Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 24. 2

 

நாம் 24 (2 )  

 

    ” ஆமாம் மா. காலையில் அண்ணா வந்தப்ப நீங்க பார்த்துவிட்டு குளிக்க போயிட்டிங்க. அப்ப அண்ணா காரில் இருந்ததை  ரூம்மில் எடுத்து வைத்தார். சரி நம்ம எல்லோருக்கும் ஏதாவது இருக்கும் என நினைத்து விட்டேன். நான் கிளம்பி வந்தப்ப.. ஆர்வத்தில் அண்ணா ரூமில் இருந்தத பார்த்தேன். அங்கு சேலையோட சேர்ந்த பிளெளஸ், சுடினு டிரஸ் தச்சுயிருந்தது. வீட்டுக்கு போடுவது போல, லைட் வெய்ட்டான நகைனு சிலது ஒரு பெட்டியில் இருந்தது. சரி நகை நமக்கு வாங்கியிருப்பார். கிளம்புவதற்கு முன் கொடுப்பாருனு கீழ வந்தா.. அவர் அவங்க வீட்டுக்கு கிளம்பியதா சொன்னீங்க.



Advertisement

    அப்பதான் புரிஞ்சது.. அதில நமக்கு எதுவும் இல்லைனும்.. உங்க பையன் இத்தனை நாள் நமக்குனு சேர்த்து வைத்தது எல்லாம்.. இப்ப அவங்க வருங்கால மனைவிக்கு சேலை, நகையா மாறிவிட்டது. இனி அண்ணாவிடம் எதையும்.. எதுவும் எதிர்பார்க்க கூடாதுனு. எனக்கு நல்லாவே புரியுது. “

    ” வசும்மா.. எழிலரசிக்கு  வாங்கினா என்ன?. உனக்கு அதில் ஏதாவது பிடித்தா நீ வாங்கி போட்டுக்க. இதுக்கு எதுக்கு இப்படி கவலப்படுற. ”

   அட போம்மா. உனக்கு ஒன்னும்.. இல்ல இல்ல நமக்கு ஒன்னும் தெரியாது. உன் மகனும், மருமகளும் நான் கேட்டவுடன் கொடுத்துட்டு தான் மறுவேல பார்ப்பாங்க. ”

Advertisement

    உறுதி அன்று வேந்தன் வாங்கிய உடையை தனக்கு தரமறுத்தது.. கூறிய காரணம்.. அதற்கு வேந்தன் ஒன்றும் கூறாமல்.. தனக்கும் அரசிக்கு என்று வாங்கியதை.. உனக்கு கொடுப்பதில் விருப்பமில்லை.. புதிதாக வேறு வாங்கிக் கொடுத்து.. அதை தான் அணிந்ததை கூறினாள். ‘

Advertisement

    என்ன வசு.. இப்படி ஒன்னு ஒன்னையும் இரண்டாவா வாங்க முடியும். டிரஸ் விலை கம்மி பிரச்சனையில்ல.. நகையெல்லாம் எப்படி வாங்க முடியும்??. வேந்தன் இதை யோசிக்க வேண்டாம்மா?. “

  அண்ணா அதை யோசிக்கும் நிலையில் இல்லமா. இப்ப அண்ணாவோட மனதில், எண்ணத்தில், செயலில் எல்லாம் எழிலரசி என்றவங்க மட்டும் தான் இருக்காங்க. நம்ம எல்லாம் இரண்டாம்பட்சம் தான். நாம்ம என்னனு கூட இரண்டுபேரையும் கேட்க முடியாது.. இல்ல கேட்கும் கூடாதுனு அண்ணாவும், அவங்க வருங்கால மனைவியும் நம்ம எல்லோருக்கும் இன்னைக்கு காலையில் தான் கட்டளையிட்டு இருக்காங்க. ” என காலையில்.. அண்ணா கோபப்பட்டது.. எழிலரசி கூறியதையும் கூறினாள்.

   என்ன வேந்தன் வயசு பற்றி பொதுவா சொன்னானா?.. அதை வைத்து பார்த்தது தானே இந்த வரன். இவன் என்னடி புசுசா சொல்லுறான்?. சரிவிடு எப்படியோ எழிலரசிய வேந்தனுக்கு ரொம்ப பிடித்துயிருக்கு.. இனிமேல் வயசு பற்றி யாரும் பேசக்கூடாது. முதலில் நான் அப்பாவிடம் இதை சொல்லி.. எல்லாரிடமும் சொல்ல சொல்லனும். ஆனா நீ எழிலரசி சொன்னதா சொல்வது கொஞ்சமும் ஏற்றுக் கொள்வது மாதிரில்ல. என் பையனோட தனிப்பட்ட விஷயம் எல்லாமே எப்படி அவங்களா முடிவு பண்ண முடியும். சரி விடு நானும், அப்பாவும் பார்த்துப்போம். “

Advertisement

   ஆனா நீ.. அவங்க விஷயத்தில் இனி தலையிடாத. அதான் அண்ணானா செய்யும் கடமையில் தவறமாட்டேன்.. நான் தலையிட மாட்டேனு.. இரண்டுபேரும் தெளிவா சொல்லிட்டாங்கல்ல. அதனால நீ ஒரு தங்கையா உன் கடமைய ஒழுக்க செய். தேவையில்லாம யோசிக்காத. ” சரி என்பதுபோல தலையாட்டி.. வேறு ஏதும் அவள் கூறவில்லை. அமைதியாக சுற்றிலும் பார்த்தும்.. தன் அன்னையின் முகமாற்றத்தையும் கவனித்தாள்.

   சித்ராவிற்கு.. வசுவிடம் சாதாரணமாக பதில் கூறினாலும்..  இத்தனை வருடம் வேந்தனின் எண்ணத்தை.. எப்படி தான் சரியாக புரிந்துக் கொள்ளாமல் இருந்தோம்?. ஏன் எழிலரசி கூறியதற்கு அவன் மறுப்பு கூறவில்லை?. அவனின் தனிப்பட்ட எந்த விஷயத்திலும் நான் கூட கேள்விக்க கூடாதா. ஏதோ தன் மகன் தன்னைவிட்டு சற்று தொலைவில் போய்விட்ட உணர்வு.

      அவன் கடமையில், பாசத்தில் இதுவரை குறையிருந்ததில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று அவனுக்கும் தங்களுக்கும் இடையில் இடைவெளி வர வைக்கப்போகிறது அது மட்டும் புரிந்தது. ‘ அவர் யோசித்துக் கொண்டுயிருக்க..

    அத்தை.. ” அழைப்பு அவரின் பின்புறம் கேட்க.. திருப்பி பார்த்தவர் ஒரு நொடி அதிர்ந்தார். பின் சாதாரணமாகி..” என்ன என்ன எழிலரசி?.. சாப்பிட்டிங்களா ?.. ” அருகில் இருக்கும் வேந்தனை பார்த்து கேட்க.

     ” இல்ல அத்த இனிமேல் தான் போகனும். தனுவோட வேலை பார்த்தவங்க உங்கள பார்த்து கிளம்புவதா சொன்னாங்க. அதான் கூப்பிட வந்தோம். ” அவர் வேந்தனை பார்க்க.. அவன் போனில் ஏதோ செய்துக் கொண்டுயிருக்க..

    அவன் கேட்க வேண்டியதை எழில் கேட்குறா.. பெருமுச்சுவிட்டுபோகலாம் எழில்திருப்பி வசு, நந்தினியை ஒரு பார்த்துவிட்டு சொல்ல.

    அவர்களுடன் போகும்  சித்ராவை பார்த்த இருவரும்.. அவர் மனதில் உள்ளதை நன்றாகவே கணித்தார்கள். எழிலரசியின் மீதான கோபத்தை அவர் மூலம் காண்பித்து சற்று தங்கள் மனக்குறையை போக்கிக் கொண்டனர்.

     சித்ரா தன் மகன், மருமகள் உடன் நிஷா, அனு, ராகினி, ஆர்த்தி நால்வரும் இருக்கும் அறைக்கு வந்தனர். நால்வரும் வரும்போது ஆகாஷ் உடன் காரில் வந்தவர்கள்.. ஆகாஷ் குடும்பம்.. ஶ்ரீரங்கம் சொல்ல வேண்டும் என அவனின் அம்மா கூறியிருந்ததால்.. அவரவர் வீடு செல்ல தாமதம் ஆகும் என்று.. ஆகாஷ் அவர்கள் நால்வருக்கும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல ஏற்பாட்டு செய்திருந்தான். அதனால் அவர்கள் கிளம்ப முன் சித்ராவை பார்க்க நினைத்தால் அவர் வர..  அவரிடம் அறிமுகம் செய்யக்கொண்டனர். 

    நிஷா வேந்தனை பார்த்துக் கொண்டே.. ” அம்மா.. நாங்க அண்ணாவிற்கு சொன்ன சூப்பரை!. உங்கிட்ட சொல்ல.. காலையில் இருந்து நேரம் பார்க்கிறோம் பேசவே முடியல. இப்ப கிளம்ப வேண்டிய நேரமே வந்துவிட்டது. “

     புரியாமல்.. ” எதுக்கு ம்மா. நீங்க எனக்கு  சூப்பர் சொல்லுனும்?. ” அரசியையும், வேந்தனையும் பார்க்க அவர்கள் புன்னகையுடன் இருக்க..

     அது வந்து அத்தை.. நீங்க தனுக்கு வினோ அண்ணிக்கு, வசுந்தராவுக்கு பூப்பெய்தல், அதன்பிறகு மாதாந்திர டைட்மில் பார்த்து கொள்வது பற்றி.. அவங்க சின்ன வயசிலே சொல்லிக் கொடுத்ததினால்.. அதை இப்ப வரையும் அவர் முடிந்தளவு பார்த்துக் கொள்ளவர் இல்ல. அதை இவங்க ஒருதடவை அவங்களுக்கு ஒரு சமயத்தில் உதவி செய்தததன் மூலமா.. நீங்கதான் சொல்லிக் கொடுத்தீங்கனு  தெரிந்துயிருக்கு. அதனால சொல்லிக் கொடுத்தற்கு சூப்பர்னு!. சொல்லுறாங்க. ” தனக்கானதையும் சேர்த்து மலர்ந்த புன்னகையுடன்..  வேந்தனை ஒரு பார்வை பார்த்து கூறினாள்.

    புன்னகையுடன்.. ” .. அதுக்கா. அப்ப எனக்கு என் முதல் மகள..  ஸ்கூலில்  அவன் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையிருந்ததால்.. எல்லா நல்ல விஷயத்தையும் சொல்லிக் கொடுக்கிறோம்.. இதில் என்னயிருக்குனு யோகாவோடு சேர்த்து சொன்னேன். வேந்தன் அதை புரிந்துக்கொண்டான். ஆனா மாதமாதம் பார்ப்பதெல்லாம்.. அவனுடைய சுயமான முடிவு தான். எனக்கு சொன்ன சூப்பரில் அவனுக்கும் பங்குயிருக்கு. “

    ஆனா இதை சொல்லி வாழ்த்த அவசியம் இல்ல.. இதை நீங்க உங்க வீட்டில் இருக்க, தெரிந்த ஆண்களிடம் சொல்லி.. அவ அவங்க வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்துக்க சொல்லுங்க. உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு கண்டிப்பா சொல்லிக் கொடுங்க அதுபோதும். அதுமாதிரி நீங்க ஒரு ஆணிடம் சொல்லி.. அவங்க ஒரு பொண்ண பார்த்துக்கிட்டா கூட.. அது எனக்கு 1000 சூப்பர் சொன்ன மாதிரி. “

       புன்னகையுடன் தலையசைத்தவர்கள்.. அப்போது அறைக்குள் நுழைந்த வினோத், திலகனும் ஒரு பெரிய கவர் ஒன்றை எழிலரசியிடம் கொடுத்துவிட்டு சென்றனர். அதனை அவள் சரிப்பார்த்துக் கொண்டுயிருந்தாள். இதை பார்த்தவுடன் சித்ராவிற்கு இப்போது தன் உரிமையும் பாதியானது போல உணர்வு வந்தது. சில நிமிடங்களில் எழிலரசி நான்கு கவரை இரண்டாக பிரித்து.. வேந்தனிடமும், சித்ராவிடமும் கொடுத்தாள்

     என்ன?. எதுக்கு?.  என்பது போல சித்ரா வேந்தனை பார்க்க.

    ” ம்மா.. நான் இந்த வேலையில் என் பொறுப்பில் இருந்த முக்கியமான வேலையை இவ்வளவு சீக்கிரமா முடித்து.. இங்க இருந்தே என்னால வேலை பார்க்கும் நிலைக்கு வரக்காரணம்.. இவங்க நாலுபேரும் எனக்காக அதிகநேரமும், வார இறுதியிலும் வேலை பார்த்தாங்க. அதனால அரசி அவங்களுக்கு சேலை, நகைகாயின், ஸ்விட்பாக்ஸ் சேர்த்து நாலு பேருக்கும் கொடுத்தா நல்லாயிருக்கும் சொன்னா. அதான் இது. ”

    சித்ரா உள்ளியிருக்கும் பொருட்களை பார்த்தவர்.. ” ம்.. எப்படியும் 1லட்சம் கிட்ட இருக்கும்போல..  எழில் ஆசைப்பட்டதை நீ உன் காசில் வாங்கியிருக்கியா?.. இல்ல எழில் தனியா வாங்கியதா?.. “

   சித்ரா அவ்வாறு கேட்டதும் பதட்டத்துடன் உடனே  தன்னவளை பார்த்தான்.. அவள் நால்வரிடமும் புன்னகையுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.

    சற்று இறங்கிய குரலில்ம்மா நான் கேட்டு அவங்க சரியான நேரத்தில் உதவி செய்தற்கு.. சென்னையில் இருக்கும் போதே நான் பண்ண வேண்டியதை.. அரசி அவங்க இங்க வந்தினால் சொன்னா. நான் அங்க ஏதாவது செய்துயிருந்தா கூட பெரிய ஹோட்டல்  போய் ஒரு நேர சாப்பிட்டிற்கே ஒரு 10ஆயிரம் வரை ஆகி இருக்கும். ”

    ஆனா இப்ப அரசி.. அவங்க என்னை அண்ணா கூப்பிடுவதற்கு ஏற்றார் போல 4 தங்கைகளுக்கு நகை, புடவைனு வாங்க சொல்லியும்.. ஆகாஷ் பதிலா அவன் தங்கைக்கும் சேர்த்து.. உங்க பையனோட 1லட்சத்தை.. விலைமதிக்க முடியாத பொருளா மாற்றியிருக்கா. இதனால எனக்கு எந்த நஷ்டமும் வந்துவிடாது. உங்க பையன் பணம் போகுதேனு நீங்க கவலபட வேண்டிய அவசியம் இல்ல. “

    வசுவிடம் அம்மா பேசுவதை பார்த்தே தெரிந்தது. அவள் அம்மாவிடம் அனைத்தும் கூறியிருப்பாள்.. இதுபோல கேள்விகள் வரும் என்று அவன் எதிர்பார்த்து தான்.. நான் அவர்கள் மகன் பணத்திற்கு விளக்கம் கொடுக்க முடியும்.. ஆனால் அரசி கூறியதால் நான் செய்து பற்றி.. தன்னுடையது.. அரசியுடைய  பணம் என்று தனித்தனியாக அதற்கு விளக்கம் கொடுக்க முடியாது என்று இவ்வாறு கூறினான்

    சித்ராவோ.. தன் மகனின் தனிப்பட்ட விஷயம் என்று கேட்டத்தில் இருந்து.. அவர்களின் இருவருக்கும் மட்டுமேயான சில விஷயங்கள், பிரச்சனைகள், சண்டை, சமாதானம் இவை வேண்டுமானால்.. யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.. கூடவும் கூடாது. ஆனால் இதுபோலனா இருவருக்குமான சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என கேட்க

     வேந்தன் உங்கள் மகன் பணத்திற்கு பதில் வரும்.. ஆனால் எழிலுக்காக தான் செய்து பற்றி எந்த பதிலும் வராது என்பது போல பதில் அளித்ததில் அவருக்கு வருத்தம்தான். அதைவிட தான் கேட்டது எழில் காதில் விழுந்துவிட்டதா?. என்ற அவனின் பதட்டம்.. எவ்வாறு எழிலின் பணமா?. என்று கேட்கலாம். என் பணம், அவள் பணம் என்று தனித்தனியாக உள்ளதா?. என அவரை அவன் குற்றம் சாட்டியாது போல இருந்தது

     ஆனால் அவர் நினைத்தது.. அவர்களுக்கு நன்றி செய்ய விருப்பினால் தங்களிடமும் கூறிதான் செய்யவேண்டும். அதை செய்யாமல் இருவராக இல்லை.. ஒருவராக முடிவு செய்து.. செயல்படுத்துவது குடும்பத்திற்கு நல்லது கிடையாது. ஆரம்பத்திலே சிலவற்றை தடுத்தால் தான்.. பின்னால் யாருக்கும் கருத்துவேறுபாடு வராமல் இருக்கும். என மனதை தேற்றிக் கொண்டு அவர்களை பார்க்க.. நால்வரும் கிளம்பியிருந்தனர். கூடவே எழிலில் சற்று கலங்கிய கண்களுடன் வேந்தனை பார்த்திருந்தாள். ஏன்?.. பின் புன்னகையுடன் பார்த்தாள்.. ஏன்?.. 

    வேந்தன் அம்மாவிடம் பேசியபின் தன்னவளையே பார்த்தான்.. அவள் ராகினியுடன் பேசியபடி தன்னை பார்ப்பதையும். நேரத்தை உணர்ந்து.. ” ம்மா கொடுங்க.அவன் வைத்துயிருந்த இரண்டு கவரையும் கொடுத்து.. அவர்களுக்கு கொடுக்க வைத்தான்.

     நால்வரும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வேந்தனுக்கு உதவி செய்தால்.. வேந்தனை சிறுமுறைப்புடன் பார்க்க நினைத்தவர்கள்.. எழிலரசி தங்களின் கல்யாணத்திற்காக.. ஆகாஷ் தங்கைக்கும் தான் என சில சமாதானம் செய்துயிருந்ததால்.. பின் நால்வரும் அதனை இன்முகத்துடன் சித்ராவிடம் வாங்கிக் கொண்டனர்.

    ஆகாஷ் சற்று முன்பே கிளம்பியிருக்க.. எழிலரசி அறையிலேயே விடைகொடுக்க.. சித்ரா வரும்வழியில் விடைகொடுக்க.. அவர்களை திலகன் டிராவலஸ் காரில் விமான நிலையத்திற்கு வழியனுப்பி வைக்க வந்த வேந்தனை நால்வரும்..’ தங்களை இருவருடம் தன் தலைமையில் கீழ் தங்களின் பணிகளை திறம்பட நடந்த உதவியவருடன் இனி பணியாற்ற முடியாதே. இனி கல்யாணபத்திரிக்கை கொடுக்கும் போதுதான் பார்க்க முடியும் என்ற சிறு வருத்தத்துடனும்.. ஆனால் தங்களுக்கு அண்ணா.. என்ற புது உறவையே உருவாக்கியுள்ளார் மகிழ்ச்சியும் கலந்து கிளம்பினர். ‘

 

   அறையில் இருந்த எழிலரசியோ.. சற்றுமுன் நால்வருடன்  பேசியதை நினைத்திருந்தாள்.  ‘

   என்ன ராகினி நீங்க நல்லா பேசுவிங்கனு.. தனு சொன்னாங்க. ஆனா வந்ததில் இருந்து பேசமாம அமைதியா இருக்கிங்க. உடம்பு நல்லாயிருக்கு தானே?.. ”

    சட்டென்று கேட்கவும் புரியாமல் முழிந்தவள்.. நான் அமைதியா?. ” இல்ல எழில் நான் அமைதியா இருக்கல.. நான் உங்கள தான் வந்ததில் இருந்து பார்த்துட்டு இருந்தேன். ”

    ஏன்?. ‘ என்பது போல எழில் பார்க்க..

    ” 15நாள் முன்ன.. வேந்தன் அண்ணா உங்கள் உடல்நிலை நினைத்து.. அப்படி நடுங்கினாங்க. அடுத்த கொஞ்ச நேரத்திலே.. கோபமா!. உங்க அண்ணாவிடம் பேசினாங்க. நாங்க சாப்பிட்டு வர சிறிது நேரத்தில் ரிசைன் பண்ணிவிட்டேனு முடிவு எடுத்துவிட்டாங்க. அண்ணாவ நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறதில்.. நீங்க ரொம்ப லக்கினு!. அப்ப நினைத்தேன். ”

    அரசி.. தன்னை நினைத்து அந்நாளில் தன்னவனின் நிலையை நினைத்து கண் கலங்கினாள். 

    ஆனா இங்க உங்கள காலையில் இருந்து இப்ப வரைக்கும்.. நீங்க அண்ணா பற்றி பேசும் போது.. பார்த்துக் கொள்ளும்போது.. அண்ணாவ யாரும் தப்பா நினைக்ககூடாதுனு.. அவங்க தங்கச்சி.. உங்க மேல கோபபட்டாலும் பரவாயில்லை என்று..  நீங்க அவங்களிடம் பேசியது.. இது எல்லாம் பார்த்த பின்தான் தெரியுது.. அண்ணா தான் லக்கினு!. ” 

   அரசியின் கலங்கிய கண்களை இப்போதுதான் கவனித்த ராகினி.. புன்னகையுடன்.. ” ஆனா எழில்..  நாங்க இரண்டு வருஷமா அவர் பேச மாட்டாறானு நினைத்துயிருக்கோம்.  ஆனா இந்த 15நாளா.. இவர் எப்படா வாய் முடுவாருனு?. நினைக்க வைச்சுட்டார். ” அரசி அவளை முறைக்க..

   ” பின்ன என்னங்க.. நாங்க ரொம்ப நேரம் தொடர்ந்து வேலை செய்யறப்ப நடுவில் ஏதாவது பேசும் போது இவர பேச வைக்க உங்க பேர சொன்னா போதும்.. அரசிபுராணம் தான். வேற எதுவும் பேசமாட்டார். நீங்க மாமாவ எல்லாம் அண்ணானு கூப்பிடுவிங்க.. அதனால உங்களுக்கு நிறைய அண்ணா இருக்காமே. அதனால எனக்கு நிறைய மச்சான்கள் இருக்காங்க. அதனால நான் ரொம்ப அரசியிடம் கவனமா தான் நடந்துக் கொள்ளனும் சொல்லுவாங்க. “

     ” நீங்களும் நல்லா ஞாபகம் வைச்சுக்கோங்க. அவருக்கும் நாங்க நாலு தங்கச்சிங்க இருக்கோம். பார்த்து அண்ணாவிடம் நடந்துக்கோங்க. ”

    இவ்வளவு நேரம் புன்னகையுடன் தன்னவனை பார்த்திருத்தவள்.. அவர்களின் எச்சரிக்ககையை ஏற்று.. தன்னவனிற்கு நேரம் உணர்ந்து உதவியதற்கு, கல்யாணத்திற்கு தங்கச்சிகளை அழைத்தல்.. என கலந்து கொடுத்த அவர்களின் பரிசை ஏற்று கிளம்பி சென்றனர் அவளின் நாத்தனார்கள் நால்வரும்.

    அவளிற்காக தனு அன்று நடந்துக் கொண்டவிதம் பற்றி ராகினி கூறியதை நினைத்திருந்தவள்..  அன்று என்னுடன் இல்லை என்றும்.. என்னை தன்மடியில் வேண்டும் என ஏங்கியிருப்பான் அவள் நினைக்கவும்.. சட்டென்று கதவு திறந்து அவளவன் வரவும் சரியாக இருக்க.. வந்தவன் தன் கையில் இருந்ததை அங்கு இருந்த டேபிள் மேல் வைத்த.. அடுத்தநொடி தன்னவனின் மார்பில் சரணடைந்தாள்.

 

  

   

 

   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!