Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன்- 03

 

நாம் 3

       காலை 8.45

       ரவிந்திரன், சித்ராவும் காலை உணவு உட்கொண்டுயிருக்க.. “  சித்ரா.. வேந்தன்  தூங்குறான் தானே?? ” யோசனையுடனே கேட்க..



Advertisement

     ம்.. நல்லா தூங்கிட்டுயிருக்கான். ”

     மாடி படியை ஒருபார்வை பார்த்துவிட்டு..  சித்ரா நாம்ம வேந்தனுடைய  விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்து.. அவன் விருப்பபடி இனி வரன் பார்க்க ஆரம்பித்தா சரியா இருக்கும் நினைத்த.. மூன்றாம் நாள் ஒரு வரன் வந்துயிருக்கு சொன்னேன் தானே?. ”

    ‘ ஆம் ‘ என தலையசைத்த சித்ராவிற்கு கூடவே வேந்தனின் விருப்பம்  ‘ உறவுகளுக்குள் திருமணம் செய்யமாட்டேன். இருவருக்கும் வயது வித்தியாசம்  5  இருந்து 7-லுக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும். ‘ என்பதும் ஞாபகம் வந்தது.

Advertisement

 

Advertisement

     ” ம். சித்ரா வரன் பெண்ணிற்கும், நம்ம வேந்தனிற்கும் பொருத்தம் எல்லாம் ரொம்ப நல்லா.. அம்சமா!. அமைந்து இருக்கு மா. வேந்தனிடம் நாம்ம நினைத்தது பற்றியே ஒன்றும் சொல்லல. இப்ப இந்த வரம் பற்றி பேச வேண்டுமே?. ” கூறிக்கொண்டு இருக்கும் போதே..

    அப்போது ரவிந்திரனின் தொலைபேசியின் அழைப்புமணி.. அவரை அழைத்தது.. மிகவும் மகிழ்ச்சியுடன்.. தன் மனைவியிடம் அழைப்பு.. யார்?? என்று  காண்பித்து..  தாங்கள் பேசப் போவதை சித்ராவும்  கேட்பதற்காக.. ஸ்பீக்கரை அழுத்திவிட்டு.. புன்னகை முகமாக அழைப்பை ஏற்றார். 

 

Advertisement

       ” வணக்கம். நல்லாயிருக்கிங்களா??.. ” பின் அவர்கள் கூறிய செய்தியைக் கேட்டதில்.. இருவரும் மகிழ்ச்சி அடைய.. ” ரொம்ப சந்தோஷம்!. கண்டிப்பா. சரிங்க..சரிங்க.. வணக்கம். போன் வைக்கிறேன். ” மீண்டும் வேந்தனிடம் பேச வேண்டுமே என யோசனையுடன் இருந்தார்.

     ரொம்ப சந்தோஷம் மா இருக்குங்க.. என்ன திருப்ப யோசிக்கீறிங்க?.. அதான் வேந்தனின் விருப்பத்திற்கு ஏற்ற வரன் தானே. அதெல்லாம் அவனுக்கு பிடிக்கும்!. கவலைப்படாதிங்க.

      நீங்க மாமா(ரவிந்திரனின் தந்தை), அத்தை( அம்மா)..  மாணிக்கம் மாமா, அக்கா, மகேஷ்வரன், யோகலட்சுமி , கார்த்திகேயன், விஸ்வநாதன் மாப்பிள்ளை, வினோதினி, இவங்களிடம் வரன் பற்றிகூறி பசங்களுக்கு லீவ் தானே.. அதனால அவங்கள நாளைக்கு வீட்டிற்கு வர சொல்லி.. அவங்க இருக்கும் போது வேந்தனிடம்  வரன் பற்றி பேசலாம்.. அப்பதான் அவன் ஏதாவது சொன்னா?. நாம்ம சமாளிக்க முடியும். ”

    ம்.. நானும் இப்படிதான் யோசித்து வைத்துயிருந்தேன் சித்ரா. நீயும் அதே சொல்லிட்ட. வேந்தன் இன்னைக்கு நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும். நான் அண்ணா, மாமாவிடம் சொல்லிட்டு.. பின் எல்லாத்துக்கும் போன் செய்து நாளைக்கு அவங்கள வரச் சொல்கிறேன். அதுவரைக்கும் வேந்தன், வசுந்தரா இரண்டு பேருக்குமே தெரிய வேண்டாம். சரியா. ”

    ம். வேந்தன்வசுந்தரா இரண்டு பேருக்குமே தெரிய வேண்டாம் என்பதையும் மற்ற எல்லோரிடமும் சொல்லிருங்க. சரியா. ”

   ‘ சரி ‘ என தலையசைத்து..  பூஜை அறையின் முன் கடவுளிடம் நன்றி தெரிவித்துவிட்டு.. ” சரிமா நான் கடைக்கு கிளம்புகிறேன். ”

    தலையசைப்புடன்.. ” சரிங்க.. பார்த்து போய்விட்டு வாங்க. “

 

     தன்னை மீறி.. தன்னை சுற்றி சிலபல நிகழ்வுகள் நடந்தேறி விட்டது என்பதை பற்றி எதுவும் தெரியாமல்.. வேந்தன் காலை 10 மணிப்போல உறக்கத்தில் இருந்து விழித்தான். பின் குளித்து முடித்து.. அப்பாவின் அம்மா, அப்பா.. அம்மாவின் அம்மா, அப்பாவை பார்க்க செல்வதற்குமுழங்கை வரை மடித்து விடப்பட்ட லைட்ஆரஞ்சு பருத்தி சட்டை.. க்ரே கலர் ஜீனஸ்என தன்அறையிலிருந்து கீழே இறங்கி வந்தான்.

     வேந்தன் கீழே இறங்கி வரும்போதே வீடே அமைதியாக இருந்தது. அவனுக்கு தெரியும்  வீடு, பாத்திரம் சுத்தம் செய்வதற்கு வரும் நபரும்.. தோட்டத்தை பார்த்துக் கொள்ள வரும் நபரும் தங்களது வேலைகளை முடித்து 10மணிக்கு சென்று  மாலை தான் வருவார்கள். அவர்கள் காலை சென்ற  பிறகு மதிய உணவிற்கு தேவையான  வேலைகளை.. அம்மா டீவி பார்த்துக்கொண்டே செய்வார்.

     ஆனால் இப்போது டீவி அல்ல வேறு எந்த சத்தம் இல்லாமல் இருக்கவும்.. அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லையோ!. என நினைத்து..  பதற்றத்துடன் வேந்தன் அம்மாவை பார்க்க அவர்களின் அறைக்கு சென்றான். அங்கே பார்த்தால்  படுக்கையின் ஒருபகுதி முழுவதும் பட்டுசேலைகளும்.. மற்றொரு பகுதியில் நகைகளும் இருந்தன. அதனை பார்த்தபடி சித்ரா ஏதோ சிந்தனையில்இருந்தார்.

 

    ஒரு நொடி அவரையும் முன்னால் இருப்பதையும் பார்த்து திகைத்து!. பின் சிரித்துக்கொண்டே.. ” என்ன?? அம்மா.. கல்யாணத்திற்கு எங்காவது வெளியூர் போறிங்களா??.. பெட் முழுவதும் சேலை, நகையா இருக்கு. ”

     சித்ரா நிமிர்ந்து வேந்தனை பார்த்து மென்முறுவல் புரிந்து.. என்ன சொல்வது?. என யோசித்தார்.’ பிறகு.. உன் கல்யாணத்திற்கு தான்.. என்ன? போடலாம் சும்மா பார்க்கிறேன் என்றா.. இப்ப சொல்ல முடியும் சமாளி சித்ரா.. சமாளி. ‘

   அப்படி எங்கும் போகலப்பா. சில சேலையெல்லாம் உள்ளே மடித்து ரொம்ப நாளாச்சு.. அதான் அவற்றை எடுத்து மாற்றி மடித்து உள்ளே வைக்கிறேன். அப்படியே நகைய சும்மா தான் பார்த்தேன். சரி வாவா சாப்பிடு. பிறகு வந்து மடித்துக் கொள்கிறேன். “  சேலைகளை ஒரமாக வைத்த படியே கூறி.. வேந்தனுடன் வெளியே வர

     அம்மா ஒரு முட்டை தோசையோட ஒரு காபியும். நான் சாப்பிட்டு தாத்தா, பாட்டிய பார்த்துவிட்டுஅப்படியே கடைக்கு போயிட்டு.. பிரண்ட்ஸ் பார்த்து விட்டு.. வீட்டிற்கு வர நைட் ஆகி விடும். ”

     அப்பாடி!. நாள் முழுவதும் தப்பிச்சேன். அவரிடம் வேந்தனிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன நானே சந்தோஷத்தில் உளரிவிடுவேன் போல

    சமையலறை சென்றவாறே..” இப்பவும் ஒரு தோசை மட்டும் போதும்மா டா. ??  ஸ்கூல் படிக்கும்போது காலையில் முட்டை சாப்பிட்ட சத்துனு சொல்லி சாப்பிட ஆரம்பித்த.. நீ இன்னம் மாறல. ஆனா இதில் உன்ன கல்யாணம் செய்ய போற பொண்ணுக்கு காலை வேலை ரொம்ப மிச்சம்.. அந்த பொண்ணுக்கும் இந்த  உணவுவே காலையிலேயே  சாப்பிட பிடுச்சா இன்னும் சந்தோஷம். “ சித்ரா புன்னகையுடன் கூறிக் கொண்டே முதலில் காபி எடுத்து வர.

    அதெல்லாம் பிடிக்கும் மா. பிடிக்காட்டி நானே தோசை உற்றி.. உட்கார வச்சு ஊட்டி  பழக்கி விட்டுவிடுவேன். ” என வேந்தன் மெல்லிய புன்னகையுடன் கூறினான்.

    பாவம் டா அந்த பொண்ணு உன்கிட்ட மாட்டி இன்னும் என்னெல்லாம் கஷ்டம் பட போகுதோ. ” தன் வர போற மருமகளுக்காக வருந்திக்கொண்டு இருந்தார்.

 

      அய்யோ மா!!  அவசரபட்டுடுங்களே மா..  வர மருமகளுக்காக வருந்தக்கூடாது நீங்க .. உங்க மகனுக்கு தான்  நீங்க வருத்தபடனும்.. ஏன்னா??  உங்க வர போற மருமகள்  ஒன்னுல்ல.. இரண்டுல்ல.. நான்கு முட்டை தோசை சாப்பிட்டு.. 5வது தோசைக்கு அவங்க பாட்டியை பாடாபாடுப்படுத்திக் கொண்டு இருக்கிறாள். ‘

   

    எழிலரசி வீட்டில் உள்ளவர்கள்.. வரன் வீட்டாரிடம் கலந்து பேசி  நல்ல முடிவு எடுத்த பின்னர்.. அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். இதை எதுவும் அறியாமல்  மெதுவாக குளித்து ஆர அமர கீழே வந்தாள்.

     தாத்தா, அப்பா, அண்ணா கடைக்கு சென்று விட்டனர் என்பது பாட்டி  ஹாலில் தன் மருமகள் லட்சுமியுடன் ஷோபாவில் உட்கார்ந்து  டீவி பார்த்து கொண்டு இருப்பதில் தெரிந்தது. தன் வேலையை காட்ட ஆரம்பித்தாள்.   

 

     பாட்டி.. பாட்டி.. எழில் வந்துடேன்.. 2 தோசைக்கல் சூட இருக்கா?? ” அவர் அருகில்உட்கார்ந்து கேட்க..

      இவர்களின் உரையாடல் தன் அம்மா.. மருமகளுக்கு கேட்டாமல் அமைதியாக நடந்தது…’

      ஏம்மா எழில் 2 தோசைக்கல் சாப்பிட போறியா என்ன?? ”

     பாட்டீ.. என்ன  சொன்னிங்க?.. கேட்கல??.. நம்ம டீலீங் மறந்து போச்சா.. இல்ல அப்பாவ போன்ல கூப்பிட வா?? ”

    இல்லமா..  அதுவந்து நான் என்ன கேட்டனா… 2  முட்டைதோசை கல்லுல ஊற்றித்தரேன் சாப்பிடுறியானு?.  கேட்டேன் தங்கம். ” பேத்தியிடம் பயம்போல மெல்லிய புன்னகையுடன்கேட்டார்.

    அது.. அந்த பயம் இருக்கனும். சரி சரி காபி குடுச்சு நல்லா தெம்பா இருப்பிங்க. வேகமா போயி சுட சுட.. கொஞ்சம் வெங்காயம், மிளகு போட்ட  முட்டை தோசை ஒன்னு மட்டும்.. இப்ப எடுத்துட்டு வாங்க பாப்போம். “

    சரி சரி என  பாட்டி கூறி முதல் இரண்டு ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டாள்.. 3வதில் வெங்காயம் கம்மியா இருக்கு.. 4வதில் மிளகு கம்மியா இருக்கு.. என கூறி.. 5வது கேட்டு கொண்டு இருக்கும்போது தான்  எழிலுக்கு புரையேறி இரும்மிக் கொண்டு இருந்தாள்.

     என்ன பாட்டி என்னைய திட்டுறிங்க போல??? ” என கூறி தண்ணிர் எடுத்துக் குடித்தாள் எழில்..

     நானா?.. எதுக்கு மா? திட்ட போறேன்.. இன்னும்  2 வேணா கொண்டு வரட்டா மா. ” எனகூறியவர்..

     மனதினில் ‘ வரப்போகும் மருமகளை பற்றி உன் மாப்பிள்ளையிடம் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்..’  என சிறிது நேரம் முன் நடந்தவற்றை நினைத்தும்.. மகிழ்த்தும்.. ‘ இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தன் செல்ல பேத்திக்கு.. தான் ஊற்றிக் கொடுக்கப் போகிறனோ?.’ என்று எண்ணியும் வாஞ்ஜையுடன் கேட்டார்.

     நாயகி பாட்டி.. மனசுலே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கிங்க போல?.. “ சாப்பிட்டு கொண்டே கேட்க..

     பாட்டி ‘ ஒன்றும் நினைக்கவில்லை ‘ என தலை இடவலமாக ஆட்ட.. அவரை நம்பாத பார்வை பார்த்தாள் எழில்.

    சாப்பிட்டு முடித்தவள்.. ” சூப்பர் தோசை பாட்டி!. நடையா நடந்து தோசை ஊற்றிக் கொடுத்துக்காக நைட் உங்களுக்கு சூப்பரா!. கை,காலுக்கு ஆயில் மசாஜ் பண்ணி விடுறேன்சரியா..” என தன் பாட்டி கன்னத்தை பிடித்திழுத்து செல்லம் கொஞ்சி தன் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாள்.

 

   ‘  தன் பேத்தியை எளிதில் நிறைய சாப்பிட வைத்து தன் மருமகளுக்கு வேலை குறைத்து விட்டேன்.’  எண்ணிவாறே சமையல் மேடை சுத்தம் செய்தபின் மருமகள் அருகில் வந்தமர்ந்தார். 

 

     உணவகம் சென்ற ரவிந்திரன்.. அண்ணா மாணிக்கம், அவர் பையன் மகேஷ்வரனிடம் பெண் வீட்டாரின் அழைப்பு, அதில் கூறிய நற்செய்தியை பற்றியும்.. தங்களின் தயக்கம், அதனால் சித்ரா கூறிய யோசனையை சொன்னார்.

     ரவிந்திரன் கூறிய திருமண செய்தியை கேட்டு.. இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்கள்.. குழப்பம், கருத்து, யோசனையை கேட்டு விட்டு பிறகு.. அண்ணாவோ உன் குழப்பம் தேவை இல்லாதது எனவும்.. ஈஸ்வர் நீங்க கூறியது ரொம்ப நல்ல யோசனை. அதன்படியே நாம் செய்வோம் என்று கூறி..  முடிவு செய்த நபர்களுக்கு ரவிந்திரன் போன் செய்து.. நற்செய்தி கூறி அதனால் தாங்கள் எடுத்த முடிவைக் கூறி.. வீட்டிற்கு  கண்டிப்பாக வரும்படி அழைப்பு விடுவிக்க.. கண்டிப்பாக வருவதாக அனைவரும் கூறினார்கள்.

    அன்றைய நாள் அனைவருக்கும்.. தங்கள் எண்ணங்கள், திட்டங்கள், செயல்கள் என நல்லபடியாக ஆரம்பித்து முடித்து விட்டோம் என்று.. இனிவரும் நாட்களில்  தங்கள் குடும்பத்தில் ஆனந்தம், சந்தோஷம், குழப்பம், ஆச்சரியம், அதிசயம், கேள்விக்குறி என பலவகையான உணர்வு உள்ளவர்களை காணப்போகிறோம் என்பதை அறியாமல்..

 

    நிலவானது.. சூரியன் தன்  வேலையை மக்களுக்கு செவ்வனே செய்து விட்டு சென்ற கோடை வெப்பத்தை தணித்து.. குளுமையை மக்களுக்கு கொடுத்தது நன்றாக உறங்குங்கள்  என தாலாட்டு பாடியது. அதனை கேட்டுக் கொண்டே அனைவரும் நன்றாக உறங்கினர்.

  

   

      

     

                

    

    

     

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!