Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 11. ( 2. 2)

 

 

நாம் 11 (2.2 )

 



Advertisement

     அமைதியாக இருந்தவனிடம்  உங்க பேர் என்ன?..”

   ‘ ஆரம்பத்திலே கூறிய பெயரை நீ கவனிக்கவில்லையா முயல்குட்டி?. ‘

     அவளின் முகம்பார்த்து.. கை பற்றியவாறே.. மென் புன்னகையுடன்.. ” வேந்தன்

Advertisement

    அரசி அவன் பேர் சொன்னவுடன்..” தொடங்க

Advertisement

   அரசி.. அண்ணானு மட்டும் சொல்லாத. எனக்கு ஏற்கனவே இரண்டு தங்கை இருக்கு. ” என சிரிப்புடன் கூற.. அவனுக்கு அவள் எந்த அழைப்பும் கூற வேண்டாம் எனத் தோன்றியது.

   அரசி முறைத்து.. ” நானும் உங்கள அண்ணானு கூப்பிட வரல.. எனக்கு ஒன்னு இரண்டு இல்ல.. ஏழு.. எட்டு அண்ணா இருக்காங்க.. அவங்களே எனக்கு போதும். நான் கேட்க வந்தது.. அக்கா செய்ய வேண்டியது எல்லாம் செய்து கொடுத்துவிட்டு போனாங்களானு?.. நீங்க கேட்டிங்களே.. அது உங்களுக்கு எப்படி தெரியும்?.. ”

    வேந்தன்அண்ணா கூற வரவில்லையா?.. நான்தான் லூசு மாதிரி கூறிவிட்டேனா!.. ‘ மனதில் அசட்டு புன்னகைபுரிந்து..

Advertisement

    மென் புன்னகையுடன்.. ” அது அம்மா சொல்லி கொடுத்தாங்க. அக்காவும்,  தங்கச்சி 8வரை இங்கு தான் படிச்சாங்க. அக்கா படித்த போதே.. தங்கைக்கும் உன்ன மாதிரியே நடந்தா?.. அக்கா இருந்தா பிரச்சனையில்ல.. அவங்க முடித்துவிட்டால். ” 

    ” அதனால அந்நேரத்தில் தங்கைக்கு உடனே என்ன பண்ண வேண்டும்?. அவளை எவ்வாறு அந்த நேரத்தில் பார்த்துக்க வேண்டும்?. என்று அக்காவோட எனக்கும் சொன்னாங்க. ஆனா அக்கா இருக்கும் போதே உன்ன மாதிரியே நடந்தது.. பிறகு அவளுக்கு பார்த்து செய்து.. நானும் அக்காவும் தான் வீட்டிற்கு கூட்டிப்போனோம். சிலது நான் வீட்டல தங்கை, அம்மாவின் நடவடிக்கைய பார்த்துதெரிந்து கொண்டேன்.

   ..  தனு.. அப்ப உன்ன மாதிரியே.. என் அண்ணாகிட்டயும் அம்மா சொல்லி கொடுத்து இருப்பாங்களா? ”

   ‘ தனுவா?..! ‘

   ம்.. புன்னகையுடன்.. ” தெரியல.. எங்க அம்மா எனக்கு சொன்னாங்கஆனா உன்அண்ணா இதைபற்றி தெரிந்துக் கொண்டாலும் நல்லதுதான். உன் அக்காவும் இந்த வருடம் முடித்துவிடுவாங்க.  நீயும் இப்ப சின்ன பொண்ணு.. எப்பவும் மாதா மாதம் ஓரே மாதிரி உன் உடம்பு இருக்காது. அதனால் ஸ்கூலில் இருக்கும் போது இப்ப வலியிருப்பது போலவோ.. இல்ல வேற ஏதாவது பிரச்சனையென்றால் அவங்கதான் உன்னை பார்த்துக் கொள்ளனும். ” 

     ” பிரண்ட்ஸ் இருப்பாங்க தான். இருந்தாலும் உன் அண்ணாவிற்கும் தெரியனும் நான் நினைக்கிறேன். அதுமட்டும் இல்ல.. நீயும் எந்த நேரத்திலும்.. பாதுகாப்பா இருக்கனும்.. யார் இருந்தாலும்.. இல்லாவிட்டாலும் நீ பயப்படாம.. தைரியமா.. எதுவானலும் நீயே சமாளிக்கனும் சரியா. ”

    அவளிடம் இருந்து பதில் வராமல் இருக்கவும்.. என்னவென்று அவளை பார்க்க.. அவள்  அழுதுக்கொண்டுயிருந்தால்..  இப்படி அழுகுறா?.. ரொம்ப வலிக்குதோ?.. ‘ அரசி.. அவன் கைகளை இறுக்க அழுத்துவதில் பதில்ஆம்.. ‘ என்றது.

    வலியினால் அழுது அழுது.. முன்பை விட முகம் சோர்ந்து போயிருக்கும் அரசியை பார்க்க பார்க்க.. ‘ அழாத முயல்குட்டி.. சீக்கிரம் சரியாகிவிடும் ம்மா. அழாத அரசி. அழாத அரசிம்மா.. ‘ என்று மனதினுள் அவளிடம்  கூறிக் கொண்டுயிருந்தான். அதை தவிர தான் வேறு என்ன செய்யமுடியும்?..என்று தனக்கே அதிகம் வலிப்பது போல.. அவனின் கண்கள் கூட கலங்கியது.. பிறகு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

     தான் கலங்கினாள் தன் குரலில் மாற்றம் வரும்.. அதனை கேட்டு அரசி இன்னும் பயந்தோ அல்ல இன்னும் அதிகமாக அழுதால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என உணர்ந்தான்.  நாம் ஏன் இவ்வாறு இவளை பார்த்து உணர்கிறோம்!..என அவன் அறிய முற்படவில்லை. ‘

   என்ன இன்னும் இளமதி வரல?.. நண்பர்கள் வினோத்.. திலகன் கூட இன்று அவனுடன் இல்லை. வினோத் இன்று விடுமுறை.. திலகன் இன்று பார்த்து வகுப்பிலேயே இருக்கிறேன் என்று கூறிவிட்டான். வேற யாராவது வந்தால் ஆவது இளமதியை அழைத்து வரக்கூறலாம். ‘ 

   அவளை.. ஏன் தானும் வலியை உணராமல் இருக்க.. மீண்டும் அவளிடம்.. ” அரசி உனக்கு சாக்லேட் ல்ல ஐஸ்கீரிம் பிடிக்குமா?.. 

     ம்ஹும்..” எனக் கூற

     என்ன சொன்ன?…  வாயதிறந்து பேசு அரசி.. நீ பேசிட்டுயிருந்தா உனக்கு வலி தெரியவே தெரியாது. தெரியும்மா?..

     நிஜம்மா.. வலி தெரியாதா. ”

    ஆமாம். சரி உனக்கு நான் கேட்டதில் என்ன பிடிக்கும்?.. பிறகு வேறு என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும்?.. சொல்லு. ”

    ம்.. எனக்கு சாக்லேட்டோ.. ஐஸ்கீரிமோ.. பிடிக்காது.. எனக்கு லட்டு.. ஜாங்கிரி.. பால்கோவா.. அல்வா.. இந்த மாதிரி ஸ்விட்னா ரொம்ப பிடிக்கும். மல்லி.. ரோஜா.. ஜாதிபூ பிடிக்கும். இதோட வாசனைனா ரொம்ப பிடிக்கும்.. அதனால நான் தினமும் ஏதாவது பூ வைப்பேன். அப்புறம் அப்பா கூட தோட்டத்திற்கு போய்.. அங்கு அப்பா, தாத்தாவோட வேலை செய்துவிட்டு.. பம்பு செட்ல குளிக்க பிடிக்கும்.. அம்மா, பாட்டியோட சாப்பாடு பிடிக்கும்.. ” மேலும் சில கூறிக்கொண்டுயிருக்கும் போதே சத்தம் சிறிது சிறிது குறைந்து.. அந்த இடம் அமைதியானது. பிறகு அவளை பார்த்து புன்னகைத்தான்.

   வேந்தன் தன் தங்கையை இந்த மாதிரி நேரங்களில் அவளை பேசவைத்து.. அப்படியே தூங்கவைப்பான். அதுபோலவே அவள் பேச ஆரம்பித்தவுடன்.. அவனின் கை தானாக அரசியின் தலையை தடவ ஆரம்பிக்க.. அவள் அழுதால் இருந்த சோர்வில் அவனின் தொடர்ச்சியான மென்மையான தலை தடவல் அவளுக்கு அது இதமளித்தது.. சிறிது சாப்பிட்டதால்.. அவனுடன் பேசிக் கொண்டுயிருந்தவள்.. அவனின் தோளில் சாய்ந்த படியே உறங்கிவிட்டாள். ‘

   மேலும் அறைமணி நேரம் கடந்துயிருக்கும்.. அப்போது தூங்கிக் கொண்டுயிருக்கும் அரசியை பார்த்தவன்.. ‘ முயல்குட்டி.. உன்ன பார்த்தும் ஏன்னு?.. தெரிந்தவுடன் உடனே யாரையாவது?. அழைத்து வந்துயிருக்கலாம். ஏன் நான் செய்யல?.. எனக்கு ஏன்?.. இன்னைக்கு.. எல்லாம் நானே உனக்கு பண்ண வேண்டும் என தோன்றியது?.. ஏன்?.. இவ்வளவு நேரம் தனியா இருந்த உன்னை அழவிடமா.. வலிய உணராம.. தைரியம் கொடுத்து.. பாதுகாக்கனும் என தோன்றுகிறது!.. ‘ 

   ‘  யாராக இருந்தாலும் நான் இப்படி நடந்துக் கொண்டு இருப்பேனா?.. இல்லை நீ யாராக இருந்தாலும்.. இவ்வாறு தோளில் சாய்ந்து உறங்குவாயா?.. ஏதோ ஒன்று. இன்று இந்த சூழ்நிலையில் நான்தான் உன்னுடனும்.. நீ என்னுடனும்.. நாம்!  மட்டும் இங்கு இருக்க வேண்டும் என்று இருக்கிறதோ!..?. ‘ என அவன் நினைத்திருந்த  நேரத்தில்..

     ‘ தூரத்தில் பள்ளி சீர்உடையில் ஒரு பெண்.. கூட பெரியவர்களான இரு பெண்கள் வருவது தெரிந்தது. சற்று அருகில் வந்தவுடன்.. அதில் சீர்உடையில் இருப்பது.. இளமதி தான் என்று தெரிந்தது. ‘

   ‘ உடனே அரசியின் அருகில் இருந்த அவளின் பேக்கின் மீது.. அரசியின் தூக்கம் கலையாதவாறு அவளை படுக்க வைத்தான். பின் அவனின் பொருட்களை எடுத்துக் கொண்டு.. அவள் தலையை தடவிவிட்டு.. நெற்றியில் மென் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு.. அவன் முன்பு இருந்த இடத்தில் மறைவாக நின்றுக் கொண்டான். ‘

    அங்கு இளமதியுடன் இரு பெண்களில் ஒருவர் இளமதி போன்று இருந்தார். அரசி படுத்துயிருப்பதை கண்டவுடன்.. மகிழ்ச்சி கலந்த கவலை தேய்ந்த முகத்துடன் அருகில் ஓடி வந்தனர்.

    இளமதிகுட்டிம்மா.. குட்டிம்மா

    அம்மாஎழில் குட்டிம்மா.. குட்டிம்மா.. “

    அரசிஉங்கிட்ட குட்டிம்மானு கூப்பிடாதிங்கனு சொன்னேன்ல்ல.. அப்பறம் எதுக்கு கூப்பிடுறிங்க?.. ” எனக் கேட்டுக் கொண்டே கண்களை திறக்க.. அங்கு அம்மா.. அக்கா தான் இருந்தார்கள்.

    வேந்தன் அங்கு நடப்பதை பார்த்தான்.. அவர்கள் அரசியை குட்டிம்மா என்று அழைத்தும்.. நான் என்று நினைத்து.. என்னிடம் கூறுவதாக நினைத்து கூறி கண்களை திறந்து பார்த்தாள். திறந்தவுடன்.. அவள் எழுந்து சுற்றும் முற்றும் தன்னை தான் தேடுகிறாள் என்பது தெரிந்தது. நான் எங்கும் இல்லாததால் அவளின் கண்கள் கண்ணிர் சிந்தியது போல இருந்தது. ‘

   என்ன நினைப்பது?. என்றுதான் அவனுக்கு தெரியவில்லை. அவன் அங்கிருந்து வந்து நின்றவுடன் தான்.. அரசிக்கு தான் நெற்றியில் முத்தம் கொடுத்து வந்ததை உணர்ந்தான். ஏன்?.. அவ்வாறு செய்தேன். இது தவறா?.. சரியா?.. என்று நினைத்துக் கொண்டுயிருக்கும் போதே.. ‘ 

    அரசியை அழைத்துச் சென்றனர். அவள் திரும்பவும் தேடினாள். இவன் தான் இனம்புரியாத உணர்வுடன்.. அரசி விளையாட்டு திடலை கடக்கும் வரை பார்த்துக் கொண்டே இருந்து.. மீண்டும் இருவரும் உட்கார்ந்து இருந்த இடத்தில் வந்து அமர்ந்தான். ‘

 

இன்று..

 

   வேந்தன் அரசியிடம் முதல் சந்திப்பை கூறியதும்.. தன் கைகளில் அடங்கி.. தோள் மீது சாய்ந்துயிருப்பவளை.. ” முயல்குட்டி.. அரசிம்மா.. முயல்குட்டி.. ” அழைக்க..

    அரசி அவன் கூறியதை தன் நினைவடுக்கில் இருந்து எடுத்து நினைத்து பார்த்திருந்தாள்.. அவன் மூன்றாம் முறை அழைத்தவுடன் தான் நடப்பிற்கு வந்து.. அவன் தோளில் இருந்து நிமிர்ந்து.. ” தனு.. அன்னைக்கு கூட இருந்தது நீங்களா?.. அன்று நடந்தது.. ஓரளவிற்கு ஞாபகம் இருக்கு.. ஆனா உங்க முகம் எனக்கு சுத்தமா ஞாபகம் இல்லையே?.. ”

    வேந்தன் புன்னகையுடன்.. அவள் நெற்றியில் முட்டி.. பின் அவளை சாய்த்துக் கொண்டு.. ” ம்.. நான்தான் அன்று உன்னுடன் இருந்ததேன் அரசி. முயல்குட்டி!.. எப்படியும் என் முகம் உனக்கு ஞாபகம் இருக்காதுனு எனக்கு தெரியும். அன்னைக்கு உனக்கு இருந்த வலியில்.. நீ என் கையை பிடிச்சும்.. தோளில் சாய்ந்து இருந்தாலும்.. கண்களை முடிக்கொண்டே தான் என் கூட பேசுன. “

     ” நாம்ம பேசிக் கொண்டுயிருந்த ஒரு மணிநேரத்தில்.. மொத்தமா  5நிமிடம்!.. தான் என்னைய பார்த்துயிருப்ப.. பிறகு உன் அக்கா இளமதியோடயும்.. அம்மாவோட கிளம்பிட்ட. அதனால் உனக்கு ஞாபகம் வருவது கஷ்டம்தான். ” என வேந்தன் கூறினாலும்.. அன்று அரசி வலியால் அழுதை நினைத்து.. இன்றும் அவனின் கண்கள் கலங்கியது.. அரசி சாய்ந்து இருந்ததால் அவன் உடனே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

   அரசிக்கு அவன் காரணம் சொன்னவுடன்.. அது ஏற்புடையதாக இருக்க.. ” ம்.. அதனால் கூட ஞாகபம் இல்லாமல் இருக்கலாம். ஹேய்.. இளமதி அக்காவ உங்களுக்கு தெரியும்மா?.. நீங்க கூறாதற்கு காரணம் இருக்கு. அக்கா நேற்றே உங்க போட்டோ பார்த்தாங்களே..ஏன்?.  என்கிட்ட உங்களை பற்றி கூறவே இல்லை. “

   ம் தெரியும்.. நானும், இளமதியும் கடைசி இரண்டு வருஷம் ஒரே கிளாஸ். உன் அக்கானு தெரிந்த நானே உன்கிட்ட சொல்ல.. அவங்க எப்படி டா சொல்லுவாங்க?. நானும் அவங்களும்.. இங்கு வீட்டில் பார்த்த பிறகு பின் உன்னிடம் கூறலாம்.. இல்ல நானே அவங்களை பார்த்த பிறகு.. உன்னிடம் கூறுவேன் என நினைத்துயிருப்பாங்க. சரி அதவிடு. ”

     எப்படி முயல்குட்டி?.. நீ எனக்கான தனு!.. என்ற அழைப்பு மட்டும் மறக்கமா கூப்பிடுற?.. எனக்கு இதுதான் ரொம்ப ஆச்சரியமா!.. இருக்கு. ” மீண்டும் அவள் முகத்தை தன் முன் கொண்டுவந்து கன்னத்தில் கையை வைத்தபடியே கேட்க..

   தெரியல தனு.. நீங்க உங்க பேர் சொன்னவுடனே.. உங்களை திரும்பி அழைக்க எனக்கு தானாவே.. தனு!. என்று தான் வந்ததுஉங்களை தனுனு என்று நான் மறக்காம கூப்பிடுகிறேன் என்பது.. எனக்கும் ஆச்சிரியம் தான்!.. அப்புறம் அது என்ன?.. என்னை முயல்குட்டினு கூப்பிடுறிங்க?. என்னைய பார்த்தா கேரட் சாப்பிடும் முயல் மாதிரியா இருக்கேன்?.. ”

   வேந்தன் அரசி கூறியதை கேட்டவுடன்.. வாய்விட்டே சிரித்து விட்டான்.

    ” முயல்குட்டி.. முயல்குட்டி.. ” என்று கூறி ஒவ்வொரு தடவைக்கும் நெற்றி.. கன்னம் என முத்தங்களை அவளுக்கு வாரி வழங்கினான்.

    ‘ அரசி அவன் நெற்றியில் முத்தம் கொடுக்கும் ஒவ்வொரு முறைக்கும்.. தன்நிலை இழக்கும் அவள்.. இப்போது அவன் கன்னத்தில் கொடுத்தவுடன் அவளின் பெண்மை உணர்வுகள் வெளித்தோன்றி.. அவளை உடல் சிலிர்க்க வைத்தது.  பின் அதனை சமாளிக்க தான் அரும்பாடு படவேண்டியிருந்தது. ‘

    ‘ வேந்தனும் அவளின் பேச்சை கேட்டவுடன் அவனின் மகிழ்ச்சியை கன்னத்தில் முத்தம் கொடுத்து வெளிப்படுத்தி விட்டான்ஆனால் அவன் பின் தன் உணர்ந்தான்.. அவள் கன்னத்தின் மென்மையை. அவனுமே நினைக்கவில்லை தான் கன்னத்தில் கொடுக்க வேண்டும் என்று.. பின் அவளை பார்க்க அவளின் சிவந்த முகம்.. உடல் சிலிர்த்து தன்னை காண முடியாமல் அமர்ந்தியிருந்தவளை பார்த்ததும்.. திருப்பவும் தன் உதட்டை.. அவளின் கன்னம் என்ற புதைக்குழியில் மீண்டும் விழத் தூண்டிய தன் மனதை.. கட்டுப்படுத்திக் கொண்டு அவளை ரசித்து பார்த்தவன்.. சில நொடிகளில் இருவரும் அதன் உணர்வில் இருந்து வெளிவந்தனர். ‘ 

    புன்னகையுடனே.. ” முயல்குட்டி.. உன்னை முதலில் நான் உன்னை குட்டிம்மானு!.. கூப்பிட்டேனா.. நீ அதுக்கு.. நான் என்ன இப்ப நான் நட பழகுற குழந்தையானு கேட்டியா?.. நீ அதை சொல்லும் போது.. உன் முகத்தை அப்ப தான் நல்லா பார்த்தேன். உன் முகம்.. நீ சொன்னவிதம் அதை வைத்து.. எனக்கு நீ குட்டிம்மா இல்லமுயல்குட்டினு தான் உன்னை கூப்பிடனும் நான் நெனச்சேன்!.. ஆனா இத சொன்னா.. எங்க இப்ப நீ கேட்டியே.. என்னைய பார்த்த கேரட் சாப்பிடும் முயல் மாதிரியா இருக்கேன்?.. சொல்வேனு.. இதேதான் நானும் அப்ப நினைச்சேன். அதனால உன்னை அப்ப கூப்பிடல.

   நீ.. நான் நினைத்த மாதிரி கூறியவுடன் என்னால என் உணர்வுகளை கட்டுபடுத்த முடியலஅதான் நீ உனக்கு கொடுக்க சொன்ன முத்தத்தில் ஒன்னு தவறி கன்னத்தில் கொடுத்துவிட்டேன். ஆனா இன்னும் என் முத்தம் நிறைய பாக்கி இருக்கும்மா. ”

    என்ன இன்னும் நிறைய முத்தம்மா?.. பேச்சை மாற்று எழில் என நினைத்து.. ” தனு.. முதல்தடவைக்கு பிறகு.. என்னைய திரும்பி ஸ்கூலில் பார்த்திங்களா?.. ”

   இவனும் அவளை புரிந்துக்கொண்டு.. ” இல்ல அரசி.. எக்ஸாம் வந்துவிட்டாதா.. அதனால் பார்க்கவே இல்ல.. ஆனா உன்னை பார்த்த அடுத்த ஒரு வாரமும்.. அப்ப ஏன்னு தெரியாது?.. உன் நினைவுகள் அதிகமாவே இருந்தது. அப்ப நாம்ம உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து தான் நான் படிச்சேன்.  உன்னை பற்றி.. உன் அக்காவிடம் கூட கேட்கலாம் என நினைச்சு அவங்க பக்கத்தில் போயிட்டேன். ஒரு பெரிய வினைய இழுத்துவிட பார்த்தேன் என்று.. பிறகு தான் தோன்றியது. “

     அவன் கூறியதற்கு ‘ என்ன?. ஏன்?. ‘ என்பது போல அரசி கண்களால் கேட்க..

    என்னவென்றால்.. நான் உன் அக்காவிடம் பேசியதே இல்ல.. உன் ஆர்த்தி அக்காவும், யோக அக்காவும் பிரண்ட்ஸ்னால.. நானும், உன் அக்காவும் ஒரே கிளாஸ் என்பதால் ஆர்த்தி தங்கை என்று.. அக்கா சொல்லியிருக்காங்க. அதனால இருவரும் பார்த்தால்.. எப்பவாவது சிரித்துக் கொள்வோம். அப்படியிருக்க நான் ஸ்கூல் முடிக்க போறப்ப உன் அக்காவிடம் பேசினா.. என்ன ஆகும் என்பது ஒன்று?..” 

    ” இரண்டாவது  உன் அக்காவிடம் உன்னை பற்றி.. நாம் சந்தித்த சூழ்நிலையை பற்றி கூறினா?.. அவ்வளவு தான். ஒன்னுக்கு இரண்டு வினைய இழுத்துயிருப்பேன். பிறகு சரிரினு.. என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டும்.. ஏதோ இப்ப இது நல்லதுக்கு இல்லனு.. நான் உன்னை மறக்க நினைத்தேன்.  நான் உன்னை நினைக்காமலும் இருக்க தான் நினைத்தேன். ஆனா என்னால அதுமட்டும் முடியவே இல்ல முயல்குட்டி. ” அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

   அரசியோ சுகமாக அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு.. ” என்னைய திரும்ப பார்க்கவில்லைனு சொல்லுறிங்க.. அது எப்படி என்னைய 6வது படிக்கும் போது பார்த்தது.. பிறகு எப்படி?.. நாம்ம  இப்ப கோயிலில் பார்த்ததும்.. உங்களுக்கு என்னை பற்றிய ஞாபகம் வந்துவிட்டதா?.. அதுவும் அப்போதைய விட இப்ப கொஞ்சமே கொஞ்சம் உயரம் அதிகமாகவும்.. கொஞ்சம் இளிச்சும்  இருக்கேன்.. எப்படி என்னை அடையாளம் கண்டுபிடிச்சிங்க?.. ”

   அவளை கைகளுக்குள்ளே அவளை தலைமுதல் கால்வரை பார்த்தவன்.. புன்னகையுடன்முயல்குட்டி நீ உயரம் ஜாஸ்தி ஆகிட்டியா?.. “

    அவன் பார்வையிலேயே உடல் குளிர்ச்சி அடைந்தாள். அதனை கட்டுப்படுத்தி முறைப்புடனே.. ” ம்.. இல்லையா பின்ன. சரி.. சரி.. என் உயரத்தை பற்றிய ஆராய்ச்சி போதும்.. நீங்க சொல்லுங்க.. அடுத்து எப்ப பார்த்திங்க?.. “

   அவளின் குளிர்ந்த மென்மையான கன்னத்தை மெதுவாக கிள்ளி.. ” ம்.. நீ ஒரு உயரத்தை பற்றிய ஆராய்ச்சியும்.. அதனுடன் வாக்குவாதம் செய்துக் கொண்டுயிருந்தியா.. அப்ப தான் முயல்குட்டி !.. உன்னை பார்த்தேன்எங்கு?..  எப்போவென்றால்.???.. “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!