நிலா 2
யுகி ஆஃபிஸில் இருந்து எதையோ தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தான்..அவனது பீ.ஏ அங்கே வந்து அவனை இரண்டு முறை அழைத்தும் அவன் அசையாமலே இருந்தான்..
அதனால் அவன் தோல் தொட்டு அவள் கூப்பிட .., திடிரென்று அவனது முகம் பயத்தில் வெளறி போய் இருந்தது..
அதனை கண்ட பிஏ என்ன ஆச்சி சார்..?? என்று கேட்க அப்போது தான் சுயநினைவு வந்தவன் தன் முகத்தில் இருந்த பயத்தை உள்ளடக்கி கொண்டு கோபத்தை அஸ்திறமாக எடுத்து அவன் பிஏவை திட்ட ஆரம்பித்தான்…
Advertisement
உனக்கு அறிவில்ல..?? எதுக்கு இப்படி வந்து தோல்ல தொட்டு கூப்பிடுற..மேனர்ஸ்னா என்னன்னு தெரியாதா உனக்கு ..முதல கதவை தட்டிட்டு தான் உள்ளயே வந்துருக்கனும் .இது கூட தெரியல உன்னால எப்படி தான் இங்க வேலைக்கு சேத்தாங்களோ தெரியல யூஸ்லெஸ் ஃபேளோ கெட் அவுட் ஆஃப் மை ரூம் என்று கத்த….
அவள் அவன் கத்திய பிறகும் அங்கேயே நின்றாள்..,,
அதனை கண்ட யுகி எதுக்கு இன்னும் இங்கேயே நிக்கிற..??உனக்கு இங்கீலிஷ் தெரியுமா தெரியாதா..?? கெட் அவுட் ஆஃப் மை ரூம்னா வெளில போன்னு அர்த்தம் என்று கத்தினான்…
Advertisement
ச..சா..சார் என்று திக்கி திணறி கூற…
Advertisement
இப்ப உனக்கு என்ன தான் வேணும் என்றான் உச்சக்கட்ட கோபத்தில்…
சார் மீட்டிங்க்கு நேரமாச்சு.. இன்னும் வேலன் சார் வரல என்று கண்ணீரை உள்ளடக்கி கொண்டே பயத்தில் கூறினாள்…
இன்னைக்கு அப்பாவால இந்த மீட்டிங்க அடன்ட் பண்ண முடியாது.. நான் மட்டும் தான் இத அடன்ட் பண்ண போறேன்..அதுக்கான வேலையை போய் பார் என்று அவளிடம் கூறிவிட்டு மனதில் அப்பா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீங்க வீட்லயே இருங்க பா ப்ளிஸ் என்று தந்தையிடம் வார்த்தையால் சொல்லாததை அவன் அவர் மனதிடம் கூறிக்கொண்டு இருந்தான்..
Advertisement
அதன் பிறகு யுகி தன் பிஏவுடன் சென்று அந்த மீட்ங்கை அட்னட் செய்ய தொடங்கினான்..
மீட்டிங்கிற்கு செல்லும் முன்பே மொபைலை அணைத்து விட்டு சென்றான்..
வண்டியை பீச் ஓரமாக நிறுத்திய தேவ்வை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் அவனது நண்பன்…
” டேய்..!!மச்சி..!!எனக்கு அவள பாக்க போகவே பயமா இருக்கு டா.. நான் வேணும்னா இப்படியே வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு பொய்டட்டுமா ” என்று கேட்ட தேவ்விடம்..
” இனியும் நீ உண்மைய மறச்சின்னா அது ரொம்ப தப்பு டா.. அந்த பொண்ணால அத தாங்கிக்க முடியாது..உன்ன பாத்ததுமே அந்த பொண்ணுக்கு பாதி புரிய ஆரம்பிச்சிடும்..நீ உண்மைய சொல்றது தான் நல்லது..” என்று தோளில் தட்டிய படியே கூறினான்..
” என்னோட காதல் உண்மை மச்சி.. நான் அவ காதல அடையிரதுக்கு தப்பான வழிய சூஸ் பண்ணிருக்கலாம் .ஆனா என் காதல் பொய்யில்ல ” என்று கூறிய தேவ்வை பார்த்து ஒரு அர்த்தமற்ற சிரிப்பை பதிலாக தந்தான்..
சரி டா நான் போய் அவள பாத்து எல்லா உண்மை சொல்றேன்.. எனக்காக அங்க தக்ஷூ வெயிட் பண்ணிட்டு இருக்கா ” என்று கூற…
போகுறதுக்கு முன்னாடி இந்தா இந்த டைரிய அந்த பொண்ணுக்கு ஃகிப்ட்டா குடு என்று அவன் நண்பன் தர ..
அதை பார்த்த விஷ்ணு விற்கு அதிர்ச்சியாக இருந்தது…
என்ன டா அதிர்ச்சியா இருக்கா எப்படி எனக்கு இந்த டைரி கிடைச்சதுன்னு என்றே புருவத்தை உயர்த்திட
ஆமாம் என்பது போல் விஷ்ணுதேவன் தலையசைக்க
உன் ரூமுக்கு வந்த அப்ப தான் இது கிடச்சுது அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது நீ அந்த பொண்ண எந்த அளவு காதலிக்கிறேனு .. உன்னோட காதல் கண்டிப்பா சக்சஸ் ஆகும் டா நீ எதுக்கும் பயப்புடதா என்று அவன் நண்பனிற்கு ஆதர்வாக பேச
அதை கேட்ட தேவிற்கு ஏதோ பலம் கிடைத்தது போல் இருக்க அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த டைரியை பெற்றுக் கொண்டு சாலையை கடப்பதற்காக காத்திருந்தான்…
தக்ஷூ விற்கு எதிர்முனையில் தேவ் நின்று சாலையை கடப்பதற்காக நிற்க.. அவனது கண்களை மட்டுமே அவளால் காண முடிந்தது.. அதிலேயே அவனது காதலை அவளால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது…
இருவரின் கண்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து கொள்ள அங்கே ஒரு காதல் கீதம் ஓட்டினர் இருவரும் சேர்ந்து…
அதே நேரம் அந்த சாலையில் தன் ஆஃபிஸ்க்கு சென்று கொண்டிருந்த வேலனை எதார்த்தமாக கண்ட தக்ஷூ தன் தங்தையை பார்க்க …
வேலன் சென்று கொண்டிருந்த கார்..,,தீடிரென்று வெடிக்க.. இதனால் சாலையை கடக்க முன் வந்த தேவ் தூக்கி போடப் பட்டான்..
தன் தந்தையின் வண்டி திடிரென்று இப்படி ஆனதை கண்ட தக்ஷூ அப்பா என்ற அலறலுடன் தூக்கி எறியப்பட்டாள்..
சிறிது நேரத்திற்கு முன்பு அமைதியாக இருந்த அந்த இடம் இப்போது நெருப்பின் பசிக்கு இரையானது ..
அந்த இடத்தில் சுத்தி இருந்த அனைவருக்குமே நெருப்பின் வீச்சுகள் பட்டு தெரித்தது…
வேதிகா கோவில் சன்னதியில் அமர்ந்தாள்..
கோவிலுக்கு சென்றாள் ஒரு புது புத்துணர்ச்சி தோன்றும் என்று முன்னோர்களின் நம்பிக்கை..அதன் வலியே அனைத்து மக்களும் தனது துக்கத்தை மறக்க கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டு வருவது உண்டு…
ஆனால் வேதிகாவின மனமோ ஒரு நிலை அடையாமல் தவித்தது.. அப்படியே பக்கத்தில் இருந்த தூணில் தலை வைத்தவள்.. கண்களை மூடி அமர்ந்திருந்தாள்..அவளை அறியாமலே அவளது கண்களில் இருந்து விழி நீர் வெளியே வந்தது…
அதை துடைத்தவள்..அதன் பிறகும் கோவிலில் இருக்க பிடிக்காமல் வீட்டிற்கு சென்றாள்…
அந்த இடமே கலவரமாக இருந்தது…. மக்கள் இரத்த வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருந்தனர்…
சிறிது நேரத்திலே ஆம்புலன்ஸ் வந்து உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் மக்களை அழைத்து கொண்டு சென்றது…
அதில் தேவ் ,தக்ஷூ , வேலன் மற்றும் தேவின் நண்பன் என அனைவரையும் ஆம்புலன்சில் ஏற்றி சென்றனர்…
விபத்து நடந்ததை பற்றி செய்தி நிறுவனங்கள் அனைத்திற்கும் செல்ல.. செய்தியாளர்கள் அனைவரும் வேகமாக ஓடி வந்தனர் அந்த இடத்திற்கு செய்தியை பெறுவதற்காக உயிரை காப்பதற்காக அல்ல…
காவல்துறை அனைவரும் அந்த இடத்தில் கூடி இருந்தனர்…
அவர்களை அவர்களது வேலையை பார்க்க விடாமல் செய்தியாளர்கள் அனைவரும் போட்டிபோட்டு கேள்விக் கேட்க தொடங்க…
அவர்களுக்கு பதில் அளிக்க தோன்றாமல் நாகரிகமாக மறுத்து விட்டு உயிரை காக்க சென்றனர்…
ஃபயர் என்ஜின் மூலமாக எறிந்து கொண்டு இருந்த வேலனின் வண்டியை அணைக்க முற்ப்பட்டனர் .
தொலைக்காட்சியில் லைவாக செய்தி போய் கொண்டு இருந்தது..அதனை அறியாத வேதிகா மற்றும் யுகி அவர் அவர்களது வேலையை செய்து கொண்டு இருந்தனர்…
டிவியில் பிரபல தொழிலதிபர் வேலனின் கார் தீடிரென்று வெடித்தது..அந்த இடத்தில் வேலனின் மகள் தக்ஷ்ன்ய வர்சினியியும் இருந்ததாக கூறப்படுகிறது… இதனால் தீ பற்றியதால் அங்குள்ள மக்களுக்கு தீக் காயங்கள் பட்டு அனைவரையும் மருத்துவமனை கொண்டு சென்று தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்…
இதனை கண்ட வேதிகாவின் அண்ணன் குடும்பம் உடனே வேதிகாவுக்கு அழைத்தனர்..
இரண்டு மூன்று முறை அழைப்பு விடுத்தும் ..,,வேதிகா எடுக்காமல் போக உடனே யுகிக்கு அழைப்பு விடுக்க சிவ்ட்ச் ஆஃப் என்று வந்தது…
மீண்டும் வேதிகாவுக்கே அழைப்பு விட…உடனே அழைப்பை ஏற்றாள் வேதிகா..
வேதிகாவிடன் அவளது அண்ணன் நடந்த விஷயத்தை எடுத்துரைக்க…
அவளது தலையில் இடி இடித்தது போல் இருந்தது..அதை கேட்டவள் கதறி அழ… அப்படியே ஃபோனை கீழே போட்டவள் மடிந்து சரிந்து அழுதாள்…
இவளின் அழுகை போனில் அந்த பக்கத்திற்கு இருந்தவர்களும் கேட்க..உயிரே போனது போல் இருந்தது அவர்களுக்கு…
உடனே வேதிகாவின் வீட்டிற்கு சென்று அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடலிற்கு சென்றார்…
இங்கே யுகி மீட்டிங் முடித்து வந்து தன் மொபைலை ஆன் செய்ய..,, அதில் தன் மாமாவின் மிஸ்ட் கால் இருப்பதை கண்டவன்..உடனே அவருக்கு அழைத்தான்…
அதனை ஏற்றவர்..அவனுக்கு விவரத்தை கூற…இடியே விழுந்தது போல் இருந்தது அவனுக்கு…
உடனே அவனும் அவர்கள் கூறிய ஹாஸ்பிடல் விரைந்தான்…
ஹாஸ்பிடலுக்கு வந்தவன்..,நேராக ரிசப்ஷனனிஸ்டிடம் வந்தவன் வேலனின் பெயரையும் தக்ஷூவின் பெயரின் சொல்லி விவரத்தை கேட்க..
அவர்கள் இடத்தை நோக்கி விரைந்த யுகி ..
அங்கே அவன் கண்டது உயிரற்ற ஜீவனாய் இருந்து அழுதுக் கொண்டிருந்த தன் அன்னையை தான்…
தன் அன்னையை நோக்கி ஓடியன்.. அன்னையை அணைத்துக் கொண்டு அழுதான்….
டிவியை மட்டும் ஆன் செய்து..,, அதில் டிவியில் வரும் செய்தியை இரசித்து பார்த்துக் கொண்டு இருந்தது இரு கண்கள் குரோதத்துடன் .
~ஒளி பெருகும்
?????????????????????
Stay tuned…✌️✌️✌️✌️
