Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 13. 3

 

நாம் 13 ( 3)

 

     ‘ வேந்தனின் நண்பர்கள், யோகா.. கார்த்திக், தங்கை வினோ.. விஸ்வநாதன், அரசியின் அக்காக்கள், அவர்களின் கணவர்கள்.. சுரபி அண்ணி, தன் அருகில் இருந்த தன் அண்ணாவையும் கவனிக்கவில்லை. ‘



Advertisement

   அவர்கள் எல்லாம் அரசி கூறியதை கேட்டு என்னடா நடக்குது இங்க?.. என்று நினைத்த படியும்.. ஒன்றும் புரியாமலும்.. ஆனால் பேச்சை ரசித்தும்.. அப்போதுதான் வந்து சத்யாவிற்கு பின்னால் நின்று இருந்தவர்களை சத்யாவும் கவனிக்காமல்.. 

    புன்னகையுடன்.. ” ஏன்னா?.. உன்ன சமாளிக்கவே ஸ்விட் வாங்கி கொடுத்தே.. அண்ணா பர்ஸ் பாதி காலியாகிவிடும்.. இதில உன்னை மாதிரியே.. ஒரு பேபி இல்லம்மா..  டுவின்ஸ் பேபினா?. அண்ணா அவங்க ஹோட்டல் பக்கத்தில் ஸ்விட் கடை வைத்ததான்.. அண்ணாவிற்கு உங்க மூனுபேரையும் சமாளிக்கவும் முடியும்.. கட்டுபடியும் ஆகும். ”

   ஏன்டி கட்டுபடியாகது?.. நான் வாரத்திற்கு 500ரூபாய்க்கு தான் ஸ்விட் வாங்கி சாப்பிடுவேன்.. இரண்டு குழந்தைங்கனா.. மூன்று பேருக்கு வாரத்திற்கு 1500னா.. மாதத்திற்கு 6000தான் ஆகும்.. ஆனா எங்களால் மத்த செலவு வராது.. அதனால் நாங்க குடும்பத்தை அழகாக!.. எந்த பட்ஜெட் பிரச்சனையில்லாம நடத்துவோம்.. போடி. ”

Advertisement

   ம்.. உங்களால் அண்ணா என்ன பாடுபட போறானு.?. நாங்களும் பார்க்கதானே போறோம்.. ”

Advertisement

   பாரு.. பாரு. ” என தன் தோழியிடம் வாக்குவாதத்தில் இருக்க..

      அவளின் அருகில் இருந்தவனே.. தன்னவளின் பேச்சை கேட்டு.. கஷ்டப்பட்டு புன்னகையை அடக்கியும்.. அதே சமயத்தில் அவள் கூறியவற்றை நினைத்துப் பார்க்கையில்.. உடல் சிலிப்பாகவும் இருந்தது. ஆனால் அவளும்.. அவள் தோழியும் சுற்றியிருப்பவர்களை மறந்து பேசுகிறார்களே.. அவர்களின் பார்வையே சரியில்லையே.. என்ன வரப்போதோ?.. முதலில் முயல்குட்டியை அடக்குவோம். ‘

    அரசி.. அரசிம்மா.. ”

Advertisement

    ம்.. அவள பாருங்க தனு.. எவ்வளவு தைரியம் இவளிற்கு?.. “

    அரசி.. நீ முதல சத்யாவ தாண்டி சுற்றி பாரு. சாரி முயல்குட்டி!.. நீ இப்ப உன் மனசுல எதை நினைத்தாலும்.. தனியா கூப்பிட்டு வச்சு கேளு?.. வன்முறை என்றாலும் பரவாயில்லநான் தனியாவே சமளித்துக் கொள்வேன். சரியா. கொஞ்சம் சுற்றி பார்த்து பேசுடா. ”

    என்ன தனு சொல்லுறிங்க?.. சுற்றிப் பார்த்தா!.. ” என..

    ‘ அவள் சத்யாவை தாண்டியும், சுற்றிப் பார்க்க.. அங்கு இருந்தவர்களை பார்த்து.. அப்படியே ஒருநொடி வெக்கமும்.. சிறுபயமும்.. குழந்தைதனமான பேசால் வந்த அசட்டு புன்னகையுடனும் அவர்களை பார்த்தாள்அரசியை போலவேதான் சத்யாவும் இருந்தாள்.  திலகனின் எச்சரிக்கையால் அவளும் சுற்றிப் பார்த்தாள். அரசி, சத்யா இருவரும் தங்கள் அருகில் இருந்தவர்களை பார்த்து முறைத்து.. தங்களுக்கு தெரிந்த சில நல்ல வார்த்தைகளினால் அவர்களை மனதினுள் அர்ச்சனை செய்து.. பின் அவர்கள் இருவரும்.. ஒருவரை ஒருவர் பார்த்து.. நாம்ம ஏதாவது இப்ப பேசினோம்?.. பார்த்து புன்னகையை அடக்க முற்பட்டனர். ‘

   ‘ ஆனால்.. சுற்றியிருந்தவர்கள் இவர்களின் பேச்சை ரசித்தாலும்.. அவர்கள் பார்த்த போது.. எழிலரசி.. வேந்தனின் தோளின் நுனியில் சாய்ந்துயிருந்தை பார்த்தபின்.. என்ன கூறுவது?.. என நினைத்தார்கள். டிசென்டாக தான் இருந்தது.. இந்த காலத்தில் இது சாதாரணம்தான்.. அவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கைதுணை என்று பார்த்ததில் இருந்து.. பலவருடங்கள் பழகமுள்ளவர்கள் போலதான் பழகுகிறார்கள். ‘ 

    ‘ தங்களின் துணையின் பக்கத்தில்.. தாங்கள் அந்த இடத்தில் இல்லை என்ற எண்ணத்தில் இப்படி அமர்ந்தும்.. ஜாலியாக பேசியிருப்பார்கள் என்று எண்ணி.. தங்களின் எண்ணங்களை சற்று ஒதுக்கி.. அரசி, சத்யாவை போல இருக்கலாம் என அனைவரும் நினைக்க.. அதில் இளமதி, ஆர்த்தி இருவர் மட்டும் அவர்களின் நடவடிக்கையினால்.. சிறு கலக்கதுடன் வேந்தனின் குடும்பத்தினரை பார்க்க.. அவர்களின் இளகிய முகத்தினால் சற்று ஆறுதல் அடைந்தனர். ‘

    ‘ அனைவரும் இருக்கும் இடத்தில் உட்கார.. அதில் அரசியை சற்று தள்ளி உட்காரச் சொல்லி.. அவளின் வலதுபக்கத்தில் அவன் அமர.. அவனின் அருகில் இன்பா உட்கார்ந்து இருந்தான். அவர்களின் எதிரில் இருந்த இருவரின் நண்பர்களும்.. இவர்களின் பக்கத்தில் இருக்க.. மற்றவர்கள் எதிரில் அமர்ந்தார்கள். ‘ 

    விஸ்வநாதன் புன்னகையுடன்.. ” அப்புறம் மாப்பிள்ள.. எப்ப ஸ்விட் கடை ஆரம்பிக்க பிளான் போடபோறிங்க?.. குடும்ப வேற இன்னும் பெருசா ஆகறதுக்கு உள்ள முடித்து விடுவிங்களா?.. ”

    அதனை கேட்ட மற்றவர்கள் சிரிக்க.. ‘அரசிக்கு அய்யோ!..  என தன்னவனை நினைத்து நாணமும்.. கடுப்பும் ஒருசேர வந்தது. சத்யாவை வேந்தனின் பின்னால் இருந்து பார்க்க.. அவளும் பார்க்க.. நீ மட்டும் என் கையில் இப்ப மாட்டுன.. ‘ மவளே.. நீ சட்டினி தாண்டி..’  என்பது போல பார்க்க.. அவளோ ‘ பரவாயில்ல.. பரவாயில்ல.. சட்னியா போயி.. நாங்க பஜ்ஜிய தொட்டு சாப்பிட்டுக் கொள்வோம்.  ‘ என இவர்கள் தனியாக பேச..

   கேள்வி கேட்கப்பட்டவன்..  மாமாவின் கேள்வியில்.. என் முயல்குட்டிய ஆசையா பார்த்து.. எவ்வளவு ரொமான்டிக்கா தனியா சொன்ன விஷயத்தை.. இப்படி இந்த முயல்குட்டியும்.. குட்டியோட தோழியும் இப்படியா போட்டு தாக்குவாங்க. ஆனா இது கூட சூப்பராக தான் இருக்கு. ‘ தான் தன்னவளுக்காக பிளான் செய்துயிருப்பதை இப்போதைக்கு எதுவும் கூற வேண்டாம் என நினைத்து. அவரை பார்த்து சற்று புன்னகை மட்டுமே புரிந்தான்

    என்ன?..  சிரிப்புதான் வருது.. பதில் வரல?.. ”

    அவன் மீண்டும் புன்னகைக்க.. அவனை பார்த்துக் கொண்டுயிருந்த யோகா.. ” என்ன கொழுந்தா நீங்க?.. உங்களுக்கு அவனை பற்றி இன்னும் தெரியல. அவன் சிரிப்பை பார்த்தாலே புரியுது. வேந்தனுக்கு இந்நேரம் அதுக்கான பிளான் உதித்தும்.. எல்லாவற்றை பற்றியும் தகவல்களை சேகரித்து இருப்பான். அப்படிதானே தம்பி?.. ” எனக் கூறி வேந்தனை பார்க்க..

   வேந்தன் அரசிக்காக ஆரம்பிக்க நினைத்த ஸ்விட் கடை.. அதற்கு தங்களின் கடையின் முன்பகுதி ஏற்றதா?.. இல்லை பக்கத்தில் ஆரம்பிக்கலாமா?.. அதற்கு தன்னுடைய தனிப்பட்ட பணம் போதும்மா?.. பணியாட்கள், தான் இப்போது இங்கு இருக்க முடியாது.. பெரியப்பா, அப்பா, அண்ணா மூவரும்.. இப்போதே அதிக வேலையை செய்கிறார்கள்அதனுடன் இதை பார்ப்பது சிறிது கஷ்டம்.. அதனால் இதற்கு அவர்களின் மேற்பார்வையில்.. ஒருதனிப்பட்ட நபர் பார்க்க வேண்டும் என்று.. கடையை ஆரம்பிப்பதை பற்றி முழுமையாக முடிவுக்கு வராமல் இருந்தவன். சில நிமிடங்களில் நடந்ததில்.. உடனே ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான். ‘

    ஏன் செய்ய மாட்டான்?.. ஒரு முயல்குட்டிக்கே அவள் விரும்பியதை கேட்காமலே செய்ய வேண்டும் என நினைப்பவன்.. இப்போது தன்னவளை போன்றே இரண்டு முயல்குட்டிகள். அதனை மனதினுள் முழுமையாக அனுபித்தான். ( பின் இப்போதைக்கு என்ன செய்ய.. ஏற்கனவே வெளிய சொல்லி இப்ப பட்டபாடு போதும் பா.) ‘

   ஆமாம் ” மெல்லிய புன்னகை மட்டும் புரிந்தான்.

    ‘ தன்னவளிற்காக தான் அவன் ஆரம்பிப்பதால்.. அவளிடம் தான் முதலில் முழுமையாக பகிரவேண்டும் என நினைத்தும்.. இதற்கு மேல் அவர்கள் குழந்தைகள் என்று கூறி.. தங்கள் இருவரையும் நாணம் பட வைக்க கூடாது.. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி கூறி.. புன்னகையுடன் அமைதியாகி விட்டான். ‘

    ‘ அவனின் பதிலை கேட்டவர்கள்.. பாருடா!. என்று நினைக்க.. அவனிடம் இருந்து இதற்கு மேல் பதில் வராது என்பது.. அவனின் புன்னகையில் இருந்து தெரிந்தது. எல்லோரும் சூப்பர் என்ற சொல்லோட முடித்துக் கொண்டனர். ‘

    ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஆனாவளோ.. அவன் தனக்காக செய்ய நினைத்துயிருப்பதை நினைத்து.. அவனின் அருகில் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

   ஆனால் அவளின் மனதிலோதன்னவனின் எதிர்பார்ப்பில்லாத அன்பில், காதலில் இன்னும் இன்னும் அவனுள் முழ்க வேண்டும்!.. ‘.. இப்போதைக்கு தன்னவனின் ஸ்பரிசம், இதம் வேண்டும் என.. அவளின் கை தானாக.. அவளவனின் கைகளை மென்மையாக பற்றியது.

   ‘ வேந்தன் தன் புது தொடக்கத்தின் முடிவை.. ஒருவார்த்தையில் அனைவருக்கும் தெரிவித்துவிட்டான். ஆனால் தன்னவளிடம் சொல்ல முடியாவிட்டாலும்.. அவன் தன்னவளை பார்த்தலில் இருந்து விரும்பும்.. அவளின் கை ஸ்பரிசத்திற்கு தன் கை விரும்பிய அடுத்த நொடி உணர்ந்தான். ‘ 

     அரசி அவனின் கைகளின் மேல் வைத்து.. அந்த தொடுகையில்  ‘ உன்னுள் முழ்க ஆசைஎன அவனவள் அவனிற்கு உணர்த்த..  உணர்த்தியை  உணர்ந்து.. ‘ இல்ல முயல்குட்டி..’  என்று இணைத்த கைகளை திருப்பி.. ‘ நான்.. நான்தான் முயல்குட்டி.. எப்போதும்.. என்அரசி.. முயல்குட்டி.. எழிலரசிக்குள்ள இருக்க விருப்புகிறேன். ‘ என அவளின் கைகளின் மேல் தன் கைகளை வைத்து உணர்த்தினான்.

   ‘ அவளுக்கு அவனின் விருப்பம் புரிந்தா?.. என்று தெரியவில்லை.. ஆனால் அவன் கையை இறுக்க பற்றி அவள் சம்மதத்தை தெரிவித்தாள். ‘ இருவரும் சில நிமிடங்கள் இந்நிலையில் மற்றவர்கள் பேசுவதை பார்த்திருக்க.

    அப்போது எழிலின் போனிற்கு அழைப்பு வந்தது.. அதனை பார்த்தால்.. பின் மெசேஜ் ஒலி வர.. அதனை படித்தவுடன்.. திருதிரு என முழித்தாள்.. படித்ததை திரும்பி படித்து.. ‘ என்ன செய்ய?.. ‘ யோசித்துக் கொண்டுயிருந்தாள்..

   வேந்தன் தன் கையை பிடித்துயிருந்தவள்.. கையை எடுத்துபின் இன்னும் திரும்பி வைக்காமல் இருக்கவும்.. ‘ அப்படி என்ன செய்கிறாள்?.. ‘ என திருப்பி பார்க்க.. அவள் போனை கையில் வைத்துக் கொண்டே யோசனையில் இருப்பதை பார்த்து..

  அரசி.. போனில் என்ன வந்துயிருக்கு?.. இப்படி திருதிரு முழித்துக் கொண்டே.. யோசிக்கிற?.. “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!