Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நேற்று பார்த்த நிலா முகம் – 15

“என்னம்மா ரெஃப்ரெஷ் ஆகிட்டியா? ராஜு ஹெல்ப் பண்ணினான் போல இருக்கே, உனக்கு அந்த டேப்பை திறக்க!” என்றாள் மாயா, சிரிப்பை மறைத்தபடி!

“ம்ம். ஆகிட்டேன். இல்ல..நான்.. அவர்..” மகியும் கொஞ்சம் தவித்து உளறி, ராஜுவின் பின்னால் நின்று கொண்டாள்!

மாயா, அவளின் தோளைத் தொட்டு, “சும்மா, ஞான் சும்மா ஃபன் பண்ணினேன். நீ ஈசியா இரு.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ராஜு அண்ணா!” என்று கூவியபடி உள்ளே வந்தனர் கோபால் மாயாவின் மூன்று பெண்களும்!

நேத்ரா, மித்ரா அப்புறம் கடைக்குட்டி உத்ரா!



Advertisement

“ஹாய்.. பாப்பாஸ்.. ஹாய் உதிம்மா!” என்று உத்ராவைத் தோளோடு அணைத்துக் கொண்டான் ராஜு!

“இவங்க தான் ராஜு அண்ணாவோட பியான்சி” என்று மாயா மகியை அறிமுகப்படுத்த, “வாவ்.. சூப்பர் அண்ணி”, என்று அவளின் அருகில் வந்தார்கள் அவர்கள் மூவரும்!

நேத்ரா மகியின் கன்னத்தைத் தடவி, “அய்யோ.. எப்படி ஒரு பிம்பிள் கூட இல்லாம இவ்ளோ ஷைனிங்!, ஆனா எனக்கு பாருங்க பிம்பிள்ஸ்!” என்று குறைப்பட,

Advertisement

“அதுக்கு நீ ஜங்க் புட்ஸ் குறைக்கணும்!” என்றார் மாயா.

Advertisement

“உங்க பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம், வாங்க நாம எல்லோரும் லஞ்ச் சாப்பிடலாம்” என்று அழைத்தார் கோபால். அவர் கையில் உணவு பார்சல்கள்!

அதற்குள், உதி, “ஐய்.. ராஜு அண்ணா என்னோட ஃபேவரிட் பெரிய பூந்தி, வாங்கி வந்திருக்காங்க” என்று அதை பிரிக்க போக,

“ நோ.. உதி.. முதல்ல லஞ்ச் அப்புறம் தான் அத எடுக்கணும்” மாயா கண்டித்தாள்.

Advertisement

மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு ஓகே சொன்னது உதிக் குட்டி!

“அய்யோ.. சேச்சி.. ஒரு நாள் தானே விடுங்களேன்!” என்று ராஜு சொல்ல,

“நீ வேற ராஜு.. இங்க வந்ததுல இருந்து எல்லாம் தலை கீழ். அதோ அவிட நோக்கு. மார்னிங் ப்ரேக்பாஸ்ட் யாரும் சரியாயிட்டு கழிச்சுட்டு இல்லா.

பைசா கொடுத்து மேடிச்ச புட் மொத்தமும் டஸ்ட் பின்னில் தன்னயான்னு!

தோ..தோ.. நோக்கு.. அச்சன் போலும் செரியில்ல இவ்விட! நீ கொண்டு வந்த ஆ. பொரிவிளங்காய் உருண்டை எடுத்து வேகமாயிட்டு கழிச்சுட்டு இருக்கு!” மாயா சத்தமிட,

“நீயும் வேணுமின்னா, உனக்கு பிடிச்ச ராஜு அம்மாவோட அந்த சிக்னேச்சர் மகிழம்பூ முறுக்கு,

அதான் அந்த தேங்காய்ப்பால் முறுக்கு இருக்கே! நீயும் சாப்பிடு!

எங்கள எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்கே!” என்ற கோபாலுக்கு ஹை ஃபை கொடுத்தார்கள் மகள்கள்!

ஒரே கலாட்டாவும் கலாய்த்தல்களோடும் ஒரு வழியாக மதிய உணவை முடித்த பின், கோபால் மாயாவிடம்,

“மாயா அத எடுத்துட்டு வா” என்று சொல்ல,

மாயா கொண்டு வந்தது, ஒரு ஜோடி தங்க மோதிரங்கள்!

புதிய டிசைன் கப்பிள்ஸ் ஸ்பெசல் மோதிரங்கள்!

அதை ராஜு, மகி இருவரிடமும் கொடுத்து போட்டுக் கொள்ள சொல்ல,

அவர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் மனம் முழுக்க நல்ல எண்ணம் கொண்ட அந்த தம்பதியின் முன்னர் ராஜு, மகியின் கரம் பற்றி மோதிரம் அணிவித்தான்.

அதே போல மகியும் அவன் கையில் மோதிரம் அணிவிக்க, அந்த காட்சிகளை தன் மொபைலில் படம் பிடித்தார் கோபால்!

கோபால் மாயாவை சேர்ந்து நிற்க சொல்லி அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர் ராஜுவும் மகியும்!

பின் அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

கோபால் இருவரையும் பார்த்து,

“நீங்க ரெண்டு பேரும் இப்ப இருக்கிற மாதிரியே இதே லவ்வோட கடைசி வர இருக்கணும்!

உங்க ரெண்டு பேருக்கு நடுவுல, அது உங்க அம்மாவா இருந்தாலும் கூட அவங்க தேர்ட் பர்சன் தான்!

எதுவா இருந்தாலும் முடிஞ்சவரை உங்க ரெண்டு பேத்துக்குள்ள அந்த நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கணும்!

நான் பார்த்தவர, இந்த ஜெனரேசனுக்கு பொறுத்துப் போகிற குணம் கொஞ்சம் குறைவா தான் இருக்கு!

எடுத்தவுடன் டிவோர்ஸ்ன்னு பெரிய முடிவு எடுத்துடறாங்க.

இப்ப எல்லோர் வீட்டிலையும் ஒன்னோ ரெண்டோ தான் பிள்ளைங்க!

அதனால செல்லமாவே வளர்றாங்க. விட்டுக் கொடுத்துப் போற குணம் ரொம்ப குறைவா இருக்கு!

சில பெத்தவங்களுக்கும் மெச்சுரிட்டி கம்மியா, ஆனா ஊனா, நீ அவனை விட்டுட்டு வந்திடுன்னு சொல்லி பொண்ணை கூட்டிட்டு வந்திடறாங்க..

இல்ல..இன்னொரு எக்ஸ்ட்ரீமா எது நடந்தாலும் நீ அங்க தான் இருக்கணும், பொறுத்துப் போன்னு சொல்லிடறாங்க.

அவங்க என்ன மாதிரியான வாழ்க்கை வாழறாங்க. வந்திருக்கிற சண்டை ரெண்டு நாளில் தானே சரியாகிற சண்டையா,

இல்ல மோசமான ஸ்டேஜ்ல இருக்கான்ன்றது சம்பந்தப்பட்டவங்களுக்கு தான், உள்ளது உள்ளபடி தெரியும்.

வெளியில் இருக்கிறவங்களுக்கு அது பெத்தவங்களா இருந்தாலும் முழுக்க தெரிய வாய்ப்பில்ல!

அதனால எப்பவும் நிதானம் தவறாம, உணர்ச்சிவசப்பட்டு பெரிய முடிவு எல்லாம் எடுத்திடாம நடந்துக்கணும்.

இதெல்லாம் கட்டாயம் ஓவர் நைட்ல வந்திடாது!

கொறைஞ்ச பட்சம் ஒரு வருஷமாவது ஆகும்!

இப்ப என்னமோ ரொம்ப புரிதலோட இருக்கிற மாதிரி தான் தெரியும்!

ஆனா டே டு டுடே லைஃப்ல நம்ம கூடவே நம்மவங்க வரும்போது  தான் அவங்க குற்றம் குறையெல்லாம் கண்ணுக்கே தெரியும்!

அங்க தான் நான் சொன்ன டாலரன்ஸ் தேவைப்படுது!

நானும் உன் மாயா சேச்சியும் கல்யாண வயதைக் கொஞ்சம் தாண்டிய பிறகு, முப்பதுகளில் தான், நல்லா மென்டல் மெச்சுரிட்டி வந்த பிறகு தான் கல்யாணம் பண்ணினோம்!

அதுவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணி தான்!

ஆனா எங்களுக்கும் சண்டைகள் ஆரம்பத்தில் வந்தது தான்!

நான் குளிச்சுட்டு வந்து ஈர டவலை அபப்டியே கட்டிலில் போட்டுடுவேன்!

அவளுக்கு பயங்கர கோபம் வரும்! கத்துவாள்.

எனக்கு அவள் கோவிலுக்கு கல்யாணத்துக்கு போகும் போது தலையைப்பின்னிக் கொண்டு வரணும்னு சொல்லுவேன்!

அவ அப்படியே லூஸ் ஹேர்ஸ்டைலில் வருவா.. இப்படி சின்ன சின்ன விஷயம் முதல்  பெரிய விஷயங்கள் வரை எங்களுக்கும் சண்டை வந்திருக்கிறது!

அதனால தான் சொல்றேன்.. எதுவா இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு, கொஞ்சம் நிதானமா நடந்துக்கணும்!

சாதாரணமா நடக்கிற கல்யாணத்திற்கே இவ்வளவு பார்க்கணும்!

இதுல உங்க கல்யாணம் உங்க வீட்டு ஆளுங்களால் ஏற்கனவே ஒரு தடவை நின்னு அப்புறம் நடக்கிற கல்யாணம்!

ஸோ, ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் நீங்க!

யாரையும் உங்கள இன்ஃப்ளுயன்ஸ் பண்ண விட்டுட கூடாது!

முக்கியமா ராஜு உனக்கு தான்!

அண்ணன் சொன்னான், ஆட்டுக்குட்டி சொன்னான்னு இன்னமும் அப்படியே உன் கல்யாண விசயத்துல அவங்கள உள்ளே விட்டு குழப்படி பண்ணிட்டன்னா அப்புறம் ஆயுசுக்கும் நீ முரட்டு சிங்கிள் தான் பார்த்துக்கோ!

அது கூட இப்ப அப்படியே இருக்க நல்லா தான் இருக்கும்!

கொஞ்சம் ரத்தம் சுண்டி, நம்ம வேகம் குறைஞ்ச பின்னே, நமக்குன்னு ஒருத்தரும் இல்லையேன்னு தோண ஆரம்பிக்கும்!

அதனால பீ கேர்ஃபுல்!

மகி..உனக்கும் தாம்மா சொல்றேன்! நான் புரிஞ்சிகிட்ட வர, நீ கொஞ்சம் மெச்சூர்டா தான் தெரியறே!

அதனால இவன் வீட்டு ஆளுங்க என்ன பாலிட்டிக்ஸ் பண்ணினாலும்.. பண்ணினாலும் என்ன? கண்டிப்பா பண்ணுவாங்க!

அது எதுக்கும் ரியாக்ட் பண்ணாம இருக்கணும்! சரியா!” என்று சொல்லி முடித்தார் கோபால்!

“அய்யோடா.. ஒரு வழியா முடிஞ்சது, இந்த பூமர் அங்கிளோட லெக்சர்!” என்று பெரியவள் நேத்ரா கலாய்க்க, மாயா அதட்டினாள்!

“நோ.. நேத்ரா.. அப்பா சீரியஸா பேசிட்டு இருக்கும் போது நோ கமெண்ட்ஸ்!” என்று அவளைத் திட்டினாள்.

“இவ மட்டுமில்ல ராஜு, இன்னிக்கு நாம ஏதாச்சும் அட்வைஸ் பண்ணினாலே பூமர்ன்னு நக்கல் பண்றவங்க தான் இப்போ ஜாஸ்தி!

ஆனா நாங்க அடிப்பட்டு மிதிப்பட்டு கத்துகிட்ட அனுபவ பாடங்களை தான் அப்படியே ஸ்பூன் ஃபீட் மாதிரி இவங்களுக்கு கொடுக்கிறோம்னு தெரியல! அருமை புரியல!

நீ அப்படி இருக்காதே ராஜு!” என்று சீயயசாகவே பேசினார் கோபால்.

“சரிங்க அண்ணே! எங்க மேல உள்ள அக்கறையால தானே இத எல்லாம் இவ்வளவு மெனக்கிட்டு சொல்றீங்க! கண்டிப்பா கேட்டுப்போம்” என்றார்கள் ராஜுவும் மகியும்!

மேலும் சிறிது நேரம் அவர்களோடு மகிழ்வாக பேசிக் கொண்டிருந்து விட்டு, மனம் முழுக்க சந்தோசத்தோடு அங்கிருந்து கிளம்பினர் ராஜுவும் மகியும்.

பைக்கில் போகும் போது, கோபால் சொன்னவற்றைப் பற்றி தான் பேசிக் கொண்டு வந்தான் ராஜு!

அப்படியே பேசிக் கொண்டிருந்தவன், ஹை வேசில் இருந்த ரு டீக்கடையைத் தாண்டிப் போகும் போது, “மகி.. மகி..  கொஞ்சம் என் மேல் நல்லா சாய்ஞ்சுகிட்டு வாயேன்” என்றான்.

“ஏன்.. உங்கள இந்த விசயத்தில் நம்ப முடியல. பாத்ரூம்ல வச்சு இப்படியாங்க பண்ணுவீங்க..

எனக்கென்னமோ மாயா அக்கா நம்மள பார்த்து அப்போ நக்கலா சிரிச்ச மாதிரி இருந்துச்சு! போங்கங்க..” என்று சிணுங்கினாள் மகி.

“அதெல்லாம் அவங்களும் நம்ம ஸ்டேஜை எல்லாம் தாண்டி வந்தவங்க தானே!

அதுக்கு எல்லாம் ஃபீல் பண்ணாத! இப்ப நான் சொல்றத கொஞ்சம் செய்யேன் ப்ளீஸ்” என்று சொல்லிக் கொண்டே,

தன் தலையில் இருந்த ஹெல்மெட்டை கழற்றி முன்னே வைத்து விட்டு, பைக்கை மிகவும் மெதுவாக சிறிது நேரம் ஓட்டினான்.

பின் அந்த கடையைத் தாண்டிய பின், வழக்கமான வேகத்துக்கு வந்தான் ராஜு!

“என்ன பண்றீங்க எனக்கு ஒண்ணும் புரியல” என்றாள் மகி.

“ம்ம் அதுவா. ஒருத்தன் நம்மள அடையாளம் கண்டுகிட்டான்!

நம்மள அவன் போனில் போட்டோ எடுக்க டிரை பண்ணினான்.

அதுக்கு தான் நானும் ஹெல்மெட்டை கழட்டிட்டு, உன்னையும் நல்லா என் மேல சாய்ஞ்சுகிட்டு வர சொன்னேன்!”

“என்னது நம்மள போனில் போட்டோ எடுக்கிறாங்களா? யாரு அது? உங்க அண்ணனா?”

“அவன் பார்த்தா, எதுக்கு போட்டோ எடுக்க போறான்! இது என் அண்ணியோட தம்பி! எங்க அண்ணன் கிட்ட போட்டு விட நம்மை போட்டோ எடுக்கிறான்!

நான் தூரத்திலேயே அவன் வந்த பைக் நிற்கிறதை பார்த்துட்டேன்! ஏன்னா அது என்னோட பைக்!

அவன் தான் யூஸ் பண்ணிட்டு இருக்கான்! ஓசி பைக்கை வச்சுகிட்டு என் கிட்ட சட்டம் பேசுனுச்சு என் அண்ணி!

அது பார்த்து நல்லா காயட்டும்னு தான் நான் நல்லா போஸ் கொடுத்துட்டு வரேன்!” என்றான் ராஜு.

“என்னமோ பண்ணுங்க. போங்க” என்றவள், ராஜு பைக்கை நெடுஞ்சாலையில் ஓட்டாமல், சர்வீஸ் ரோடு பக்கம் திருப்புவதைக் கண்டு, “எதுக்கு இப்படி போறீங்க? நேரா போங்க.. அது தான் ஈசி” என்றாள்.

“நான் நம்ம வீட்டுக்கு வண்டிய திருப்பினேன் மகி!”

“நம்ம வீட்டுக்கா? இன்னிக்கா? அதுவும் இப்பவா?”

“ஆமா.. வீட்டுல என் அம்மா இருக்க மாட்டாங்க. அவங்க டவுனுக்கு போய் இருக்காங்க”

“அவங்களும் வீட்டில் இல்லன்னா, நாம் எதுக்கு இப்ப அங்க போகணும்! முதல்ல இன்னிக்கு எதுக்கு போகணும்?”

“ம்ம்.. நான்.. ஒரு மாதிரி இமோசனல் ஆகிட்டேன்! என்னோட ரொம்ப நாள் கனவு வேற இன்னிக்கு நிறைவேறிடுச்சு.

கோபால் அண்ணன் வேறே நம்மள மோதிரம் மாத்திக்க வச்சுட்டார்.

எனக்கு இப்பவே நீ என்னோட பொண்டாட்டின்னு தான் உரிமை தோணுது.. அந்த உரிமையில.. உன்னை இப்பவே வீட்டுக்கு கூட்டுட்டு போய்.. “

“கூட்டிட்டு போய்..” மகி குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது!

“இல்ல.. மகி..ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாத.. என்னால முடியல.. எனக்கு இப்பவே நீ வேணும்னு தோணுது.. அதான்..” ராஜு இழுக்க..

“உங்களுக்கு கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா? உங்க வீட்டுக்கு இப்ப போய் என்னை அழைச்சிட்டுப் போகணும்னு சொல்றீங்க!

அதுவும் ஸ்டோர் வீடுன்னு சொல்றீங்க! கண்டிப்பா அக்கம் பக்கம் ஆட்கள் கண்கள்ல நாம விழ தான் செய்வோம்!

நாளைக்கு நான் நமக்கு கல்யாணம் ஆனவுடனே அந்த வீட்டுக்கு தான் வரணும்!

என்ன தான் கட்டிக்க போறவங்கன்னாலும், இப்படி கல்யாணம் ஆகும் முன்னே உங்க வீட்டுக்கு அதுவும் உங்க அம்மா இல்லாத நேரத்துல நான் வந்து போனா, நாளை பின்ன அவங்க என்னை மதிப்பா நினைப்பாங்களா?”

“அவங்க என்ன நினைச்சா என்ன மகி! நாம எந்த காலத்துல இருக்கோம்!”

“எந்த காலத்துலன்னா.. இப்பவும் எதுவும் இங்க மாறல! வம்பு பேசுற மீடியம் வேணுமின்னா மாறி இருக்கலாம்!  ஆனா வம்பு இன்னமும் பேசிட்டு தான் இருக்காங்க!

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க நாம அதை கண்டுக்காம போய்டணும்னு சொல்வீங்க!

ஆனா அந்த நாலு பேரோட தானே நாம் இந்த சொசைட்டியில வாழனும்!

தனியா காட்டுல போய் குடில் அமைச்சுக்கிட்டு, பழங்களை சாப்பிட்டுட்டு கிட்டோ இல்ல வேட்டையாடியோ சாப்பிட்டுக் கிட்டோ வாழப் போறதில்லையே!

நாளைக்கே நமக்கு கல்யாணம் ஆகி, நானும் இங்க வந்த பின்னே, நாம ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க வேற!

அம்மாச்சியும் ஒரு நாள் வீட்டில் இல்லை, ஆனா நாம புக் பண்ணியிருக்கும் கேஸ் சிலிண்டர் அன்னிக்கு தான் வரப் போகுதுன்னு வைங்க!

நாம வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சிலிண்டர் வருது. அப்ப பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட தானே உதவி கேட்போம். கேஸ் வந்தா கொஞ்சம் வாங்கி வைங்கன்னு.

இது மாதிரி சின்ன சின்ன உதவிகள் அக்கம் பக்கம் இருக்கிறவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் செய்ய தானே செய்வோம்!

அப்படி இருக்கும் போது, அவங்கள நாம மொத்தமா விட்டுத் தள்ளவும் முடியாது!

எந்த வகையில பார்த்தாலும், இப்ப உங்க கூட நான் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கம் இருக்கிறவங்க கிட்ட என்னோட மரியாதையைக் கெடுத்துக்க முடியாது” மகி திட்டவட்டமாக மறுத்து பேசினாள்.

“அப்போ உனக்கு என் மேல ஆசையே இல்லியா?”

“ஏன்.. இல்ல? அதெல்லாம் எனக்கும் நிறைய இருக்கு! எப்படா.. நாட்கள் சீக்கிரம் ஓடி, என்னிக்கு நம்ம கல்யாண நாள் வரும்னு தான் எதிர்பார்த்துட்டு தான் இருக்கேன்!

ஆனா.. அதுக்காக நீங்க சொல்றத எல்லாம் என்னால செய்ய முடியாது!”

“ப்ளீஸ்டி..மகி” ராஜு கெஞ்சும் குரலில் சொன்ன போதும் மவுனமாகவே உட்கார்ந்து இருந்தாள் மகி.

அவள் கோபத்தில் இருந்ததால், ராஜு வண்டியை அவள் வீடு நோக்கி செல்ல திருப்பியாதைக் கூட கவனிக்க வில்லை அவள்.

கொஞ்ச நேரம் கழித்தே அதை கவனித்தாள்.

“என்ன கோபமா? சாரி.. யாரா இருந்தாலும் எனக்கு உடன்பாடில்லாத வேலைய என்னால செய்ய முடியாது! அதான்!” என்றாள் அவனிடம்.

“கோபமா? எனக்கா? உன் மேலயா? நான் சந்தோஷத்தில் அப்படியே மிதந்துட்டு இல்ல இருக்கேன்!” என்றான் ராஜு!

குழப்பமாக கண்ணாடி வழியே அவனைப் பார்த்தாள் மகி!

“ஏய்.. பொய்யில்ல! நிஜமா தான் சொல்றேன்! எனக்கு வராத ஒரு விஷயம் இப்படி நோ சொல்றது!

ஆனா உனக்கு அது நல்லா வருது என்கிட்ட கூட! அது தான் சந்தோசம்!

எனக்கும் சில உடன்பாடில்லாத விஷயங்கள் நடக்கும் போது பிடிக்காது தான்!

முக்கியமா என் அண்ணன், காரை என் அண்ணி பேர்ல எடுத்தப்போ,

அப்புறம் வீட்டு உரிமையில என்கிட்ட பவர் வாங்கினப்போ.. அந்த மாதிரி சமயங்களில் எனக்கு  கொஞ்சம் யோசனையா தான் இருந்துச்சு. ஆனா நோ சொல்ல வரல!

ஆனா நம்ம அண்ணன் தானே அப்படின்னு நினைச்சுக்கிட்டேன்!

பெருந்தன்மையா இருக்கிறதுக்கும் இளிச்சவாய்த் தனத்துக்கும் எனக்கு டிஃப்பரன்ஸ் தெரியல!

ஒரு மாதிரி குழப்பமாவே இருந்திட்டேன்! எனக்காவும் துணிஞ்சு முடிவு எடுக்க தெரியல!

ஆனா நீ என் அம்மா மாதிரி இருக்கே!

அவங்க என் அண்ணன் எப்படியெல்லாம் கேட்டும் அவங்க மட்டும் வீட்டு விசயத்துல உறுதியா தான் இருந்துருக்காங்க!

அதான் ரொம்ப சந்தோஷம் மகி! நான் சும்மா நீ என்ன சொல்றேன்னு பார்க்க தான் அப்படி சொன்னேன் மகி!

நான் இன்னிக்கு உனக்கு ஒரு அஸ்யூரன்ஸ் தரேன்! என்னிக்கும் உன் மரியாதை கெடுற மாதிரி விஷயத்தை, நான் பண்ணவே மாட்டேன்!

எனக்கு உன்னை மாதிரியே உன்னோட மரியாதை சுயகவுரவமும் ரொம்ப முக்கியம்!

யாரும் உன்னை கேவலமா நடத்தவோ பேசவோ விட்டுட மாட்டேன்! ஐ ப்ராமிஸ்!” என்றான் உணர்ச்சி வசப்பட்டு!

மகிக்கும் கண்கள் கலங்கி விட்டிருந்தன!

அப்படியே அவன் முதுகில் சாய்ந்து கட்டிக் கொண்டாள்!

“சத்திய சோதனை!” என்றான் ராஜு சிரித்துக் கொண்டே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!