Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nizhalmugam

நிழல்முகம்: 7

அந்த மருத்துவமனையில் கவிலாஷ் வருகைக்காக காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் கண்ணன்…அவரது மனம் எதையோ யோசித்து கொண்டிருந்தது…அப்போது அங்கு வந்த கவிலாஷை பார்த்து “குட் மானிங் சார்”என்று சல்யூட் அடிக்க…

 

அதை சிறு தலையசைப்புடன் பெற்றுக் கொண்டவன் ‘சொல்லுங்க கண்ணன்’ எதாவது க்ளூ கிடச்சதா…

 



Advertisement

எஸ் சார்..என்றவன் கான்டபிளை அழைத்து எதோ கூற..அவர் உடனே அந்த சிறு முடிச்சுடன் கூடிய துணியை எடுத்து வந்தார்…

 

கவிலாஷ் கண்ணனை குழப்பமாக பார்க்க…

Advertisement

 

Advertisement

சார் இது கொலை நடந்த இடத்துல கிடச்ச ஒரு செயின்..அதுவும் பெண்கள் போடுற செயின்.. என்று கூற…..

 

வாட்……..ட் என்று அதிர்ந்தான் பிரனேஷ்..

Advertisement

 

எஸ் சார்..இது தான் கொலை நடந்த இடத்துல கெடச்சது..இத வச்சி பாத்தா உங்க அப்பாவ கொல பண்ணது ஒரு லேடியா கூட இருக்கலானு நாங்க சந்தேகப்படுறோம்…

 

என்ன சொல்றீங்க கண்ணன்!!..எங்க அப்பாவ கொலை செய்தது ஒரு பொண்ணா?…என்னால நம்ப முடியல!…யாரு அது?..எதுக்காக என் அப்பாவ கொல்லனும்….

 

சார்…அது..வந்து நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா….

 

கேளுங்க  கண்ணன்…

 

ச.சார் உங்க அப்பா பொண்ணுங்க விசயத்துல எப்…..

 

போதும் கண்ணன்..இதுக்கு மேல எதுவும் கேக்க வேண்டாம் என்றான் கோபம் கொப்பளிக்க….

 

இ..ல்..ல சார்….

 

மைன்ட் யுவர் வேர்டஸ் கண்ணன்..இதுக்கு மேல எங்க அப்பாவ பத்தி எதாவது பேசுனீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்…கத்தினான்..

 

சார் கொஞ்சம் பொறுமையா இருங்க…என்று கண்ணன் சமாதானபடுத்த…

 

பின்ன என்ன கண்ணன்.. இப்படி பேசுறீங்க ..என் அப்பாவ பத்தி உங்களுக்கு என்ன  தெரியும் …அவர் பெண்கள எவ்வளவு மரியாதையா நடத்துவார் தெரியுமா. !…ஆதங்கத்துடன் கூறினான்…

 

சார்..உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்ல..ஒரு கொலை நடந்துருக்கு..எல்லா பக்கமும் நாங்க யோசிக்கனும்….

 

அதுக்காக என் அப்பாவையே சந்தேகம் படுவீங்களா…

 

சந்தேகம் இல்ல சார்..ஒரு விசாரணை..அவ்ளோ தான்..எல்லாரும் இங்க இருக்கும் போது அவர் மட்டும் ஏன் அந்த ரூம்க்கு போனார்…

 

அ..து…வந்து ஆளானபட்ட கவிலாஷையே மடக்கினார் கண்ணன்…

 

அதுமட்டுமில்லாம அவர் இருந்த ரூம்ல பெண்கள் போடுற செயின் கெடச்சிருக்கு…உங்க அப்பா அந்த ரூம்ல வச்சி எதோ ஒரு பொண்ணுகிட்ட தப்பா  நடந்துக்க முயற்ச்சி பண்ணிருக்கலாம்..தன்ன காப்பாத்திக்க அந்த பொண்ணு உங்க அப்பாவ தாக்கிருக்கலாம்..அதுல உங்க அப்பா இறந்திருக்கலாம்…

 

போதும்..என்ற கவிலாஷ் கண்ணனின் கழுத்தை பிடித்து”இதுக்கு மேல  எங்க அப்பாவ பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுன உன்ன கொன்னு புதச்சிடுவேன்..என்றான் கனலை கக்கும் பார்வையுடன்…

 

சார் பிளீஸ் கைய எடுங்க..என்று கண்ணன் தடுக்க…விட்டவன் கோவமாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்…

 

சார் கோவ படாதீங்க..உங்களால இத ஏத்துக்க முடியாதுனு தெரியும்…இப்படிதான் நடந்ததுனு நான் சொல்லல…இப்படி ஏன் நடந்துருக்க கூடாதுனு தான் நான் கேக்கிறேன்..போஸ்மாட்டம் ரிப்போட்ல கூட உங்க அப்பாவ அடிச்ச ஜாடில இருந்த கைரேக ஒரு பொண்ணோடது தானு டாக்டர் சொல்லிருக்கார்..

 

நான் அந்த டாக்டர பாக்க முடியுமா?

 

சாரி சார்..அவர் ஒரு பேஷண்ட பாக்க வெளிநாடு போயிருக்கார்…எப்போ திரும்ப வருவார்னு தெரியல…

 

ஒகே..அப்போ அந்த கைரேக யாரோடதுனு கண்டுபிடிச்சிட்டீங்களா… கேட்டான்…

 

இன்னும் இல்ல சார்…பார்ட்டிக்கு வந்த சில பேர்கிட்ட விசாரிச்சிட்டு இருக்கோம்..அப்புறம் அங்க உள்ள சிசிடிவி கேமிரா மூலமா அந்த ரூம்குள்ள யார் யார் போயிருக்காங்கனு செக் பண்ணி பாத்ததுல நிறைய பேர் அந்த ரூம்ம யூஸ் பண்ணிருக்காங்க…அதுல யார் குற்றவாளினு கண்டுபிடிக்க முடியல சார்…

 

இப்படி சொன்னா என்ன அர்த்தம் கண்ணன்…என் அப்பாவ கொன்ன அந்த கொலைகாரன் யாருனு எனக்கு தெரிஞ்சே ஆகனும் என்றான் கடுமையான முக பாவத்துடன்…

 

ஒகே சார்…கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுறேன்..

 

அப்பறம் அந்த செயின காமிங்க என்றவன் அதனை வாங்கி பார்க்க இதய வடிவில் மேலே பச்சை கல் பதித்து,பார்பதற்கு அழகாய் இருந்தது…எப்படியும் ஒரு ஐந்து பவுன் இருப்பது போல் இருந்தது…

 

கண்ணன் பார்ட்டி முடிந்து,இதுவரைக்கும் யாராவது செயின காணும்னு யாராவது கம்ளைண்ட் குடுத்துருக்காங்களா?

 

நோ சார்..அப்படி எந்த கம்ளைண்டும் வரல சார்…மத்த ஸ்டேஷன்லயும் இன்பார்ம் பண்ணிருக்கோம் சார்..இதுவரைக்கும் அப்படி எந்த கம்ளைண்டும் வரலயாம்..அப்படி வந்தா உடனே இன்பார்ம் பண்ண சொல்லிருக்கேன்..

 

ஒகே..குட் என்றவன் அந்த செயினை தீர்கமாய் பார்த்து கொண்டே,அங்கிருந்து கிளம்பினான்….

 

ப்ரனேஷ் நன்கு உறங்கி கொண்டிருந்தான்..அவன் அவளது குல்பியை பார்த்து  ஒரு வாரம்

கழிந்திருந்தது..ஷாரிக்காவிடம் பேசிவிட்டு வந்தவன் தனது தொழில் சம்ந்தமாக   பெங்களூர் வந்திருந்தான்…வந்த வேலை நல்லபடியாக முடிய நாளை காலை ஊருக்கே சென்று தனது குல்பியை காண வேண்டும் என்று நினைத்திருந்தான்…..அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு அவளை அவன் காணவில்லை.. அவள் நன்கு பயந்து போயிருப்பதை அறிந்தவன்,அவளை அவள் போக்கிலே விட்டு தான் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து அவளை  அவள் போக்கிலே விட்டான்…ஆனால் அவனால் இதற்கு மேலும் அவளை காணாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவன் நாளை முதல் வேளையாக ஊருக்கு திரும்பி தன்னுடைய குல்பியை காண வேண்டும் என்ற முடிவுடன் உறங்கினான்..அந்தோ பரிதாபம் அவன் அறியவில்லை..அவனுடைய குல்பியை இனி காண போவதில்லை என்பதை…

 

மணி பத்தாகியிருந்தது.. வேலையை முடித்துவிட்டு கிழவி குடுத்த நூறு ரூபாய் தாளையே பார்த்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள்..ப்ரனேஷ் அவளிடம் அவ்வாறு நடந்து கொண்ட பிறகு அவள் அவனது அலுவலகத்திற்கு செல்வதை தவிர்த்திருந்தாள்..மறுபடியும் அந்த கிழவியிடமே வேலைக்கு சேர்ந்து கொண்டாள்..சிறிது தூரம் சென்றதும் யாரோ தன்னை பின் தொடர்வது போல் தோன்ற திரும்பியவள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு நடக்க தொடங்கினாள்..காலையில் நடந்த சம்பவம் அவள் மனதை அழுத்தியது..கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..எங்கு செல்வது என்று தெரியாமல் நடந்து கொண்டிருந்தாள்…அவளுக்கு இத்தனை வருடத்தில் தன்னை வளர்த்த பாட்டிக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதே இன்று காலையில் தான் அவளுக்கு தெரிய வந்தது..அவள் காலையில் அந்த கிழிந்த பாயில் படுத்திருந்தாள்.அவளது மனமோ ப்ரனேஷ் அவளிடம் நடந்து கொண்டதையே நினைத்திருக்க,யக்கா யக்கா என்று அழைத்து கொண்டே உள்ளே வந்தான் கதிர்..

 

வாடா கதுரு இன்னா காலங்காத்தால ஊட்டு பக்கம் வந்துனுருக்க…

 

யக்கா உன்ன தேடி ஒருத்தர் வந்துனுருக்காரு…

 

என்ன தேடியா,யாரா இருக்கும் ஒரு வேல பாசா இருக்குமோ என்று நினைத்தவள் வெளியே வந்து பார்க்க அங்கே ஒரு அறுபது வயது தக்க ஒருத்தர் நின்றிருந்தார்..அவரை புரியாமல் பார்க்க…

 

நீதான் அந்த கெழவி வளத்த பொண்ணா?என்றார் அதிகாரமாய்…

 

அவர் கேட்ட விதத்தில் சிறிது பயந்தவள் .அ…ஆமா நீங்க?…

 

அந்த கெழவி என்ன பத்தி உங்கிட்ட எதும் சொல்லலயா…எப்படி சொல்லும் அது தான் தான் திமிர் பிடிச்சது ஆச்சே..என்று கோவமாய் கத்தினார்…

 

யோவ் சும்மா நிப்பாட்டு..ஆரு நீ எதுக்கு என் கெழவிய திட்டிகினு இருக்க என்றாள் காட்டமாய்…

 

என்னது உன் கெழவியா?நீ யாரு முதல்ல அதுக்கு..அது பெத்த மொவன் நான் குத்து கல்லாட்டம் நிக்கிறேன்..நீ என்னமோ உரிம கொண்டாடுற…

 

அவர் கூறியதை கேட்டு அதிர்ந்து போனாள்…இது கெழவியோட புள்ளையா.!அது செத்தப்ப கூட இவர நான் பாக்கலியே..கெழவிக்கு கூட நான் தான கொல்லி வச்சேன்..அவள் யோசிக்கும் போதே,

 

இதோ பாரு பொண்ணு..என்னா முழிச்சிட்டு நிக்கிற..அந்த கெழவி எனக்குனு எதும் செஞ்சது இல்ல..இப்போ இந்த எடத்துக்கு ஒரு நல்ல விலை வந்துருக்கு..அத நான் விக்க போறன்..நீ இப்பவே இந்த எடத்த காலி பண்ணு என்று மனசாட்சியே இல்லாமல் கூற, அவர் கூறியதை கேட்டு அதிர்ந்து போய் நின்றாள்…

 

அப்போது அவர் யாரையோ போனில் அழைத்து அந்த இடத்திற்கு வருமாறு அழைத்தார்…

 

இந்த பாரு சும்மா இங்கயே நிக்காம நீ இனிமே வேற எங்கயாது தங்கிக்க..பார்ட்டி காரவுங்க வரும் போது நீ இங்க நின்னா நல்லாருக்காது..மொதல்ல கெளம்பு என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக விரட்டினார்…

 

அவளோ ஒன்றும் புரியாமல் விக்கித்து போய் நின்றாள்…இவ்வளவு நாள் அனாதையாய் இருந்தவளுக்கு பாதுகாப்பிற்கு ஒரு வீடு இருந்ததே என்று நினைத்தவளுக்கு,அதுவும் இன்றோடு இல்லை என தெரிந்த பிறகு எங்கு செல்வது என்று தெரியாமல் நடக்க தொடங்கினாள்…

 

எவ்வளவு தூரம் நடந்தாலோ அவளுக்கே தெரியாது..பசி வயிற்றை கிள்ள கையில் ஒரு பைசா இல்லாத நிலையை எண்ணி வருந்தினாள்..அப்போது அங்கு உள்ள ஒரு கோவிலில் யாரோ அன்னதானம் போடுவதாக எதிரே வந்த இருவர் கூறி கொண்டே செல்ல, உடனே அவள் அந்த கோவிலை நோக்கி சென்றாள்..அங்கு கொடுத்த உணவை தின்றவள் அப்படியே கோவிலில் படுத்து விட்டாள்..அப்போது தான் அவளுக்கு முன்பு வேலை செய்த இட்லி கடை நியாபகம் வர அந்த கிழவியை பார்க்க சென்றாள்..அவரோ  இவளை அறவே வேலைக்கு வேண்டாம் என்று துரத்த, ஒரு வழியாய் அவரை சமாதானபடுத்தி அவரிடம் வேலைக்கு சேர்ந்தாள்..கடை போட்டதிலிருந்து நிற்க நேரமில்லாமல் ஒடி ஒடி வேலை செய்தாள்..பத்தாததிற்கு இரண்டு தடியன்கள் வேறு அவளிடம் வம்பு செய்ய, எதையும் கண்டு கொள்ளாமல் வேலையை முடித்துவிட்டு அவர் கொடுத்த நூறு ரூபாயை பெற்று கொண்டு நடக்க தொடங்கினாள்…

 

மறுபடியும் யாரோ பின் தொடர்வதை போல் தோன்ற திரும்பியவள் அங்கே இவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர் இட்லி கடையில் இவளிடம் வம்பு செய்தவர்கள்…

 

அவளை பயம் ஆட்கொள்ள, உடம்பெல்லாம் திடிரென வியர்த்து கொட்ட அங்கிருந்து ஒட ஆரம்பித்தாள்..

 

டேய் விடாதடா…அவள புடிடா, என்று கூறிக் கொண்டே அவளை துரத்த ஆரம்பித்தனர்…

 

அவள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒடினாள்..அவர்கள் விடாமல் அவளை துரத்தினர்….

 

ஒடிக் கொண்டே இருந்தாள்..எங்கு செல்வது என்று தெரியாமல் ஒடினாள்..அவளால் ஒடக் கூட முடியவில்லை…மூச்சு வாங்கியது…தொண்டை எல்லாம் வறண்டு போயிருந்தது..அவள் ஒடிக் கொண்டே திரும்பி பார்க்க அவர்கள் விடாது இவளை துரத்தி கொண்டிருந்தனர்…அவளால் அதற்கு மேல் ஒட முடியவில்லை..அது எந்த இடம் என்று கூட அவளுக்கு தெரியவில்லை…ஒடினாள்..அங்கு ஒரு பெரிய கட்டிடம் இருந்தது…அங்கு அந்த கட்டிடத்திற்கு முன்பு பல விதமான செடிகள் வளர்க்கபட்டு அழகாய் இருந்தது…அதில் ஒரு செடியின் பின்னால் அமர்ந்து கொண்டாள்..அவர்கள் அவளை சுற்றிலும் தேடினர்..அவளது இதயம் வேகமாக துடித்தது..அவள் சுற்றிலும் பார்வையை செலுத்தி கொண்டிருந்தாள்..அப்போது அந்த கட்டிடத்தின் முன்பு ஒரு பெண் நிற்க அவளுக்கு சிறிது நம்பிக்கை வர, அந்த பெண்மணியிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்து,அவரை அழைக்க போகும் நேரம்,எங்கிருந்தோ ஒரு கார் வந்து அவளை அழைத்துச் சென்றது…இருந்த கொஞ்ச நம்பிக்கையும் விட்டுப் போக தொப்பென அமர்ந்தாள்…அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை..சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்..அவர்களை காணவில்லை..நான்கு புறமும் நோட்டமிட்டால்..காணவில்லை..அவளது முகத்தில் இருந்து வழிந்த வியர்வை நிலத்தில் பட்டு தெரித்தது..அவளது இதயம் அதிவேகமாய் துடித்தது…அடுத்து என்ன செய்வது யோசித்தாள்..ஒன்றும் தெரியவில்லை…எங்கு செல்வது என்று புரியவும் இல்லை..அப்படியே அமர்ந்திருக்க, அவளது தோளின் மீது ஒரு கை படற,உடலெல்லாம் நடுங்க,பயத்தை முகத்தில் தேக்கி,திரும்பியவள் ஆ……ஆஆ என்று அலறினாள்….

 

இங்கே இவள் இப்படி பயந்து போய் அமர்ந்திருக்க அங்கு மித்ராவே போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு உடல் நடுங்க படுத்திருந்தாள்…அவளது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது..அவள் இன்று நடந்த சம்பவங்களை நினைத்து பார்த்தாள்… அவள் ஒரு அலுவலகத்தில்  வேலைக்கு சேர்ந்திருந்தாள்…

 

மித்ரா தனது வேலையை முடித்து விட்டு கிளம்பி கொண்டிருந்தாள்..அப்போது அவளது பக்கத்தில் அமர்ந்திருக்கும் வளர்மதி கிளம்பாமல் வேலை செய்து கொண்டிருந்தாள்…அவளது முகம் ஒருவித பதட்டத்தில் இருந்தது…

 

ஏய் வளர்மதி  நீங்க கிளம்பலயா..இப்பவே ஆல்ரெடி லேட்..என்றாள்..

 

இல்ல மித்ரா.. நாளைக்கு நடக்க போற முக்கியமான மீட்டிங்ல இந்த  ப்ரோகிராம ப்ரசண்ட் பண்ணனும்..நான் இன்னும் ரெடி பண்ணல..இத ரெடி பண்ணி பாஸ்க்கு மெயில் பண்ணனும்…என்றாள்..

 

இத முன்னாடியே முடிச்சிருக்கலாமே?

 

இல்ல மித்ரா வீட்ல குழந்தைக்கு உடம்பு சரியில்ல…அதான் என்னால வேலையில கான்சன்ரேட் பண்ண முடியல..இப்போ கூட வீட்லேருந்து போன் மேல போன் வருது என்று கூறிக் கொண்டே கணினியில் முகத்தை புதைத்து கொண்டாள்..

 

அவளை பார்க்க பாவமாய் இருந்தது மித்ராவிற்கு..வளர்மதி நீங்க கிளம்புங்க இத நானே முடிச்சிட்டு பாஸ்க்கு மெயில் பண்றேன் என்றாள்…

 

ரொம்ப தாங்ஸ் மித்ரா..என்றவள் அவளிடம் விவரத்தை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்…

 

மித்ரா தனது முகத்தை கணினியில் புகுத்தி கொண்டு  வேலை செய்து கொண்டிருந்தாள்.நேரம் கடந்து கொண்டிருந்தது… அப்போது அவளது மொபைல் ஒலிக்க எடுத்தவள் “சொல்லு சுகு” என்றாள்…

 

…………

 

இங்க கொஞ்சம் ஒர்க்..இன்னும் கொஞ்ச நேரத்துல முடிச்சிடுவேன்…

 

………

 

இல்ல சுகு நீ கார எடுத்துட்டு ஆபீஸ் வந்திடு என்று கூறிவிட்டு வைத்து விட்டாள்…

 

ஒரு வழியாய் வேலையை முடித்தவள் அதனை மெயில் அனுப்பினாள்…பிறகு அங்கிருந்து கிளம்ப முயல,மேடம் பாஸ் வந்திருக்கார்..உங்கள வர சொன்னார் என்று கூறிவிட்டு செக்யூரிட்டி அங்கிருந்து கிளம்பினார்..

 

என்னது பாஸ் வந்துருக்காரா என்று நினைத்தவள்,அவரின் அறையை நோக்கி சென்றார்..அவள் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தாலும் அவரது முதலாளியை இன்னும் நேரில் சந்தித்ததில்லை…மனதில் ஒரு வித நடுக்கத்துடன் கதவை திறந்து..

 

‘மே ஐ கமின் சார்’ என்றாள் …

 

எஸ் கமின் என்ற குரலை கேட்டு நிமிர்ந்தவள் அங்கு சுழற் நாற்ககாலியில் அமர்ந்திருந்த தாமோதரை கண்டு நெருப்பை அள்ளி கொட்டியது போல் துடித்து போனாள்…

 

அப்போது மிது..மிது என்னாச்சுடி,ஏன் உடம்பெல்லாம் இப்படி நடுங்குது என்று அவளை உசுப்பினாள் சுகன்யா…

 

தெரியல சுகு உடம்பெல்லாம் நடுக்குது..ஒரு மாதிரி பயமா இருக்கு ..என்ன விட்டு எங்கயும் போகாத என்று அவளது கையை  கெட்டியாக பிடித்து கொண்டே திக்கி திக்கி கூற..

 

ஒன்னுமில்லடா..பயப்படாத..நான் இருக்கேன்ல என்றவள்,அவளது தலையை ஆறுதலாய் தடவி விட்டு,அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்காமல் அவளது அறையில் இருந்த மாத்திரையை கொடுத்து தூங்க வைத்தாள் சுகன்யா…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!