Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 15. 1

 

நாம் 15( 1)

 

     தன்னவளுடன் ஆடி, பாடி முடித்த பின்.. திலகா, சத்யா?.. உங்க இதனை வருட விருப்பம், ஏக்கம், கவலை, ஆதங்கம் எல்லாத்தையும் நாங்க இப்ப எல்லார் முன்பும் நிறைவேற்றி விட்டோமா?.. வேற யாருக்காவது ?.. எங்க மேல ஏதாவது நிறைவேறாத ஆசையிருக்கா?.. தாராளமான சொல்லலாம். ” என ஒன்றும் தெரியாத பிள்ளைபோல!.. அவர்களின் ஆசையை தான்.. நான் நிறைவேற்றினேன்.. என்பது போல் கேட்டுவிட்டு அமைதியாக எல்லோரையும்.. அடங்கப்பட்ட சிரிப்புடன் பார்க்க.



Advertisement

   அனைவரும் இருவரின் செயலின் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே.. சில நொடிகள் எடுத்துக்கொண்டனர். பின் வேந்தன் சொல்வதை கேட்டவர்கள்..என்ன சொல்றான்?.. என முழித்து.. பின் என்ன நாங்க தான் காரணமா?.. இன்னும் ஏதாவதுவா?.. இவனை என்ன பண்ணலாம்?.. என சிலர் யோசிக்க நினைத்தாலும்.. அவர்களால் முடியவில்லை.

   ‘  ஏன்?. எல்லோருக்கும் மிகமிக மகிழ்ச்சியில்!.. இருந்தார்கள். அவர்கள் இருவரின் அனைவர் முன்பான நடனம் மற்றும் பாடல் பாடியதில்.. அவ்வளவு காதல், அழகு, அவனின் கண்ணியமான முறையுடனான அவனின் விருப்பத்தை தெரிவித்ததில் இருந்தது. அவனின் பேச்சில், நடவடிக்கையில் எல்லாம் உரிமையை இதுவரை வெளிப்படுத்தியிருந்தாலும்.. எல்லோர் முன்பும்.. நான் தான் அவளவன்.. அவளின் ஒவ்வொன்றிக்கும் சொந்தமானவன் தான்!.. ‘

    ‘ ஆனால் என் உரிமை அவளிடம் காட்டும் நேரத்திலும்.. என்னுடன் பார்க்கும் அவளை.. மற்றவர்கள் சிறு கூச்சம் கூட இல்லாமல் தான் பார்க்க வேண்டும்.. அதேசமயம் அவன் உரிமையும் அதில் தெரிய வேண்டும் என நினைத்தது.. வேந்தன் எந்த உறுத்தலும் இல்லாத அளவிற்கு.. அழகான ஹைக்கூ கவிதையாக!.. அனைவரும் பார்க்கும் படியாக இருவரும் கண்களை பார்த்துக் கொண்டேயும்.. கையை, இடுப்பை பிடித்து நடனம் ஆடி, பாடி என இருவரை தவிர வேறு எங்கும், எதையும் நினைக்க தோன்றாத படி.. இந்த இரண்டு நிமிடமும் அனைவரையும் கட்டிப்போட்டது. ‘

Advertisement

    இவன் எந்த பயமும் இல்லாமல்.. நம்மளை ஒன்றும் சொல்லமாட்டார்கள்.. சொன்னாலும் சமாளித்துக் கொள்ளலாம்.. என்ற தைரியத்தில் இருப்பவனை.. கொஞ்சம் அடக்கி வாசி தம்பி.. உனக்கு புண்ணியமா போகும். ‘ என கூறலாம் என்று வருகையில்.. அந்த கேடியாகப்பட்ட வேந்தன்.. தாங்களை முந்திக் கொண்டு கேட்ட கேள்விக்கு பதில் கூற நினைக்கும் வேலையில் தான்.. ‘ 

Advertisement

    இவ்வளவு நேரமும்.. இவர்களில் ஒருத்தியான வசுந்தரா மட்டும்.. ‘ இவர்களிடம் ஏன் என்று தெரியவில்லை?.. சில நேரம் பிடித்தமாகவும்.. சில நேரம் அவர்களின் நடவடிக்கை சற்றும் பிடிக்காமலும் இருந்தது. தன் அண்ணா தனக்கும் கூட சில சமயங்களில் நடனம் சொல்லிக் குடுத்துயிருக்கார். ஆனால் திருமண விழா, இல்லை வீட்டில் பொழுதுபோக்கிற்காக.. அனைவரும் இருக்கும் போது.. ஆட வற்புறுத்தி அழைத்தாலும் வரவேமாட்டார். ஆனால் இன்று ஒரு வார்த்தைகூட யாரும் சொல்லமலே செய்தது. ‘

     ‘ அதிலும் தன் அண்ணாவிற்கு இவ்வளவு பேசவும், கண்ணாலே அனைவரிடமும் கோபப்பட தெரியுமா?.. நண்பர்களுக்கு கூட தெரியாத ரகசியம்.. என அவள் பலவற்றையும் நினைத்தும்.. ஆனால் இவையனைத்தும் ஒருசில மணிநேரத்தில்!.. அதுவும் இரண்டு நாட்கள் முன்னர்  அறிமுகமான ஒருநபர் மூலம் தான்.. தன் வீட்டினர், நண்பர்கள், முன்பின் அறியா மற்றவர்கள் என எல்லோருக்கும் முன்பாக தெரிய வருகிறது.. என்ற ஒரு சொல்ல தெரியாத எரிச்சல் அவளுக்கு. இவ்வளவு நேரமும்.. நடந்த அனைத்தையும் பொறுமையுடன் பார்த்து.. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டுயிருந்தவள். ‘ 

   அண்ணா.. எல்லாம் முடிந்ததா?.. எனக்கு தாவணிய காட்டுவாங்களா?.. இல்லையா?. ” என அனைவரும் கேட்கும் படியாக சத்தமாக கேட்டாள். 

Advertisement

   ‘ வேந்தன் இவ்வளவு நேரமும்.. வானின் உச்சத்தை தொட்ட மகிழ்ச்சியில் இருந்தான். பள்ளிகாலத்தில் இருந்தே.. இதுவரை எத்தனையோ நபர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துயிருக்கிறான்.. ஆனால் அனைவர் முன்னும் ஆடத்தோன்றியது இல்லை. எவருக்கும் தனக்கு பிடித்தமானதை யாருக்கும் தெரியப்படுத்த தோன்றாத.. தனக்கு பாடல் பாடப் பிடித்துயிருப்பதை.. ‘

    ‘ தன்னவள் இதனை நாட்களாக அனைவர் முன்பும் வெளிப்படுத்தாததை.. தனக்காக வெளிப்படுத்தியதில் எல்லையற்ற மகிழ்ச்சியினால்.. தானும் அவளிற்காக தன்னுடைய ரகசியத்தை வெளிப்படுத்தி.. நீயும், நானும்.. நாமாக  மாறுவதற்காக.. நம் கல்யாணத்தை உறுதி செய்யப் போகும் இந்நாளில் இருவருக்கும் தெரியாத எதுவும் இல்லை என்று தன்னவளிடம் கூறிய மகிழ்ச்சியை கொண்டாடியும்.. யாரும் எங்களை எவ்வித எதிர் முக வருத்தையும் தெரிவிக்காமல்.. தற்போதைக்கு அமைதியாக தங்களின் விருப்பத்தை ஏற்று விட்டார்கள் என்று நினைத்து இருந்தவன்.. ‘ 

     ‘ தன் தங்கையின் கேள்வியில்.. ஏன்?. என்று தெரியாத.. சற்று கலக்கம் தோன்றியது. பின் அரசியை பார்க்க இன்னமும் தன்னால் ஆன அவளின் உணர்வுகள் அவள் முகத்தில் மின்னியது. ‘

    எழிலரசி வசுவின் கேள்வியில்.. ” .. மறுந்துட்டு வசுந்தரா. ” வேந்தனை பார்த்து மென்சிரிப்பை உதித்துவிட்டு.. அவர்கள் உட்கார்ந்த இடத்தில் எழிலரசி தான் வைத்துயிருந்த உடையின் கவரை அவளிடம் கொடுத்தாள்.

    அனைவருக்கும் கேட்டதால்என்ன இவள் கேட்கிறாள்?.. எழிலரசியும் போய் வசுவிடம் கொடுக்க.. ஆனால் இதனை பார்த்தும் தெளிவில்லாத.. வேந்தனின் முகம் ஏன்?. ‘ என மற்றவர்கள் யோசனையில் இருந்தார்கள்.

    ‘ எழிலரசியிடம் இருந்து வாங்கிய உடையை பார்த்தாள் வசுந்தரா. அதில் பார்த்தவுடனே கவரும் வண்ணம் இருந்த கிளிபச்சை, அடர்ரோஜா.. அடர்ஊதா, ஆரஞ்சுநிற தாவணி இருந்தது. அருகில் இருந்தவர்களில் சாரு மட்டும் அவள் மேல்தான்.. வசுந்தரா உடை விரித்து பார்த்துயிருந்தாள். அதனால் வேறு வழியின்றி அதனை பார்த்தாள். ‘ 

   கமலேஷ்.. ” என்ன தாரா இது?.. எதுக்கு அவங்களோடதை வாங்கி பார்த்துட்டுயிருக்க?.. “

   சும்மா தான் மாமா.. அண்ணா வாங்கி கொடுத்ததை பார்க்கனும் தோனுச்சு. ஏன்?.. சாரு கூட எனக்கு யார் புதுசு வாங்கிக் கொடுத்தாலும்.. அவ கேட்டு வாங்கி பார்ப்பா.. நானும் தான் அவளோடதை பார்ப்பேன். அது மாதிரிதான் இதுவும். ”

   தோழிகள் மாதிரி இருக்க நீங்க இரண்டுபேர் பார்ப்பதும்.. நீ அவங்களோடதை பார்ப்பதும். ஒன்னும் இல்ல தாரா. ” என அவன் கூறிக் கொண்டுயிருக்கும் போதே.. அவள் எழுந்துவிட..

    ‘ வேந்தன் இவ்வளவு நேரமும் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தவன்.. இப்போது கோபத்தின் எல்லையில் இருந்தான். தன்னவளிற்காக தான் வாங்கிய உடையை.. அவள் மட்டும்தான் பார்த்து!.. பின் அணிய வேண்டும். அதையும் அவள் அணிந்தவுடன்.. தான்தான் முதலில் பார்த்து.. அதன்பிறகு தான் மற்றவர்கள் பார்க்க வேண்டும்.. என இன்னும் பல கனவுகளுடன்!.. அவளிற்கு வாங்கிய உடையை.. வெளியில் வைத்து பார்ப்பதை பார்க்க சற்றும் பிடிக்கவில்லை. ‘

     ‘ அதிலும் செல்ல தங்கையே செய்தலில் கோபம் ஒருபக்கம்.. வருத்தம் ஒருபக்கம் என்ற மனநிலையில் எதுவும் கூறவும்.. பார்க்கவும் பிடிக்காமல் அமைதியாக.. தன் அருகில் இருந்த முயல்குட்டியின் விரலை தடவியபடி இருந்தவனை.. அவனே அவனின் மனநிலையை கூறுவான் என்று அவள் அவனிடம் எதுவும் கேட்காமல்.. சத்யாவிடம் பேசிக் கொண்டுயிருந்தாள். ‘ 

       இப்படி இருந்தவர்களின் முன் இரண்டு உடையை எழிலரசியின் மடியில் வைத்துவிட்டு..”  இந்த ஆரஞ்சு,புளூ கலர் டிரஸ்.. எனக்கு கொடுப்பிங்களா?.. ”

       வேந்தன்.. ” வசுஎன ஆரம்பிக்கும் போது..

      எழிலரசிக்கு.. வசுந்தரா தன் உடைகளை பார்க்கும் விதத்திலேயே இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்துவிட்டதுஅதனால் வசுவிற்கு பதில் கூறாமல்.. வேந்தன் ஆரம்பிப்பதை பார்த்த அரசி.. ” தனு.. உங்களிடம் இந்த டிரஸின் போட்டோ இருக்கல. ”

     சட்டென்று அவனிற்கு ஒன்றும் புரியவில்லை.. ‘ வசு என்ன கேட்கிறா?.. இவ என்ன கேட்குற?… ‘ 

      அழுத்தமாகதனு.. இருக்குல்ல?.. ”

      பின் அவளின் அழுத்ததில் ஏதோ புரிந்தும் புரியாமல்..  ” ம்

    வசுந்தரா.. தனுட்ட இந்த டிரஸ் போட்டோ இருக்கா.. நாளை வாங்கி கொடுத்து விடுவாங்க. “

    என்ன?.. ” ம்.. இதை நான் எடுத்துக்குறேன். தைத்தும் இருப்பதால.. இப்ப நான் போட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு அண்ணா நாளை வாங்கிக் கொடுத்துடுவாங்க.  “

     அரசி.. தனுவை ஒரு பார்வை பார்த்து.. ” இல்ல வசுந்தரா.. இதை நீங்க போட வேண்டாம். தனு உங்களுக்கு வாங்கி தருவாங்க. ”

    எழில் கூறியதை கேட்கு பின்.. வசுந்தரா யோசித்து.. ” அண்ணா.. முதல் தடவை வாங்கி கொடுத்துனு யோசிக்கிறிங்களா?.. அதான் இன்னும் ஒன்னு இருக்கு. அதுமில்லாம.. தாவணிய இனிமே நீங்க போடவும் மாட்டிங்க. ” அவள் கூறிக்கொண்டே இருக்கும் போதே..

     வசு கூறியதை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே சற்று கோபம் வந்துவிட்டது தான்.. இருந்தாலும் பொறுமையாக பதில் அளிக்க விரும்பி.. ” வசுந்தரா.. நான் இனிமே போடுவேன்.. போடமாட்டேன் என்று நீங்க முடிவு பண்ண வேண்டிய அவசியம் இல்ல. தனு வாங்கி கொடுத்தது ஒரு ரிசன்.. ஆனா அது மட்டும் கிடையாது. “

    சரி நான் முடிவு பண்ணல. அப்படி உங்களுக்கு வேண்டும் என்றால்?.. நீங்க எனக்கு சொன்ன மாதிரி.. நாளைக்கும் இதே மாதிரி அண்ணாவே.. உங்களுக்கு வாங்கி கொடுக்க போறாங்க. பிறகு என்ன?.. ” வசுவிற்கு.. எழிலரசி வேண்டாம் என்று கூறக்கூற.. என்ன ஆனாலும்.. கண்டிப்பாக வேண்டும் எனத்தான் தோன்றியது..

    வசுந்தராவே தொடர்ந்து.. ” உங்களுக்கு நேற்று வாங்கும் போது.. எனக்கும் அண்ணா வாங்கி கொடுத்ததை.. நானும் சாருலதாவும் பார்த்தபோது.. அதில் ஒன்று அவ நல்லாயிருக்கு சொன்னா.. நான் அவ கேட்காமலே அவளிடம் கொடுத்துவிட்டேன். காவ்யா அண்ணியெல்லாம் நான் விரும்பி எதை கேட்டாலும் உடனே கொடுப்பாங்க. எங்க அண்ணா வாங்கி கொடுத்த.. நீங்க!.. நான் இவ்வளவு ஆசையா கேட்ட பிறகும்.. இப்படி யோசிக்கிறீங்க. ” 

   ‘  மற்றவர்கள் வசுவின் பேச்சை ஆரம்பித்தில் இருந்து பிடிக்காத மனநிலையில் தான் இருந்தார்கள்.. ஆனாலும் சிறுபெண் என்பதால் ஒன்று விட்டுவிடுவாள்.. இல்லை தெரியாமல் கேட்கிறாள்.. பின் அரசி கூறியதை கேட்டு சென்றுவிடுவாள்.. என்று நினைக்கையில் அவளின் பேச்சின் போக்கு சரியாக படவில்லை. ‘

   அவளின் அருகில் வந்த வேந்தனின் முதல் தங்கை  வினோ.. ” என்ன வசு.. அதான் நாளைக்கு அண்ணா வாங்கி கொடுப்பாங்கனு.. சொல்லுறாங்க தானே.. விடு. அவங்க கிளம்ப நேரம் ஆகுது. “

   என்ன அக்கா?.. நான் என்ன அவங்களோடையதையா?.. கேட்டேன். அண்ணா வாங்கிக் கொடுத்தை தான் கேட்டேன். நாளைக்கு அவங்க வாங்கிட்டும். எனக்கு இப்ப இதுதான் வேண்டும். இல்ல என்னனு சரியான ரிசன் சொல்ல சொல்லுங்க. அண்ணா ஏதாவது கூற வந்தாலும்.. அண்ணாவையும்.. இவங்க பேசவிட மாட்டேன்கிறாங்க.. வாங்கி கொடுத்து அண்ணா. அதனால அண்ணா சொல்லட்டும். “

   இங்க பாருங்க வசுந்தரா.. தனு எதுவும் செல்ல மாட்டாங்க. “

   ஏன்?.. ஏன்?.. அப்ப அண்ணா.. நான் விருப்பி கேட்டா எதையும் கேட்டு வாங்கி தரமாட்டாங்களா?.. தங்கச்சி முக்கியம்மா?.. இல்ல நீங்க.. ” முடிப்பதற்கு உள்ளாக..

   எழிலரசி புன்னகையுடன்.. ” என்ன வசுந்தரா நீங்க.. ஒரு டிரஸ்க்கு சம்பந்தம்மே இல்லாம.. எங்க?.. எங்யோ?.. போறிங்க. இது சரி கிடையாது. ” 

    ” வசுந்தரா.. நான் பொதுவாகவே ஒவ்வொரு உறவுக்கும்.. ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கு நினைக்கிறவ.. அதனால யாரையும்!.. யார் கூடவும் கம்பேர் பண்ணி பேசுவது எனக்கு பிடிக்காது. அதிலையும் நீங்க கேட்டா மாதிரி யார் முக்கியம் என்றெல்லாம் நானும் கேட்கவே மாட்டோன்.. தனுவ நான் கேட்டவும் விடமாட்டேன்.. நானும் அவங்களிடம் நடந்துக் கொள்ளமாட்டேன். “

    ” அதனால.. உங்க அண்ணா, என்னையும் உடன் வைத்து.. நீங்க விரும்பியதை எல்லாம் கண்டிப்பா.. அதுவும் நீங்க  கேட்காமலே செய்வாங்க. உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் செய்வாங்க.  அமைதியா உடன் இருந்தே.. என்ன?.. ஏதுனு?.. கேட்காம நானெல்லாம் அதில இருந்து பத்தடி தள்ளிப்பா நினைப்பேன். ” 

  ”  உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்?.. இதுபோல உடனே போட வேண்டும் விரும்பினால்.. கடையில் இப்பவே வாங்கி.. உடனே தைத்து கொடுக்கக்கூட ஆள் இருக்காங்க. வாங்கிட்டு வரச்சொல்லட்டா?.. “

   வசுவிற்கு தான் கூறியதை ஒரு பொருட்டாக மதிக்காமல் புன்னகையுடன் எழிலரசி பேசியதால்.. அவள் எழில் கூறியதை எதையும் கேட்டு அது மனதில் பதியவில்லை.. ஆனால் கடைசி வரி மட்டும் பதிந்து.. ” எனக்கு நீங்க சொன்னதெல்லாம் முக்கியம் இல்ல.. எனக்கு இப்ப நீங்க ரிசனும் சொல்லாம.. திரும்ப சொன்னதையே சொல்லுறீங்க.. என்னிடம் சொன்ன.. அதையே நீங்க பண்ணிக்கோங்க. ”

   ‘ இவர்களின் பேச்சுவார்த்தையை கேட்டால்.. ஆரம்பத்தில் அரசியை நினைத்து தான்.. வருந்தினர்.. வசுவின் குழந்தைத்தனமான செயலால்.. அரசி அவளை தப்பாக எண்ணி.. சற்று பெரிய பெண் எழில்.. இருவருமே வீட்டல் செல்லமாக வளர்ந்தவர்கள்.. இருவருமே வேந்தனின் வாழ்க்கையில் முக்கியமாக நபர்கள். சற்று குரலை உயர்த்தி யார் பேசினாலும் நன்றாக இருக்காது என்று எண்ணும் போது.. எழில் வசுவிடம் பொறுமையாக.. நான் இதுபோல்தான் இப்பவும், எப்போதும் இருப்பேன்.. என்பதையும் புன்னகை முகமாகவும்.. அதில் தோன்றிய பாவனையை பார்த்து.. ‘

     ‘ யார் வாங்கி கொடுத்தாக?.. சண்டைபோல நடக்கிறதோ..  அதற்கு காரணமான வேந்தன்.. இவ்வளவு நேரம் உம்மென்று முகத்தை தூக்கி வைத்துயிருந்தவனே.. அவனின் அரசிம்மா.. தான் நினைப்பது போலவே  கூறியதை கேட்டு மனம் குத்தாட்டம் போடும்போது.. அவள் தான் இப்படிதான் இருப்பேன்.. என்பதையும் பல பாவனையுடன் கூறியதை கேட்டு சிரித்துவிட்டான். ‘

   ‘  மற்றவர்கள்.. அரசி கூறிய ஐடியா நல்லாதானே இருக்கு.. எதுக்கும் வசுவும் வேண்டாம் என்று கூறவில்லை.. அரசியும் ரிசன் சொல்லாமா இருக்கா?.. யாராவது ஒருத்தர் அமைதியான முடிந்துவிடும். எப்படா முடிப்பிங்க?.. என்னும் நிலைக்கு வந்துவிட்டனர். ‘

    ம்.. அதை உங்களுக்கு பண்ணலாம். ஆனா எனக்கு அது பண்ண முடியாது. இதுக்கு மேல நான் இதை வளர்க்க விரும்பல வசுந்தரா. ” 

    ” எனக்கு  இந்த உடையை!.. எனக்காக மட்டும் உங்க அண்ணா வாங்கியது. இந்த ஒரு ரிசன் போதும்.  மற்றதெல்லாம் எங்களுக்கான தனிப்பட்ட விஷயம். அதனால நான் இதுக்கும் மேல உங்களுக்கு விளக்கம் கொடுக்க விரும்பல.. இதோட விட்டுவிடுங்க. “

   ஏன்?.. இதில் என்ன தனிப்பட்ட விஷயம் இருக்கு?.. எங்க அண்ணா வாங்கியதை கேட்கிறேன். “

    புன்னகையுடன் அவளின் அருகில் நின்று.. மெல்லிய குரலில்.. “  ஏங்க புரிந்து கொள்ளுங்களே.. நீங்க சின்ன பொண்ணு. என்னால இதுக்கு மேல சொல்லவும் முடியாது.. தரவும் முடியாது  விட்டுங்களே. “

   ஆனால் வசுந்தராவோ அதிக குரலில்.. ” என்ன ஆள் ஆளுக்கு என்னைய சின்னப் பொண்ணு!.. சின்ன பொண்ணு சொல்லுறிங்க.. நேற்று அண்ணா .. இன்னைக்கு நீங்க. இப்ப என்ன ரீசனு?.. என்னிடம் சொல்லியே ஆகனும். ” அவள் சற்று கோபமாக கேட்க..

   அரசி.. வேந்தனை பார்த்தாள் ஏன்?..  என்று. ” பிறகு சொல்கிறேன்என சத்தமில்லாமல் சொல்ல.. ம்.. திரும்பி வசுந்தராவை பார்க்க.. பதில் கிடைக்காமல் போக மாட்டேன் என்பது போல எதிரில் இருக்க..

  அரசி மணியை பார்த்தாள்.. நேரம் வேற ஆகிறது.. வேறு வழியில்லை.. இவ்வளவு தூரம் மறைமுகமாக கூறிய பின்னும் அடம்பிடித்தால்.. நான் என்ன செய்ய?.. சுற்றியிருப்பவர்களில் சிலர். அங்கு இல்லை.. மாமாவெல்லாம் அப்பவே காணோம்.. அண்ணி.. அக்காவெல்லாம் குழந்தைகள் அழும் குரல் கேட்டு சென்றதால்.. இளையவர்கள் மட்டுமே.. சரி என்று.. ‘

   தர்ஷனி, சாரு நீங்க கொஞ்சம் அக்கா, அண்ணி இருக்கும் ரூம்மிற்கு போங்க.. இல்ல கிளம்ப என் ரூம் போங்க. ”

   ஏன் க்கா?… நா.. “  முடிப்பதற்குள்.. ” போ தர்ஷனிசற்று அழுத்தமாக கூற.. தலையை மட்டும் ஆட்டிவிட்டு.. பின் அவர்கள் இளமதி அக்காவின் ரூமிற்கு சென்றனர்.

   அவங்கள ஏன் போக சொல்லுறிங்க?.. “

     இருவரும் அறையினுள் செல்வதை பார்த்துவிட்டு.. ” அவங்க இதை தெரிந்த கொள்ள நான் விரும்பல. அதவிடுங்க. நீங்க என்கிட்ட கேட்ட கேள்விய திரும்ப கேளுங்க?.. ” சற்று அழுத்தமாககேட்டாள்.

   ‘ உடன் இருந்தவர்களுக்கு அரசி.. இருவரையும் ஏன் போக சென்னா?.. பின்ன தேவையில்லை என்கிறா?.. பின் வசுவிடம் கேட்ட கேள்வியிலும், தோரணையிலும்.. வேந்தன் உட்பட அங்கு இருந்தவர்களுக்கு சுவாரசியம் அதிகம் ஆனது. ‘

   வசுவிற்கு இதில் என்ன இருக்கு?.. என நினைத்து.. ” எங்க அண்ணா உங்களுக்கு வாங்கி கொடுத்ததில்.. நான் விரும்பிய உடையை கேட்கிறேன்.. அதை நீங்க கொடுக்கமா இருக்க.. காரணம் என்ன?.. “

   இந்த கேள்விய நல்லா புரிந்துதான் கேட்டிங்க?.. ம். ”

   ம்

   ‘ இவர்களின் உரையாடலை கேட்டவர்களுக்கு எழில் என்ன கூற வருகிறாள்?. என்று புரியவில்லை. எழிலை கவனிக்க ஆரம்பித்தனர். ‘

   நான் இனிமே இந்த உடைய போடுவேன்.. போடமாட்டேன் என்றெல்லாம் பற்றி கவலைப்படமா!.. உங்க அண்ணா.. எனக்கும் அண்ணாவா வா நினைத்து வாங்கி கொடுத்து இருப்பாங்க?.. ம்.. சொல்லுங்க?.. “

    அரசி கூறியதை கேட்டவள்.. ” என்ன உளர்றீங்க?.. அண்ணாவா நினைத்து எதுக்கு உங்களுக்கு எடுக்கனும்?.. ம்.. வருங்கால மனைவிக்காக.. கணவரா நினைத்து வாங்கியிருப்பாங்க. “

   ம்.. மனைவிக்காக.. கணவரா நினைத்து.. முதன்முதலா வாங்கிக் கொடுத்த உடையிது. இதை எப்படி உங்களுக்கு நான் கொடுப்பது. ம்.. சொல்லுங்க. ”

   இதில் என்ன இருக்கு?.. ” மீண்டும் கேட்க..

   வேந்தனுக்கு மட்டுமேயான நாணப்பார்வை ஒன்றை செலுத்த.. ‘ அவனோ ஏன்?.. ஏன் முயல்குட்டி இப்படி பார்க்கிறிங்க?.. ‘

   இதில் என்ன இருக்கா?.. இதில் என்ன இல்ல?.. ம்உங்க அண்ணா.. உங்களுக்கு உடை வாங்கும்போது.. அதில் அன்பு மட்டும் இருக்கும்.. அதை நீங்க போட்டு பார்க்கும் நல்லா இருக்கு.. என்ற மட்டும் தோனும். “

    ” ஆனா அவர் எனக்கு.. நான் அவரை கணவரா ஏற்றுக்கொள்ள சம்மதம் சொல்லிய பின்தான்.. அவர் என்னை மனைவியா நினைத்து உடை வாங்கியதுஅப்படி எனக்கு வாங்கும் போது.. அதில் அன்பு, பாசம் தாண்டி அந்த உடையில் கணவன் மனைவிக்கு மட்டுமேயான உணர்வும் அதில் கலந்துயிருக்கும். அந்த உடையை போட்டு.. என்னை பார்க்கும் போது.. அவங்க பார்வையில் கணவர் என்ற உரிமையான பார்வையும் அதில் இருக்கும். அப்படி இருக்கப்ப மனைவியா நினைத்து!.. வாங்கிய உடையை நான் எப்படி உங்களுக்கு கொடுக்க முடியும்?.. சொல்லுங்க. “

    இதில் அவள் ஏதோ புரிந்தது.. அடுத்த கேள்வியை கேட்க வர..

    இவ்வளவு நேரம் அவள் திருப்ப திருப்ப கேட்டதிலும்.. அவள் மட்டும் முகத்தை பார்த்து பேசிக்கொண்டுயிருந்தலால்.. அவள் கேட்க வரும் கேள்வியை உணர்த்து..

   நீங்க என்னை கேட்பிங்க?.. அதன் பிறகு உடனே நினைப்பிங்க!.. உங்க அண்ணா, மாமா வாங்கியதில்.. உங்க அக்கா, அண்ணிகிட்ட உங்களுக்கு பிடித்தது இருந்தா கேட்டு வாங்கி போட்டுக்க மாட்டிங்களா?.. எங்க அக்கா, அண்ணி  அப்படியெல்லாம்  நினைக்க மாட்டாங்களே என்று. “

   ம்.. “

    மெல்லிய புன்னகையுடன்.. ” நானும் எங்க அக்கா, அண்ணியோட புதுசு இல்ல பழைய உடையோ.. அதில் எனக்கு விரும்பிய உடையை கேட்டு என்ன?.. அக்கா, அண்ணிதானே என்று.. கேட்காம கூட எடுத்துவிட்டு வந்துயிருக்கேன். “

   ” ஆனா அதுக்கு முன்னாடி அது மாமா, அண்ணா வாங்கி கொடுத்தா?.. என்று நான் தெளிவா தெரிந்த பிறகுதான் கேட்பேன். வாங்கியதுனு தெரிந்தா!.. அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்துயிருந்தா!.. நான் அது எங்க வாங்கியது என்று?.. அக்கா, அண்ணியிடம் கேட்டு வேற கலரில் வாங்கிப்பேன். “

   மனதில் இருப்பத்தை வெளிப்படையா சொல்ல வேண்டும்னா..  எனக்கு தனு!. எனக்குனு தனியா.. எங்களுக்கு!.. ஏற்றார்போல் பார்த்து விரும்பி!.. வாங்கி கொடுத்ததை உங்களுக்கு கொடுப்பதில் விரும்பம் இல்ல. இப்ப வாங்கிய உடை என்று இல்ல.. இனிமேலும் வாங்கி கொடுக்கும் உடையையும்.. எப்பவும்!.. நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன். ” 

    ” நீங்க நினைக்கலாம் விலை ஜாஸ்தியா இருக்க உடைக்கு தான்.. இப்படி இருப்போனு.. தனு விலை கம்மிய..  சின்னப்பொருள் வாங்கிக்கொடுத்தாலும்.. அதுக்கும் ஒரே மதிப்புதான் கொடுப்பேன்.. ஒரே எண்ணம்தான் எனக்கு இருக்கும். “

   என்னை பொறுத்தவரைக்கும்.. அண்ணாவா, அப்பா, தம்பியா யார்?. யாருக்கு?. வாங்கி கொடுத்தாலும்.. யார்?.. வேண்டும் என்றாலும்.. போடலாம். ஆனா கணவன், கணவனா நினைப்பவர்கள் வாங்கியதை மனைவி, மனைவியா நினைப்பவர்கள் மட்டும் போட வேண்டும். இது என்னோட தனிப்பட்ட கருத்து. நான் உங்களையும்.. ஏன் யாரையும்?.. அப்படி இருக்க சொல்லவில்ல அத நல்லா புரிந்துக் கொள்ளுங்க. நான் இப்படிதானு சொல்லுறேன். ”

    நீங்க.. “

    என்ன நீங்க மட்டும் நினைத்தா போதுமா?.. எங்க அண்ணாவும் உங்கள மாதிரி நினைக்க வேண்டாமானு?.. தானே கேட்கவரிங்க. “

    ம்.. “

    உடன் இருந்தவர்கள் வேந்தனை பார்த்து நக்கலாக சிரிக்க.. ‘ என்ன மனசுல நினைக்கிறத எல்லாம் சொல்லுறாங்க?.. உன் பாடு ரொம்ப திண்டாட்டம் டா. ‘ அவர்களின் நக்கல் சிரிப்பை பார்த்த வேந்தன்.. ‘ஆமாம் ‘ என்பது போல பார்த்தாலும்.. வசுவின் கேள்விக்கு.. மனதினுள் ‘ நான் யாரையும் வாங்கி கொடுக்க விடமாட்டேன். என் முயல்குட்டி எல்லாம் நான் மட்டும் வாங்கிக் கொடுப்பேன். ‘

   புன்னகையுடன்.. ” நானாவது தனு வாங்கி கொடுத்ததை மட்டும் தான்.. நான் யாருக்கும் கொடுக்கமாட்டேனு சொல்லுறேன். ஆனா அவர் என்னிடம் கட்டளையே போட நிறைய வாய்ப்பு இருக்கு.. அது என்னனா?.. ” அவனை பார்த்துக் கொண்டே..

   எனக்கு அவர் மட்டும்தான் வாங்கிக் கொடுக்க வேண்டும். வேறு யாரும் வாங்கி கொடுக்கக்கூடாதுனு சொல்லுவாரு. ம்.. ” அப்படிதானே என்று வேந்தனிடம் கேட்க..

   வேந்தனும் மெல்லிய விரிந்த புன்னகையுடன்.. ‘ ஆமாம்என்பது போல தலையாட்ட.

    மற்றவர்கள்வாவ்.. இனிமே.. இன்னும் இதுபோல நிறைய பஞ்சாயத்தை பார்க்கலாம் போலவே ‘ புன்னகைத்தனர். 

     அதனால என்கிட்ட  மட்டும் அல்ல.. எங்களிடம் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்க.. இன்னைக்கு கேட்டது போல.. என்னைக்கும் திரும்பி.. இதே மாதிரி யார் முக்கியம் என்றோ?.. எங்களுடைய பொருட்களை கேட்டோ.. எங்களை சங்கடப்படுத்தாதிங்க. ஓகேயா. “

   அருகில் இருந்த வேந்தனின் நண்பர்கள்.. கமலேஷ்நான் இப்ப சொன்ன தெல்லாம்.. உங்களுக்கும் சேர்த்துதான். “

    அவர்கள் புரியாமல் முழித்து.. பின்.. திலகன்.. ” நாங்க  சேலை, தாவணி, சுடிதார் , பொண்ணுங்க பொருட்களை எல்லாம் பயன்படுத்த மாட்டோமே. அதனால உனக்கு அந்த கவலை வேண்டாம்மா. ” புன்னகையுடன் கூற..

   .. செம்ம ஜோக் ண்ணா.. நாளைக்கு சிரிக்கிறேன். நான் சொன்னது.. இனிமே.. நீங்க தனுட்ட ஏதாவது பிடித்துயிருந்து.. வேண்டும் என்றால் நான் வாங்கி கொடுத்தா என்று கேட்டு.. வாங்கிக்கோங்க.. அப்படினு சொன்னேன். “

   நானெல்லாம் அப்படி கிடையாது. ம்மா.. “

   பொய் சொல்லாதிங்க.. ” அவனின் அருகில் சென்று மெதுவாக.. ” இப்ப நீங்க போட்டுயிருப்பது கூட தனு சட்டைதானே?.. ” புன்னகையுடன் கேட்க..

   சற்று அதிக குரலில்.. ” அது உனக்கு எப்படி தெரியும்?.. ”

     புன்னகையுடன் வேந்தனை பார்க்க.. திலகனும் வேந்தனை பார்க்க.. வேந்தன் அரசி என்ன கூறியிருப்பாள் என்று உணர்ந்து.. ” டேய்.. நான் சொல்லடா. “

   புன்னகையுடன்.. ” நான் தனுவோட!.. பிறந்தநாள் போட்டோவில் பார்த்தேன். “

    ம்ம்.. இவ்வளவு நேரம் நீ சொல்லிதை கேட்ட பிறகும் நானெல்லாம் கேட்பேன். இனிமே அவன் முகத்தை தவிர வேறு எங்கேயும் என் கண்ணு போகாது. போதுமா. நான் மட்டும் இல்ல.. இவங்களும் சேர்த்துதான். சரிதானே டா.. ” என்று அருகில் இருப்பவர்களை பார்க்க.. அவர்களும்ம்.. ” என கூறினார்கள்.

   அண்ணா அந்த முகம்..” முடிப்பதற்குள்

   ம்.. புரியுது.. நீ மட்டும்தான் அவன் முகத்தை ரொம்ப நேரம் பார்க்கனும். அதானே சொல்ல வந்த. ”

   ம்.. ” என்று புன்னகையுடன் கூறி.. பின்வசுந்தரா.. நீங்க கேட்ட ரீசன் சொல்லிட்டேன். உங்களுக்கு இந்த விளக்கம் போதும்மா?.. 

    அவளிற்கு ஓரளவிற்கு புரிந்தது. என்ன சொல்வதுதான் தெரியவில்லை?.. அவர்கள் கூறுவது அவரின் சொந்த கருத்துதான். அவள் தன் அண்ணாவும் இவ்வளவு நேரம்.. அவர்களின் கருத்துக்கு எதுவும் கூறாமல் இருப்பதில் இருந்தே.. அண்ணாவின் விருப்பமும் இதுவாக தான் இருக்கும். இல்லை அவரின் கருத்துக்கு மறுப்பு எப்போதும் கூறப்போவது இல்லை என்று புரிந்தது. ‘

    ம்.. ” அவளிற்கு வேறு எதுவும் கூறத்தோன்றவில்லை.

    ‘ அரசிக்கு.. தான் பேசியது இதுவே அதிகம் என்று தோன்றியது.. தனக்கும், தனுவிற்கும்மான உணர்வை!.. அதுவும் சின்னபெண்ணிடம் வெளிப்படுத்தியில் மகிழ்ச்சி, வருத்தம் இரண்டும் கலந்து இருந்தது. ‘

    சாரி வசுந்தரா.. நீங்க விரும்பி என்னிடம் கேட்டதை என்னால பண்ணமுடியல. ஆனா உங்க அண்ணா.. நீங்க இப்ப போட விரும்பிய உடைய கண்டிப்பா போடுவதற்கு இந்நேரம் ஏற்பாடு பண்ணியிருப்பாங்க. ” என்று கூறி..தன்னவனை பார்க்க..

   முயல்குட்டி.. முயல்குட்டி எப்படி கண்டுபிடிச்சுங்க?.. வேந்தா. உன் நிலைமை ரொம்ப கஷ்டம். ‘ தன்னை நினைத்து பரிதாபம் கொண்டு.. பின்… ” ம்.. இன்னும் முப்பது நிமிடத்தில் இல்ல நாற்பத்தைந்து நிமிடத்தில் தைத்து வந்துவிடும். அரசி. ”

   ம்.. தனு!.. ”

    சரி வசும்மா.. நீ போய் யோகா அக்காவோட, வினோவோட இரு.. குழந்தைங்க கிளம்ப.. உதவி பண்ணு. “

   ம்.. ” என்று கூறி அவள் தன் அக்கா இருந்த அறைக்கு செல்லும் போதே.. அண்ணண் தன்னிடம் எதுவும் பேசவும்.. தன்முன்னால் அண்ணியிடம் பேசவும் விரும்பவில்லை என்று புரிந்தது.

    அமைதியாக செல்லும் அவளை கமலேஷ், வேந்தனுக்கும் கவலை தான். ஆனால் என்ன செய்ய?.. அவள் எழிலரசியிடம் நடந்துக் கொண்டவிதம் முற்றிலும் சரியில்லை. அதனால் இருவருக்கும் தான் மனவருத்தம். கமலேஷ் வசுந்தரவுடன் சென்றுவிட்டான்.

    யோசனை, வருத்தமுகத்துடன்.. வெறும் கையுடன் உள்ளே வந்து கட்டியில் அமர்ந்த வசுந்தராவைபார்த்து.. அங்குயிருந்த அனைத்து இளம் பெண்களும்.. பின் தாங்கள் வந்த பிறகு நடந்தையை அறிய தன் தங்கையிடம்..

   என்ன வசு அண்ணிக்கிட்ட டிரஸ் வாங்கிட்ட போல!.. “

   

   

   

    

   

   

   

  

   

   

   

   

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!