நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 7. 2
நாம் 7 (2)
Advertisement
அவர்களை நோக்கி சிரித்த முகத்துடன் அருகில் வந்தவன்.. ” ஹாய்.. என் பெயர் வேந்தன்.. எழிலரசியின் வருங்கால கணவன். ” மெல்லிய விரிந்த புன்னகையுடன் தன் அரசியை பார்த்துக்கொண்டே.. தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
‘ எழிலரசி.. சத்யா தர்ஷினி சொன்னதை கேட்டவுடன் திரும்பி பார்த்தாள். பார்த்ததும் தெரிந்தது.. அது வேந்தன் என்று. தான் பார்த்த பிறகு சிரித்தான்.. எதிரில் நின்று கொண்டுயிருந்தவன்.. தங்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான். எழிலரசிக்கு அவனை பார்த்தும்.. புன்னகைத்ததும் அதிர்ச்சி என்றால்.. வந்துக்கொண்டு இருந்தது பேரதிர்ச்சி. தன் பக்கத்தில் வந்து நின்றவுடனே.. என் கண்களை மயக்கும் புன்னகையை ஒன்றை வீசி.. தன்னுடைய வருங்கால கணவன் என்று அவர்கள் இருவரிடமும் அறிமுகம் செய்து கொண்டான். ‘
‘ இவனுக்கு இதே வேலையா போச்சு.. வெளியில் யாரும் கேட்டுவிடு வாங்கனுதான்.. இவங்களிடமே வீட்டில் போய் சொல்லாம் என்று இருந்தா. ‘ என்று அவனை அவன் ரசிக்கும் முகமான.. முறைப்பு கண்களுடன் அவனை பார்த்து கொண்டே திட்டிக் கொண்டுயிருந்தாள்.
Advertisement
சத்யாவும்.. தர்ஷினியும்.. வேறுவிதமான அதிர்ச்சியில் இருந்தனர். தேவையில்லாத வேலை செய்துவிட்டோமா?.. என்று நினைக்கையில் அவன் புன்னகைத்தது அருகில் வந்து தன்னை எழிலரசியின் வருங்கால கணவன் என்றதும்.. மயக்கம் வராத குறையில் இருவரும் நின்றுயிருந்தனர். அப்போது எழிலரசியை பார்க்க அவள் அவரை முறைத்துக் கொண்டும்.. எதிரில் நின்றவர் புன்னகையுடனும் இருந்தார்.
Advertisement
வேந்தன் புன்னகையுடன் ” அரசிம்மா.. இந்த பாசமான பார்வையெல்லாம்.. அங்க துணிக்கடை முன்பாக என் அக்கா.. அண்ணி.. தங்கைகள் இருக்காங்க. அங்க போய் வைத்துக் கொள்ளலாம். வாங்க என் கூட. ” எதிர் பக்கத்தில் கையை காண்பித்து கூற..
‘ அரசி என்ன இவங்க சொல்லுறாங்க!. ‘ எதிர்ப்பக்கத்தை சற்று முன் வந்து பார்த்தாள். அங்கு நான்கு பெண்கள் இருந்தனர். அதில் யோகா அண்ணியும் இருந்தார். என்ன இப்ப இவங்களபோய் பார்க்க வேண்டும்மா?.. ‘ நினைத்து கொண்டு இருந்த போது..
” அரசி.. என்ன யோசிக்கற?.. வா.. வா.. ”
Advertisement
” என்ன நினைச்சுட்டு இருக்கிங்க?. நான் இப்ப என்ன டிரஸ் போட்டு இருக்கேன். பார்க்கிறிங்க இல்ல?. இப்ப என்னாலா வர முடியாது. அப்பவே அம்மா சொன்னாங்க இப்ப இந்த டிரஸ் போட்டு வெளிய போக வேண்டாம். கல்யாணம் பேசி முடிக்க போறோம். அவங்க யாராவது இப்படி உன்ன பார்த்தா!.. முதல் தடவை பார்க்கறவங்க.. எப்படி நினைப்பாங்க தெரியாதாது?.. வேற டிரஸ் போட்டு போனு அவ்வளவு தடவை சொன்னாங்க.. நாங்க எங்க கேட்டேன். என்னால முடியாது.. நீங்க ஏதாவது சொல்லி சமாளிச்சுடுங்க. நாங்க கிளம்புறோம். ”
‘ வேந்தன் தன்னவளை பார்த்து.. இன்னைக்கு எனக்கு ரொம்ப அதிஷ்டநாள் போல.. அதான் இன்னைக்கு எல்லாம் இன்ப அதிர்ச்சியா இருக்கு. இந்த டிரஸ்க்கு என்ன முயல்குட்டி குறைச்சல்?.. அடர்பச்சையும், அடர்சிவப்பு நிற பாவாடை தாவணியும்.. கிளிப் போட்டு சாதாரணமாக சில பின்னல்கள் பின்னி.. அதில் நான்.. நான் வாங்கி கொடுத்த ஜாதிமல்லி பூச்சூடி.. செம்மையா அழகாக இருக்கடி!.. நான் தான் ரொம்ப பாவம் டி முயல்குட்டி. உன் கையை கூட என்னால பிடிக்கமுடியலனு.. நானே அந்த கவலையில் இருக்கேன்.. உன்ன பார்த்தா என்ன நினைப்பாங்க?.. என்ற கவலையில் நீ இருக்க. நான் பாவாடை தாவணியில் பார்க்கிறேன்.. அதபற்றி உனக்கு கவலையையே இல்ல.. ‘
‘ எழிலரசி தன்னவன் தன்னை முதல் தடவை பாவாடை தாவணியில் பார்க்கிறான்.. அதபற்றி நினைக்கும் போது ஒருவித சிலிர்ப்பு.. நாணம் வருகிறது தான். ஆனா அதனை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப அவங்க எல்லோரும் கல்யாண பெண்ணான என்னை என்ன நினைப்பாங்க?.. என்ற கவலைதான் அவளுக்கு.. இவர்கள் போய் பெரியவர்களிடம் கூறுவார்கள். அதனால் முதல்தடவை பார்க்கும் போது யாராக இருந்தாலும் நன்றாக நினைக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.. எழிலரசிக்கு. ‘
தன்னவளை ரசித்து பார்த்திருந்தவன்.. அவளின் பதட்டம் முகத்தில் தெரிந்து.. புரிந்து.. “ உன்ன யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க அரசி. நல்லா அழகாக!.. சூப்பராயிருக்க!. அரசிம்மா.. இப்ப நீயா வரியா இல்ல.. உன் தங்கை.. தோழி இருக்காங்கனு பார்க்கிறேன்.. இல்லையென்றால்?.?. ”
‘ இல்லையென்றால் ‘ அரசி வேந்தனை ஒரு பார்வை பார்க்க..
” இல்லம்மா.. கை பிடித்து கூட்டிக் கொண்டு போவேன் என்று சொல்ல வந்தேன். ” மெல்லிய புன்னகையுடன் கூற..
தன்னவனின் புன்னகை.. அவனின் அரசிக்கும் பரவி.. அவள் புன்னகையுடனே.. ” சரி.. சரி.. நீங்க போங்க.. நாங்க வருகிறோம்.”
வேந்தன் ‘ சரி ‘என்று கூறி.. பின் அவர்கள் சாப்பிட்ட உணவுக்கான பணத்தை கேட்டு.. அதை கொடுத்து விட்டுதான் சென்றான்.. தற்போது காதலி.. வருங்கால மனைவிக்குமான கடமையை செய்ய மறக்கவில்லை வேந்தன்.
எழில் பார்வையை சத்யா மற்றும் தர்ஷினியிடம் திருப்ப.. அவர்கள் அவளை முறைத்துக் கொண்டு இருந்தனர்.
” ஏன்டி எழில்.. உனக்கு பார்த்துயிருக்கும் மாப்பிள்ளை இதே ஊர் தானு ஏன்டி சொல்ல?.. ”
” என்னை எங்கடி சொல்லவிட்டிங்க?.. தூங்கிட்டு இருந்தவள வா.. வா.. சொல்லி கிளம்ப வச்சு.. இங்க வந்து அங்க.. இங்க போகலானு சொன்னிங்க. இதுக்காக தான் சீக்கிரம் போலாம் என்று கூறினவள.. எல்லாம் வாங்கிட்டு வந்து இங்க கூட்டி வந்திங்க. இங்க வந்தா.. இவர் வந்து நிப்பாருனு எனக்கு ஜோசியமா தெரியும். “
” ஆமாம்டி.. நீ ஏன்?.. சொல்லமாட்ட.. நீ கிளம்பி வந்ததும் இந்த மாதிரி.. மாப்பிள்ளை இதே ஊர்.. அதனால் அவங்க இல்ல.. அவங்க சேர்ந்தவங்க பார்க்க வாய்ப்பு இருக்குனு சொல்லி.. சீக்கிரம் கிளம்பலாம் வாங்கனு சொல்லி வீட்டுக்கு கிளம்ப சொல்லியிருந்தா.. உங்க வீட்டல உட்கார்ந்து விடிய வரை எல்லாத்தையும் கேட்டுயிருப்பேன் டி. ஆனா நீ எதுவும் சொல்லாமல்.. வீட்டுக்கு சீக்கிரம் போகனும்.. இல்லைனா ஆத்தா வையூம்.. ஆத்தா வையூம்.. என்கிற மாதிரி நீ சொல்லிவிட்டு.. இப்ப எங்கள சொல்லுவியா நீ?.. சரி சரி வா..வா.. அவர் அவங்க சொல்லிட்டு போய் ரொம்ப நேரம் ஆச்சு. ” அவளை முறைப்பு பின் அடுத்து போக அழைத்தாள்.
” அது இல்லடி இந்த டிரஸ் ஓகேயா?.. அவங்க ஒன்னும் நினைக்க மாட்டாங்க இல்ல. ” என்று தன் தோழியிடம் மறுமுறை கேட்டு தெளிவாகிக் கொள்ள விரும்பினாள்.
” இந்த பாவாடை தாவணிக்கு என்ன?. ரொம்ப அழகாக இருக்கடி. நீ தனியா வெளிய வந்துயிருக்க. அவங்கள எதிர்பாராம சந்திக்கிற.. அதுக்கு நீ என்ன பண்ணமுடியும். உனக்கு விருப்பமானத போட்டுயிருக்க அவ்வளவுதான் சரியா. அந்த அண்ணா உன்கிட்ட நடந்துக் கொண்ட விதத்த பார்த்தா.. அங்க இருக்கும் பெண்களுக்கு பிடிக்காது.. அப்படினா.. கண்டிப்பா உன்ன வர சொல்லி கூப்பிட்டுயிருக்க மாட்டாங்கடி. அதனால அவங்க என்ன நினைப்பாங்கனு?.. நீ நினைக்காம.. அவங்கள பார்க்க அவரே கூப்பிடுகிறார். அவர்களிடம் நல்லா பேசி பழக்கிக்கோ என் எழில்செல்லம். புரியுதா. ”
” அக்கா.. வா க்கா.. போகலாம்.. மாமா இங்கயே பார்த்துட்டு இருக்காங்க. ”
எழிலரசி தற்போது தன்னவனும்…தோழியும் தெளிவுப்படுத்தியாதால் மூவரும் அவர்களை பார்த்து பேச.. அவர்களை நோக்கி சென்றனர். அவர்கள் சாலையை கடந்து தான் செல்லவேண்டும். வாகனங்கள் அதிகம் வர.. அவர்களையே பார்த்திருந்த வேந்தன்.. தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடனே வந்து.. தன் அரசியின் கையை மென்மையாக பிடித்துக் கொண்டு.. சாலையை கடந்து வந்தார்கள்.
‘ அரசி தன்னவன் கூறியதை செய்துவிட்டானே.. என நினைத்து.. இதனால் தன் தங்கை, தோழியின் முன்.. இவனால் தோன்றிய நாணத்தை மறைத்து.. அவளுக்கு இப்போது வேந்தனை அடுத்து யோகலட்சுமியை தான் தெரியும் என்பதால்.. அவள் யோகாவை பார்க்க.. அதை கவனித்த வேந்தன்.. அரசியை அக்காவின் அருகில் விட்டுவிட்டு..
தாங்கள் வந்த வேலை முடித்து.. அதன்பின் வீட்டிற்கு சென்று வீடியோ கால் செய்து பார்க்க வேண்டும் என நினைத்த தன் முயல்குட்டியை.. இங்கு எதிர்பாராத விதமாக பார்த்ததில் மகிழ்ந்து!.. இப்போது தன்னவளின் அருகில் நின்று.. அவள் பேசுவதையும்.. அவளையும் ரசிக்க போகிறோம்.. என்ற துள்ளலுடன் அரசியின் எதிர்புறமாக.. அவனுக்கு வசதியான இடத்தில் நின்று கொண்டான். அரசியின் அருகில் அவள் தோழியும் தங்கையும் நின்றனர். ‘
யோகவின் அருகில் வந்து நின்ற எழிலரசியை.. வேந்தனின் தங்கைகள் வினோதினி மற்றும் வசுந்தராவும்.. அண்ணி காவ்யாவும்.. வேந்தனை ஆரம்பித்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தனர். எழிலரசி பாவாடை தாவணியில் அழகாக இருக்காங்க என்றும்.. வேந்தனும் எழிலரசியும் ஜோடியாக பார்ப்பதற்கு அழகாக உணர்ந்தனர்.
அவர்கள் ஐவரும் தங்களின் பொருட்கள் வாங்கும் வாங்கிவரும் வழியில்.. வசுந்தராதான் எழிலரசியை எதிர்புறத்தில் இருந்து சிற்றுண்டி கடையில் பார்த்தாள். சாலையில் அப்போது போக்குவரத்து வாகனங்கள் மிக குறைவாக இருந்தது.. அதனால் எழிலரசிய பார்க்க முடிந்தது. அண்ணின் போனில் சேலையில் பார்த்து.. இப்போது பாவாடை தாவணியில் இருப்பதால் சில நொடிகள் எழிலரசி தானா?.. என்று நினைத்து.. பிறகு அண்ணனை அழைத்த உறுதிப்படுத்திக் கொண்டாள்.
அவனும் இனிமையாக அதிர்ந்து!.. ‘ ஆம் ‘ எனக் கூற.. பிறகு மற்றவர்களிடம் அவளை காண்பிக்க.. அவர்களும் இனிமையாக உணர்ந்தனர். பிறகுதான் அவளை அழைக்க வந்த வேந்தன்.. அவர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கவும் அவர்கள் பேச்சு கேட்கும் தூரத்தில் எழிலரசிக்கு பின்புறமாக நின்றுக் கொண்டான். அதனால் தான் சத்யா அவனை பார்த்து காண்பித்ததும்.. புன்னகையித்து.. அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து.. இப்போது இங்கு அவர்களிடம் அழைத்து வந்தான்.
மெல்லிய புன்னகையுடன்.. ” எழில் எப்படி இருக்க?.. இப்பவும் நாமா எதிர்பாராம சந்திக்கிறோம். ”
” ஆமாம் அண்ணி. நல்லாயிருக்கேன்.. ” அமைதியாக சொன்னாள்.
சத்யா எழிலிடம் குனிந்து மொதுவாக ” சத்தமா பேசுடி.. வெறும் காத்துதான் வரமாதிரி இருக்கு. நீ அமைதியா பேசுனா.. நீ ரொம்ப அமைதியான பொண்ணு என நினைக்க மாட்டாங்க. உனக்கு பேச்சு வராததோனு தான் நினைப்பாங்க!.. சரியா. சத்தமா பேசுடி என் செல்லம்.. ” சத்யாஅருகில் நின்ற தர்ஷினி இவர்கள் பேசுவதை கேட்டு சிரித்துவிட்டாள்.
எழில் தர்ஷினி சிரிப்பதை பார்த்து லைட்டா முறைத்து விட்டு.. பிறகு மற்றவர்களை பார்த்துகொண்டே.. ” யோகா அண்ணி இவங்க என் தங்கை பிரியதர்ஷினி மற்றும் தோழி சத்யா. ” இருவருவரையும் அறிமுகப்படுத்தினாள். இருவரும்.. மற்றவர்களும் அறிமுகப் புன்னகை புரிந்துக் கொண்டனர்.
யோகா தன் அருகில் நின்ற காவ்யாவை காட்டி.. ” எழில்.. இவங்க அண்ணா ஈஸ்வரோட மனைவி அண்ணி காவ்யா.. இவங்க என் தங்கைகள் வினோதினி, வசுந்தரா. மற்றும் இவர் என் தம்பி வேந்தன். காலையில் கோயில் பார்த்துயிருப்ப தானே!.. ” என்று சிரிப்புடன் கூறினார்.
எழிலரசியும் பெண்கள் மூவரையும் பார்த்து சிரித்துவிட்டு.. வேந்தனை பார்த்து ” ம்.. காலையில் பார்த்த மாதிரிதான் அண்ணி இருக்கு. ”
‘ அப்படியா!. என்னை பார்த்த மாதிரிதான் இருக்கா?..’ என்ற கேள்வியுடன் ஒற்றை கண் சிமிட்டி தன் அரசியை பார்க்க.. அதில் அவள் அதிர்ந்து யோகவிடம் திரும்பி விட்டாள். அவனோ தன்னவளை தவிர பார்வை எங்கும் இல்லை. ‘
” அண்ணி உங்கள நான் தான் முதலில் பார்த்தேன்.. இந்த பாவாடை தாவணியில் முதலில் பார்த்தப்போ நீங்க தானானு தெரியல.. அதன்பிறகு அண்ணாவிடம் காண்பித்து தான் உறுதிப்படுத்திக் கொண்டேன். அக்கா வினோதான் இங்க கூப்பிட்டு வரச்சொன்னாங்க. இந்த பாவாடை தாவணியில் ரொம்ப அழகாக இருக்கிங்க அண்ணி. நீங்க அடிகடி போடுவிங்களா?.. நான் போட்டதே இல்ல. ”
புன்னகையுடன் ” ம்.. நான் காலேஜ் போற நாட்கள் தவிர மற்ற நாட்களில் அதிகமா இதை தான் போடுவேன். எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு இப்ப போடனும் என்று தோன்றினால் போடுங்க. அதான் உங்க கல்யாணத்திற்கு இரண்டு வருடம் ஆகுனு தனு.. சொன்னாங்க. பிறகுஎன்ன?. நல்லா போட்டு உங்க குறைய போக்கிக் கொள்ளுங்க. ” வேந்தனை ஒரு பார்வை பார்த்துக்கூறினாள்.
அனைவரும் அவள் கூறிக் கொண்டு இருந்ததை கேட்டுக் கொண்டு இருந்தபோது.. அவளின் தனு என்ற அழைப்பில் அனைவரும் ஒருநிமிடம் யோசித்து.. பிறகு வேந்தனை தான் குறிப்பிடுகிறாள் என்று உணர்ந்து.. அவனை பார்த்து சிரித்துவிட்டு அவளிடம் திரும்பினர். வேந்தனுக்கு.. ‘ ஹேய் சூப்பர்!.. முயல்குட்டி.. எல்லார் முன்னாடியும்.. தனு என்று கூப்பிடும் அளவிற்கு என்கிட்ட நெருங்கி வந்துவிட்டிங்க. ஆனா என்னை தான் இன்னும் கண்டுபிடிக்கல?. உங்களுக்கான நேரம்.. இன்னும் ஒருநாள் தான். ‘
” கண்டிப்பா அண்ணி.. அண்ணாவ எனக்கு பிடித்த மாதிரி வாங்கி கொடுக்க சொல்லி.. நானும் பாவாடை தாவணி போடுறேன்.”
“ எழில் இப்பகூட நாங்க.. வேந்தன் எங்களுக்கு பிடித்த மாதிரி வாங்கி கொடுப்பதற்காக தான் அம்மாவிடம் பிள்ளைகளை வீட்டில் விட்டு வந்துயிருக்கிறோம். ”
“ அப்படியா அண்ணி.. ஓ.. சூப்பர்!.. அண்ணி.. நல்லா கேட்டு வாங்கிக்கோங்க. உங்களை காலையில் எவ்வளவு டென்ஷன் படுத்தினாங்க. ” என்று சிரிப்புடன் கூறினாள்.
” ஆமாம்ல.. உன்னையும் தானே டென்ஷன் படுத்தினான்.. அப்ப நீயும் எங்ககூட வந்து வாங்கிக்கோ. ”
” அதுவந்து.. எனக்கு எதுவும் இப்ப வேணாம்.. இன்னொருநாள் வாங்கிக்கிறேன். நீங்க வாங்குங்க.. நான் வேணா உங்களுக்கு உதவி செய்யுறேன். ”
வேந்தன் தன்னவளை பார்த்து ‘ எதுவும் வேணாம்மா?.. ‘ என தலை அசைக்க. அவளும் ‘ வேண்டாம்.. ‘ என தலை அசைத்தாள்.
இவர்களின் மெளன உரையாடலை பார்த்த சத்யா..” அண்ணா எழிலுக்கு ஸ்விட் மட்டும் வாங்கி கொடுத்துதா போதும். உங்களுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுக்கும் செலவுமிச்சம். நான் கூட சொல்லுவேன்.. நீ ஸ்விட் கடை இல்ல.. ஹோட்டல் கடை வைத்துயிருப்பவரை கல்யாணம் பண்ணிக்கோனு. ஆமா அண்ணா.. நீங்க என்ன பண்ணுறிங்க?.. “
அவர்கள் ஐவரும் சிறிது புன்னகை புரிந்தனர். எழிலரசி சத்யாவை பார்த்து முறைத்துக் கொண்டுயிருந்தால்.. தர்ஷினியும், சத்யாவும் ஒன்னும் புரியாமல் நின்றனர்.
சத்யாவை பார்த்து வேந்தன் ” நான் இப்ப சென்னையில் ரிசர்ச் கம்பெனியில் வேலைபார்க்கிறேன். பெரியப்பா.. அப்பா சேர்ந்து ஹோட்டல் வைத்துயிருக்கோம். ”
‘ ஓஓ!!.. சத்யா எழிலை தன் யோசனை உண்மையாகிவிட்டதா!..’ என்பது போல புன்னகையுடன் பார்க்க.. ‘ இவள..’ தன் தோழியை சிரிப்பதா?. முறைப்பதா?. என முழித்து.. எழிலரசி யோகாவிடம் திரும்பி விட்டாள்.
“ அய்யோ அண்ணி.. இவ சொல்றதை கேட்டுட்டு.. நான் தினமும் ஒரு பாக்ஸ் ஸ்விட் சாப்பிடுவேன் நினைக்காதிங்க.. நான் ஒன்னும் ரொம்ப அதிகமா எல்லாம் சாப்பிட மாட்டேன்.. நீங்க ஒரு லட்டு சாப்பிட்டா நான் இரண்டு சாப்பிடுவேன்.. அவ்வளவு தான். எனக்கு சாக்லேட், ஐஸ்கீர்ம் இந்த மாதிரி ஸ்விட் எல்லாம் பிடிக்காது.. ” என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே.. ‘ இதைபோல நான் ஒருவனிடம் கூறியிருக்கிறேன் ‘ நினைத்து கொண்டே.. வேந்தனை பார்த்தாள்.. வேந்தனும் அரசியை கண்களால் ‘ இன்னும்மா.. என்னை நியாபகம் வரவில்லை?.. ‘ என்பது போல அவளை பார்த்தது.
யோகா சிரிப்புடன் அவள் வலது கையை பிடித்துக் கொண்டே.. ” அதெல்லாம் ஒன்னும் நினைக்கல எழில்.. உனக்கு எவ்வளவு வேண்ணும் என்றாலும் வேந்தன் வாங்கித் தருவான். இல்லையெனில் அவனே செய்து தருவான். வேந்தன் சாப்பாடு.. ஸ்விட் மட்டும் சூப்பரா செய்வான். ஆனால் காரம் ஸ்நாக்ஸ் எல்லாம் செய்யமாட்டான். அது ஏன் என்று தெரியாது?. ” எனக் கூறிக்கொண்டே அவளது வலது கையில் இருந்த மோதிரத்தை.. பார்த்து ஒரு நிமிடம் திகைத்து பார்த்தாள்.
உடனே சாதாரணமாகி.. ” எழில் உன் மோதிரம் நல்லா இருக்கு.. எங்கு வாங்கியது?.. ”
“அதுவந்து அண்ணி.. ” என்று கூறித் தொடங்கும் போது.. எழிலரசியின் போன் அடித்தது. அதனை எடுத்துப் பார்த்தாள்.. ” அம்மா ” என்று இருந்தது. ஒரு நிமிடம் அண்ணி என்று கூறி..
” சொல்லுங்க அம்மா.. கிளம்பி விட்டோம்.. ம்..ம்.. ம்மா என்ன கொஞ்சம் பேசவிடும்மா.. அஞ்சலி கடைக்கு எதிர்புறம் இருக்கும் துணிக்கடை முன் நிக்குறோம். ம்.சரி சரிம்மா. வைக்கிறேன்.” போன்னை வைத்துவிட்டு அவர்களை பார்த்தாள்.
யோகா குழப்ப முகத்துடனும்.. வேந்தன் சிந்தித்துக் கொண்டும்.. மற்றவர்கள் சாதாரணமாக நின்றார்கள்.
எழிலரசி வேந்தனை பார்த்துக் கொண்டே.. ” அம்மாதான் அண்ணி. அண்ணாவால வரமுடியல.. அதனால எங்களுக்கு தெரிந்த ஆட்டோ இங்க வந்துட்டு இருக்கா.. அத சொல்வதற்காக கால் பண்ணியிருக்காங்க. இத நான் யோசிக்கல அண்ணி.. இன்னொரு நாள் உங்களுடன் வரேன்.. இப்ப நாங்க கிளம்பட்டா?.. ” என்று கண்களால் வேந்தனை கேட்டாள்.
யோகா குழப்பதுடன் இருந்ததால் அவளுமே வீட்டிற்கு செல்லலாம் என்ற மனநிலையில்தான் இருந்தாள்.. எழிலே கிளம்புகிறேன் என்றதும்.. நிம்மதியுடன்.. ” அதெல்லாம் ஒன்னும்இல்ல எழில். இன்னும் ஷாப்பிங் வேலையெல்லாம் இனிமேல் அதிகம் இருக்கு. அப்ப பார்த்துக்கலாம். நீங்க கிளம்பியதும் நாங்களும் கிளம்பிடுவோம். நீ எதுவும் நினைக்காதே. “
வேந்தனுக்கு இப்போது அரசியையும்.. கூட இருப்பவர்களையும் தனியாக அனுப்ப மனம் வரவில்லை. ஆனால் நான் தான் அக்கா.. தங்கைகளுடன் செல்ல வேண்டும். ஆனா.. அக்கா அரசியின் கையை பார்த்து ஒரு நிமிடம் திகைத்து.. சாதாரணமாகி.. பின் குழப்பத்துடன் நிற்கிறார்கள்.. இப்ப அக்காகூட சென்றால்.. என்கிட்ட ஏதேனும் கேள்வி கேட்பார்களா?. கேட்டால் சொல்லாமல் இருக்க முடியாது.. ஆனால் எனக்கு இப்பொது சொல்ல விருப்பம் இல்லையே. எவ்வாறு தவிர்ப்பது?. என யோசனையில் இருக்கையில்.. வேந்தனின் அருகில் வந்து நின்றான் கமலேஷ்.
” என்னடா?.. கண்ண திறந்துக்கொண்டே தூங்குகிறாயா.?.. ” என்று முதுகில் தட்டி கேட்டு.. அருகில் இருந்தவர்களை பார்த்தான். “ வேந்தா யாருடா அது?. இந்த காலத்தில்.. அதுவும் இந்த நேரத்தில் அழகா பாவாடை தாவணியில்.. உன் தங்கச்சி பக்கத்தில் நிற்பது.. உன் தங்கச்சி தோழியா?. ” என்று புன்னகையுடன் கேட்டான்.
கமலேஷிற்கு வேந்தனின் எதிர்புறத்தில் வெளிச்சம் குறைந்த இடத்தில் நின்ற எழிலரசியின் முகம் சரியாக தெரியவில்லை.
வேந்தன் அவனை முறைத்துவிட்டு.. ” எவ்வளவு கொழுப்பு டா உனக்கு.. என்னை பக்கத்தில் வைத்து என் தங்கச்சிய பார்த்தாலே.. இல்ல பாசமா கேட்டாலோ என்கிட்ட அடிவாங்காம போகமாட்ட.. இப்ப என் தங்கச்சி பக்கத்தில் வைத்துக் கொண்டு.. தங்கச்சி தோழியா?. யாருனு கேட்கிற?.. எனக்கு கல்யாணம் முடிவாக போறதால நான் நீ கேட்டவுடன் பதில் கூறுவேன் என்று நினைச்சியா?.. ”
“ தாரா படிப்பதால் தான்.. நீ என்னை அதிகம் அவளிடம் பேசவிடமாட்டேனு. எனக்கு தெரியாதா என்ன?. அது இல்லடா.. நான் தாராகூட யாரையும் பாவாடை தாவணியில் யாரையும் பார்த்துயில்லையா.. அதான் அந்த பொண்ணுகிட்ட சொல்லி இந்த நல்ல பழக்கத்தை உன் தங்கச்சியிடம் கூறச் சொல்லலாம் என நினைத்தேன். ”
வேந்தன் இன்னும் முறைத்து.. ” என்னிடமே.. என் முன்னாடியே என் தங்கச்சிய குறை சொல்லுற. உனக்கு வசுவ பாவாடை தாவணியில் பார்க்கனும்.. இல்ல அடிக்கடி போடனும் நீ நினைத்தால்.. நீ அவளிடம் நேரடியாக கூற வேண்டியது தானே.. அதென்ன இன்னொரு பொண்ணை பார்த்து சொல்லுற.. சரி அது யாருனு தெரியும்மா?.. “
‘ அய்யோ சாமி.. உங்கிட்ட கேட்டேன் பாரு என்ன சொல்லனும் ‘ என அவனை அவனே திட்டுக்கொண்டு இருக்கையில்.. வேந்தனின் அருகில் வந்து நின்றாள் எழிலரசி. அவன் பாவாடைதாவணியில் வேந்தனின் அருகில் வந்த பெண்ணை பார்த்தவுடன்.. அவள் எழிலரசி என அறிந்து அதிர்ச்சி நிலைக்கு சென்று விட்டான்.
” என்ன அரசி.. ஆட்டோ வந்துடுச்சா?. நீங்க அதில போங்க.. நான் உங்க பின்னாடி பைக்ல வரறேன். ” கமலேஷை காண்பித்து.. ” அரசி.. மாமா பையன் கமலேஷ். ”
‘ கமலேஷ் எழிலை இவர்களுடன்.. அதுவும் பாவாடை தாவணியில் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இப்போது தாராவும் எழிலரசியும் ஒரே வயது போலவே இருந்தார்கள். காலையில் தூரத்திலும்.. புகைப்படத்தில் சேலையிலும்.. கல்யாண வயது பெண்போலவே இருந்தார். இப்போது சற்று வயது குறைந்து காணப்படுகிறாள். வேந்தன் ஏன் என்னை முறைத்தான் என்பது இப்போது புரிந்தது. தாரா பற்றி கேட்டாள் ஒரு பார்வை பார்ப்பான் அவ்வளவே.. இப்போது முறைத்தது.. எழில் என்பதாலும்.. எந்த பெண்ணையும் யார் என்றும் தெரியாமல் அவர்களை பற்றி பேசக்கூடாது அவர்களை தனக்கு பிடித்தமானவர்களுடன் கம்பேர் பண்ணக்கூடாது என்றும்தான் முறைத்திருப்பான். ‘
எழில் புன்னகையுடன் ” நீங்க தான் வசுந்தராவின் வருங்கால கணவன் கமலேஷா?. ” மெல்லிய புன்னகையுடன்.. அவன் ஆம் என தலையசைக்க.. அவள் பதில் புன்னகை புரிந்தால்.
யோசனையுடன் வேந்தனிடம் திருப்பியவள்.. ” தனு.. இப்படி பண்ணலாம்மா!.. நாங்க மூனுபோரும் இப்ப ஓன்னாப்போறோம். சத்யா.. தர்ஷினி வீடு பக்கது பக்கத்தில்தான்.. அவங்க இறங்கினதும் ஆட்டோ போக சொல்லிவிட்டு.. என்னைய நீங்க பைக்ல வீட்டல விட்டுங்க. ” தன்னவனுடன் தனியாக பைக்கில் வரவேண்டும் என்ற தன் விருப்பத்தை மறைமுகமாக கூற..
வேந்தனுக்கும் அவள் கூறியது பிடித்துயிருந்தது தான். காலையில் தந்த அதிர்ச்சியில் இருந்து இப்போதுதான் அனைவரும் மீண்டு வந்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்தா?. யோசித்து.. ” அரசி.. உன் ஐடியா நல்லாயிருக்கு.. ஆனா இன்னைக்கு வேண்டாம்.. ஞாயிறு உறுதி முடிந்ததும்.. கூட்டிட்டு போறேன். ”
தன்னவன் இப்போது தன் விருப்பத்தை வேண்டாம் என கூறினாலும்.. நாளை மறுநாளை கண்டிப்பாக ஆசையை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்ததில் மகிழ்ந்து.. அரசி புன்னகையுடன் ‘ சரி ‘ என்று தலையசைத்தாள். கமலேஷ் தான் இவர்களை வியப்புடன் பார்த்திருந்தான்.
” தனு நீங்க அத்த மாமா.. யாரும் வசுந்தராவ பாவாடை தாவணி போட சொன்னது இல்லையா?.. அவங்களுக்கு பிடிக்கும் போல.. ஆனா யாரும் சொல்லவும் இல்ல.. வாங்கி தரவும் இல்லைனதும் நம்ம வீட்டல போட மாட்டோம் போலனு இருந்துயிருப்பாங்க போல. கல்யாணத்திற்கு முன்தான் இந்த மாதிரி பாவாடை தாவணியை நிறைய போடமுடியும்.. அதனால மறக்காம வாங்கி கொடுங்க சரியா. ”
வேந்தன் புன்னகையுடன்.. ” ம். வசுக்கு வாங்கி கொடுக்கிறேன்.. அப்படியே உனக்கும் வாங்கி தரட்டுமா?..” அவனின் குரலில் சிறிது மாற்றம் கலந்து கேட்க..
எழிலரசிக்கு விவரம் தெரிந்து.. இது நாள் வரை போட்டது. இன்பா இல்லை அவளாக வாங்கியது. அரசிக்கு வேந்தனின் குரலில் மாற்றத்துடன்.. பாவாடை தாவாணி வாங்கி தரட்டுமா!.. என்றதும் ஏனோ ஒருவித நாணம் வந்து.. அவனை பார்க்கக்கூட முடியவில்லை. ஆனால் பதில்கூற வேண்டுமே.
நாணத்தை மறைத்து.. அவனை முறைத்துவிட்டு ” அதெல்லாம் எங்க அண்ணா இல்ல இதோ கமலேஷ் அண்ணா இந்த தங்கச்சிக்கு வாங்கி தருவாங்க.. வாங்கி தருவிங்கதானே அண்ணா ?.. ” கமலேஷை பார்க்க..
வேந்தனை பார்த்து சிரிப்புடனே.. ” அதுக்கு என்னம்மா!.. வாங்கிதந்துடா போச்சு. “
வேந்தன் கமலேஷ் சிரிப்பதை கண்டுகொள்ளாமல்.. அரசியின் நாணத்தை பார்த்து ரசித்துக்கொண்டே ‘ உனக்கு நான் எந்த முறையில் பாவாடைதாவணி வாங்கி கொடுத்து.. அதன்பின் அதனை எப்படி?. எப்போது?.. போடவைப்பது என்பது எனக்கு தெரியும் முயல்குட்டி. ‘
பின் புகைப்படம் எடுக்க முடிவு செய்து.. தர்ஷினி,சத்யா, எழிலரசி, வசு, வினோ ஒரே வரிசையிலும் காவ்யா,யோகா, வேந்தன், இளங்கோ இவர்கள் பின்புறமாகவும் நின்று.. அழகான புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டனர். அப்போது வேந்தன் தன்அரசியை கையை மென்மையாக பற்றிக் கொள்ள மட்டும் மறக்கவில்லை.
எழில்.. தர்ஷினி.. சத்யா மூவரும் அனைவரிடமும் விடைப்பெற்று ஆட்டோவிலும்.. அவர்களை கமலேஷ் பைக்கில் வேந்தன் பின் செல்ல.. வேந்தன் வந்த காரில் மற்ற நால்வரும் சென்றார்கள். அவர்களை அவரவர் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வந்தான்.
