Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 21. 2

 

நாம் 21 (2 )

 

     பைக்கில் மெதுவாக சொல்வதால்.. ஃபேக்டரி இருக்கும் இடம் செல்ல குறைந்தது 20நிமிடங்கள் ஆகும். எழிலரசி அவனை கட்டிக்கொண்டு.. முதுகில் சாய்ந்து கொண்டாள். இருவரும் ஒன்றும் பேசவில்லை. இருவருக்கும் அமைதி தேவைப்பட்டது. கடந்த 15நாட்களில் அவர்களில் இருவரும் வெளியில் பார்ப்பதற்கு புன்னகைமுகமாக, தெளிவாக, எல்லா வேலைகளை வேகமாக செய்து.. புத்துணர்வுடன் தெரிந்தாலும்.. மனதில் மிகவும் சோர்ந்து  போய் இருந்தனர். இருவரும் எவ்வளவுதான் சேமித்த நினைவுகள் இருந்தாலும்.. ஏனோ மனம் தங்கள் துணைகளைதான் நாடினர். அதனாலே இப்போது அமைதியாக வந்தனர்



Advertisement

    ‘ வேந்தனும், எழிலரசியும் இடத்தை அடைந்த போது.. அவர்களை வரவேற்க மேலும் சிலர் இருந்தனர். இருவருவரையும் பலர் ஆசையுடனும், சிலர் பொறாமை கண்களுடனே பார்த்தார்கள். ஏனெனில் அந்த இடத்தின் அளவை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவனை குறைத்து மதிப்பீட்டு விட்டோம்  என தான் நினைத்தார்கள். ‘

    பூஜை செய்யும் இடத்தின் பக்கத்தில் வண்டியை வைத்துவிட்டு.. இவர்களுக்காக காத்திருந்த நண்பர்களுடன் அங்கு செல்ல.. இங்கு முடிந்ததும் சாப்பிட்டு அனைவரும் வளைகாப்பிற்கு செல்லவேண்டும் என்பதால் அவர்கள் வந்ததுடனே ஆரம்பித்து பாதி பூஜை முடிந்துயிருந்து.

    இருவரும் அங்கு சென்றவுடனே சிலர் அவர்களை நோக்கி வந்தனர். அவர்களை பார்த்தவுடன் வேந்தன்.. ” ஹேய் நீங்கெல்லாம் எப்ப வந்தீங்க?. நான் இங்க உங்கள இங்க எதிர்பார்க்கல. ”

Advertisement

    சார்.. நாங்களும் இங்க வருவோனு எதிர்பார்க்கல?.. “

Advertisement

   அனு முதலில் சாரை விடுங்க.. ஆபிஸ்ல இருக்கும்  போதே எனக்கு பிடிக்காது.. இப்பதான் ரிசைன் பண்ணிடேனே.. அண்ணானே கூப்பிடுங்க. ” அரசியை காண்பித்து.. ” இவங்க.. ” முடிக்கும்முன்..

   ம்.. நீங்க அண்ணா.. இவங்க அண்ணி எழிலரசி தானே. ”

     புன்னகையுடன்..   ம். சரி நிஷா. இருங்க நாம்ம பூஜை முடிந்தவுடன் பேசலாம். ” அங்கு இருந்த ஆகாஷ் பெற்றோர்கள், அவனின் தங்கை அபிதா, ராகினி, ஆர்த்தி இவர்களிடம் பொதுவாக வரவேற்று.. பின் கூறி.. பூஜை நடப்பதை பார்க்க ஆரம்பித்தனர்.

Advertisement

   ஆகாஷ் மற்றும் உடன் வந்த பெண்களை பற்றி தான் பூஜையில் இருந்தவர்களை தவிர மற்றவர்கள் பேசிக்கொண்டுயிருந்தனர். அதிலும் அவர்களிடம் சிரித்து பேசும் வேந்தன் புதிது.

  ஏன் வசு உன் அண்ணாவிற்கு.. இப்படி சிரித்து பேசக்கூட தெரியாமா?.. ”

    நந்தினியை  கசப்பான  பார்வை பார்த்து.. ” இதுக்கே இப்படி சொல்றிங்க அண்ணிஅண்ணா இப்படி சிரித்து பேசமட்டும் இல்ல பாட, நடனம் ஆடக் கூட தெரியும். ” நந்தினி புரியாமல்  பார்க்க..

   அண்ணாவிற்கு நடனம் ஆட தெரியும்.. ஆனா நான் சொல்ல வந்ததுஎல்லோர் முன்பும் நடனம் ஆடவும், கூடவே பாட்டு பாடுவும் தெரியும் என்பது ஒருமாதம் முன்பு தான் தெரியும் அண்ணிஅதுவும் எப்படி எழில் அண்ணிக்கு பிடிக்கும் என்று.. அவங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாங்க.. அது மூலமா எங்களுக்கு தெரிந்தது. “

   அப்படியா!.. சரி நான் வந்ததில் இருந்து பார்க்கிறேன்.. நீ ஏன் யாரிடமும் சரியா பேசுவது போல தெரியல. உடம்பு சரியில்லையா?. “

   உங்களுக்காவது அக்கறை இருக்கே.. ஆனா இங்க வச்சு பேச முடியாது.. என நினைத்தவள்.. ” அப்படியெல்லாம் இல்ல அண்ணி.. அவங்க எல்லோரையும் அடிகடி பார்ப்பேன்.. உங்கள அப்படியா.. அதான் உங்க கூடவே இருக்கேன். ”

   புன்னகையுடன்.. ” ஆமால்ல நான் ஏதோ.. உனக்கு யார் கூடவும் பேசபிடிக்கல போலனு. தப்பா எடுத்துக்கிட்டேன்இங்க யார் நம்ம வீடு, யார் உன் அண்ணி வீடு ஆட்கள் என்று தெரியாத அளவிற்கு.. எல்லாம் ஒன்னாவே இருக்காங்க. நான் கூட யோக அண்ணி, கார்த்திக் அண்ணாவிடம் கூட பீரியா பேச முடியல. “

    ம்.. எனக்கும் அப்படிதான் அண்ணி. அவங்க அக்காவும், நம்ம அக்காவும். அண்ணா , எழில் அண்ணியோட அக்கா எல்லோரும் ஸ்கூல் பிரண்ட்ஸ்சா.. அதனால இப்படியிருக்காங்க. “

    .. அப்ப உன் அண்ணிய உன் அண்ணாவிற்கு ஸ்கூலில்லே தெரிந்து இருக்கும்மா?. “

    என்ன அண்ணி நீங்க.. எழில் அண்ணி எப்படியும்.. அண்ணா படித்தப்ப ஆறாவது தான் படித்துயிருப்பாங்க. அந்த வயசில் இரண்டும் பேரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்ல அண்ணி. ”

   ம்.. நீ சொல்வதும் சரிதான். சரி வளைகாப்பு என்ன டிரஸ் போடப்போற?.. ” இவர்கள் பேச்சு தொடர.. அவர்கள் சற்று தள்ளியிருந்தவர்கள்..

 

   டேய் திலகா.. ஆகாஷ் கூட வந்துயிருக்க பொண்ணுங்க யார்டா?.. ”

    உங்க தம்பியோட வேலை செய்யறவங்க க்கா. நிச்சியத்திற்கு வந்துயிருக்காங்க. அவங்க நேரா வீட்டிற்கு தான் போகனும்.. எனக்கு ஆகாஷ் கால் பண்ணினான். வீட்டிற்கு யாரும் இப்ப போகலனுநான்தான் இங்க வரச்சொன்னேன். ”

   .. ஏன்டா இவன் ஆபிஸ்ல நல்லா பேசுவானோ?. நம்மகிட்ட மட்டும்தான் அமைதியா இருந்தானோ?.. ”

    எப்படிடா எல்லோரும் ஒரே கேள்விய கேட்க வைத்துயிருக்க.. ஒருத்தவன் எல்லாத்தையும் இத்தன வருடம் ஏமாத்தியிருக்கான் முடியலடா.. அவங்களிடம் கேளுங்க.. இல்ல உங்க தம்பிக்கிட்டயே கேளுங்க. ”

   சரிடா அவன் வரட்டும்.. சரி அவங்கள கூப்பிடு.. அவன் வரவரைக்கும் அவனோட கதையை கேட்கலாம். ”

    ஏன் அக்கா நீங்க பூஜைக்கு போகல?.. ”

    அவனை முறைத்து.. ” என்ன டா?. வெட்டியா கதபேசாம.. வேலைய பாருங்கனு சொல்லுறியா?.. நாங்க எல்லா வேலையும் முடித்துதான் இங்க உட்கார்ந்து இருக்கோம்.. ஆகாஷிடம் சொல்லு. ”

   அக்கா, தம்பி இரண்டு பேரும் நம்மள விரட்டுவதை மட்டும் நல்லா பண்ணுறாங்க. நானே தியாவிடம் பேச முடியாம இருக்கேன். வேந்தனை பார்த்தான்.. எழிலரசியின் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் பூஜையை கவனித்துக் கொண்டுயிருந்தான். ‘ 

    கடை வைக்கும் இடத்தில் நடந்த பூஜையானது உறவினர்கள் அனைத்தும் செய்தனர். இங்கு விளக்குகள் மட்டும் வீட்டின் முத்தபெண்மணிகள் ஏற்ற.. மற்றவை எல்லாம்..  இங்கு கட்டிடம் கட்டும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள்தான் அனைத்தும் செய்து.. கற்களை வைத்துக் கொண்டுயிருக்க.. அதை பார்த்திருந்தார்கள். ‘

   ம் இவன மாதிரி எதுக்கும் பயப்படாம  இருக்கனும். யார் பார்த்தா என்ன?.. கிண்டல் பண்ணினா என்ன?.. அவன் பாட்டுக்கு கைய விடமா நிக்குறான். இன்னும் சிறிது நேரத்தில் முடிந்துவிடும்என எண்ணிய படி.. ஆகாஷை போனில் அழைத்தான்.

  ‘ ஆகாஷ் திலகனின் அழைப்பை ஏற்று.. என்னவென்று கேட்டு யோகா அழைத்ததை கூற.. அவர்களிடம் கூறி அங்கு வருகிறோம் என்று கூறி.. சிறிது நேரத்தில் யோகாவின் அருகில் அமர்ந்தார்கள்.. வேந்தன் உடன் பணிபுரிபவர்கள். ‘

    நீங்க வேந்தன் அண்ணாவோட ஒரு மாதத்திற்கு முன்பு ஆபிஸ் வந்தவர் தானே?. ” அமர்ந்தவுடன் திலகனை பார்த்துக் கேட்க..

    ஆமாங்க. என்ன பார்த்திங்களா?.. “

     பார்த்திருக்கிங்களாவா?.. ” என்று கூறி.. அன்று கேபிடேரியாவில் நடந்தை பார்த்தது.. அதன்பிறகு வேந்தனிடம் கேட்தை கூறினார்கள்.

    ம்.. என்னால இவ்வளவு நடந்துயிருக்கா!.. சரி அப்போதுயிருந்து வேந்தன் அண்ணானு கூப்பிட ஆரம்பித்து விட்டிங்களா?.. “

    இல்ல இல்ல.. இன்னைக்கு காலையில் இருந்துதான். நான் தான் ரிசைன் பண்ணிவிட்டேன்லனு.. அவர்தான் கூப்பிட சொன்னார். ” அனு வேந்தன் தங்களை நோக்கி வருவதையும்.. அவன் உடையை பார்த்துக் கொண்டுயிருந்தாள்.

   வேந்தனும், அரசியும் பூஜை முடிந்து நண்பர்கள், சகோதரிகள் இருக்கும் இடத்தை நோக்கி புன்னகையுடன் வந்துக் கொண்டுயிருந்தனர். வேந்தனும் கவனித்தான் அனு தன்னையே பார்ப்பதை. பின் நண்பர்களின் அருகில் இருவரும் அமர்ந்தார்கள். ‘

   என்ன அனு?.. என்மேல பார்வையெல்லாம் பலமா இருக்கு. ” புன்னகையுடன் கேட்க.

    ம்.. நாங்க ஆபிஸ் ஏதாவது முக்கியமான நாளில் நாங்க சேலைக் கட்டும்போது.. நிறைய தடவை சொல்லியும்.. நீங்க வேஷ்டி கட்டி வரமாட்டிங்க. அதான் முதல்தடவை இந்த உடையில் பார்க்கிறேன். அதிலும் இப்படி பிரைட்னான கலரில் சர்ட் போட்டு இன்னும் நல்லாயிருக்கிங்கனு பார்த்தேன் அண்ணா. ஏன் அப்பயெல்லாம் போட்டு வரல?.. “

  ‘ வேந்தன் அனைத்தும் கேட்டு பதில் கூறாமல் புன்னகை மட்டும் செலுத்த. ‘

   அவனின் புன்னகையை பார்த்த நந்தினி.. ” என்ன வசு?.. என்னமோ நான் பார்த்ததுக்கே.. உங்க அண்ணா ஏதோ சொல்லி விடுவாருனு சொன்ன. இப்ப என்னடானா.. இப்படி அந்த பொண்ணு கேட்டதுக்கு.. உன் அண்ணா ஒன்னும் சொல்லாம.. அமைதியா சிரிச்சுக்கிட்டு இருக்காரு. ” எனக் கூற வசுவும் அதைதான் நினைத்து.. என்னவென்று பார்த்துயிருந்தாள்.

   என்ன அண்ணா பதில் கேட்டா சிரிப்பு மட்டும் தான் வருது. ” அவள் அருகில் புன்னகையை கட்டுப்படுத்திக் கொண்டுயிருக்கும் எழிலரசியை பார்க்க.. ” .. இது அண்ணி சம்பந்தம் பட்டதோ. அதான் அமைதியா இருக்கிங்களா?.. “

   ஆம்என மெல்லிய தலையாட்டல் மட்டுமே கொடுக்க.. ” ஏன்டா இன்னைக்கு மெளன விரதாமா என்ன?. வாய திறந்து தான் பதில் சொல்லேன் டா. ” திலகன் கடுப்புடன் கூற..

   அவனை ஒரு பார்வை பார்த்து.. பின் அனுவிடம்.. ” எனக்கு ஆபிஸ்ல போட பிடிக்கல. நீங்க தப்பா எடுத்துக்காதிங்க.. நீங்க இப்ப பார்த்திங்க இல்ல.. அதுமாதிரி என்ன யாரும் ஆபிஸ்சில் பார்க்க பிடிக்கல. இப்ப அரசி கூட இருக்கா.. அதனால யார் பார்த்தாலும்.. எனக்கு ஒன்னும் இல்ல. ”

    பிறகு இந்த உடையில் பைக்ல வரவும் பிடிக்காது. ஆனா இப்ப நான் அடிக்கடி இந்த உடை போடனும் என்பதற்காகவே.. என்னை கேட்காமலையலயே இரண்டும் பேரும் உபயோகப்படுத்துவது போல புது பைக் வாங்கியிருக்கா. அந்த அளவிற்கு அரசிக்கு ரொம்ப பிடிக்கும்.. அரசி வாங்கி கொடுத்தது தான் இது. “

   என்ன?!. நீங்க அடிக்கடி வேஷ்டி கட்ட புது பைக் வாங்கினாங்களா?. உங்க அப்பா ஒன்னும் சொல்லலையா அண்ணி?. ” நிஷா எழிலரசியை கேட்க.

    எழிலரசிஇல்லைஎன தலையாட்டி புன்னகைக்க.. ” ஏன் அண்ணி.. இப்ப நான் எவ்வளவு அதிர்ச்சியா கேள்வி கேட்டா.. நீங்க சிரிச்சுட்டே இல்லைனு தலையாட்டுறீங்க. “

   நிஷா நீங்க கேட்க கேள்வி தப்பு அதான். ”

   என்ன தப்பு அண்ணா ?.. “

    புன்னகையுடன்.. ” ஏன்னா?. அப்பாவிடம்  கேட்டு.. அவங்க அப்பா வாங்கி கொடுத்துயிருந்தா.. நீங்க கேட்ட கேள்விக்கு பதில் வரும். ஆனா என் கார்டில் வாங்கிய பைக்குக்கு எப்படி பதில் வரும்?.. அதான் மேடம் சிரிக்கிறாங்க. “

    நிஷா சுற்றியுள்ளவர்கள் சற்று அதிர்ச்சியடைவதை பார்த்தவள்.. ” .. ரகசியமா வைத்துயிருந்தது.. என்னால வெளி வந்துயிருச்சா அண்ணி?. 

    அப்படியொல்லாம் இல்லங்க நிஷா.. இரண்டு பேரோட அப்பாவுக்கும் தெரியும். வேணும் சொன்னேன்.. அவங்களுக்கே தெரியும் தப்பி தவறி அவங்க வாங்கி கொடுத்தா.. எப்படி எனக்கு நீங்க வாங்கி தரலாம்னு என்று அப்பா, மாமாவிடம் கேட்பாங்கனு. மாமாவே இவங்க கார்டை கேட்டு வாங்கி தான் பில் பண்ணினாங்க. அதனால இதுல ரகசியம் இல்லங்க. “

    அப்படியா!.. நான் பயந்தே போய்டேன் அண்ணி. ”

    நிஷா நீங்க தனுவ அண்ணானு சொல்வதால்.. என்னைய அண்ணி சொல்லாதிங்க. நானும் நீங்களும் ஒரே வயசுதான் இருப்போம். பேர் சொல்லியே கூப்பிடுங்க. ”

    என்ன ஒரே வயசு தானா?. ” நிஷா, அனு, ராகினி மூவரும் ஒரு சேர கேட்க..

    ‘ அருகில் இருந்தவர்கள் கூட என்னடா?. என பார்த்தார்கள்இதை கேட்ட எழிலரசி.. நான் இப்ப என்ன சொல்லிட்டேனு.. இப்படி ஒருசேர கேட்குறாங்க. ‘

   மூவரின்  ஆச்சரியம் ஏன்?.. என வேந்தனிற்கு புரிந்தது.. புன்னகையுடன்.. ” ஏனங்க இப்படி?.. என்ன உங்களுக்கு அரசிய உயரம், முகத்தை பார்த்தா 20 வயதுதான் இருக்கும் என நினைச்சிங்களா?.. ”

    அரசியிடம் வேந்தன் திரும்பவில்லை. ஏனெனில் பக்கத்தில் இருந்தவர்களின் சிரிப்பு சத்தம் அதிகம் கேட்பதால்.. அவள் தன்னை முறைப்பாள் என்று தெரிந்து முன்னெச்சரிக்கை.

    ம்.. ஆமாம் அண்ணா.. நீங்க போனில் கூப்பிடுவதை கேட்டும், பின் அவங்கள பார்த்ததும் எனக்கு அப்படிதான் தோணுச்சு. ” நிஷா கூறியவுடன்..

     ‘  அய்யோ நிஷா இப்படியா மாட்டி விடுங்க.. மெல்ல புன்னகையுடன் திரும்ப.. அவளோ.. தன்னவன் யார் இருப்பதையும் மறந்து முயல்குட்டி.. என தன்னை அழைத்திருப்பதில் புரிந்தது.. தன்னை எவ்வளவு நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறான் என்று.. அவனவள் அவனை  முறைக்க முயன்று.. சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டுயிருந்தாள்..  ஹப்பா.. என வேந்தன் நினைத்திருந்த நேரம்.. ‘

     நிஷா.. அவங்களுக்கு மட்டும் இந்நேரம் 20 வயசா இருந்தா.. இவங்க இரண்டு பேருக்கும்  கல்யாண பேச்சே வந்துயிருக்காது. நீங்க அவங்கள அண்ணி என்று கூப்பிட்டே இருக்கமாட்டிங்க.. கூப்பிட வேண்டியவங்க வேறு ஆளா இருந்துயிருப்பாங்க. ” பின்னால் இருந்த வசுந்தரா கூற.. 

   

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!