Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 37.1

 

நாம் 37(1)

 

   வேந்தன், எழிலரசி இருவரும் தாங்கள் படித்த இருபாலர் பள்ளியின் ஹாஸ்டலில் இருக்கும் அனைவருக்கும்..  தங்களின் இன்றைய மகிழ்ச்சியை பகிர.. மதிய உணவுவை ஹோட்டலில் இருந்து கொடுத்து ஸ்பான்சர் செய்கிறார்கள்.



Advertisement

   அதற்காக இங்கு படித்தவர்கள்.. அவர்களின் கணவன், மனைவியாக போகிறவர்கள், நண்பர்களுடன் வந்துயிருக்கிறார்கள்.

 

    இருவரும் பூரிப்புடன் கைகோர்த்த படி வர..” தனு நீங்க கடைசியா இங்க எப்ப வந்தீங்க?. “

Advertisement

   மெல்லிய புன்னகையுடன்.. ” நான் மார்க் ஷீட் வாங்கும் போது வந்தேன். பின்ன இங்க வரும்போது உன்னைய பார்க்கனும் தோன்றினா.. நைட் ஹோட்டலில் இருந்து வீட்டுக்கு போகனும் முன்ன.. ஸ்கூல் வெளியில் கொஞ்சம் நேரம் நின்னுட்டு போவோன். ஒரு நாலைந்து தடவை வந்துயிருப்பேன். ”

Advertisement

   மகிழ்வுடன் தன் அரசியிடம் இன்னும் சில நடந்தவைகளை கூறிக்கொண்டே வந்தவன். பேச்சுவாக்கிலேயே வேஷ்டியை மடித்துகட்டி.. அன்று தன் பார்வையில் இருந்து சென்று மறைந்த.. கூறிப்பிட்ட அந்த இடத்தில் தன்னவளை அள்ளிக்கொண்டான்.

  ” தனு.. யாராவது பார்க்க போறாங்க. ” சுற்றிலும் யாரும் இல்லையே என பார்வையிட்டவாறே கேட்டாள்.

   எல்லாம் ஹாஸ்டலில் இருப்பாங்க. யாரும் இங்க இருக்கமாட்டாங்க. சரி உனக்கு ஞாபகம் இருக்கா?. ”

Advertisement

   பாதியேலே.. புன்னகையும்.. துள்ளலுமாய்.. ” தனு தனு அங்க தானே?. ” அவளின் நெற்றிமுட்டி.. ” ம்.. யோசித்தியா முயல்குட்டி?. ”

   ” ம்.. ஸ்கூல் முடிக்கும் சமயம் நிறைய போட்டோஸ் எடுத்தோம். அதில் பார்த்து நீங்க சொன்னதை வைத்து யோசித்தேன். “

 

    மழையினால்  மரங்கள் அந்நேரத்திலும் குளிர்ந்த காற்றை வீச.. அதன் இடையில் திட்டுகள் இருக்க.. அரசியை அமர வைத்து.. அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து..

   ” என் பேர் வேந்தன். உங்க பெயர் என்ன?. இங்க எதுக்காக உட்கார்ந்து இருக்கீங்க?. குட்டிம்மா. ” கண் கலங்கி தான் அன்று பேசியவற்றை கேட்க..

   தன்னவன் இவ்வாறு கேட்பான் என்று அவள் எதிர்பார்க்காததால்.. அவன் கண் கலங்கினான் என்றால்.. அவள் அழுதே விட்டாள்.

 

   பின் அவன் கன்னத்தை தாங்கிபிடித்து.. ” என்னைய பார்த்தா உங்களுக்கு நடைபழகும் பாப்பா மாதிரி இருக்கா?. என் பெயர் எழிலரசி.. என் தனுவின் அரசி. ” அவனின் கன்னத்தை பிடித்திழுத்து.. தன் கையை உதட்டில் வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டு கூறினாள்.

   இன்றும் அவள் முகம் காட்டும் பாவனையில் மயங்கி.. ” முயல்குட்டி.. முயல்குட்டி இப்பவும்..  அப்ப பேசியது மாதிரியே இருக்குடி. ” காதலும், புன்னகையுமாய் கூற..

   அவளிற்கு சிரிப்பு, வெக்கம் தவிர ஏதும் வரவில்லை. அதனை ரசித்தபடி அருகில் அமர்ந்து தன்னவளின் கையை பற்றி.. மோதிரத்தை தடவி.. பின் மென்மையாக இதழ் பதித்து.. ” லவ் யூ முயல்குட்டி. ”

   லவ் யூ தனுமாமா. ” பின் இருவரும் பேச வார்த்தை இன்றி தன்னவனின் தோளில் சாய்ந்திருந்தவள்..

   அன்று நடந்ததாக கூறியதை நினைத்துக்கொண்டே சில நிமிடங்களில்  உறங்கியிருக்கும் தன் அரசியை.. மெல்லிய புன்னகையுடன் உச்சந்தலையில் முத்தமிட்டு.. தலைதடவி சிறிதுநேரம் அவள் முகத்தை பார்த்திருந்தவன்..

   அவளின் முகத்தில் தவழ்ந்த முடிகளை ஒதுக்கி.. ” முயல்குட்டி உனக்கு என்றால்.. நான் ரொம்பவே சுயநலக்காரன் தான். அதனால நான் அம்மா அப்படி சொல்லிட்டாங்கனு கவலைபடல அரசிம்மா. நீ என்னைய இப்படி சொல்லிட்டாங்கனு அதிர்ந்தியா.. அதான் எனக்கு வருத்தமாகிடுச்சு முயல்குட்டி.

   இனி இப்படி என்னை யாரும் சொன்னாலும் வருந்தாதடி. நான் அதுமாதிரிதான்.. நான் யாருக்காவும் மாற்றிக்க மாட்டேன். அதனால இனி நீ அதை கண்டுக்கொள்ளக் கூடாது சரியா. ”

  ம்.. ” கைபிடிப்பு.. தோள் சாய்ந்துயிருப்பது.. அவளின் ஆழ்மனதில் இருக்கும் அவள் தனுவின் குரலை உணர்ந்து.. காதின் மிகஅருகே கூறும் அனைத்தும் கேட்டு... அவனிற்கு பதில் அளிக்க.. 

   இதை கேட்க வேந்தனிற்கோ.. இதற்கு ஈடாக.. தான் தன்னவளிற்காக எதையும் தாங்கலாம்.. என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என.. மனதில் வழமைபோல உறுதிப்பூண்டு..

 

   மெசேஜ் ஒலி கேட்க.. எடுத்து பார்த்தான். அதில் ஐந்து பேர் சேலை செலக்ட் செய்து அனுப்பியிருக்க..  நபர்களை பார்த்தான். மீண்டும் மெசேஜ் வர.. புன்னகையுடன்.. இந்நேரத்தில் மிகவும் முக்கிய நபர் அனுப்பியதை பார்த்தவன்..

  பின் எந்தவித கவன சிதறல் இன்றி அனைத்து சேலைகளையும் மிகமிக உன்னிப்பாக பார்த்து.. சில நிமிடங்கள் கழித்து.. தங்கள் திருமண பட்டுபுடவையாக தன்னவள் எழிலரசிக்கான சேலைகளை முடிவுசெய்து.. அனுப்ப வேண்டியவர்களுக்கு சில குறிப்புகளுடன் அனுப்பிவிட்டான். பின் அரசியை எழுப்பினான்.

 

   அன்று அவன் உட்கார்ந்துயிருந்த இடத்தில் நின்றுயிருக்க.. ” தனு இங்க வரைக்கும் என் குரல் கேட்டாதா?. ”

   அந்த அளவிற்கு உன்னில் வலி இருந்ததடி என மனதில் வருந்தி.. ‘ ஆம்என தலைமட்டும் ஆட்டினான்.

   அவன் வருத்தம் முகத்தில் தெரிய.. ” தனு சும்மா சும்மா அதை நினைக்காதீங்க. முதல்தடவை.. யாரும் இல்லை என்பதால் பயந்து அழுதுயிருப்பேன். நீங்க வந்த பிறகு நான் சத்தமா அழுகல தானே?. ”

   சத்தமா அழுகல.. ஆனா வலி அதிகமா தான் இருந்தது. ” அவனின் கையில் அவள் நகத்தினால் உண்டான காயத்தின் தழும்பை காண்பித்தான்.

 

   அவளிற்கு அழவதா?. தான் அறியதா வயதிலும் தன்மீது உண்டான அன்புகாதலை எண்ணிமகிழ்வதா!..

   ஏன்டா அறிவேயில்லையா.. காயத்திற்கு மருந்துபோடாமல் தழும்பை உண்டாக்கி இருக்கிறாயே என தலையில் கொட்டி திட்டுவதா?. என கண்களிலும், முகத்திலும் அவள் அறியாமல் பல பாவனைகள் செய்து.. 

   அவன் வருத்தத்தை ஒருநொடியில் போக்கி.. அவனை கள்வனாக மாற்றி தடுமாற செய்து.. அவனவளிற்கு முத்தமிட சொல்லப்போனான்அவனின் போன் அழைப்பு ஒலி கேட்க.. அதன்பிறகு தான் இருக்கும் இடம் நினைவில் வர.. அரசி அறியாமல் சாதாரணமாக மாறினான்.

 

   ” முயல்குட்டி நீ என்னை என்ன பண்ணலானு?. பிறகு யோசித்து எனக்கு சாதகமான முடிவா எடுத்து வீட்டில் போய் கொடு. இப்ப ஹாஸ்டல் போலாமா?. திலகன் கால் செய்துட்டான். கடைசியில் போய்யாவது தலை காண்பித்து வரலாம். ”

   அவனை முறைத்து.. ” போடா தனுமாமா. இத்தனை நாளா நீ இந்த காயத்தின் காரணத்தை கூறவே இல்ல. இங்க வந்து காண்பித்து.. என்ன யோசிக்கனே.. எனக்கு தெரியல?. நீயே சொல்லு நான் என்ன பண்ணுறது?. ” மனதில் இருப்பதை அப்படியே அதே பாவனையுடன் கூற..

   அவனிற்கோ இன்னும் அவனை தடுமாற செய்தது.. ” முயல்குட்டி முதலில் இந்த இடத்தை விட்டுப் போகலாம். அநியாத்திற்கு சோதிக்கறடி. ”

   அவனின் கண்களில் தடுமாற்றத்தை இப்போதுதான் கவனித்தவள்.. தன்னவன் முன்னால்.. தான் இருப்பதால்.. தான் செய்வது தெரிய வாய்ப்பில்லை என அவள் சட்டென்று கால் உயரத்தி.. மென்மையாக நெற்றி, கன்னம், இதழில் என வேகமாக இதழ் பதித்து எடுத்தாள்.

 

   போதுமா.. வீடு வரை ஓகே தானே?. ” அடங்கபட்ட புன்னகையுடன் கூற..

   வரவர உனக்கு கொழுப்பு.. ” பாதியில் நிறுத்தி.. அவள் என கூறுவாள் என ஞாபகம் வந்து..  அதற்குமேல் முடியாமல் கை எடுத்து கும்பிட்டு.. ” போதும்மா.. என் அரசியே. நான் இதுக்கு மேல தாங்கமாட்டேன்.. போலாம். ” அவளின் கைபிடித்து அவ்விடத்தை வர..

   அவர்களின் சற்று தூரத்தில் இருந்து அவர்களின் நட்புகள் நக்கல் பார்வையும், புன்னகையுடன் வந்துக் கொண்டுயிருந்தனர்.

     அங்கிருந்தே.. ” என்னடா பிளாஷ்பேக் முடிச்சுட்டியா?. இன்னும் இல்லையா?. கால் செய்து நீ எடுக்கல.. அதான் நாங்களும் கலந்து கொள்ளானு வந்துட்டோம். ” திலகன் அவன் அருகில் வந்து கூற..  மற்றவர்கள் வேந்தன், எழிலரசியையும்.. அவர்களின் இடத்தையும் மகிழ்வுடன் பார்த்தபடி வந்தனர்.

   அவனை முறைத்தாலும்.. அழகான புன்னகையுடன்.. ” முடிஞ்சது. சரி நீங்க ஏன் சீக்கிரமே வந்துட்டிங்க?. ”

   மாமா.. அங்க பசங்க வந்தீங்கள..கொடுத்துட்டு போயிட்டே இருங்கனு விரட்டாத குறையா பார்த்தாங்க. சரி வசதியா இஷ்டபட்ட இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டும் என்று.. கொஞ்சம் சின்னபசங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு வந்துட்டோம். பாலா, கிருஷ்ணா கிளம்பிட்டாங்க. லேடிஸ் ஹாஸ்டலில் எல்லோருக்கும் கொடுத்து முடிக்க போறாங்களா அவங்க வந்துவிடுவாங்க.

   வாங்க அதுவரைக்கும் நாம்ம உங்க இடத்தில் போட்டோ எடுப்போம். ” அவன் பதில் கூறும் முன்..

   ” இன்பா அவர கூட்டுட்டு வாடா.இன்பா கேமிரா வைத்து இருக்கும் ஒரு நபருடன் பேசிக் கொண்டு இருந்தவன்.. சந்துரு அழைப்பின் பேரில் இருவரும் வந்தார்கள்.

   வேந்தனின் அருகில் வந்த சந்துரு மெல்லிய குரலில்.. ” மாமா நான் நினைத்த மாதிரி எழிலரசிய தூக்கிட்டு வந்து.. போட்டோ போஸ் எல்லாம் சூப்பர்!. ”

   என்னடா சொல்லுற!?. ‘ அதிர்ந்து பார்த்து.. தாங்கள் வந்ததை நினைத்தான்.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. ஆனால் தன்னவள் அளித்த முத்தம்.. அவனை முறைத்து அருகில் வந்துவிட்ட இன்பாவையும்.. அவன் கையில் கேமிராவையும் பார்க்க..

   இன்பா அதனை உணர்ந்து.. ” மாமா நான் போட்டோ, வீடியோ செக் பண்ணிட்டேன். இருந்தாலும் உங்க அனுமதியில்லாம எடுத்ததால புது மெமரிகார்டு போட சொல்லி.. அந்த கார்டை வாங்கிட்டேன். எனக்கும் தெரியாது. ” தவறு செய்தவன் போல வேகமாக கூற..

   சரி விடு. சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து இருப்பான். கொஞ்சம் கேர்புல்லா இருக்கனும் இல்ல. ” சந்துருவை தோள்தட்டி கூற..

   மாமா.. மாதவன்  எனக்கு நல்லா தெரிந்தவன் தான். திலகன் அண்ணாவிடம் சொல்லிட்டுதான் செய்தோம். இவனிடம் சொன்னா உங்கிட்ட சொல்லிடுவான். அதான். திலகன் அண்ணா கொடுத்த புது மெமரி கார்டுதான் அது. நானே உங்கிட்ட வாங்கி கொடுத்து செக் பண்ணிய பிறகு நீங்க சொன்னாதான் அடுத்ததே. ” வேந்தன் முறைக்கவும் தான் ஏதோ புரிய.. வேந்தனிடம் கூறி இருக்கலாம் என தாமதமாக நினைத்தான்.

    புன்னகையுடன்.. ” ம்.. பரவாயில்ல இந்த அளவிற்கு யோசித்து இருக்கீங்க. அரசிக்கு எனக்கு இதைபற்றி தெரியாது என்று மட்டும்.. தெரியாம பார்த்துக்கோங்க. ”

   புன்னகையுடன்.. ” ம்.. நீங்க உளறி.. எங்கள மாட்டிவிடதா வரைக்கும் எங்களுக்கு பிரச்சனையில்ல. ” சற்று தள்ளி நின்று சந்துரு கூறி கமலேஷ் அருகில் சென்றுவிட்டான்.

   இன்பாஆமாமம்என அவன் பங்கிற்கு கூறி திலகன் அருகில் சென்றுவிட..

   வேந்தனிற்கு தன்னை முழுமையாக தெரிந்து வைத்துள்ளனர் என்று வெக்கப்புன்னகையை செலுத்தி.. தன்னவளை பார்த்தான் அவள் அங்கு வந்துவிட்ட சத்யா, தர்ஷினி, சாரு, தீபிகாவுடன் பேசிக்கொண்டுயிருந்தாள்.

   அவர்களிடம் வந்தவன்.. ” சத்யா.. யோகா அக்கா, அண்ணியெல்லாம் வந்தாங்களா?. ” அங்கு நடந்த பேச்சிற்கு பிறகு வேறு ஏதும் பேசி.. வரவில்லையோ என நினைத்தான்.

   வந்தாங்க அண்ணா. ஆனா அதுக்குள்ள கொடுத்து முடிச்சுட்டுடோம். அவங்கயெல்லாம் அண்ணா, மாமாவோட கிளாஸ் வெளியவாது போய் பார்க்கலாம் போய்யிட்டாங்க. அப்படியே எல்லாம் வீட்டிற்கு போய்விடுவோனு உங்களிடம் சொல்ல சொன்னாங்க. “

 

    சரிஎன தலையசைத்து அனைவரும் சில நிமிடங்கள் சிலருக்கு தெரியாது என்பதால் அவ்விடத்தை பற்றி மறைமுகமாக பேசி.. அவர்களை வெக்கப்பட வைத்து.. பல போட்டோ எடுத்துக்கொண்டு.. பின்அவர்களும் அவர்களின் எல்லா வகுப்பறையின் முன் நடந்துக்கொண்டே பலகதைகள் பேசி.. போட்டோ எடுத்து தங்கள் இளம்வயது காலத்திற்குள் சென்று.. மீண்டும் நிகழ்காலத்திற்கு வர என ஒருமணி நேரத்திற்கும் மேல்  ஆனாது.

 

     சந்தோஷத்தை மனதில் நிரப்பிக் கொண்டு மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு கிளம்ப.. வேந்தன் எழிலரசி மட்டும் இனிப்பகத்திற்கு பாடலை கேட்டு ரசித்து உணர்த்து பாடியபடி வந்துக் கொண்டுயிருந்தனர்..

 

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்

நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீ அலை நான் கரை என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

நீ கிளை நான் இலை உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்

நீ விழி நான் இமை உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்

நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்த்தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)

நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன்

நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்

நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்

நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்

நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்

(நீ காற்று)

    

    

   

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!