுடியவில்லை இலக்கியாவால்.
மூன்று வருடமாக இங்கு வேலை செய்துவந்தாலும் அனைவரையும் போலவே அவன் கோவத்திலும் வேகத்திலும் பயந்தாள் ஆனால் ஒரு நாள் அவளுடைய அபார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு குழந்தைக்கு சிறு விபத்து நடந்து இலக்கியாவின் வற்புறுத்தலின் பெயரில் ராமகிருஷ்ணா மருத்துவமனை வரழைக்கப்பட்ட குழந்தையை, சட்டம் என்னும் பெயரை காட்டி சிகிச்சைக்கு அனுமதிக்காமல் இருக்க, இலக்கியாவின் வேண்டுதலுக்கினாங்க,
“மேனேஜ்மென்ட்ல நான் பேசுகிறேன் நீங்க டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க” என சொல்லவும் தான் மேற்படி அடுத்த வேலைகள் துவங்கியது.
அன்று அவன் செய்தது சாதாரண உதவி தான், ஆனால் அதன் பிறகு அர்ஜுன் இலக்கியாவின் கண்களுக்கு வேறு விதமாக தெரிந்தான்.
கோவம் உள்ள இடத்தில் குணம் அதிகமாக இருந்தது, மாநிறத்தில் ஆறடிக்கு மேல் இருந்த அவன் அசராத உயரம், இறுகி கடினமாக காணப்பட்ட உடல், கண்களில் இருந்த கூர்மையும், கண்ணியமும், குரலில் இருந்த ஆண்மை என அவனுடைய வெளி தோற்றமும் அவளை அவன் பக்கம் மொத்தமாக இழுத்துப்போட்டது.
“பசுபதி என்னையா உன்ன எவ்ளோ நேரம் தான் கூப்புடுறது?” வெளியில் கேட்ட திண்ணமான குரலில் நடுங்கி சமையலறையை விட்டு வந்து பார்த்தாள், அங்கு அமர்ந்திருந்தது ராமகிருஷ்ணன்.
தூரத்தில் நின்று பலமுறை பார்த்திருக்கிறாள் அவள், ஆனால் இன்று தான் இவ்வளவு அருகில். இலக்கியாவை விட, பத்து அடி வித்தியாசத்தில் தான் இருந்தார் அந்த பெரியவர்.
இலக்கியாவை தெரிந்திராதவர் அவள் உடையை பார்த்து கேள்வியாக, “யாரு ம்மா நீ? இங்க என்ன பண்ற?” வயதானாலும் அவர் கண்ணிலிருந்த ஆராய்ச்சி இலக்கியவை கூனி குறுக செய்தது.
“சாரி சார்…” தாழ்ந்த குரலில் பேசியவன் தொண்டை அடைத்தது அவர் தன்னை தவறாக எண்ணிவிட்டாரோ என்று.
“எதுக்கு ம்மா இவ்ளோ பதட்டம்? இங்க என்ன பண்றனு தான் கேட்டேன், அதுக்கு ஏன் இப்டி முகம் வாடுது? தப்பு செய்யலைன்னா தலையை தூக்கி நில்லு”
அழுத்தமாய் அவர் பேசவும் விழுக்கென தலையை நிமிர்த்தி, “அர்ஜுன் சார் டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்றேன் சார். பசுபதி அங்கிள் அவரோட பொண்ணுக்கு கொழந்தை பொறந்துருக்கு பாக்க போனார். அதான் அர்ஜுன் சார்க்கு நான் டீ போட வந்தேன். சாரி சார் பெர்மிஷன் இல்லாம வந்துட்டேன்” என்றாள் குரல் கமர.
அவரோ அவள் பயத்தில் சிரித்தவாறு, “போடுறதும் தான் போடுற, ரெண்டு டீயா போடு”
நம்ப முடியாமல் அவரை வெறித்தவள் சிரிப்போடு தலையை ஆட்டி சமையலறை உள்ளே சென்று இரண்டு டீ போட்டு ஒரு டிரேயில் வந்து ராமகிருஷ்ணன் முன் நீட்டினாள். ஒரு கபில் கையை வைக்கப்போனார் எடுக்காமல் பின் இழுத்துக்கொண்டாள்.
“அது அர்ஜுன் சார்க்கு சார்” அவசரமாக வினவியவள் அருகில் இருந்ததை கண்ணால் காட்டி, “இது தான் சார் உங்களுக்கு” என்றாள்.
“ஏன் அது என்ன ஸ்பெஷல்?” சிறு பிள்ளை போல் கேட்டார் அந்த டீ கப்பிலே கண்ணை வைத்து.
“அர்ஜுன் சார் இஞ்சி டீ விரும்பி குடிப்பார்”
“அப்போ எனக்கு சாதாரண டீ?”
இல்லை இல்லை என தலையை ஆட்டியவள், “ஏலக்காய் டீ. ஏலக்காய் டீ புடிக்கும் தான சார்?” தயக்கமாய் அவர் கண்களை காண,
“டீ எப்படி போட்டாலும் குடிப்பேன்” என எடுத்து ஒரு மிடறு ருசி பார்த்தவருக்கு நாவில் சுவை நர்த்தனமாடியது. ரசித்து குடித்தார் அதை, “அருமை மா. என் ராதா போடுற மாதிரியே இருக்கு”
வாய் விட்டு புகழ்ந்தவரிடம், “நான் வர்றேன் சார்” என நகர்ந்தாள்.
இன்னும் இரண்டு மிடறு அருந்தியவர், “உன் பேர் என்ன ம்மா” திரும்பி பார்க்க அவள் அங்கு இல்லை. ‘அப்டி என்ன அவசரம் இந்த பொண்ணுக்கு?’ என்ற கேள்வி தான் வந்து நின்றது பெரியவருக்கு.
சூடு ஆறிவிடும் முன் அர்ஜுன் கையில் இந்த தேநீரை கொடுத்துவிட என்ன அவசரமாக இறங்கியவள் கதவை கூட தட்டாமல் கதவை திறந்து உள்ளே சென்று அவன் முன்பு நீட்டினாள்.
டீயின் நறுமணத்தால் கவரப்பட்டவன், “ஏன் நீ கொண்டு வந்த?” கேள்வியை வைத்தான் கையில் கப்பை எடுத்து.
“அவருக்கு ஜூஸ் போடுற வேலை இருந்தது சார், அதான் நான் வாங்கிட்டு வந்துட்டேன்” திக்கி திணறு உண்மையை மறைத்து நின்றாள்.
அமைதியாக தேநீரை உள்ளே இழுத்துக்கொண்டவன் நரம்பெல்லாம் உயிர் பெற்றது போல் உல்லாசமாக இருந்தது, கண்களை மூடி அந்த வாசனையை வாங்கியவனை பார்க்கும் பொழுது அவன் தாத்தாவை பார்ப்பது போல் இருந்தது இலக்கியாவிற்கு.
விழித்தவள் தயங்கி நிற்க, “பசுபதி அண்ணா எங்க?” ஒரு மிடறு குடித்ததுமே அவர் போடவில்லை என்று தெரிந்ததே அவனுக்கு.
பல முறை தன்னுடைய பாட்டியிடம் கேட்டு செய்யுமாறு அவன் கூறியும், ஒரு முறை கூட இந்த பதத்தில் அவன் கைக்கு தேநீர் வந்ததில்லை, இன்று அவர் கை பக்குவம் இந்த டீயில் இருக்க, உறுதியாக்கினான் இவள் செய்ததாக தான் இருக்குமென்று.
“அவங்க பொண்ணுக்கு…”
அப்பொழுது தான் அர்ஜுனுக்கு நினைவே வந்தது நேற்றே கூறியிருந்தார் இங்கு தான் அனுமதித்துள்ளதாக.
“ஸ்ஸ் மறந்துட்டேன். இட்ஸ் ஓகே ஐ காட் இட்” என்று வேகமாக எழுந்தவன், “ஒரு வேலை இருக்கு நான் லேபர் வார்டு வர போய்ட்டு ஓபி வர்றேன்” என அவள் கையிலே அந்த கப்பையும் கொடுத்து மின்னல் வேகத்தில் வெளியேறினான்.
ஏன் இந்த மனிதனிடம் இப்படி ஒரு குணம்? யார் எவர் என்றெல்லாம் கவலை இல்லை, பாசத்தை ஒருவரிடம் ஒவ்வொரு விதமாக காட்டுகிறான்? ஏன் பசுபதியின் குழந்தையை பார்க்க செல்கிறேன் என்றால் அவள் என்ன நினைத்துவிட போகிறாள்?
அவன் அன்னையிடம் கூட அதிகம் பேச மாட்டான், ஆனால் அவன் அறையிலிருக்கும் சிசிடிவி மானிட்டரில் மொத்தமும் அவன் குடும்பத்தின் காட்சி தான் ஓடும். வியந்தாள் அவனை பார்த்து, இவன் குணத்தை எப்படி யூகிப்பது என தெரியாமல்.