Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 16. 3

 

நாம் 16(3)

 

  அம்மா நீங்க ஏதாவது பிளான் வைத்துயிருக்கிங்களா?.. ” அருகில் இருந்த எழிலரசி அம்மா லட்சுமியையும் ஒரு பார்வை பார்த்து கேட்க.



Advertisement

    நாம்ம இவரிடம் கூறுவது போல என்னயிருக்கு என நினைத்து.. லட்சுமிஇல்ல மாப்பிள்ள.. “

    அவர் மனதில் நினைத்தை.. சித்ராஇருக்கு. ஆனா உன்னிடம் கூறுவதற்கு ஒன்னும் இல்ல. “

    இதை கேட்க யோகா.. அவன் எதற்காக கேட்கிறான் என புரிந்து.. சிரிப்புடன்.. ” சித்தி தம்பி  உங்களிடம் கேட்பதே.. என்ன இருக்குனு?.. சொல்லுறிங்களோ அதைபற்றிய பிளான் தான் கேட்குறான். அப்படிதானே?.. ” என வேந்தனை பார்த்து முடிக்க..

Advertisement

   வேந்தன் புன்னகைமட்டுமே புரிய.. அதை பார்த்த சித்ரா.. ” புரியல.. நீங்க இரண்டு பேசுவதும், பார்வையும். “

Advertisement

     இதுதான் சமயம் என்று வேந்தன் சற்று அதிக குரலில்.. ” அம்மா.. நான் என்னோட விருப்பம், முடிவ சொல்லி விரும்புகிறேன். ” தன்னவளையும,  மற்றவர்களையும் பார்வை பார்த்தவாறே..

     ” எங்க நிச்சியம், கல்யாணத்திற்கு எடுக்கும் உடை, நகை, திருமாங்கலயம் , செயின் முதற்கொண்டு.. அரசிக்கு வேற என்னவெல்லாம் தேவையோ?.. அதை எல்லாம் நானே பார்த்தும்.. என்னோட தனிப்பட்ட பணத்தில் வாங்கனும் வேண்டும் என நினைக்கிறேன். இதையெல்லாம் இந்நாளில் செய்தால் நன்றாக இருக்கும் என கண்டிப்பா ஒரு பிளான் பண்ணியிருப்பிங்க.. அந்த நாளையும் சொன்னா!.. நான் அதற்கு ஏற்றார் போல நான் பிளான் போட வசதியா இருக்கும். ” என கூறிமுடித்தான்.

    ‘ வேந்தன் கூறியதை கேட்டவுடன்.. வீடுடே ஒரு நிமிடம் அமைதியாக இருந்தது. என்ன கூறுவது என்று?.. பெரியவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை.. இளையவர்கள் உடை மட்டும் என நினைக்க.. திருமாங்கலயம் , நகை முதற்கொண்டு என கூறுவான் என எதிர்பார்க்கவில்லை. அவனின் அரசி இதை எதிர்பார்த்தாள். ஆனால் தன்னவனை ஏதாவது கூறிவிடுவார்களோ என.. அவனின் கைகளை இறுக்கபற்றிக் கொண்டாள். ‘ 

Advertisement

   வேந்தன் அனைவரையும் பார்த்து.. அவர்களின் எண்ணமும் புரிந்தது.. தன்னை ஏதாவது கூறி விடுவார்களோ?.. என்ற தன்னவளின் இறுக்க பிடிப்பும் புரிந்து.. அதில் தன்னவளின் பயத்தையும் உணர்ந்தான். ஆனாலும் தன் எண்ணத்தில் மாற்றம் இல்லை. தான்தான் அனைத்தும் செய்யவேண்டும் என உறுதியாக நினைத்தான். ‘

   முதலில் தன்நிலைக்கு வந்த ரவிஎன்ன வேந்தா இப்படி செல்லுற?.. “

   இப்ப என்னோட முடிவு இதுதான் அப்பா.. முதலில் இதுகூட.. கல்யாண செலவில் பாதி செய்ய நினைத்தேன். எங்க கல்யாணசெலவு பற்றியும் சொன்னா நீங்களும், மாமாவும் வருத்தப்படுவீங்களோனு தான் விட்டேன்.  அதில் எதிலும் நான் தலையிட மாட்டேன்.”

   இதை கேட்ட அருணாச்சலம்.. ரவியிடம் ஏதோ கூற.. ” சரி வேந்தா.. ” என அவர் கூற வரும் வேலையில்..

    சித்ராஎன்ன நீங்க.. அவன் சொல்வதற்கு சரினு சொல்லவறீங்க. அவன் கல்யாணத்திற்கு காசு வேண்ணா கொடுக்கட்டும்.. அவன் கூறுவது எல்லாம்.. கல்யாணத்திற்கு ரொம்ப முக்கியமானது.. அவனே செய்யுறேன்னு சொல்றான். திருமாங்கலயம் சரி.. அதில் அவன் ஒன்னும் பண்ணபோவது இல்ல.. என்ன முறைனு சொல்லி செய்து வாங்குவது.. நல்லநாளில் பெரியவங்க கூட இருந்து வாங்கினா போதும். ஆனா புடவை, நகையெல்லாம் எல்லாம் அவன் விருப்பம் மட்டும் எப்படி?.. நாங்க பார்த்து வாங்க வேண்டாம்மா ?.. எங்களைவிட எழிலரசி பார்த்து வாங்க வேண்டாம்மா ?.. அவளிற்கு என்று ஆசையிருக்கும் தானே. ”

   அவர் எழிலை பார்க்க.. வேந்தனும் தன்னவளை பார்க்க.. மற்றவர்களோ எழில் வசுவிடம் உடைக்கு நடந்த விவாததை பார்த்தால்.. ‘ இவளா?.. வேந்தன் கூறியதற்கு வேண்டாம் என கூறிவிட்டாலும்.. ‘ என மென் புன்னகை புரிந்தார்கள்.

   எழிலரசி என்னடா??.. எல்லாம் நம்மள பார்க்கிறாங்க.. சரி என்று முதலில் வேந்தனை பார்வைக்கு.. பதில் பார்வை பார்க்க.. ‘ 

    அவனோநீ!.. நான் விரும்பி வாங்கி தருவதை வேண்டாம் என கூறிவிடுவாயா?.. அப்படி கூறினாள்.. நானே உனக்கு கட்டிவிட்டு.. நகை போட்டு கூட்டிவந்து.. தாலிகட்டுவேனடி!.. என்முயல்குட்டி.. ‘ என புன்னகைக்க.. அவனின் பார்வை அர்த்தம் புரிந்து.. ‘ போடா தனுமாமா.. ‘ எனஅவனுக்கு பதில் அளித்துவிட்டு திரும்பி..

   சித்ராவையும் மற்றவர்களையும் பார்க்க.. நமக்காக அத்த சப்போட் பண்ணுறாங்க.. இவங்களையும் கஷ்டப்படுத்த கூடாதே.. என்ன பண்ணலாம்?.. என யோசித்துக் கொண்டுயிருக்க.. ‘

    நீயே சொல்லுமா?.. இவன் கூறியது சரியா?.. நான் கூறுவது சரியா?.. அவன் சொல்வதில் எல்லாம் நீயும் பார்த்து.. உனக்கு விருப்பமாதை வாங்க வேண்டாமா?.. ”

   சிறிது யோசனைக்கு பின்.. வேந்தனை பார்த்துவிட்டு.. ” அத்தை, அம்மா.. தனு வேண்டும் என்றால்.. ” அவள் ஆரம்பிக்கும் போது..

   பெரியவர்கள் யாருடா அது தனு?. என நினைக்க.. சித்ராஎழில் யாரு அந்த தனு?.. ” எனக்கேட்க..

   ‘ அதன்பின் தான் கூறியதை உணர்ந்து.. வேந்தனை பார்க்க.. அவன் புன்னகைத்துக் கொண்டுயிருந்தான்.. விநாயாகா.. என நினைத்து.. பின் சித்ராவை பார்க்க.. அவருக்கும், மற்றவருக்கும் புரிந்தது. ‘

   சரி எழில் அது யாருனு புரியது. என்ன சொல்ல வந்த சொல்லுமா. ” என்று புன்னகையுடன் கூற..

   ம்.. தனு மாமாஎனக் கூறியவுடன் மெல்லிய சிரிப்பு சத்தம் இளையவர்களிடம் இருந்துவர..

    ம்.. நம்மளே நம்ம எதுவும் சொதப்பி விடக்கூடாது டக்னு!.. சொல்லி முடித்துவிடலாம் என நினைத்தா ஆள்ஆளாக்கு வராங்கப்பா.. யாருப்பா இப்ப?.. என திரும்பி பார்க்க.. அங்கு மாமா எனக்கூறியதில்.. சிலர் சிரிக்க.. சிலர் முறைக்க என இருந்தார்கள். ‘

   அவளும் பதிலுக்கு புன்னகைத்து..  தனு மாமா!.. ” என அழுத்தி கூறி பின் சாதாரணமாக..

   வேண்டும்மானால் நிச்சியம் சம்பந்தப்பட்ட பொருட்களை.. அவர் விருப்பபடி  நீங்க நல்ல நாள் பார்த்துச் சொல்லும் நாளில்.. இங்கு வந்து போகாம சென்னையிலேயே எல்லாம் வாங்கி வரட்டும். அதை நான் போட்டுக் கொள்கிறேன். வேற என்ன வேண்டும் என நினைத்தாலும் பண்ணட்டும். “

   ” அதன் பிறகு ஒருநல்ல நாளில் அவரை இங்கு வரச்சொல்லி.. நாம்ம எங்கு வாங்க வேண்டும் என நினைக்கிறோமோ அங்கு.. வரவேற்பு, கல்யாணம் இதற்கு தேவையானதை எல்லாம்.. நாம்ம பார்த்து.. அவருக்கு பிடித்த மாதிரி எடுக்கலாம். பணம் அவர் கொடுக்கட்டும். இந்த பிளான் உங்களுக்கு ஓகேயா. ” எனக் கூறி அவரையும் மற்றவர்களையும் பார்க்க..

    ‘ இவ என்ன சொல்லவரா?.. நமக்கும் அவளுக்கும் பிடித்தமாதிரியா?. இல்ல வேந்தனுக்கு பிடித்தமாதிரி வாங்கலாம் எனக் கூறுகிறாளா?.. ‘ 

    வேந்தன்.. ‘ இப்படியா முயல்குட்டி அவங்களை  குழப்புவஎன்றும்.. மற்றவர்கள்ஹேய் எழில் கேடி.. நீ நேரடியாக வேந்தனையே வாங்க கூறியிருக்கலாம்.. ‘ என நினைத்து அவளை லுக்குவிட.. அவள் புன்னகை முகமாக அனைவரின் பார்வையையும் ஏற்றாள்.

   எழில் கூறியதை மீண்டும் நினைத்து பார்த்தார்.. பின் புன்னகையுடன் சித்ராநீ ஏதோ எங்களை சமாளிக்கும் விதமா பிளான் சொல்லுற.. ஆனா அவனா வாங்குவதற்கு பதிலாக.. எல்லாருக்கும் பிடிக்கும் விதமாவும் இருக்கு என்பதால்.. உன் யோசனைக்கு சரி சொல்கிறேன். மற்றவர்கள் அமைதியா இருப்பதை பார்த்தால்.. அவர்களுக்கும் சரிதான் நினைக்கிறேன். ம்.. வேந்தா உனக்கு ஓகேயா?.. ” என அவனின் பதிலை அறிய நினைத்தார்.

   சிறிது யோசித்து.. ” ம்மா.. அரசி சொன்ன ஐடியா எனக்கு ஓகேமா. எங்களுக்கு நிச்சியம் முடிந்தும். கல்யாணத்திற்கு என்று.. நீங்க கொடுத்திங்க இல்ல நல்லநாள் மூன்று. அதில் இருக்க முதல்தேதி அன்னைக்கு நம்ம கடையின் உள்ளே.. இல்ல பக்கத்தில் இருக்கும் இடத்தில் ஸ்விட்ஷாப் ஆரம்பிக்கலாம் என நினைத்துயிருக்கேன். அன்றைய காலையில் கடை ஆரம்பிக்கும் விழாவை நடத்திவிட்டு.. பிறகு அரசிக்கும், உங்க எல்லாருக்கும் புடவை எடுக்கலாம்.. அடுத்தநாள் நகை எடுத்துக்கொள்ளலாம். ” என அடுத்த அதிர்வை உண்டாக்க..

   ‘ மீண்டும் அமைதி.. இளையவர்கள், ரவிந்திரன், சித்ராவிற்கும்.. கூடவே அவனின் அரசிக்குமே.. இவன் ஆரம்பிப்பான் என்று தெரியும். ஆனால் கல்யாணத்திற்கு முன்பே என்று நினைக்கவில்லை. அரசிக்கு பயத்தினால்.. இப்போது கண்கள் கலங்கிவிட்டது.. இப்போதுதான் அவனின் விருப்பம் மற்றும் மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சமாளித்தாள். மீண்டும் இவ்வாறு கூற..’ 

    அவனுக்கு தெரியும் அனைவருக்கும் அதிர்ச்சிதான் என்று.. இதில் அவனுக்கு தவறு ஏதும் இல்லை. சமாளிக்கலாம் என்று அனைவரின் பதிலை எதிர்பார்த்துயிருந்தவன் தன்னவளின்..” தனுஎனஅழைப்பில் அவளிடம் திருப்ப.. அவள் கண் கலங்கி பார்க்க.. ஆனந்தமா!.. என ஒருநொடி நினைத்தவன்.. ஆனால் அவள் முகம் வேதனையை வெளிப்படுத்த.. அனைவருமே இவர்களை தான் பார்த்தனர்.

   பதட்டத்துடன்.. ” என்ன முயல்குட்டி?.. எதுக்கு இப்ப வருத்தப்படுற?.. யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க டா. “

   இல்ல தனு.. கல்யாணத்திற்கு முன்பே.. வீட்டலையும் இதை பற்றி பேசாம. நீங்க ரொம்ப அவசரபடுற மாதிரியிருக்கு. “

    இல்ல முயல்குட்டி.. ஏற்கனவே அப்பா, பெரியப்பா.. என்னை போன வருடமே என் பிஸ்னஸ் பிளான் படி.. உணவகத்திற்கு உள்ள இல்ல பக்கத்திலேயே உணவு மசாலா பொருட்கள் கடை வைக்க சொன்னாங்க.. நான் தான் இன்னும் இரண்டு வருடம் ஆகட்டும் இருந்தேன். என்ன.. நான் ஸ்விட் கடை ஆரம்பிப்பேன் என நினைத்துயிருக்க மாட்டாங்க டா. என்னை யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க முயல்குட்டி.. என்ன கொஞ்சம் பொறாமை படுவாங்க. முயல்குட்டி மாதிரியிருக்க மனைவிக்காகவும், இரண்டு குட்டிமுயல் குட்டிகளுக்காக கல்யாணத்திற்கு முன்பே ஆரம்பிக்கிறான்டா வேந்தன்!.. என நினைப்பாங்க. ” புன்னகையுடன் கூற..

   அவன் கூறுவதை கேட்டு.. நான் என்ன சொன்னா?.. இவன் என்ன சொல்கிறான்?.. ” இல்ல தனு.. நீங்க என்ன சொன்னாலும்..  அவள் கூறிக்கொண்டுயிருக்கும் போதே..

   எதுவும் சொல்லிறாத முயல்குட்டி. நான் உனக்காக ஆரம்பிக்க நினைப்பதை.. நீயே.. அதனால.. ” கூறும்போது.. அவனின் கண்கள் சிறிதே சிறிது கலங்கியிருந்தது..

    தான் வேண்டாம் என்ற வார்த்தையை.. கூற வருவது கூட அவனால் தாங்க முடியவில்லை.. என சிறிது கழித்துதான் உணர்ந்தாள்.. பின்எனக்கு ரொம்ப சந்தோஷம் தனு மாமா. ” உடனே தன்னை மாற்றி.. புன்னகையுடன்சரி என்னை சமாளித்தது போதும்.. அங்க பாருங்க. ” என மற்றவர்களைகாண்பிக்க..

   ‘ தன்னவளின் புன்னகையிலேயே.. கலங்கிய கண்கள் வெளியே வந்தா?.. என தெரியாத அளவிற்கு.. உள்ளே சென்று ஒழிந்துக் கொண்டது. ‘

   ‘ மற்றவர்கள் இந்நேரம் வரை பெரியவர்கள் இருவரையும் கவனித்தனர்.. அவர்கள் நினைத்தைதான் அவளும் கூறி.. பின் தங்களை நினைத்து பயந்துவிட்டாள் எனவும்.. எழிலின் பெற்றோர்களுக்கு இதுபுது செய்தி!.. அதனால் மகிழ்ச்சியில் இருந்தவர்கள் தங்களின் மகளின் கலங்கிய கண்ணீர்.. அதற்கு சமாதானம் செய்யும் மாப்பிள்ளை.. ஏன்?. என்று அவர்களுக்கு புரியாமல் சம்பந்திகளை பார்க்க.. அவர்களும் இருவரைதான் சிறிய புன்னகை முகத்துடன் பார்த்திருந்தார்கள். கடைசியாக புன்னகை முகத்துடன் தன் மகள் மாப்பிள்ளையிடம் எங்களை காண்பிப்பதை பார்த்து.. அனைவரும் வேந்தனை பார்க்க.. அவனும் இவர்களை பார்க்க.. ‘ 

   அப்பா அது வந்து.. “

   எங்களுக்கு சந்தோஷம்தான் டா. நாங்க நினைத்தைதான் மருமக கேட்டுயிருக்கா நினைக்கிறேன். அதுக்கு நீ பதில் சொல்லியிருப்ப. ” எழிலரசியை பார்த்து..

   மருமகளோ நாங்க ஒன்னும்.. வேந்தனை இல்லஅவள் மனதை மாற்றுவதாக.. புன்னகையுடன்.. ” தனுவ ஒன்னும் நினைக்கல.. நானும்,சித்ராவும்  வேந்தன் ஸ்விட் செக்ஷன்!..  நம்ம கடையில் ஆரம்பிப்பான் நினைத்தோம்.. ஆனா இவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க நினைப்பான் என்று தான் நாங்க எதிர்பார்க்கல!.. அவ்வளவுதான். ” 

   ” அதனால நீ எதை பற்றியும் கவலைபடாத. ஆனா இன்னைக்கு அவனிடம் கேள்வி கேட்டா மாதிரி என்னைக்கும் வெளிப்படையா நீ இருக்கனும்.. அதையும் தைரியமா கேளு. நீ கண்கலங்கினா!.. அவனும் கண்கலங்குவான்.  என அவர் சற்று தன் மகனின் கண்களை கவனித்தவர்.. மறைமுக அவளிடம் கூறி.. அதனை புரிந்து..

   ‘ அரசி தன்னவனை பார்க்க. அவன் அவளிடம் திருப்பவில்லை.. அதிலிருந்தே தன் கலங்கிய கண்களை தான் பார்க்க வேண்டாம் என நினைக்கிறான் என்று.. அவளுக்கு புரிந்தது. பின் தான் அவள் ஞாபகத்திற்கு வந்தது.. அவன் நான் கூறப்போகும் போது.. அவன் குரலில் இருந்த மாற்றம். தனு செல்லம் உங்களை வருத்தப்படுத்தி விட்டேனா?. ‘ 

   ரவி.. எழில் வேந்தனை பார்ப்பதை பார்த்து.. நாம்ம சொன்னதை சட்டென்று புரிந்தும்.. அவனை நினைத்து வருந்தி தன் மகனை பார்த்த மருமகளை நினைத்து மகிழ்ந்தார். தன் மகனை இப்போதே புரிந்துயிருக்கும் எழிலரசிக்காக.. தன் வருங்கால மனைவிற்காக.. அவள் விருப்பி சாப்பிடுவதை கடையாக ஆரம்பிக்க.. அதையும் கல்யாணம் முன் ஆரம்பிப்பதில் தவறே இல்லை என நினைத்தார்.. அதேசமயம் இவ்வளவு புரித்து வைத்துயிருக்கும் மனைவியால்.. தன் மகனின் பாடு சற்று திண்டாட்டமும் கூட என எண்ணினார்.. ‘

    வேந்தா முடிவா.. நீ எங்களுக்கு உன்னோட விருப்பம், பிளான் என்னவென்று இப்ப சொல்லுறியா?.. இல்ல. “

   முடிவாக அனைவரிடமும் கூறிவிடலாம் என எண்ணி.. ” சரிங்கப்பா. நான் என் முடிவ முடிவா!.. சொல்லுறேன் அப்பா. நான் சொன்ன இரண்டு மட்டும் தான் இதுவரை நான் நினைத்தது. அதில் உடை, நகை விஷயத்தில்.. அரசி சொன்ன மாதிரி நான் பண்ணிவிடுகிறேன். ஷாப் விஷயம்.. நான் தேவையான விவரங்கள் பார்த்தும்.. பக்கத்தில் கடை அமைத்தால்.. எவ்வளவு நாள், பணம் பற்றி.. நம்ம வீடுகட்டும் போது அரசியோட மாமாதான் பண்ணாங்க. இப்ப அவர் பையன் கதிரவன் சில பொறுப்புகள் புதிதாக தனியாக பார்க்க ஆரம்பிக்க போகிறார். அவரிடம் நான் சில விவரங்கள் கேட்டுயிருக்கேன். அவர் கொடுத்தபிறகு.. நாம்ம அடுத்து என்ன என்று பார்த்துக்கலாம். ”

     ஒரு நொடி நிதானித்து.. ” ம்நான் இதை எல்லாம்.. இப்பவே சொன்ன காரணம். நம்ம இரண்டு குடும்பமும்.. நாங்க இரண்டு பேரும்.. எங்க நண்பர்கள் என எல்லோரும் இங்கு இருக்கிங்க. எல்லாம் இருக்கும் போதே.. நான் என் கல்யாணத்திற்கு.. என் மனைவிக்கு நான் என்ன செய்ய போகிறேன்.. என்ன செய்ய நினைக்கிறேன்?.. என கூறிவிட்டால்.. அதுதான் எங்க இரண்டுபேருக்கும் நல்லது என நினைத்தேன். ” 

   ” பிறகு யாரும் என்னிடம் சொல்லனு வருத்தப்பட வாய்ப்பு இல்ல. அதவிட இன்னைக்கு பயந்த மாதிரி!.. அரசி யார் முன்பும்?.. அவர்களின் கேள்விக்கு பதில் கூற வேண்டி பயந்தோ.. கண்கலங்கியோ.. இல்ல பதில் அளித்தோ இருக்ககூடாது. அதனால்தான் இப்பவே இதுவரை நான் எடுத்த என் முடிவுவ.. விருப்பத்தை கூறினேன். “

   ” அப்பா.. இனிமேல் நான் ஏதாவது பண்ணினா?.. அது எங்களோட தனிப்பட்ட முடிவு.. விருப்பம். ஆனா அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. ” என அவன் காலையிருந்து சற்றுமுன் வரைநடந்த அனைத்திற்கும் பொதுவாய் கூற..

   ‘ ரவிக்கும், அருணாச்சலம், ராகவனிற்கு அவன் கூறுவதில் ஏதோ மறைபொருளும்.. ஆட்களும் இருப்பது போல இருந்தது.  ராகவன் தன் மகன் கார்த்திக் பார்க்க.. அவன் இவரை கவனிக்கவில்லை.. அதனால் வேந்தன் இவ்வாறு பேசுவது நல்லதல்ல.. என நினைத்தவர்..’ 

     ராகவன்ஏதாவது பிரச்சனை நடத்ததா வேந்தா ?.. உன் குரலே ஒருமாதிரி இருக்கு. “

    அவரின் பதட்டம் புரிந்து.. எல்லோருக்கும் தங்களை புரியவைக்கும் விதமாக.. புன்னகையுடன்அப்படியெல்லாம் ஒன்னும் நடக்கல மாமா. நான் என்ன சொல்ல வந்தேன்னா?.. என் கல்யாணத்திற்கும், கல்யாணத்திற்கு முன்னையோ!.. பின்போ!.. என் மனைவிக்கு என்று செய்ய.. சில விருப்பங்கள் எனக்கு இருக்கும். இதை யாரும் வெளிப்படையா.. மற்ற விருப்பங்களை போல சொல்லிட்டு இருக்க மாட்டாங்க.. இல்ல நான் இதுநாள் வரை சொல்ல. “

    ” அதனால நான் அரசிக்கோ.. இல்ல கல்யாணத்திற்கு என்று ஒன்னு செய்ய போக.. என்னடா நேற்று வரைக்கும் இவன் இப்படி நடந்துக் கொண்டது இல்ல.. அரசி வந்தவுடன் தான் நான் மாறிட்டேனு.. எல்லாம் செய்கிற என்னை நீங்க ஏதாவது நினைக்கலாம்!.. ஆனா சம்பந்தமே இல்லாம என்னோட விருப்பத்தை!.. செய்யுற அரசிய.. அவங்க வீட்டில் இருப்பவர்கள் உட்பட.. யாரும் தப்பா நினைக்கக்கூடாது. நானும் இங்க இருக்க போது இல்லை. அரசி யார் என்ன கேட்டாலும்.. எனக்கும் சோர்த்து பதில் சொல்லுவா. இருந்தாலும் அந்த சூழ்நிலை கூட அரசிக்கு வர.. எனக்கு விருப்பம் இல்ல. “

    ” அதேசமயம்.. நீங்க எல்லோரும் சேர்ந்து.. எங்க இரண்டுபேருக்கும் நீங்களே நினைத்து பார்க்காதை செய்து.. (இருபொருட்பட கூறினான். ) எங்களை திருமணத்தில் இணைத்துயிருக்கிங்க. அதனால உங்க விருப்பமும் எனக்கு முக்கியம். அதான் ஆரம்பத்திலே என் விருப்பம், எண்ணத்தை சொல்லிட்டா.. அதற்கு ஏற்றார் போல் யார்?. யார் என்ன பண்ணவேண்டும் என தெளிவா பிளான் பண்ணி எல்லாம் வேலையும் செய்திடலாம். ” 

    ” இந்த திருமணத்தில் எல்லோரும் சந்தோஷம்!.. மட்டும் இருக்கனும்.. அதான் நான் இப்ப எல்லோரும் ஒன்னா இருக்கும் இடத்தில்..  இந்த வாய்ப்பில் சொன்னேன். நான் சொன்னதில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்புனா இப்பவே சொல்லுங்க. “  என தன் இரு நண்பர்களையும், சத்யா, இன்பா நன்றியுடன் பார்த்து கூறினான்..

   அவர்களால் தானே இந்த முடிவிற்கு வந்தது.. தனக்கு அரசியுடன் நிகழ்ந்த நிகழ்வை.. இவர்கள் தன்னை பற்றி இவ்வாறு கூறி.. அரசிக்கு தான் இல்லாத போது பிரச்சனை வரக்கூடாது என கேட்டவர்கள்  அவர்கள் தானே. ஆனால் தான் இருக்கும் போதே.. தன் விருப்பதால் தன்னவளை கேள்வியாக பார்க்கும் நிலை.. மற்றும் அவள் மற்றவர்களின் கேள்விக்கு பதில் கூற வேண்டியிருந்தது.. அதன் காரணமாக.. தான் செய்யப் போவதையும்.. சில சமயங்களில் நான் ரகசியமாக செய்யவும் வாய்ப்பு இருக்கு என்பதை மறைமுகமாக கூறிவிட்டால்.. அவர்கள் தங்கள்மேல் வருத்தம் கொள்ளாமல் நிம்மதியாக இருப்பார்கள். நாங்கள் எங்கள் வேலைகளை சந்தோஷமாக செய்வோம் என நினைத்து.. கல்யாண நிகழ்வின் தொடக்கத்திலே  கூறிவிட்டான். ‘

   ‘  தன்னவள் தன் கையை மிகவும் இறுக்கமாக பிடித்துயிருப்பது இருப்பதை.. கூறி முடித்துடன் தான் உணர்ந்தான். தான் கூறியது.. இதுவரை நடந்தை நினைத்து.. அதனால் வந்த மனவருத்ததில என நினைத்தவன்..  சட்டென்று தான் கூறியதில் ஒன்று ஞாபகம் வந்தது.. இன்னும் சிறிது நேரத்தில் தான் இங்குயிருந்து கிளம்ப வேண்டும்மா?.. அதனால் தானோ.?. பிறகு அவனும் அதை நினைத்து.. தன் இறுக்கத்தை கூட்டினான். ‘ 

   மற்றவர்கள் இவனின் விளக்கத்தை கேட்டு.. சிலர் தாங்கள் இதைதானே நினைத்தோம் எனவும்.. அரசியை தாவணியில் பார்த்த பார்வை மற்றும் வசுவினால் அவனும், அரசியும் வருந்தியுள்ளனர்.. அதனால்தான் இனிமேல் இவ்வாறு எங்களுக்கும், என் விருப்பங்களுக்கும் கேள்வியோ?.. சந்தேகம்?. யாருக்கும் வருத்தம் வரக்கூடாது என்பதை ஆரம்பத்திலே.. என், எங்கள் செயல் இதுதான். நீங்கள் எதற்கும் கவலைபடாமல்..’

   ‘ எங்கள் திருமணத்தை சந்தோஷடன் நாங்களும்.. எங்களுடன் நீங்களும் கொண்டாடலாம் வாங்க என கூறுகிறான். எங்களின் செயலால் உங்களுக்கு பாதிப்பு என்றாலும் கூறுங்க. என வருந்தி கேட்பவனிடத்தில்.. என்ன கூற?.. அவர்களால் என்ன பாதிப்பு?.. ம். ‘

   ம்..ஆண்களோ இப்படி மனைவியை  தாங்குவதை பார்த்தால் தான் நமக்கு பாதிப்பு. எனக்காக என்ன செய்தீர்கள்?.. என்று வருவாங்க. எவ்வளவுவே சமாளித்தோம்.. இதை சமாளிக்க மாட்டோமா. என புன்னகையுடன் நினைத்துனர். ‘

   ராகவன் உட்பட பெரியவர்களுக்கு அவன் அரசிக்கு ஏதோ செய்யப் போக.. அதனால் மனவருத்தம் தரும் வகையில் நடந்துயிருக்கிறது என்பது மட்டும் புரிந்துக் கொண்டனர். அதுவும் நல்லதிற்குதான் எனவும்.. இல்லையெனில் அவனின் விருப்பங்கள் பற்றி.. நாம் செய்யபோகும் நேரத்தில்.. அவன் கடைசி நேரத்தில்.. இதுதான் என் விருப்பம்!.. என்று சொன்னான் எனில் தவறாகதான் எண்ணத்தோன்றும் என்று அனைவருக்கும் தங்கள் மகள், மகன் திருமணங்களில் பல அனுபவங்களை பார்த்தவர்கள் நினைத்தனர். ஆனால் அதற்காக இப்போதுதே  வேந்தன் வருத்தப்படுவதில் விருப்பம்இல்லை.. இதுவரை அனைவரும் பேசியது போதும்.. அவர எழ.. பின் அனைவரும்மே எழுந்தனர். ‘

   ராகவன் புன்னகையுடன்..  ம்.. வேந்தா நீ உன் விருப்பத்தை இப்பவே சொல்லி.. நல்லதுதான் செய்துயிருக்க.. அதனால நாங்க எல்லோரும் நீ சொன்னபடி.. நீ என்ன பண்ணணும்?.. நாங்க எண்ண பண்ணவேண்டும்?.. என கலந்துபேசி சொல்கிறோம். “

   ” ஆனா இதில் இன்னும் ஒன்னு மட்டும் நல்லாவே புரியுது. நீ.. எழிலரசிக்கு எங்களுக்கு தெரியாம ரகசியாமா ஏதோ இன்னைக்கு செய்திருக்க.. இனிமேலும் செய்யப்போற.. அதை பற்றி எங்களுக்கு தெரிந்தாலும் கண்டுகாதிங்கனு மறைமுகமான செல்லுற. அப்படிதானே. ” தன் அருகில் இருந்த இருவரின் பெற்றோர்களை பார்த்துக் கொண்டே கூற.. அவர்களும் அவனை புரிந்து சிரிக்க..

       கண்டுபிடித்து விட்டாங்களே !.. என வேந்தன் தன் மாமாவையும்.. மற்றவர்களையும் பார்க்க.. ‘ அவர்களோ டேய் நாங்களும் உன் வயதை கடந்து வந்தவர்கள் தான். அதைவிட உன்னைய மாதிரி எத்தனை கேடிய  நாங்க பார்த்துயிருப்போம். ‘ என அவர்களும் பதில் புன்னகைக்க..

    தன்னை அனைத்து விதத்திலும் புரிந்தக் கொண்ட தன் மாமாவை.. தன் பெற்றோர்கள்.. தன்னவளின் பெற்றோர்களும்.. தன்னை புரிந்துக் கொண்டதின் மகிழ்ச்சியை தெரிவிக்க.. வேந்தன் இத்தனை வருடத்தில் செய்யாதை செய்தான் தன்னவளை மனதில் நினைத்துக் கொண்டு.

   தன்னவளை பார்த்துபின்.. அவளின் கைகளை மென்மையாக விடுவித்து.. புன்னகையுடன் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் மாமா, அம்மா, அப்பா, மாமா, அத்தை ஐவரையும் ஒன்றன்பின் ஒருவராக .. நன்றிகூறி அணைத்து விடுவித்தான். ‘

   ‘ இதனை சற்றும் எதிர்பாரத இளையவர்கள்.. அவனின் அளவிளா மகிழ்ச்சியை பார்த்தும்.. தன் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பெரியவர்களை சென்று அணைப்பதை பார்த்து.. முதலில் தன் தாய்மாமாவை அணைப்பில் அதிர்வும்.. மற்றவர்களை அணைத்ததில்.. அவனின் அரசி உட்பட இளைவர்கள் ஓஓஓ.. கத்தி அவனின் மகிழ்ச்சியில் பங்கேற்றனர். பெரியவர்களுக்கு தன் மகன், மருமகன் மீது.. மகிழ்ச்சி, வெக்கம் என்ற நிலையில் இருந்தனர். ‘

    ‘ அதன்பின் வேந்தன்.. அவர்களை அணைத்தின் ஞாபகம் மற்றும் காலையில் இருந்து தன்மகிழ்ச்சியை அவனின் இறுக்கிய அணைப்பில் வெளிப்படுத்திய உணர்வில்.. தன்னவளை அணைக்க வந்துவிட்டனை.. அவனை அறிந்த அவனவள் அவன் விரும்பும் முறைப்பு பார்வை செலுத்தி.. அவனை காப்பாற்றினாள். ‘

    ‘ இருப்பினும் அவனால் தன்னவளிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாமல்.. புன்னகையுடன் அவளை அனைவர்முன்பு.. தன் தோள்வளைவில் இறுக்க அணைத்து விடுவித்தான். அதற்கும்ஹேய்.. ‘ என குரல் அவர்களின் நண்பர்களிடம் இருந்து வந்தது. பின் அனைவரும் ஒன்றாக நின்று புன்னகையுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். ‘

    இந்த மகிழ்ச்சியுடனே அனைவரும் சாப்பிட சென்று.. பின் அவரவர் வீட்டிற்கு வேந்தன்எழிலரசியின் திருமண உறுதிநிகழ்ச்சியை திருப்திகரமாக முடித்து..  சிலர் சற்று வெறுப்புடனும், பலர் விருப்பமானர்களின் திருமணவிழா ஆரம்பிக்க.. இனி இருவரின் வீடும் களைகட்டப் போகிறது.. என மனமுழுவதும் சந்தோஷம் கொண்டும் அவர்கள் வீட்டை அடைய.

    அதில் ஒருவன் தன்னவளை, தன் உயிரானவளை, தன் முயல்குட்டியை.. தான் அவளை அனைவரின் சம்மதம், சந்தோஷத்துடன் உரிமையாக்கிக் கொண்டேன் என்ற துள்ளலுடன்.. அடுத்த சில நிமிடங்களில் தன்னவளின் வீட்டின் முன் பைக்குடன் நின்றிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!