Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 21. 3

 

நான் 21 (3)

              

    ‘ அங்கு இளையவர்கள் மட்டுமே இருந்தனர். மற்றவர்கள் முதலில் வளைகாப்பு , நிச்சயத்திற்கு.. சிலமுக்கிய வேலைகளை பார்க்க செல்ல வேண்டும் என பெரியவர்கள் சற்று தள்ளி பக்கத்தில் சாப்பிடுவதற்கு என்று அமைக்கப்பட்ட இடத்தில் சாப்பிடுவதால்.. இவ்வளவு நேரம் இருந்த கலகலப்பான இனிமையான சூழ்நிலை நொடியில் அமைதியானது. ‘



Advertisement

   ‘ வசுந்தாவிற்கு அண்ணா மட்டும்தான் எழிலரசிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இருந்தது. ஆனால் அப்பாவும் பைக் பற்றி ஒருவார்த்தை கூட இதுவரை கூறவில்லை. இதில் நந்தினி வேற உனக்கு ஏதும் தெரியுமா?.. என கேட்க.. தெரியாது என கூறியவுடன்.. சிறு எள்ளல் புன்னகை சிந்தியது வேற கோபத்தை உண்டாக்கியது. இதற்கு காரணம் எழிலரசி தன் அண்ணாவின் மனைவியாக வரப்போவதால் தானே.. என கோபத்தை அடக்கி அங்கு நடப்பதை பார்த்திருந்தவள்.. அவர்கள் வயதை பற்றி பேசியதும் அவள் எழிலரசி, வேந்தனின் மீது தன் கோபத்தை வேறு மாதிரியாக காண்பித்தாள். ‘

   அனைவரும்  வசுந்தராவை பார்க்க.. ” என்ன எல்லோரும் என்னைய பார்க்கிறிங்க. என்ன தப்பா சொல்லிட்டேன்?.. யோகா அக்காஅண்ணாவோட கல்யாண விருப்பத்தில் அவர் பொண்ணோட வயசு வித்தியாசம் 5 ல்இருந்து 7 வயசு இருக்கனும் சொன்னதால் தானே.. இவங்க இரண்டுபேருக்கும் கல்யாண முடிவானதுஅதனால் தானே அவங்கள அண்ணி கூப்பிடுறாங்க. இல்லைனா அண்ணா.. நந்தினி அண்ணிய தானே கல்யாணம் பண்ணியிருப்பாங்க. இவங்கள தானே கூப்பிட்டு இருப்பாங்க. அதை தான் அவங்களிடம் சொன்னேன். ” என யோகாவை மட்டும் பார்த்துகூற.. 

    அவள் கூறியதை கேட்டவர்கள் உடனே வேந்தன், எழிலரசியை பார்க்க.. வேந்தன் கோபமாகவும், எழிலரசி யோசனையாகவும் இருந்தாள். அன்றே ஒரு உடை விஷயத்திலேயே வேந்தனின் மீது இருக்கும் தனக்கு மட்டுமே இருக்கும் உரிமையை கூறியவள்!.. இன்று வேந்தன் இதன் காரணமாகதான் உங்கள் திருமணம் நடக்கப் போகிறது.. இல்லையெனில் வேறு ஒருவருடன் என்று!.. கணவன், மனைவி என நினைத்து இருப்பவர்களிடம் இவ்வாறு கூறியதை இருவரும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ?.. என்று சற்று பயத்துடனே பார்த்தார்கள். ‘

Advertisement

   யாரும் உணரும் முன் வசுவின் மிக அருகில் சென்ற வேந்தன்.. ” இந்த மாதிரி ஒரு கண்டிஷன் போட்டேனு.. உனக்கு யார் சொன்னா?.. இந்த கண்டிஷன் இல்லையென்றால் நீ சொன்னியே.. ” சற்று கோபத்துடன் கேட்க போனவன் நிறுத்திவிட்டான். அவனிற்கு தன்னையும் அரசியை தவிர வேறு ஒருவருடன் இணைத்து வார்த்தையால் கூட கல்யாணம் என்று கூற முடியவில்லை. ” சொல்லு.. உனக்கு யார் சொன்னா?. ”

Advertisement

   வசுந்தராவிற்கு.. அண்ணன் தீடிர் என்று தன் பக்கத்தில்.. அதுவும் கோபத்தில் வந்ததில் பயமும், இதுவரை தான் கண்டிறாத அழுகை கூட வரப் பார்த்தது.. ஆனால் கோபம் அதனின்முன் நின்று.. அழுகையை கட்டுபடுத்தி.. ” நீங்க தான் சொன்னாததான்.. வீட்டில் எல்லோருக்கும் தெரியுமே. அதனால் தானே இவங்க.. ” கூறிக் கொண்டு இருக்கும் போதே..

   நிறுத்து வசுந்தரா.. நான் பொதுவா ஒரு கல்யாணம் இந்த வயசில் இருந்தா நல்லாயிருக்கும் சொன்னத.. யார் தான் இப்படி மாத்தி!..  புரிஞ்சுகிட்டிங்கனு தெரியல?.. நான் எந்த .. ” ( கண்டிஷனும் போடல) அவன் எந்த என கூறிக் கொண்டுயிருக்கும் போதே..

   தனுதன்னவள் அழைப்பில் உடனே திருப்ப.. ” அப்படியே நீங்க சொல்லியிருந்தாலும் ஒன்னும் இல்ல. முதலில் அவங்களுக்கு விளக்கம் கொடுப்பத்தை நிப்பாட்டுறிங்களா. இங்க வாங்க. ”

Advertisement

    தன்னவள் அழைத்ததும் வேதனையுடன் ஒருநொடி பார்த்துக் கொண்டுயிருந்தவன்.. தன் அரசி கட்டளையிட்டதும்!.. மன்னவன்.. எந்த மறுப்பும் கூறாமல்.. உடனே அவள் அருகில் வந்துவிட்டான். தன்னவன் தன்னருகில் வந்தவுடனே.. அவன் நிதானமாவற்கு!.. தன் கையை கொடுத்து அருகில் இருந்த சேரில் உட்கார வைத்தவள்.. பின் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அவன் சிறிது குடித்துவிட்டு..

    தன்னவளை பார்த்தான்.. ” தனு நீங்க எதையும்.. யாருக்கும்?.. எந்த விளக்கமும் கொடுக்கனும் அவசியம் இல்ல. ” வேந்தன் பதில் கூறவர..

   ” ஸ்விட் கடை ஆரம்பித்து இன்னும் ஒருஸ்விட் கூட யாருக்கும் கொடுக்கல. போங்க.. போய் எங்களுக்கு ஸ்விட் எடுத்துவாங்க. ”

    ‘ தன்னவளின் கையை சிறு அழுத்தம் கொடுத்த பின் அவ்விடத்தில் ஒருநொடி கூட இருக்க பிடிக்காமல் எழுந்து சென்றுவிட்டான். ‘ 

    தன் தனு சென்றவுடன் அரசி நின்றயிடத்திலேயே.. அனைவரையும் பார்த்துவின்.. பின்.. ” வசுந்தரா.. தனுக்கு கல்யாணத்தில் கண்டிஷன் இருந்தாலும், இல்லாவிட்டாலும்.. நான்!. அவர் விருப்பமும், எங்க இரண்டு பேரோட பெற்றோர்களின் விருப்பத்தோட.. எங்களுக்கு இன்னைக்கு நிச்சியம் ஆகபோகுது. மற்றதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம். ” கடைசி வரியை அழுத்தமாக கூறினாள்.

    ஏற்கனவே நான் உங்களிடம் சொல்லியிருக்கேன்.. கல்யாணத்தை பற்றி, வர கணவன், மனைவி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அதன்படி தனு பண்ணுறாங்க.

    நீங்க சொன்னீங்களே யாரையோ?… அவங்கள பற்றி.. எப்படியும் 4வருடத்திற்கு முன் இருக்கும்.. மாமா, அத்தை.. தனுவிடம் அவங்க விருப்பத்தை சொல்லி.. தனுவும் தன் எண்ணத்தை தெரிவித்துவிட்டாங்க. ” 

   ” நீங்க உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில்.. நீங்க இப்படி நினைக்கலைனா?. அப்படி நினைக்கலைனா?.. அவங்க?. இவங்கனு.. உளறிட்டு இருக்கீங்க. இப்பனுல்ல.. எப்பவும்.. ” அனைவரையும் மீண்டும் பார்த்து..

     யாரும்.. யாரிடம் தனுவையும், என்னையும் பற்றி பேசக்கூடாது. உங்க அண்ணாவிடம்.. அண்ணாவா மட்டும்தான் பேசனும்.. அதுக்குதான் உங்களுக்கு உரிமை இருக்கு. ” 

    ” ஆனா அரசியோட தனுவிடம்.. எங்களோட தனிப்பட்ட விஷயம்.. கல்யாணத்திற்கு முன்ன, பின்ன எதுவாக, இருந்தாலும்.. அவரிடமும் இல்ல யாரிடமும் பேசுவதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது. ”

    இல்ல என் மேல உங்களுக்கு அக்கறையிருந்து.. கல்யாணத்திற்கு முன்ன நடந்தத உங்க அண்ணா என்னிடம் சொல்லியிக்க மாட்டாங்கனு நினைத்து.. உங்களுக்கு சொல்லனும் நினைத்தா.. எங்க வீட்டல, சத்யாவிடம் இவங்க யாரிடமும் நீங்க தெரிவிக்கலாம். ”

    உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உங்க அண்ணா, இல்ல வீட்டில் உள்ளவர்களின் மேல் வருத்தமோ, கோபமோ வந்தா.. அத அவங்க தனியாக இருக்கும் போது.. நேரடியா போய் அவங்களிடமே கேளுங்க. ”

    இல்ல இந்த மாதிரி ஒரு விஷயத்தை.. எனக்கோ, உங்க அண்ணாவிற்கு ஞாபகப்படுத்த, இல்ல உங்க கோபத்தை வெளிப்படுத்த.. இப்படி விளையாட்டிற்கு பேசுவதற்கெல்லாம்.. ஒரு சிரியஸ்சான விஷயத்தை இணைத்து பேசுற வேலைய இனி வைச்சுக்காதிங்க. உங்கள கஷ்டபடுத்தவே, இல்ல கோபப்படத்தவோ.. இவ்வளவும்  நான் சொல்லல.. இல்ல நீங்க தப்பா எடுத்துக் கொண்டாலும் எனக்கு அதைபற்றி கவலை இல்ல. “

    எழிலரசியால் வசு கூறியதை ஏற்றக்கொள்ள முடியவில்லை. தனக்கு தன்னவனின் தன் மீதான காதல். தன்னாக அவனின் செயல்கள் எல்லாம் தெரிந்தும்.. அனைவரும் அவனை தவறாக புரிந்துள்ளனர் என்று அறிவுக்கு தெரிகிறது. ஆனால் மனதிற்கோ.. பேச்சிற்கு கூட எதனையும் கேட்க விரும்பவில்லை. வசுவிடம் அவள் தன்னவனிற்காக தைரியமாக பேசினாலும்.. உள்ளம் நடுங்கியது. ‘

    எழில் என்ன இது இப்படி பேசுற?.. வசுந்தரா சின்ன பொண்ணு.. ” இளமதி, சுரபி அருகில் வந்து, அவளை உட்கார வைத்து.. அதிகம் பேசாதே.. பெரியவர்கள் வந்தால் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?. என்ற உணர்வில் கூற..

   இவங்க சின்னப்பொண்ணா?.. வசுந்தரா தெளிவா பேசுவதில் இருந்தே தெரியுது.. ஏதோ இதை சொல்வதற்காகவே காத்துயிருந்தது போல இருந்தது. அவங்களுக்கு தனு மேல கோபமோ, வருந்தமோ இருக்கு. அதனால என்ன வேண்ணா பேசுவாங்க.. நான் அமைதியா இருக்கனும்மா?? ”

    சரி விடு.. வேந்தன் வந்துவிடுவாங்க. இங்க நிஷாவ பாரு.. எப்படி உட்கார்ந்து இருக்காங்க?. ”

    இளமதி கூறியதும் நிஷாவை பார்க்க.. தவறு செய்து விட்டது போல முகம் வெளிறிப்போய் இருந்தாள். பயந்து விட்டார்கள். மற்றவர்களை பார்க்க.. நல்லவேலை மாமாக்கள், அண்ணாக்கள் என்று யாரும் இல்லை. ஆண்களில் நண்பர் மூவர் மட்டும் தான் இருந்தார்கள். அவர்களும் தனுவுடன் சென்று விட்டார்கள். வசுந்தராவிடம் யோக அண்ணி , சாரு பேசிக் கொண்டுயிருக்க.. வசுந்தரா அழுகையை கட்டுபடுத்துகிறாள் என்பது அவளின் சிவந்த முகத்தில் இருந்து தெரிந்தது.

   சரிக்கா.. வாங்க சாப்பிட போகலாம். ” என கூறி.. அவள் எழுதுவிட.. ” எழில்..  அண்ணா வரட்டும் வந்த பிறகு போகலாம். ”

   தனு வரமாட்டாங்க சத்யா. நான் அவங்கள இங்கு இருந்து கிளப்ப தான்.. அப்படி சொன்னேன். ”

     யோகாவிடம் திரும்பியவள்.. “அண்ணி நீங்க எல்லாம் சாப்பிட வாங்க. எனக்கு பசிக்குது.. சத்யா, தர்ஷினி  இவங்க நாலு பேரோட முன்னாடி போறேன். ” அக்கா, அண்ணியை அவர்களுடன் இருக்க வைத்து.. விருந்தினர்களை உபசரிக்கவும்.. தன்னவன் நிதானித்து விட்டானா?.. என்று அறிய வேண்டி விரைந்து வந்தாள்.

 

   வேந்தனை பார்த்தவள் பார்த்தபடி இருந்தாள்.  முகத்தில் வேர்வை சிறிதுயிருக்க.. வேஷ்டியை மடித்துக்கட்டி பரிமாறிக் கொண்டுயிருந்தான். தன்னவனை முதன்முதலில் அவ்வாறு பார்ப்பதால்.. ஒருமுறை கண்களை மூடித்திறந்தாள். அவள் கண்ணிற்கு அவ்வளவு அழகனாக இருந்தான் அவளின் தனுமாமா. ‘

    அவன் கையில் என்ன இருக்கிறது?. என்று பார்த்தாள். சரி.. அவன் தன்னை கவனிக்கவில்லை என்பதை அறிந்து.. அருகில் இருந்த அஸ்வினிடம் அவன் வைத்துயிருக்கும் உணவை கேட்க கூற.. தன்னிடம் பேசிய எழிலரசியை மேலும் கீழும் பார்த்தான். தன்னிடம் தான் பேசினால என்று!.. ‘

  என்ன பார்க்கிறீங்க?.. கூப்பிடுங்க. ”

   எழிலரசி தானே நீ?.. உனக்கு பேசக்கூட தெரியுமா?.. ” சற்று சத்தமாக கேட்க

    ‘ அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியிடைந்து.. திருப்பவும் முதலில் இருந்தா?.. என்பது போல எழிலரசியை பார்க்க.. அவள் புன்னகைத்தாள். பின் அவர்கள் சற்று தள்ளி இடம் இருந்த இடத்தில் ஆறுபேரும் அமர வைத்தாள். ‘ 

     இப்ப கூப்பிட போறிங்களா இல்லையா?.. ” மெல்லிய புன்னகையுடன்.. ‘ சரிஎன தலையசைத்து.. ” எனக்கு கொஞ்சம் ஸ்விட் கொண்டுவாங்களே. ”

    அஸ்வின் அழைத்தும்இதோ கொண்டுவரேன்.  ” கூறியபடி திருப்பியவன்.. அங்கு இருந்த தன்னவளை பார்த்தான்.

     அவள் தன்னை தலைமுதல் கால்வரை ஒரு விரைவுப் பார்வை செலுத்துவதை பார்த்தவன்.. அந்த வியர்வையிலும் அவனிற்கு குளிர்ச்சி சட்டென்று வந்து.. அவனை புத்துணர்வு ஆக்கியது. அருகில் வந்ததும் கேட்ட அஸ்வினிற்கு கொடுத்து.. புன்னகையுடன் தன்னவளிற்கு அசோகா அல்வா ஒரு கப் கொடுத்தான். ‘

   இருவரையும் பார்த்த அஸ்வின்.. ” ஹலோ எழில்.. கொஞ்சம் இங்க பாருங்க. என்னைய அறிமுகப்படுத்துவிங்களா?. இல்ல நானே தான் செய்துக் கொள்ள வேண்டும்மா?.. “

    தன்னவன் கொடுத்த அல்லாவை ருசித்தபடி.. ” தனு இவங்க அஸ்வின். தேவகி அத்தயோட இரண்டாவது பையன். ஹைராபாத்தில் வேலை செய்றாங்க. ” அறிமுக புன்னகை புரிந்து.. சிலவார்த்தைகள் இருவரும் பேசிக் கொண்டனர்.

   ‘  வேந்தன் தான் வைத்துயிருந்த ஸ்விட்டை மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு.. நண்பர்கள் அமர்ந்தயிருந்த இடத்தின் அருகில் அமர்ந்தனர். சிலர் சென்றுயிருக்க.. அங்கு யோகா, வசு மற்றும் அங்கு மீதம் இருந்தவர்கள் அனைவரும் வந்து அமர.. அவர்களுக்கு உணவு பரிமாறினர். ‘

   முயல்குட்டி நீ வருவதற்கு இவ்வளவு நேரம்மா?.. ” அவன் சோகம் கலந்த குரலில் கேட்க..

   அதான் நான் வரல என்றதும் தான்.. என் தனுமாமா செம்மையா வேட்டிய மடித்துக் கட்டிட்டு.. வேலை பார்க்க ஆரம்பித்து விட்டிகளே.. பிறகு என்ன?.. ” அவனை மாற்ற.. தன்னவனை கிறங்க வைக்கும் தனுமாமா என்ற அழைப்பை கூறி.. கண்களில் குறும்பும்.. புன்னகையுடனும் கேட்க..

   மெல்லிய புன்னகை மட்டும் வெளிப்படுத்தி.. பின் பழைய குரலில்.. ” ம்.. எனக்கு இங்க வந்தவுடனே சும்மா நிக்க முடியல அரசி. நான் இங்கயிருந்து பார்த்தப்ப நீ வசுவோட ஏதோ பேசிட்டுயிருந்த.. அதபார்க்கவும் முடியல. நீ  எல்லோருக்கும் ஸ்விட் கொடுக்க சொன்னியா. அந்த வேலைய பார்க்கலாமுனு செய்ய ஆரம்பித்துவிட்டேன். என்னைய விளக்கம் கொடுக்க வேண்டானு சொல்லிட்டு.. நீ என்ன பேசிட்டுயிருந்த?. ” தன்னவளின் முகம் புன்னகையுடன் இருந்தாலும்.. அவளின் நடையில்.. உடல் ஏதோ நடுக்கத்தை உணர்த்தியது.

   அவன் முகத்தை பார்த்தவள்..  உண்மையான தன் மனநிலையை கூறினாள் இன்றி அவனின் குரலில் மாற்றம் வராது என..  ” தனு நீங்க விளக்கம் கொடுக்க வேண்டியது இல்ல.. ஆனா என்னால அவங்களுக்கு விளக்கம் எதுவும் சொல்லாமா.. இருக்க முடியல. உங்க வார்த்தைகள சரியா புரிந்துக் கொள்ளாமா.. இதே மாதிரி வேறு யாரிடமாது நம்மள சொல்ல மாட்டாங்கனு என்ன நிச்சயம்?.  “

     ஒருத்தவங்கள கல்யாணத்திற்கு என்று நாலுபேர் கேட்பாங்க..  அதில் நமக்கு விருப்பம் இல்லையேனு சொல்வது வேற.. இந்த கண்டிஷனினால் மட்டும் தான் நாம கல்யாணம் பண்ணப்போறோனு சொல்வது வேறு. அதான் இப்பயே சொல்லிட்டேன். “

   நீங்க வசுந்தராவிடம் பேசிய விஷயம் எப்படியும் பெரியவங்க காதிற்கு போய்விடும். உங்கள கேட்பாங்களோ.. இல்லையோ. இனி யாருக்கும் இந்த வயசு விஷயம் பற்றி எக்காரணத்திற்காகவும் பேச வேண்டும் என்றோ!.. ஏன் யாருக்கும் அந்த எண்ணம்கூட வரக்கூடாது. ” அவள் தன்னவன் முகத்தை பார்க்கமால் கூறி முடித்தாள்.

    முதலில் பெற்றோர்களிடம் நலனிற்காக அவர்களிடம் இருந்து தங்களை குறித்து மறைத்தும், தனக்காக மட்டுமே இவ்வளவு நாள் அமைதியாக இருந்த தன்னவனிற்காக.. தான் இப்போது அனைவரிடமும்.. இதுபோல் இனி யாரும் பேசக் கூடாது என.. என்ன இவ்வளவு பேசுகிறாள்?.. என்று கோபமாக, திமிர் பிடித்தவள், சுயநலம் பிடித்தவள் என வேறு என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று வசுந்தராவிடம் பேசிவிட்டாள் தான். ஆனால். இனி இதுபோல் பிரச்சனை வந்தால் தன்னால் தாங்க முடியுமா?.. என்றும்.. அவளிற்கு எல்லோரிடமும் உண்மையை கூறிவிடலாம் என்றுக்கூட எண்ணம் வந்துவிட்டது. ‘ 

      ‘அதன்பின் பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள்.?. ‘

     அனைவரிடமும் தாங்கள்.. தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து அதன்படி செய்துக் கொண்டுயிருக்கிறோம் என அனைத்தையும்.. ஏதோ இளமை திரும்பியது போல வேகமாக செய்துக் கொண்டுயிருக்கிறார்கள் என்பது இனிப்பு கடை, இந்த இடம் ஆரம்பமாகி இருப்பதில்லேயோ தெரிகிறது. எவ்வளவு யோசித்து தன் அண்ணா, மாமா, மகன், மருமகன் ஆகியவர்களின் துணையுடன் அனைத்தும் முழுவேகத்தில் செய்துயிருக்கிறார்கள். இவையெல்லாம் யாருக்காக தங்கள் இருவருவாக மட்டுமே. வேண்டாம் வேண்டாம்.. இந்த எண்ணம் வரக்கூடாது. ‘ சட்டென்று தன்னவனின் தோள்மீது ஒருநொடி சாய்ந்து பின் சாதாரணமாக அமர்ந்து விட்டாள்.

   அவள் என்ன நினைத்து சாய்ந்திருப்பாள் என ஓர் அளவிற்கு உணர்ந்து.. ” முயல்குட்டி என்ன பாரு. ”

    தன்னவனை பார்த்தவள்.. ” முயல்குட்டி நாம்ம ஒரு நல்லதிற்காக ஒன்ன மறைக்கிறோம்.. அதேசமயம் நம்ம விருப்பத்தையும் நிறைவேற்றும் போது..  இந்த மாதிரி சில நிகழ்வுகள சந்தித்துதான் ஆகனும் அரசிம்மா. ஆனா இரண்டுபேரும் ஒன்னா அந்த இடத்தில் நின்றுயிருக்கனும். என்னால இங்கவும் இருக்க முடியல.. அங்கயும் வர முடியல.  நீ தெளிவா பேசினாலும்.. உன் உடம்பு இன்னும் நடுங்குது முயல்குட்டி. இப்படி இருக்காவாடி..  நீ சொன்னவுடன் இங்க வந்தேன். ” அவள் அமைதியாக இருக்க..

     சரிவிடு முயல்குட்டி இன்னும் கொஞ்சம் நேரத்தில் சரியாகிடும். சீக்கிரம் சாப்பிடு.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும். நாம்ம மண்டபத்திற்கு போகும் முன்ன உங்க வீட்டிற்கு போய்ட்டு போலாம். ” சற்று தெளிவு பெற்றவள்.. சரி என மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தாள். பின்சாப்பிட்டு முடித்து.

    ‘ அவர்களின் மெல்லிய புன்னகையை பார்த்து.. இவர்களை பார்த்திருந்தவர்கள் நிம்மதி கொண்டனர். வேந்தனின் கண்டிஷன் மூலமாகவே.. இல்லையோ.. இவர்கள் இருவரும் தான் ஒருவருக்கொருவர் வாழ்க்கை துணையாக வேண்டும்.. என பிறந்தவர்கள். அவர்கள் மனம் வருந்தக்கூடாது. இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது எனவும்.. ‘

   ‘ இவர்களை பற்றி அறிந்தவர்கள்.. இன்னும் என்னவெல்லாம் இவர்கள் சமாளிக்க வேண்டுமோ!.. என்று பார்த்தார்கள். ‘

      

   

     

   

    

   

   

   

    

   

   

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!