Skip to content
Post Views: 4,600
புடவையின் தலைப்பை சரி செய்துகொண்டிருந்தவள் பின்னால் வந்து நின்றவன், “வேற புடவை மாத்தேன்” என்றான்.
வழக்கமாக மருத்துவமனை செல்லும் பொழுது அணியும் அதே வெள்ளை நிற புடவை தான். என்னவோ இன்று அவளை இதில் பார்க்க அவனுக்கு மனமில்லை போல வண்ணமயமாக ஆசை.
“ஒரு நாள் இதை போடாம வந்து நான் வாங்குன பேச்சு போதாதா உங்களுக்கு?” சிரிப்போடு கூறி தன்னுடைய பொன் தாலியை அவிழ்த்து கைப்பையில் வைப்பதை பார்த்த அர்ஜுன் மனைவியை தன்னை நோக்கி திருப்பினான்.
“என்னங்க? டைம் ஆகிடுச்சா, சாரி ரெண்டு நிமிஷம்”
Advertisement
“பொறுமையா தான் இறேன்டி” என்றவன் அவள் வைத்த தாலியை எடுத்து மீண்டும் அவள் கழுத்தில் அணிவித்தான்.
பெண்ணவளுக்கு அவனிடம் கேள்வி கேட்கவும் தயக்கம், அவனே போட்டு விடும் தாலியை தடுப்பதிலும் தயக்கம். பேசாமடந்தையாகி தன்னையே இமை சிமிட்டாது பார்த்தவள் கண்களில் குனிந்து முத்தமிட்டவன்,
“மந்திரக்காரி, கண்ண உருட்டாதடி தாறுமாறா கிஸ் பண்ணனும் தோணுது” என்றவன் மேலும் குனிந்து அவளது நாடிக்கு கீழ் மேலும் ஒரு முத்தம் வைக்க அப்பட்டமான அதிர்வோடு பின்னோக்கி சென்றிருந்தது பெண்ணின் கால்கள்.
Advertisement
அவளது நகர்வில் மென்மையாக சிரித்தவன், “இதை போட்டு போய்ட்டு வா” என்றான் தாலியை கண் காட்டி.
Advertisement
அவளிடமோ பெரும் தயக்கம், வைராக்கியம். நீ தானே உண்மை வெளியே தெரிய கூடாதென கூறினாய் அதை சரி செய்த பிறகே உன் மனைவியாக நான் வெளியே வருவேன் என்கிற வைராக்கியம்.
அதனை உணர்ந்தானோ என்னவோ, “ஏதாவது சொல்லனுமா?” அவள் நாடி பிடித்து கேட்டான் அர்ஜுன்.
“என்னோட ஹஸ்பண்ட் யார்னு கேட்டா என்னால பொய் சொல்லவோ உண்மைய மறைக்கவோ முடியாது” என்றாள் நிதானமாக.
Advertisement
“உன்ன யார் மறைக்க சொன்னது” கேட்டான் எதுவும் தெரியாதது போல,
“சொல்லு உன் பேர் இலக்கியா அர்ஜுன் சக்கரவர்த்தி-னு”
“சொன்னா நம்பிடுவாங்களா என்ன? அன்னைக்கு நீங்க நிக்க வச்சு கேள்வி கேட்ட மாதிரி எல்லாரும் கேப்பாங்க. ஏணி வச்சா கூட உங்க பக்கத்துல நான் வர முடியாதுனு என் முகத்துக்கு முன்னாடி நின்னு சிரிப்பாங்க”
உள்ளடக்கிய வேதனையை சிரிப்போடு மறைத்தவள், “வாங்க பாட்டி நமக்காக வெயிட் பண்ணுவாங்க”
நகர போனவள் கையை பிடித்து நிறுத்தியவன், “லீவு போடு இலக்கியா” என்றான்.
மறுப்பாக தலையை அசைத்தவள், “ஏற்கனவே நிறையா லீவு போட்டுட்டேங்க. கேள்வி ரொம்ப கேக்குறாங்க இப்போவே. இதுல சம்பளம் வேற பிடிப்பீங்க”
“உனக்கு சம்பளம் தான பிரச்சனை? இந்தா பிடி” தன்னுடைய டெபிட் கார்ட் ஒன்றை அவளிடம் வைத்தான்.
“வேணாம்ங்க” அவள் மறுக்க, “உனக்கு நான் எதுவுமே செய்ய கூடாதா?” சற்று கோவமாக தான் கேட்டான்.
“எனக்காக செய்யலாம். என் அப்பாவுக்கு வேணாமே. தெரிஞ்சா அவருக்கு தான் சங்கடமா இருக்கும். நான் செஞ்சா அது வேற மாதிரி” அவளது பதிலில் அவனால் மேலும் பேச முடியவில்லை.
ஒரு சொல் தந்தையை நோக்கி நீண்டிட கூடாதென அவள் முனைப்பாக இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
“என்னால தான நீ இப்போ இப்டி லீவு போடுற. அதை நானே சரி பண்றேன். ஆனா கண்டிப்பா நீ லீவ் போடணும். காரணம் கீழ சொல்றேன். வேற சாரீ மாத்து”
இலக்கியா தயங்க, அவள் நெற்றியை நாசியை வைத்து தீண்டியவன், “ரிமூவ் பண்ண கஷ்டமா இருக்கும்னு யோசிக்கிறியோ? நான் ஹெல்ப் பண்ணவா இலக்கியா”
ரகசியமாக அவன் கேட்டதில் இலக்கியா பட்டென அவன் வாயில் அடித்து, “இந்த காதல் அரசன் அர்ஜுன என்னால ஹாண்டில் பண்ண முடியல ப்பா. எனக்கு விறைப்பான என்னோட டாக்டர் தான் வேணும்”
“எல்லாருக்கும் வெளி ஆளுங்ககிட்ட ஒரு முகம், லைப் பார்ட்னர்கிட்ட வேற முகம் தான் இருக்கும். ஏன் நீ இல்ல, ஊர் உலகத்துக்கு எல்லாம் அமைதியான பொண்ணு. என்கிட்ட மட்டும் மந்திரகாரியா இருக்கியே”
“அப்டி என்ன டாக்டர் சார் மேல மந்திரம் போட்டேனாம்?”
கிடைத்த சாக்கை துரிதமாக பயன்படுத்திக்கொண்டவன் அவளது கீழ் உதட்டை பிடித்து, “இதோ பேசுதே. இந்த ஸ்வீட் லிப்ஸ்” பட்டும் படாமல் அவள் உதட்டில் இதழ் ஒற்றி, “ஒரு நாள் கிஸ் பண்ணி கட்டி போட்டுட்டியே. இத விட வேற என்ன பெரிய மந்திரம் செய்யணுமாம் என் பொண்டாட்டி?”
என கேட்டிட அவனிடமிருந்து தன்னை மறைக்க முடியாமல் சிவந்து நின்றாள் பாவை. அந்த முத்தத்தை நினைத்தாலே உடலில் பல ரசாயன மாற்றங்கள். காற்றில் பறப்பது போல் மனமே லேசாகியது.
முதல் முத்தம். தித்திப்பான நினைவுகளோடு உணர்வில் கலந்து அகல மறுத்தது. அவன் அவளில் கிரங்கினானோ இல்லையோ, அவனது அந்த நெருங்கிய தீண்டலில் பெண்ணவள் பரவச நிலையில் தான் தள்ளாடினாள்.
“அதை பத்தி பேச வேணாமே” என்றாள் சங்கோஜமாக.
“வெக்கம் வருதா? அப்போ அதை பத்தி இன்னும் இன்னும் பேசணுமே” ஜோரான மனநிலை தான் அர்ஜுனுக்கு. அவளை சிவக்க வைத்து அதில் குளிர்காய பிடித்தது போல மருத்துவனுக்கு.
“சார்…”
“என்னங்க சார்?”
“நான் வெளிய போகவா?”
“கொஞ்ச நேரம் கழிச்சு போ. அன்னைக்கு முத்தம் கொடுத்தது டச் விட்டு போச்சு. வாயேன்” வசதியாக கட்டிலில் அமர்ந்து, அவளையும் மடியில் அமர்த்திக்கொள்ள அழைத்தான்.
சிக்குனீங்களா என நினைத்தவள், “கேக்கணும் நினைச்சேன். நான் உங்க லைப்ல எத்தனாவது பொண்ணு?”
“நாலாவது” என்றான் சிறிதும் தயக்கமில்லாமல்.
“ம்ம். சொல்லுங்க ஹிஸ்ட்ரிய”
சிறிதும் யோசிக்காமல் அவன் அருகே அமர்ந்து அவிழ்த்து வைத்திருந்த வளையல்களை அணிந்தாள். அவளின் இந்த நிதானத்தை பார்த்து நேற்று சுருக்கியவன் எதையும் மறைக்காமல் பேசலானான்.
“முதல் பொண்ணு ஸ்கூல் டென்த்ல. என்னோட கிளாஸ்மேட் தான். அவகிட்ட பேசுறதுக்காகவே டவுட் மாதிரி போவேன்”
“ஓ” சாதாரணமாக கேட்டவள், “எப்படி பிரேக்அப் ஆச்சு?”
“பிரேக்அப் எதுக்கு? அது சும்மா ஒரு அபக்ஷன். ஆறே மாசத்துல முடிஞ்சு போச்சு. அடுத்த பொண்ணு எம்.பி.பி.எஸ் தேர்ட் இயர்ல. ஸ்னேகா மாதிரி இருப்பா அவ்ளோ அழகு, பாத்ததுமே பக்குனு ஒட்டின முகம். என்னோட ஒரே சீரியஸ் ரிலேஷன்ஷிப், பவித்ரா” கைபேசியை எடுத்து புகைப்படங்களில் விரல்களை அலையவிட்டான்.
“ரெண்டு வருஷ ரிலேஷன்ஷிப். ஊரே சுத்தினோம், ரெண்டு பேர் வீட்டுக்கு கூட விஷயம் தெரிஞ்சது” மனைவியிடம் தன்னுடைய கைபேசியை நீட்டினான்.
அதில் அர்ஜுனோடு ஒரு பெண். அவன் கூறும் பெண் என தெரிந்தது அவன் தோளில் அவள் சாய்ந்திருக்கும் நெருக்கத்தில். இருவர் முகத்திலும் உறைந்த புன்னகை அவர்கள் மகிழ்வின் அளவை கூறியது.
“ட்ரைனிங் ஒரே ஹாஸ்பிடல் போகலாம்னு கூட பேசி வச்சிருந்தோம். அப்போ அவளோட வீட்டுல விஷயம் தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. என் வீட்டுல இருந்து பேச போகுறதுக்குள்ள முறைப்பையனை கட்டி வச்சிட்டாங்க ஒரே நாள்ல”
சோகம் இன்னமும் அவன் முகத்தினில் தேடி பார்த்தவளுக்கு அது இல்லாமல் போக நிம்மதி பிறந்தது.
அவளின் பார்வையை உணர்ந்தவன், “என்ன பீல் பன்றேன்னு பாக்குறியா? ரொம்பவே உடைஞ்சு போய் தான் இருந்தேன். வெளிய வர கஷ்டமா தான் இருந்துச்சு, அப்போ பழகுனது தான் இந்த சிகரட்.
என்ன பண்றது லவ் பண்ணிட்டேன், அடுத்தவன் பொண்டாட்டிய நினைச்சு உருகுறது ரொம்ப அசிங்கமா இருந்துச்சு, வெளிய வந்துட்டேன். அப்றம் மொத்த கவனமும் கேரியர் பக்கம் போச்சு. அப்றம் அஞ்சு, உனக்கே தெரியும்” தன்னுடைய கடந்த காலத்தை முடித்து வந்தான்.
“பர்ஸ்ட் கிஸ்?”
“உன்னோட கேள்வியே சரியில்லடி. அது எதுக்கு நமக்கு, முத்தம் தருவியா மாட்டியா?” அடாவடிகாரனாக மாறினான் அர்ஜுன். சாயம் பூசாத அந்த இதழின் ஈரத்தை உணர தவித்தது அவன் அதரங்கள்.
“பதில் சொல்லுங்க டாக்டர் சார்”
“பர்ஸ்ட் இயர்ல பிரஷாந்தினு ஒரு பொண்ணு கூட” அசடு வழிய சிரித்தவனின் கன்னத்தில் வலிக்காமல் அடித்தவள், “அப்போ சார் கணக்கு தப்பு. நாலு இல்ல அஞ்சு”
“அது பசங்க கூட ஒரு கேவலமான பெட் இலக்கியா. பவித்ரா கிட்ட கூட ஒரே ஒரு கிஸ் தான்டி. அஞ்சு கிட்ட தான்…”
கணக்கு கூறியவனின் இதழில் விறல் வைத்து, “கிஸ் கவுண்ட் கேக்கல டச் விட்டு போச்சுன்னு சொல்லவும் வரலாறு தெரிஞ்சுக்க கேட்டேன். வேற ஒண்ணுமில்ல”
“இலக்கியா…” அவனின் தவிப்பை ஊக்கப்படுத்தவே எதுவும் நடவாதது போல் புடவை மாற்ற ட்ரெஸ்ஸிங் ரூம் உள்ளே நுழைந்து எளிமையான சாம்பல் நிற காட்டன் புடவை மாற்றி வந்தாள்.
ஈரத்தோடு கொண்டையிட்டிருந்த சிகையை அவிழ்த்து சிறு கிளிப் போட்டவள் கையை பிடித்து தன்னிடம் இழுத்தான்.
“கோவமா என் மேல? அசிங்கமா இருக்கா என்ன நினைச்சா” அவள் விழி பார்த்து அர்ஜுன் கேட்க இல்லை என ஆடியது அவள் சிரம்.
“பொய் சொல்லாத. உன்கிட்ட மறைக்க கூடாதுனு தான் எல்லாத்தையும் ஓப்பனா சொன்னேன், எல்லாமே பாஸ்ட் தான்”
“அந்த அந்த ஏஜ்ல எல்லாருக்கும் வர்ற தடுமாற்றம் தான் உங்களுக்கும். சிலர் அதை கண்ட்ரோல் பண்ணிடுவாங்க. சிலர் கெடைச்சிருக்க சுதந்திரத்தை பயன்படுத்திட்டு கண்ட்ரோல் மிஸ் பண்ணிடுவாங்க. நீங்க ரெண்டாவது வகை. வெர்ஜினா இருந்தா தான் அவங்க அவங்க ஒழுக்கமானவங்கனு நினைக்கிற ஆள் நான் இல்ல”
“கிஸ் பண்ணிருக்கேன், அதுக்காக வெர்ஜின் இல்லனு அர்த்தமில்லை. இப்பவும் கன்னி பையன் தான், நான் என் பொண்டாட்டிக்கு மட்டும் தான்” புருவங்கள் உயர்த்தி கணவனை பார்த்து சிரிப்பை அடக்கினாள்.
“என்ன பார்வை” நம்பவில்லையோ மனைவி என்கிற எண்ணத்தில் அவன் சற்று எகிற, கேலி சிரிப்போடு, “தெரியும்” என்றாள்.
“எப்படி எப்படி?” இவன் சுவாரஸ்யமாக கேட்க கண்களில் இன்னும் கேலி கூத்தாட அவன் கன்னத்தில் இரண்டு முறை தட்டி, “அதெல்லாம் அப்டி தான்” என்றவள் அறையை விட்டு ஓடியிருந்தாள்.
அர்ஜுனுக்கு என்ன சிந்திப்பதென்றே தெரியவில்லை. மனைவியின் கேலி சிரிப்பின் காரணத்தையா, இல்லை தன்னை பற்றி எல்லாம் தெரிந்தும் பெரிதாக எடுக்காத அவளின் குணத்தை எந்த வகையில் சேர்ப்பதென்று யோசிப்பதா தெரியவில்லை.
error: Content is protected !!