Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 15. 2

 

 

நாம் 15 ( 2)

           



Advertisement

    வினோவை முறைத்த வசு.. ஆனால் தன் ஆதங்கத்தை யாரிடமாவது கூற வேண்டுமே..  ” அக்கா.. அவங்க அந்த டிரஸை அண்ணா.. மனைவியா நினைத்து வாங்கி கொடுத்தா!.. அதனால் கொடுக்கவே மாட்டேன் சொல்லிட்டாங்க. இப்ப மட்டும் இல்ல எப்பவுமே அண்ணா அவங்களுக்குனு!.. வாங்கி கொடுத்த சின்ன பொருளா இருந்தாகூட.. யாருக்கும் கொடுக்கமாட்டேன் சொல்லிட்டாங்க. “

    ” அவங்க சொன்னதுக்கு அண்ணாவும் அமைதியா இருந்தாங்களா. அண்ணா நீங்க சொல்வதற்கு ஒத்துக்க மாட்டாங்கனு!.. நான் நினைத்தை சொல்லி.. நானாவது உங்க அண்ணா வாங்கிக் கொடுத்ததான் கொடுக்கமாட்டேன் சொல்லுறேன்.. ஆனா உங்க அண்ணா எனக்கு யாருமே வாங்கிக் கொடுக்க விடமாங்கனு சொல்லுறாங்க அக்கா. அதை கேட்டு அண்ணா ஆமாம்னு சொல்லுறாங்க க்கா. “

    அவள் தன் அக்கா, அண்ணியை பார்த்து.. ” நீங்க எல்லாம் இப்படி நினைப்பிங்களா என்ன?.. நானும் உங்களிடம் எனக்கு விருப்பமானதையும்.. நீங்களும் மாற்றி போடுவிங்க. இல்ல மாமா, அண்ணாவெல்லாம் உங்களிடம் போடக்கூடாது.. கொடுக்கக் கூடாதுனு சொல்லுவாங்க என்ன?.. “

Advertisement

    அவர்கள் வசு கூறுவதையும், கேட்பதையும் கேட்டு.. யோகாம்.. அப்படியெல்லாம் நாங்க நினைத்ததும் இல்ல.. மாமா எதுவும் சொன்னதும் இல்ல வசு. ஆனா எழில் சொல்வது எனக்கு புதுசாதான் இருக்கு. “

Advertisement

    யோகி.. நீ எதுவும் தப்பா எடுத்துக்காத.. அவ அப்படிதான் கொஞ்சம் பிடிவாதம்.. தான் நினைப்பதை அப்படியே சொல்லிவிடுவா. அவ சொல்லற எல்லாவற்றிக்கும் எப்போதும் சித்தப்பா, இன்பா சப்போட் பண்ணுவாங்க. இப்ப உங்க தம்பி இரண்டு பேருக்கும் மேல இருப்பாங்க போல. ஆனா அவ பண்ணுவது யாருக்கும் பாதிப்பு இருக்காது. நான் எழிலிடம் சொல்லி புரிய வைக்கிறேன். ” எனக் கூறிக்கொண்டு இருக்கும் போது

    ‘ இங்கு இருக்கும் பெண்களின் கணவர்கள் வருவதை பார்த்து பேச்சை நிறுத்திவிட்டனர். வந்தவர்கள் அனைவரையும் பார்க்க.. சிலர் நிகழ்ச்சிக்கு கிளம்பியும், சிலர் கிளம்பாமல் அதே சமயம் அந்த இடமே மிகவும் அமைதியாகவும் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று நடந்துயிருக்கிறது?. என்று அறையின் அமைதி கூறியது ‘

    இளமதியின் கணவர் அருள்நிதி.. தன் மனைவிடம் சைகையால்என்னாச்சு?.. ‘ எனக் கேட்க.. மெல்லிய தலையாட்டல் மூலம்ஒன்றும் இல்லைஎனக் கூற

Advertisement

    இதனை கவனித்த வினோவின் கணவர்.. பெண்களுக்குள் ஏதோ நடந்துயிருக்கிறது.. அதுவும் தாங்கள் வரும் போதுநான் எழிலிடம் சொல்லி புரியவைக்கிறேன். ‘ என்ற வரி  நாதனின் காதில் விழ..

    என்னாச்சு?.. எழில் மூலம் என்ன பிரச்சனை ?.. ” என பெண்களை பார்த்து கேட்க.

   பெண்கள் சிலர்.. ” ஒன்னும் பிரச்சனை இல்லையே.. ” எனவும்.. சிலர்.. ” அதுவந்து மாமா, அண்ணா.. ” குரல்கள் வர..

   ஆண்கள்.. பெண்கள் ஒவ்வொருவரின் முகபாவனையை பார்த்து சிரிப்புதான் வந்தது.

    விஸ்வநாதன் சிரிப்புடனே.. ” அப்ப பிரச்சனை நடந்துயிருக்கு. யாராவது ஒருத்தர் சொல்லுங்க. ”

    அவர்கள் பெண்கள் அனைவரும் குழப்பத்தில் இருப்பதாலும்.. வசுவிற்கு தங்களைவிட.. இவர்கள்மூலம் தான் சரியான விடை மற்றும் தெளிவு கிடைக்கும் என்பதால்.. அங்கு இவ்வளவு நேரம் உடன் இருந்த கமலேஷ், வினோவும் நடந்ததை கூற..

   அதான் ஆர்த்தி அண்ணி எங்களை சமாதானபடுத்த.. எழிலிடம் இப்படி பேச.. நடந்துக் கொள்ளக்கூடாதுனு சொல்லி புரிய வைக்கிறேன் சொல்லிட்டு இருந்தாங்க. “

    விஸ்வா அனைவரையும் பார்த்து.. ” எழிலரசி அவங்க குணங்களை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு. இதில் எழில் மேல என்ன தப்பு இருக்கு?. எழில்.. வேந்தன் என்ன நினைத்து உடை வாங்கியிருப்பான் என்பதை சரியாக கணித்து.. வேந்தன் வாங்கிக் கொடுத்த உடையை தான் யாருக்கும் தரமாட்டேன் சொல்லியிருக்காங்க. நீங்க என்னமோ?.. வேந்தனை எதுவும்!.. யாருக்கும்?.. வாங்கி கொடுக்ககூடாது சொன்ன மாதிரி இல்ல.. எழிலிடம் சொல்லி புரிய வைக்கிறேன் சொல்லுறிங்க. “

   வசு சற்று கோபத்துடன்.. ” அப்ப நான் கேட்டதுதான் தப்பு.. அவங்க சொன்னதில் தப்பு எதுவும் இல்லனு சொல்லவரிங்களா. மாமா. “

   ஆமாம்

   அப்படினா நீங்களும் அக்காவிற்கு வாங்கி கொடுக்கும் உடையை ஸ்பெஷல்லா நினைத்துதான் வாங்கி கொடுப்பிங்க.. அதை நாங்க போட்டா உங்களுக்கு பிடிக்காதா?.. “

     விஸ்வா மற்ற ஆண்களை பார்க்க.. புன்னகை முகத்துடன் சின்ன பொண்ணு என்னவெல்லாம் கேட்குறா பாரு என வசுவை பார்த்தனர்.

   வசும்மா நீ சின்ன.. “

   இனிமே யாராவது என்னை சின்ன பொண்ணு சொன்னிங்க. அவ்வளவுதான் பார்த்துக்கோங்க. அவங்க சின்ன பொண்ணுதான் முதலில் சொல்லாமா.. நான் கண்டிப்பா கூறவேண்டும் என கேட்ட பின்னாடி.. சாரு,  அவங்க தங்கைய உள்ள அனுப்பிட்டு.. ரகசியம் பேசுவது போல என்னிடம் பேசினாங்க. ”

    சற்று கடினகுரலில்.. ” இங்க பாரு வசுந்தரா.. படிக்கும் பெண், ஆண்கள்.. எதை தெரிந்துக்கொள்ள வேண்டும், கூடாதுனு எழிலுக்கு நல்லாவே தெரிந்துயிருக்கு. அதனாலதான் அவங்க இரண்டு பேரையும்  எழில் அனுப்பியிருக்காங்க. “

    ” பிறகு.. எழில் உடை விஷயத்தில் உன்னிடம் நடத்துக் கொண்ட முறை தப்பே இல்ல. எல்லா ஆண்களுக்கும்.. தன் மனைவிக்குனு வாங்கி கொடுக்கும் உடை ஸ்பெஷல்லா நினைத்துதான் வாங்குவாங்க. சிலர் பெண்கள் சாதாரணமாகவே உடைய மாற்றி போடமாட்டாங்க. ஆனா நம்ம குடும்பத்தில் அப்படி இல்ல.. மாற்றி போடுவிங்க. இது உங்க விருப்பம்.. அது எங்களுக்கும் தவறா தோனல.. அதனால யாரும் இன்று வரைக்கும்!.. எதுவும் சொன்னது கிடையாது. “

   ” மற்றவர்கள் எப்படினு தெரியாது. ஆனா நான்.. எழில், வேந்தன் மாதிரி வெளிப்படையா சொன்னது இல்ல. நான் வினோவிற்கு வாங்கி கொடுத்த உடையை.. அவ புதுசா போடும்போது.. மறக்காம வினோவோட.. என் ஞாபகத்திற்கு, ஆசைக்கு போட்டோ எடுத்துக் வைத்துக் கொள்வேன். அதையே வேறு யாரவது போட்டா.. ஆரம்பத்தில் பின்னாடி இருந்து பார்க்கும் போது.. வினோவா இல்ல வேற யாரோவா?.. என பார்க்கவே கூச்சம்மா இருக்கும். பிறகு போகபோக.. ”

    புன்னகையுடன்அதனால வினோ.. புதுசா போடும் அன்றைக்கு மட்டும் நம்ம பொண்ணாட்டி போட்டுயிருக்காடானு.. நல்லா பார்த்துப்பேன். அப்புறம் எதுக்காடா வம்பு என்று.. அந்த உடையவே மறந்து விடுவேன். ” எனக் கூறி வினோவை பார்க்க அவள் முறைத்துக் கொண்டுயிருந்தாள்.

      விஸ்வா மற்ற ஆண்களை பார்த்து.. ” எனக்கு யாராவது சப்போர்ட்டுக்கு வருவீங்களா?.. “

     அருள்நிதி புன்னகையுடன்.. ” எதுக்கு?.. ஏன் விஸ்வா?.. நாங்களே தேடி போய் தலைய கொடுக்க. எங்களுக்கு உங்க அளவுக்கு அவ்வளவு எல்லாம் தைரியம் இல்லாப்பா!.. “

    இவர்களின் பேச்சை கவனித்த கார்த்திக்.. விஸ்வாவை அழுத்தமான பார்வை ஒன்றை செலுத்த.. சிரித்த விஸ்வா மற்றும் மற்றவர்களும் அமைதியாகி விட்டனர்.பின் வசுந்தராவை பார்த்து.. ” என்னை பொறுத்த வரைக்கு.. எழிலரசியும், வேந்தனும் நீ கேட்டதற்கு.. உன்னிடம்பதிலோ.. இல்ல ரீசனும் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. ” 

    ” எழில் உன்கிட்ட.. வேந்தன் உடனே உனக்கு பிடித்த உடையை.. அதுவும் தைத்தும் உடனே கிடைக்கும் என்றும்.. இந்த உடை இது எங்களின் தனிப்பட்ட விஷயம் என தன்மையா!.. கூறியபின்பும்.. ” 

    ” நீ எழிலிடம்.. அண்ணா வாங்கி கொடுத்த உடை வேண்டும். அண்ணாக்கு யார் முக்கியம்?.. என்று ஒரு பெரிய பிரச்சனை வரக்கூடிய கேள்விய கேட்டுயிருக்க. எழில்.. ஏதோ!.. அதை நல்லவிதமா எடுத்துக் கொண்டதினாளையோ.. இல்ல அவங்களுக்கு இந்த மாதிரி பிரித்து பேசுவது பிடிக்காது என்பதால் நீ நடந்துக் கொண்டது சாதாரண விஷயமா போச்சு. அதே சமயம் வேந்தனை பேசவிடமாலும்.. இன்னும் பிரச்சனையை அதிகம் வராமால் பார்த்துயிருக்காங்க. ”

    இதமட்டும் நல்லா புரிந்துக்கொள்.. மற்ற உறவுகளைவிட.. கணவன், மனைவிக்கு உள்ள சில விஷயங்களில் ரகசியம்.. ரகசியம்மா இருந்தாதான் அது அழகு. சில பேருக்கு தானா சில விஷயங்கள் வரும்.. அது எழில், வேந்தனுக்கு இருக்கு. சில பேருக்கு வரவில்லை என்றாலும்.. அதிலும் சிறப்பு இருக்கும். யாரும் யாருக்கும் குறைந்தவங்க இல்ல.. ” பெண்களை பார்த்துக்கூற..

   அந்த ரகசியத்தையும் மீறி உன்னிடம் எழில் சொல்லியிருக்காங்கனா!.. அதுக்கு ஒரு காரணம் மட்டும்தான்.. அவங்க திருமணம் நிகழ்வு ஆரம்பிக்கும் முதல் நாளே யாருக்கும் மனவருத்தம் இருக்கக்கூடாது என்றுதான். மற்றபடி நீ கேட்ட கேள்விக்கோ?. ரீசனுக்காகவே!.. அவங்க உன்னிடம் சொல்லவில்லை. அத நல்லா நீ புரிந்துக் கொள். ”

   ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண், ஆண் புதுஉறவா வரும்போது.. இந்த மாதிரி சில கருத்து வேறுபாடு ஆரம்பத்தில் வர தான் செய்யும். இனி யார் முக்கியம்?.. என்ற கேள்வி உனக்கு இனி வரக் கூடாது. கோபப்படக்கூடாது. பொறுமையா யோசித்து.. அமைதியாக இருக்கப்பாரு. “

    கமலேஷ் ஒரு பார்வை பார்த்து.. ” அப்படியும் இல்லையா சின்ன விஷயமாக இருந்தால் கமலேஷ்கிட்ட சொல்லு. இல்ல உன்மனசு கஷ்டப்படும் படியாக பெரிய விஷயமாக ஏதாவது நடந்தா?.. கமலேஷ் உடன் வந்து என்னிடம் சொல்லு.. நாங்க உனக்கு புரிய வைக்கிறோம். இல்ல வேந்தனிடம் கூறி அதை சரி செய்துவிடுவேன்.”

   ” இனி உனக்கு கண்டிப்பா ஒன்னு தேவையென்றால்?.. அதை இந்த கடையில், இடத்தில் இருக்கு.. என்று கூறி.. அதை வாங்க இனி பழகிக்கோ. இனி நீயும் சின்ன பொண்ணு இல்லதான்.. இன்னும் 2வருடத்தில் திருமணம் நடக்கப் போகுது. அதனால தேவையில்லாத எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாத. இது உனக்கும் நல்லது இல்ல.. குடும்பத்திற்கும் நல்லது கிடையாது. பார்த்து!.. புரிந்து நடந்துக்கொள். ”

   பின் ஆர்த்தியை பார்த்து.. பின் எல்லோரையும் பார்த்து.. ” ஆர்த்தி நீங்கனு இல்ல யாரும் எழில் கிட்ட இதை பற்றி இனி பேசக் கூடாது. ”

     ” ஆர்த்தி.. எழில் இப்ப எப்படி வெளிப்படையா இருக்காங்களோ!.. அப்படியே இருக்க எழிலரசி தான்.. வேந்தனு மனைவியா வரனும். அவங்க எதையும், யாருக்காவும் மாற்ற வேண்டிய அவசியம் இல்ல. ஏற்கனவே எழில் எல்லாம் புரிந்துதான் நடந்துக் கொள்ளுறாங்க. ஏதாவது மாற்றவேண்டும் எனில் வேந்தனே.. எழிலிடம் சொல்லிவிடுவான்.. அது நல்லது!.. என்றால் கவலையே படாம எழில் அதை ஏற்று மாற்றிக் கொள்ளுவாங்க என்ற நம்பிக்கை இருக்கும். அதனால உங்களுக்கு இனி எழில் பற்றிய கவலை வேண்டாம். “

   புன்னகையுடன்.. ” சரிங்க அண்ணா.. ”

   சரி.. சரி.. குழந்தைகளை எங்களிடம் கொடுத்துவிட்டு.. நீங்க எல்லாம் சீக்கிரம் ரெடியாகுங்க. “

 

    இவ்வாறு இங்கு நடந்துக் கொண்டுயிருந்த அதே நேரத்தில்

    வசுந்தரா சென்றதை பார்த்து பின் சத்யா.. ” எழில் நீ ஏன்னடி வசுந்தராவிடம் பேசுன?.. அண்ணாதான் பேச வந்தாங்கள!.. அவங்களையே பேச செல்லியிருக்க வேண்டியது தானே. “

  ‘  இவ்வாறுதான் மற்றவர்களும் இதைதான் நினைத்தார்கள். எழிலை தவறாக நினைக்கக் கூடும்.. வேந்தன் என்றால் வசு எதுவும் நினைக்கமாட்டாள் என்று.’

    இல்லடி!..  நான் இப்ப வசுந்தாவிடம் பேசினாதான் சரியாக இருக்கும். நான் பேசியதை கேட்டு.. அவங்க என்மேல அவங்களுக்கு வருத்தம் இல்ல கோபம் கூட வர வாய்ப்பு இருக்குதான். அதனாலஇரண்டு பேருக்கும் பாதிப்பு ரொம்ப இல்ல.. எங்களை பார்ப்பர்களும் ரொம்ப கவலை இருக்காது.. இது சாதாரணம்தான் என அதை கடந்து சென்று விடுவார்கள். ஏன்னா?.. எல்லா குடும்பத்திலும் வீட்டிற்கு வரும் புது உறவுகளுடன்.. அவர்கள் பழக.. அவர்களின் குணங்களை புரிந்துக் கொள்ள சிலநாட்கள் இல்ல சில மாதங்கள் கூட எடுக்கும். “

   ” ஆனா.. நான் வசுவிடம் அமைதியா சொன்னதை.. தனுவா இருந்தா?.. அமைதியா சொல்லியிருப்பாங்கனு நினைக்கிற?.. ” அவனை பார்த்து பின்..

   கண்டிப்பா பண்ணியிருக்க மாட்டாங்க. இரண்டே வரில.. நான் சொன்னதையே கொஞ்சம் கோபக் குரலில் கூறியிருப்பாங்க. இப்பயாவது என்மேல மட்டும் மனவருத்தம் இருக்கும்.. ஆனா தனு கோபமா கூறியிருந்தா.. இரண்டு பேர்மேலையும் அவங்களுக்கு கோபம் வரும்.. அதிலும் என்மேல இன்னும் ஜாஸ்தியா.. வெறுப்பும் கூட சேர்ந்து வரும். இவ்வளவு நாள் பாசமா இருந்த அண்ணா.. நான் வந்தவுடன்.. அதுவும் எனக்காக அவங்க மேல கோபமா பேசினா.. அவ்வளவுதான். என் மேலஅவங்களுக்கு எப்பவுமே நல்ல அபிப்ராயம் வராது. “

   சத்யா எழிலரசியின் கையை பிடித்து.. பின் கும்பிடுவது போல காண்பித்து.. பின்.. ” அம்மா தாயே நிப்பாட்டுடி.. நிப்பாட்டு. புரியதுடி.. புரியுது.. அங்க சுத்திஇங்க சுத்தி.. வசுந்தரா அவங்க அண்ணாவ.. அதாவது உன் தனுவ!.. உன்னாலதானு.. யாரும் தப்பா பேசிடக் கூடாது.. இல்ல நினைத்து விடக்கூடாதுனு.. நீ பேசின. அதானே சொல்லவர. “

   எழில் கூறியதை கேட்ட ஆண்கள்.. கதிரவன் தவிர மற்றவர்கள் வசுவை பற்றி தெரியும் ஆகையால் இவ்வாறு நினைக்க வாய்ப்பு அதிகம் என்று நினைத்தவர்கள்… பின் சத்யா சைகை செய்தை பார்த்து.. ஏன்?. என நினைக்க.. பின் பேசியதை கேட்டு அவர்கள் வசுவை மறந்து சிரித்தார்கள். ‘ அரசிம்மாஎன கொஞ்சிக் கொண்டு.. வேந்தன் அரசியின் மிக அருகில் வந்து நின்றான்.

   புன்னகையுடன் தன் மிகஅருகில் நின்ற வேந்தனை பார்த்து.. ” ஆமாம்எனக் கூறினாள்.

   என்னால முடியடா சாமி. ‘ தன் தலையை தடவிவிட்டு.. பின் தன் கையை அவள் அறையை காண்பித்தவாறு.. ” போ.. போடி போய் கிளம்புற வழியபாரு.. போ. “

   புன்னகையுடனே.. தலையை ஆட்டி.. ” ம்.. சரிங்க சத்யா மேடம்எனக் கூறி.. அவள் தன்அறைக்கு செல்ல.. அவளுடனே வேந்தனும் போவதை பார்த்து..

     திலகன்டேய் வேந்தா!.. நீ எங்கடா அங்க போறா. “

     என் டிரஸ்.. அரசிகிட்டதான் இருக்கு. அத வாங்கிவர.. ” என இழுத்துக் கூற..

     நம்பிட்டேன் டா.. ” .. அதவாங்கிட்டு  2நிமிடத்தில் இங்க இருக்கனும். சரியா. “

     இருவரையும் பார்த்த சத்யா.. ” அண்ணா நீங்க 10நிமிடத்தில் வாங்க. நான் யாராவது வந்தா சமாளித்துக் கொள்கிறேன். “

    புன்னகையுடன்ம்… ” கூறிவிட்டு.. தன் அரசியை பார்க்கச் சென்றான்.

    திலகன்.. சத்யாவை பார்த்து.. ” ஏங்க.. இனிமேல் பெரியவங்க எல்லாம் வந்துவிடுவாங்க. இவனை அங்கு பார்த்தா நல்லாயிருக்காது.. அதான் நான் அவனிடம் 2நிமிடம் சொன்னேன். அப்படி சொன்னாலே 20நிமிடம் கழித்துதான் வருவான். நீங்க 10 நிமிடம் சொல்லியிருக்கிங்க. எப்போ வரப்போறானோ!.. “

   அதெல்லாம் அண்ணா சீக்கிரம் வந்து விடுவாங்க. எழில் இருக்க விடமாட்டா.. அது தெரிந்துதான் நான் சொன்னேன். அதுமில்லாம இப்ப எழில்.. வசுந்தராவிடம் பேசியதை நினைத்து கொஞ்சம் அப்சட்டா இருப்பா. இப்ப அண்ணா போய் அவளிடம் பேசி மூட மாற்றிவாடுவாங்க. அதனாலையும்.. ” 

   ” இன்னும் கொஞ்சம் நேரம் தாங்க.. அவ கூட இருக்க முடியும். நாளைக்கு அண்ணா சென்னைக்கு போய்விடுவாங்க. போனில் பார்த்தாலும், பேசினாலும்.. கூட இருப்பதுபோல இருக்குமா!.. அதான். உங்க நண்பனுக்கு கொஞ்சமாவது உதவி பண்ணுவோம் என்ற அக்கறை உங்களுக்கு இருக்கா. ”

   புன்னகையுடன்.. ” அதெல்லாம் புரிந்துதாங்க.. அவனை போக சொன்னேன். ஆனா என்னைய பார்த்து நீங்க!.. என்ன கேள்வி கேட்டிங்க?. நண்பனுக்கு உதவி பண்ணமாட்டேன் சொல்லிட்டிங்க. உள்ள போறானே அவனை சொல்லுங்க. பத்து பொருத்தமும் அவனுக்கு தான் பக்காவா பொருந்தும். ”

    திலகன் தன் அருகில் இருந்த வினோத்தை இழுத்து.. ” இதோ இவனும் ஒரு பொண்ணை நாலுவருடமா காதலித்துக் கொண்டுயிருக்கான். இரண்டு வருடமா பாருங்க இவன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ண கேட்கிறான். ஆனா அந்த பொண்ணு!.. உள்ள போறானே அந்த நல்லவன்!.. பேச்சை கேட்டு இப்ப முடியாது இன்னும் ஒரு வருடம் ஆகும் சொல்லிருச்சு. பாவம் பையன். நான் தான் இவனுக்கு இதோ கொஞ்சம் நேரம் முன்னாடி வரைக்கும் உதவி பண்ணுறேன். அப்படியிருக்க என்னனய பார்த்து.. எப்படி இந்த கேள்வி கேட்டிங்க?.. ”

    புன்னகையுடன்.. ” ம்.. தெரியாம கேட்டுட்டேன். ”

    வினோத்திடம்.. ” யாருங்க அந்த பொண்ணு?.. உங்களை அண்ணாவுடன் சோர்ந்து அலையவிடுவது. “

    வினோத் புன்னகையுடன்.. ” என் மச்சானோட தங்கச்சி தீபிகா தான்தாங்க. ” என திலகன் மீது கை போட்டு கூறினான்.

    உடன் கதிர், சத்யாஎன்ன?.. இவர் தங்கச்சியா?.. ” ஒரு சேர கேட்க.

    திலகன்எதுக்கு கத்துறிங்க?.. அமைதி.. அமைதி. ஏங்க இரண்டு பேரும் விரும்புவது.. இதுநாள் வரைக்கும்.. எங்க நாலுபேர தவிர.. யாருக்கும் தெரியாதுங்க. நீங்க இரண்டுபேரும் தெரிந்த மாதிரி வேந்தன் முன்பு காட்டிக்காதிங்க. அவ்வளவுதான் நான். பேசியே என்னைய ஒரு வழியாக்கிவிடுவான். “

    தப்பா எடுத்துகாதிங்க.. ஏன்னா?.. உங்க தங்கச்சி அவர் சொல்லறபடி கேட்டு.. இப்ப கல்யாணம் வேண்டாம்.. அதுவும் உங்க இரண்டு பேரோட நெருங்கிய நண்பரையே வேண்டாம் சொல்லிட்டாங்க. 

   பெரிய காரணம் ஒன்னும் இல்லங்க. அவ இப்ப ME இரண்டாவது வருடம் படிக்கிறா. அவ BE முடித்தவுடன் 1 வருடம் சாப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்கு போனா. பிறகுதான் அவளுக்கு திருமணம் பண்ணலாம் என நான் நினைத்தப்ப.. தீபிகாவும் இவன மாதிரி கல்லூரியில் பேராசிரியராக ஆகனும் விருப்பம்.. அதுதான் இரண்டுபேரும் வேலைக்கு போக சரியா இருக்கும் எனக் கூறினா. அப்ப வேந்தன் தான் அப்படினா ME முடித்துவிடு. பிறகு கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம். கல்யாணம் பண்ணி.. படித்தா அது சரியாக இருக்காதுனு சொல்லிவிட்டான். பிறகு எந்த வேலைக்கு போனா சரியாக இருக்கும் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்து.. இப்ப படிக்கிறா. “

    ” படிப்பு முடியும் வரைக்கும் நீங்க விரும்பவது!.. நம்ம நாலு பேர தவிர யாருக்கும் தெரியவேண்டாம். வினோத் எங்க வீட்டுக்கு  சாதாரணமா வந்துபோயிட்டு இருக்க முடியாது என சொல்லிட்டான். அதை தான் தீபிகாவும் கேட்டு அப்படியே நடக்குறா. அவ கோவையில் படித்துக்கொண்டே.. ஒரு சின்ன கம்பெனியில் வேலைபார்க்கிறா. அவ 4 மாதத்திற்கு பிறகு இன்னைக்கு காலையில் அதுவும் இன்னைக்கு.. இந்த நிகழ்ச்சிக்கு ஆகாதான் வந்தா. காலையில் கிளம்பிட்டா.. அப்ப சொந்தகாரங்க ஒருவர் கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்துட்டுங்க. அதனால அம்மா கூட இருந்தா.. பிறகு மாலைனு மாற்றவும்.. வரல. இவன் தொலைதாங்கமா.. இப்ப வீட்டில் இருந்து கிளம்பிட்டா. அம்மாவ நான் தான் போய் பிறகு கூட்டு வரனும். “

    ம்.. படித்து முடித்த பிறகு கல்யாணம் என்று.. அண்ணா சொல்லி.. தீபகா அதை பின்பற்றுவது சரிந்தாங்க. தேவையில்லாத பிரச்சனையை தவிர்க்கலாம். “

   திலகன்என்ன பிரச்சனைங்க வந்துவிடும். நாங்க நண்பர்கள் கூட எல்லாத்தையும் சமாளித்துக் கொள்ள மாட்டோமா?. “

   நீங்க நண்பர்களாக இருப்பதுதான் சில சமயம் பிரச்சனை. உங்க நண்பரும், தங்கச்சியும் கல்யாணம் பண்ணி.. பிறகு தங்கச்சி படித்தா?.. அவங்க படிப்பாங்களா?.. இல்ல குடும்பத்தை பார்ப்பாங்களா. அவங்க படித்து முடிக்கும் வரை.. குழந்தை பற்றி யோசிக்காம இருக்கனும். ஆனா வீட்டில் இருப்பவர்கள் விடுவாங்களா?.. மாட்டாங்க. கல்யாணம் ஆன 6 மாதத்தில் இருந்தே கேட்பாங்க. இதுனால உங்க தங்கச்சிக்கு மன உலைச்சல்தான் அதிகமாகி இரண்டையும் பார்த்துக்கொள்ள முடியமா இருக்கும். நீங்க நண்பர்களா இருப்பதால் யார்யார் மீதும் குறையும் சொல்ல முடியாது. அண்ணா பண்ணதுதான் சரி. “

   புன்னகையுடன்.. ” நீங்க சொன்னதில் சிலது ஏற்கனவே புரிந்துக் கொண்டுதாங்க சரினு சொன்னோம். இப்ப நீங்க சொல்லி சிலது ஏன் வேந்தன்?.. வேண்டாம் என கூறினான் என்று நல்லாவே புரியதுங்க.. ம்.. ரொம்ப நன்றிங்க!.. வேந்தன் கொள்கை பரப்பு செயலாளர்றே. “

    உடன் இருந்த இருவரும்.. திலகன் கூறியதை அமைதியாக ஆமோதித்தவர்கள்.. கடைசி வரியைகேட்டு சிரிக்க..

   என்ன கொழுப்பா.. இருங்க இருங்க அண்ணா வந்ததும்.. உங்கள மாட்டிவிடுறேன். “

   என்ன?.. உங்க அண்ணாக்கு நாங்க அப்படியே பயந்துவிடுவோமா!.. “

   அதையும் பார்க்கதானே போறேன். “

    ‘ இவர்களின் பேச்சை கேட்ட மற்ற இருவர்.. என்னடா நடக்குது இங்க.. புது ஜோடி ஒன்னு உருவாகிவிட்டதோ!.. என்று பார்த்தனர். ‘

   ‘ யாரை பற்றி பேசுகிறார்களோ.. அவன் தன் அரசியின் அறையின் கதவை பாதி திறந்த நிலையில்நின்று.. ‘

    ‘ இடைவரை உள்ள அடர்கூந்தலில்!..  சற்று வாடிய மல்லிகை.. அவள் முதுகை மறைத்திருக்க.. கூந்தலின் அடிப்பகுதிக்கு மேலே பேண்ட் அடக்கியிருந்ததால்.. அடர்நிற மெல்லிய தாவணியால்.. அவளின் நிறத்தை பளிச்சென்று காட்டி.. பாதி தெரிந்தும் தெரியாமலும் இருந்த தன்னவளின் பின்புறத்தை ரசித்து பார்த்தவாறு இருந்தவனை.. ‘

    ‘ தன்னை தன்னவன் பார்க்கிறானோ?.. என்ற  உணர்வில் திரும்ப.. அந்த கள்ளன் தான் தன்னை பார்த்தவாறே.. தான் திரும்பியது கூட தெரியாத அளவிற்கு கனவுலத்தில் நின்றுயிருந்தான். அவனின் பார்வையில் இருந்த அவள்மீதான மயக்கம்.. அவளை ஏதோ செய்ய.. அதை தாங்கமுடியாமல்.. ‘

    தனு.. தனுஎன்ற அழைப்பு அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.. தன்னவளின் அருகில் வரவர.. இன்னும் தன்னவளை ரசிக்கத்தூண்டியது.. அந்த யாரும் இல்லா தனியறை.

    தலை முதல் காலை வரை தன் பார்வையால் சிவந்துயிருந்தவளை பார்த்தவன்.. அவளின் காதில்.. ” முயல்குட்டி.. நான் உன்னிடம் பேச வேண்டும் வந்துயிருக்கேன்.. என்னைய வேறு ஏதாவது செய்ய வைத்துவிடாத. தயவுசெய்து நார்மலா ஆகு என் செல்ல முயல்குட்டி. “

    எப்பவுமே இவன் பண்றதெல்லாம் பண்ணிட்டு.. நாணத்தால் சிவந்தவள்.. கோபத்தால் சிவந்து.. ” என்ன?. என்ன சொன்னிங்க?.. பேச வந்திங்களா?.. அப்படினா.. பேச வந்தவரு நேரா.. பேச வந்துயிருக்கனும்அத பண்ணாமா?.. நீ.. நீங்கஅவள் அவனை திட்டிக் கொண்டே.. அவனின் முன்னாலே வர.. அவன் பின்னாலே சென்றவன்.. ஊஞ்சலில் தடுமாறி அவன் அமர..

   அவளை சட்டென்று இழுத்து.. அவனின் மடியில்.. தன் கைவளைவில் அமரவைத்து.. “நா.. நான் என்ன பண்ணுனேன்?.. “

   எதிர்பாராமல்.. தன்னவனின் இழுப்பிலும்.. கையின் அணைவுடன்.. மடியில் அமர்ந்தவளோ.. எதுவும் கூறத்தோன்றவில்லை.. சற்றுமுன் அறையினுள் தான் மட்டும் வந்தபோது.. அவள் ஏங்கிய அணைப்பானது.. எதிர்பாராமல் கிடைக்கவும்.. சற்று முன் இருந்த தன்னவனின் பார்வை மயக்கம் மறந்து.. அந்த அணைப்பு வேண்டிய ஏக்கத்திற்கான காரணம் நினைவு வந்தது.. இவ்வளவு நேரம் மலர்ந்துயிருந்த முகம்.. சற்றென்று வாடி.. அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். ‘

    அவனே அவன் செய்த செயலை எதிர்பார்க்கவில்லை.. சில மணிநேரங்களாக அவளை அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.  சில அற்புதமான சூழ்நிலை.. மனவருத்தம் தந்த சூழ்நிலையில் அமைந்தபோது.. தான் எதிர்பார்த்த அணைப்பு.. எதிர்பாராமல் கிடைக்கவும்.. அவளை  அமரவைத்து அவளையே பார்த்திருந்தவன்.. இவ்வளவு நேரம் மலர்ந்துயிருந்த முகம்.. சற்றென்று வாடி.. அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாவளை.. ஏன் என்று?. புரிந்தால்.. அவளை சற்று இறுக்கப்பற்றி.. தன்னுள் இன்னும் புகுத்திக் கொண்டான். இறுகிய அணைப்பில் இருவரும் இருநிமிடம் பேசாமல் இருக்க.. இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்.. என நினைத்தார்கள். ‘

    பின்.. அணைப்பில் இருந்தவாறே.. ” தனு!.. தனு!.. “

   ம்.. சொல்லு முயல்குட்டி. “

   தனு.. நான் இன்னும் இப்ப போட எதுவும் எடுத்து வைக்கல.. எல்லாம் எடுத்து வைத்து..  சேலை கட்டி.. பிறகு ரெடியாகனும்..  நேரம் கம்மிய இருக்கு. அதனால..”

    புன்னகையுடன்.. பொறுமையாக…” அதுக்கு.. நான் உனக்கு உதவி பண்ண வேண்டுமா முயல்குட்டி?.. ஆனா எனக்கு சேலை கட்டிவிட தெரியாதே?.. உனக்கு சேலையில் உதவி பண்ணவேறு ஒன்னுதான் தெரியும்.. அதுவும் இப்ப பண்ணமுடியாதே. என்ன பண்ணலாம்?.. ”  புன்னகையுடன் தன் முயல்குட்டியின் பதிலுக்கு ஒருசில நொடிகள்!.. காத்துக் கொண்டுயிருக்கும் போது.. அவன் ஒன்றை தன் முயல்குட்டியின் உடலில் இருந்து உணர்ந்தான்.

   ‘ தான் கூறிக்கொண்டுயிருக்கும் போதே.. தனு பதில் அளிப்பதை கவனித்தவள்.. அவன் பதில் கூறக்கூற இறுகிய அணைப்பு வேறு இன்னும் இறுக!.. அவனின் மூச்சுகாற்று அவளின் கழுத்து வளைவில் உணரும் போது.. அவன் கூறிய அர்த்தம் சில நொடி கழித்து புரிய.. அனைத்தும் சேர்ந்து.. ஒரு நொடி அவள் நடுங்கி.. உடல் முழுவதும் உள்ள சிறு முடிகள் சிலிர்த்து எழும்ப!.. ‘

    எழில் நீ ரொம்ப நல்ல பொண்ணு.. இவன் கூட இருந்தா அவ்வளவுதான் என்று மனது ஒன்று நினைக்க.. மனதை பற்றி கவலைப்படாமல்.. அவளின் உதடு சட்டென்று அவனின் கன்னத்தில் அழுத்த முத்தம் ஒன்றை வழங்கிவிட்டு.. அவனிடம் இருந்து எழுந்து முன்பு தான் நின்றுயிருந்த இடத்திலேயே.. உடல் முழுவதும் தன்னவனை நிரப்பிக் கொண்டு வந்து நின்றாள். ‘

    வேந்தனிற்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை.. ‘ என்ன பண்ணிணா முயல்குட்டி?..  சிலநொடிமுன்.. அவளின் உடலில் சிறு நடுக்கத்தை உணர்த்தான்.. பின் அவளின் கையை பார்த்தபோது.. அவளின் முடிகள் சிலிர்த்துயிருந்தது.. ரசிப்புடன் அவளை பார்க்க திரும்ப நினைக்கையில்.. தன் கன்னமானது தன் டிரிம் செய்யப்பட்ட முடிகளையும் தாண்டி.. இளஞ்சூடான அழுத்தமான, ஆழமான, உணர்வுகள் அனைத்தையும் வெளிப்படுத்திய முத்தத்தை உணர்ந்தது. தான் அதனை முழுவதும் தான் உணரும் முன்.. பின் சட்டென்று தன் மடியில் தன்னுள் அடங்கியிருந்த தன் முயல்குட்டி துள்ளிக் குதித்து ஒடி.. முன்பு நின்ற இடத்தில் மூச்சு வாங்கி நின்றாள். ‘

    ‘ ஊஞ்சலில் இருந்து அவளை பார்த்தவனுக்கு.. திருப்பவும்  இழுத்து அவளின் முத்தத்திற்கு.. பதில் அளிக்க விரும்பிய மனதை.. நேரம் ஆகிவிட்டதன்.. பொருட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு.. ‘

    புன்னகையுடன் அவளின் மிக அருகில் காதில்.. ” நீ எனக்கு கொடுத்தற்கான பதில்.. இன்னைக்கு உள்ள கண்டிப்பா திரும்ப உனக்கு கிடைக்கும் முயல்குட்டி. இப்ப எதை பற்றியும் நினைக்காம.. என் அரசிமாவா  ரெடியாகி என்னை கூப்பிடு. ” அவள் பதில் அளிக்கமாட்டாள் என தெரியும் ஆகையால்.. கதவின் அருகில் வந்தவன்.. பின்திருப்பி..

   சற்று இறங்கிய குரலில்.. ” அரசி.. ”

   தன்னவனின் தன்னை அழைக்கும் குரலில் இருந்த மாற்றத்தை கேட்டு.. பதட்டத்துடன் திரும்பி அவனை பார்க்க..

   மெல்லிய புன்னகையுடன்.. ” இப்ப மனசு லேசா ஆகிடுச்சா?.. ரிலாக்ஸ் ஆகிட்ட தானே?.. “

    தான் வருத்துடன் இருந்ததை எந்நிலையிலும் மறக்காமல்.. கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள நினைக்கும்.. தன்னவனின் நினைத்து உள்ளம் மகிழ்ந்தாள்.. புன்னகையுடன்.. ” ம்.. என் தனு.. இறுக்கி அணைத்த பிறகு.. நான் ரிலாக்ஸ் ஆகாம இருப்பனா!.. என்ன உம்மா தான் மிஸ்ஸிங். ” என ஏக்கத்துடன் கூற..

   அவளின் பதில் நிம்மதியடைந்து.. புன்னகையுடன்.. ” முயல்குட்டி.. மிஸ்ஸாகம.. கண்டிப்பா என் மிஸ்ஸக்கு கொடுப்பேன். ஆனா அதுக்கு என் பொண்டாட்டி  காத்துயிருக்க வேண்டும். அவசரப்படகூடாது. ”

   நான் அவசரப்படுறனா!.. முறைப்பும், புன்னகையுடன் அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்து…. ” ம்.. காத்துயிருக்கேன். “

(waltmassey.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!