Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 32. 2

 

நாம் 32(2)

 

    வேந்தன் எழிலரசியுடன் சென்றவர்கள்.. முக மலர்ச்சியுடன் வீட்டினுள் செல்ல.. மற்றவர்களும் சற்று முன்னர் தான் வந்துயிருப்பார்கள் போல.. வீட்டில் இருந்தவர்களிடம் வாங்கிய உடைகளை காண்பித்து  இருந்தனர்.



Advertisement

   இவர்களையும் உடன் வந்த சங்கவியை  பார்த்ததும்.. ” கவி.. என்ன இவங்களோட வர?. ”

   கல்சுரஸ் திங்ஸ் வாங்க கடைவீதி போனேன். அங்க பார்த்தேன். அவங்க கூடவே நானும்  வந்துட்டேன் அக்கா. ” அவளும் பார்க்க ஆரம்பிக்க..

   வந்தவர்கள் அனைவரும் பொருட்களை கீழே உள்ள அறையில் வைத்துவிட்டு.. சத்யா மடித்தமர்ந்தும்.. ஆண்கள் ஹாலில் கால் நீட்டி அமர்ந்துவிட்டனர்.

Advertisement

   சந்துருவிற்கு புதிதாக இருந்தது. அவன் வீட்டில் ஒரு பையன் என்பதால் காலையில் இருந்து அவனிற்கு ஒவ்வொன்றும் புதிதாக இருந்தது. அவனின் உறவுகள் எல்லாம் எப்போதாவது பார்த்தும்.. நலம் விசாரிப்பு ஒன்றுயிரண்டு பேச்சோடு சரி. மற்றபடி அதிகம் பழக்கம் இல்லை. கதிரவனிடம் பழகியது கூட வீட்டில் அதிகபேர் உள்ளதால்.. அவன் மற்றவர்களிடம் விரைவில் அவன் அனைவரிடமும் நண்பன் ஆகிவிடுவான். அவன் மூலம் இன்பா பழக்கம்

Advertisement

    யாரும் தன்னிடம் ஒன்றும் வாங்கிவர கூறாத சூழ்நிலையில்..  எழிலரசிக்கு இன்பா வாங்கி வரக்கூற.. அதை அவன் செய்ய போக.. அன்று புகைபடத்தில் மட்டும் பார்த்தவள்..  மனதில் நன்றாக பதிந்ததினால் பேசபோக.. அவள் கணவனாக போகிறவன் அன்று தான் செய்த செயலில்  மகிழ்ச்சி கொண்டு.. புதுபுது உறவுகள், மனிதர்களை அறிமுகபடுத்தி உள்ளான். இப்போது ஏதோ பலநாட்கள் பழக்கம் போல திலகன், கதிரவன் நடுவில் ஹாலில் கால் நீட்டி அமர்ந்துள்ளான்

    எழிலரசி முகம் கழுவி சற்று புத்துணர்ச்சியுடன் சத்யாவிற்கும், வேந்தனின் நடுவில் அமர்ந்தபின் வேந்தனை பார்க்க.. அவன் அவளை முறைத்தபடி இருக்க.. ‘ என்ன?. ‘ என தலையசைத்து கேட்க..

    ” அரசி.. உன்னிக்கிட்ட இப்படி வரக்கூடாது சொல்லியிருக்கேன் தானே?.. ”

Advertisement

   இப்போது அவனை அவள் முறைக்க.. ” லூசா நீங்க.. நான் எதுல துடைக்க. இந்த ரூம் தங்கைகள் பயன்படுத்துவது  போல.. டவல் யூஸ் செய்து  ஈரமான இருந்தது. இந்த ஷாலில் தண்ணீர் உறிஞ்சாது. நான் ரொம்ப நேரம் உள்ள இருந்தா ஏதாவது நினைப்பாங்கனு வந்தேன்.

   தனு நாம்ம மாடிக்கு போலமா?. கால் வலிக்குது. நானும் சத்யாவும் கால் நீட்டி உட்காரனும்.. இல்ல படுத்த நல்லாயிருக்கும். இன்னும் நகைகடைக்கு போய்யிட்டு, ஊருக்கு போகனும் இல்ல. ” கோபமாக குரலில் ஆரம்பித்து.. சாதாரண குரலில் முடித்தாள்.

    ம்.. இடுப்பும் வலிக்குதா?. ” ஆமாம் இல்லை என அவள் தலையாட்ட..

    அவளை முறைத்துவிட்டு.. ” ம்மா நாங்க மாடியில் இருக்கோம். ” என அரசியை ஒரு பார்வை பார்த்து.. பின் உடன் வந்தவர்களை பார்த்தான். அவர்களுக்கு அவனின் அரசியின் மீது வைத்த ஒரு பார்வையிலேயே புரிந்து.. அவளுக்காக இப்போது மாடிக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று. அதனால் உடனே எழுந்தார்கள்.

 

      இருவரின் பேச்சின் நடுவில்.. உடைகள் பார்த்திருந்த சங்கவி.. ” எனக்கு ஏதாவது டிரஸ் வாங்கி வந்தியா அக்கா?. ” ஆசையுடன் சத்தமாக கேட்க. ” ம்.. இல்ல கவி.. நாங்க கிளம்பியபோது அண்ணா இல்ல. அதனால நான் வைத்துயிருந்தத வைத்துதான் வாங்கி வந்தேன். ”

   ஏன் அண்ணா மட்டும்தான்.. எப்போதும் காசு கொடுக்கனும்மா என்ன?. ஊரில் இருக்க மாமாவிற்கு வாங்கியிருங்க.. உனக்கு எல்லாம் வாங்கியிருக்கப்ப.. எனக்கு மூனுபேரும் சேர்ந்து ஒரு டாப்பாவது வாங்கி வரமாட்டிங்களா?. ”

   அண்ணா இருந்தால் வசு போல காசு கேட்டுயிருப்பாள்.. அம்மா தூங்க.. வினோவிடம் கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லைஇவளுக்கு தன் காசில் வாங்கவும்.. அதிகம் பணம் இல்லை. மூவர் சேர்ந்து வாங்கலாம்..  என்ற யோசனை வரவில்லை.

   ஆனாலும் மற்றவர்கள் முன் இவ்வாறு கேட்கவும்.. ” இல்லடி வாங்கியிருப்பேன். அண்ணியோட தங்கை வசு.. டிரஸ் பர்சேஸ் முடிந்து.. இங்க வந்து இவங்களோட.. திருப்பி நகை வாங்க போனும்மா. அதனால அவரசமா உடைகள் எல்லாம் வாங்கினோம். வெறும் ஜூஸ் மட்டும் குடித்துவிட்டு.. இங்க வந்துதான் சாப்பாடே சாப்பிட்டோம். இதில் உனக்கு எங்க எடுக்க?. ” அவர்கள் கடைக்கு சென்றிருந்தாலும்.. வேந்தன் விஸ்வாவிடம் உணவு எதற்கும் வாங்கி வைக்கக் கூறினான்.

   .. அப்படியா. சரிசரி. நான் அண்ணியோட அடுத்த வாரம் போய் வாங்கிக்கிறேன். ” கூறியவள்..

   வேந்தன் எழுந்து சித்ராவிடம் பேசுவதையும், அவர் பார்வையில் மற்றவர்களும் எழுவதை பார்த்தாள். ஹோட்டலில் திலகன் எழில் கூறி.. வேந்தன் செய்யனும் சொன்னா போதும்.. நானும், மச்சானும் செய்வோம் எனக்கூறியது ஞாபகம் வந்தது. அதுபோலவே தான் இருந்தது.. வேந்தனின் ஒருநொடி பார்வையை தன்னவள் மீது வைத்து பின் இவர்களை பார்த்ததும்.. பின் எழுந்தார்கள். இவளை போலவே மற்றவர்களும் அவன் அரசியை பார்த்ததை பார்த்தார்கள்.

   சரி என அவர் கூற.. சித்ரா வேந்தனிடமோ, அரசியிடமோ சென்ற வேலை எப்படி?. என கேட்காததால்.. அரசியும் அவரிடம் ஒன்றும் பேசவில்லை. புன்னகை மட்டுமே செலுத்தி கடந்துவிட்டாள்.

   வேறு என்ன பேச எனவும் தெரியவில்லை. அவள் ஆரம்பத்தில் இருந்தே.. இன்னும் மனம்விட்டு பேசும் சூழ்நிலை அமையவில்லை. சாதாரண விசாரிப்பு மட்டுமே. ஆனால் அவர்கள் பையன் என்றால் மட்டும்..  அவனின் உள்ளே எவ்வளவு சொல்லமுடியுமோ.. சென்று புதைத்துக்கொள்வாள்

   மாடியிலும் அவர்கள் பேசிக்கொண்டுயிருக்க ஹாலிலேயே எல்லோரும் இருக்கலாம் என கூற.. ஆண்கள் வினோ அறையில்  தங்களை சுத்தப்படுத்த சென்றுயிருக்க.. முதலில் வெளியே வந்த வேந்தன்.. சத்யா உட்கார்ந்தும்.. அவளின் பக்கத்தில் தலையணை வைத்து உறங்கியிருந்தாள் எழிலரசி. வேந்தன் இதனை எதிர்பார்க்கவில்லை. தன்னவளிற்கு அவ்வளவு டையாடா?. என்று பார்த்தான். 

    அவனிற்கு ஒன்று மட்டும் தெரியாது. அரசி எப்போதும் அவனுடன் இருக்கும் நேரங்களில் எவ்வளவு புத்துணர்வுடன் இருக்கிறாளோ.. அதே அளவிற்கு அவன்கூட இருக்கும் போது உடல்சோர்த்து போகும் நேரத்தில்.. அவனின் அணைப்பில் உறங்க வேண்டும்.. இல்லை மடி, தோளில் படுத்து உறங்குது கூட மிகமிக பிடித்த விஷயம். இப்போது எப்படியும் தன்னை மடிமீது வைத்துக்கொள்வான்.. இல்லை பக்கத்தில் அமருவான்.. அவனின் சுவாசத்தை மிக அருகில் உணருவேன் என எண்ணி உறங்கிவிட்டாள். ‘

 

   சத்யா நீ படுக்கலையாம்மா?.. ” கேட்டபடி தன்னவளை  தலையணையில் இருந்து தன் மடியில் வைத்துக்கொண்டு.. சத்யாவிடம் அதை கொடுத்து கேட்டான்.

   வாங்கியவள் அதை முதுகில் வைத்துக்கொண்டாள். ” இல்லனா.. என்னால தூங்கினா.. இவள மாதிரி கம்மிய நேரத்தில் எழமுடியாது. படுத்தா குறைத்து 3மணி நேரமாவது தூங்கனும். இல்ல தலைவலி வந்து.. அடுத்து ஒன்னுமே பண்ண முடியாது. “

    இதனை கேட்டபடி வந்த திலகன்.. ” ஏம்மா.. என்னோட சில நாள் நைட் தூக்கமே அவ்வளவுதான். உனக்கு மதியம் தூங்க அவ்வளவு நேரம் வேண்டுமோ. என்பாடு.. ” அவனை அவள் முறைக்க..

    .. தன்னவளிற்கு பொது இடத்தில் தங்களை பற்றி பேசினால் பிடிக்காது இல்ல.. ” ம்.. சரிம்மாவிடு. என்னைய மட்டும் முறைக்கிற.. ஆனா உங்க அண்ணண் மட்டும் எங்க போனாலும், எங்க இருந்தாலும் எழிலை கூடவே வைச்சுப்பான். அவன மட்டும் ஒன்னும் சொல்லாத. ” குறையாக அவளை திட்டி வேந்தனின் பக்கத்தில் படுக்க.. பின் வந்தவர்கள் கால்நீட்டி அமர்ந்து பேசியபடி  இருந்தவர்களும் உறங்கிவிட..

   அப்போது அரசி தன் கால்கள், பாதங்கள் பிடிக்க.. நீட்ட என இருந்தால். சில நேரங்களில் கால்கள் வலிக்கும் போது.. தசைகள் பிடித்துக் கொள்ளும் என கூறியிருந்தாள்.

    அதிகம் வலிக்கிறது போல என எண்ணியவன்.. அவளின் தலையை ஒருநொடி கீழே வைத்து எழுந்தான்.. ” சத்யா நீங்க அரசிய மடியில் வைச்சுக்கோங்க. நான் இதேவரேன். ”

    கீழே செல்ல.. முன்பு இருந்தவர்கள் இருந்த இடத்தை விட்டு நகராமல் ஏதோ தீவிரமாக பேசியபடி இருந்தார்கள். இவனை பார்த்தும் அமைதியாகி.. வேந்தன் ஏதேனும் தங்களிடம் கேட்பான் என அவன் முகத்தை பார்க்க.. அவன் யாரையும் பொருட்படுத்தாமல் நேராக சமையலறை சென்று நல்லெண்ணெய் சூடுபடுத்த ஆரம்பித்தான்.

   காலையில் சிறிது நேரமே அங்குயிருந்தாலும்.. தோசை வேகும்நேரம் அங்கு வெளியில் வைத்துயிருக்கும் பொருட்களை கவனித்தான். அதனால் யாரையும் கேட்க தோன்றவில்லை. ஆனால் வினோ அப்படியிருக்க முடியுமா.

    ” அண்ணா  என்கிட்ட சொன்னா.. இதை நான் பண்ணி தரமாட்டேனா?. யாருக்கு?. ”

    மிதமான பதம் வந்துவிட.. சிறிய கிண்ணத்தில் ஊற்றிவிட்டு.. ” அரசிக்கு வினோ. கால்வலி போல. அதான். “

   அவ்வளவுதான் என அவள் பதில் கூறும் முன்.. அவன் மாடி நோக்கி சென்றுவிட்டான். இவனை என்ன தான் சொல்வது?. என.. சித்ரா வருத்தத்துடன் பார்த்திருந்தார்.

   அரசியின் சுடி பேன்ட்டை  மடித்து.. போர்வைக்குள்ளே தன் தொடையில் மேல் உள்ள துண்டின் மீது வைத்து இருந்த கால்களை.. நன்றாக பிடித்து மசாஜ் செய்தும், நீவியும் விட.. வலியானால் சுருங்கியிருந்த முகம்.. இப்போது ஆழந்த உறக்கத்திற்கு சென்றுயிருந்து. 

   சத்யாவிடம் திலகனை காண்பித்து.. ” வேண்டும்மா.. திலகனை எழுப்பி தேய்த்து விட சொல்லவா?. 

    அவனை வெக்கத்துடன் முறைத்து.. ” இல்லனா.. எனக்கு சூடு தண்ணி போதும். ”

    புன்னகையுடன் தலையசைத்து.. ” ம்.. நான் வந்தவுடன் பாத்ரூம் ஹீட்டர் போட்டு விடுறேன். ” ம்.. என தலையசைத்தாள்.

    கீழே சென்றவன்.. கைகழுவிட்டு வெளியே வர..

   வேந்தா இங்க வந்து உட்காரே. ” சித்ரா அவனை அழைக்க..

   அவரின் முன்நின்றவன்.. ” இல்லம்மா நிற்குறேன். என்ன சொல்லுங்க?. “

   அவனை ஒரு நொடி பார்த்துபின்.. ” வேந்தா இன்னைக்கு நகை கடைக்கு போக வேண்டாம். ” அடுத்து அவர் கூற வரும்முன்..

   ” ம்.. சரிம்மா. அரசி தூங்குறா. எழுந்ததும் வீட்டிற்கு கிளம்பலாம். ” அவன் நகரபோக..

   இதனை கேட்டு.. பார்த்து கடுப்பான வசு.. ” அண்ணா.. அம்மா என்ன சொல்லவராங்கனு முழுசா கேளுங்க. “  சற்று கோபம், அதிக குரலில் பேச..

    மற்றவர்களை பார்த்தான். பத்மாவை பார்த்தான்.. ” அத்த உங்க பொண்ணுங்களை உள்ள போக சொல்லுறீங்களா. ”

   இப்போதெல்லாம் வசுவின் இதுபோலான பேச்சு.. அவனிற்கு பிடிக்கவில்லை. ஒன்று அவன் ஏதாவது கூறுவான், இல்லை இவள் கூறுவாள்.

   எதுக்கு அவங்க உள்ள போகனும்.. அவங்க வீடு. ” அவளின் கோபம் வேறு ஒருவர் மேல் இருக்க.. இவ்வாறு பேச.

   அவர்களை மீண்டும் பார்த்தான்.. யாரும் நகரவும், பத்மா, வினோ கூறுவதும் போல தெரியவில்லை. ஏதோ பேசி முடிவு எடுத்துவிட்டார்கள். ஆனால் வினோ கண்கள் மட்டும் கலங்கியிருந்தது..

   அம்மாவிடம் திரும்பியவன்.. ” ம்மா.. முழுசா சொல்லுங்க. ”

    அதுவந்து வேந்தா.. வசு, மேகாவிற்கு ரொம்ப டையடா இருக்கா. அதனால மேகா  இன்னொருநாள் எடுத்துக்குறேன் சொன்னா. ” நிறுத்தி அவனை பார்க்க..

   ” ம்.. முழுசா சொல்லி முடிங்க. அதன் பின்னே பதில் சொல்லுறேன். ” அழுத்தமாக கூற..

   வசு எடுக்கனும் மா. ஆனா இன்னைக்கு இல்லமா.. நைட் தங்கிட்டு.. நாளைக்கு எடுத்துட்டுபோலானு சொல்லுறா. ” அவளை கோபமாக பார்த்தவன்..

   அப்ப அரசி.. ” முழுவதும் சொல்லி முடிக்கும் முன்..

   ” அதான் அவங்க கூடவே இருக்க.. அவங்க அண்ணா அனுப்பியவங்களோட.. இப்ப போகட்டும். நாம்ம மூனுபேரும் நாளைக்கு.. ”

    ஏதோ என்னை கோபம் கொள்ள வைக்கும் செயலை செய்யவேண்டும் என கூறப்போகிறாள் எனதான் நினைத்தான்.. அது நடந்தது. ‘

    என் அரசியோட முடிவ எடுக்க.. நான் எப்ப உனக்கு உரிமை கொடுத்தேன்?. ” வசுந்தராவின்  அருகில் கூறியபிடி செல்ல.. அவனின் பக்கத்தில் வினோ வந்துவிட்டாள். (expertseoinfo.com)

    அவனின் இப்படியான கேள்வி மற்றும் கோபத்தை பெண்கள் எதிர்பார்க்காததால்.. இந்த பேச்சு எங்கு போனுமோ?. என பயந்த பத்மா.. பெண்களை உள்ளே போங்க.. என கண்களால் கூற..

   பத்மாவிற்கும்  மனதின் ஒருஒரத்தில் இவன் உறவுமுறையில் பெண் வேண்டாம் என கூறியது.. மகள் இருக்கிறாள் என்ற வகையில் வருத்தம் இருந்ததை.. அரசியை ஊருக்கு அனுப்பலாம் என்ற பேச்சு வரும்போது ஒன்றும் கூறாமல்.. அமைதியாக இருந்தார்.

    அவர்கள் எழ பார்க்க.. அவர்களை ஒரு கோப பார்வை பார்த்தான்.. ‘ யாராவது எழுந்துங்க அவ்வளவுதான் என்றுயிருந்தது. ‘

    ம்.. சொல்லு. என்னிடம் கலந்து பேசாம.. என்னோட முடிவ எடுக்கவே உனக்கு உரிமையல்ல. அப்படியிருக்கப்ப அரசியோட முடிவ எடுக்க நீ?. ”

    தன் மகனின் புது நடவடிக்கையில் முதலில் அதிர்ந்த சித்ரா.. வரப்போகும் மருமகளிற்காக..  மகளிடம் கடுமையாக பேசுவதில் கோபம் கொண்டு..

   ” வேந்தா அவ என்ன?. இப்ப பெரிசா முடிவ எடுத்தா?. டையடா இருக்கு.. அக்கா வீடு இங்க இருக்க.. நைட் இருந்துட்டு நாளைக்கு.. பொறுமையா நகைய எடுத்துட்டு போலானு நினைக்கிறா. எழிலரசிய கூப்பிட்டு போக ஆள்யிருக்கு. ”

   ம்மா.. நீங்க இரண்டுபேரும் இருப்பது உங்களோட விருப்பம். என்கூட வந்த அரசிய.. நான் தான் போய்விடனும்.”

   அப்ப உன்கூட வந்த நாங்க?. ”

   ம்.. இந்த கேள்விய நீங்க.. எங்களை பற்றி.. என்னிடமும் கேட்காம.. அரசிகூட பேசிவே இல்லாதவங்க.. இவங்களோட பேசி ஒரு முடிவு எடுக்கும் முன்ன.. இதுபோல நீங்க சொல்லி.. நான் இதே மாதிரி  பதில் சொன்னா.. நீங்க கேட்கலாம். இப்ப நீங்க கேட்ட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ”

     வசு, மேகாவிடம் திரும்பியவன்.. ” என்ன சொன்ன.. இன்பா அனுப்பியிருக்கானு.. அவரு யாரும் அரசி கூட பேசுவிங்களா இல்லையானு தெரியாது?. அப்படி நடந்து அவ தூங்கிவிடுவானு பயந்து அனுப்பினார்.  யாரும் பேசமா இருந்தப்ப.. குறையா நானும் சொல்ல.. அவரும் சொல்ல. அது உங்க விருப்பம். ஆனா அப்படி இருந்தா?. உங்க மனசு.. அரசி மதிக்கலையோனு நீங்க எல்லாம் வருத்தப்படக்கூடாது.. அரசிய யாரும் தப்பா நினைக்ககூடதானு அனுப்புனார். “

    எங்களுக்கும், கதிரவனுக்கும்.. இங்க வரவேண்டிய வேலையே கிடையாது. வரவேண்டிய அவசியமும் இல்ல. நான் அரசிய எதுக்காக இங்கு அழைத்து வந்தனோ.. அது அரசி வீட்டிற்கே வந்துயிருக்கும். ஏன் வந்தோம்?. நீ நகை வேணும் என்று கேட்டதுக்காக.. இன்னைக்கு வந்தோம். எங்களால கதிரவன் வந்தாங்க. அவரால இவங்க வந்தாங்க. “

   நீ உன் இஷ்டத்திற்கு பண்ணுவ.. அதை அம்மா சப்போட் பண்ணுவாங்க. உனக்காக வந்தவங்கள பாதில அனுப்புவ. அதுவும் எதுக்காக?. எங்க கல்யாணம் அன்று போடுவததை எங்கள கஷ்டபடுத்திட்டு வாங்க போற. ”

   அம்மாவிடம் திருப்பி.. ” அம்மா..  நீங்க என்கிட்ட  கேட்காட்டியும் பரவயில்ல. என்ன செய்திருக்கனும்?. வசு இந்த விஷயத்தை சொல்லும் போது.. அரசி வீட்டில் கால் செய்து.. விஸ்வா மாமாவ அண்ணானு தானே கூப்பிடுறா. அவரோட தங்கையா இங்கேயே இருக்கட்டும் என சொல்லி.. அரசிய தங்க வைத்துயிருக்கனும். அடம்பிடித்த உங்க மகளுக்காக.. அமைதிய வந்த மருமகள கூப்பிட்டு வந்து நடுவிலேயே அனுப்புறீங்க. ரொம்ப நல்லாயிருக்கு. ”

   அவரிடம் கார்டை கொடுத்து.. ” நான் அரசி எழுத்தவுடனே கிளம்புறேன். அப்பாவிடம் ஹோட்டலில் இருந்து நேரா இங்க வரச்சொல்லுறேன். நீங்க இங்கயிருந்து வினோ, வசுவிற்கு நகை வாங்கிட்டு வாங்க. உங்க முன்னாடியே அப்பாவிடம் பேசிட்டு கிளம்புறேன். ” அவரை பதில் கூற விடவில்லை. இதுதான் என் முடிவு என்பது போல இருந்தது.

 

    இவனின் பேச்சை ஆரம்பத்திலேயே கேட்ட சத்யா.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை பேச்சின் சத்தம் கேட்டாமல் இருக்க.. அவனின் ஹெட்செட்டை மாட்டிவிட்டு.. திலகனை எழுப்ப.. அவனின் அசைவில் மற்ற இருவர் எழுந்துவிட.. பின்னர் தான் இவனின் தொடர் பேச்சை கேட்டு நால்வரும் ஏதோ பிரச்சனை?? என உணர்த்து பேச்சுவார்த்தையில் அவனை அமைதியாக்க அங்கு வந்தனர். பேச போன் எடுக்க இவர்களை பார்த்தான்.

 

    கதிரவன், திலகா இன்னும் அறைமணி நேரத்தில் கிளம்பனும். சந்துரு நாம்ம அடுத்து நீங்க அங்க எப்ப வரவேண்டும் என்று.. நான் அரசியிடம் பேசிட்டு சொல்லுறேன். ”

   அவன் கூறியதும் கதிரவன் மேகாவை பார்க்க,. இவனை பார்க்கவில்லை.. அவளிற்கு சிறு பயம் வந்துவிட்டது. அவள் பயம் கலந்த முகத்தை பார்க்கவே.. இவளிற்கும் வேந்தனின் கோபத்தில் பங்கு உள்ளது என்று புரிந்தது. மற்ற இருவர் அவனிற்கு தலையசைத்தனர்.

    வேந்தனின்  போன் ஸ்பிக்கரில் அழைப்பு சொல்லவும்.. அங்கேயே இருத்தனர்.

   ” வேந்தா நானே உனக்கு கால் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ”

   என்ன விஷயம் ப்பா?. ” அவனின் குரல் சற்று மாற்றம்போல இருக்க..

   ” வேந்தா.. எல்லோரும் நல்லாயிருக்காங்கள.. உன் குரல் மாறியிருக்கு. ஏதும் பிரச்சனை இல்லையே?. ”

     அப்படியெல்லாம் இல்ல ப்பா. நீங்க சொல்லுங்க. ” மிகவும் கடினப்பட்டு சாதாரணமானகுரலிற்கு கொண்டு வந்தான்.

   ” அதுவந்து யோகா.. எப்படியோ மேகா அங்கு வந்ததும், நீங்க போனது தெரிந்தும்.. என்ன கல்யாண துணி, நகை எடுக்கும் வேலை இரண்டு வீட்டு பக்கம் இருந்து ஆரம்பித்துவிட்டது போலனு சாதாரணமா கேட்டா. எனக்கும் அப்பதான் தோனியது. அடுத்த மாதம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு துணி எடுக்கனும். அப்ப எடுப்பவர்களுக்கு, இன்னும் கொஞ்சம் பேருக்குதான் சேர்த்து கல்யாணத்திற்கு எடுக்கனும்.

    நாளைக்கு ஞாயிற்றுக் கிழமையா, நல்லநாளாதான் இருக்கு. நீங்களும் அங்கயிருக்கீங்க. அம்மாவும் ஒன்னும் சொல்லவில்ல. புடவை எடுக்க வர நினைப்பவர்களிடம் பேச்சுவாக்கில் விசாரித்து விட்டேன்.. மருமக வீட்டலையும் கேட்டேன்.. எல்லாம் நாளைக்கு ஆள்மாற்றிவிட்டு வரலாம். ஒன்னும் பிரச்சனை இல்லனு சொன்னாங்க. 

   அதான் உங்களிடமும் நாளைக்கு ஏதும் பிளான் இருக்கா?. இல்லையானு கேட்டலாம் கால் செய்ய நினைச்சேன். நீங்க சரி சொன்னா உடனே எல்லாருக்கும் சொல்லிவிடுவேன். இல்லனா.. ”

   அவர் முடிப்பதற்குள்..அப்பா எங்களுக்கு பிரச்சனையில்லை ப்பா. ”

   அவர் பேசும் போது நால்வரை மட்டும் தான் பார்த்தான். அப்போதே அவர்களும் இங்கு இருப்பதில் ஒன்றும் இல்லையே என்ற சம்மதத்தையும் கேட்டான். சரி என அவர்கள் தலையசைத்த பின்னர்.. அவனிற்கும் சேர்த்து சரி என கூறினான்

    ம்.. சரிப்பா. நான் முதலில் அருணாச்சலத்திடம் சொல்லி விடுறேன். இப்பவே அவர் மற்றவர்களிடம் சொல்லி.. அங்க வர.. ”

    அப்பா நான் திலகனை கொஞ்சம் நேரம் கழித்து உங்களிடமும், மாமாவிடம் பேச சொல்லுறேன். நீங்க யார்யார் முக்கியமா வருனும் மட்டும் பார்த்து.. கால் பண்ணுங்க. நீங்க விஸ்வா மாமாவிடமும் பேசுங்க. ”

   ம்.. சரிப்பா. நான் வைக்கட்டுமா?… ”

   தேங்க்ஸ் ப்பா. ”

   ம்.. சரி வேந்தா. நான் வைக்கிறேன். “

    ரவிந்தரனிற்கு பூமி பூஜை அன்று அரசிக்கு செய்தற்காக அன்றும் இதுபோலதானே கூறினான். ஏதும் மனவருத்தமா?. தேவையென்றால் பகிருவான். அவரின் அடுத்தடுத்த பல வேலைகள் இருக்க அதனை செய்ய ஆரம்பித்தார்.

 

     அப்பாவின் செயலில் சிறிது மனவருத்தம் போக.. போனை வைத்தவன்.. ” சங்கவி நான் பேசியதை கேட்டீல.. நாளைக்கு ஷாப்பிங் போகும்போதும் எங்க கல்யாணத்திற்கு உனக்கும் என்ன வேண்டுமோ?. அதை நாளை வாங்களாம்.

   ” இது.. நாங்கள் அப்பா கூறி.. எங்கள் திருமண பர்சேஸ் செய்வதற்காக.. இங்கு இருக்க போகிறோம் என்பதை அம்மா, தங்கை மற்றும் மற்றவர்களுக்கு அறிவிக்கிறான்.

    வினோவின் அருகில் வந்தவன்.. ” சாரிடா.. உன்னைய நானும், அரசியும் கலங்க வைச்சுட்டே இருக்கோம். ”

   அதெல்லாம் உன்ன இல்ல.. நானும் நீங்க மூன்னும் பேரும் இருக்கனும் நினைத்தேன். ஆனா அண்ணிய இருக்க சொல்வதா?. திலகன் அண்ணாவோட.. ”

   விடு.. இனி அதை பற்றி பேசி ஒரு யூஸ்சும் இல்ல. நான் மாடியில் இருக்கேன். ”

    நால்வரை.. ” வாங்கஅழைப்புடன் வேகமாக மாடிக்கு சென்றவன்.. தன்னவளை அள்ளிக் கொண்டு வினோவின் அறையினுள் சென்றுவிட்டான்.

    மேலே வந்தவர்களில் இருவர் அவனின் பற்றி அறிந்ததால் .. அவனின் செயலை பார்த்து மெல்லிய புன்னகை புரிய.. இருவர் சிலையாக ஒருநொடி நின்றவர்கள்.. மற்ற இருவரை பார்க்க.. அவர்கள் சாதாரணமாக சென்று அமர..

     கதிரவனும், சந்துருவும் ஏன் வேந்தன் அண்ணாக்கு எழிலரசியிடம் தன் இயல்பு மீறிய அதிகமானஅன்பும்?. அவளை தவறா ஒருவார்த்தை சொன்னாலே மற்றவர்களிடம் அதிக கோபமும் வருது?. என்ற குழப்பமான மனநிலையில் அறையின் வாயிலை.. பார்த்தவாறு எண்ணியபடி சென்று அமர்ந்தார்கள்.

    அவர்களின் குழப்பத்தின் காரணமானவன்.. தன் கோபம், வருத்தம், கவலை என உணர்வுகளின் பிடியில் இருப்பவனை.. தணிக்கவும், தன்நிலைக்கு கொண்டு வருவதும் தன் அரசியால் மட்டுமே முடியும் என.. தன்னவளின் இடையை இறுக்க இறுக்க பற்றி.. அவளின் கழுத்து வளைவில் தன்முகத்தை புதைத்துக்கொண்டான். ஆழந்த உறக்கத்தில் இருந்தவளோ அவனின் தீண்டலில்  தன்னவனை தனக்குள் அனுமதித்தாள்.

   

    

    

    

    

   

    

   

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!