Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 19. 3

 

நாம் 19 (3)

  

     வேந்தன் தன்னவளிடம்  தன் காதலையும், உன்னுடன் நான் என்றும் இருப்பேன்!.. என்று.. தன்னை அவளிடம் கொடுத்த இனிமையான தருணங்கள், அதில் தாங்கள் பரிமாறிக் கொண்ட பல வருட ஞாபகங்கள்,  சிறுசிறு தொடுகையிலும் உண்டான மாற்றங்கள்,  அவள் கன்னத்தின் மென்மையை உணர்ந்த பொழுதுகள், அவளின் இதழ்சுவையை அறிந்த நிமிடங்கள்.. என பலபல சேமித்த நினைவுகளுடனும்.. முயல்குட்டியின்  போன்,  வீடியோகால்,  மெசேஜ்.. வீட்டில் உள்ளவர்களின் அழைப்புகள் என  15 நாட்களை ஒருபக்கம் கடந்துயிருக்க..



Advertisement

    மறுபக்கமாக.. இரு பணியிடங்களிலும் தான் ஏற்றுக்கொண்ட வேலை சீராக சென்றுக் கொண்டுயிருக்க.. நடுவில் வந்த ஞாயிறுக்கிழமை.. தங்களின் நிச்சய உடையை எடுக்க.. தான் மட்டுமே காரில் காஞ்சிபுரத்திற்கு சென்று.. தனக்கு, தன் அரசிக்கு, தன்னவளை இன்னும் தேவதையாக காட்டக்கூடிய பட்டுச்சேலை, இன்னும் அவளுக்கு சிலசேலைகள் எடுத்தான். இரு வீட்டின் பெரிய பெண்மணிகளுக்கு, இருவரின் அம்மாகளுக்கு மட்டும் எடுத்து.. அவர்களுடையதை இரு வீட்டிற்கு தனித்தனியாக அனுப்பி விட்டான். பின்னர் சேலைக்கு தேவையான ஆபரணங்கள் வாங்கியும், பிளவுஸ் டிசைன் செய்யக் கொடுத்தும் என இந்நாட்களில் தான் திட்டமிட்டுயிருந்த படி ஒவ்வொரும் நாளும் வேகமாக சென்றிருந்தது.

    ஆய்வுக்கு பயன்படுத்தும் அறையில்  வேந்தன்..  மற்றொரு TL ஆகாஷ் மற்றும் தங்கள் குழுவின் சில நபர்களுடன்.. தங்களின் குறிப்பட்ட பணிகளை விரைவில் செய்து முடிக்க.. ஒன்றாக வேலை செய்துக் கொண்டுயிருந்தனர்.

     வேந்தன் அறையிலேயே இருக்க.. மற்றவர்கள் காபி பிரேக் எடுத்து வெளியே சென்ற நேரம்.. அவனுக்கு ஒரு மெசேஜ் வந்து. அதனை புன்னகையுடன் கேட்க ஆரம்பித்தவனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி.. அவனின் கண்கள் கலங்கி.. சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை குறைக்கும் வழி தேடிக் கொண்டுயிருந்தவன்.. அந்த அறையில் அப்போது நுழைந்தான் ஆகாஷ்.

Advertisement

    உள் நுழைந்தவன் அவன் உட்கார்ந்துயிருந்த சேர் நோக்கி வர.. அவனை கண்கள் கலங்கியவாறு வேகமாக சென்று கட்டிக்கொண்டான். அவனின் செயலை அதிர்வுடன் பார்த்திருந்தனர் ஆகாஷ், ஆரத்தி, அனு, நிஷா, ராகினி. ‘

Advertisement

    ஆகாஷ்..வேந்தன் தன்னை சட்டென்று அணைக்க.. ஒருநொடி தடுமாறி பின்தான் உணர்ந்தான் வேந்தனின் நடுக்கத்தை.. ” வேந்தன் என்ன ஆச்சு?.. யாருக்கு என்ன பிரச்சனை ?.. ”

    அவனிடம் இருந்து பதில் இல்லை. மற்றவர்களை பார்க்க.. அவர்கள் இருவரையும் பார்த்திருக்க.. ” நீங்க உட்கார்ந்து சொன்ன மாற்றங்கள சரி பண்ணுங்க போங்க. ” என்று அவர்களை பணியை தொடரச்சொன்னான்.

   அவர்கள் தலையசைப்புடன் செல்ல.. வேந்தன் கொஞ்சம் நிதானத்திற்கு வந்து.. நிமர்ந்து ஆகாஷ் முகத்தை பார்த்தான். ” சாரி டா. ஏதோ பதட்டத்தில். ”

Advertisement

   ஆகாஷ் அவனை முறைக்க.. ” யாருக்கு?. என்ன பிரச்சனை?. ” மீண்டும் கேட்க.. ” இரு வரேன்.வேகமாக தன் போனை  எடுத்து.. இரு நபருக்கு அழைத்தான்.

   அவர்கள் அழைப்பை ஏற்ற அடுத்த நொடி.. ” நீங்க அரசிகூட இல்லாம்மா.. அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை பார்க்கிறிங்க?..” கோபமாக, அழுத்தமாக, சற்று குரலை உயர்த்திக் கேட்டான்.

    அறையில் இருந்தவர்கள் இப்படியான பேச்சை வேந்தனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவன் அவர்கள் நுழைந்தவுடன் செய்த செயல் என்ன?. இப்போது பேசும் பேச்சு என்ன?.. இரண்டிலும் ஆடிப்போய் பார்த்தனர். ‘

   இன்பா, சத்யா நீங்க அவள இன்னைக்கு பார்த்துப்பேன் சொன்னீங்க  என்ற காரணத்திற்காக தானே.. அவ என் வாய்ஸ் கேட்டா என்ன எதிர்பார்ப்பா..  இல்ல கூட இருக்க முடியலைனு நான்  பீல் பண்ணுவேனு தான்.. அவளுக்கு கால்கூட பண்ணாம இருக்கேன். நீங்க ஒழுங்கா பாத்துக்காம இருந்து.. என்னிடமே வலிக்குது.. யாரும் கூட இல்லனு சொல்லி அழ வச்சுட்டுடிங்க இல்ல. ”

    இன்னும் 10நிமிடத்தில் இரண்டுபோரும் வீட்டல இருக்கீங்க. அவளுக்கு தெரியாம முதல் வேலையா.. எனக்கு கடைசியா அனுப்பிய மெசேஜ் டெலிட் பண்ணிட்டு.. ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்க. அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க. அவள பார்த்த பிறகு இருக்கு உங்களுக்கு. இப்ப வைக்கிறேன். ” பேசியவுடன் சேரில் அமர்ந்தது தலையை தாங்கி பிடித்தவாறு அமர்ந்துவிட்டான். அவன் தன் முயல்குட்டி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வார்த்தைகள் இன்னும் அவன் காதில் கேட்டுக் கொண்டுயிருந்தது.

    சற்று நிமிடத்திற்கு முன்பு தான் இன்று வீட்டிற்கு சென்றவுடன் தான் போனில் அழைக்க முடியும் என வேந்தன் தன்னவளின் அவளை எண்ணியிருந்தவன்.. முயல்குட்டியின் வாய்ஸ் மெசேஜ் வரவும்.. பிரேக் என்பதால் அவள் குரலையாவது கேட்கலாம் என புன்னகையுடன் காதல் வைத்த நொடி.. அவன் காதில் முதலில் கேட்டது தன்னவளின் அழகையை தான்.. இன்று என்ன நாள்?. என்று அவனுக்கு தெரியும்.. அதனால் கேட்டவுடன் பதட்டம் தொற்றிக் கொள்ள. அவளின் அழுகை அதிகமாகி.. அது ஒருநிமிடம் வரை நீடித்து. ‘

     தனு தனு.. எனக்கு வயிறு ரொம்ப வலிக்குது தனு. என்னால தாங்கவே முடியல. எனக்கு உன்கைய பிடிக்க வேண்டும் போல இருக்கு தனு. அண்ணா வேலையிருக்கு உடனே வரேனு காலையிலேயே போனாங்க.. இன்னும் வரல. அண்ணா, சத்யா போன் எடுக்கல. வீட்டல எல்லோரும் முக்கியமானவர் யாரோ இறந்துவிட்டதா.. அவங்க கண்டிப்பா போகனும், இன்பா இருப்பதால் அங்க போயிருக்காங்க. வீட்டல யாரும் இல்ல தனு. எனக்கு எப்போதும் விட அதிகமா வலியிருக்கா?.. இல்ல யாரும் பக்கத்தில் இல்லாததால் அதிகமா தெரியுதுதா?. தெரியல தனு?. ஆனா தாங்க முடியல தனு. தூக்கமும் வரல?.. எனக்கு உன் ஞாபகம் வேற அதிகமா இருக்கு. எனக்கு நீ பக்கத்தில் வேண்டும் டா.

    நீ சொன்னியே உன் கைய பிடித்துக்கொண்டு.. தோளில் சாய்ந்து இருந்தேன்.. நீ தலைதடவி விட்ட.. நான் பேசிட்டே தூக்கிட்டேனு. அது எனக்கு இப்ப வேண்டும். நான் வலிய மறந்து தூங்கனும்.. என்னைய பார்க்க சீக்கிரம் வாடா தனுமாமா. ” அழுகையுடன் முடிந்திருந்தது.

    வேந்தன் கேட்க கேட்க இன்பா, சத்யாவின் மீது கோபமும்.. அவள் தன்னை எதிர்பார்த்தும்.. அவள் பக்கத்தில் தான் இல்லாத நிலையை எண்ணி தன் மீதே கோபமும், அவள் வலி எப்படி இருக்கும்?.. அவள் வலியை அடக்கினாலும்.. எவ்வாறு துடிப்பாள்?.. அழுவாள்?.. என்று அன்றே உணர்ந்துயிருக்கானே!.. எந்த உரிமை என்று தெரியாமலே.. அவளின் வலியை உணராமல் இருக்க பேசிபேசியே தோளில் சாய்த்து, கைபிடித்து தூங்க வைத்தேன். இப்போது அவள் உரிமையுடன் கை பற்றும் உரிமையாளன் நான்.  ஆனால் என்னால் அவளுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலையில்.. யாரையே எதிர்பார்த்து.. அவர்களை நம்பி விட்டு வந்து.. தன்முயல்குட்டிக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இங்கு இருக்கிறேன். ‘

     இன்னும் தன் மீது கோபமும், இயலாமையும் எண்ணி தன்னை தானே திட்டுக் கொள்வதை தவிர இப்போது ஒன்றும் என்னால் முடியாதே. இந்நிலையை அறவே வெறுத்தான். தான் பேசினால் இன்னும் அழுவா.. நான் என்ன பண்ண?.. என்று எண்ணி அவனிற்கு நடுக்கம் வந்துவிட.. காதில் கேட்ட அவளின் வலியை உணர்ந்த தனக்கே நடுக்கம் வருகிறதே.. வலித்து அதனை தாங்கிக் கொண்டுயிருப்பவளுக்கு எப்படி இருக்கும்?. என எண்ணி.. மேலும் நடுங்கவும்.. அந்நேரம் ஆகாஷ் வர.. தன்னை நிதானிக்க.. யாரும் அவன் கண்களுக்கு தெரியவில்லை. அவனை அரவணைப்பு வேண்டி.. அணைத்து தன்னை நிதானித்து.. பின் அவர்களுக்கு கால் செய்ய.. இப்போது எப்படி கால் சென்றது?. என எண்ணியவாறே.. அவர்களை தன் அரசியிடம் சென்ற பிறகு பேச காத்துயிருக்கிறான். ‘

    இவனை பார்த்திருந்தவர்கள் தங்கள் கைகள்  வேலை செய்தாலும்.. கண்ணும், மனமும் அவனின் நடவடிக்கையை தான் பார்த்திருந்தது. இவ்வாறு பெண்களின் முன்னால் அவர்கள் என்ன நினைப்பார்கள்?.  என்று கூட உணராமல் ஒருவனை நடுக்கத்துடன் அணைத்து.. தீடீர் என்று கத்தி பேசி.. தற்போது கண் கலங்களுடன் தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருக்கும்.. அவனை பார்ப்பதை தவிர தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றி அவர்கள் ஆகாஷை பார்க்க.. ஆகாஷ் வேந்தனை பார்த்திருந்தான். அவன் பேசுவது ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ!.. யாருக்கோ?.. பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ‘

    வேந்தன் எழிலரசியை பற்றி முழுமையாக ஆகாஷிடம் கூறவில்லை. ஏதாவது நான் ஆகாஷிடம் அரசியை பற்றிபேசும் போதுஆர்வத்தில் பெற்றோரிடம் கூறினால்.. அது அப்படியே தன் பெற்றோருக்கு சென்றுவிடும். பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாகவே இருக்கட்டும். தங்களை பற்றி இருவரின் பெற்றோர்களுக்கும்..  எப்போதும் தெரிய விருப்பவில்லை. ‘

    அவனாக கூறுவான் என்று இருக்க.. ம்ஹூம்.. கேட்ட வேண்டாம் என நினைத்தாலும்.. வேந்தனின் நடுக்கம்.. அவனை கேட்கத் தூண்டியது. அப்போதுதான் அவன் வேலையில் முழு கவனத்துடன் செய்ய முடியும்அவனை அழைக்க.. ” வேந்தன்.. இப்பவாவது சொல்லு.. யாருக்கு என்ன பிரச்சனை?.. “

    வேந்தன் ஆகாஷ் முகத்தை பார்த்தான்.. தான் அவனை பதட்டப்படுத்தி விட்டேன் என்று தெரிந்தது. ” சாரி டா. அரசிக்கு பீரியட்ஸ் வயிற்றுவலி அதிகமா இருக்குனு சொன்னா.. நான் அவ அண்ணா, பிரண்டை அவ கூட இருக்க சொல்லியிருந்தேன். அவங்க இல்லனு சொல்லி அழுதா. அவஅழுதத கேட்டு..  நான் அரசிகூட இப்ப கூட இருக்க முடியலைனும்.. நடுக்கம் வந்துருச்சு. அதான் அங்க இரண்டு பேரையும்.. உடனே அரசி கூட இருக்கச்சொல்லி அனுப்பினேன். வேற ஒன்னும் இல்ல. “

   இதனை கேட்ட ஆகாஷ் பெண்கள் இருப்பதால் சற்று கூச்சமாக இருக்க.. அவர்கள் பக்கம் கூட திருப்பவில்லை. மற்ற அனைவரும் இதனை எதிர்பார்க்கவில்லை. இது இயற்கையாக அவர்களுக்கு நடக்கும் ஒன்று. அதனை கேட்டு அவன் இவ்வாறு கலங்கிய தோற்றம் சற்று வியக்க வைத்தது. ‘

   ஆகாஷை பார்த்த வேந்தன்.. என்ன?. என்பதுபோல பார்க்க.. ஆகாஷ் பெண்களை காட்ட.. ” ஏன்?.. அதுக்கு இப்ப என்ன?.. ” அவனை முறைத்து.. ” எனக்கு கூச்சமா இருக்குடா. ” அவனின் அருகில் மெதுவாக கூற..

    இப்போது வேந்தன் ஆகாஷை முறைத்தான். ” டேய் உனக்கு ஒரு தங்கை இருக்காங்க. அவங்க போல தானே இவங்க. இதில் என்ன உனக்கு கூச்சம். “

   டேய் நீ இதை சாதாரணமா.. பல வருடமா உன் தங்கைகளுக்கு செய்யுற. ஆனா என் தங்கை என்னைய இல்ல.. யாரையும் பக்கத்தில் விடமாட்டா. அது அவளுக்கு பிடிக்காது. அவள மாதிரி இவங்களில் யாராவது இருந்தா?.. அதனால் தான். “

   சரிடா. அவங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் எனக்கு ஒன்னும் இல்ல. சரி நாம்ம வேலைய பார்ப்போம். அரசிய அவங்க பார்த்துட்டு எனக்கு கால் பண்ண இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அரசி இன்னும் அழுத்துட்டு மட்டும் இருக்கட்டும்.. அப்ப இருக்கு இரண்டு பேருக்கும். அப்ப நான் பேசும் போது கூச்சமா இருந்தா.. வெளிய போய்விடுங்க.. நான் சொல்லிட்டு இருக்கமாட்டேன். ” என அவர்களின் முகத்தை பார்க்காமல்.. தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். வேறுவழி.. அமைதியாக இருந்தால் தன்னவள் அழுகை தான் கேட்கிறது. அதனால் தான் அதை மறக்க வேலை செய்ய ஆரம்பிக்க..

   ‘ மற்றவர்கள் இவன் என்ன செய்யப்போகிறான்?.. என.. அவன் கூறியதை ஆர்வத்துடன் தான் கேட்டார்கள். யாரையும் இவனை போல் பார்த்தும் இல்லை. இதுபோல சூழ்நிலை அவர்களுக்கு இல்லை. ஒவ்வொரு பெண்களின் இதுபோலான நேரம் வேறுவேறு மாதிரி இருக்கும். அதனால் அவனின் நடவடிக்கையை சில நாட்களாக புது வேந்தனாக பார்க்கிறார்கள். அதில் இன்று மற்றொரு வேந்தனாக பார்க்கிறார்கள். சிலர் பெரிய விஷயமாக கருத்தும் ஒன்றை.. இவன் சாதாரணமாக பேசுவது  ஆச்சரியம்.. என எண்ணியவாறே அவர்களும் வேலை பார்க்க.. 15நிமிடத்தில் அவனிற்கு மெசேஜ் வந்தது. ‘

   அதில் வந்த போட்டோவை பார்த்து.. கண்கள் கலங்கியது. ‘ தன்னவள் தன் அண்ணாவின் மடியிலிருந்தாலும்.. அவள் கையில் தானும் அவளும் சேர்ந்து எடுத்த போட்டோ.. தான் அவர்கள் வீட்டில் வைத்துவிட்டு வந்த சட்டையின் மேல்.. அந்த சட்டையினுள் தான் அடங்கி விட வேண்டும் என.. இருகால்களை குறுக்கி.. அவள் தன் கைகளுக்குள் இருப்பது போல உணர்ந்து.. அவள் படுத்துயிருந்தாள். ‘

    ‘ அதனை பார்த்ததுமே..  அவள் தன்னை எந்த அளவிற்கு ஏங்கி.. எதிர்பார்க்கிறாள் என் முயல்குட்டி என்பது புரிந்தது. ஒரு நிமிடத்திற்கு மேல் அவனால் பார்க்க முடியவில்லை. போனை வைத்துவிட்டு.. தன் கண்ணீர் துளிகள் வெளி வாராமல் இருக்க இமைகளை சிமிட்டியபடி இருந்தான். மற்றவர்கள் இவனை பார்த்தும்.. பார்க்காதது போல இருந்தார்கள். ‘

    ஒரு சில நிமிடங்கள் கழித்து.. இன்பாவிற்கு அழைத்தான்.. ” சொல்லுங்க மாமா. ”

    கடுப்புடன்.. ” என்ன சொல்லுங்க மாமா. அப்படியே சொன்னதை செய்த மாதிரி. அவள அழமா பார்த்துக்கோங்கனு.. எவ்வளவு தரம் சொன்னேன். இப்படி பண்ணி வச்சுயிருக்கிங்க. நீங்க வரும் போது தூங்கிட்டா தானே?.. இல்ல.. ” அவனின் பேச்சின் நடுவே..

    நான் சத்யா பேசுறேன் ண்ணா. இவ்வளவு நேரம் இவர்.. எழில் அழுவா.. அழுவானு புலம்பிட்டு இருந்தார். என்ன இரண்டு பேரும் ஒவரா பண்ணுறிங்க. அவள அழமா பார்த்துக்க.. அவ என்ன பச்சை குழந்தையா?.. எல்லாம் நீங்க ஆரம்பித்த வேலை.. அண்ணாதான் கூட இருக்கனும் சொல்லிக் கொடுத்து.. அவள பழகி வைத்துயிருக்கிங்க. ”

   முதலில் அரசி தூங்கிட்டாளா?.. இல்லையா?.. அதமுதலில் சொல்லுங்க. “

    ம். தூங்கிட்டா. ”

    ‘ தன்னிடம் போனில் தன் வலியை பகிர்ந்த பிறகு.. தூங்கிவிட்டாள் போல என சிறு நிம்மதிக் கொண்டான். ‘

    ” சரி. என்ன கேட்டிங்க?.. அவள பழகி வைத்துயிருக்கேனா?.. அதனால உங்களுக்கு என்ன கஷ்டம்?.. எனக்கும். இன்பாவிற்கு அவள பார்த்துக் கொள்வது தவிர என்ன வேலையாமாம்?..”

   ஆமா.. இப்ப நீங்க அங்கு இருக்கீங்க. இங்க இன்பா அண்ணா பார்த்துப்பாங்க?. அப்புறம் மூன்று மாதத்திற்க்கு பிறகு. “

    இது என்ன கேள்வி?.. நான் தான் பார்த்துப்பேன். ஆனா என்ன சொல்லவரிங்கனு நேரடியாக சொல்லுங்க. அரசி விஷயத்தில் எனக்கு பொறுமை ரொம்பவே கம்மி. “

    அதான் தெரியுமே.. நேரடியா விஷயத்திற்கே வரேன். நான் தான் இன்பா அண்ணாவ.. சிலவிஷயங்களை எடுத்துச் சொல்லி.. கன்வைன்ஸ் பண்ணி.. நாம்ம அவகூட  இருக்க வேண்டாம். அரசி தனியா இருந்து.. எல்லாம் சமாளிக்க பழகிக்கட்டுனு சொன்னேன். ”

     இந்த மூன்றுமாதம் கொஞ்சமாவது.. இந்த சமயத்தில அவ தனியா இருக்க சூழ்நிலைக்கு பழகினாதான்.. எழில் சென்னையில் தனியா இருக்கும் போது.. சமாளிக்க முடியும். ஏனா அவளுக்கு முதல்நாள் அதிகமா வலிக்கும்.. இரண்டாவது நாள் முதல் நாள் டையடு இருக்கும். ஆனா ஐந்துநாளும் கொஞ்சம் சோர்வாவே தான் இருப்பா. இங்க எல்லாம் இருங்காங்க.. அதனால மாத்தி மாத்தி சமாளிப்பாங்க. ஆனா நீங்க இரண்டுபேர் சென்னைக்கு போய்ட்டா.. உங்களால எப்போதும் அவள பார்த்துக்க முடியுமா?.. அவள அவளா தானே பார்த்துக்கனும். அதனால்தான். “

    சத்யா கூறிக்கொண்டுயிருந்ததில் அவனின் செவி.. தன்னவள் ஐந்துநாளும் வலி, சோர்வுடன் இருப்பாள் என்பதில் நின்றது. சற்று கோபத்துடனே.. ” ஏன் சத்யா?. இன்பா உறுதி அன்னைக்கு அரசிய பற்றி சொன்னப்ப.. ஏன் அரசிக்கு ஐந்துநாளும் அவளுக்கு இப்படி இருக்குனு சொல்ல?.. நான் அதை கேட்டு என்ன பண்ணப்போறேனு?.. அப்பவே.. இப்படி அரசிக்கு பழகி கொடுத்துக்களாம் நினைச்சிங்களா?.. ” அவன் கூறியதற்கு சத்யாவிடமிருந்து உடனே பதில் இல்லை.

    சொல்லுங்க சத்யா?.. என்னவாக இருந்தாலும் பரவாயில்ல. ”

    நான் இன்பா அண்ணா உங்களிடம் சொல்லும் போது எதுவும் நினைக்கல.. தோனவும் இல்ல. இப்ப நாலுநாள் முன்னாடி தான்.. எழில் இப்பவே பழகினா நல்லதுனு தோனுச்சு. நீங்களே சொல்லுங்க ஒருநாள் இல்ல இரண்டுநாள் வேணா எப்படியோ லீவ் போடலாம். ஐந்துநாள் போடமுடியுமா?.. ”

    இல்ல குழந்தை கருவுற்றா?.. இப்ப இப்படி இருக்கவ!.. அந்த நேரத்தில் அவளுக்கு எப்படியிருக்குனு தெரியாது?.. நீங்க கண்டிப்பா அவள வீட்டுட்டு இருக்கமாட்டிங்க. இங்க இருந்தும் யாராலையும் அங்க வந்து பார்த்துக்க முடியாது. அப்ப அவ தானே எல்லாத்தையும் சமாளிக்கனும். அதான். “

   வேந்தன்.. சத்யாவின் கேள்வியில் ஒருநொடி ஆடிதான் போனான். இருநாட்கள் லீவ் என்பதே சில சமயங்களில் முடியாது.. ஐந்து நாள் என்பது முடியாது. அவள் வீட்டின் இளவரசி!. என் அரசி.. என்முயல்குட்டி தாய்மை அடைந்தால்நினைக்கவே உள்ளம் பூரித்தது. இனிமையாக அத்தருணத்தை அனுபவிக்க வேண்டியவள்.. ஏதேனும் உடல்உபாதைகள் இருந்தால் எவ்வாறு சமாளிப்பாள். இரு வீடுகளிலும் வீடு நிரப்பிய ஆட்கள் இருக்க.. தனியாக தன்னவள் கஷ்டப்பட தான் அனுமதிப்பேனா?. அதற்காக அவளை வீடுதான் நான் அனுப்புவேனா?. கண்டிப்பாக முடியாது.

    தன் அரசியை.. எந்நிலையிலும் தனியாக கஷ்டப்படவிட மாட்டேன். இதற்கு மாற்றுவழி என்ன???..  

   

    

   

    

    

    

    

      

    

    

   

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!