புன்னகையுடன் எழிலரசி வரும்போது.. அங்குயிருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்.. இன்னும் முகத்தில் வெக்கப்பூக்கள் படர்ந்துயிருக்க.. இந்த முகத்துடன் தனுமாமா முன்னால்..
‘ ஏன்டி இப்படி?. ‘ என பார்ப்பான். பாவம் தான். இவர் வேற வருகிறார். தனுவிடம் தான் சொல்ல வேண்டும். சிறிது தூரம் வந்தவள். அப்பாடா என பார்த்து நின்றாள்.
ஸ்டார் ஹோட்டலில் உள்ளதை போன்ற.. ரெஸ்ட் ரூம்மில் முகம் கழுவி விட்டு சிறிது நேரம் கழித்து சொல்லாம் என அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்தாள். தன்னவனிடம் பேசு என மனம் கூறியது. ஆனால் அவன் இருக்கும் இடம் உணர்ந்து அமைதியாக அவனின் புகைபடத்தை பார்க்கலாமா?. என நினைத்தாள். ஆனால் அதுவும் வேண்டாம் என போன்னை சுடி பாக்கெட்டில் வைக்க.. நான்கைத்து பெண்கள் உள்ளே வந்தனர்.
வந்தவர்கள் இவள் அமர்ந்துயிருப்பதை கேள்வியாக பார்த்து பின் அவர்வர் தேவைகளை முடித்தபின் அவர்களும் தாங்கள் கைபையில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு முகத்தை டச்சப் செய்து கொண்டுயிருக்க.. எழிலரசியோ நல்லா தானே இருக்கு.. என்ன பண்றாங்க இவங்க?. ஒரு நொடி பார்த்து திரும்ப.. அடுத்த நொடி ஓடிவிடலாமா என நினைக்கும்.. அவளிற்கு அவர்களின் வாசனை திரவியத்தின் அளவு இருந்தது.
கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்.. சிவப்பு மறைந்து நீர் மட்டும் இருந்தது. இவள் நேரம் அங்கு வெட் டிஷ்யூ எங்கு இருக்கிறது என்று.. புதினான அந்த இடத்தில் தெரியவில்லை. கண்ணாடியில் ஒருநொடி ஆழ்ந்துயிருந்தவள்.. மீண்டும் திரும்ப.. மூன்று பெண்கள் அவள் முன் வந்து நின்றார்கள். ஒருநொடி அதிர்ந்து இதயத்தில் கைவைத்து நின்றாள்.
” நீங்க யாரு?. எதுக்காக வேந்தன் மற்றும் நேச்சர் பியூர் கம்பெனி ஆட்களுடன் வந்துயிருக்கீங்க?. ” அவளை பார்க்க சாதாரணமாக பழகும் பெண் போல உள்ளதால்.. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க..
என்ன தனு பெயர் முதலில் வருது?. மெல்லிய புன்னகையுடன்.. ” நீங்க வேந்தனோட ஒரே ப்ராஜெக்ட்டில் வேலை செய்பவர்களா?? ”
இவளிடம் கேட்டால்.. நம்மள கேட்குறா?. தகவல் வேண்டும் என.. ” இல்ல.. நாங்க காஸ்மெட்டிக், பர்பியூம் டிபாண்மெண்ட். நாங்க ரீவியூ மீட்டிங்கில் பார்த்து பேசியிருக்கோம்.”
” ஓ.. நான்.. ” அவள் போன் பைப்ரோட்டில் ஒலிக்க.. ” ஒருநிமிஷம்” போன்னை எடுத்து பார்த்து..
அவர்கள் இருப்பதால் மெதுவான குரலில்.. ” தனு.. ” ஆரம்பிக்க..
” அரசி அங்க இன்னும் என்ன பண்ணுற?. ” கோபம், வேகமாக கேட்க..
” முகம் கழுவினேன். இங்க வெட்டிஷ்யூ.. ” முடிக்கும் முன்..
” வெளியதான் இருக்கேன்.. வா. ” மீண்டும் கோபமான குரல்.
அவள் வேகமாக திருந்து வெளியே செல்ல.. அவளை முறைப்புடன் பார்த்தபடியே.. கையில் தன் கைகுட்டையை எடுத்து வைத்து நின்றுயிருந்தான் அவளின் வேந்தன். அவளின் பின்னால் மற்ற பெண்களும் வந்துவிட்டனர். அவர்களை பார்த்ததும் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டான்.
வேந்தன்.. வாசன் கொடுத்த டீடைல்ஸை பார்த்துக் கொண்டுயிருந்தவன்.. சொன்ன நேரத்தை கடக்க.. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?. என அறிய ரோஹித்திற்கு போன் செய்ய.. நிமிடத்தை கூறிவிட்டு.. ” எழிலரசி பத்திரமா வந்துட்டாங்களா?. ” சிரிப்புடன் கேட்க..
வேந்தன் புரியாமலேயே.. அருகில் எங்கேயும் தன்னவள் இருக்காளா?. என பார்த்தான்.
” அரசி இங்க இல்லடா. ” உடனே எழுந்து தகவல் அடங்கிய டேப்லெட்டை ஆகாஷிடம் கொடுத்துவிட்டு.. அவர்கள் சென்ற வழியே.. அவன் நடந்து வரும்போதே..
” வேந்தன்.. எழிலரசி.. கூட வந்தவரை ரெஸ்ட்ரூம் முன் அவரை போக சொல்லிட்டு.. இன்னும் உள்ளதான் இருக்காங்களா. ” அவன் கூறிமுடிக்கும் போது.. அப்படியே நின்றான். பின் கால்செய்தான்.
உள்ளே அதிக நேரம் இருந்ததால்.. ஏதேனும் நடக்க முடியாத நிலை வந்துவிட்டதோ.. பதட்டம் அவன் முகத்தில் தெரிய.. ஒன்றும் கூறாமல் கைகுட்டையை வாங்கி துடைத்துக் கொண்டு இருக்க.. பின்னால் சென்றவர்களை பார்த்தவன்..
” எக்ஸ்க்யூஸ் மீ.. ” அவனின் அழைப்பில் நால்வரும் திருப்ப.. ” யார்கிட்டயாவது ஐ லைனர் இருக்கா?. “
ஒருநொடி என்னடா அனைவரும் முழித்து.. பின் கேள்வி கேட்டவள் அவசரமாக எடுத்துக்கொடுக்க.. ‘ நன்றி ‘ சொல்லி வாங்கியவன்.. வேகமாக திறந்து ஒருநொடிக்கும் குறைவாய்.. அரசியே உணரும்முன்.. தன்னவள் நெற்றியில் சிறிய அளவு மையிட்டு எடுத்தான்.
இதனை பெண்களும், ரோஹித் பார்த்து அதிர்ந்து!. யாரும் இல்ல என நினைத்து.. புன்னகையுடன் அவர்கள் அருகில் வர.. பெண்கள் இன்னும் நின்றுயிருந்தார்கள்.
வேந்தன் அவர்களை போகவில்லையா?. என்ற பார்வையில் பார்க்க.. கொடுத்த பெண் அவன் கையில் இருப்பதை பார்த்தாள்.
” ஓ.. சாரி. நீங்க புதுசு வாங்கிக் கொள்றீங்களா?. ” தான்.. தன் அரசிக்கு இட்ட மையை கொடுக்க வேண்டாம் என நினைத்து கூறி.. தன்னவளை பார்க்க.. அவள் தன் பாக்கெட்டில் வைத்துயிருந்த பணத்தை எடுத்து கொடுக்கபோக..
” எழிலரசி “ அழைப்பில் திரும்ப..
அங்கு புன்னகையுடன் ரோஹித் வர.. கொடுத்த பெண்ணை பார்த்து.. ” நீங்க போங்க.. புதுசு உங்க கைக்கு வரும். ”
சரி என தலையாட்டி.. மீண்டும் யாரு இவங்க?. கேள்விக்கு விடை தெரியாமல் திரும்பி பார்க்காமல் சென்றனர்.
அவர்கள் சென்றதும்.. ரோஹித் மீண்டும் ஏதாவது கூறுவான் என்பதால்.. தன்னவனின் பதட்டம் போக்க.. ‘ தான் ஏன் இவ்வளவு நேரம் உள்ளே இருந்தேன்?. ‘ என தன்னவனிற்கு மெசேஜ் செய்ய..
அவன் படித்துவிட்டு.. வெக்கமும், மாட்டிக் கொண்ட கள்வனாக தன்னவளை பார்க்க..
அவளோ ‘ நிஜமா வா?!. ‘ என கேட்டு.. ‘ ஆம் ‘ என தெரிந்துகொண்டவள்.. ‘ கியூட் தனுமாமா ‘ என அவனின் சிவந்த கன்னத்தை பிடித்திழுக்க நினைத்தாள்.
போனில் வேலையாக இருந்த ரோஹித்.. எதார்த்தமாக வேந்தனை பார்க்க.. அவனின் சிவந்தமுகம்.. ‘ கடவுளே இவன் என்ன எழிலரசிக்கு மேல இருக்கான். ‘ வேந்தனின் முதுகை தட்டி இருவரையும் தெளிய வைத்து.. அந்த இடத்தை காலி செய்ய.. ரோஹித் அங்கு வந்துகொண்டு இருந்தவர்களிடம் சேர..
ஒன்றுமே கூறாமல் சென்றவனை யாரும் பின்தொடர முடியதா நிலையில் இருந்தவர்கள்..
புன்னகையுடன் வேந்தனும் அவனின் அரசியும் வருவதை முகம்கொள்ள மகிழ்ச்சியுடன்.. பார்த்த அவர்களின் விருப்பமானவர்கள்..” என்ன அண்ணி.. இன்னும் அதிகமா அண்ணா நினைப்பிலேதான் இருப்பீங்க போல?.. செம்மையா இருக்கீங்க!. ” மெதுவான குரலில் நால்வரும் ஒரு சேர கூறி.. அவளை மெல்லிய அணைப்புடன் வரவேற்று.. ஒருவனின் முறைப்பையும் பெற்றனர்.
சில நிமிடங்கள் பிறகு கான்பிரன்ஸ் ஹால் என்று சொல்ல முடியாத அளவிற்கு, மெல்லிய விளக்கு வெளிச்சம்., துணிகளால் அலங்கரிக்க பட்ட ஐம்பது பேர் உட்காரும் படியான வட்ட மேஜை மற்றும் சேர், பூக்களால் அலங்கரிப்பட்ட அறை.. என அனைவரையும்.. கூடவே யாரும் உணரா வண்ணம் நால்வர் நடுவில் அரசியாகவே எழிலரசியை வரவேற்றது.
ஒருசிலர தவிர யாருக்கும் எதுவும் புரியாமல்.. அறையில் அவர்கள் பார்வை செலுத்த.. அதில் அற்புதமும், ஆனந்தமும் தெரிந்தது. வேந்தனின் குழு ஒரு பக்கமும்.. காஸ்மெட்டிக், பர்பியூம் டிபாண்மெண்ட் குழு ஒருபக்கம்,
பெங்களூர், ஹைதராபாத் இருந்து வந்தவர்கள் ஒருபக்கம், அமர்ந்து நடுவில் இவர்கள் ஐவர் மற்றும் கம்பெனியின் முக்கிய பெறுப்பில் இருப்பவர்கள் அமர்ந்துயிருந்தார்கள்.
மூவரில் சந்தோஷ் எழுந்து.. ” ஹாய் பிரண்ட்ஸ்.. நேர தாமதம் மற்றும் உங்களிடம் நேற்று மாலை தெரிவித்து.. இன்று காலையே இங்கு அசெம்பிள் ஆனாதற்கு நன்றியும், சாரியும் கேட்டுகிறேன். ” அனைவரிடமும் பரவாயில்லை என்ற பார்வை இருந்தது.
புன்னகையுடன் அதனை ஏற்று அமர்ந்தவன்.. பின் பெங்களூர், ஹைதராபாத், இங்கு இருப்பவர்களில் வேந்தனின் குழு பொருட்களை தவிர மற்றவர்களின் பொருட்களை விரிவாக.. அதன் தன்மைகள், நன்மைகளை, முக்கிய மூலக்கூறுகளின் கலவைகள் அனைத்தும் கூறி.. அவற்றிக்கான சாம்பிளும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
கீரின்டீ, வெள்ளை, மேட்சா.. தேயிலை, இவற்றின் விதை, பெரியகருப்பு திராட்சை வத்தல் , திராட்சை விதை,
மெகடாமியா நட், கொக்கோ பட்டர், மாங்காய்விதை பட்டர், காப்பி கொட்டை, தேயிலை மரம்,
ப்ரிம்ரோஸ் ஆயில், சிடர்வுட் ஆயில், ஆர்கன் ஆயில், அவகோடா ஆயில், ஜொஜோபா எண்ணெய், கற்றாழை, சாமந்தி, சீபக்தான்( ஹிமாலயன் பெர்ரி), ஹிமாலயன் சல்ட், கடுகு எண்ணெய், மஞ்சள்.
சோப், ஷாப்பு, பாடிவாஸ் என பல அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், மாஸ்க், முகத்திற்கு கிரீம், சீரம், லிப்பாம், ஸ்க்ரப், மேக்கப்ரீமுவர், நெயில்பாலிஷ், சன்கீரிம், மசாஜ் ஆயில் என
எல்லாவகையான, அனைத்து தோலின் தன்மை, நிறத்திற்கு ஏற்றவாறு அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியம் என அனைத்தும் 100% இயற்கை தன்மையுடைய ஆண், பெண் இருவருக்குமான ப்ராடெக்ட் சில புதிகதாக அறிமுகப்படுத்தியும், சில பொருட்கள் அதன் தன்மைகளை மாற்றி அமைத்து.. பொருட்களை மெருகேறி விவரிக்கப்பட்டது.
இவ்வளவு நேரமும் கம்பெனியின் முக்கியபொறுப்பில் இருந்தவர்கள் தான் ஒவ்வொரு குழுவினரையும் அறிமுகம் மற்றும் கொடுக்கப்போகும் ப்ராடெக்ட் பற்றி கூறி அழைத்து ப்ரட்டேன்ஷன் செய்யப்பட்டது. குழுவில் உள்ள ஒருவர் வந்து ஆங்கிலத்தில் விளக்கப்பட்டன.
ஒவ்வொரு குழு தங்கள் பொருட்களை விவரிக்கப்பட்ட பின்னர் அனைவரும் கைதட்டி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கபட.. கடைசியாக வேந்தனின் குழுவினர் மட்டும் இருந்தனர்.
இவைகள் அனைத்தையும் எழிலரசி என்பவள் யாரும் உணராதபடி.. ஒருகை தன்னவனின் கரம்பிடித்த படியும்.. மறுகை மேஜையின் மீது கன்னத்தில் கைவைத்து உன்னிப்பாகவும் அதே சமயம் அவ்வப்போது தன்னவனை பார்த்து பார்த்து திரும்பியபடி கவனித்திருந்தாள்.
தன் நண்பர்கள் மற்றும் எழிலரசியை பார்த்து புன்னகையுடன் எழுந்த ராகேஷ்.. அலங்கரிக்கப்பட்ட இடத்தில் நின்று.. ” ஹாய்.. EV நேச்சர் பீயூர் ப்ராடெக்ட் கம்பெனியின்.. புது அறிமுகத்தை பற்றி விவரிக்க வேந்தனை அழைக்கிறேன். ”
வேந்தன் எழும் முன்னே.. ” முயல்குட்டி மாமா செல்வதை மட்டும் கவனிக்கனும்.. வேற கற்பனைக்கு போககூடாதுடி. ” கையை அழுத்திவும்.. ராகேஷ் அழைக்கவும் சரியாக இருக்க..
தன்னவள் தன் அரசியை நினைத்து.. ஆறு மாதம் முன் நண்பர்களிடம் இதை தொடங்களாம் என கூறி.. அதற்கான கருத்துகள், தேவைகள் அனைத்தும் ஒருமாதத்தில் முடித்து.. இறுதி முடிவு எடுக்கப்பட்டு.. ஆரம்பித்த ஒருமாதத்திலே தன் முயல்குட்டியை பார்த்தான்.
இப்போது தன் அரசியின் முன்னால் அனைத்தையும் விளக்கப்போகிறேன். ‘ லவ் யூ முயல்குட்டி ‘ அவளிடம் கண்களால் கூறி.. கையை அழுத்திவிட்டு புன்னகையுடன் எழுந்து சென்றான்.
இந்நேரம் வரை அவ்விடம் முழுவதும் மெல்லிய விளக்கொளி மட்டுமே இருந்தது. அவன் எழும்வரை காத்திருந்தவர்கள்.. அலங்கரிக்கப்பட்ட இடம் தவிர.. மற்ற இடங்களில் வெள்ளை லைட் போடப்பட்டது.
ஐவர் தவிர மற்றவர்களின் போன்னை இங்கு உள்ளே வரும் முன் வாங்கி வைக்கப்பட்டு.. EV கம்பெனியினரால் மட்டுமே வீடியோ எடுக்கப்பட்டு இருந்தது.
வேந்தன் நின்றவுடன் சந்தோஷ், ராகேஷ் போன்னை ஸ்டான்டில் வைத்து வீடியோ எடுக்கப்பட வைக்கபட்டது.
இதை ‘ வேந்தன் நின்றவுடன் எதுக்கு பண்ணுறாங்க?. ‘ என கேள்வியுடன் அனைவருமே நடப்பதை பார்த்தனர்.
வேந்தன் லைட்கிரீன் ஜீன்ஸ், கீரிம்நிற சட்டை, பார்மல் மெரூன் நிற ஷூ என தன்னவளை பார்க்கும்படியான இடத்தில் நிற்க.. அவனின் பக்கவாட்டிலே நின்ற ராகேஷ்.. ” டேய் இனி நடக்கும் அனைத்தும் உன், எழிலரசி வீட்டில் உள்ளவர்களும் பார்க்குறாங்க. “
‘ அப்படியா!.’ என இந்த விஷயத்தை அரசியிடம் தானும் ஒருமுறை தெரிவித்து.. தன் முயல்குட்டி மற்றும் வீடியோவில் இருப்பர்களை பார்த்து மெல்லிய புன்னகை காண்பித்தான்.
” ஹாய்.. நான் விவரிக்க போகும் ப்ராடெக்ட்.. பெண்கள் தாங்கள் கருவுற்றுயிருக்கும் சமயம், குழந்தை பிறந்த பின் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் குழந்தையின் பிறந்ததினம் முதல் ஒருவயது வரை.. 1 முதல் 3வயது வரையும்.. 3ல் இருந்து 5 வயது வரை என குழந்தைகள் பயன்படுத்தும் ப்ராடெக்ட் பற்றியது.
பாதாம்ஆயில், ப்ரிம்ரோஸ் ஆயில், சூரியகாந்தி விதை, வைட்டமின் E- ஆயில் ஸ்ட்ரெட்ச் மார்க்.. மற்றும் குழந்தையின் வளர்ச்சி நிலையில் வயிற்றின் சரும்ம பகுதியில் ஏற்படும் அரிப்பு போன்ற பல தோல் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும்.
ரோஸ் ஹிப் ஆயில் கருவுற்ற காலம் மற்றும் முடிந்தும் என.. இரவு உறங்கும் போதும், தசைபிடிப்பு, பாதம் வீக்கத்திற்கு மசாஜ் செய்தால் நிம்மதியான உறக்கம் வரும்.
ஜொஜோபா எண்ணெய், லெமன், சூரியகாந்திஆயில், புதினா, ஷியா பட்டர்–ஷாம்பு.
ப்ரிம்ரோஸ் சாரம், தேயிலை மரம், கெமோமில்(சீமைசாமந்தி)- பாடி லோஷன் பயன்படுத்தாலாம். “
மேலும் அழகு சாதனப்பொருட்கள்,ஹேர் ஆயில், ஐகீரிம், குழந்தை பிறந்த பின்னால்.. தாய்பால் கொடுக்கும் சமயங்களில் பெண்களின் மனதை, உடலையும் புத்துணர்வுடன் வைத்திருக்கும் ஆயில், ஷாம்பு என சில ப்ராடெக்ட் கூற..
” குழந்தைகளுக்கு.. தமானு எண்ணெய், காலெண்டுலாபூ, ஷியா பட்டர்., ஆலிவ் மற்றும் கடுகுஎண்ணெய்–பாடி லோஷன்.
ரோஸ் ஹிப், சூரியகாந்தி, கான்பெரி ஆயில்., உடல் மற்றும் தலைகுளிக்க பயன்படுத்தலாம்..
ஜொஜோபா எண்ணெய், வைட்டமின் ஆயில், சூரியகாந்தி, தேங்காய் எண்ணெய்.. குழுந்தையின் சருமம் மென்மையாகவும்.. குழந்தையின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் பயனளிக்கும். “
‘ வாசன் கொடுத்தது முதற்கொண்டு.. மேலும் சில இயற்கை பொருட்களின் கலவையினால் ஆன அனைத்து தயாரிப்புகள் பற்றி புன்னகைக்கும் கண்களாக.. அனைவரும் வேந்தன் பேசுவதை மட்டும் கேட்கும்படியான வீசிகரிக்கும் குரலில்..
தன்னை மயக்கும் கண்கள்.. எங்கும் திருப்பாமல் தன்தனுமாமாவின் அசையும் இதழ்களை மட்டுமே பார்த்திருக்கும்.. தன் அரசியை பார்த்து மெல்லிய புன்னகையுடன் அனைத்தும் கூறி முடித்தான் வேந்தன். ‘
வேந்தன் முடிந்தவுடனே நண்பர்கள் மூவரும் எழுந்து சென்று அவனை கட்டியணைத்து தங்களின் வாழ்த்து, நன்றி, மகிழ்ச்சியை தெரிவித்தனர். அவர்களும் எழிலரசியை பார்க்க..
நால்வரின் போனிற்கும் ஒரே நேரத்தில் மெசேஜ். ” தம்பிகளா.. இனி அக்காவோட மாமாவ கட்டிபிடித்தா.. நேரத்திற்கு ஏற்றார்போல தக்க தண்டனை வழங்கப்படும். “
வேந்தன் தன்னவள் தம்பி என அழைத்திருந்ததால்.. புன்னகையுடன் நமக்கு மச்சான்களோட எண்ணிக்கை கூட்டிட்டே போகுது.. என அளவுகடந்த புன்னகையை கைவைத்து கட்டுபடுத்த..
தம்பிகளில் ஒருவர்.. மூவருக்கும் சேர்த்து.. ‘ தண்டனை எதுவாயினும் நாங்கள் சமாளிக்க தயார்.. முறைப்பு இமேஜ்வுடன் பதிலை அனுப்பினர்.
‘ போங்கடா தம்பிகளா.. என தன்னவன் மற்றும் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து கொண்டு இருப்பதை பார்த்தாள்.
ரோஹித் மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. உங்க எல்லோரையும் ஏன்?.. நாங்க இவ்வளவு அவரசமா வரச்சொன்னோம் கேள்வியும்.. இந்த அலங்காரம் எதற்கு என்ற குழப்பமும் இருக்கும். ”
ஆம் என சிறிய தலையாட்டல் மற்றும் புன்னகையும் இருந்தது.
அதனை ஏற்றபின்.. ” முதலில் நீங்க உங்கள் பணிகளை சிறப்பாக முடித்தற்காக மற்றும் இப்போது வந்ததற்கான.. எங்க EV கம்பெனியின் போனஸ் மற்றும் காம்பென்சேஷன்..
உங்க எல்லோருக்கும்.. உங்களுடயை ஏழு நாட்களுக்கு உண்டான சம்பளம் மற்றும் சம்பளத்துடன் கூடிய இரண்டு நாட்கள் விடுமுறை என.. RR கம்பெனியின் அனுமதியுடன் நாங்கள் அன்புடன் தெரிவிக்கிறோம். “
” இரண்டாவது.. இன்று.. இப்போது EV நேச்சர் பீயூர் ப்ராடெக்ட் கம்பெனியின் புதுஅறிமுகமாக உருவாகியிருக்கும்.. குழந்தைகள், கர்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்களுக்காக.. நாங்கள் தயாரிக்க போகும் ப்ராடெக்டிற்கு துவக்க விழா நடக்கப்போகுது. “
அனைவருமே கேட்ட இரண்டுவிஷயங்களில் இன்ப அதிர்ச்சி அடையும் வேலையில்.. அறைகதவு திறக்கும் சத்தம் கேட்க.. அங்கு சத்யா, திலகன், வினோத், தீபிகா. வேந்தனின் மாமா விஸ்வநாதன் உள்ளே வந்தார்கள்.
இப்போது வேந்தனும், எழிலரசி ஒரு நொடி இன்பமாக அதிர்ந்து.. பின் அரசியும் வேந்தனும் எழப்போகும் நேரம்.. சந்தோஷ் அவர்களிடம் விரைந்து.. அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வைக்க.. ஐவருமே எழிலரசி, வேந்தனிற்கு விரிந்த புன்னகையை காண்பித்து அமர்ந்தனர்.
எழிலரசி அவர்களிடம் செல்லாம் என நினைக்கும் வேலையில்.. அவளின் அருகில் வந்த ரோஹித்.. ” எழிலரசி எங்களுடைய ப்ராடெக்டை முதன்முதலில் வாங்கி.. விற்பனையை துவங்கி வைக்க அழைக்கிறேன். ” மெல்லிய புன்னகையுடன் கூறி அழைக்க..
அவள் முறைப்பை செலுத்திவிட்டு.. வேந்தனை பார்த்தாள். ‘ வா முயல்குட்டி ‘ என சத்தமில்லாமல் அழைக்க.. பின் மெல்லிய புன்னகையுடன் எழுந்து தன்னவனின் அருகில் நின்றாள்.
எழிலரசி மற்றும் அறை அலங்காரம் அனைத்தும்.. EV ப்ராடெக்ட் நிறம் அடர்பச்சை மற்றும் சிவப்புநிறத்தில் இருக்க.. நண்பர்கள் மூவரும் இளம் ஊதா நிற சட்டை, அடர் ஊதா பேன்ட் மற்றும் கோர்ட்.. ஒன்று போல உடுத்தியிருக்க.. இப்போது கோர்ட்டை கழட்டிவைத்து நின்றுயிருந்தார்கள்.
‘ என்னடா நடக்குது?.! ‘ என்ற பார்வையில் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்திருக்க..
குழந்தைகள், கர்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்களின் அனைத்து தேவைகளுக்குமான.. ப்ராடெக்ட் அடங்கிய பாஸ்கெட்.. சந்தோஷ், ராகேஷ்.. எழிலரசி முன் நீட்ட.. தன் அரசியுடன் சேர்ந்து வேந்தனும் வாங்கிக் கொண்ட..
அதே நேரம் அவர்களின் மேல் இருந்த பலூன் வெடித்து.. அதனுள் இருந்த பலவண்ணப்பூக்கள்.. அவர்கள் இருவரின் மீது அழகாக விழ..
அடுத்த நொடி.. வேந்தனுடன் இவர்கள் மூவரும் கல்லூரில் படிக்கும் போது எடுத்த சில புகைபடங்கள் திரையாகி.. அனைவரையும் ஆச்சரியம், அதிர்ச்சியை கொடுத்தது.
ராகேஷ்.. ” உங்க கம்பெனியின் டீம் லீடர் வேந்தன்.. எங்க கல்லூரி நண்பன். ” என புன்னகையுடன் தோள் அணைத்து கூறினான்.
என்ன!.. என முக்கிய பொறுப்பில் இருப்பவர் முற்கொண்டு அனைவரும் அதிர்ந்தனர். ஓரே கல்லூரி என பார்த்தார்.. ஆனால் அப்போதே நெருங்கிய பழக்கம் இருக்கும் என நினைக்கவில்லை.
” எங்க கல்லூரி நாட்களில்.. எங்கள் ப்ராடெக்ட் உருவாதில் வேந்தனின் உதவியும், பங்களிப்பும்.. நிறைய இருக்கு. அவர் இங்கு வேலைய ரீசைன் பண்ணிட்டார். ஆனாலும் இந்த ப்ராடெக்ட் அனைத்திற்கும் எல்லா முக்கிய வேளைகளின் பணிகள் செய்து, அனுமதி வாங்கியதில் வேந்தனின் பங்களிப்பு இருப்பதாலும்.. “
அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு.. வேந்தன் பெங்களூரில், இக்கம்பெனியில் என முக்கிய நிகழ்வுகளின் போது எடுத்த போட்டோ..
பின் அழகான புன்னகை முகங்களாக வேந்தன், எழிலரசியின் உறுதிமுதல் நேற்று வரை அவர்களின் அனுமதியுடன்.. ஆனால் அவர்கள் நேச்சுரலாய் இருக்கும் வேளையில் எடுக்கப்பட்ட புகைபடங்கள் திரையில் அடுத்தடுத்து வந்து..
பின் அனைத்தும் ஒன்றாகி வேந்தன், எழிலரசி புகைபடத்தின் அருகில்.. அவர்களின் நண்பர்களுக்கான திருமணபத்திரிகை தோன்றியது.
வேந்தனின் மாறாத தோழமை தோற்றம்.. எழிலரசியுடன் அழகான புன்னகைமன்னன் தோற்றம்..
வரும் ஞாயிறு அன்று வேந்தன், எழிலரசி திருமணம். அவனை அறிந்த நண்பர்களுக்கு வியப்புடன் கூடிய தங்கள் மகிழ்ச்சியை! எழுந்து நின்று கைதட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க..
வேந்தன், எழிலரசி இருவரிடத்திலும் வார்த்தைகள் இல்லாத மகிழ்ச்சியுடன் தங்களை நன்றியை தெரிவித்தனர்.
அவர்களின் வாழ்த்தும், நன்றியும் முடிந்தபின்.. புன்னகையுடன் சந்தோஷ் ” வேந்தன், எழிலரசி.. தங்களின் திருமண ஏற்பாடு மற்றும் நிகழ்ச்சிகளின் பொறுப்பை எங்களிடம் ஒப்புடைத்து உள்ளனர்.
சில காரணங்களால் இவர்களின் திருமணம் குறிப்பிட்ட தேதிக்கு ஒருமாதம் முன்பாகவே.. திருமணம் நடக்க இருப்பதால் உங்க அனுமதியுடன், நிதானமாக செய்து இருக்க வேண்டிய இருநிகழ்ச்சியும்.. கம்பெனி ஓனரிடம் அனுமதிபெற்று.. உங்களை அவசரபடுத்தி செய்ய வேண்டிய சூழ்நிலை வந்ததுவிட்டது. ” அனைவரிடத்திலும் புன்னகை மட்டும் வந்தது.
” வேந்தன், எழிலரசி சார்பாக இரண்டு நாட்களுக்கு முன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட.. எழில்வேந்தன் இனிப்பகத்தின் இனிப்புகள், நான்குகிராம் தங்க காயின் மற்றும் EV கம்பெனியின்.. நேச்சர் பீயூர் சலூன் அண்ட் ஸ்பா.. ஐந்தாயிரம் மதிப்புடைய கிப்ட் பவுச்சர். அனைவரையும் திருமணத்திற்கு வருகை தரும்படி அழைக்கிறோம். “
‘ என்னடா பண்ணுறீங்க?. ‘ என்ற பார்வையில் வேந்தன் மூவரை பார்க்க.. ‘ போடா போடா ‘ என்ற பார்வையில்..
காதலனாக, கணவனாவும், தங்களின் லக்கிசாம், குட்டிஅக்கா என்ற முறையில் அனைவரிடமும்.. எழிலரசி கைகளினாலே கொடுக்கவைத்தனர்.
வேந்தனின் ப்ராடெக்ட் அறிமுகம் முடிந்தபின் கொடுக்கபட்ட அவர்களின் போனில்.. ஒவ்வொரு அறிவிப்பு கூற கூற..
அவர்களின் வங்கி கணக்கிற்கு ஏழுநாள் சம்பளம், மெயிலில் விடுமுறை அறிவிப்பும்.. கிப்ட் பவுச்சர் வந்துவிட..
அனைத்தும் மறக்க கூடிய அளவிற்கு அடுத்தடுத்து நிகழ்வுகள்இருக்க.. சிறிய கிப்ட் பேக்கை எழிலரசி கொடுக்க.. இருவருக்கும் வாழ்த்துகூறி இன்முகத்துடன்சிலரும்..
வேந்தனின் குழுவினர் தங்கள் விருப்பமானவரின் திருமண தேதி அதிர்ச்சியால்.. அவர்களை முறைப்பும், புன்னகையுமாக என கட்டியணைத்து.. எழிலரசியிடம் இருந்து.. அவளின் நாத்தனார்கள்.. என அனைவரும் வாங்கிக்கொண்டனர்.
” உங்களிடம் கடைசியா ஒரு சந்தோஷமா விஷயத்தை.. எங்களின் சார்பா எழிலரசி அறிவிப்பார்கள். ” ரோஹித் எழிலரசி, வேந்தனிடம் கூற.. அவள் வேந்தனை பார்த்தாள்.
” அரசி வீட்டில பேசுவது போல சாதாரணமா.. ஆன அதிக வார்த்தையில்லாம பேசு. ” அவளின் கையை மென்மையாக பிடித்து விடுவிக்க.. மெல்லிய தலையசைப்பை கொடுத்து அனைவரையும் பார்த்தாள்.
புன்னகையுடன்.. வேந்தனை பார்த்துவிட்டு.. ” ஹாய்.. வேந்தனோட இரண்டுவருடமா.. வேலை செய்யதவர்களை பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ” அவளிடம் கேள்விக்கேட்டவள்.. உடன் இருந்தவர்களை ஒருபார்வை பார்த்துவிட்டு புன்னகையுடன் கூற..
ப்ராடெக்ட் பெயரை சுற்றி மொத்த ப்ராடெக்ட் அடங்கிய பவர் பாயிண்ட் சிலைடு வந்தது.
அதனைபார்த்தவள்.. ” விவரித்த ப்ராடெக்ட் எல்லாம் தெளிவா புரியும் படியா இருந்தது. பொருட்கள் உருவாவதற்கு ஆரம்பம் முதல் இறுதி வரை உழைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இதில் இருக்கும் ப்ராடெக்ட் உருவாவதற்கு முன்.. லேப்பில் இருப்பவர்கள், இவைகள் செய்ய தேவையான மூலப்பொருட்களை ஏற்பாடு செய்தவர்கள்.. அதை உரிய நேரத்தில் உங்களிடம் ஒப்படைப்பவர்கள் என இவற்றிற்கு மறைமுகமாக உதவி செய்தவர்களுக்கும்.. EV கம்பெனி மூலமாக போனஸ் கொடுக்கபடும். ” மூவரை பார்த்து கூற..
மெல்லிய தலையசைப்புடன் கூடிய சம்மதத்தை கூறினார்கள். அதில் மகிழ்ந்து புன்னகையுடன் வேந்தனை ஒருபார்வை பார்க்க.. அவளவனின் கண்களில் காதல் காதல் காதல் மட்டுமே.
” சந்தோஷமா விஷயத்திற்கு வரேன்.. இப்போது விவரித்த அனைத்து பொருட்களும்.. மீண்டும் ஒருமுறை அனைத்து விதமான சோதனை செயல்முறைகள் செய்யப்பட்டு (வாசன் கொடுத்த டீடைல்ஸ் சோர்த்தும்).. மீண்டும் ஒருமுறை அனுமதி கொடுக்கப்பட்டு..
வரும் ஞாயிறு அன்று காலை10 மணிக்கு.. EV கம்பெனியின் கான்பரன்ஸ் ஹாலில்.. அனைத்து பொருட்களும் முக்கிய உறுப்பினர்கள், நண்பர்கள், பிரஸ் என அனைவர் முன்னால் அறிமுகம் செய்து.. உடனே விற்பனைக்கு வரப்போகிறது என்பதை..
EV நேச்சர் பீயூர் பியூட்டி ப்ராடக்ட் அண்ட் காஸ்மெடிக்ஸ் கம்பெனியின் சார்பில் வேந்தனின் எழிலரசி.. அவள் மனதில் ‘ எழில்வேந்தன் ‘ தெரிவிக்கிறேன். “
இக்கம்பெனியில் தன்னவனின் உழைப்பும், இருவரின் பெயரும் அடங்கியிருக்கிறது என்ற பூரிப்பு, கர்வத்துடன் கூறி முடித்தாள்.