Skip to content
Post Views: 4,135
தூரத்தில் காயும் நிலவின் ஒளியானது அந்த அமைதியான தாழ்வாரத்தில் நின்றிருந்த பிரகாஷின் நிழலை அவன் முன்னிருந்த ஆபரேஷன் தியேட்டர் கதவில் பெரிதாய் உருவகப்படுத்தி காட்டியது.
ஒரு நிமிடம் கூட அப்படியே நிற்க முடியவில்லை. மீண்டும் அங்கும் இங்கும் நடந்தவன் முகம் வெளிறி போய் இருந்தது. திடீரென அவன் மனைவி ஏதோ செய்வதாக கூற, பதறி மருத்துவமனை அழைத்து வந்திருந்தான்.
ஒரு மாதத்திற்கு முன்பு தான் மூளையில் அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அதுவும் வயிற்றில் அவன் சிசுவோடு.
இன்று மீண்டும் இதோ மருத்துவ வாசம். ஒரு பக்கம் உயிரே போய்க்கொண்டிருந்தது வளர்ந்துக்கொண்டிருக்கும் அவனது குடும்பத்தை எண்ணி.
Advertisement
கதவு திறக்கும் சத்தம் கேட்க பிரகாஷின் நடை அப்படியே நின்றது. அர்ஜுன் இவனை நோக்கி தான் நடந்தான், இன்னும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உடையில் தான் இருந்தான்.
“டாக்டர், இப்போ என் வைப், பேபி ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?” கண்கள் கெஞ்சியது எனக்கு சாதகமான பதிலை கொடு என.
அர்ஜுனின் முகம் அமைதியாக அதே சமயம் தீவிரமாக இருந்தது. அவனின் குரல் கூட அளவெடுத்து தான் வந்தது.
Advertisement
பானு தான் பேசினார் நிதானமாக, “உங்க வைப்க்கு ஒடனே சி-செக்ஷன் பண்ணனும் பிரகாஷ். Late-stage preeclampsia வந்திருக்கு. அதாவது பிளட் பிரஷர் அதிகமாகிடுச்சு, அதுனால மதர், பேபி ரெண்டு பேருக்கும் ஆபத்து”
Advertisement
பிரகாஷ் கண்கள் விரிந்து கைகள் நடுங்கியது, “அவ நல்லா தானே இருந்தா அந்த ஆக்சிடென்ட்க்கு அப்பறம். எப்படி டாக்டர்?”
அர்ஜுன் இன்னும் அவனை நெருங்கி வந்தான், “ஆரம்பத்துல அவங்க நல்லா தான் இருந்திருப்பாங்க பிரகாஷ். சர்ஜெரி சாதாரண விஷயம் இல்ல, உடம்புல அதிகமா ஸ்ட்ரைன் பண்ணும், வெளிய ரெக்கவர் ஆகுற மாதிரி தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள ரொம்ப எமோஷ்னலா பீல் பண்ணிருக்காங்க போத் பிஸிக்கலி அண்ட் மென்டல்லி.
உங்க சரவுண்டிங் வச்சு பாக்குறப்போ யாரும் இல்லாதது கூட அவங்க இந்த நிலைமைக்கு ஒரு காரணமா இருக்கலாம். அதோட வெளிப்பாடு தான் இந்த அதிக பிரஷர்”
Advertisement
பார்வையை வேறு பக்கம் திருப்பி கண்களை சிமிட்டி கண்ணீரை உள் இழுத்துக்கொண்டான், வலுவாக இருப்பது போல் காட்டிக்கொள்ள தோற்றுக்கொண்டிருந்தான்.
“பேபி. என் பேபி?”
“பேபிக்கு எந்த பிரச்னையும் இல்ல பிரகாஷ்” என்றார் பானு ஒரு நல்ல செய்தியாவது அவனுக்கு கொடுத்திட வேண்டும் என, “நயன் மந்த்ஸ் ஆகிடுச்சு, வெயிட் மட்டும் தான் கொஞ்சம் கம்மியா இருக்கும். மத்தபடி பேபிய வெளிய எடுத்தாலும் பிரச்சினையில்ல, இன்குபேட்டர்ல வச்சு பாத்துக்கலாம்” என்றார்.
கொஞ்சம் நிம்மதி மூச்சு விட்டவனுக்கு மீண்டும் மனைவியை எண்ணி வருத்தம் தோன்றியது, “என் வைப்? அவங்க?”
“இப்போதைக்கு அவங்கள ஸ்டேப்பில் பண்ணிருக்கோம். அதே நேரம் முழுசா அவங்க நார்மல்னு சொல்ல முடியாது. அடுத்த 48 ஹௌர்ஸ் கிரிட்டிகல் தான்.
Preeclampsia வோட பாதிப்பு எல்லா உறுப்புகளையும் இருக்கு. முக்கியமா கிட்னி. அவங்கள ரொம்ப கிளோஸா தான் மானிடர் பண்ணிட்டு இருப்போம்.
அவுட் ஆப் டேஞ்சர்னு சொல்ல முடியாது, ஆனா முடிஞ்ச அளவு கண்டிப்பா நாங்க அவங்கள பாத்துக்குவோம்”
சிகையில் கைகள் விட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான் பிரகாஷ், அர்ஜுனின் வார்த்தை இன்னமும் காற்றின் கனத்தை அதிகரித்தது.
“ரொம்ப கஷ்டபட்டுடா. இதை அவளால தாங்கிக்க முடியாதே டாக்டர்”
பிரகாஷ் தோளில் தட்டினான் அர்ஜுன், “ஷி இஸ் எ ஃபைட்டர். ஏற்கனவே ஒரு தடவ போராடி வந்தாங்க பிரகாஷ். இப்பவும் வருவாங்க. நம்பிக்கையா இருங்க. அவங்க முழிச்சு வர்றப்போ நீங்க தைரியமா அவங்க பக்கத்துல நிக்கணும்”
பிரகாஷ் தலை அசைக்க அவனை மீண்டும் ஒரு முறை பார்த்து உள்ளே சென்றான். பிரகாஷ் நிலை மிகவும் மோசமாக தான் இருந்தது.
இரவு உறக்கத்திற்கு செல்லும் முன்பு அர்ஜுன் ஒரு புத்தகத்தை எடுத்து அமர்ந்த சமயம் தான் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
மனைவி உறங்குவதை பார்த்து அவளுக்கு ஒரு செய்தியை மட்டும் தட்டிவிட்டு இவன் வேகமாக கிளம்பி வந்திருந்தான்.
இதோ சிகிச்சைக்கு அடிக்கடி அர்ஜுன் ஐ.சி.யு சென்று பார்த்து வர, இவள் ஒரு பக்கம் வேலையில் இறங்கிவிட்டாள் பானுவின் துறையில்.
இன்று காலை ஒருமுறை அந்த பெண்ணை பரிசோதித்தவன் பிரகாஷிடம், “வைட்டல்ஸ் ஸ்டேபில்லா இருக்கு. ஆர்கன் ப்பைய்லியர் எதுவும் இல்ல. அதுவே ரொம்ப நல்ல விஷயம் தான். இன்னும் பிரஷர் மட்டும் குறையல, மெடிசின் வச்சு குறைக்க பாக்குறோம். அவங்க ஹோல்ட் ஆன் பண்றங்க பிரகாஷ்”
சிறிய முறுவலோடு அர்ஜுன் அன்று அவ்விடம் விட்டு வந்தான் பிரகாஷிடம் சிறிது நம்பிக்கை தென்படுவதை பார்த்து.
வீட்டிற்கு அவன் வந்த பொழுது இலக்கியா மருத்துவமனையில் இருந்தாள். பிரகாஷ் மனைவியை பிரசவ பிரிவில் சேர்த்திருந்தமையால் அர்ஜூனால் மனைவியை வரும் பொழுதும் பார்க்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்த பிறகு முழுதும் அவள் நினைவு தான். ஏனோ இரண்டு நாட்களாக இவள் அமைதி சற்று வித்யாசமாக படுகிறது அவன் கண்களுக்கு.
அவனே சென்று பேசினாலும் கூட கேட்பதற்கு பதில் கூறுவதோடு நிறுத்திக்கொண்டாள்.
அவளை, அவன் மனைவியை தேற்றி பிறகு அவளோடு வாழ்வதா வேண்டாமா என்பதை பற்றி மட்டுமே அர்ஜுனின் சிந்தனை.
அப்படி தான் அவன் அன்று நண்பனின் வீட்டிலிருந்து வந்த பொழுது எண்ணி வைத்திருந்தது.
ஆனால் இந்த ஒரு மாத காலத்தில் அவனை அவளுக்கு அதிகம் பழக்கியிருந்தாள் அவன் நர்ஸ் பெண்.
இதோ வீட்டிற்கு வந்து காலை உணவை எடுத்து உண்ணும் பொழுது கூட அருகில் அவளை தேடும் கண்களை என்ன தான் கூறுவது?
‘ரொம்ப பழக்கிட்டா, முடக்கண்ணி’ நின்றவாக்கிலே உண்டு முடித்தவன் உறக்கத்தில் அப்படியே சென்று படுத்துவிட்டான்.
மீண்டும் எழுந்து பார்க்கும் பொழுது மணி மூன்றை தொட்டிருந்தது. உண்டு பார்த்தவன் உடனே தெரிந்த்துக்கொண்டான் இது இலக்கியாவின் தயாரிப்பு இல்லை என.
ஜோனா மதிய நேரத்திற்கு உணவு செய்து வைத்து சென்றிருந்தார் போல.
‘இவ சாப்பாடு எடுத்துட்டு போகலையா? மதியம் என்ன பண்ணிருப்பா?’ அவனே சென்று கேட்கவும் மனம் வரவில்லை, பேசாமல் செல்பவளை இழுத்து பிடித்து தானாக இறங்கி செல்ல தோன்றவில்லை.
அவளே வந்து பேசட்டும் என இருந்தான். அதுவும் நடந்தது. இரவு இருள் கவ்விய பிறகு ஏழு மணி போல வந்த இலக்கியா அவள் கணவன் கையில் புத்தகத்தோடு அமர்ந்திருப்பதை பார்த்து சுர்ரென கோவம் ஏறியது.
புத்தகத்தை வெறித்தவள், “எவ்ளோ படிச்சு என்ன யூஸ் சார், கடைசில டாக்டர்ஸ் டூ மேக் மிஸ்டேக்ஸ்ல?” அவனிடம் நேரடியாக சண்டைக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
புத்தகத்தை நிதானமாக ஓரம் தூக்கி வைத்தான் ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்து, “என்ன மிஸ்டேக் யார் பண்ணாங்க?”
இலக்கியா, “சந்தேகமே வேணாம். நீங்க தான் சார். காலேஜ்ல டிஸ்டின்க்ஷன் வாங்குன நீங்க தான்”
“என்ன மிஸ்டேக்?”
இலக்கியா, “அந்த ஜனனி பொண்ணு கேஸ் தான். குழந்தையை பாக்க கூட குழந்தையோட அம்மா இல்ல. இப்போ மதியம் பிட்ஸ் வந்துடுச்சு”
“இது நார்மல் தான்” என்றான் அமைதியாக.
“எல்லாமே உங்களுக்கு அசால்ட்டு தான? நீங்க டாக்டர் சார், ஆனா அவங்க அப்டி இல்ல. அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் சாதாரண மனுஷன், அந்த பொண்ணு ஒரு நோயாளி. இதை எல்லாம் தாங்கிகிற மனநிலை அவங்களுக்கு இல்ல” தானே அந்த வேதனையை அனுபவிப்பது போல் அவள் முகமே தவித்தது.
“அன்னைக்கே ஆபரேஷன் தியேட்டர்ல வச்சு எத்தனை தடவை கேட்டேன் பேபிக்கு இதுனால எந்த பிரச்னையும் இல்லையேன்னு?”
மெல்ல சிரித்தான் அர்ஜுன், “இப்ப என்ன சொல்ல வர்ற, நீ சொல்றதை நான் கேட்கணுமா? நீ நர்ஸ் தான் இலக்கியா. என்னமோ ஹாஸ்பிடலோட ஸ்டார் மாதிரி இவ்ளோ ஏன் பேசணும்?”
“டாக்டர் நீங்க தான் ஸ்டார்ஸ். அப்றம் ஏன் சார் தப்பு நடக்குது? அன்னைக்கே நீங்க பேபிய ஆபரேட் பண்ணி எடுத்திருந்தா அந்த பொண்ணுக்கு இவ்ளோ ஸ்ட்ரெஸ் ஆகியிருக்காது, அந்த பச்சை குழந்தைக்கும் அவ அம்மா பக்கத்துல இருந்திருப்பாங்க”
அர்ஜுன், “யார் என்ன பண்ணனும்னு நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்ல இலக்கியா. உன்னோட ரோல் எதுன்னு நியாபகம் வச்சுக்கோ. வி டாக்டர்ஸ் கிவ் ஆர்டர்ஸ் அண்ட் யு நர்ஸ் அதை அப்படியே செய்யணும் அவ்ளோ தான்”
வேதனையோடு விரிந்தது அவள் அதரங்கள், “நீங்க தப்பு செஞ்சதை சொல்லி காட்டுனா எங்க ரோல் இதுனு சொல்லி வாயடைச்சிடனும்”
“உனக்கு அறிவு அவ்ளோ தான். நீ சொன்ன எதுவுமே பாசிபிள் இல்ல. பேபிக்கு corticosteroids டெவலப் ஆகல அப்பயே பேபிய எடுத்திருந்தா லங்ஸ்ல பிரச்சனை வரும்”
“எத்தனை பேபிஸ் செவந்த் மந்த்ல பிறக்குது அவங்களுக்கெல்லாம் இந்த பிரச்சனை இல்லையே சார். நீங்க மனசு வைக்கல. உங்க பக்கம் அந்த பொண்ணுக்கு சர்ஜரி பண்ணி நீங்க பெரிய டாக்டர்னு காட்டணும். அதுக்கு தான் இவ்ளோ பெரிய ட்ராமா”
“உன் லிமிட் மீறி போறடி. என்ன பத்தியே பேச உனக்கு உரிமை இல்ல, இதுல உனக்கு கொஞ்சமும் தகுதியே இல்லாத என்னோட வேலைய பத்தி பேசவே பேசாத” வெகுவாக அடிபட்டது பெண்ணின் மனம்.
மீண்டும் பேச்சு சுதந்திரத்தை அதிகம் பயன்படுத்தி அதில் மீண்டும் தவறு செய்தது உணர்ந்தவன் மன்னிப்பையும் கேட்க தயாராகவில்லை, “சரி இதை விடு. ரியாலிட்டிக்கு வருவோமா? நீயே சொல்லு உன்னோட சரவுண்டிங்ஸ்ல எந்த டாக்டராவது டாக்டர் இல்லாத லைப் பார்ட்னரை ச்சூஸ் பண்ணி நீ பாத்துருக்கியா?
அப்டி மாறி நடந்தா சுத்தி இருக்குறவங்க எப்படி பேசுவாங்க உனக்கே தெரியும். சாதாரண டாக்டர்கே அப்டினா என்ன பத்தி யோசிச்சு பாரு, என்ன சுத்தி இருக்குறவங்க, இவன் இப்டி தான், இந்த மாதிரி அழகான பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பான், அவளோட குடும்பம் பெரிய இடமா இருக்கும் இப்டி எல்லாம் நிறையா எக்ஸ்பக்டேஷன்ஸ் வச்சிருப்பாங்க”
“இது அவங்க எக்ஸ்பக்டேஷன்ஸ் இல்ல உங்களோடது” மொத்தமாய் அர்ஜுன் அமைதியானான், அவனுக்கும் உள்ளுக்குள் இருந்த ஏமாற்றம் இன்னும் முழுமையாக போகவில்லையே.
இந்த எண்ணங்கள் இந்த ஒரு மாத காலமாக போனதாக தான் அவன் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட நினைத்தது. தன்னுடைய எதிர்பார்ப்புகளை தூரம் வைத்து மீண்டு வரும் நேரம் அவனது மறைந்த சிந்தனைகளை, ஆற்றாமையை இன்று மீண்டும் இழுத்து வந்ததே தான் தான் என்பது பெண்ணவள் உணரவில்லை.
“பாத்தியா, ஒரு இடத்துல கூட நீ என்ன புரிஞ்சுக்கல. முக்கியமா இந்த வாக்குவாதம் ஆரமிச்சம் இடம். நீ டாக்டரா இருந்தா இந்த ஆபரேஷன்ல இருக்க காம்ப்ளிகேஷன்ஸ் எல்லாம் புரிஞ்சு இப்டி கேள்வி கேட்டு சண்டை போட்ருக்க மாட்ட.
காரணமே இல்லாம சண்டை போட்டு உயிரை வாங்குற. இதுக்கு தான்டி உன்ன வேணாம்னு தலைப்பாடா அடிச்சு சொன்னேன். கேட்டாங்களா. ச்சை” எரிச்சலில் தலையில் அடித்துக்கொண்டான்.
error: Content is protected !!