Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 39.3

 

நாம் 39(3)

 

   வேந்தன், எழிலரசிக்கு என்று.. எழிலரசி வீட்டினர் ஏதாவது செய்யவேண்டி வேறு வேலைகள்.. அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்ததால்.. இன்பா உட்பட இப்போது தான் வேந்தன் வீட்டை முழுமையாக பார்க்கிறார்கள்.



Advertisement

   மூவரும்  பார்த்து என்ன சொல்வது!. என்று புரியதா நிலையில் ஹாலில் மகிழ்ச்சி, தயக்கம், கலக்கம், கவலை என்ற உணர்வில் சமையல் அறை வாயிலையே பார்த்துயிருந்தனர்.

   அவர்களை கவனித்த  திலகன் வேந்தனிற்கு மிஸ்டு கால் கொடுத்து.. பின்முடிந்ததா?என மெசேஜ் அனுப்பினான். ” ம். ” பதில் வந்தது.

 

Advertisement

    தன்னவள் தன்னை பிடித்திழுத்து உண்மையா என உணர.. அவனோ தன் அரசியின் நெற்றியில் தான் இட்ட குங்குமம்.. அதனை நினைத்து மிகமிக பொலிவுடன் இருப்பவளை கணவன் பார்வையால் சிவக்க வைத்து பாயாசம் செய்து முடித்தவன்.. அவளை மேடையில் இருந்து இறக்கிய அந்த ஒருநொடியில் கழுத்தில் அழுத்த முத்தம் பதித்து இறக்கி விட்டான். இறங்கியவள் அவனின் மார்பில் முத்தம் பதித்து.. தன்னவனிடம் நெற்றி முத்தம் வாங்கியபின் இருவரும் வெளிவந்தனர்.

Advertisement

 

   இருநாட்கள் முன் அழுகையுடன் பார்த்தது.. இவளை எவ்வாறு தேற்றபோகிறார் என இருவரை நினைத்தும் வருத்தம் இருந்தது.

   ஆனால் இப்போது பொலிவுடன் வருபவர்களை ரவிந்திரன், அருணாச்சலம், லட்சுமியும் பார்த்து மகிழ்ந்தனர்.

Advertisement

   வேந்தன் பாயாசம் கொடுத்தான். அதனை அருந்தவாவ்!. ‘ என இருந்தது.

   சாப்பிட்டு முடிந்தபின் அனைவரிடத்திலும்.. ஏதோ தன்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என யோசனையுடன் இருப்பது போல இருந்ததை கவனித்த வேந்தன்.

  ” என்ன என்னிடம் நீங்க தெரிந்துக் கொள்ள வேண்டும்?. ” அனைவரையும் பார்த்தான்.

 

   நீ நிஜமா எழிலரசியை நினைத்துதான் இந்த வீடு கட்டுனியா?. ஏன் மாப்பிள முன்னாடியே எங்க வீட்டிற்கு வரல?? நீ என்னிடமாவது சொல்லியிருக்கலாம் வேந்தன். ” திலகன், மாமா ஒரேகேள்வியும், மாமனார், அப்பா என ஒரே நேரம் கேட்டனர்.

 

   புன்னகையுடன் அதனை கேட்டவன்.. தன் அரசியை பார்த்துபின்.. ” மாமா நான் அரசிய மட்டும் நினைத்து கட்டல.. எங்க எதிர்காலத்திற்கு எது நல்லது?. என  நினைத்து கட்டியது.

   உங்க கல்யாணம், அண்ணாவிற்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகும் சமயம் தான் இனி எல்லோரும் பெரிய வீட்டில் இருக்க வசதியா இருக்காது.. அதனால தாத்தா,பாட்டி வீட்டு பக்கம் இல்ல.. அரசிவீடு பக்கத்தில் இருக்கனும் நினைத்தேன். ஆனா இடம் சரியா அமையல. வேறுவழியில்லாம அம்மாக்கு தாத்தா கொடுத்த இடத்தில் கட்டவேண்டியதா போச்சு.

   அப்பா, மாமா.. உங்க பேருக்கும் ஒரே பதில் தான்.. அரசிக்கு வயசு கம்மியா இருந்ததுதான் காரணம். ” தன்னவளை புன்னகையுடன் பார்க்க.. அவளோ அவனின் விருப்ப முறைப்பு பார்வையை செலுத்திக் கொண்டுயிருந்தாள்.

   கணவனாக தன்னவளை பார்த்து பலசெல்ல வார்த்தைகளில் கொஞ்சி.. எல்லோரையும் பார்க்க..

  ” சரி டா.. அப்போ சொல்லாட்டியும் உறுதி முடிந்தாவது சொல்லி.. ” அவர் முடிக்கும் முன்..

   “அப்பா.. நான் அப்ப சொல்லியிருந்தா.. என்விருப்பத்திற்காக எங்களுக்கு அடுத்த முகூர்த்ததில் கல்யாணம் தேதி குறித்துயிருப்பீங்க. அப்போவும் நான் இத்தனை நாளா நடந்த மாதிரிதான் எல்லாம் செய்திருப்பேன்.

   ஆனா நீங்க எல்லாம்..  இரண்டு குடும்பமும் ஒற்றுமையா சேர்ந்து செய்த மாதிரி செய்திருப்பீங்களா?. இல்ல.. என் மனைவிக்கு என்று கூறி விருப்பியதை செய்தே எவ்வளவு பிரச்சனை.. நான் காதலித்தேனு சொல்லியிருந்தா??.. 

   அரசிய இந்நேரம் மகளா, மருமகளா, அண்ணியா நினைத்தது மரியாதை கொடுத்து எல்லாம் செய்துயிருப்பீங்களா என்று சந்தேகம் தான். “

 

   இத்தனை நாள் எழிலரசி மேல் இருக்கும் அன்பு, உரிமை உணர்வில் செய்ததை நினைத்தால்.. தங்களுக்கு சற்று கோபமும், தானும், அருணாச்சலமும் நண்பர்கள் போல் ஆகியிருக்காமல் சாதாரண சம்பந்திகளாக தான் இருந்துயிருப்போம்.

   தாங்கள் பார்த்து பின் உறுதி செய்து.. மனைவிக்கு என்று சேர்த்து வைத்ததையே தாங்க முடியாமல் இருந்த பலர்.. காதலி என்றால்.. இந்நேரம் வசு, சித்ரா போல பலருக்கு வந்த போட்டி உணர்வு.. அப்போதே வந்துயிருக்கும்.. இந்நேரம் தினம் ஒருபிரச்சனை வந்துயிருக்கும்.

   எழிலரசி, வேந்தன் புரிதல் இல்லாமல் கூட போய்இருக்கும். இப்போது கோபம் கொண்டு வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறியவன்.. அப்போதே மருமகள் வீட்டோடு.. இல்லை வேறு வீட்டிற்கே சென்றுயிருப்பான் என அனைவருமே நினைத்தனர். ‘

 

   ம்.. சந்தேகம் தான் டா. சந்தேகம் தான் மாப்பிள்ளை, மச்சான்ஒரு சேர கூறினர். சரி என புன்னகையுடன் பார்த்தான்.

  தன்னவளை பார்க்க ஒருநொடி அவள் முகத்தில் வருத்தம் வந்துபோனது.

   அருணாச்சலமும் ரவிந்திரனும் ஒருபார்வை பார்த்து புன்னகைத்து.. பின் பெருமுச்சு வெளியிட்டு.. ” வேந்தா எழிலரசிய தீடிர்னு இங்க கூட்டிட்டு வந்துட்ட.. கல்யாணம் வரை உன் பிளான் என்ன?. ”

   ம்.. பிளான் எதுவும் யோசிக்கல ப்பா. நீங்க பத்திரிக்கை வைத்துவிட்டு வாங்க. அரசிட்ட கலந்துபேசிட்டு.. சாப்பிட வரும்போது சொல்லுறேன். ”

   சரிடா. நாங்க கிளம்புறோம். நீங்க இப்ப?. ” முடிக்கும் முன்..

   அப்பா நாங்க வீட்டை பார்த்துட்டு.. கடைக்கு போயிட்டு பின் மாமாவீட்டிற்கு வரோம். ” கூறியபடியே.. 

   எதார்த்தமாக திலகனை பார்க்க.. எழிலரசி வீட்டை பார்த்தே இல்ல?. என முறைத்துக் கொண்டுயிருந்தான். மனதிற்குள் புன்னகைத்து.. அத்தம்மாவை பார்க்க.. வருத்தம் இருந்தது.

 

   அத்தம்மா.. ” தீடிர் என்று புகுந்தவீட்டிற்கு வந்த மகள் மீது இருந்த பார்வை வேந்தனின் மீது திருப்பிசொல்லுங்கஎன பார்த்தவர்..

 

   அத்தம்மா.. நாங்க மருமகனா, மருமகளா உங்க, எங்க வீட்டிற்கு வந்து பல வருஷம் ஆச்சு.. எங்க இரண்டுபேருக்கும் மூனுவீடும் ஒன்னும்தான். எங்க இருக்கனும் என்று தோனுதே அங்க இருப்போம். தினமும் ஒரு நேர சாப்பிடு அங்க தான். அதனால நீங்க இப்படி கவலைபட வேண்டிய அவசியம் இல்ல. உங்க எல்லோர் திருப்திக்காக தான் சில முறைகள், சடங்குகள் செய்ய அனுமதிக்கிறேன். “

 

   இல்லனா என்னடா பண்ணியிருப்ப?. ” விஸ்வநாதன், திலகன் ஒருசேர கேட்க..

 

    பெரியவர்கள்அதே கேள்வியோட லுக்விட.. வேந்தன் தன் அரசியை பார்க்க.. அவளோ வெக்கத்துடன் யாரையும் பார்க்க முடியாமல் திணற..

   அதை பார்த்த சத்யா.. ” அண்ணா இதற்கு பதில் நான் சொல்லட்டா?. ” சரி என தலையசைக்க..

 

   புன்னகையுடன்.. ” நீங்களா பார்த்த பெண் என்பதால்.. கோயில் பார்த்த அன்னைகே இவசம்மதத்துடன் கல்யாணம் செய்திருப்பாரு. இல்ல வேறயாராவது இவளை பெண்பார்க்க வந்துயிருந்தா?. வீட்டிற்கு வந்து இவ சம்மதம் இல்லாமலையே.. தாலிகட்டி இங்க தூக்கிட்டு வந்துயிருப்பாரு. நான் சொன்னது சரியா அண்ணா. “

   புன்னகையுடன்.. ‘ ஆம்என தலையசைக்க.

  ‘ அடபாவிஎன்ற புன்னகையான லுக்விட்டு..

   இன்பா புன்னகையுடன் எழுந்து கட்டியணைத்து.. ” எங்க விருப்பம்.. எல்லாம் சடங்கும் முறையா நடக்கனும்.. என்ற நினைவு இருந்தா சரி. எழில் குட்டிம்மாவிற்கு வீட்டை காண்பித்து சீக்கிரம் சித்தப்பா வீட்டிற்கு போங்க. ” திலகன், சத்யா, எழிலரசி, வேந்தன் தவிர பத்திரிக்கை கொடுக்க.. மற்றவர்கள் கிளம்பிவிட்டனர்.

 

   வேந்தனும் தன்னவளை மாடிக்கு அழைத்து செல்ல.. திலகன் செல்லும் அவர்களை சிறிது கவலையுடன் பார்த்தவளின் மிக அருகில் அமர்ந்து.. தன்னவளை தன் பக்கம் திருப்பி..

   ” தியா ஏன்அவங்களை அப்படி பார்க்குற?. அதான் பிரச்சனை முடிந்தது தானே?. “

 

   திலகனின் தோள் சாய்ந்து.. ” ம்.. அண்ணா காதலித்தாங்க என்ற விஷயம் தான் வெளி வந்து.. பெரியவங்க பிரச்சனை தான் முடிந்துயிருக்கு.ஆனா வசு, நந்தினி மாதிரி சிறியவங்க பிரச்சினை முடியல.

  தர்ஷினி சொன்னா அவங்க நார்மலா தான் கமலேஷ், அஸ்வின் அண்ணா கூட பேசுறாங்களா. ஆனா சிலநேரம் கமலேஷ் அண்ணா அந்நேரத்தில் எதுவும் பேசாதது.. அஸ்வின் அடித்ததை நினைத்து வேந்தன், எழிலரசியை அவங்களோட கம்பேர் பண்ணி பேசி சண்டையும் போட்டாங்களா.

   நீங்கயெல்லாம் முகூர்த்தகால் வைத்திருந்தபோ நான் அவங்களை பார்த்தேன்.. கோபமா வீட்டை காண்பித்து வசு.. நந்தினியிடம் பேசியிட்டு இருந்தாங்க. இரண்டுபேரும் அன்றில் இருந்து இன்னும் அண்ணா, எழில் கூட பேசவே இல்ல.

   காவ்யா அக்கா கூட நம்ம வீட்டிற்கு வந்தபோது பேருக்கு என்றுதான் ஈஸ்வர் அண்ணா கூடநின்னாங்க.

   மேகாக்கு பார்த்திபன் அண்ணாவை பிடித்துயிருக்கு.. ஆனா இன்பா அண்ணா மாதிரி அவங்க சாப்ட் கிடையாது.. கோபம் சீக்கிரமா வந்துடும். அவங்க வேலை மாறி சென்னை வரவே ஆறுமாதம் ஆகுமா. இங்க இப்போதைக்கு வர மூன்றுவருடமாவது ஆகுமா. தனியா எப்படி இருக்கபோறோம் என்ற பயத்தில் இருந்துயிருக்கா..

  அதுகூட இப்ப.. வேந்தன் அண்ணா காதலித்ததால் தான் எல்லாம் செய்ததாங்க.. அதுபிடிக்காம இன்பாக்கு எதிரா சில விஷயங்கள் தான்செய்ததால்.. திருப்ப அவ கல்யாண ஆள்ளே மாறி.. இப்படி நடக்க காரணம் எழிலரசினு.. அவ கோபத்தில் இருக்கா. “

 

   பொறுமையாக கேட்டவன்..  அவளின் பீரியட்ஸின் முதல்நாள் என்பதால் சிறிது சேர்ந்துயிருந்த தன்னவளை தலைதடவி விட்டு புன்னகையுடன்… ” தியா செல்லம்  நிறுத்தும்மா. உன் கவலை லிஸ்ட் அதிகமா போயிட்டே இருக்கும். ” அவனை நிமிர்ந்து முறைக்க..

 

   அவளை மூக்கை பிடித்து ஆட்டி.. அவளை சாய்த்து.. ” தியா நீ சொன்னவங்களோட சித்ரா அம்மாவிற்கும் கூட  வருத்தம் இருக்கு. ஆனா அவங்க வெளிய காட்டிக்கல. வேந்தன், எழிலரசி கல்யாணம் முடிந்து சிலமாதங்கள் வரை எல்லோரும் அப்படி தான் இருப்பாங்க.

   சித்ரா அம்மா மற்ற பெரியவங்க எல்லாம் இதுமாதிரி நிறைய பிரச்சனைகளை கடந்து வந்ததினால கொஞ்சம் சாதாரணமா எடுத்துட்டாங்க. மேகாவிற்கு எழிலரசியை வேந்தன் காதலித்த விஷயத்தில் நல்லதுதான் நடந்துயிருக்கு. இன்பாவிட.. மேகா குணத்திற்கு பார்த்திபன் தான் பெஸ்ட் சாய்ஸ்.. அதை அவங்க போகபோக புரிந்துக் கொள்வாங்க.

 

    காவ்யா அண்ணி அஞ்சலி கூடவும்..  நந்தினி, வசுவும் நாத்தனார், அண்ணி என்று குடும்பவாழ்க்கை ஆரம்பித்தா.. எழிலரசி யாருக்கும் எதையும் கொடுக்காம அமைதியா இருப்பேன் என்று முன்னாடியே சொன்னது எவ்வளவு நல்லது நினைத்து..

   எழிலரசியை புரிந்து வசு.. அண்ணினு!. எழில் பின்னாடியே சுத்தவா. அப்ப வந்து.. வேந்தன் அண்ணா.. வசு எழிலை தனியாவே இருக்க விட்மாட்டிகிறா.. அவ மேல கோபமா இருக்காருனு.. என்னிடம் இதேமாதிரியோ இல்ல.. நம்ம குழந்தையோட வந்து சொல்லுவ. ” காதலுடன் பார்த்து கூற..

 

    ம்.. கூற கூற புரிந்து தெளிந்தவள்.. தன்னவன் குழந்தை என்றதும்.. புன்னகையுடன்.. ” சரி.. அண்ணா மாதிரி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று ஏதாவது ஆசை இருக்கா?. ” ஆவலுடன் நிமிரிந்து கேட்க..

 

  சிரிப்புடன்.. ” ஏம்மா அவன்  எப்பவோ.. அவனுக்கு பிடித்த பொண்ணு கிடைத்து எல்லாம் யோசித்து வைத்துயிருக்கான். எனக்கு இரண்டு மாதம் முன்னாடி தான் பொண்ணு கிடைத்து இருக்கா. இப்பதான் காதலிக்க ஆரம்பித்து இருக்கேன்.. கல்யாணம் அதுபிறகு தான் அதை பற்றி யோசிக்கனும். “

 

   .. அப்ப நிறைய பொண்ணுகளை பார்த்து இருப்பீங்க போல?. “

 

   சிரிப்புடன்.. ” தியா செல்லம் இப்படியெல்லாம் முறைக்ககூடாது. சும்மா பார்ப்பது தான். ஏன்.. நீயும் எழிலரசியும் நிறைய பேரை பார்த்து ஒட்டியிருக்கிங்கனு.. எழில் சொன்னதா சொன்னான். ” அவளை புருவம் உயர்த்தி கேட்க.

   உயிர்தோழியை திட்டி.. ” அது அது வந்து.. ” அவர்கள் தங்களுக்கான நேரத்தை தனியாக பேசிகொண்டாட..

 

   அவர்களின் மேல்பகுதியில் இருந்தவன்.. வீடுமுழுவதையும் நடந்து சென்றே முயல்குட்டிக்கு காண்பித்தவன்.. தங்களின் அறை மற்றும் தங்களுக்கான பிரதேக அறைக்கு தன்னவளை அள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

   அவனின் அறையின் மாற்றம்.. இங்கு தங்களின் பிரதேக புகைபடங்களை பார்த்ததும்.. அவனவள் அவனை கொஞ்சி தீர்த்துவிட்டாள். ” தனு கீழ இறக்கிவிடேன்.”

 

   முத்தம் அனைத்தும் அனுபவித்தவன்.. அவளை நெருக்க அணைத்து மெல்லிய குரலில் ரோமம் உரச.. ” ம்ஹூம்.. இன்னைக்கு உன்ன இங்க இறக்கி விட்டேன்.. நீ.. நான்.. நாம்மா தான்டி வெளிய போவோம். அதுவும் எப்ப போவோம் என்று தெரியாது. ”

   தன்னவன் கூறியதில் உடல் சிலிர்த்து அடுத்து பேசவிடாமல்.. தன்னவனின் முகத்தை நகரத்தி.. ” போடா.. அப்படினா இப்ப என்னைய கூட்டிட்டு வந்துயிருக்க கூடாது. ”

   அவளின் நெற்றியில் முத்தமிட்டு.. ” முயல்குட்டி.. நான் உன்னைய கல்யாணம் முடிந்து.. நீதான்முதன்முதலில் இங்க வரனும் நினைத்தேன். ஆனா.. ” அவன் முகத்தில் வருத்தம் தெரிய அதிலே புரிந்தது வசுவும், அத்தையும் தனுவிற்கு தெரியாமல் வந்துயிருக்கிறார்கள்.

 

   அவனின் இதழில் கைவைத்து.. ” சரி சரி ஒரு போட்டோ எடுத்துட்டு உடனே மொத்த ரூம்மை விட்டே கூட்டிட்டு போ. நாம்ம வெளிதிண்ணையில் உட்கார்ந்து பேசலாம். ” அவளின் சிவந்த உடலில் அவனின் விரும்பிய இடத்தில் அதர முத்தம் பதித்து.. அவளை அந்நிலையிலேயே படுத்தி எடுத்து.. நல்ல பையனாக அவள் சொன்னது போலவும் செய்து முடித்து வெளியே வந்தார்கள்.

    வேந்தன் திலகனை அழைத்தபடியே இருவரும் கீழே வந்தனர். ஷோபாவில் படுத்துயிருந்த சத்யா எழுந்து அமர.. திலகனை காணவில்லை.

   எழிலரசி அவளின் பக்கம் புன்னகையுடன் அமர்ந்து.. அவளை தோள் சாய்த்துக்கொண்டு.. ” எங்கடி அண்ணா?. ”

    சமையல் அறை பக்கம் தன் நண்பனை பார்க்க சென்ற வேந்தனை காண்பித்தாள். ” .. அண்ணா உனக்கு சாப்பிட ஏதாவது செய்ய போயிருக்காறா?. ”

   இல்லடி கோயிலில் சரியா சாப்பிடலையா.. அதான் பீருட் தான் எடுத்துட்டு வரப்போய்யிருக்காரு. அவருக்கு காபி, டீ போட, தோசை மட்டும்தான் ஊற்ற தெரியுமா. “

 

   புன்னகையுடன்.. ” ம்.. இனி எல்லாம் கத்துப்பார். ”

   எப்படி சொல்லுற?. ”

   வேண்டும் என்றே.. ” ம்.. நீயும் உன் அத்தையும் சேர்ந்து சண்டை போட்டு.. சமைக்காம இருப்பீங்க. அதனால.. ”

   அவளை முறைத்து.. புன்னகையுடன்.. ” .. அதான் அண்ணா விவரமா முன்னாடியே கற்றுக்கொண்டாரா?. “

 

   புன்னகையுடன்.. ” இல்லடி.. நான் அத்தை அளவிற்கு எனக்கு சாப்பிடு நல்லா செய்ய வராதுனு முன்னாடியே தெரிந்துக்கொண்டு.. விவரமா பழகிக்கொண்டார். ”

   அப்படிதானே கையில் ஜீஸ் மற்றும் பழங்களை இருவரும் இருவருக்கும் கொடுத்துவிட்டு அதில் புன்னகையுடன் அமர்ந்த தன்னவனை பார்க்க..

   இல்லைஎன தலையசைத்து.. ” அரசி நீ.. அம்மா, பாட்டி சமையல் என்றால் பிடிக்கும் என்று சொன்னியா. நீ சொன்ன விதத்திலே புரிந்தது.. நீ சமையல் செய்ய விரும்பமாட்ட.. செய்துகொடுப்பதை மட்டும் சாப்பிடும் பெண்ணாக இருப்பேனு..  சமையல் செய்ய கற்றுக்கொண்டேன். ” உண்மைதான் அசட்டு புன்னகை புரிந்தாள்.

 

   சத்யா திலகனை பார்க்க.. ” தியா.. நான் நீ எப்படி செய்தாலும் சாப்பிடுவேன். ” பதறி கூற..

   ‘ கத்துக்க மாட்டிங்கஎன்ற பார்வை பார்க்க..

   ” ஏம்மா.. நான் எப்ப கற்றுக்கொண்டு.. நீ எப்ப சாப்பிட?. ” அதுவும் வாஸ்தவம் தான் என புன்னகையுடன் பார்த்து பழங்களை சாப்பிட ஆரம்பித்தாள்.

 

   சரி டா.. என்ன பிளான்? உன்னைய விட நான் தான்.. டிராவஸ்சில் எனக்கு பதிலாவும்.. டிரைவராவும் நிறையபேர் வைத்துயிருக்கேன். “

 

   புன்னகையுடன்.. ” ம்.. இன்னும் இரண்டு வாரத்திற்கு அப்படிதான்டா இருக்கும். நான் முடிவெடுக்கும் போது இங்க எதையும் யோசிக்கல.. இப்ப அரசிக்கு எங்க விருப்பமோ அதன்படி செய்யலாம். ” மூவரும் அவளை பார்த்தார்கள்.

    சிறிது நேரம் யோசித்தவள்.. ” தனு இன்னைக்கு நைட் நம்ம வீட்டில் விருந்தும், மெஹந்தியும் போடுவதால அங்கேயே இருந்துட்டு.. காலையில் முகூர்த்தகால் வைத்த பிறகு பெரியவீட்டிற்கு போயிட்டு.. வசுவோடுட அத்தை வீட்டிற்கு நலங்கு வைக்க போகலாம். மண்டபத்தில் நிச்சியம் முடிந்து.. யாரும் வீட்டிற்கு வரமாட்டாங்க. அதனால நாமளும்  மண்டத்தில் இருக்கலாம். கல்யாணம் முடிந்து நீங்க இங்க வந்துடுங்க. அடுத்தநாள் உங்களுக்கு இங்க நலுங்கு செய்துமுடிந்து.. ” அவளை முறைக்க

    தனு இங்க இருந்தாதான் நீங்க எனக்கு மாமா சீர் கொண்டு வரலாம்.. இரண்டு பேருக்கும் ஒன்னா செய்தா நீங்க பண்ணமுடியாது. ”

   டேய்.. பொண்டாடிக்கு தாய்மாமா சீர் டா. மிஸ் பண்ணிடாத. ” திலகன் கூற.. மெல்லிய புன்னகையுடன் தன்னவளை பார்க்க..

    எழில்  ஏன் இப்படி சொல்லுற?. ”

    இப்படி தனுவ செய்யனும் சொன்னாதான் அமைதியா இங்க செய்ய சரி சொல்லுவாரு.

   இவர்கள் ரகசியமாக பேசுவதில் சந்தேகம் வர.. “  தாய்மாமா சீர் இருக்கு.. ஆனா இங்க, அங்க தனித்தனியா நலங்கு வைப்பதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையே. ” வேட்டி மடித்து கட்டியவாறு.. அவளின் முன்நின்று கேட்க.. ஒருநொடி அவள் முழிக்க.. கேடி முயல்குட்டி பார்க்க..

   பின் அவனின் தோரணையில் பார்த்து புன்னகையுடன்.. ” தனு மற்ற யாருக்கு நேரம் இல்லாததால் நலங்கு அவங்க அவங்க வீட்டில் தனித்தனியா நடக்கல. நமக்கு நடந்தா அவங்களுக்கு நல்லாயிருக்கும்.” 

   முயல்குட்டி யோசிப்பது சரி என நினைத்தவன்.. ” சரி அரசி.. அப்ப நைட் இரண்டுபேரம் அங்க வீட்டில் இருந்துட்டு.. காலையில் நீயும் என் கூடவே வா.. எனக்கு இங்க பண்ணலாம். அது முடிந்து இரண்டுபேரும் சேர்ந்தே கிளம்பி.. உனக்கு முதலில் நான்தான் நலங்கு வைப்பேன். நான் மட்டும் சீர்கொடுப்பேன். மற்றவங்க நலங்கு மட்டும் செய்யவாங்க. “

 

   அவள் சரி என கூற யோசிக்க.. அவளை  முறைத்துவிட்டு திரும்பி.. ” திலகா.. விட்டா இவ இஷ்டத்திற்கு  பிளான் பண்ணுவா. “

   அவனை முறைத்து.. ” அப்ப சார் பண்ணுவது பேர் என்ன?. ”

   டேய்.. ” அவன் பதில் அளிக்கும் முன்..

   அவனின் அருகில் மெல்லிய குரலில்.. ” தனு.. இந்த இந்த இரண்டுநாள் நம்மள ஒன்னா இருக்க விடுவதையே பெரியவங்க சங்கடமா நினைப்பாங்க. எல்லோர் கல்யாணம் முடிந்த அன்னைக்கு நம்மள சும்ம பேச கூட தனியா இருக்க விடமாட்டாங்க. அதான் நான் யாரும் சடங்கட படாத மாதிரி என்று எல்லா விதத்திலும் யோசித்து சொன்னேன். ” கூறிவிட்டு அவனை முறைத்து நிற்க..

   கொஞ்சம் அதிகமா முயல்குட்டிய கடுப்பேற்றி விட்டோமோ?. முறைக்கிறேனு கீயூட்டா பார்த்துட்டு நீக்குறா. ம்.. தனியா மாட்டினா.. அவ்வளவுதான்.

   ” சரி டா. இவ என்ன சொன்னாலும் எங்க நல்லதுக்கு.. ” அருகில் தோள்மேல் கைவைத்து.. நண்பனின் முகத்தில் வந்துபோன உணர்வுகளை பார்த்து மெல்லிய குரலில்.. “ம்ஹூம்.. உன் நல்லதுக்கு. “

 

    அடங்கபட்ட சிரிப்பில் தன்னை கட்டுகொண்ட நண்பனிடம் இருந்து திரும்பி தன்னவளிடம்.. ” சரி அரசி.. காலையிலேயே வந்தே உன்னை இங்க அழைத்து வரேன். பின் வீட்டிற்கு சென்று நலங்கு முடிந்து மதியத்திற்கு மேல் அங்குயிருந்தே பெரிய வீட்டில் போய் இருந்துட்டு.. கோயிலுக்கு போகலாம். “

 

   தங்களின் திருமணத்திற்கு தனுவின் பிறந்தவீட்டில் இருந்து கிளம்புகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் தன்னவனிடம் கண்ணடித்துசரிஎன தலையாட்ட.. அவளின் கண்ணழகை ரசித்து.. ‘ நான் சும்மா இருக்கலானு நினைத்தாலும் இவ விடமாட்டா போல. இருடி மாட்டுவேல.. அப்ப இருக்கு.. ‘ என்ற பார்வை செலுத்த.. ‘ போடாஅவனிற்கு பதில் பார்வை பார்த்தாள்.

   எல்லோர் வீட்டிலும் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. இருவர் பாதுகாப்பிற்காக இருந்தனர். அங்கு இருந்தவர்களிடம் உள்ளே வரும் படி வேந்தன் கூறி பின் நால்வரும் கிளம்பி வெளியே வர..

   அங்கு பந்தல் போட்டு முடிக்கப்பட்டு இருந்தது. பின் ஆசையுடன் படியின் மேல் நின்று சிலநிமிடங்கள் பார்த்து.. பின் புகைபடம் எடுத்துக்கொண்டனர். திலகன் சத்யாவை வீட்டில் விட்டுவிட்டு வருவதாக கூறிச் செல்ல.. இருவரும் இனிப்பகத்திற்கு சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து.. சந்தோஷத்தில் இனிப்பை உண்டுவிட்டு.. எல்லா இடங்களையும் பார்த்து.. இருப்பவர்களிடம் நலம் விசாரித்து.. குறிப்புகளை வேந்தன் கொடுத்த பின்.. 

  இனிப்புடன் மாமா கணேஷ் வீட்டிற்கு சென்றனர். வீடே அமைதியாக இருந்தது.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!