Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Puthithaai Malarntha Kaathal

Puthithaai Malarntha Kaathal 11 1

அத்தியாயம் 11

 

நான் உனக்கு கொஞ்சம் கொஞ்சம் இங்கிலீஸ் சொல்லி தரேன் பஞ்சு. நிறைய கத்து கிட்டு நீ என்ன பரிட்சையா எழுத போற? அடிக்கடி பேசுற வார்த்தைகளை சொல்லி தரேன், அதை மட்டும் கத்துக்கோ. அப்புறம் உன் பிள்ளை படிக்கும் போது, கூட சேர்ந்து படிச்சிக்கோ. இப்போதைக்கு அவனை எப்படி கொடுமை படுத்தன்னு யோசி என்ன?”, என்று சொல்லி கொண்டே பஞ்சுவை அழைத்து கொண்டு வெளியே வந்தாள் சகுந்தலா.

 



Advertisement

அங்கே சகுந்தலாவை, முறைத்து கொண்டு நின்றான் ஆதி.

 

அவனை பார்த்ததும், விழித்து கொண்டு நின்றாள் பஞ்சு.

Advertisement

 

Advertisement

நீ போய் இவனை எப்படி நாலு மிதி மிதிக்கலாம்னு யோசி. உன் ரூம்க்கு போ பஞ்சு”, என்று பஞ்சுவை அவளுடைய அறைக்கு அனுப்பினாள் சகுந்தலா.

 

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, சென்றாள் பஞ்சவர்ணம்.

Advertisement

 

நான் என்ன டம்மி பீசா மா? அவளுக்கு டம்மி பீஸ்ன்னு சொல்லி கொடுக்குற? என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது?”, என்று கேட்டான் ஆதி.

 

என்ன டா ஆதி இப்படி கேக்குற? நீ ஒரு டம்மி பீஸ்ன்னு உனக்கு இது வரைக்கும் தெரியாதா?”

 

அம்மா”, என்று பல்லை கடித்தான் ஆதி.

 

அதோ அந்தா ஒரு டம்மி பீஸ் வருது பாரு”, என்று சொல்லி அங்கு வந்து கொண்டிருந்த சீனியை, கை காண்பித்தாள் சகுந்தலா.

 

தலையை சொறிந்து கொண்டு அங்கு வந்த சீனி “என்ன அம்மா என்னை பத்தி புகழ்ந்து பேசுறீங்க?”, என்று கேட்டான்.

 

நீ தான் அறிவாளின்னு சொல்லிட்டு இருக்கேன் டா மகனே”, என்று சீனியிடம் சொன்ன சகுந்தலா ஆதி புறம் திரும்பி, “நீ இன்னும் உன் பொண்டாட்டியை பாக்க ரூம் குள்ள போகலையா?”, என்று கேட்டாள்.

 

எதுக்கு நீ தான் அவளுக்கு என்னை பழி வாங்க ஐடியா கொடுத்துட்டு வந்துருக்க. நான் போனா அவ எதாவது செய்வா”, என்றான் ஆதி.

 

இப்ப நீ உள்ள போகலை, நான் இங்க எதாவது செய்வேன்”, என்று அவனை மிரட்டினாள் சகுந்தலா.

 

நீ அம்மா இல்லை பேய். போறேன் போதுமா? குட்டி சாத்தான்கள் கூட குடும்பம் நடத்த வேண்டி இருக்கு”, என்று சொல்லி கொண்டே நகர்ந்தான் ஆதி.

 

ஆமா டா ஆதி. இப்ப தான் நானும் ஒரு குட்டி சாத்தானை, தூங்க வச்சிட்டு வந்துருக்கேன்”, என்று சொன்னான் சீனி.

 

சிரித்து கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றான் ஆதி.

 

டேய் சீனி”, என்று அழைத்தாள் சகுந்தலா.

 

என்னம்மா?”

 

இல்லை, நீ இப்ப ஒரு குட்டி சாத்தானை தூங்க வச்சிட்டு வந்தேன்னு சொன்னியே, அது இது தானா பாரு?”, என்று சொல்லி அவனுக்கு பின்னால் கையை காட்டினாள் சகுந்தலா.

 

அங்கே இடுப்பில் கையை வைத்து கொண்டு, முறைத்து கொண்டு நின்றாள் பூங்கோதை.

 

ஹி ஹி, அது உன்னை இல்லை பூவு. அம்மா தப்பா  சொல்றாங்க இல்லம்மா”, என்று அசடு வழிந்தான் சீனி.

 

கொஞ்சம் அவனை ரூம் க்கு கூட்டிட்டு போய், என்னனு விசாரி மா”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் சகுந்தலா.

 

அவன் தலை முடியை பிடித்து உள்ளே இழுத்து சென்ற பூவு, “பக்கத்துல படுத்து கிடந்த மச்சானை காணும்னு நினைச்சு, எந்திச்சு வந்து பாத்தா என்னை குட்டி சாத்தான்னு சொல்லிட்டு இருக்கீங்க. உங்களை…”, என்று சொல்லி கொண்டே, அவனை அடிக்க எதாவது பொருள் கிடைக்குதா என்று தேடினாள் பூவு.

 

ஐயோ பூ குட்டி! உன்னை சொல்லுவேனா டா”, என்று சொல்லி கொண்டே அவளை சமாதான படுத்த ஆரம்பித்தான் சீனி.

 

உள்ளே போன ஆதி “அவளை எங்கே?”, என்று தேடினான். அவளை காணும் என்பதால் “பாத்ரூம்ல இருக்கா போல?”, என்று நினைத்து கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

 

அப்போது பாத்ரூமில் இருந்து “ஆ அம்மா”, என்று சத்தம் கேட்டது.

 

ஐயோ என்ன ஆச்சு? மறுபடியும் அப்படியே கத்துறா? வேற பிளானா? இல்லை உண்மையிலே எதுவோ ஆச்சா?”, என்ற படியே கதவை திறந்தான். அது திறந்து தான் இருந்தது.

 

அங்கே போய் அவளை பார்த்தவன் திகைத்தான். அங்கே பாதி குளித்து கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து கிடந்தாள் பஞ்சு. 

 

வர்ணா என்ன டி ஆச்சு? எதுக்கு இவ்வளவு நேரத்துக்கு குளிக்கிற? கீழ விழுந்துட்டியா?”, என்ற படியே அவள் அருகில் சென்றான். 

 

அவனை ஒரு பார்வை பார்த்தவள்  “வழுக்கி விட்டுருச்சு. ஆ, கையில் அடி பட்டுட்டு மாமா”, என்றாள். 

 

ஐயோ இப்ப என்ன செய்ய? மெதுவா எந்திரி. வெளிய போகலாம். இங்க ஈரமா இருக்கு பாரு”, என்று சொல்லி அவளை எழுப்பினான்.

 

இன்னும் குளிக்கவே இல்லை மாமா. இங்க பாருங்க சோப்பா இருக்கு”, என்று அவள் கையை காண்பித்தாள்.

 

சரி சீக்கிரம் குளி”, என்றான் ஆதி.

 

அதான், கை வலிக்கே மாமா”

 

இப்ப என்ன டி செய்ய?”

 

பாதி குளிச்சிட்டேன் மாமா. நீங்க சோப்பு மட்டும் போட்டு குளிக்க வச்சி விடுங்க போதும்”, என்று சிரித்தாள் பஞ்சு. 

 

அட பாவிகளா? இது தான் அடுத்த பிளானா?”, என்று நினைத்து கொண்டு அவள் இருந்த கோலத்தை பார்த்தான் ஆதி. பாவாடை முழுவதும் நனைந்து, ஈரம் வடிய வடிய அமர்ந்திருந்தாள் பஞ்சு.

 

டேய் ஆதி கண்ணை மூடிட்டு வெளியே ஓடிரு. எஸ்கேப் ஆகிரு டா”, என்று தனக்குள் சொல்லி கொண்டு  “நீ மெதுவா குளிச்சிட்டு வா, வர்ணா”, என்று சொல்லி விட்டு  வெளியே போக பார்த்தான். 

 

அவன் கையை பிடித்தவள், கையை பிடித்து கொண்டே எழுந்து அவன் முன்பு நின்றாள். 

 

ஈரம் சொட்ட சொட்டமயக்கும் புன்னகையுடன்  நின்றவளை பார்த்து, ஒரு மாதிரி ஆனான் ஆதி. 

 

குளிக்க வைங்க மாமா”

 

நீ பொய் சொல்ற. உனக்கு அடி படலை. நீயே போட்டுக்கோ”, என்று சொன்னான் ஆதி.

 

ஏய் என்ன டா, ரொம்ப பண்ற?”

 

என்னது டேயா?”

 

ஆமா டா ஆதி. நானும் உன் பின்னாடியே கெஞ்சிட்டு திரியுறேன். நீ ரொம்ப பண்ற. ஆமா இப்ப பொய் தான் சொன்னேன். அதுக்கு என்ன பண்ணுவ? அடி ஏதும் படலை. ஒழுங்கா சோப்பு போட்டு விடு”

 

என்ன டி மிரட்டுற? நீ சொன்னா நான் செய்யணுமோ? வேற பொண்ணை கல்யாணம் செய்ய சொல்லி சொன்னவ தான நீ? உனக்கு எதுக்கு நான் சோப்பு போடணும்”

 

அவன் அருகே நெருங்கிய பஞ்சு “இப்ப சோப்பு போட்டு குளிக்க வைக்கலை, அப்புறம் இப்படியே தான் இருப்பேன்”, என்று மிரட்டினாள்.

 

கண்டிப்பா போட மாட்டேன் போடி”

 

இனி அப்படி பேச மாட்டேன் மாமா. எனக்கு நீங்க வேணும். உங்களுக்கும் நான் மட்டும் தான் வேணும். முத்தம் கொடுத்து வேணும்னா மன்னிப்பு கேக்குறேன்”, என்று சொல்லி அவனை நெருங்கி  அவன் உதட்டில் முத்தம் பதித்தாள் பஞ்சு. அவள் செய்கையில் மயங்கினான் ஆதி.

 

என்ன டி நீயாவே எல்லாம் செய்ற?”

 

அதெல்லாம் அப்படி தான். நான் பேசுனதுக்கு மன்னிப்பு கேக்கணும்ல அதான்”

 

சரி சரி மன்னிச்சிட்டேன்”

 

சரி அப்ப நீங்க மன்னிப்பு கேளுங்க”

 

நானா நான் எதுக்கு கேக்கணும்?”

 

அந்த அர்ச்சனாவை அழகின்னு சொன்னதுக்கு”

 

ஐயையோ அதை இன்னும் நினைவு வச்சிருக்கியா?”

 

நினைவு வச்சிருக்கேனா? அது எப்படி மறக்க முடியும்?”

 

அதெல்லாம் என்னோட லட்டு மன்னிச்சிருவா.  அப்புறம் செல்ல குட்டி கேக்கணும்னு நினைச்சேன். அன்னைக்கு அந்த அர்ச்சனாவை, நீ சும்மாவா விட்ட?”, என்று கேட்டு அவள் பேச்சை மாற்றினான் ஆதி.

 

சும்மா விடுவேனா? செம வாங்கு வாங்கிட்டேன். ஆனா அதுக்கு பிறகு நடந்தது தான் மாமா சிரிப்பே”

 

என்ன நடந்தது வர்ணா?”

 

அவ புருஷன் கூட நின்னான்ல. அதான் மாமா அந்த வெள்ளைக்காரன். அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சு, அவ எல்லாத்தையும் பேசுனா. ஆனா கடைசியில் அவன் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி. நீ ஆதியை லவ் பண்ணியான்னு தமிழ்ல கேட்டான் மாமா. அப்ப அவ முகம் போன போக்கை பாக்கணுமே. ஹா ஹா செம சிரிப்பு”

 

அவன் இனி அவளை என்ன பாடு படுத்த போறானோ? எப்படியோ நம்ம பக்கம் இனி திரும்ப மாட்டா. அது போதும். சரி டி எவ்வளவு நேரம் ஈரத்துல நிப்ப? சீக்கிரம் குளிச்சிட்டு வெளிய வா”

 

என்னது வெளிய வா வாஉங்களுக்கு  தண்டனை குடுக்கணும்ல? மறந்துருவேன்னு நினைச்சீங்களா?நீங்க என்னோட மாமா. எனக்கே எனக்கு மட்டும் தான் சொந்தம். அவ கூட இனி எப்பவாது பேசுறது தெரிஞ்சது…” என்று சொன்னவள் அவன் கழுத்திலே கடித்து வைத்தாள்.

 

ஆ வலிக்குது டி. ரத்த காட்டேரியா டி நீ? இப்படி கடிக்கிற?”, என்று கேட்டு கொண்டே கழுத்தை தடவி விட்டு கொண்டான் ஆதி.

 

பின்ன நீங்க அப்படி அவளை அழகின்னு சொல்லலாமா?”

 

அது உன்னை சமாதான படுத்த சொன்னேன் டி. ஆனா என் கண்ணுக்கு நீ மட்டும் தான் எப்பவும் அழகா தெரிவ. ஏன்னா நான் உன்னை மட்டும் தான் லவ் பண்றேன். உன்னை அப்படியே தாங்கணும்னு துடிக்கிறேன் தெரியுமா? ஒரு நாள் உன்னை விட்டு விலகி இருந்ததே, பித்து பிடிச்சது மாதிரி இருந்தது. அப்பவே மாமான்னு பக்கத்துல வந்துருந்தா, இழுத்து பிடிச்சு கடிச்சு வச்சிருப்பேன் “, என்று சொல்லி கொண்டே அவளை அணைத்து கொண்டான்.

 

அவன் காதலில் நெகிழ்ந்தவள்  “உங்களுக்காக நான் எதுவுமே செய்யலையே மாமா”என்று கேட்டாள்.

 

விடு வர்ணா. என் பொண்டாட்டி தான் என் மேல இப்படி பைத்தியமா அன்பா இருக்காளே. அதுவே போதும்”

 

பேசாம நான் இப்படி செய்யவா மாமா?”

 

எப்படி செய்ய போற வர்ணா?”

 

மறுபடியும் ஸ்கூல் போய் படிச்சு…..”, என்று சொல்லி கொண்டே வந்தவளின், வாயை பொத்திய ஆதி “விட்டா டாக்டருக்கு படிக்க போறேன்னு கிளம்பிருவ போல? அம்மா சொன்ன மாதிரி உனக்கு தேவையானதை தெரிஞ்சிக்கோ பஞ்சு. அதுவே போதும். வேணும்னா அன்னைக்கு படம் பாத்த மாதிரி, இங்கிலீஷ் படம் நிறைய வாங்கி தரேன். அதை எல்லாம் பாத்து, அது மூலமா கத்துக்கோ”, என்று சொன்னான் ஆதி.

 

பொம்மை படம் வேண்டாம். அதுக்கு முன்னாடி போட்டு விட்ட, படம் மாதிரின்னா தான் பாப்பேன்”, என்று சிரித்து கொண்டே சொன்னாள்  பஞ்சு.

 

அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டியவன் “படம் என்ன டி படம். இப்ப அதை நேர்லே நடத்துறேன்”, என்றவன் அவள் உதடுகளை சிறை செய்தான்.

 

அவன் முத்தத்தை ரசித்து கொண்டிருந்தாள் பஞ்சு.

 

அவளை விட்டு விலகியவன் சிரித்து விட்டு “சீக்கிரம் குளிச்சிட்டு வா”, என்று நகர்ந்தான்.

 

சோப்பு போடுங்க மாமா”, என்று சிணுங்கினாள் பஞ்சு.

 

படுத்துற டி”, என்று சொல்லி கொண்டே சோப்பை எடுத்து அவள் தோளில் போட ஆரம்பித்தான். அவன் கைகள் அங்கே இங்கே போவதை உணர்ந்து தவித்தாள் பஞ்சு.

 

கடைசியில்  அவள் மீது தண்ணீரை கோரி ஊற்றி விட்டு சிரித்தான் ஆதி.

 

என்னை குளிக்க வச்சி, உங்க துணியும் நனைஞ்சிட்டு  மாமா”

 

ஆமா டி. நீ கட்டி பிடிச்சதுலே பாதி நனைஞ்சிட்டு. அதுக்கு, என்ன டி செய்ய?”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!