Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 12.1 (2)

 

நாம் 12. 1(2)

 

     சில நொடிகள் கழித்து.. மீண்டும் தோள்சாய்த்துக் கொண்டான்நீ ஸ்கூல் முடித்த காலேஜ் போக ஆரம்பித்த குட்டி பொண்ணு. அதனால் இரண்டாவது தடவையும் சரியான சமயம் இல்லை என்றுதான் நினைத்தேன். அன்னைக்கு நான் வேலையில்  சேர பெங்களூர் கிளம்பனும். அங்கிருந்து போகவே மனசு வராம.. நான் கிளம்ப வேண்டிய நேரத்திற்கு பதிலாக இரண்டு மணிநேரம் கழித்துதான் கிளம்பினேன். “



Advertisement

    ” பிறகு பெங்களூர் போனவுடன்.. வேலையோட படிப்பும்.. இங்க இப்ப இருக்க வீடு கட்டியது. பிறகு சென்னை வந்ததும்.. அடுத்து பிஸ்னஸ் எப்ப ஆரம்பிக்க.. அதுக்கான பிளான், வேற என்னவெல்லாம் பண்ணவேண்டும் என.. இப்ப வரைக்கும் பாத்துக்கிட்டு இருக்கேன். “

    சொல்ல மறுந்துவிட்டேன் பாரு.. நான் போன்ல சொன்னேன்ல்ல ஒரு பொண்ணை மட்டும்.. கவனித்து பார்த்தேன் என்று.. அதும் நீதான் முயல்குட்டி!.. ” என அந்த கவனித்து.. என்ற இடத்தில்அழுத்தமாகவும்.. கள்ளச்சிரிப்புடன் கூறி..

     அவள் உணரும்முன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு.. ” எனக்கு உன்னோட இந்த முகத்திலே இந்த கன்னம்தான் முயல்குட்டி ரொம்ப பிடிக்கும். இப்ப கூட உன்னை எப்படி அடையாளம் கண்டுபிடித்தேனு கேட்டியே?.. இதோ!.. எனக்காவே இந்த கன்னத்தோட கூடிய உன்முகம் மட்டும் அப்படியே இருக்கே. இது பத்தாதா. ” குறும்பு சிரிப்புடன் கூறினான்.

Advertisement

    இவற்றையெல்லாம் கேட்டு.. அரசி அமைதியாக இருக்கானு மட்டும் நினைக்காதிங்க.. அரசியின் முறைப்பு, அடி, கைகளில் கிள்ளுவது, என ஒருபக்கம் நடக்குதுங்க.. எதுவாக இருந்தாலும் அவள்தட்டிக் கேட்பாள். ‘

Advertisement

    நீ நினைக்கலாம் அரசி இத்தனை வருடத்தில் உனக்கு திருமணம் ஆகியிருந்தால்.. இல்லை உனக்கு வேறு யாரையாவது பிடித்துயிருந்தாள் என்று?.. எனக்கு உன் ஞாபகம் வரும்போது.. உனக்குநான்!. எனக்கு நீ!.. நாம்!. என்று மட்டும் தோன்றும்.. ஆனால் அதற்கு மேல நான் யோசித்தால் நீ எனக்கு இல்லை.. கிடைக்கமாட்ட.. என்று மட்டும் தோன்றினதே கிடையாது. நீ என்னை மட்டுமே ஆட்சி செய்ய பிறந்தவள் என் அரசி. ” அவள் நெற்றி முட்டி தெரிவித்தான்.

   வீட்டல உறவினர் முறை உள்ளவங்க 25வயதில்.. 2வருடம் கழித்து திருமணம் செய்துக்கொள்ளலாம் என கேட்டபோ.. உறவுமுறை பெண்களின் மீது விருப்பம் இல்லை.. முடியாது எனசொல்லி.. உன்னை மனதில் வைத்து.. நான் திருமணம் செய்துக் கொண்டால் வெளிக் குடும்பத்திலிருந்து வரும் பெண்தான் என்று மட்டும் உறுதியா கூறிவிட்டேன் அரசிம்மா. நான் கூறும்போது போய் பெண்ணை பார்க்கலாம் என கூறியிருந்தேன். ”

    என்கிட்ட வீட்டல வரன் பார்க்க ஆரம்பித்தத சொல்லவே இல்ல.. அதனால்தான் நான் ஏதாவது பிரச்சனை பண்ணுவேன் என நினைத்துதான்.. எல்லோரையும் வர வைத்து இருக்காங்க. “

Advertisement

    ” உன்னைய மட்டும் வெள்ளிக்கிழமை பார்க்காம.. வெளி வரன் என்று பேச ஆரம்பித்துயிருந்தால்.. ஆரம்பித்த உடனே உன்னை பற்றி அவர்களிடம் கூறி.. அன்னைக்கே உங்க வீட்டிற்கு வந்துயிருப்பேன் அரசி. என் வாழ்க்கை துணைனா அது நீதான் முயல்குட்டி. “

    நான் மொத்தமா ஒரே வரில செல்ல வேண்டுனா.. என்னோட ஒவ்வொரு செயல்கள், முடிவுகள், வளர்ச்சியிலும் என எல்லாவற்றிலும் மறைமுகமா நீ தான் இவ்வளவு நாள் இருந்த முயல்குட்டி. “

   அதனால்தான் உன்னை கோயிலில் அக்கா என்னாக பார்த்த பெண் என்று கூறியவுடன்.. கடவுளா எனக்காக உன்னை அனுப்பிய மாதிரி.. அப்ப நான் உன்னைய பார்த்தவுடன்.. என்னையே மறந்து உன்னைய  பார்த்தேன். அப்ப என் மனசு, இதயம்.. முளையெல்லாம்.. இதுவரைக்கும் நீ யோசித்தது போதும் வேந்தாஉடனே போய் அரசியிடம் போய் சம்மதம் வாங்கி.. உன் அரசியா மாற்றிக்கோனு.. என்னைய உன்கிட்ட துரத்தியது. “

    ” அதான் உடனே உன்னுடன்  பேசனும்.. ஆனா என் முயல்குட்டிக்கு மதிப்பும் நான் கொடுக்க வேண்டுமே. அதனால் தான் நம்ம அப்பா, அம்மாவின் அனுமதியோடு.. உன்னிடம் பேசி.. இந்த முயல்குட்டிய.. அரசிம்மாவ எனதாக்கிக் கொண்டேன்..” என்று கூறும் போது அவள் தோளை சற்று அதிக இறுக்கத்துடன் அணைத்து விடுவித்தான்.

    நம்ம இரண்டு பேரும் ஒன்றை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். என் அரசிம்மா எனக்கு.. எனக்கே எனக்கு மட்டும் தான் என்று.. கடவுள் நாம் பிறந்தவுடன் முடிவுப் பண்ணியிருக்காரு. வரன் பார்க்கவில்லை என்றாலும்.. நான் உங்க வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துயிருப்பேன். “

   ” இல்ல நாம்ம முன்ன சந்திக்காம இருந்துயிருந்தாலும்.. வேறு எந்த வகையில்லாவது நான் உன்னை பார்த்திருக்கலாம்.. அப்ப உன்னை பிடிக்க வைத்துயிருக்கலாம். இல்லையெனில் என்னை உனக்கு ஏதோ நிகழ்வில்.. எனக்கு உன்னை பிடித்த மாதிரி.. என்னை உனக்கு பிடிக்க வைத்துயிருக்கலாம்.. ஆனா எப்படியும்.. கண்டிப்பா இந்த மாதிரி சூழ்நிலை நமக்கு அமைந்துயிருக்கும். ” என கடைசி வரியை கூறும்போது.. முகம் முழுவதும் குறும்பை வெளிப்படுத்தி.. அவர்கள் இருவரும் அமர்ந்துயிருக்கும் அழகை காண்பித்தான்.

   அரசி அவனை பார்த்தாள்.. அவனின் விழிபார்வையும்.. முகத்தின் குறும்பும் கூறிய செய்தி இதுதான்..

    எப்படியும் நாம் சந்தித்து.. அவள்.. அவனின் மடிமீது அவனை அணைத்துக் கொண்டு இருவரும் இந்நிலை அமர்ந்துயிருப்போம் என்கிறது. ‘

     ‘ அய்யோ!.. அரசி.. உனக்கு வெக்கம், வெக்கமுனு எங்கு கிடைக்கும்?.. என கேட்ப போல.. தனு சொல்வது போல நல்லா சுகமா.. அவன் மடியில்.. அதுவும் அவனை அணைத்துக் கொண்டும்.. முத்தம்கொடுத்தம்.. வாங்கியும் இருக்க. யாராவது வந்தா என்ன ஆகும். என காலம் கடந்து நினைத்தாள்.. இப்பவும் ஒன்னுமில்ல  எழில் ‘ என்று.. அவள் எழுந்து கட்டியில் அருகில் ஓஓடிப் போய் நின்றுக்கொண்டாள்

   வேந்தன் அரசி டக்கென்று எழுந்து கட்டிலின் அருகில் நின்றதை பார்த்ததும்.. அவர்கள் உட்கார்ந்து இருப்பதை கூறியவுடன் அவள் வெக்கத்தால் தான் எழுந்துவிட்டாள் என்று புரிந்தது. அவனுக்கு இப்போது இன்னும் வசதியாகி போனது.. இதுவும் நல்லதிற்குதான் என்று நினைத்தான்..’ 

    அவனும் எழுந்து நின்றான். அரசியோ கட்டிலின் அருகில் நின்று அவனை பார்த்துக் கொண்டுயிருந்தாள். இருவரின்  நான்கு விழிகளும்.. ஒருவரை ஒருவர் நிறுத்தி நிதானமாக.. சில நிமிடங்கள் தலைமுதல் கால்வரை பார்த்தனர். இருவரின் நுண்ணிய பார்வையானது.. உடலினுள் குறுகுறுப்பு ஏற்படுத்தினாலும்.. அதனை இருவரும் அழகாக மறைத்து.. தன் இணைகளின் தற்போதைய தோற்றத்தை கண்டுமகிழ்ந்தனர். ‘

    வேந்தன் சட்டென்று அவளின் அருகில் வந்து.. அவளை கலவரப்படுத்தினான்.. ” அரசி.. இந்த சேலையில் நீ ரொம்ப அழாக இருக்க முயல்குட்டி.. உனக்கு நான் தேர்ந்தெடுத்தது பிடித்துயிருக்கா?.. ”

    ‘ இவனை என்ன பண்ண?.. அங்கே நின்னு இந்த கேள்விய கேட்க வேண்டியது தானே?.. அதிலும் அவன் தேர்ந்தெடுத்த சேலை மட்டும் தான் அவன் கண்ணுக்கு தெரியுது?.. உள்ளே அவனை வறுத்துவிட்டு. ‘

   ” ம்.. ரொம்ப பிடித்துயிருக்கு தனு.. வேற ஒன்னும் இந்த சேலையில் பிடிக்கவில்லையா?.. ” என வேறு எதுவும் பிடிக்கவில்லையா என்று சிறிது வருத்தம் போல மாற்றிக்கொண்டாள்.

    வேந்தன் அவளின் அனைத்து உணர்வுகளையும் ரசனையுடன் பார்த்து.. நீயே அனுமதி கொடுக்கிற.. வாய்ப்பை நான் நழுவவிடுவனா முயல்குட்டி!.. அவளை தன் கண்களால் படித்து

    ” ம்.. இந்த சேலைக்கு நீ பிளவுஸ் டிசைன் முதன்முதலா.. உன் கையால் அழகா  செய்துயிருக்க.  ம்.. நான் நேற்று வாங்கிக்கொடுத்த மல்லிகை பூ.. மிதமான அலங்காரத்தில்.. இந்த கண்ணு மட்டும் என்னைய ரொம்பப்படுத்துது.. முயல்குட்டி.. ” சட்டென்று அவளின் கண்கள் அவனிடம் சிறு முத்தம் ஒன்றை பெற்றுக் கொண்டது.

    ம்.. அழகாக இருக்க அரசிம்மா. நீ எதிர்பார்த்த அனைத்தும் சொல்லிவிட்டேனா. இல்ல வேறு ஏதாவது பார்த்து!.. உனக்கு சொல்ல வேண்டுமா முயல்குட்டி?.. ” என நிறுத்தி நிதானமாக.. உள்குத்துடன் கேட்டான்.

   அரசிக்கு ஏன்டா நினைத்தோம் என்றாகிப் போனது!.. வாய் சாதாரணமாக கூறினாலும்.. அவனின் உரிமை பார்வையோ அவளுக்கு வேறு பதிலை கொடுத்தது. பின் அதனை தன் கண்களில் மென்முத்தம் கொடுத்து வெளிப்படுத்தினான். இவற்றினால் அவள் நாணிச்சிவந்தாலும்.. தனு தன்மீது செலுத்தும் உரிமை பார்வை, அன்பின் வெளிப்பாடு போன்றவைகள்.. பிடித்துதான் இருந்தது அவளுக்கு.. ‘

    ம்.. சொல்லிட்டிங்க.. சொல்லிட்டிங்க.. வேற ஒன்னும் சொல்ல வேண்டாம். ஏன்டா கேட்டேனு நினைக்க வைக்கிறிங்க?.. தனு. அதவிடுங்க.. என்னை பார்த்தும்.. பின் உங்களை பார்த்து.. ஏன் சிரிச்சாங்க அண்ணி, அக்கா எல்லாம்?.. ”

    புன்னகையுடன் இருவரின் நிலை உணர்ந்தால்.. அவளின் மாற்றுக் கேள்விக்காக பதிலை யோசித்து.. ” ம்.. அதுவா?. நான் எப்போதும் இந்த மாதிரி பிரைட்டான கலரில் சட்டையெல்லாம் போடமாட்டேன். அதான் உன்னை பார்த்தவுடன் அவங்களுக்கு நான் எதனால்?.. யாருக்காக?.. இந்த கலரில் போட்டுயிருக்கேன் என்றவுடன் சும்மா ஆசையா என்னை பார்த்தியிருப்பாங்க. ”

     .. அப்படியா!.. போடமாட்டிங்கனா என்றால்.. ஏன் போட்டிங்க?.. ”

     அவளை ஒருபக்கமாக அணைத்து.. ” என் முயல்குட்டிக்கு பிடிக்குமே..  அதனால் எனக்கும் பிடிக்கும். அவ கூட இருக்கப்ப எப்பவும் நான் அவளுக்கு பிடித்த மாதிரி போடனும் தோனுச்சு. அதனால்தான். “

    அவனை மீண்டும் பார்த்தாள்.. தன் நினைவுகளோடு தன்னவன் தனு!.. இத்தனை வருடங்கள் இருந்ததை கூறியது.. அவன் ஒவ்வொன்றையும் செய்ததையும்.. இனி செய்ய போவதை கூறியவுடன்.. அதனை எண்ணி அளவிளா மகிழ்ச்சி கொண்டு.. அவனிடம் தான் வார்த்தைகளால்.. தன் மனதில்இருப்பதை கூறிவதைவிட.. இனி ஓவ்வொரு நிகழ்வு, செயலில்தான் தன் அன்பை அவனிடம் வெளிப்படுத்த வேண்டும் என எண்ணி!.. ‘ 

   ‘ முதற்படியாக.. உடனே அவனிற்கு கன்னத்தில் பட்டும்படாமலும் ஒரு முத்தம் வழங்கிவிட்டு.. அவன் அதற்கு பதில் கூறும்முன்.. அவர்கள் முன் உட்கார்ந்து இருந்த ஊஞ்சல் அருகில் அவனை இழுத்துச்சென்று.. நின்று, உட்கார்ந்து என பல புகைபடங்களை எடுத்தனர். ‘

   ‘ தன்னவளின் உணர்வுகளை எல்லாம் ரசித்தான் வேந்தன். அவளிற்காக அவன் தன்னால் முடிந்த எதுவும் செய்வான்.. அவளிற்கு உறுதுணையாகவும் இருப்பேன் என்று அவனும் நினைத்தான். ‘

    வேந்தன் அரசியின் அருகில் அவள் கைகளை பிடித்துக் கொண்டு.. ” அரசி.. நாம்ம இருவரும் அனைத்தையும் பேசி அறிந்து.. தெரிந்து.. புரிந்துக்கொண்டோம் என நினைக்கிறேன்.

    நான் மீண்டும் உன்னிடம் கேட்கிறேன் அரசிம்மா.. என்னை அரசியின் கணவன் வேந்தனா ஏற்றுக்கொள்வாயா??.. இல்லை நீ என் அரசியா என்னுள் வருகிறாயா எழிலரசி??.. ” என தன்னவளின் நெற்றியில் குனிந்து.. அவனின் நெற்றியை வைத்து கேட்க..

   ‘ அரசிக்கு அவனின் இந்த கேள்வி, முகம், கைபிடித்திருப்பது இவையனைத்தாலும் உடலில்  மின்சாரம் அவளை தாக்கி.. அவளின் மிக நுண்ணிய உணர்வுகளை தட்டி எழுப்பியது.. அதனை முழுவதும் தன்னவனுடன் சேர்ந்து அனுபவித்து பின்.. ‘ 

    ” ம்.. நீங்க.. எழிலரசியின் கணவன் வேந்தனாகிய தனுவாகவும்.. நான் உங்க அரசியா வருவதற்கும் எனக்கு முழுசம்மதம். ” என முன்பு சிறிதாக இருந்த இனம் புதினான  உணர்வு இப்போது  முழுவளர்ச்சி பெற்று முழுகாதலையும் தன் கண்களில் தன்னவனுக்கு தெரிவித்து கூறினாள் அவனின் முயல்குட்டி.

   சிலநிமிடங்கள் கடந்து.. இருவரும் அவர்களின் நிலையிலிருந்தே இருவரும் ஒருசேர கேட்டனர்.. ” எல்லோரிடமும் நாமம் போய் சென்று சம்மதம்.. என்று செல்லப்போவோமா?.. ”

    புன்னகையுடன் இருவரும்ம்.. சரி.. ”

    வேந்தன் அவளின் கன்னத்தை பிடித்து.. நெற்றியில் அழுத்த முத்தம் ஒன்றையும்.. ஒரு நிமிடம் கட்டிஅணைத்து விடுவித்தான். ‘

    ‘ அரசிக்கு அவனின் அணைப்பினால் உண்டான உணர்வு பிடியில் இருந்து வரவே சிலநிமிடங்கள் தேவைப்பட்டது. அந்த அளவிற்கு அவனின் முயல்குட்டியிடம் தன் அன்பை ஆழமாக அவளிடம் வெளிப்படுத்தியிருந்தான்.. அவளின் மன்னவன் என்ற கள்ளன். ‘

    அவளையே பார்த்திருந்த அந்த கள்ளன்.. அதனை சாதகமாக பயன்படுத்தி.. மேலும் சிலநிமிடங்கள் தன் கைவளையில் வைத்துக் கொண்டே.. தன்னவள் அறையை கவனித்தான். அறையின் சுவர் இளம்மஞ்சள் மற்றும் இளம்ஆரஞ்வண்ணத்தில் இருக்க.. அதில் பெரும்பான்மையான பர்னிச்சர் பொருட்கள் மரத்தாலும்.. அவளின் சில புகைப்படங்கள் சுவற்றிலும் அமைய பெற்று நேர்த்தியானஅறையாக இருந்தது. ‘ 

     ‘ இரு ஜன்னல் இருக்க.. ஒரு பக்கம் ஜன்னல் அருகில் ஊஞ்சலும் அதில் உட்கார்ந்தப் படியே பார்த்தாலே.. கீழே சில வண்ணரோஜா செடிகள் இருந்தன. மற்றோரு பக்கத்தில் மரங்கள் சில இருந்தன.. அவைகள் அந்த அறைக்கு குழுமையான காற்றை அனுப்பி வைத்தன. அனைத்தையும் பார்த்து முடித்துடன்.. போகலாம்என்று அவள் கையை பற்றி கதவை மெதுவாக திறந்தான்.

   வேந்தன் திறந்தவுடன் பார்த்தது அவனின் நண்பர்கள் மற்றும் அரசியின் தோழி மற்றும் அரசியின் தங்கையை தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் நால்வரும் ஒரே நேரத்தில் திரும்பினர். இவர்கள் மட்டுமே இருப்பதால் சற்று நிதானமாக உணர்ந்து.. இருவரும் வெளியே வந்தனர். வெளியே வந்தவர்களை நால்வரும் மேலும் கீழும் பார்த்துச் மெதுவாக சிரிக்க ஆரம்பித்தனர்.

    வேந்தன் அவர்களை ‘ என்ன?.. எதுக்கு இப்ப பார்க்கிறிங்க?.. ‘ என்பது போல இடுப்பில் ஒருகையையும்.. மறு கையால் அரசியை பிடித்தும்ஒரு பார்வை அவர்களின் மேல் அவன் செலுத்த.. அரசியோ வெக்கத்தை மறைத்து.. புன்னகையுடன் அவர்களை பார்த்தாள்.

    திலகன் அவனின் அருகில் வந்தான்.. வேந்தனின் நெற்றியில் அரசி வைத்திருந்த மஞ்சள், குங்குமம்திருநீர் மூன்றையும் சேர்த்து சாதாரணமாக சிறிய அளவில் வைத்திருந்தாள்.. வேந்தன் அரசியின் நெற்றில் தன் நெற்றியை வைக்கும் போது.. அவனின் நெற்றியில் பதிந்துவிட்டது. அதனை பார்த்து திலகன் வேந்தனிடம் கூற..

    அவனும் அதனை அவன் பின்னால் இருந்த கண்ணாடியில் பார்க்க பின் அரசியின் நெற்றியை பார்க்க.. பின் புன்னகையுடன் அவனிடம்.. ” நல்லா இருக்கா டா ?.. ” அவனை முறைப்பும் சிரிப்புமாக மெல்லிய குரலில்.. ” நல்லாதான் இருக்கு.”

    சரிஎன தலையசைத்து  வேந்தனும்.. எழிலரசியுடன் அனைவரும் ஒன்றாக கீழே இறங்க ஆரம்பித்தனர்.

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!