Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 9. 1

 

நாம் 9(1)

 

    சூரியன் அன்றைய நாளோடு சேர்த்து.. தன் வேலையை செய்ய ஆரம்பித்து இரண்டு மணிநேரம் கடந்துயிருந்த நேரத்தில்.. வேந்தன் ‘ நேற்றிலிருந்து  தன்னை ஆளப்போகும் அரசி  தன்னிடம் வந்துவிட்டாள்!. ‘ என்ற மிக உற்சாகமான மனநிலையில்.. பச்சைநீலம் கலந்த செக்டு காட்டன் சட்டை, புளூநிற ஜீன்ஸ் அணிந்து  தங்களின் உணவகம் செல்வதற்கு ஏற்றவாறு தன் அறையில் இருந்து கிழே இறங்கி வந்தான்.



Advertisement

     வேந்தன் ஹாலிற்கு வந்தபோது தாத்தா, பாட்டிகள், யோகா அக்கா, வினோ மட்டும் இருந்தார்கள். பாட்டிகள் இருவரும் இவனை பார்த்தும் தங்கள் நடுவில் உட்காரச் சொல்லி.. கைகளால் சைகை காண்பித்து அழைத்தார்கள். அவனும் அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் நடுவில் சென்று அமர்ந்தான்.

     பாட்டி.. தாத்தாக்களுக்கு வேந்தனின் மீது பாசம் அன்பு அதிகம்.. எல்லா பேரப்பிள்ளைகள் யாவரும் பள்ளி முடித்து.. கல்லூரிப் படிப்பை வீட்டிலிருந்து சென்று தான் படித்தார்கள். வேந்தன் மட்டுமே வெளியூர் சென்று படித்தான். அவன் லீவ்விற்கு மட்டுமே வருவதால்.. அவர்கள் அவன்மீது காட்ட வேண்டிய பாசம் முழுவதையும் அவன் வீட்டில் இருக்கும் நாட்களில் கொடுத்தும்.. பெற்றும்..  கொள்வார்கள். மற்றவர்களும் அவர்களின் நடுவில் வரமாட்டார்கள். அதுபோலவே இப்போதும் சென்று அமர்ந்தான். அவர்கள் கூப்பிடாவிட்டாலும் அமர்ந்துயிருப்பான்..  ஆனால் இன்று அவர்கள் முந்திக் கொண்டார்கள்.

      வேந்தன் அமர்ந்ததும் பாட்டி வேதவள்ளி.. தன் தோழியிடம்.. ” மீனா.. நம்ம  பேராண்டியோட முகம் இன்னைக்கு கொஞ்சம் மினுமினுப்பா இருக்க மாதிரியிருக்கு இல்ல.. என்ன காரணமா இருக்கும்?.. .” என்று வேந்தனை பார்த்துக் கொண்டே மீனாட்சியிடம்  கேட்டார்.

Advertisement

    நடுவில் இருந்தவன்.. ‘ என்ன?. என் முகம் மினுமினுப்பா இருக்கா?.. !. ”

Advertisement

      உனக்கு தெரியாத பாக்கியம்.. என்ன காரணமா இருக்கும்?.. எல்லாம் நம்ம பேத்தி எழிலரசி தான். இவன் எப்ப பார்த்தாலும் ஏதோ யோசனையுடனே சுத்துவான். கேட்டா.. ஒன்னு இப்ப பார்க்கிற வேலையை பற்றி இல்ல.. கொஞ்சநாள் கழித்து ஆரம்பிக்க போற வேலையை பற்றினு சொல்லுவான். ஆனா இப்ப அதைபற்றி எதையும் யோசிக்காமா.. பேத்தியை மட்டும்தான் நினைத்துக் கொண்டுயிருப்பான். அதனாலதான் பேரன் முகம் மினுமினுப்பா ஜொலிப்பாஇருக்குமாக்கும். ” அவர் புன்னகையுடன் கூற

      வேந்தன் ஆம்மல!.. எதை பற்றியும் யோசிக்காம.. நாம்ம முயல்குட்டி பற்றிதானே..  இவ்வளவுநேரம் நினைத்து மகிழ்ந்து இருந்தோம். இந்த அம்மாச்சி எப்படிதான் கண்டுபிடித்ததோ?.. ‘

     என்ன பாட்டி.. அம்மாச்சி என்னைய பார்த்து இப்படி சொல்லிட்டிங்க?. நான் ஒன்னும் உங்க பேத்தியயெல்லாம் நினைச்சுகிட்டு இருக்கல. நைட் சீக்கிரமாக தூங்கி.. இப்ப கொஞ்சம் முன்னாடிதான் எழுந்தேன். நல்லா தூங்கி எழுந்தா கூட முகம் ப்ரெஷ்ஷா தான் இருக்கும். “  அவர்களை சமளிப்பதாக நினைத்து இப்போது யோகாவிடமும், வினோவிடமும் மாட்டிக்கொண்டான்.

Advertisement

    வினோ மென் புன்னகையுடன்.. ” என்ன அண்ணா.. தூங்கிட்டிங்களா?.. நீங்க அண்ணிக்கூட பேச போனதால் தானே.. நைட் எங்களோட விளையாட திரும்ப கூப்பிடல. நீங்க பேசவில்லை எனில்.. கீழ வந்துயிருக்கலாம் தானே. நாங்க.. நீங்க அறைமணி நேரத்தில் வரேன் என கூறியதால்.. கொஞ்சநேரம் உங்கள எதிர்பார்த்தோம்!. நீங்க வந்துயிருந்தால் எங்களுங்கு நல்லாயிருந்து இருக்கும். ” முகம் கேளியில் மறைத்து இருக்க.. குரல் கவலையில் இருந்து.

     நிஜமா தூங்கிட்டியா தம்பி!.. நான் குழந்தைகள பார்க்க வரும் போது உன் ரூம்மில் இருந்து சத்தம் வந்ததே டா தம்பி. ”

     வேந்தன் அய்யோ!. இவங்க இருவர் இருப்பதை மறந்து.. யோசிக்காமல் பதில் கொடுத்துவிட்டேனா.. இடத்தை காலி பண்ணுடா வேந்தா.. ” ம்மா எனக்கு டீ போட்டு கொடுக்கிறிங்களா?.. ” என்று கேட்டுக் கொண்டே தன்னை இப்போது காக்கும் தெய்வமாக தாயை காண.. சமையல் அறை நோக்கி.. தப்பித்து ஓடிச் சென்றான்.

     ஹாலில்  இருப்பவர்களின் சிரிப்பொலியுடன்  பேரா.. வேந்தா கண்ணு.. அண்ணா.. அண்ணா.. தம்பி.. தம்பிபி.. என்று மூவர் கூப்பிடுவதும் கேட்டாலும்.. ‘ திரும்பிவிடாதே’  என எச்சரிக்கையுடன் தாயிடம் வந்தான்.

    வேந்தன் கூறிக் கொண்டே வந்த டீ வேண்டும் என்பதை கேட்ட சித்ரா.. சமையல் அறையில் நுழைந்தவனிடம்..  ” 10 நிமிடம் பொறுடா.. காலை டிபன் வேலை முடிந்து விடும் பிறகு போட்டுத்தரேன். ”

    ‘ வேந்தனும் சரி என்று தலை அசைத்துவிட்டு டீ வைக்க அவனுக்கு பிடித்த இஞ்சி.. ஏலக்காய்.. தேவையான அளவை தனித்தனியாக  தட்டி எடுத்து வைத்தான். அப்படியே அம்மாவிற்கு தேவையான சிறுசிறு உதவிகளையும் செய்தான். சித்ரா வீட்டிற்கு பிள்ளைகள் அனைவரும் வரும்போது அவர்களை சிறு உதவி வேலையை மட்டுமே செய்ய விடுவார். வேந்தன்  முடிந்தளவு.. அவனே செய்து தான் சாப்பிடுவான்.  வீட்டிற்கு வந்தாலும் அவனாக சித்ரா சமையலிருந்தால் பாதி வேலையை அவன் செய்து முடித்து விடுவான். ‘

    ‘ அதுபோலவே இப்போதும் வேந்தன்  செய்து கொண்டுயிருக்க.. அவன் செய்யும் அழகை எப்போதும் போல இப்போதும் பார்த்தார். ஆனால் இன்று அவனின் முகத்தில் பொழிவு!. கண்களில் மகிழ்ச்சி, உதட்டில் மென் புன்னகை!. கையில் இருக்கும் பொருட்களை மென்மையாக கையாலும் விதம் என அவருக்கு தன் மகன் இன்று புதிதாக தெரிந்தான்.’ 

    எதாத்தமாக  அம்மாவை பார்த்த வேந்தன்என்ன அம்மா?. என்னை புதுசா பார்ப்பது போல பார்க்கிறிங்க?. 

    சித்ரா புன்னகையுடன்ம்ம்.. ஆமாம் வேந்தா..நீ இன்றைக்கு  எனக்கு புதுசா தான் தெரியுற. ” என்று அவர் அவனை பார்த்து உணர்ந்ததை கூறினார்பின்பு  என்ன டா.. என் மருமகளை நினைத்துக் கொண்டே வேலை செய்கிறாயா?.. ” என்று இவரும் கேட்க.

    ‘ அம்மாவும் மா!..  நான் முயல்குட்டியை நினைப்பதை அப்படியே முகத்தில் காண்பிக்கிறேனோ?..’   வெக்க புன்னகையுடன்.. ” அம்மா.. நீங்களும்மா?.. ”

    புன்னகையுடன்.. ” நீங்களும்மா என்றால்?.. வேறு யார் எல்லாம் கேட்டாங்க?.. அவங்களிடமாவது பதில் சொன்னீயா?. இல்லையா?.. “.

    அம்மா.. பாட்டியும், அம்மாச்சியும் கேட்டாங்க.. அதுவும் அக்கா வினோ முன்னாடி. இப்ப நீங்களும் அம்மா. என் பதில் யாருக்கும் கிடையாது. என் முகத்தை பார்த்து தானே சொல்லுறிங்க.. அதிலே பதிலும் தெரியுமே.. அதையே வைச்சுக்கோங்க. “  புன்னகையுடன் கூறி..

    இருவரும் பேசியபடியே டீ மற்றும் உணவை செய்து முடித்தனர். சித்ரா உணவை எடுத்து செல்ல.. அனைவருக்குமான டீ.. அதனை சில மணிநேரம் சூடாக இருக்கும் தெர்மல் பிளாஸ்க்கில் எடுத்துவைத்து.. அப்போது தேவையானவர்களுக்கு எடுத்து வந்து  உணவு மேடையில் இருப்பவர்களிடம் கொடுத்து.. அவனும் காலை உணவை சாப்பிட ஆரம்பித்தான்

    ‘ அனைவரும் வேந்தனை புன்னகையுடன் பார்த்து கொண்டுயிருந்தனர். ஏனெனில் அவன் எப்போதும் காலையில் விரும்பி சாப்பிடும் உணவான காபி மற்றும் முட்டைதோசையை தவிர்த்து.. இட்லி சாப்பிட்டுக் கொண்டுயிருந்தான். ‘

     யோகா கடுப்பாகிவேந்தா என்னால உன் அலும்ப தாங்கவே முடியலடா!. உன் வருங்கால மனைவிக்காக மாறலாம் டா.. அதுக்காக ஒரே நாள்ல.. இவ்வளவு மாற்றமா?.. என்னோட  சின்ன இதயம் எவ்வளவுதான் தாங்கும் டா தம்பி..?.. ” வினோவும்ஆமாம்என தன் அக்காவுடன் சேர்ந்துகொண்டாள்.

    வேந்தன் இருவரையும் பார்த்து.. ” உங்களுக்கு எல்லாம் இன்னைக்கு மட்டும்தான் என்னோட மாற்றம்  புதியவிதமா?.. இதயம் தாங்காத மாதிரி இருக்கும்… ” என அவன் கூறிக் கொண்டு இருக்க.. அங்கு வந்த வசுந்தரா..

    அக்கா.. அப்புறம் அதுவே பார்க்க பார்க்க பழகிடும். அப்படிதானே அண்ணா.”  கூறிஇருவரும் ஹய் ஃபை அடித்துக் கொண்டனர்.

    யோகா  வசுந்தரா கூறியதை கேட்டவுடன் முறைப்புடன்.. ” ரொம்ப அவனுக்கு சப்போர்ட் பண்ணாதடி.. அப்புறம் ஒருநாள் அவன் எழிலரசியுடன் சேர்ந்துக் கொண்டுஉன்னைய டீல்ல விட்டுவிடுவான். ” என்று விளையாட்டாக கூற..

     அவருக்கு  நன்றாகவே தெரியும்.. அவன் தங்களுக்கான கடமையை செய்வதில் என்றும் தவறமாட்டான் என்பது. அவன் எழிலரசிக்காக மாறவில்லை.. அவன் அவனுக்காக தான் இவற்றை செய்கிறான்.. எழிலுக்கு பிடித்த எல்லாவற்றையும் தானும் செய்ய.. எழிலுக்காக தன்னை மாற்றிக்கொள்ள.. அவனுக்கு மிகவும்  பிடித்துயிருக்கிறது. ‘

    ‘ இப்போதுதான் அவன் ஆரம்பித்து இருக்கிறான்.. இனிமேலும் இன்னும்  நிறைய செய்வான் என்பதும்.. அதனால் அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான் என்றும் அவர் சரியாக கணித்தார். அவன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுதானே எல்லோருக்கும் வேண்டும். எதையாருக்காக செய்தால் என்ன?.. மாற்றிக் கொண்டால் என்ன?.. என்று நினைத்து மகிழ்ந்தார். ‘

     யோகா அக்கா கூறியதை கேட்ட வசுந்தராஅதெல்லாம் அண்ணா என்னைய டீல்லயெல்லாம் விடமாட்டார். எனக்காக என்ன வேண்டும்?.. என்றாலும் வாங்கி தருவார்.. நான் என்ன?.. சொன்னாலும் செய்வார். எனக்கு பிறகுதான் யாராக இருந்தாலும்.. எதுவாக இருந்தாலும். அப்படிதானே அண்ணா?.. ” எனக் சாதாரணமாக அவனிடம் கேட்டாள்.

    நெருங்கிய உறவினர்களில் கடைசி குழந்தைகளான வசு  மற்றும் சாருலதா இருவருக்கும் சமவயது தான். கணேஷ் ரவிந்திரனை விட கொஞ்சம் அதிகம்.. தன் குழந்தைகளிடம் கட்டுப்பாட்டுடன்நடந்துக் கொள்வார். அதனால் சாருவிற்கு வீட்டில் செல்லம் சற்று குறைவு. ஆனால் வசுவின் வீட்டில் செல்லம் மிக  அதிகம். இதுநாள் வரை.. வசுந்தரா எதை கேட்டாலும்.. கேட்டவுடன்  அவற்றிக்கு முன்னுரிமை கொடுத்து செய்து கொடுப்பார்கள். அதிலும் வேந்தன் தான் பெரும்பான்மையாக அதனை செய்வதும்.. பொருட்களை வாங்கி கொடுப்பதும் என இருப்பான். அதனால் அவளுக்கு அக்கா கூறியவுடன் தோன்றியது இதுதான். வேறு எதுவும் தோன்றவில்லை. ‘

    வேந்தனோவசு.. யோகா அக்காவிடம் கூறியதை கேட்டவுடன்.. வசு என்ன கூறுகிறாள்?. வசு மற்றும் வீட்டில் உள்ள இரத்த சொந்தங்கள் இவர்களையும்.. அரசியின் உடனான என்னுடைய பந்தம் யார்?.. யாரோடும்?..  ஒப்பிட்டு கூறமுடியாதுகூறவும்கூடாது. ‘

    இவர்கள் ஒரே இரத்ததில்.. ஒரே தாய் வயிற்றில் பிறத்தவர்கள் என்றால்.. என் அரசியோ என்உயிரில்.. உடலில்.. உணர்வில்.. ஒன்றாக கலக்கக் கூடியவள்.. அவள் ஒருத்தியால் மட்டுமே என்னை முழுஆண்மகனாக்காக உணர்த்திட.. உணர்ந்திட செய்யமுடியும். அவள் என்னுடையவள். ‘

    என் எண்ணத்தின் படி யாரையும்..  யார்க்கூடவும்?.. ஒப்பிடமாட்டேன்.. யார் முதல் எனக்கு?.. என்றும் கூறவும் மாட்டேன். யாரேனும் ஒருவர் இல்லை என்றாலும்.. நான் முழுஆண்மகனாகவோ.. மனிதனாக இருக்கமுடியாது. ‘

    வசுந்தராவை இவ்வாறு பேச காரணமான அக்காவை பார்த்தான். அவர் விளையாட்டாக தான் கூறினார் என்று தெரியும். வசு அதனை உணரமாட்டாள் அல்லவா?.. இருந்தாலும் விளையாட்டு பேசு.. வேறு எங்கோ செல்லக் கூடுமோ என்பது போலவும் இருந்தது. கூடாது என எண்ணி.. அவளிடம் பொறுமையாகத்தான் கூற வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டு இருக்க.. ‘

    என்ன அண்ணா?.. நான் கேட்டதுக்கு பதிலே இல்ல.. நான் சொன்னது சரி தானே.. ” அவள் திரும்பவும் சற்று குரலை உயர்த்தி கேட்டாள்.

    அப்போது அங்கு வந்த அப்பா.. மாமாக்கள்.. என்னவென்று கேட்டபடி அவர்களும் உணவு உண்ண இருக்கையில் அமர.. அவர்கள் நடந்ததை கூறி.. வசு வேந்தனிடம் கேட்டதையும் சொன்னார்கள்.

   ‘  அவர்களுக்கும் அவனின் இந்த இனிமையான மாற்றம் மகிழ்ச்சியே.. அவர்களும் தான் அவனைநேற்றுக் காலையிலிருந்து பார்க்கிறார்களோ.. அதனை என்னவென்றுக் கூற?. அவன் மாற்றியது.. அவனின் சிறுவயது முதலான செயல்கள்.. பழக்கவழக்கம்.. நடவடிக்கைகள். அதுவும் நேற்றுதான் அறிமுகமான பெண்ணிற்காக என்பதுதான் ஆச்சரியம். ‘

    ‘ எழிலரசி என்பவள் மனைவியாக, மருமகளாக, அண்ணியாக.. வேந்தனை மட்டுமே பற்றுக்கோலாக நினைத்தும்.. அவளின் முதல் உறவாகவும்.. அவனவள் என்று உரிமையாகவும்.. அவர்களின் குடும்பத்திற்கு வருபவள்தான். இருந்தாலும் எல்லோர் மனதிலும் எழும்.. ஒரே இதமான எண்ணம்!… இந்த அளவிற்கு அவனில் மாற்றம் எனில்.. எழிலரசியை வேந்தனுக்கு எந்த அளவிற்கு பிடித்துயிருக்க வேண்டும் என்பதுதான்!.. பிறகு வசுவின் கேள்விக்கு என்ன?.. கூறப் போகிறான் என்பதையும் எதிர்ப்பார்த்தார்கள். ‘ 

      வேந்தன் சாப்பிட்டு முடித்திருக்க.. வசுவின் கேள்விக்கு நிதானமாக தான் அவளிடம் பதில் கூறவேண்டும் என எண்ணி.. ” வசும்மா.. நீ பொறுமையா சாப்பிட்டு.. ஹாலிற்கு வா. அங்கு வைத்து சொல்கிறேன். ” என்று கூறி அவளிற்கு பதில் அளிக்க இடம் கொடுக்காமல்.. அனைவரையும் பார்த்து மென்புன்னகையுடன் எழுந்துவிட்டான். பின் தான் சாப்பிட்ட பாத்திரத்தை சுத்தம் செய்து வைத்துவிட்டு.. ஹாலிற்கு வந்தமர்ந்தான்.

       அவனை தொடர்ந்து தாத்தா பாட்டிகளும் வந்தனர். யோகா வினோ இருவரும் உண்டு முடித்து.. தங்களின் கணவன்மார்களுக்கு உணவு பரிமாறியும்.. தத்தமது குழந்தைகளுக்கு உணவை உண்ண வைத்தும் இருந்தார்கள். வசு தான்.. அண்ணா தன் கேள்விக்கு உடனே பதில் தராததால்.. சற்று வருத்ததுடன் சாப்பிட்டுக் கொண்டுயிருந்தால். இருந்தாலும் அண்ணாவின் பதிலுக்காக சாப்பிட்டவுடன் ஹாலிற்கு விரைந்தால்அங்கு தன் அண்ணனை பார்த்தால் அங்கு புன்னகைமுகத்துடன் மியூசிக் சேனலில் பாடல் ஒன்றை பார்த்துக் கொண்டுயிருந்தார்.

 

துளி துளி துளி மழையாய் வந்தாளே

சுட சுட சுட மறைந்தே போனாளே

பார்த்தால் பார்க்க தோன்றும்

பேரை கேட்க தோன்றும்,

பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்….

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா

சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

அழகாய் மனதை பறித்து விட்டாளே…….

துளி துளி துளி மழையாய் வந்தாளே

சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவள் ஒரு தேவதை

அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ!

காற்றிலே அவளது வாசனை

அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!

நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,

பார்வை ஆளை தூக்கும்

கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்

பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்

அழகாய் மனதை பறித்து விட்டாளே

 

   பாடலை முகம் சிவந்தும்.. கண்களில் கற்பனைகளுடனும் உதட்டில் புன்முறுவலுடனும் பார்த்துக் கொண்டுயிருந்தான். அண்ணனா இது என்று!.

   வேந்தன் வந்தமர்ந்தபோது வசுவின் கேள்விகளையும்.. அவளிடம் எவ்வாறு கூற வேண்டும் என்பதை யோசனையுடன் நினைத்துக் கொண்டுயிருந்த போது.. இந்த பாடலின் ஒலியைகேட்டதும்..

    அவன் மனதில் துளி துளியாய் நுழைந்து.. இப்போது  அவனின் மனம் முழுவதையும் ஆக்கரமிப்பு செய்துவிட்ட அவனின் முயல்குட்டியின் நினைவு வந்தது. ‘

    பார்வை ஆளை தூக்கும்

    கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்

    பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்

    அழகாய் மனதை பறித்து விட்டாளே….

   வரியை கேட்டவுடன்.. தன் அரசியின் உடனான நேற்று இரவு அவளுடனான உரையாடல்.. கண்களாலே என்னை புரிந்துக் கொள்ளும் அந்த பார்வை.. பதில் பார்வையிலேயே என்னை முழுவதும் அவளில் சரணடைய செய்வது.. அவளுக்கு அவன் நெற்றியில் கொடுத்த முத்தம்.. அவளின் பஞ்சு போன்ற கன்னத்தை முத்ததால் தீண்ட ஆசைதான்.. அது எப்போதோ?.. என்று அதனை நினைக்கும் போது அவனில் புதுவித உணர்வு தோன்றியது.

சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன்

தோள்களில் சாய்வேன்..

பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,

நெஞ்சிலே தாங்குவேன்,

காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,

காயமின்றி வெட்டி போட்டாள்..

உயிரை ஏதோ செய்தாள்

மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்

கனவில் கூச்சல் போட்டாள்

அழகாய் மனதை பறித்து விட்டாளே

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா

சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

    

     அவனும் இந்த வரிகளை  மிக மெல்லிய சத்தத்தில்.. அரசியை நினைத்துக் கொண்டே உடன்சேர்ந்து பாடினான்..

     உடனே அவளிடம் பேச வேண்டும் என்று தோன்ற..  அதன் பிறகே அவளின் இன்றைய நிபந்தனைகள் நினைவில் வர.. ‘ அவளிடம் தான் நாளை பேசும் தருணம் எப்போது டா வரும்??.. ‘ என மனம் ஆவல் கொண்டது. இவற்றை நினைக்கும் போது உதட்டில் சிறு முறுவல் தோன்றி மறைந்தது.. என அவன் அரசியின் மன்னவனாக அந்த பாடலை கேட்டுவிட்டு.. அவனின் மனதை இதமாக்கி கொண்டான். ‘

   அப்போதுதான் வசுந்தரா அண்ணா என்று அழைக்கும் குரல் கேட்டது. வேந்தன் வசுவின் குரல்கேட்டவுன் முயல் குட்டியுடனான நினைவிற்கு சற்றுநேரம் இடைவெளி எடுத்துக் கொண்டான். பின்வசுவை பார்த்தான்.

    வசுஅண்ணனா இது என்று!. ‘ ஆச்சரியபார்வையில் இருந்து விலக்கி.. அவனை கேள்வியாக பார்த்து.. ” அண்ணா என் கேள்விக்கு பதில்?.. எனக்கு பதில் தெரியும் தான் இருந்தாலும் நீங்களே சொல்லுங்க. ” என்று கூறி அவனின் அருகில் அமர்ந்தால்.

    நான் என்ன சொல்லுவேன் என்று நினைக்கிற?. ”

   ‘  இருவர் பேசுவதை அனைவரும் மெளனமாக அவரவர் வேலையை செய்துக் கொண்டே கவனித்தனர். இவர்களின் அருகில் வயதில் மூத்தவர்கள்  மட்டுமே இருந்தனர். அவர்களுக்கும் சிறுஆவல். ஏனெனில் அவன் தங்கையை நல்லவிதமாக மனம் வருத்தம் கொள்ளாமல் பதில் அளிக்கவேண்டும். அப்போதுதான் எழிலரசி மீது வசுக்கு உறவு பலப்படும். இல்லையெனில் ஒட்டுதல் இல்லாமல் போய்விடும். வசுக்கு  இனி நடக்கும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் அப்பா அம்மாவிற்கு அடுத்தப்படியாக அண்ணா அண்ணி இருவரும்தான் சேர்ந்து இன்முகத்துடனும்.. மனநிறைவுடன் செய்ய வேண்டும். அதுதான் எல்லோருக்கும் மனநிம்மதியை கொடுக்கும் என நினைத்தார்கள். ‘

    வசு சினுங்களுடன்என்ன அண்ணா.. நான் தான்  சொன்னேனே.. உங்களுக்கு நான் தான் முதல்.. பிறகுதான் மற்றவர்கள். எனக்காக நீங்க எதுவும்.. என்னவும் செய்வீர்கள் என்று. ” திரும்பவும் கூறினாள்.

    வேந்தன் அவளை பார்த்தவாறு.. திரும்பி உட்கார்ந்து.. ” வசும்மா.. நான் உங்கிட்ட.. நீ சொன்னதுபோல.. நீ தான் முதல்.. உனக்காக எதுவும்.. என்னவும் செய்வேன் என்று என்றைக்காவது சொல்லியிருக்கேனா?.. “

    யோசித்து.. ‘ இல்லைஎன தலைஅசைத்தாள்.

    நீ கேட்கும் பொருட்களை உனக்கு தேவையென்றால் மட்டுமே.. அதுவும் மிகுத்த பாதுகாப்புடன் இருக்கும் பொருட்களாகவும்.. நேற்று வாங்கி தந்த போன்கூட.. இப்போதைக்கு வீட்டில் இருக்கும்போதும்.. வீட்டில் உள்ளவர்களுடன் வெளியே செல்லும் போதுமட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறி.. அதற்கு நீ சரி என்று கூறியும்..  பிறகு அப்பா அம்மா அனுமதியுடனும்.. உன்னை மிகவும் எச்சரிக்கை செய்த பின் தானே.. அதனை வாங்கி கொடுத்து இருக்கிறேன். ”

   அதற்குஆம்எனறு அவள் தலை அசைக்க. ” பிறகு எப்படி நீ இவ்வாறு நினைச்ச?. இதுபோன்ற தவறான புரிதல் இருப்பது உனக்கு நல்லது அல்ல வசுமா.. மாற்றிக் கொள். ஓகே யா?.. 

   இதனை கேட்வுடன் வசுவின் கண்கள் கலங்கிவிட்டது.. பிறகுஅண்ணா.. அப்படியென்றால்.. எனக்கு முதல் முன்னுரிமை கொடுக்க மாட்டிங்களா?.. எனக்காக எதுவும் செய்ய மாட்டிங்களா?.. ” என்று எண்ணியதை அவனிடம் கேட்டாள்.

   

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!