நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 14. 3
நாம் 14 (3)
தன் அரசி கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய முகம்.. அதில் கண்களை பார்த்து பாடிய படியே கேட்டதை.. ‘ கண்டிப்பா!. முயல்குட்டி.. ‘ என்று கண்சிமிட்டியும்.. புன்னகையிலும் தெரிவித்தான்.
Advertisement
அவளுக்கு தன்னுடைய நிலையை வெளிப்படுத்த விரும்பி.. அரசி முடித்ததும்.. ஒருமுறை அங்குயிருப்பவர்களை பார்த்தான்.. சற்றுநேரம் முன்பே தன் மற்றும் அரசியின் மாமாக்கள் கீழே சென்றிருக்க..
‘ சரி வேந்தா ‘ சட்டென்று எழுந்தவன்.. அரசியின் முன் கை நீட்டி நின்றான்.
அங்கு இருந்தவர்கள் அப்போதுதான் எழிலரசியின் பாடலை கேட்டு ‘ சூப்பர் ‘ என்ற நிலையில் அவளை பார்த்து புன்னகை, கை சைகையில் இருக்க.. எழுந்த நின்ற வேந்தன்.. எழிலரசியின் முன்கை நீட்டி நிற்பதை பார்த்து.. ‘ என்னடா பண்ணப்போற?.. ‘ என்று அவனை எல்லோரும் பார்க்க..
Advertisement
அவனின் உணர்வு, உணர்ச்சி தாக்கத்தில் இருந்து விடுபடாமல் இருந்தவள்.. அனைவரின் புன்னகையை.. அனைவருக்கும் தன் பதில் புன்னகையில் வெளிப்படுத்தியவளின் முன்.. தன்னவனின் நீட்டிய கையை பார்த்தும்.. அவனை பார்க்க.. ‘ வா!.. ‘ என்பது போல கையை காண்பிக்க.. ‘ என்ன செய்வது?.. ‘ என்று தெரியாமல் அவள் முழிக்க..
Advertisement
” வா முயல்குட்டி ” என்று சத்தம் இல்லாமல்.. வாய்மட்டும் அசைத்து புன்னகையுடன் அழைக்க..
எழிலரசி அங்கு இருப்பவர்களின் ஏதோ ஆர்வ பார்வை பார்த்து.. ‘ என் தனு!.. யாரையும் மனம் கஷ்டப்படும் படியாக எதுவும் பண்ண மாட்டான்!.. ‘ என்று உணர்ந்து அவள் எழுந்தாள்.
அனைவருக்கும் ஆர்வமும், அதிர்ச்சியும் அதிகமானது.. ஆனால் வேண்டாம் என்று மட்டும் கூறத் தோன்றவில்லை..
Advertisement
வேந்தன் தன் கையை பிடித்து எழுந்தவளை.. அந்த ஹாலின் இளையவர்கள் முன்.. தன் அரசியுடன் நிற்க செல்லும் போதே.. தன் அரசியிடம்.. ” தாவணி முந்தி ” கூற..
அவளும் அன்று அவன் கோயிலில் இதேபோல் தான் கேட்டு தன்னை பிடிக்க கூறிய நினைவுடன்.. முன்பகுதியில் வைக்கவும்.. அவர்கள் நிற்கவும் சரியாக இருந்தது.
‘ வேந்தன் அடுத்த நொடி.. அவனின் ஒருகை தன்னவளின் பிடித்துயிருந்த வலதுகையில் இருக்க.. மற்றொரு இடது கையின் நான்கு விரல்கள்..அரசியின் இடுப்பில் மேல் உள்ள தாவணிமுந்தியின் மேல் இடுப்பை பட்டும்படாமல் பிடித்துக் கொண்டும்.. தன் முழு உணர்வையும்.. உரிமை அனைத்தையும்.. தனக்கான வெற்றிடையின் மீது தன் பெருவிரலின் மூலம் அழுத்தி..’
யார் முன்பும் ஆடாத வேந்தன்.. எவருமே அறியாத ஒன்றை இன்று தன்னவளுக்காக அனைவர் முன்..
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே!..
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே!..
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே!..
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே!..
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு.. கண் சிரிக்கும் ‘ எழிலரசியான என் அரசியே!.. ‘
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே..
உன்னில் நானடி!.
என்னில் நீயடி!.
உன்னில் நானடி!. என்னில் நீயடி!.
ஓ.. பைங்கிளி…
நிதமும் உன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னவன்.. நான்தானடி!.
என் நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட நங்கையும் நீதானடி!..
அன்பே ஓடி வா… அன்பால் கூட வா..
ஓ…. பைங்கிளி…
‘ வேந்தன் தன் தேன்குரலில்.. பாடல் வரியில் தன்னவளின் பெயரை கூறியும்.. தன்னவளால் தனக்கு உண்டான மாற்றம்!.. தன் காதலை அனைவர் முன்பு அவள் முகத்தை பார்த்தப்படியே கூறி.. பாட்டையும்!.. தன் அரசியின் கையை பிடித்து இழுத்து.. தன்னவளை சுற்றி சில நடன அசைவுகளால்.. அவளும்!.. அவள் தாவணியும்!.. அவனின் இழுத்த இழுப்பிற்கு அழகாக ஆடிய படியே நடனத்தையும்.. தன் முயல்குட்டியை!.. தோள் வளைவில் வைத்து முடித்தான் தன் அரசியின் தனுவான!.. வேந்தன். ‘
‘ வேந்தன் இருவரும் நின்றவுடன் தன் அரசியை தான் பார்க்க.. அவளும் அந்நேரம் தன்னவனை பார்க்க.. அதில் புன்னகை முகமும்.. தன்னால் தனக்கான பிரத்தேகமான.. பெண்மைக்கான சில உணர்வுகளை அவனுக்கு அவள் காட்டி.. அவனை மேலும் அவளின் மீது தன் உணர்வுகளை வார்த்தையால் வெளிப்படுத்த தூண்டியதது தான். ‘
‘ ஆனால் நேரம், இடம் கிடையாது என இப்போதைக்கு இதுபோதும் என உணர்ந்து. அவள் முழுவதும் தன் நிலைக்கு வந்தபின் அவளிடம் கூறிக்கொள்ளலாம்.. என அவளை தன் தோள் வளைவில் இருந்து தனியாக நிறுத்த.. அவளுடனான இந்த இரண்டு நிமிட நிகழ்வை திரும்ப எண்ணி பார்க்க நினைக்கும் நேரத்தில் தான்… சுற்றி இருப்பவர்களை பார்த்தான். ம்.. மற்றவர்கள் ஆரம்பிக்கும் முன்.. நாமே ஆரம்பிப்போம்.. ‘
அரசியோ.. ‘ ஆடி, பாடி முடித்தும் அவனால் உருவாகிய உணர்வுகளை அடக்குவதே அவளுக்கு பெரும்பாடாக இருந்தது. அவன் முகத்தை புன்னகையுடன் பார்த்ததும்.. தன்னை தனியாக நிறுத்தியபின்.. முதலில் அரசி மனநிலையே தாறுமாறாக இருந்தது.. தன்னவன் என்ன செய்யப்போகிறான்?.. என்று.. ஒரளவிற்கு யூகித்துயிருந்தாள் தான்.. ஆனால் அவளும் நினைக்காதது.. தன்னவனின் குரலில் இனிமையான தனக்கான பாடலை..’
‘ அதனுடன் பாடிய படியே.. மெல்லிய நடன அசைவுகளாக.. அவளின் இடுப்பில் அவனின் பெருவிரலில் அழுத்தம் மட்டும் கொடுத்து.. மற்ற விரல்கள் உள்ளனவா?.. இல்லையா?. என்று உணராத வகையில் கை வைத்தும்.. ஆனால் கை எடுக்காமலும்.. அதே நேரத்தில் பார்ப்பவர்களுக்கு உறுத்தாமலும் இருந்தது. அதை மட்டும் இப்போதைக்கு அவளால் உணரமுடிந்தது. இந்த தருணத்தை மட்டும் மனதில் அனுபவிப்போம்.. மற்றவை பிறகு என நினைத்து.. மற்றவர்களை பார்த்தாள்.. ‘
