Skip to content
Post Views: 4,392
இதயம் படபடவென அடித்துக்கொண்டது, அவன் மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை, விதியின் மேல் நம்பிக்கை இல்லாமல்.
அஞ்சுஸ்ரீ, “ப்ளீஸ் அர்ஜுன், என்ன நீ நம்பவே மாட்டியா?”
அர்ஜுன், “இதை கேக்க தான் இப்டி தனியா இழுத்துட்டு வந்தியா?” என்றான் உணர்வற்ற குரலில்.
“நான் தான் சொல்றேன்ல, எனக்கு அப்பா இப்டி எல்லாம் பண்றது தெரியவே தெரியாது. தெரிஞ்சிருந்தா நானே வந்து சொல்லிருப்பேன் அர்ஜுன். ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ” அவன் கன்னத்தை பற்றி மிக நெருக்கத்தில் நிறுத்தினாள் அஞ்சுஸ்ரீ.
Advertisement
அவளின் நடவடிக்கையில் எரிச்சலுற்றவன் சற்று விலகி நின்று, “உன்ன ட்ரஸ்ட் பண்ணி ஒன்னும் ஆக போறதில்ல, எவ்ரித்திங் இஸ் ஓவர் நவ்”
“எப்படி அர்ஜுன் உன்னால இவ்ளோ ஈஸியா பேச முடியிது? நம்ம வாழ்க்கையை பத்தி நான் எவ்ளோ கனவோட இருந்தேன், உன்கிட்ட கூட எல்லாம் ஷேர் பண்ணேனே. சரி அதை தான் நீ கேர் பண்ணிக்கல, நம்ம ஹக்ஸ், டேட்ஸ், கிஸ்…” நிறுத்தி அவனின் முகத்தை பார்த்தாள்.
எந்த உணர்வுகளின் பிரதிபலிப்பும் சிறிதும் இல்லை. இரும்பு இதயத்தின் எடுத்துக்காட்டாய் நின்றான்.
Advertisement
அதற்கெல்லாம் சேர்த்து அங்கு துடித்தது இலக்கியாவின் இதயம். நெஞ்சாக்குழி ஏறி இறங்கி மூச்சை சீராக்க முயன்றது.
Advertisement
அஞ்சுஸ்ரீ தொடர்ந்தாள், “அதை பத்தியும் ஒன்னும் சொல்ல மாட்டியா?” அவளது கேள்விக்கு கூட அவனிடம் மௌனம் தான் பதிலாக கிடைக்க, இது சரிவராதென உணர்ந்தவள் எக்கி அவன் இதழ் நோக்கி செல்ல, “அர்ஜுன்…” நம்ப முடியாமல் அதிர்ந்து வந்த வருணின் குரலில் அப்படியே அஞ்சு ஸ்ரீ உறைந்து போக, இருவரும் திரும்பினார்.
இலக்கியாவின் நிலையோ கூறவே வேண்டாம், உள்ளுக்குள் சுக்கு நூறாக உடைந்துகொண்டிருந்தாள். ஒரு நாளில் எத்தனை வேதனையை தான் மனம் தாங்கும்?
சொல்ல முடியாத கஷ்டம் நெஞ்சை அடைத்தது போல் மூச்சு வாங்கவே சிரமப்பட்டவள் கால்கள் வலுவிழந்து சரிய இருந்த நேரம் வேகமாக வந்த வருண் அவளை தாங்கிக்கொள்ள, அவளின் நிலையில் சுறுசுறுப்பான அர்ஜுன் சகோதரனை ஓரம் நிறுத்தி மனைவியை பிடித்துக்கொண்டான்.
Advertisement
“ஏய் உனக்கு இங்க என்ன வேலை? உன்ன யாரு மொத உள்ள விட்டது?” தர்ஷன் அஞ்சு ஸ்ரீ இருந்த பக்கம் பாய்ந்தான்.
“டேய் மரியாதையா பேசு”
வருண், “உனக்கென்ன மரியாதை வேண்டி கெடக்கு? போ வெளிய”
“நான் எதுக்குடா வெளிய போகணும், உன் அண்ணன் என்ன வர சொன்னான். வந்தேன். அவன் போக சொல்லட்டும், போறேன்” என்றாள் அர்ஜுனை பார்த்து.
சகோதரர்கள் இருவரும் அர்ஜுனை ஆச்சிரியமாக பார்க்க அவன் கவனம் எல்லாம் தன்னுடைய கையில் மௌனமாய் நிற்கும் மனைவி மீது தான்.
அவள் தன்னுடைய கைகளுக்குள் நடுங்குவதை உணர்ந்தவன் அவள் தன்னை பற்றி என்ன நினைத்திருப்பாள் என்பதை பற்றி எதுவுமே கவலை கொள்ளவில்லை.
சில்லிட்டிருந்த மனைவியின் கைகளை பிடித்து தன்னுடைய சூட்டை அவளுக்கு பகிர்ந்துகொண்டிருந்தான்.
தன்னை மௌனத்தால் ஆசுவாசப்படுத்தி வரும் கணவன் முகத்தை உயர்த்தி பார்த்தவள் நெஞ்சடைக்க, “வீட்டுக்கு போகலாமா?”
தந்தையிடம் கூற முடியாமல், பல முறை அன்னையின் அருகாமை தேடி அணைப்பிற்காக ஏங்கியவள் அந்த நாளில் கூட இப்படி பலவீனமாக உணர்ந்தது இல்லை.
இன்றோ இவனிடம் சென்று நிற்பது சரியா தவறா என உணர முடியாமல் விருப்பட்டே நிற்கிறாள்.
மனைவியின் கண்ணிலிருந்து வெளியேற்றிய ஒற்றை கண்ணீரை அவன் கன்னம் பிடித்து துடைத்தவன், “என்னாச்சு ம்மா?” அவளின் தவிப்பு தாங்க முடியாமல் கேட்டான்.
“போகலாம்ங்க ப்ளீஸ்” இலக்கியாவின் பரிதாப நிலையில் அவளின் இதயம் படும் வேதனையில் அறிந்தவன் அவள் கை பிடித்து யார் பார்ப்பார்கள் என்பதையும் மறந்து வாகனம் நோக்கி நடந்தான்.
“அர்ஜுன் எனக்கு பதில் சொல்லிட்டு அவ கூட போங்க” அஞ்சு ஸ்ரீ கூச்சலிட, அந்நேரம் வரையுமே இன்னும் நிகழ்ச்சி முடியாமல் இருந்தது எவருக்கு சாதகமென தெரியவில்லை.
அதில் நின்றவன் சற்று திரும்பி, “இது உங்க ஹாஸ்பிடல்டா. எந்த குப்பையை தூக்கி போடுவீங்களோ தெரியாது, இனி இந்த இடம் சுத்தமா இருக்கனும்”
அஞ்சுஸ்ரீயை தீயாய் முறைத்து சகோதரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து மனைவியோடு வாகனம் வந்தான். வாகனத்தினுள்ளே ஏறி அமர்ந்தவன் வீட்டிற்கு வாகனத்தை செலுத்த என்ன ஏதென்று கூறாமல் முகத்தை திருப்பி அழுதுகொண்டே வந்தாள்.
“என்னாச்சு இலக்கியா?” ஒன்றும் இல்லை என தலை அசைத்தவள் அவனின் குரலில் மேலும் அழுதாள்.
“சொல்லு இலக்கியா” அவளின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.
அவளோ அவனின் கையை உதறி, “அவ எங்க கூப்பிட்டாலும் போவீங்களா?” நம்பிக்கை இல்லாமல் வரும் கேள்வி அல்ல , கோவத்தில் வரும் கேள்வி இதுவென அறிந்தவன் சீண்டலில் இறங்க முயன்றான்.
“அழகான பொண்ணு கூப்பிட்டா போறதுல தப்பில்லையே”
“அப்போ வாங்க தாத்தா வீட்டுக்கு”
“நான் அழகான பொண்ணு சொன்னேன் இலக்கியா”
சிரிக்காமல் அவன் கூற, “ஆமா ஆமா உங்களுக்கு அஞ்சுஸ்ரீ மட்டும் தான் அழகா தெரிவா. இதுல உங்க அஞ்சுஸ்ரீனு சொன்னா கோவம் மட்டும் வரும்”
“ஹே இல்லடி”
“பேசாதீங்க. சும்மா உங்க வீட்டுக்காக என்ன சகிச்சிட்டு இருக்கீங்க. உங்க வீடு ஆளுங்க இருக்குற நேரம் அப்டி இப்டி பிடிக்க வேண்டியது. அப்றம் நான் யாரோ மாதிரி தானே இருக்கேன். அவ தான் வேணும்னா போங்க”
அர்ஜுன், “நான் போனா உனக்கு பிரச்சனை இல்லையே”
இலக்கியா, “போங்க, போகணும்னு ஆசை இருக்கப்போய் தான அவ அவ்ளோ பக்கத்துல வந்தும் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க”
விளையாட்டாக அவன் எடுத்து சென்ற திசை அவனையே சினத்தின் கடலில் தள்ளியது அவளின் வார்த்தைகளில், “தள்ளி விடலங்கிறதுக்காக நான் அவளை அக்சப்ட் பண்ணிகிட்டேனு அர்த்தம் இல்ல இலக்கியா”
“அவ முத்தம் குடுத்திருந்தாலும் இதே டயலாக் தான் சொல்லிருப்பிங்க. ஆம்பளைங்களுக்கு கல்யாணத்துக்கு முன்ன பின்னனு கணக்கெல்லாம் இல்ல உங்களுக்கு உங்களோட ஆசை தாபம் தான் முக்கியமா படும்.
பொம்பளைங்க என்ன மாதிரி தவிப்பாங்க, அது அவங்களுக்கு எந்த மாதிரி வேதனையை குடுக்கும்னு எதுவுமே யோசிக்காத ஜென்மங்க…”
தன்னுடைய நிலையை வெளிக்காட்டாமல் மறைமுகமாக தான் சில நிமிடங்களுக்கு முன்பு அனுபவித்த கொடுமையை எண்ணி அவள் பிதற்றியதற்கு காரணம் அவன் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை அந்த கயவனோடு முடிச்சிட்டு இருந்தது.
அவளின் நிலை இன்னதென ஒரு வார்த்தை கூறியிருந்தால் அவனது அணுகுமுறையே வேறாக இருந்திருக்கும்.
“என்ன நான் அவளுக்காக அலையிரெனு சொல்றியா? ஆமாடி அப்டியே வச்சுக்கோ. நான் தான் அவளை வர சொன்னேன். ஏன் அவ பக்கத்துல வந்து நின்னு முத்தம் குடுத்திருந்தா கூட சந்தோசமா ரசிச்சிருப்பேன்”
ஆனால் அவள் ஒழித்து மறைத்து பேசியதை உணராதவன் மனைவி தன் மேல் நம்பிக்கை வைக்காதது மட்டுமல்லாது, தன்னுடைய குணத்தையே கொச்சை படுத்தியதை உணர்ந்து சீறிவிட்டான்.
அதில் மிரண்டவள், அவள் இருந்த மனநிலையில் அவன் என்ன கூறினாலும் அப்படியே நம்பினாள்.
“இப்டி பேச கூட நாக்கு கூசலையா உங்களுக்கு?” ஆற்றாமையோடு அவள் கேட்க அர்ஜுனின் கோவத்திற்கு வடிகால் தான் இருக்குமா. அவனும் எகிறினான் அவளை மேலும் நோகடிக்க.
“ஏன் கூசனும்? கொஞ்ச நேரம் முன்னாடி உனக்கு கூசுச்சா? இல்ல என்ன எந்த காரணம் வச்சு பேசுனியோ அதே காரியத்தை நீ செஞ்சதுல உனக்கு மனசாட்சி தான் குத்தலயா?”
“என்ன பேசுறீங்க?” புரியாமல் இலக்கியா அவனை பார்த்தாள் கண்ணீரோடு.
“ஏன் அதுக்குள்ள மறந்துட்டியா? அந்த நெடுஞ்செழியன் கூட நீ பேசிட்டு இருந்ததை நான் பாத்தேனே. அவனும் உன் பக்கத்துல தான ஒக்காந்திருந்தான். அதுவும் உன் கைய புடிச்சிட்டு. அந்த நேரம் உனக்கு கூசலனா, அஞ்சு என்ன கிஸ் பண்ண வந்த நேரம் தடுக்கணும்னு எனக்கும் தோணல”
இலக்கியாவின் மனது வேதனையில் அரற்றியது. அவளை குற்றம் சாட்டிய அவனது வார்த்தைக்கு எளிதாக அவன் உயிரையே குடிக்கும் வார்த்தைகளை கொடுத்து விட தான் முடியும்.
இருந்தும் அவளின் மனநிலை தான் வேறே, தன்னை ஆறுதல்படுத்த தன் அருகில் ஒருவன் தவமாய் கிடந்த பொழுது, இவன் தான் வேண்டுமென இவனை தேடி ஓடி வந்தவளுக்கு அருமையான பரிசு கிடைத்திருக்கிறது.
தவறே செய்யாமல் பழியை சுமப்பதில் பெண்களுக்கு எதற்கு தான் முதலிடம் கிடைக்கிறதோ. மனதை கவ்வும் வலியோடு கோவமும் பன்மடங்கு வந்தது.
கையிலிருந்த கைப்பையை வைத்து அவனை சரமாரியாக அவள் அடிக்க, வாகனத்தை ஓரம் நிறுத்தினான். “என்னடி பண்ற?” அர்ஜுன் சீற அவனுக்கு மேல் அவள் கத்தினாள்.
“என்ன சொன்ன நீ என்ன? ஆஹ்?” அவளது கைப்பை அவனிடம் இடம்பெயர தன்னுடைய கையை நம்பி அவனோடு சண்டைக்கு நின்றாள். பலம் எல்லாம் திரட்டி அர்ஜுனை எக்குத்தப்பாக அடித்தாள்.
“என்ன வார்த்தை சொல்ற? நான் என்ன உனக்கு அவ்ளோ கேவலமா போய்ட்டேனா? மனசாட்சியே இல்லாம பேசுற”
“அடிக்காதடி” அவளின் அடி தாங்காமல் மனைவியையின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டான் முற்றிலும் இறங்கி வந்து.
அவனது நோக்கமோ, எண்ணமோ இலக்கியாவை சந்தேகித்தோ அவளின் குணத்தை கேள்வி கேட்பதோ இல்லை. அவளை பற்றி அவனுக்கு தெரியாதா? ஏதோ ஒரு கோவத்தில் வார்த்தைகளை சிதறவிட்டிருந்தான்.
“அவன் எதுக்கு என் கைய புடிச்சிருந்தானு உனக்கு தெரியனுமா? கிளீனிங்க்கு கான்டராக்ட் குடுத்துருகியே ஒரு நாய் திருமுகம்னு. அவன் நான் தனியா இருந்தப்போ என்ன ரேப் பண்ண பாத்தான்.
அப்போ அந்த செழியன் தான் வந்து என் மானத்தை காப்பாத்துனான். உயிரே போன மாதிரி துடிச்சிட்டு இருந்தப்போ ஆறுதல் சொன்னது தான் உனக்கு தப்பா தெரியிது”
“இலக்கியா…”
“பேசாதீங்க” கை நீட்டி அர்ஜுனை தடுத்தவள் கண்ணீர் நொடி கூட நிற்கவில்லை, என்னுடைய வேதனை இன்னும் வடியவே இல்லை என்பதாய் வழிந்துகொண்டே இருந்தது. அர்ஜுனுக்கு அவள் கூறிய வார்த்தைகளை ஜீரணிக்கவே இயலவில்லை.
“தெரியும் என்ன நம்ப மாட்டீங்க. அவன் பணம் இருக்கறவன் தப்பு பண்ண மாட்டான்னு தான சொல்லுவ?”
தன்னுடைய முதுகை காட்டியவாறு திரும்பி அமர்ந்தாள் இழுத்து பிடித்து வந்திருந்த புடவை தலைப்பை தோளிலிருந்து விடுவித்து தன்னுடைய கிழிந்த ரவிக்கையை காட்டினாள்.
“உங்களுக்கு தான் எல்லாத்துக்குமே ஆதாரம் வேணுமே. பாருங்க”
“என்ன இது இலக்கியா” வேகமாக அவளுடைய புடவையை இழுத்து பிடித்து சரி செய்தவன் மனம் அவளை விட அதிகம் துடித்து. அவளின் கோவ நிலையில் அவனது தவிப்பு கூட புரியவில்லை.
“அவன் கைய புடிச்சிட்டு ஆறுதல் சொன்னப்பவும் உன்ன தேடி ஓடி வந்தேன் பாரு என்ன சொல்லணும். எல்லாத்துலயும் உன் மேல நம்பிக்கை வச்சு வச்சு நான் தான் தினம் தினம் செத்துட்டு இருக்கேன். இப்போ இதுவும்”
கீழே குனிந்து அங்கு கிடந்த கைப்பையை எடுத்தவள் கையை பிடித்தவனிடம் திமிறி, “என் சுயமரியாதை, கெளரவம் எல்லாத்தையும் விட்டு தான் நீ கெடைக்கணும்னா எனக்கு நீ வேணாம்”
அவன் நெஞ்சிலே அடித்தவள் அவனது மார்பினை அழுகையோடு பார்த்தாள். இந்த நெஞ்சில் சாய்ந்து தானே ஆறுதல் தேடி வந்தது? இப்பொழுது எதுவுமே வேண்டாம் என்னும் நிலைக்கு வந்திருந்தாள்.
“என்னடி என்ன என்னமோ பேசுற? என்ன பாரு இலக்கியா. என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு” கேவல் வெடிக்கும் அளவு அழுத்தவளை தன்னை நோக்கி இழுக்க பார்த்தும் பயன் இல்லை. அவள் ஒரு முடிவோடு இருப்பதாய் அவளின் திமிரலே கூறியது.
“உன்ன எவ்ளோ நம்புனேன் தெரியுமா மொத்தமா ஏமாத்திட்ட, வார்த்தையாலேயே கொன்னு போட்டுட்ட. நீ வேணாம் எனக்கு… நீ வேணுமே வேணாம். ப்ளீஸ் என்ன விட்று”
அழுகையோடு அர்ஜுனின் கையை வலுக்கட்டாயமாக உதறியவள் வாகனத்திலிருந்து கீழே இறங்க அர்ஜுனும் வேகமாக அவளிடம் வந்தான்.
“இலக்கியா நீ நிதானமா இல்ல. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” அதற்குள் இலக்கியா அவ்வழியே சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தியிருந்தாள்.
“என்ன விடலனா இப்டியே நடு ரோட்டுல போய் நிப்பேன்” அவன் முகம் பார்க்காமல் அவள் உறுதியாக கூற பக்கென பிடித்திருந்த அவள் கையை விட்டான்.
ஆட்டோவில் ஏறும் முன் தன்னுடைய தந்தையின் வீட்டு விலாசத்தை கூறி இலக்கியா சென்றிருக்க, இவன் அப்படியே உறைந்து போயிருந்தான்.
error: Content is protected !!